Sunday, February 5, 2023
முகப்புகட்சிகள்பா.ஜ.ககிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் 'சகிப்புத்தன்மை'யும்!

கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்!

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 5

இன்று உலகில் அதிக குற்றங்களை செய்பவர்களை உடைய நாடு என்பது கிறிஸ்தவ நாடுகளாய்த்தான் உள்ளது. லட்சிய மற்ற வாழ்க்கையை வாழ்ந்து வரும் அந்நாட்டு மக்கள் போதை, காமம் ஆகியவற்றுக்கு உட்பட்டு நம்பிக்கையற்ற வாழ்க்கை நடத்தி வருவதுடன் சமுதாய சீர்கேட்டிற்குக் காரணமாய் இருந்து வருகிறார்கள். இசுலாம் நாடுகளில் ஜனநாயகம் என்பது மருந்திற்குக் கூட இல்லாத நிலை. ஒரு நாடு ஒரு நாட்டை ஏப்பம் விட்டு வருகிறது. இசுலாத்தால் உலகத்தில் சமாதானத்திற்குப் பதில் சகிப்பற்ற தன்மையும் யுத்தமும்தான் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படுமானால் அது கிறித்தவ நாடான அமெரிக்காவின் ஆதிக்க வெறியாலோ, அல்லது உலகம் முழுவதும் இசுலாம் மயமாக்க விரைந்து செயல்பட்டு வரும் முசுலீம் நாடுகளாலோதான் ஏற்படும். இது உலக சமாதானத்திற்கு ஆபத்தையே ஏற்படுத்தும்.

 

–  ‘மதமாற்றத் தடைச்சட்டம் ஏன்?’

இந்து முன்னணி வெளியீடு. பக்:42.

”மேலை நாடுகளில் உள்ள பெண்கள் யார் அழைத்தாலும் சோரம் போவார்கள். ஆண்கள் காமவெறியுடன் குடி, கூத்து என்று அலைகிறார்கள். இத்தகைய பண்பாட்டுச் சீரழிவுக்குக் காரணம் கிறித்தவ மதம். இசுலாமிய நாடு என்றால் கோமேனி, சதாம் உசேன், இடி அமீன், கடாஃபி, ஜியாவுல் ஹக், தாலிபான், பின்லேடன் போன்ற சர்வாதிகாரிகள், பயங்கரவாதிகள்தான் நினைவுக்கு வருவார்கள். இதற்குக் காரணம் முசுலீம் மதம்.இவற்றுடன் ஒப்பிடும் போது நம் நாட்டின் ஜனநாயகம், அகிம்சை, உயர்ந்த பண்பாடு ஆகியவற்றின் அடிப்படை இந்து மதம்தான்.” இவைதான் இந்நூற்றாண்டு முழுவதும் இந்தியச் செய்தி நிறுவனங்கள் உருவாக்கி வரும் பொதுக்கருத்துக்கள். இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட விசமப்பிரமச்சாரம்தான் மேற்கண்ட இந்துமத வெறியர்களின் அவதூறு.

இது உண்மைதானா என்று பரிசீலிப்பதற்கு இவர்கள் கூறுகின்றன ஜனநாயகம், உயர்ந்த பண்பாட்டை இந்து மதமும் இன்றைய இந்தியாவும் கொண்டுள்ளதா என்பதைப் பார்போம்.

இந்து மதம் ஜனநாயக மதமா?

முதலில் இந்து மதம் ஒரு மதமே அல்ல. மதம் என்ற வகையில் உள்ள ஆன்மீக விசயங்களைவிட, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சட்டதிட்டங்களே அதனுடைய சாரம். நேற்றும் இன்றும் இந்திய வாழ்வின் பல நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அந்தச் சாரத்தின் அடிப்படையே ஜனநாயக மறுப்புதான்.

சாதி, மொழி, இன, பாலியல் ஒடுக்குமுறைதான் இந்து மதத்தின் நான்கு வேதங்கள். இம்மையில் மட்டுமல்ல மறுமையில் கூட உழைக்கும் மக்களுக்கு விடுதலை கிடையாது என்று கூறும் மதம் இது மட்டுமே. வாழ்க்கை முறை, சட்ட திட்டம், தண்டனை அனைத்தும் பார்ப்பன – சமஸ்கிருத இலக்கியங்கள் முழுவதிலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இலக்கியத்தில் மட்டுமல்ல, இன்று வரை நடைமுறையிலும் இவை இந்திய உழைக்கும் மக்களை மூழ்கடித்தே வந்திருக்கின்றன. இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகத்தை மறுத்த கொடூரமான வாழ்க்கை விதிகள் பைபிளிலோ, குர்-ஆனிலோ நிச்சயம் இல்லை.

இந்து மதம் ஒழுக்கமான மதமா?

வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், அச்சில் ஏற்ற முடியாத ஆதி சங்கரனின் சௌந்தர்ய லஹரி, அஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் போன்றவையும், புராணங்களின் காமவெறி வக்கிரங்களும் இவர்களின் ஒழுக்கத்தைப் பறைசாற்றுகின்றன. ஓடிப்போன சங்கராச்சாரி, கம்பி எண்ணி காலஞ்சென்ற பிரேமானந்தா முதல் கிராமத்தின் குறி சொல்லும் சாமியாடி வரை, இந்து மதத்தின் ஒழுக்கத்தைப் பறைசாற்ற அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறார்கள்.

அடுத்து சூத்திரன் என்ற நான்காம் வருண மக்களுக்கு இந்து மதம் கூறுகின்ற பொருளைப் பார்ப்போம். படிதாண்டிய மேல் வருண – சாதிப் பெண்களுக்கும், கீழ் வருண – சாதி ஆண்களுக்கும் பிறப்பவர்களே சூத்திரன் அதாவது வேசிமகன் என்று பார்ப்பனியம் வரையறுத்தது. இப்படி தன் சொந்த நாட்டின் பெரும்பான்மை ஆண்களையும், பெண்களையும்  ஒழுக்கம் கெட்டு சோரம் போனவர்கள், வேசி மக்கள் என்று வரையறுத்து நடத்திய ஒரே மதம் இந்து மதம்தான், இத்தகைய கேவலத்தை உலக மதங்கள் எவற்றிலும் பார்க்க முடியாது என்கிறார் அம்பேத்கர்.

சரியோ, தவறோ ஒரே வகையான ஒழுக்கத்தை தத்தமது மதங்களில் இருக்கும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என ஏனைய மதங்கள் கூறுகின்றன. ஆனால், இந்து மதம் மட்டுமே சாதி – வருணத்திற்கேற்றபடி ஒழுக்கம் சட்ட திட்டங்களை மாற்றி அமல்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக மேல்சாதி – வருண ஆண்கள் எல்லா சாதிப் பெண்களையும் பெண்டாளலாம்; கீழ் சாதியினரைக் கொலை செய்யலாம்; வரையறை இல்லாமல் சொத்து சேர்க்கலாம் – தானம் பெறலாம் – கொள்ளையடிக்கலாம்; இந்த ‘சலுகைகள்’ கீழ் சாதியினருக்குக் கிடையாது என்பதோடு இவற்றுக்கு உட்பட்டே வாழவேண்டும். மீறினால் மரணதண்டனை. இது புராணக் கதையல்ல என்பதையே கோபாலகிருஷ்ண நாயுடுக்களும், ரன்பீர் சேனாக்களும் நிரூபித்து வருகின்றனர்.

