privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்!

ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்!

-

லைக்கற்றை ஊழல் என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழல் மட்டுல்ல; இது தனியார்மயதாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் கார்ப்பரேட் பகற்கொள்ளை. தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் இத்தகைய பகற்கொள்ளைகள் சட்டபூர்வமாகவே அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மையமான பிரச்சினை; இலஞ்சஊழல் மோசடிகளைக் காட்டிலும் முதன்மையானதும், அவற்றில் பலவற்றுக்கு அடிப்படையானதும் இதுதான் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

எனினும், 2ஜி அலைக்கற்றைகளை ஏலம் மூலம் விற்பனை செய்யாத காரணத்தினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அதிகபட்ச வருவாய் இழப்பு என்று கணக்குத் தணிக்கையாளர் குழு அளித்த மதிப்பீடான ரூ.1.76 இலட்சம் கோடி என்ற தொகை முழுவதையும் ஊடகங்கள் ‘ஊழல்’ என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கியதன் தொடர்ச்சியாக, இம்மாபெரும் கார்ப்பரேட் பகற்கொள்ளையின் பின்புலமாக அமைந்திருக்கும் மறுகாலனியாக்கம் என்னும் மையமான பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஊழல்தான் நாட்டின் மையமான பிரச்சினை என்று சித்தரிப்பதற்கும், இன்னும் ஒரு படி மேலே போய் தனியார்மயதாரளமயக் கொள்கைகள் மூலம் நாடு அடையக்கூடிய முன்னேற்றத்தைத் தடுப்பதே ஊழல்தான் என்று சித்தரிப்பதற்கும் இது பயன்பட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் :  ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !‘அலைக்கற்றை ஊழல்’ விவகாரத்திலிருந்து ‘உத்தமர்’ மன்மோகன் சிங்கும் டாடா, அம்பானி, மித்தல், ரூயா, ராடியா, பவார், சிதம்பரம், மாறன், ஷோரி, பிரமோத் மகாஜன் உள்ளிட்டு இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்புள்ள பலரும் விலக்கப்பட்டு, அலைக்கற்றை ஊழலின் இலக்கு திட்டமிட்டே குறுக்கப்பட்டது. தி.மு.க.ராஜாகனிமொழி என்று இந்த இலக்கை குறுக்கியதன் மூலம் கார்ப்பரேட் ஊடகங்கள், சுப்பிரமணிய சாமிசோஜெயலலிதா உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், பாரதிய ஜனதா, காங்கிரசு கட்சிகள் என ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் நோக்கத்தில் ஆதாயம் பெற்றனர். இந்த மாபெரும் கொள்ளையின் முழுப்பரிமாணமும் வெளிவருவதை யாரும் விரும்பவில்லை என்பதனாலும், இதில் தி.மு.க.வை மட்டும் தனிமைப்படுத்திக் காவு கொடுப்பதில் இவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பதனாலும் இந்த நாடகம் இதுவரை இடையூறின்றித் தொடர்ந்துள்ளது.

இப்போது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள முதல் குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நிலையில் (Framing of Charges) தன் மீது பல்வேறு கிரிமினல் குற்றப்பிரிவுகளின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துத் தனது வாதங்களை ராஜா முன்வைத்திருக்கிறார். குற்றத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு அவர் முன்வைத்துள்ள இந்த வாதங்கள் எந்த அளவிற்கு அவருக்குப் பயன்படும் என்பது குற்றவியல் வழக்கு விசாரணை சார்ந்த விசயம். ஆனால், இப்பிரச்சினையில் இதுகாறும் இருட்டடிப்பு செய்யப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர்வதற்கும் இந்தப் பகற்கொள்ளையின் அரசியல் பின்புலத்தை அம்பலமாக்குவதற்கும் அவரது வாதங்கள் நமக்குப் பயன்படுகின்றன.

“1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற கணக்குத் தணிக்கையாளரின் மதிப்பீடு அபத்தமானது, அடிப்படையற்றது. சி.பி.ஐ.யின் கணக்கின்படியே இழப்பு என்பது 30,984.55 கோடி தான்சு என்கிறார் ராசா. உண்மைதான். ஆனால், 1.76 இலட்சம் கோடி ஊழல் என்று கூக்குரலிட்ட சு.சாமி, ஜெயா, பா.ஜ.க. முதல் ஊடகங்கள் வரை யாரும், “இழப்புத் தொகையை சி.பி.ஐ. குறைத்துக் காட்டியுள்ளது ஏன்?சு என்ற கேள்வியை எழுப்பவில்லை.

