privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் !

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளிக்கு எதிரான போராட்டம் !

-

சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்கள் கடந்த 1 வருடமாக கூடுதல் கட்டணத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கு நீதியரசர் கோவிந்தராஜன் கமிட்டி கட்டணம் 4500 என்றால் கூடுதலாக 12000 கொடுத்தால் தான் வாங்குவேன் என பள்ளி தாளார் லட்சுமிகாந்தன் கூறுகிறார்.

அரசு கட்டணத்தை வாங்க மறுத்து விட்டு கட்டணம் கட்டாத மாணவர்கள் என்று வருகை பதிவேட்டில் கூப்பிடாமல் அவர்களை தனியே அமர வைக்கிறார் இந்த பள்ளி முதலாளி. முன்நின்று போராடும் பெற்றோர்களுக்கு கட்டாய டிசியை பதிவு தபாலில் அனுப்புகிறார். ஆசைவார்தை காட்டி பிறகு பெற்றோர்களை  மிரட்டவும் செய்கிறார். இந்த லட்சுமி காந்தன் தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர், முன்னால் மேலவை உறுப்பினர், அண்ணாமலை செட்டியாரின் நேர்முக உதவியாளர் இராஜேந்திரனின் நெருங்கிய உறவினராவார்.

இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் அரசு கட்டணத்தை தவிர கூடுதலாக தரமாட்டேன் என்று உறுதியாக போராடுகிறார்கள், 12-ம் வகுப்பு முடித்த 2 இஸ்லாமிய மாணவர்களுக்கு 24500 ரூபாய் கொடுத்தால்தான் மதிப்பெண் பட்டியல், டி,சி கொடுப்பேன் என்று மிரட்டினார், நமது சங்கம் தலையிட்டு காவல்துறையிடம் அச்சுறுத்தி பணம் பறிக்கிறார் என்று புகார் கொடுத்து அரசு கட்டணம் ரூபாய் 11000 மட்டும் செலுத்து பெற்றுக் கொடுத்தது. மேலும் சங்கத்தினுடைய சிதம்பரம் நகர பொருளார் நடராஜன் மகன் நான்காம் வகுப்பு படிக்கும் டேவிட்ராஜா என்பவருக்கு பள்ளி திறந்த 2வது நாளே சக மாணவனை கிள்ளி விட்டான் என்று ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி டிசி கிழித்து  பதிவு தபாலில் அனுப்பி வைத்தது பள்ளியின் நிர்வாகம். நமது புகாரின் பேரில் 20.6.2011 மெட்ரிக்பள்ளியின் ஆய்வாளர் அருள்மொழிதேவி பள்ளி முதல்வரிடமும் தாளாளர் லட்சுமி காந்தனிடமும் விசாரணை நடத்தினார். சிதம்பரம் நகர போலீசும் பஞ்சாயத்து பேசியது.

50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பெற்றோரான நடராசன் என்பவர் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பதாக மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் சேர்த்து கொள்கிறோம் என்று கூறினார். நமது சங்கம் தரப்பில் தவறு செய்தது பள்ளி நிர்வாகம், மாணவனை திரும்ப சேர்த்து கொள்ள வேண்டும், மன்னிப்பு கடிதம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று உறுதியாக நின்றோம். கூடுதல் கட்டணம் தொடர்பாக பள்ளி ஆய்வாளர் கேள்விகளுக்கு பள்ளி தாளாளர்,” ஆடிட்டரை கேட்டு சொல்லுகிறேன், லாயரை கேட்டு சொல்லுகிறேன்” என்று திமிராக பேசி அதிகாரியை எரிச்சலூட்டி அனுப்பி விட்டார்.