இந்து மதம் அகிம்சையான மதமா?

பிற மதங்கள் வாயளவிலாவது அகிம்சையைப் போதிக்கின்றன. குறைந்த பட்சம் தன் மதத்தினரிடையேயாவது அகிம்சையைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகின்றன. ஆனால், இந்து மதம் மட்டுமே தன் மதத்தினர் மீதே வன்முறை – பயங்கரவாதத்தை ஏவிவிடுகிறது. தர்மம் என்ற பெயரில் நியாயப்படுத்துகிறது. சம்பூகன், ஏகலைவன், நந்தன் ஆகியோரைப் பிரதிநிதிகளாகக் கொண்டுள்ள சூத்திர – பஞ்சம மக்கள்தான் இந்துமத வன்முறைக்குப் பலியானவர்களின் சாட்சியங்கள்.

இந்தியா பண்பாட்டுச் சீரழிவு இல்லாத நாடா?

பிஞ்சுக் குழந்தைகளுக்கு இன்றுவரை திருமணம் நடத்தும் இராஜஸ்தான் மாநிலம் இந்தியாவில்தான் இருக்கிறது. மூன்று லட்சம் குழந்தைகளை வைத்து சிறார் விபச்சாரத்தில் உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பெற்ற நாடும் இதுதான். எயிட்ஸ் தடுப்புப் பிரச்சாரத்திற்கு அதிகம் செலவழிக்கும் ஆசிய நாடும், எயிட்ஸ் நோய் வேகமாகப் பரவுவதில் முதல் நிலையிலுள்ள நாடும் இந்தியாதான். பெண் சிசுக்கொலை, கட்டி வைத்து எரிக்கப்படும் கலப்பு மணக்காதலர்கள், ஸ்டவ் வெடித்துச் சாகும் மருமகள்கள், உடன் கட்டை ஏற்றிக் கொல்லப்படும் இளம்பெண்கள், உலகின் பழம்பெரும் விபச்சார நிறுவனமான தேவதாசி முறை ஆகியவற்றின் உறைவிடம் இந்தியாதான்.

மேலவளவுப் படுகொலை, தாழ்த்தப்பட்டவரின் இரத்தத்தில் பெயர் எழுதும் ரன்பீர் சேனா, முசுலீம்களின் தலைகளை விதைத்துப் பயிரிடப்பட்ட பகல்பூரின் காலிஃபிளவர் வயல்கள், சிறுநீரகங்களை அறுத்துக் கொடுத்துக் கடன் வாங்கும் நெசவாளர்கள், கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் பருத்தி விவசாயிகள் – இவற்றினை உலக வரலாற்றில் பார்ப்பது சிரமம். இந்தியப் போலீசின் உதவியோடு லாக்கப் கொலை – கற்பழிப்பிலும் இந்தியாவே முதலிடத்தில் வருகிறது. மேலும் தொழுநோய், காசநோய், யானைக்கால், பெரியம்மை, பார்வையற்றோர், ஊழல் இவற்றிலும் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கின்றது.

இந்தியா ஜனநாயக நாடா?

பல இசுலாமிய நாடுகளை ஒப்பிடுகையில் இங்கே பெயரளவில் ஜனநாயகம் இருப்பது உண்மைதான். ஆனால், ‘பெயரளவில்’ என்ற பொருள்தான் மிகவும் முக்கியம். இப்படி பெயரளவு ஜனநாயகம் கிடைப்பதற்குக் காரணம் இந்து மதப் பாரம்பரியம் அல்ல. பார்ப்பனிய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி – தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, மன்னர் எதிர்ப்பு மற்றும் ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் தவிர்க்க இயலாத விளைவாகத்தான் இந்த ஜனநாயகம் கிடைத்தது. இந்த ஜனநாயகத்தைப் பற்றி பெருமையடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஜனநாயகப் போராட்டங்கள் அனைத்தையும் எதிர்த்தே வந்திருக்கிறது.

இவர்களும், இவர்களின் முன்னோடிகளும், காங்கிரசில் இருந்த பார்ப்பன – மேல்சாதி வெறியர்களும், தேவதாசி ஒழிப்பு, விவாகரத்து சட்டம், வைக்கம் போராட்டம், தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம், இந்து சிவில் சட்டம் அனைத்தையும் வன்மம் கொண்டு எதிர்த்ததே இந்நூற்றாண்டின் வரலாறு. எனவே இந்துமத வெறியர்களை ஓரளவுக்கேனும் முறியடித்ததால் கிடைத்ததே இந்தப் பெயரளவு ஜனநாயகம். இவர்களை முழுமையாக வீழ்த்தும் போதுதான் உண்மையான ஜனநாயகம் கிடைக்க முடியும். ஆனால், ‘ஜனநாயகம்’ பேசும் இந்து மதவெறியாளர்களின் நோக்கம், இசுலாமிய நாடுகளைக் காட்டி இங்கேயும் பெயரளவு ஜனநாயக உரிமைகளை ரத்து செய்வதுதான்.

இந்தியா பயங்கரவாதத்தைப் பரப்பாத நாடா?

பயங்கரவாதம் என்பது யாரோ சில தீவிரவாதிகள் பாலத்துக்கோ, பிரதமருக்கோ குண்டு வைப்பது மட்டுமல்ல. உண்மையில் அரசு ஏவிவிடும் பயங்கரவாதத்தின் எதிர்விளைவுதான் பிரதானமானது. கலவரங்கள் அதிகமில்லாத குஜராத்தில் 15,000 பேர் தடா சட்டத்தில் கைதானது, பஞ்சாபில் 25,000 இளைஞர்கள் கொல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்தது, காஷ்மீரில் காணாமல் போனவர்களைத் திருப்பித் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களைக்கூட காக்கை குருவி போல சுட்டுக்கொல்வது, வடகிழக்கில் போராளிகளையும், ஆந்திரா – பீகாரில் நக்சல்பாரி புரட்சியாளர்களையும் போலி மோதலில் சுட்டுக் கொல்வது, பஞ்சாப், ஈழம், வடகிழக்கு, காஷ்மீரில் போராடுகின்ற குழுக்களை உடைத்து கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, மனுக் கொடுக்க வந்த மாஞ்சோலைத் தொழிலாளர்களையும், நாக்பூர் கோவாரி பழங்குடியினரையும் அடித்துக்கொன்றது, வீரப்பன் தேடுதலைச் சாக்கிட்டு அதிரடிப்படை கிராமம் கிராமமாகப் பெண்களைக் கற்பழித்தது – இவையெல்லாம் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் நடத்திய சில பயங்கரவாதங்கள்.