“இழப்பு இத்தனை கோடி ரூபாய் என்று மதிப்பிடுவதற்கு சி.பி.ஐ. யார்? அது அரசாங்கத்தின் வேலை. இழப்பு எவ்வளவு என்பதை அரசு சொல்லட்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்.

அரசு என்ன சொல்கிறது? முதலில் வருபவர்க்கு முதலில் என்பதுதான் அலைக்கற்றை உரிமங்கள் வழங்குவதற்குப் பின்பற்றப்பட்ட கொள்கை என்றும், அந்தக் கொள்கையை மாற்றி டெண்டர் விட வேண்டும் என்று அரசு முடிவு செய்யாதபோது, டெண்டர் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும் என்று ஊகித்து, அதன் அடிப்படையில் இத்தனை கோடி ரூபாய் இழந்து விட்டோம் என்று பேசுவது அபத்தம் என்றும் கபில் சிபல் ஏற்கெனவே கூறியிருக்கிறார். இதை மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திலேயே கூறியிருக்கும் போது, என் மீது எதற்காகக் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதே ராசாவின் கேள்வி. ராசா நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வைத்த அன்றைக்கு இரவு என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில்கூட, “இழப்பு இல்லைசு என்ற கருத்தையே கபில் சிபல் வலியுறுத்தினார். அதாவது, சி.பி.ஐ. யின் குற்றச்சாட்டை ராசா மட்டும் மறுக்கவில்லை, இந்த அரசே அதனை மறுக்கிறது என்பதுதான் வேடிக்கை!

“டெண்டர் விடாமல் முதலில் வந்தவர்க்கு முதலில் என்ற அடிப்படையில் அலைக்கற்றை உரிமங்களை வழங்கியது குற்றம் என்றால், மாறனும் அருண் ஷோரியும் என்னுடன் சிறையில் இருக்க வேண்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்.

“2001இல் தீர்மானிக்கப்பட்ட விலையில்தான் அலைக்கற்றை வழங்கப்படவேண்டும் என்பதில் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் உறுதியாக இருந்தது. நிதி அமைச்சகம் டெண்டர் விடவேண்டும் என்று கூறியதுசு என்று கூறினார் சிதம்பரம் (பிசினெஸ் லைன், ஜூலை 26, 2011). இரு அமைச்சகங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவும்போது கொள்கை மாற்றம் குறித்து முடிவு செய்ய வேண்டியவர் பிரதமர். இப்பிரச்சினையை அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பி முடிவு செய்யாததுதான் குற்றம் என்றால், அந்தச் சதிக் குற்றத்துக்குப் பதிலளிக்க வேண்டியவர் பிரதமர். அமைச்சர்கள் குழுவைக் கூட்டும் அதிகாரம் அவருடையதுதான் என்பதே ராசா முன்வைக்கும் வாதத்தின் சாரம்.

அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமருக்குத் தெரியாமலும் பிரதமரை ஏமாற்றியும் ராசா பயங்கரமான ஊழலைச் செய்துவிட்டதைப் போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை சு.சாமி, ஜெயலலிதா, சோ மற்றும் பார்ப்பன ஊடகங்கள் அடங்கிய கூட்டணி துவக்க முதலே உருவாக்கியிருக்கிறது. இது ஒரு இமாலயப் பொய் என்ற போதிலும், மன்மோகன் சிங் என்ற நபருடைய பிம்பம் நொறுங்கினால், அது தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் மீதே விழுந்த கறையாகிவிடும் என்பதனாலும், மன்மோகன் அமெரிக்காவின் பங்களா நாய் என்பதனாலும், ஊடகங்கள், ஓட்டுக்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் மன்மோகன் சிங்கின் இந்தப் புனித வேடத்தை சேதமின்றிப் பாதுகாக்கின்றனர்.

ஆனால், விசயங்களுக்குள் ஆழமாகச் செல்லாமல் மேம்புல் மேய்பவர்களை மட்டுமே இவ்வாறு ஏமாற்ற இயலும். இந்த ஊழல் விவகாரத்தில் ராசா கைது செய்யப்படுவதற்கு முதல்நாள், ராசாவிற்கும் மன்மோகனுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனை இந்து நாளேட்டில் ஒரு முழுப்பக்க அளவிற்கு வெளியானது. அரசாங்க இரகசியம் என்று கருதப்படும் இக்கடிதங்களை ராசாதான் கொடுத்து வெளியிடச் செய்திருக்க வேண்டும். மன்மோகன் சிங் இருட்டிலிருந்தார் என்ற கூற்றை அக்கடிதங்கள் பொய்ப்பிக்கின்றன. அதன் பின்னர் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி வெளியிட்ட அறிக்கை இப்பிரச்சினையில் மன்மோகன் சிங்கிற்கு உள்ள தொடர்பை வெளிக்கொணர்ந்ததுடன், மன்மோகன் சிங்கின் நாடாளுமன்ற உரைகளிலிருந்தே அவரது தொடர்பை நிரூபித்துக் காட்டியது. ஜோஷியின் அறிக்கைக்கு எதிராக காங்கிரசு கலகம் செய்வதற்கும் இதுவே காரணமாக அமைந்தது.

யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில் அலைக்கற்றையை வாங்கின. அதன் பின்னர் தமது நிறுவனப் பங்குகளின் ஒரு பகுதியைப் பன்மடங்கு அதிக விலைக்கு அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்றனர். இவ்வாறு அலைக்கற்றை உரிமத்தை வாங்கிய நிறுவனங்கள், தமது பங்குகளை உடனே அதிக விலைக்கு விற்றிருக்கின்றன. இவ்வாறு இவர்கள் ஈட்டிய தொகை மட்டும் 22,000 கோடி ரூபாய் என்கிறது சி.பி.ஐ. இவர்களது பங்குகளின் விலை திடீரென்று அதிகரித்ததற்குக் காரணம், இவர்கள் கைக்கு வந்திருந்த அலைக்கற்றை உரிமங்கள்தான் என்பதால், மேற்கூறிய 22,000 கோடியும் அலைக்கற்றை விற்பனையின் மூலம் அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய தொகை என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு.

“இந்தியாவில் போடப்படும் எல்லா வெளிநாட்டு முதலீடுகளும் அந்நிய முதலீட்டு ஊக்குவிப்புக் குழுமத்தின் ஒப்புதலைப் பெறுகின்றன எனும்போது, அமைச்சரவை இந்த முதலீடுகளையெல்லாம் அங்கீகரித்திருக்கும்போது, இதில் நான் எந்த சட்டத்தை மீறியிருக்கிறேன்? இவற்றுக்கு பிரதமரின் முன்னிலையில் நிதி அமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார். பிரதமரை மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்சு என்று கூறியிருக்கிறார் ராசா.ஸ்பெக்ட்ரம் ஊழல் : ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !

“ஆ, பிரதமரையே இழுக்கிறார்!சு என்று சில ஊடகங்கள் குதிக்கின்றன. உண்மையை சொன்னால், இவ்விசயம் குறித்து மன்மோகன் சிங் ஏற்கெனவே தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவரைப் பொருத்தவரை ஒரு நிறுவனம் தன்னிடம் உள்ள பங்குகளை விற்பதும், தனது பங்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுவதும் (dilution of equity) நியாயமான வணிக நடவடிக்கைகள். ஸ்வான், யூனிடெக் விவகாரங்களில் நடந்திருப்பதும் அதுதான் என்பதே அவரது கருத்து. “விற்கப்பட்டவை பங்குகள்தானே தவிர, அலைக்கற்றைகளை அவர்கள் யாருக்கும் விற்கவில்லை. எனவே, அந்தப் பரிவர்த்தனைகள் சட்டபூர்வமானவையேசு (ஜூலை 26, பிசினெஸ் லைன்) என்று ராசாவின் கூற்றை மீண்டும் ஒருமுறை வழிமொழிந்திருக்கிறார் சிதம்பரம். “அலைக்கற்றை உரிமத்தை அரசிடம் விலைக்கு வாங்கும் நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு அந்த உரிமத்தை வேறொருவருக்கு விற்கக்கூடாது என்ற விதியை ரத்து செய்து, வாங்கிய மறுகணமே விற்கலாம் என்று 2003ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா அரசு அனுமதி வழங்கி விட்டதுசு என்று குட்டை உடைத்திருக்கிறார் கபில் சிபல் (ஜூலை 27, தி இந்து). இதன்படி பார்த்தால், அவர்கள் அலைக்கற்றையையே கைமாற்றி அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்றிருந்தாலும் அது குற்றமில்லை என்றாகிறது.

மொத்த இழப்பான ரூ.30,984 கோடியில் அலைக்கற்றையை மலிவு விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற குற்றநடவடிக்கையில் ஏற்பட்ட மொத்த இழப்பு மட்டும் ரூ.22,000 கோடி என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் தனது 27% பங்குகளை விற்று ரூ.13,973 கோடி ஈட்டியிருக்கிறது. 67% பங்குகளை விற்று ரூ.6120 கோடி ஈட்டிய யூனிடெக் நிறுவனத்தின் முதலாளி சஞ்சய் சந்திரா சிறையில் இருக்கிறார். ஆனால், ரூ.13,973 கோடியைச் சுருட்டிய டாடா மீது கை வைக்க சி.பி.ஐ. க்குத் துணிவிருக்கிறதா என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ராசா.