இது தொடர்பாக ஆட்சியரிடம் சென்று நமது சங்கம் புகார் கொடுக்கப்பட்டு முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளியும் ஆய்வாளர் அருள்மொழிதேவியும் சேர்ந்து விசாரிக்க உத்தரவிட்டார். 24,6,2011 அன்று நடந்த விசாரணையின் போது கடந்த ஆண்டு காமராஜ் மெட்ரிக் பள்ளி பலமடங்கு கூடுதலாக வசூலித்ததை ஆதாரங்களுடன் பெற்றோர்கள் சார்பில் புகார் மனுவுடன் கொடுக்கப்பட்டது. இந்த ஆண்டு பல மடங்கு ரசீது இல்லாமல் வசூலிப்பதும் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டது. விசாரணையில் பள்ளி முதல்வர்கள் அப்பட்டமாக பொய் சொல்லுவதும் பணிபுரியும் ஆசிரியர்களிடம் உங்கள் சம்பளம் எவ்வளவு, எத்தனை வருடமாக பணிபுரிகிறீர்கள் என்று கேட்டால் தெரியாது என்று சொல்லுகிறார்கள். இதே போல் காமராஜ் சிறப்பு பள்ளியில் அரசு கட்டணத்தை விட 20000 அதிகம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குஅனுமதி இல்லாமல் நடத்துகிறீர்கள் என்று அந்த பள்ளி முதல்வரை கேட்டதற்கு இங்கு நடத்தவில்லை என்றதோடு வகுப்பறையில் உள்ள மாணவர்களை காலை 10,30 மணிக்கு பேஸ்கட் பால் விளையாடுவதற்கு அனுப்பிவிட்டார். இவர்களெல்லாம் வேறு பள்ளியில் இருந்து இங்கு விளையாட வந்திருக்கிறார்கள் என்று பொய் சொன்னார். மாணவர்களையும்  அவ்வாறே பொய் சொல்ல பயிற்றுவித்திருக்கிறார்கள்.

ஆனால் முதன்மை கல்வி அதிகாரி மாத தேர்வு தாள்களையும் வருகை பதிவேடுகளையும் ஆசிரியர்களின் பதிவேடுகளையும் ஆட்சேபணையை புறம் தள்ளி கைப்பற்றினார்.

அதேபோல் தாளாளரிடம் விசாரித்தபோது கட்டணம் கூடுதலாக வசூலிக்க எனக்கு உரிமை உண்டு, கல்வி கட்டணத்தை தவிர கூடுதலாக ஸ்மார்ட் கிளாலஸ் என்று பல்வேறு தலைப்புகளில் வாங்கலாம் என்று ரவிராஜ் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார், இதுதொடர்பாக மேலும் விபரங்களை ஆடிட்டரையும், லாயரையும் கன்சல்ட் பண்ணித்தான் சொல்லமுடியும் என்று சொல்லிவிட்டார். மேலும் காமராஜ் சிறப்பு பள்ளியில் அங்கீகாரம் இல்லாமல் மேல்நிலை வகுப்பு நடத்துவது குறித்தும், ஒரே இடத்தில் பள்ளியையும், ஆசிரியர் பயிற்சி நடத்துவது தவறு  என்றும் அதிகாரிகளுடைய கேள்விகளுக்கு நான் உரிய விளக்கம் அனுப்புகிறேன் என்று அதிகாரிகளை எரிச்சலூட்டி விசாரணையை பாதியிலேயே முடிக்க வைத்தார்.  விசாரணைக்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்ட பெற்றொர்கள், மாணவர்கள்ர மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்க சங்கத்தின் நிர்வாகிகள், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டதை தெடங்கினர்.

அரசு உத்திரவை மாவட்ட நிர்வாகமும் அமுல் படுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் தாளாளர் லட்சுகாந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் அமர்ந்தனர். காவல் துறை மிரட்டிப்பார்த்தது. அரசு உத்தரவை அமுல்படுத்தவே இப்போராட்டம், அமுல்படுத்த மறுக்கும் லட்சுமி காந்தன் மீது நடவடிக்கை எடுங்கள் பார்ப்போம் என்றதும் போலீசு அதிகாரிகள் வாச்சுமேன்னாக விலகி நின்றார்கள். மாலைமதிய உணவின்றி தொடர்ந்த இப்போராட்டம் மாலை 6 மணிக்கு சிதம்பரம் கோட்டாச்சியர் கல்விதுறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஒன்றாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இங்கு வந்து பேசினால் அவர் பணிய மறுக்கிறார், அதிகாரிகள் அலுவலகத்திற்கு வரவழைத்து பேசுவோம் உங்கள் தரப்பில் இருந்து 5 பிரதிநிதிகள் வாருங்கள். கட்டணம் தொடர்பாக சுமுக முடிவு எட்டப்படாவிட்டால் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்தன் பேரில் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு  உரிய நடவடிக்கை இல்லையென்றால் அடுத்தநாள் முதல் போராட்டம் தொடரும் என பெற்றோர்கள்அறிவித்தனர்.  இதற்கும் உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் வராமல் கடலூரில் இருந்து ஒருசிலர் மட்டுமே வந்து நாளிதழ்களில் வெளியிட்டனர். இந்த விசாரணை, போராட்டத்திற்கு முன்பாக பெற்றோர்களின் அச்சத்தை போக்க அரசு உத்தரவை மயிரளவும் மதிக்காத காமராஜ் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய், பெற்றோர்கள், மாணவர்களை கூடுதல் கட்டணத்திற்காக துன்புறுத்தும் தாளார் லட்சுமி காந்தனை குண்டர் சட்டத்தில் கைது செய் என மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.