மேலை நாடுகள், இசுலாமிய நாடுகளின் நிலை

எனவே மேலை நாடுகளும், இசுலாமிய நாடுகளும் நம்மைவிட உயர்ந்த நிலையில் இருக்கின்றனவா? இல்லை என்கிறோம். இந்தியாவில் உள்ள சீரழிவுகள், பிரச்சினைகன் எல்லா நாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. இசுலாமிய நாடுகள் பலவற்றில் ஜனநாயகம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணம் மதம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மன்னனையும், நிலப்பிரபுக்களையும், திருச்சபையையும் எதிர்த்த மக்களின் போராட்டத்தினால்தான் மேற்கத்திய நாடுகளில் ஜனநாயகம் வந்தது. இப்படிப்பட்ட போராட்டம் நடைபெறாத இசுலாமிய நாடுகளில் ஷேக்குகளும், இராணுவச் சர்வாதிகாரிகளும் ஆண்டு வருகின்றனர். இவர்கள்தான் தமது சர்வாதிகாரத்தைத் தக்க வைத்து, ஜனநாயகத்தை மறுப்பதற்கு மதத்தை முகமூடியாகப் பயன்படுத்துகின்றனர். போராட்டம் நடைபெற்ற துருக்கி, எகிப்து போன்ற நாடுகளிலும், முன்னாள் சோசலிச நாடுகளான சீனா, ரசியாவில் உள்ள இசுலாமியப் பகுதிகளிலும் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டது.

பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு முக்கியமான காரணம் ஏகாதிபத்திய நாடுகள் உருவாக்கி வரும் சமூக நிலைமைகள்தான். மேல்நிலை வல்லரசுகளின் உலக மயமாக்கத்தால் உலக மக்கள் மீது சொல்லொண்ணாத் துயரம் திணிக்கப்பட்டு வருகிறது. தொழில்துறை உற்பத்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பங்குச் சந்தை, தகவல் தொடர்பு, காப்பீடு, வங்கி, நிதி, கேளிக்கை, நுகர்பொருள், திரைப்படம் போன்ற சேவைத் துறைகளை வைத்தே பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. இவற்றின் சமூக விளைவாக பணவெறி, நுகர்வுவெறி, தனிநபர் வாதம், சூதாட்டம், பாலியல் சுற்றுலாக்கள், காமக் களிவெறியாட்டங்கள் போன்ற பண்பாட்டுச் சீரழிவுகள் இசுலாமிய – நாடுகளை உள்ளிட்டு உலகம் முழுவதும் பரவி வருகின்றன.

இந்து மதவாதிகளைப் போல கிறித்தவத் திருச்சபைகளும், அரபு ஷேக்குகளும் இத்தகைய சீரழிவுகளை எதிர்ப்பதாக நடிக்கின்றனர். சாதாரண மக்கள் ‘ஒழுக்கம்’ தவறினால் கடுந்தண்டனை வழங்கம் அரபு ஷேக்குகள் தங்கள் சொந்த வாழ்வில் கேட்பாரில்லாத கேளிக்கை வெறியர்களாக உள்ளனர்.

ஆனால், மத ஒழுக்கம்தான் சீரான ஒழுக்கம் என்றும், அதிலிருந்து பிறழ்வதுதான் சீரழீவு என்றும் எல்லா மதவாதிகளும் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக கிறித்தவம் கருச்சிதைவையும், இசுலாம் பர்தா அணியாமையையும், இந்துமதம்  விதவை மறுமணத்தையும் சீரழிவு என்கின்றனர். அதேசமயம், இத்தகைய பிற்போக்கு மதங்கள் அனைத்தும் விபச்சாரம், அழகிப்போட்டி போன்ற முதலாளித்துவச் சீரழிவுகளையும் சேர்த்தே எதிர்க்கின்றன. ஆனால், முதலாளித்துவத்தின் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு, பிற்போக்கான மத ஒழுக்கம் மாற்றாக முடியாது. இரண்டையும் களையக்கூடிய சனநாயகப் பண்பாடுதான் மாற்றாக விளங்க முடியும் என்கிறோம்.

அடுத்து, இசுலாமியத் தீவிரவாதத்தை சில நாடுகளும், குழுக்களும் ஆதரிப்பது உண்மைதான். ஆனால், அவற்றுக்கு அடிப்படையாக இருந்து பயங்கரவாதத்தைப் பல நாடுகளில் தூண்டிவிடுவது, பிறகு அதை அடக்குவதாகக் கூறி தலையிடுவது, ஆக்கிரமிப்பு செய்வது, குண்டு பொழிவது போன்றவையெல்லாம் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகளின் கைங்கரியங்களே. ரசியாவை எதிர்த்துப் போரிட தாலிபானுக்கு ஆயுத உதவி செய்து, தேச பக்தர்கள் என்ற பட்டமும் கொடுத்த அமெரிக்கா இன்று அவர்களைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்று சீறுகிறது. உலகிற்கு சமாதான உபதேசம் செய்யும் வாத்திகன் திருச்சபை இந்த அமெரிக்க பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது.

சீரழிவுகளை எதிர்த்துப் பாரதப் பண்பாட்டைக் காப்பதாகக் கூறும் ஆர்.எஸ்.எஸ். கூட்டமும் வாத்திகனின் அடியொற்றி, அமெரிக்காவையும் அதன் இந்தியத் தரகு முதலாளிகளையும் ஆதரிக்கின்ற எடுபிடியாகத்தான் இருக்கிறது. கிளிண்டனின் இந்திய வருகையின் போது, நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து உபசரித்தது இவர்களின் பக்திக்கு ஒரு உதாரணம். பாபர் மசூதியை இடித்த கையுடன் ராமஜன்மபூமி முக்தி மோர்ச்சாவின் தலைவர் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில், ‘முசுலீம்களிடமிருந்து இந்துக்களையும், உலகையும் காப்பாற்ற அவதரித்த நவீன கிருஷ்ணபகவானே’ என்று உருகுகிறார்.

இத்தகைய அட்சர சுத்தமான கேவலமான அடிமைகள், இசுலாமிய நாட்டு மக்களை அடக்கி ஆட்டம் போடும் அரபு சேக்குகள் பெற்றுள்ள உரிமையை பார்ப்பன – பனியா கும்பலுக்கும் பெற்றுத்தர விரும்புகிறார்கள். மேலை கிறித்தவச் சீரழிவு, இசுலாமிய பயங்கரவாதம் என்று மதச்சாயம் பூசி அவதூறு செய்வது இதற்காகத்தான்.