ராசா நீதிமன்றத்தில் கிளறாத இரகசியங்களும் எழுப்பாத கேள்விகளும் இவ்வழக்கில் நூற்றுக்கணக்கில் புதைந்து கிடக்கின்றன. இந்தக் கொள்ளையில் பங்கு பெற்றிருக்கும் பெரும் தரகு முதலாளிகள் யாரையும் சி.பி.ஐ. இதுவரை நெருங்கவே இல்லை. ஒரு உரிமத்தை வைத்துக் கொண்டு, ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. ஆகிய இரு தொழில்நுட்பங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதன் காரணமாக 8448.95 கோடி ரூபாய் இழப்பு எற்பட்டுள்ளதாக சி.பி.ஐ இன் குற்றப்பத்திரிகை கூறுகிறது. இதில் ரூ.4930 கோடியை டாடா டெலிசர்வீசஸ் சுருட்டியிருக்கிறது. ஆனால், டாடாவின் மீது குற்றப்பத்திரிகையும் இல்லை, கைதும் இல்லை.

டாடா மட்டுமல்ல, ஐடியா செல்லுலார் (ஆதித்ய பிர்லா குழுமம்), ஏர்டெல் (சுனில் பாரதி மிட்டல்), டேடா காம் சொல்யூஷன்ஸ் (ராஜ் குமார் தூத், ராஜ்யசபா எம்.பி, வீடியோகான் முதலாளி), ஏர்செல், எஸ் டெல், வோடஃபோன் (எஸ்ஸார், ரூயா) ஆகிய அனைவரும் வெவ்வேறு விதங்களில் அலைக்கற்றை கொள்ளையில் பங்கு பெற்றிருக்கின்றனர்.

ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்தை தனக்குப் பினாமியாக அனில் அம்பானி பயன்படுத்தியதைப் போலவே, லூப் டெலிகாம் என்ற நிறுவனத்தை எஸ்ஸார் பினாமியாகப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த விவரங்களை மறைப்பதற்கு அமைச்சர் முரளி தியோரா உதவியிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. அதேபோல, மொரீசியஸில் போடப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் பற்றி சி.பி.ஐ. விசாரிப்பதை அறிந்த ரூயா குழுமத்தை சேர்ந்த பிரசாந்த் ரூயா, ஐ.பி.கேய்தான் ஆகிய தரகு முதலாளிகள், சி.பி.ஐ. விசாரணை குறித்த விவரங்களைத் தருமாறு மொரீசியஸில் உள்ள இந்திய ஹை கமிசனர் மதுசூதன் கணபதியிடம் பேரம் பேசியிருக்கின்றனர். இது குறித்து எழுத்துபூர்வமான புகாரை அவர் அரசுக்கு கொடுத்த பின்னரும், இவர்கள் மீது சி.பி.ஐ. எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை.

இது மட்டுமல்ல; கலைஞர் தொலைக்காட்சியின் 25% பங்குதாரர், அதன் நிர்வாகத்தில் பங்காற்றியவர் என்ற காரணத்தினால் இந்த சதி வழக்கில் கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது. இந்த அளவுகோல் அனில் அம்பானி விசயத்தில் பின்பற்றப்படவில்லை. ஸ்வான் டெலிகாம் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் அலைக்கற்றை உரிமங்களைப் பெற்றதற்காக அனில் அம்பானி குரூப்பின் அதிகாரிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ரூ.1000 கோடி மதிப்புள்ள அனில் அம்பானி நிறுவனத்தின் பங்குகள் ஸ்வான் டெலிகாமுக்கு மாற்றப்பட்டுள்ளன. ரூ.10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள தொகை எதையும் அனில் அம்பானி அல்லது அவரது மனைவியின் ஒப்புதலின்றி கொடுக்கக் கூடாது என்பது வங்கிகளுக்கு அம்பானி நிறுவனம் கொடுத்திருக்கும் வழிகாட்டுதல். ஸ்வான் டெலிகாமின் 50% பங்குகளை உரிமையாக வைத்திருக்கும் அனில் அம்பானியும் அவரது மனைவியும்தான், இந்த மோசடியின் முழுப்பயனையும் அடைந்திருக்கின்றனர். இருப்பினும், அம்பானி நிறுவனத்தின் அதிகாரிகள்தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்களேயன்றி, அனில் அம்பானியை சி.பி.ஐ கைது செய்யவில்லை.