மேலும் சமீபத்தில் நடந்த தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகள், அவர்கள் கட்டணம் தொடர்பாக பேசுவதற்கு சிறப்பு கல்வி மாநாடு என்ற பெயரில் தங்கள் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களை வைத்து கூட்டம் நடத்தினார்கள். இந்த மாநாட்டிற்கு எதிராக நமது சங்கத்தின் சார்பில்  பெற்றோர்களின் தாலி அறுத்து கட்டண கொள்ளை அடிக்கும் கல்வி வியாபாரிகளுக்கு கல்வி மாநாடு தேவையா என சிதம்பரம் நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. சிதம்பரத்தில் பெற்றோர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்து நூற்றுக்கும் மேற்ப்ட்ட பெண்களும் ஆண்களும் வீதியில் இறங்கு போர்க்குணமாக நமது தலைமையில் போராடி வருகிறார்கள். இந்த வெற்றியின் முலம் தமிழக மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கும் கள்ளம் மெளனம் காக்கும் அரசுக்கும் ஒரு பாடமாக அமையும் என கருதுகிறோம்.

_____________________________________________________________

தகவல்: மாணவர்களின் கல்வி உரிமைக்கான சங்கம்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சிதம்பரம்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. ”தரம்” உள்ள கல்வியை எப்படி இந்த மெட்ரிக் பள்ளிகள் வழங்குகின்றன என்பதை

    சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ”லட்சணமே” தெரிவிக்கிறது.சமச்சீர்

    கல்வியை ஏன் இந்த தனியார் பள்ளிகள் எதிர்கின்றன? கொள்ளையடிக்க முடியாமல்

    போய்விடுமோ,என்று கருதித்தான் எதிர்கின்றன.கல்விக்கொள்ளையை தடுக்க

    வேண்டுமானால் சமச்சீர்கல்வியை உடனடியாக அமல்படுத்தவேண்டும். பெற்றோர்-

    மாணவர் போராட்டம் வெல்லட்டும்.(”சிதம்ரம்” -சிதம்பரம் என தலைப்பினைத்

    திருத்தவும்.)

  2. போராடும் தோழர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
    கட்டுரையில் எழுத்து பிழைகள் உள்ளது. அவற்றை திருத்தம் செய்யவும்.

  3. //அரசு உத்தரவை அமுல்படுத்தவே இப்போராட்டம், அமுல்படுத்த மறுக்கும் லட்சுமி காந்தன் மீது நடவடிக்கை எடுங்கள் பார்ப்போம் என்றதும் போலீசு அதிகாரிகள் வாச்சுமேன்னாக விலகி நின்றார்கள்//
    உண்மை நன்றாகவே சுடுகிறது.
    சட்டங்கள் அனைத்தும் காகித அறிக்கையாகவே உள்ளன.
    காகிதப்பூக்கள் ஒருபோதும் மணப்பதில்லை.
    போராட்டமின்றி ஒன்றையும் செயல்படுத்த முடியாது.
    பெற்றோர்கள் அனைவருக்கும் வீரவணக்கங்கள்.

  4. கொள்ளையடிக்கும் பள்ளிக்கு கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரா?
    இதை விட கொடுமை வேறொன்றுமில்லை.

  5. ஒரே மருந்து எல்லொரும் சேர்ந்து துவைத்து [ அடி] எடுத்தால் சரியாக வரும்.

Leave a Reply to வலிபோக்கன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க