– தொடரும்

____________________________________________________________

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. ஐயா! இந்துக்கள் தான் மேற்கத்திய நாட்டு மக்களை காமம் பிடித்து அழைபவர்கள் என்று சித்தரித்ததாக கூறுகிறீர்கள். முஸ்லீம் நாடுகளிலும் அப்படித்தான் மேற்கத்திய நாட்டு மக்களை பற்றி நினைக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளுக்கு போய் வேலை பார்க்கும் முஸ்லீம்கள் அந்நாட்டு பெண்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கிருத்தவர்களையும், முஸ்லீம்களையும் இந்துக்கள் பொத்தாம் பொதுவாக தவறாக கணித்துள்ளார்கள் என்று குற்றம் சொல்லும் நீர், ஏன் ஆர்.எஸ்.எஸையும், பார்ப்பனர்களையும் குற்றம் சொல்லாமல் பொதுவாக எல்லாம் இந்துக்களையும் திட்டுகிறீர்? வேதத்திலும் பகவத் கீதையிலும் வர்ணாசிரமம் மனிதர்கள் செய்யும் தொழிலைக் கொண்டே வரையருக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் பார்ப்பனர்களின் அதிகார வெறியினால் அது பின்னாளில் வர்ணாசிரமம் என்பது பிறப்பால் வரையருக்கப்பட்டது.

  சங்கராச்சாரியார் எழுதிய பாடல் துறவிகளுக்கானது, இல்லறத்து மனிதர்களுக்கானது அல்லது. நமது சமுதாயத்தில் துறவிகளுக்குறிய நெறியை வைத்துக்கொண்டு பலத்த குழப்பம் உள்ளது. இல்லறத்தான் துறவி போல் வாழ முனைவதும், துறவி இல்லறத்தான் போல வாழ முனைவதும் பெருத்த போராட்டாத்தை உண்டுபண்ணியுள்ளது.

  சில இந்துக்கும்பலை மனிதில் கொண்டு ஒட்டு மொத்த இந்துக்களையும் திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 2. Vinavu, really you became mad…

  Just understand the facts and accept the truth. Just like that don’t spit on this nation.

  Since you are biased so much, I am unable to participate actively in Vinavu’s growth.
  Please come out of the word Secularism, that is support all religions target only Hinduism. Hinduism is not as much low as people like you and all make criticism. It’s like Ganges, not like you.

  • ///Hinduism is not as much low as people like you and all make criticism. It’s like Ganges, not like you.////

   கங்கை….
   உண்மைதான் உலகின் மிக மோசமாக மாசடைந்த ஆறுகளில் ஒன்று….அது போலதான் இந்து மதமும்…..உலகின் மிகக் கேவலமான மதம்……..

   நன்றி…..

 3. வினவிர்க்கு அத்தகைய புரிதல் தன்மை கிடையாது. இவர்கள் வேலையே எல்லாரையும் திட்டுவதுதான். ஆர்.எச்.எச் பற்றி எத்தனை தமிழர்கள் கவலைப்படுகிறார்கள்? இவர்கள் தான் வெட்டியாக பேசி ஆர்.எச்.எச்-ன் புகழ் பரப்புகிறார்க்ள. வினவு நுனிப்புல்லை மேயும் மாடு தான்.

 4. 2௦௦௦ம் ஆண்டு வரை பார்ப்பனர்களை திட்டினால் மக்கள் கை தட்டினர், ஒட்டு விழுந்தது, ஆனால் இப்போது அப்படி கிடையாது… உதாரணம் DMK .

  • Good Joke…DMK lost because of there corruption..Not because of its anti stand.
   In India its non Brahmin Hindus vs Brahmin Hindus…in fact its Brahmins who corrupted(and still) Hindus and Hinduism for there benefits..

   • in fact its Brahmins who corrupted(and still) Hindus and Hinduism for there benefits..
    /////
    .
    கருணாநிதி,கே ஜி பாலக்ருஷ்ணன்,.ராசா,மாயாவதி எல்லாம் பார்ப்பனர்களா?

    • //கருணாநிதி,கே ஜி பாலக்ருஷ்ணன்,.ராசா,மாயாவதி எல்லாம் பார்ப்பனர்களா?//

     இல்லை… சுக்ராம், ராஜீவ் காந்தி, ஜெயலலிதா, என்.டி.திவாரி, நரசிம்ம ராவ் எல்லாம் தான் பார்ப்பனர்கள். அதிகாரத்தில் இருக்கிற எல்லாரும் ஊழல்வ்வாதி தான்.

     ஆனால் குமார் சொன்னது அதுவல்ல, பார்பனர்கள் தான் இந்துக்களையும் இந்து மதத்தையும் கெடுத்ததாகச் சொல்கிறார்.

  • மிகச்சரியாக சொன்னீர்கள்,

   பார்ப்பனர்களை திட்டினால் மக்கள் கை தட்டினர், ஒட்டு விழுந்தது

   ஆனால் அதை DMK சரியாக செய்யாமல் சமரசம் செய்து கொண்டதானால் தான் DMK தோல்வி அடைந்தது.
   மீண்டும் அவர்கள் பெரியார் வழியில் பாப்பானை திட்டி பார்பன புரட்டுகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தால் மீண்டும் DMK வெற்றி பெரும்.

   • மிகச்சரியாக சொன்னீர்கள்,

    அவர்கள் மீண்டும் பெரியார் வழிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு கிஞ்சிற்றும் இல்லை… அவர்கள் காலஹஸ்தி சென்று ராகு கேது பரிகார பூஜை செய்து வெற்றி பெறுவார்கள்.. இது கலைஜர் கண்ட புது வழி..

   • உண்மை பேச வேண்டும் நேர்மையாக இருக்க வேண்டும் அது முடியுமா தி.மு.க வால்

 5. ஏன் இன்னும் தாமதம்? இந்துக்களே! இசுலாமியர்களே! கிருத்துவர்களே! வாங்கடா.. வந்து உங்க சன்டைய ஆரம்பிங்க. ஒருத்தன ஒருத்தன் கடாசுங்க! உங்க குட்டு வெளிப்படட்டும்..