அதேபோல, கலைஞர் டிவிக்கு ரூ.200 கோடி ரூபாய் கொடுத்த டி.பி.ரியால்டீஸ் நிறுவனத்தின் முதலாளி ஷாகித் பல்வா கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், ராசாத்தி அம்மாளின் பினாமிக்கு 250 கோடி ரூபாய் நிலத்தை 25 கோடி ரூபாய்க்கு டாடா நிறுவனம் கொடுத்ததற்கு ஆதாரம் இருந்தும், அமைச்சர் ராசாவைப் பாராட்டி டாடா தன் கைப்பட கலைஞருக்கு எழுதிய கடிதமே ஒரு ஆதாரமாக இருந்தும், பெரம்பலூர் மருத்துவமனைக்கு டாடா அறக்கட்டளையிலிருந்து ரூ.20 கோடி ரூபாய் ஒதுக்குவது தொடர்பான உரையாடல்கள் ஆதாரமாக இருந்தும் டாடா கைது செய்யப்படவில்லை.

“டி.பி ரியால்டீஸ் நிறுவனம் சரத் பவார் குடும்பத்துக்கு சொந்தமானது என்பது மும்பையில் ஊரறிந்த இரகசியம்சு என்று கூறினார் நீரா ராடியா. புனேவைச் சேர்ந்த பர்ஹாதே என்பவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு டி.பி.ரியால்டிஸ் நிறுவனத்தில் உள்ள தொடர்புகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று 2005 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் : ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள் !  ராசாவும் தொடர்ந்து கனிமொழியும் கைது செய்யப்பட்டவுடனேயே, அத்வானியை சந்தித்த பவார், தனது அரசியல் நண்பர்களான மம்தா, சவுதாலா, முலாயம், ஜெயலலிதா ஆகியோரின் ஆதரவுடன் மாற்று ஆட்சியை அமைக்கும் வாய்ப்பைப் பற்றியும், அதற்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை வெளியிலிருந்து பெறுவதற்கான வாய்ப்பைப் பற்றியும் ஆலோசித்தார் என்று கடந்த மே மாதத்தில் இந்தியா டுடே செய்தி வெளியிட்டது. எத்தனை தரவுகள் இருந்தாலென்ன, கருணாநிதியைப் போல பவாரை மிரட்டிப் பணியவைக்க இயலாது என்பது காங்கிரசுக்குத் தெரியாததல்ல. டில்லி ஆட்சியாளர்களின் வளர்ப்பு நாய்தான் சி.பி.ஐ. என்பதும் பவாருக்குத் தெரியாததல்ல.

குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ராசா, தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ளும் முயற்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள் ஆகியோர் மீது தவிர்க்கவியலாமல் குற்றம் சுமத்துகிறார். அவரது வாதங்கள் இந்த கிரிமினல் வழக்கு தொடர்பான வாதங்களாக மட்டும் இல்லாமல், இந்தக் கிரிமினல் அரசமைப்பு முழுவதையும் குறித்த ஒரு சித்திரத்தை நமக்கு வழங்குகின்றன. “டாடாவை ஏன் கைது செய்யவில்லை?சு என்று அவர் எழுப்பியிருக்கும் கேள்வி ஊடகங்களின் தலைப்பு செய்திக்குரிய தகுதியுள்ள கேள்வி என்ற போதிலும், அது பின்னுக்குத் தள்ளப்படுகிறது. கட்சிகளையும், அதிகார வர்க்கத்தையும், தனியார்மயக் கொள்கைகளையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் ராசாவின் வாதங்கள் ஒரு எல்லைக்கு மேல் அம்பலப்படுத்துமாயின், அவை ஊடகங்களால் ஒதுக்கி ஓரங்கட்டப்படும்; அல்லது இருட்டடிப்பு செய்யப்படும்.

தனியார்மயம்தாராளமயம் என்ற பெயரில் சுரங்கங்கள், காடுகள், நிலங்கள், நகர்ப்புற மனைகள், துறைமுகங்கள் ஆகிய எல்லாத் துறைகளிலும் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் நடந்து கொண்டிருக்கிறது கார்ப்பரேட் பகற்கொள்ளை. தொலைபேசித் துறையில் நடைபெற்ற ஒரு கொள்ளை மட்டும், சீப்பில் சிக்கிய முடியைப்போல சிக்கிக் கொண்டிருக்கிறது. ஊழல், ஊழல் என்று அரசியல் பரபரப்புக்கு மட்டும் அதைப் பற்றிப் பேசிவிட்டு, அதன் பின்புலத்தை சாத்தியமான அளவுக்கு மூடிமறைக்கவே முயற்சிக்கின்றன ஆளும் வர்க்கங்கள். அந்த முயற்சியை முறியடிப்பதே நமது பணியாக இருக்கவேண்டும்.