  • // ஏன் இன்னும் தாமதம்? இந்துக்களே! இசுலாமியர்களே! கிருத்துவர்களே! வாங்கடா.. வந்து உங்க சன்டைய ஆரம்பிங்க. ஒருத்தன ஒருத்தன் கடாசுங்க! உங்க குட்டு வெளிப்படட்டும்..//

   சதிஸ் உங்களுடைய புரிதல் மிக மிக ஆழமாகவும் அடிபுல் அடுத்து மண் வரி மேய்கிறேர்கள்…

 6. Vinavu – there is a small correction in below statement.
  முதலில் இந்து மதம் ஒரு மதமே அல்ல. மதம் என்ற வகையில் உள்ள ஆன்மீக விசயங்களைவிட, இப்படித்தான்(EPPADI VENDUMALANUM VALALAM – its upto individuals) வாழ வேண்டும் என்ற சட்டதிட்டங்களே அதனுடைய சாரம்;

  So the problem is that this liberty being utilized by different folks over the period. Vedas says split the people according to their ‘nature’ of work & prescribe some regular duties & rights and it does not introduce any impartiallity; its afterall the human beings who came over the period started all these non-sense. Even for Brahmins – there are lot’s of punishments given in Veda’s if they don’t do their duties. do u know that?

  some people brought it ramayana to show case the need for people having ‘single’ marriage and living together; there perception is in this way.

  some people brought in ‘krishna leela’ – simply because thats their thought of living – it does not mean its taught by HINDU religion

  similar cases for Ajanta sculptures and other ‘sexual’ expressions in different form – its up to those individuals. there is no hard & fast rule that now-a-days we need to follow any of these items.

  now take any dalit group – is there some one stopping them from ‘agitating’ against their ‘mudalaligal’ – why they are working for them? these group of people are physically strong enough people and can do all type of work – let them work for ‘themselves’ and utilize their earnings. why they are dependant on someone else? if someone is not allowing them to use same ‘tea cup’ why don’t they open a ‘new’ shop and utilize it. why the hell they are going to those shops? (applicable to temples also); I believe in any village these SC/ST will be at least 70% and without these people taking ‘tea’ – no shops can run profitably. is it not? can’t they live without tea for few months to show their agitation?

  JUST THEY NEED SOME LEADERSHIP to co-ordinate & guide them. You folks can try to do that in at least few villages and help them to come out, rather fighting with this Govt. – there are many ‘group’ existed/existing similar to you which trying to ‘terrorism’ as way of ‘making’ changes – but it’s not possible to achieve – now-a-days world is too small – and Govt. can easily ‘destroy’ such groups.

  Finally, don’t say ‘muslims’ are ‘innocent’ and they are being ‘brain washed’ by some sheks. Its being quoted in ‘kuran’ that entire world should be following ‘islam’, only then world will come out of ‘saithans’ (christ, hindu, etc) – thats they basis of ‘Jihadi’

  • “now take any dalit group – is there some one stopping them from ‘agitating’ against their ‘mudalaligal’ – why they are working for them? these group of people are physically strong enough people and can do all type of work – let them work for ‘themselves’ and utilize their earnings. why they are dependant on someone else? if someone is not allowing them to use same ‘tea cup’ why don’t they open a ‘new’ shop and utilize it. why the hell they are going to those shops? (applicable to temples also); I believe in any village these SC/ST will be at least 70% and without these people taking ‘tea’ – no shops can run profitably. is it not? can’t they live without tea for few months to show their agitation?

   Srinivas!

   Such things r not happening in cities and towns in TN. Only in villages. Ur solution s that they shdnt depend on others for livlihood and they refuse to take tea from such shops. They shd run their own shops.

   Easier said than done. U shd live in such a village and c for urself. The village set up s one of sharp line drawn between them and others. They cant cross it even if they r in a majority. In some places, they r the majority. Still, they dont own acres of land there. If at all, they hav a small area of land to till and cultivate. Their employers r upper castes or caste hindus only. They cant live in isolation; coz there r other things for which they need to go to others to share or get. Life in villages s dovetailed. Further they hav been living like slaves for others for millennia; and the religion has made them convinced that they r slaves to others. It s therefore not possible for them to come out of this hell called religion.

   Other religious leaders converted them from ur religion; but the succeess s not achieved in getting equality, coz others in the new religion r also converts who brought the same mindset to the new religion. For instance, the vanniyars in northern districts and the CSI Nadaars in Southern Districts.

   However, the lot of dalits s better in the new religions, esp. in Islam, than in the old one.

   If dalits show certain amount of independence and self reliance, as u wished, it creats anger and jealousy in the upper caste esp. thevars. The upper castes r conditioned to believe that dalits r slaves to them; and any notion of the dalits being equal, let alone, superior, is repugnant to the caste Hindus and also the tamil brahmins.

   In a forum which was opened by Kanimozhi, I had a running battle with certain paarppanar who believed that paarppnars shd not have a dalit officer to work under them. He had the ill luck of working under dalit officers and with whom, naturally he cdnt cope; so, he had altercations with them; and filed cases against them in court. The Tamil paarppnar believed by being with a dalit officer, he s polluted; further, it is an indignity to hav a dalit man around with him always.

   It s in a city. In villages, less said, the better.

   The only way for dalits s to get out of Hinduism, and join Islam, as periyaar called them. As long as they r hindus, and as long as they live in villages, their lot will continue to b the same for ever.

   If they want to continue in Hinduism, it wd be nice to carve out a niche for them in it, which will hav nothing to do with the Tamil paarppnars and Caste Hindus. U cd hav said that. But I m saying !

 7. \\ வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம், அச்சில் ஏற்ற முடியாத ஆதி சங்கரனின் சௌந்தர்ய லஹரி, அஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் போன்றவையும், புராணங்களின் காமவெறி வக்கிரங்களும் இவர்களின் ஒழுக்கத்தைப் பறைசாற்றுகின்றன\\

  எழுதுபவர் ஒரு ஆப்ரகாமிய மத வெறியினால் தூண்டப்பட்டவர் என்று தெளிவாக தெரிகிறது. எதை வைத்து சொல்கிறேன் என்றால், இவர்களை பொருத்த வரை காமம் என்பது ஒரு அசிங்கம்.

  பாரத பண்பாட்டை பொருத்த வரை SEX IS DIVINE. ஓசோ புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளவும். முறையற்ற / வன்புனர்வு தான் தவறே அன்றி, காமம் இல்லாமல் இந்த மனித உலகம் இல்லை. அது எப்படி தவறானதாக இருக்கும். அது மட்டும் என்றி, இதை பற்றி கூறும், காமசூத்ரா எப்படி அசிங்கமாகும். இதை பற்றி மேலும் அரிய ஒரு நல்ல sexologistai அனுகவும்.

  உங்களுக்கு வேண்டுமானால், காம சூத்ரா அசிங்கமாக இருக்கலாம். எனக்கு அது போன்று தெரியவில்லை. உங்களுக்கு காமம் பிடிக்கவில்லை என்றால் யாருடனும் உடலுரவு வைத்து கொள்ளாதீர்கள். அதை பற்றி படிக்காதீர்கள்.

  அது சரி, காம சூதரா எப்பொழுது ஹிந்துக்கள் புனித நூல் ஆனது. வெளி பிரகாரத்தில் உள்ள ஜந்தா – கஜுராகோ சிற்பங்கள் கோயில் சிற்பஙகள் எப்பொழுது வழிபாட்டுக்கு உரியவையாக மாற்றப்பட்டன.

  எங்களுக்கு இது தான் புனித நூல் என்பது கிடையாது.

  The concept of testimony is not applicable for bharathian / Hindu…. bhramanisum (as per vinavu prespective)

  முதலில் குருவுக்கும் துறவிக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில முட்டாள்கள், பச்சை சீலை கட்டியவள் எல்லாம் என் பொண்டாட்டி என்று நினைத்தால், அதற்கு நாங்கள் என்ன செய்ய இயலும். வினவை போன்ற போலி கம்யூனிஸ்டுகளை போல, சில போலி சாமியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது…

  @ gokulkrishnan,

  \\உண்மைதான் உலகின் மிக மோசமாக மாசடைந்த ஆறுகளில் ஒன்று….அது போலதான் இந்து மதமும்…..உலகின் மிகக் கேவலமான மதம்\\

  நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முஸ்லீம் நாடுகளை போல கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களை, போட்டு தள்ளாமல், பேச விட்டதன் விளைவு தான் ஹிந்து மதம் இவ்வளவு மாசு பட்டு விட்டது. கீழே உள்ள லிங்க் உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம்.

  http://www.tamilhindu.com/2011/06/agora-film-review/

  \\புராணங்களின் காமவெறி வக்கிரங்களும்\\

  ஆம் இருந்தால் என்ன, ஒரு சமுதாயத்தில் எல்லாவிதமானவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். சமுதாயத்தை பற்றி பேசப்படும் பொழுது அதில் இருக்கும் அனைத்து விசயங்களையும் சொல்லிதான் ஆக வேண்டும்.

  காம்சூத்ராவை நினைத்து நான் கண்டிப்பாக பெருமை படுகிறேன்.

  காமம் என்பது தவறான விசயம் அல்ல. அது பயன்படுத்தும் விதத்தை வைத்தே சில முறைகளில் தவறாக போய்விடுகிறது.

  • புரியும் படி சென்னீர்கள்.

   இலங்கை சிங்களான் தனது இனத்தை சேர்ந்த பெண்களை தெய்வமாக மதிப்பார்கள்.

  • சிறந்த கருதுக்கள் திரு.சோழன். வினவு ஒரு போலி !நடுநிலையாக விமர்சிக்க தெரியாத அல்லது வலுக்கட்டயாமாக அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற் வெறி ! பாரதம் சைத அல்லது செய்து கொண்டு இருக்கும் தவறு அனைத்தயும் சகிப்பதுதான். ஆனால் இது தான் எங்கள் பாரததின் தனி சிற்ப்பு ! ஒழிந்து போகட்டும் விடுஙள்! தன் மீது தானே மன்னை வாரி போட்டுக்கொல்லும் பண்பை என்னெவென்ரு சொல்ல ?

  • // அது சரி, காம சூதரா எப்பொழுது ஹிந்துக்கள் புனித நூல் ஆனது. // –

   காமசூத்திரம் என்ற நூல் காம சாஸ்திரத்தை சார்த்து எழுதப்பட்ட நூல் ஆகும்.

   இந்நூலின் படி, காம சாஸ்திரம், முதன் முதலில் சிவன் பார்வதியுடன் காமத்தை குறித்து பேசிக்கொண்டிருந்ததை, ஏதேச்சையாக கேட்க முற்பட்டார் நந்திதேவர்.

   பிறகு மனித நலனுக்காக தான் கேட்டதை நந்தி தேவர் இதை ஒராயிரம் அத்தியாங்களில் எழுதினார்.

   இந்த சாஸ்திரம் பின்னர் பலராலும் சுருக்கி எழுதப்பட்டது. வாத்சாயனர் தான் மூல காம சாஸ்திரத்தின் ஒரு சிறு பகுதியையே விவரிப்பதாக நூலில் குறிப்பிட்டுள்ளார்.

   தகவல் ஆதாரம்- http://thathachariyar.blogspot.com/2011/02/18.html

   • காமசூத்திரம் – சரோஜாதேவி

    உங்கள் கருத்து மிகவும் தவறானது. சரோஜாதேவி போன்ற புத்தகங்கள் நாயை போல் உடல் உறவு கொள்ளுதல் பற்றிய விசயங்களை சொல்கிறது.

    காமசூத்திரம் is a professional book written by great people. To know more about this book, please make a call to doctor X.

     • உலகில் நல்ல மனநிலை உள்ள ஆண்கள் பெண்களில் 95% பேர் பருவ வயதில் கைப்பழக்கம் உள்ளவர்கள்.
      மீதம் 5% பேர் பொய் சொல்லூகிறார்கள்.
      தந்தை மகள்,தாய் மகன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி
      இந்த உறவுகள் பாலியல்(காமம்) சம்பந்தம் உடையது.
      இதை சொல்லியவர் மனோத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சிக்மன்ட் பிராய்ட்..

      இப்போது சொல்லுங்கள் காமம் என்றால் என்ன? கம்யுனிஶஸ்ட்டுகள் மரமண்டைகளா….

      • கருமம்….எல்லாரயும் உங்களைப்போலவே நெனைத்து விட்டீர்கள் போலும்

 8. @சோழன்

  நீங்க சொல்லுறதப்பாத்தா இது வரைக்கும் உடலுறவு வச்சுகிட்டவங்க எல்லாரும் காம சூத்த்ராவை பாத்துதான் உடலறுவு வச்சுகிட்டதா சொல்லுவீங்க போலிருக்கு.

  வினவு எழுதுனதில எங்கேயுமே காமம் தவறுன்னு சொல்லவே இல்லை. காமம் என்பது இரண்டு அன்புள்ளங்களுக்கு இடையே நடைபெறக்கூடிய தனிப்பட்ட ஒன்று. அது புனிதமானதாகக்கூட இருக்கலாம். ஆனால் நீங்களோ கையாளப்பட்டிருக்கிற முறையைத்தான் வினவு விமர்சிக்கிறது. உதாரணத்திற்கு, நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற தியேட்டரில் ஒரு ‘A’ படம் ஓடுதுன்னு வச்சுக்குவோம்…அது புனிதமானதுன்னு அம்மா, அப்பா, குழந்தைங்களோட போயி பாக்க முடியுமா? வீட்டுக்கு பக்கத்துல ஒரு போஸ்டர் ஒட்டினாக்கூட பொங்கி எழுந்துர மாட்டோம்? ஆனா அது புனிதமானதுன்னு கோவில் போன்ற பொது மக்கள் வர்ற இடங்களிலெல்லாம் வச்சிருக்காங்க; அது ஒரு பெரிய மந்திரம்னு சொல்லி தினமும் படிக்கணும்/கேக்கனும்னு சொல்லுறாங்க. அது மட்டுமல்லாமல், புராணக் கதைகள் எல்லாமே காம அபத்தங்கள்தான்…. அதைத்தான் வினவு விமர்சிக்கிறது.

  • Looks like… you are an unmarried person 🙂

   Please read your comments once again. you can enhance your happiness if you read the kamasuthra book. SEX is part of our life. So it has to be enjoyed in a proper way.