______________________________________________________________________

– புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2011

________________________________________________________________________________

படிக்க

    • நண்பரே, கருணாநிதிக்கு நீதிமன்ற வளாகத்திலேயே கருப்புக் கொடி காட்டியவர்கள் ம.க.இ.கவினர். அவர்களை இவ்வாறு நீங்கள் பார்ப்பது சரியானதாக இருக்காது என்று கருதுகிறேன்.

      கருணாநிதி ஒரு அயோக்கிய நாய் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதை தான் அனைத்து ஊடகங்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே … அது தவிர மக்களும் அதனை நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். நீங்களே மனசாட்சியைத் தொட்டு கூறுங்கள். எவனுக்கு ஓட்டு போட்டாலும் வந்து கொள்ளையடிக்கப் போகிறான் என்ற முன் அறிவோடு தான் நீங்கள் ஓட்டுப் போடுகிறீர்கள்.

      கெட்டவனை கெட்டவன் என்று நாம் அடையாளம் காட்டத் தேவையில்லை. ஆனால் நண்பனாக நல்லவனாக நம்மிடையே இருக்கும் எதிரியை (துரோகியை) இங்கு யாரும் அடையாளம் காட்டுவதில்லை. குறிப்பாக இந்தியாவின் ஜனநாயகத் தூணான பத்திரிக்கைத் துறை எதையும் சுட்டிக் காட்டுவதில்லை. இது போன்ற தருணங்களில் ம.க.இ.க அதனை சுட்டிக் காட்டுகிறது. இது உங்களுக்கு எந்த விதத்தில் தவறாக தெரிகிறது ?.

  1. Then why M.K didn’t filed a case to arrest Tatas & Ambanis when his own daughter is in jail? ( since she is a Director in the Company,she is convicted ). Logically M.K should have atleast started a fast stir against this discrimination. But he is keeping mum and not even opening his mouth against both of them. Really confusing. May be one should be too much brilliant to understand this arithmetics.

  2. இதில் தி.மு.க.வை மட்டும் தனிமைப்படுத்திக் காவு கொடுப்பதில் இவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பதனாலும் இந்த நாடகம் இதுவரை இடையூறின்றித் தொடர்ந்துள்ளது.>>>>>>>>>>>>>>>>
    >>>>>>>> ஆமாய்யா கலைஞர் வாயிலவிரல வச்சிகிட்டு வினவ படிச்சிக்கிட்டிருப்பாரு?

  3. முழுக்க முழுக்க திமுக வக்காலத்து தவிர வேறொன்னுமில்லை… ராசா என் விண்ணப்பக் கடைசி தேதியை அவரிஸ்டத்திற்கு மாற்ற வேண்டும்? கனிமொழி என் ராசாவுக்காக ராடியாவிட்ம் பேச வேண்டும்..?2008 ஆண்டே கனிமொழியின் சுவிஸ் வங்கிக் கணக்கைப் பற்றி ரிப்போர்டர் ஒரு செய்தி வெளியிட்டதே… அதை நீர் ஏன் மறைக்க வேண்டும்? கலைஞ்ர் டிவி 100 கோடி என்பது tips of the iceberg தான் எனபது உமக்கும் தெரியும்….தெரிந்தும் திமுக வெள்ளையடிப்பு காரணம் என்ன? அவ்வளவு ஏன்… கலைஞருக்குத் தெரியாத விசயமா உமக்குத் தெரியப் போகிறது… அவர் ஏன்ஒரு ஒருகிணைந்த வழக்கு தொடுக்கவில்லை…? என்ன பயம்… ? உமக்குத் தெரியாது,,, கலைஞருக்குத் தெரியும்…

  4. கொள்ளைக் காரங்களுக்குக் கூட்டுத் தொண்டாற்றும் வினவு பதிவுகளை நெனைச்சாத்தான் பரிதாபமா இருக்கு!

  5. வினவின் பல்வேறு முகங்களும் வெளிப்படும் மற்றுமொரு கட்டுரை..

    மலைமுழுங்கி ராசாவையும், திமுகவையும் ஏதோ ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போலும், ஊழலே செய்யாத உத்தமபுத்திரர்கள் போலும்,அவர்கள் டாடாவும், ரிலையன்சும் விரித்த சதி வலையில் சிக்கிவிட்டதாகவும் சித்தரிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்.

    கடந்த திமுக ஆட்சிகளில் அவர்கள் ஆடிய ஆட்டம் மறந்துபோய் விட்டதா? அல்லது இன்று அரசாலும் ஜெயலலிதாவை எதிர்ப்பதர்க்காக இந்த முயற்சியா?

    2008 முதல் அனைத்து ஊடகங்களாலும் எழுப்பப்பட்ட கேள்விகளுகெல்லாம் மழுப்பி மழுப்பி பதில் சொல்லி, முடியாத பட்சத்தில் அவர் ஒரு தலித் என்று வழக்கம் போல சாதியை கேடயமாக வைத்து நீலிக்கண்ணீர் வடித்து தப்பிக்க முயன்ற கருணாநிதி , இன்று வாய் மூடி மௌனியாக இருக்கும் பொருள் என்ன?