   \\நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற தியேட்டரில் ஒரு ‘A’ படம் ஓடுதுன்னு வச்சுக்குவோம்…அது புனிதமானதுன்னு அம்மா, அப்பா, குழந்தைங்களோட போயி பாக்க முடியுமா? \\

   you must google to understand the meaning of divine (punitham). It will help you to find yourself to know the answer for your questions.

   \\புராணக் கதைகள் எல்லாமே காம அபத்தங்கள்தான்…. அதைத்தான் வினவு விமர்சிக்கிறது.\\

   கெட்டவர்களுக்கு நல்லதும் கெட்டவையாக தெரியும். நல்லவர்களுக்கு கெட்டதும் நல்லவையாக தெரியும். பிரீட்டிஷ்காரனும், அவன் கைகூலியாக செயல்பட்ட குந்தினி பிராமணர்களும் எழுதி வைத்த சமஸ்கிரத மொழிபெயர்ப்பு நூல்களை படித்தால் இப்படி தான் எல்லாம் தவறாக பிரிந்து கொள்ள வேண்டிவரும்.

 9. வர வர வினவுக்கு காம வெறி தலைதூக்கி வருகிறது..
  ஔவை,வெள்ளீவீதியார்,வள்ளுவர் போன்றர்களின் சங்ககால தமிழ் காம இலக்கியங்களைப் படிக்கவும்.
  அல்லது இக்கட்டுரையை எழுதியமைக்கு மன்னிப்பு கோரவும்.

  • சரியா சொன்னீங்க.தட்டி கேக்கலைன்னா என்ன வேணும்னாலும் பேசலாம்னு நெனைப்பு.கிறித்துவத்தில் காம பத்திகள் உண்டு.முகமது நபிக்கு 11 பொண்டாட்டிகள்.இதையும் சொல்லு

   • உலகில் நல்ல மனநிலை உள்ள ஆண்கள் பெண்களில் 95% பேர் பருவ வயதில் கைப்பழக்கம் உள்ளவர்கள்.
    மீதம் 5% பேர் பொய் சொல்லூகிறார்கள்.

    தந்தை மகள்,தாய் மகன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி
    இந்த உறவுகள் பாலியல்(காமம்) சம்பந்தம் உடையது.

    இதை சொல்லியவர் மனோத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சிக்மன்ட் பிராய்ட்..

    இப்போது சொல்லுங்கள் காமம் என்றால் என்ன? கம்யுனிஶஸ்ட்டுகள் மரமண்டைகளா….

 10. //ஆம் இருந்தால் என்ன? ஒரு சமுதாயத்தில் எல்லாவிதமானவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். சமுதாயத்தை பற்றி பேசப்படும் பொழுது அதில் இருக்கும் அனைத்து விசயங்களையும் சொல்லிதான் ஆக வேண்டும். //

  Chozhan

  “களவும் கற்று மற”; “கொலையும் செய்து பார்” என்பதைப் போல இருக்கிறது நீங்கள் சொல்வது. சமுதாயத்தில் அசிங்கங்கள் இருக்கின்றன. உண்மை! அதை அடையாளங்கள் காட்டி பல நல்லவைகளை கற்றுக்கொடுக்கலாம். உண்மை!!

  ஆனால் உங்கள் மதத்தில் பலபல அசிங்கங்கள் சரியென காட்டப்படுகின்றன. மக்கள் தவறான வழி காட்டப‌படுகின்றார்கள்.

  காமசூத்திரா சரியென்றால் போர்ன் சைட்டுக்களும் சரிதான். ஏனென்றால் அவைகளில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனியே செய்வதைத்தானே காட்டுகிறார்கள் ? ஆனால் அச்சைட்டுக்களை நாம் ஏன் தடைசெய்து வைத்திருக்கிறோம்.

 11. ஆமா ஹுந்துக்கள் காம வெறி பிடித்தவர்கள் ஆனா முஸ்லீமுகள்?ஒசாமா இருபது பொண்டாட்டி வச்சிருந்தான் அதையும் சொல்லு.ஆனா ஓங்க செகப்பு பயன்கரவதம்தானே அல்லாத்தையும் விட கொடுமையா இருக்கு?ப்ரிட்ஜு பள்ளிக்கூடம் ரயில் என நீங்க வெடி வேகாதது உண்டா?இத்தனைக்கும் ஒங்களுக்கு மதம் இல்லை.

 12. நீங்கதானே காமத்த மறைக்க கூடாதுன்னு சொல்றீங்க.அதான் வெளிப்படையா இருக்கு ஒனக்கு எங்க எரியுது?ஆனா ஓங்க செகப்பு கூட்டம் என்னிக்குமே ஆட்சியை கைப்பற்ற முடியாது.அதனால சும்மா கொலச்சிகினு இரு

 13. கருணாநிதியின் போலி நாத்திகம்தான் கட்டுரை பூரா தெரியுது.யோவ்.அதை பயன்படுத்திதான் 50 வருஷம் ஆட்சியில் இருந்துட்டாரு களின்ஜர்.நீங்க அதை சொல்லி ஆட்சிய புடிக்கலாம்னு இருந்தா அது சரிபட்டு வராது அம்புட்டுதேன் சொல்லுவேன்.மக்கள் என்றுமே கருணாநிதியின் (உங்களை போன்ற)போலி நாட்த்திகத்தை ஏற்றுகொள்ள மாட்டார்.ஒ.ஒருவேளை (ரசிய)ஸ்டாலின் போலஎதிர்ப்பாளர்கள் எல்லாரையும் கொன்னுட்டு ஆட்சிக்கு வர நினைக்கிறீர்களோ?இருக்கலாம்.மாவோவே அதைத்தானே செய்தார்

 14. http://thathachariyar.blogspot.com/2011/02/4.html

  “…அரசின் உதவியின் கீழ் அமெரிக்காவிலிருக்கும் அல்லது அமெரிக்காவில் கல்வி கற்கும் டாக்டர்களில் 67 சதம் பேர் பிராமணர்கள்.

  இந்தியாவின் செலவில் கல்வி கற்றுத்தேறிய இவர்கள் இந்தியாவில் மருத்துவ உதவி கிடைக்காமல் கதறும ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை விடுத்து அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் சென்று சம்பாதித்துக் குவிக்கின்றனர்…”

  Refer link for more and more stories on Hinduism and its Adults Only materials

  http://thathachariyar.blogspot.com/2011/02/18.html

  • தாதாசாரி என்ன பெரிய பருப்பா? அவன் சொல்வதை எல்லாம் நாங்கள் நம்ப வேண்டுமா? 90 வயதிற்கு மேல் ஒருவனால் நடக்கவே முடியாது. ஒழுங்காக வேலை செய்தவனான இருந்தால் கூட பரவாயில்லை. இவரோ, உட்கார்ந்து படிப்பதை மட்டும் தொழிலாக செய்பவர். இவர் எப்படி தீடீர் அறிவு வந்து அதுவும் கிழ வயதில் இதை எழுதி இருப்பார்.
   இவர் என்ன P.Hd பட்டம் பெற்ற அறிவு மேதையா? வெறும் புளியோதரையை சாப்பிடும் மனிதர் தானே?

   இந்தியாவின் செலவில்லா… என்ன காமெடி விடுகிறீர். முற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு எந்த சலுகையும் அரசாங்கம் தருவது கிடையாது. வேலை வாய்ப்பிலும் உரிமை கிடையாது. அதனால் அவர்கள் அங்கே போகிறார்கள். இதில் உங்களுக்கு என்ன காண்டு.

   நீங்கள் சொல்வதை பார்த்தால் அமெரிக்காவில் உள்ள புள்ளியல் நிறுவனத்தில் இருந்து வந்த தகவலை வைத்து சொல்வது போல் உள்ளது. அது சரி, அமெரிக்கவில் சாதி சான்றிதல் கிடையாது. அப்படி இருக்கையில் இந்த விசயம் எப்படி உங்களுக்கு தெரிந்தது

 15. http://senkodimaruthu.blogspot.com/2010/10/blog-post_08.html
  *****************************
  வினவு அண்ட் கோவின் நிஜ முகம் இங்கு பாரீர்.இஸ்லாமிய திருமணத்தை பற்றி எழுதிய வினவு அது குறித்து கடுமையான எதிர்ப்பு இஸ்லாமியர்களிடம் இருந்து வந்ததும் முகமது நபியை நாங்கள் ஒன்னும் சொல்லை.குரானை எத்தனை பேரு உண்மையா பின்பற்றுகிறீர்கள் என குரானுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் பாருங்கள்.

  • குரானை மேற்கோளிட்டு பெண்ணடிமைத்தனத்தை பற்றி வினவில் பதிவுகள் வந்துள்ளன. அதெல்லாம் பொறுமையாக படித்து விட்டு வாருங்கள். இஸ்லாமை விமர்சித்தால் ஆர். எஸ். எஸ் போல பேசுவதாகவும், பார்ப்பனிய இந்துமதத்தை விமர்சித்தால் குரானுக்கு வக்காலத்து வாங்குவதாகவும் குறை கூறுவது இரண்டு மதங்களைச் சேர்ந்த வெறியர்களுக்கும் புதிதல்ல.

   • நான் கொடுத்த இணைப்பை பற்றி கேட்டா உடனே வினவு தளத்தை தேடி பாருங்கன்னு சொல்ல எப்பவும் ஆளு ரெடியாத்தான் இருக்கு

    • வினவு தளத்தில செங்கொடி மருதுவோட பதிவுக்கு கருத்து கேட்டது யாரு?

  • “ஊருக்கு இளைச்சவன் உள்ளூரு ஆண்டி ”
   வினவுக்கு பிரியாணி மண்டயனுகள கேக்க தெகிரியம் கிடையாது ஆனா ஆர்.எஸ்.எஸ். டவுசர மட்டும் ஆராய்ச்சி பண்ணும்.
   சொத்த பதிவு. ஹ்ம்….

 16. வினவு, ஏன் நீங்கள் எல்லா மறுமொழிகளையும் அனுமதிக்கிறீர்கள்? தலைப்பிற்கும், விவாதத்திற்கும் பொருந்தாத மறுமொழிகளை படிப்பது வேதனையையும், மன உளைச்சலையும் தருகிறது. இதில் நீங்கள் சற்று கறாராகவே தணிக்கை முறையை பின்பற்ற வேண்டுமாறு விளைகிறேன்.

  • வினவு அந்த ஒரு விஷயத்தில தான் உருப்படியா இருக்கு, அதிலயும் வைக்காதீங்க ஆப்பு.

  • உங்களை யார் மறுமொழிகளை படிக்க சொன்னது?அப்போ வினாவை விட பின்நூட்டகாரர்களின் கருத்து ஆழமானதென நினைக்கிறீர்களா என்ன?

   • பல சமயத்தில் பின்நூட்டகாரர்களின் கருத்து ஆழமாக இருக்கிறது.. என்ன செய்வது!!! 🙂

 17. புல்ஷிட் .இந்து மதத்தை குட்ரம் சொன்ன முதல் பத்திரிக்கை வினவு தான். ஊருப்பட மாட்ட..

 18. என்னடா வெள்ளிகிழமை ஆச்சே!, இந்த வாரம் இதுவரை ஹிந்துவை பத்தி கேவலமா ஒன்னும் எழுதலியேன்னு நினைச்சேன், உடனே இந்த ஆர்டிகலை போட்டுடீங்க! வெரி குட்….

  “இந்து மதம் ஜனநாயக மதமா?”

  ஆமாம் உங்க ஆளுங்களுக்குதான் ஜனநயகம் மேல நம்பிக்கை கிடையாதே, பின்ன எதுக்கு இந்து மதத்துல ஜனநாயகம் இருக்கா இல்லை யான்னு ஆராய்ச்சி?

  “இந்து மதம் ஒழுக்கமான மதமா?”

  ஆமாம் , ஒழுக்கமான மதம் தான். ஒருத்தனுக்கு ஒருத்தி ன்னு சொல்லி இருக்குறது இந்துமதம் மட்டும் தான். (உடனே பெருமாள், முருகன் லாம் எப்படி ன்னு சில அறிவு ஜீவிகள் கேட்கும்)
  அப்படி இல்லாம ஏகப்பட்ட பொண்டாட்டி கட்டின என்னா என்னா பிரச்சினை வரும் னு எல்லா புராண , இதிகாசதுலலாம் கிளியர் ஆ சொல்லி இருக்கு.
  மத்த மதமெல்லாம் புடிக்கலீனா அத்து விட்ருன்னு தான்னு சொல்லுது, அதே மாதிரி நாய் மாதிரி பார்க்குறது கூடல்லாம் படுன்னு சொல்டறது இந்து மதம் கிடையாது. செக்ஸ் இல்லைனா நீயும் நானும் கிடையாது. அது ஏதோ தப்பான விஷயம் மாதிரி சொல்றீங்க. விலைவாசி , மக்கள்தொகை பெருக்கம் இதெல்லாம் பத்தி கவலையே படாம பன்னி கூட்டம் மாதிரி பத்து பதினஞ்சு புள்ள பெக்குரவனை எல்லாம் என்னா சொல்லுவீங்க? கோவில்ல சிலை உனக்கு ஆபாசம் மாதிரி தெரியுது. வூட்டுக்குள்ள திரை போட்டு கண்டவன் கூட படுக்கறது புனிதமா?

  “இந்து மதம் அகிம்சையான மதமா?”

  கண்டிப்பா அகிம்சையான மதம் தான். இல்லேன்னா வந்தேறி கூட்டமெல்லாம் இங்கே வந்து பண்ற கூத்தையெல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்குமா? உங்களுக்கு அஹிம்சை மேல நம்பிக்கை