    இன்று நீங்கள் குற்றம் சொல்லும் அதே ஊடகங்கள் தான், அன்று (1991-1996) ஜெயலலிதா செய்த ஊழல்களையும் அம்பலப்படுத்தின என்பதனை மறந்து விட வேண்டாம்.

    அது சரி, ஒருவேளை நீங்கள் விரும்பும் உண்மையான கம்முனிச ஆட்சி மலர்ந்து விட்டால் இத்தகைய ஊழல்களை ஒழிக்க கைவசம் என்னென்ன திட்டங்கள் வைத்திருகிறீர்கள்?


    மாக்ஸிமம்

  6. Indha katturaila pala highlight comedy irukku

    ““1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற கணக்குத் தணிக்கையாளரின் மதிப்பீடு அபத்தமானது, அடிப்படையற்றது. சி.பி.ஐ.யின் கணக்கின்படியே இழப்பு என்பது 30,984.55 கோடி தான்சு என்கிறார் ராசா. உண்மைதான்:

    Appo 30,944.55 Kodi enbathu romba kammithaanga makkale…

    சுப்பிரமணிய சாமிசோஜெயலலிதா உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், பாரதிய ஜனதா, காங்கிரசு கட்சிகள் என ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் நோக்கத்தில் ஆதாயம் பெற்றனர்

    Aaamnga Ivanga mattum thaan idhula endha segappu sattayum illa illiya??

    முதலில் வருபவர்க்கு முதலில் என்பதுதான் அலைக்கற்றை உரிமங்கள் வழங்குவதற்குப் பின்பற்றப்பட்ட கொள்கை என்றும், அந்தக் கொள்கையை மாற்றி டெண்டர் விட வேண்டும் என்று அரசு முடிவு செய்யாதபோது, டெண்டர் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும் என்று ஊகித்து, அதன் அடிப்படையில் இத்தனை கோடி ரூபாய் இழந்து விட்டோம் என்று பேசுவது அபத்தம் என்றும் கபில் சிபல் ஏற்கெனவே கூறியிருக்கிறார். இதை மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திலேயே கூறியிருக்கும் போது, என் மீது எதற்காகக் குற்றம் சாட்டுகிறார்கள் என்பதே ராசாவின் கேள்வி.

    4 varusham ministera irundhu kolla adichittu idhukku kooda badhil sollalaina eppadi sir??

    டெண்டர் விடாமல் முதலில் வந்தவர்க்கு முதலில் என்ற அடிப்படையில் அலைக்கற்றை உரிமங்களை வழங்கியது குற்றம் என்றால், மாறனும் அருண் ஷோரியும் என்னுடன் சிறையில் இருக்க வேண்டும்சு என்பது ராசாவின் அடுத்த வாதம்

    Avara neenga!!!!

    மன்மோகன் அமெரிக்காவின் பங்களா நாய் என்பதனாலும், ஊடகங்கள், ஓட்டுக்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் மன்மோகன் சிங்கின் இந்தப் புனித வேடத்தை சேதமின்றிப் பாதுகாக்கின்றனர்

    Africa kaattu Lions katturaya potrunkkanga ?? Singam SIngam Singam Singam He Is Durai Singam…

    இந்த ஊழல் விவகாரத்தில் ராசா கைது செய்யப்படுவதற்கு முதல்நாள், ராசாவிற்கும் மன்மோகனுக்கும் இடையிலான கடிதப் பரிவர்த்தனை இந்து நாளேட்டில் ஒரு முழுப்பக்க அளவிற்கு வெளியானது…

    Adhu pathiya vivaram thelivaga theriya Tehelkava paarunga.. appo puriyum..

    மொத்த இழப்பான ரூ.30,984 கோடியில் அலைக்கற்றையை மலிவு விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற குற்றநடவடிக்கையில் ஏற்பட்ட மொத்த இழப்பு மட்டும் ரூ.22,000 கோடி என்பது சி.பி.ஐ. இன் குற்றச்சாட்டு. டாடா டெலி சர்வீசஸ் நிறுவனம் தனது 27% பங்குகளை விற்று ரூ.13,973 கோடி ஈட்டியிருக்கிறது. 67% பங்குகளை விற்று ரூ.6120 கோடி ஈட்டிய யூனிடெக் நிறுவனத்தின் முதலாளி சஞ்சய் சந்திரா சிறையில் இருக்கிறார். ஆனால், ரூ.13,973 கோடியைச் சுருட்டிய டாடா மீது கை வைக்க சி.பி.ஐ. க்குத் துணிவிருக்கிறதா என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ராசா.
    Idha venna paaratalam aana idha kooda andha aalu sollirupparongaradhu doubt thaan.. andha aalu than mela irukka pazhiya pokaradhukku vijayakanth ramana padathula pulliviviram solra kanakka sollrarru paarpom!!!

    ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்தை தனக்குப் பினாமியாக அனில் அம்பானி பயன்படுத்தியதைப் போலவே, லூப் டெலிகாம் என்ற நிறுவனத்தை எஸ்ஸார் பினாமியாகப் பயன்படுத்தியிருக்கிறது. இந்த விவரங்களை மறைப்பதற்கு அமைச்சர் முரளி தியோரா உதவியிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.

    AAam ivanga itta thaan phone pottu sonnaru!!!

    இது மட்டுமல்ல; கலைஞர் தொலைக்காட்சியின் 25% பங்குதாரர், அதன் நிர்வாகத்தில் பங்காற்றியவர் என்ற காரணத்தினால் இந்த சதி வழக்கில் கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது.

    Pathini Deivatha enpa izhukkareenga!!!

    Highlight comedye pinnadi thaan varudhu paarunga

    கருணாநிதியைப் போல பவாரை மிரட்டிப் பணியவைக்க இயலாது என்பது காங்கிரசுக்குத் தெரியாததல்ல. டில்லி ஆட்சியாளர்களின் வளர்ப்பு நாய்தான் சி.பி.ஐ. என்பதும் பவாருக்குத் தெரியாததல்ல.

    Dei yaaru yaarada merattina?? Andha perusu thaan 5 varushama congressa meratti ABCD theriyavadhanalam Cabinet ministera poda vechaaru adhoda palana ippo anubhavikkiraaru… avarukku idhuvum venum innamum vennum!!!

    Ippo latest news Paathengala Karunanidhikku 35000 kodi swiss bankla irukkam (courtesy Reporter)udanae indha jaalra kootam en matha yaarukkum illayanu oru periya katturaya podum, idhu paarpana medianu oru angalaipu varum.. enna bet???

    • /// Appo 30,944.55 Kodi enbathu romba kammithaanga makkale… ///

      மீதி 1,45,000 கோடி ஆட்டையப் போட்ட அம்பானிய முதல்ல பேசிட்டு அப்புறம் ராஜாவைப் பத்தி பேசலாம். எப்படி வசதி ?.

      ///Aaamnga Ivanga mattum thaan idhula endha segappu sattayum illa illiya??///

      சி.பி.எம்., சி.பி.ஐ., இவனுங்களையும் சுப்பிரமணிய சாமி லிஸ்ட்ல சேத்துக்கோங்க .. சிவப்பு சட்டை போட்டவனெல்லாம் கம்யூனிஸ்ட் அல்ல.

      ///4 varusham ministera irundhu kolla adichittu idhukku kooda badhil sollalaina eppadi sir??///

      இங்க கேள்வி அது இல்லை சார். மாட்சிமை தாங்கிய நீதிமன்றம் என்ன மசுத்துக்கு இன்னும் மன்மோகன் சிங்கையும், சிதம்பரத்தையும் ஏன் சேர்க்கவில்லை?..

      பதில் சொல்லுங்க அண்ணாச்சி..

      ////Avara neenga!!!!///

      இப்போ என்ன சொல்ல வர்றீங்க சாமி?..

      /////Africa kaattu Lions katturaya potrunkkanga ?? Singam SIngam Singam Singam He Is Durai Singam…////

      நீங்க என்ன களட்டுனிங்க ?..

      //Adhu pathiya vivaram thelivaga theriya Tehelkava paarunga.. appo puriyum..//

      எங்களுக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லை. எஈங்க வாய் வழியா சொன்னீங்கன்னா நாங்க காது வழியா கேட்டு தெரிஞ்சிக்குவோம். கொஞ்சம் சொல்லுங்க.. பிளீஸ்.

      ///Idha venna paaratalam aana idha kooda andha aalu sollirupparongaradhu doubt thaan.. andha aalu than mela irukka pazhiya pokaradhukku vijayakanth ramana padathula pulliviviram solra kanakka sollrarru paarpom!!! ///

      நகர முடியாத கேள்வி கேட்டா இப்படி சந்தேகம்னு பேசிட்டு போறதுக்கு வெக்கமா இல்லையா தம்பி …

      ////AAam ivanga itta thaan phone pottu sonnaru!!! ///

      அது கிடையாதுன்னு உங்க கிட்ட யாரு போன் பண்ணி சொன்னது ?..

      ///Pathini Deivatha enpa izhukkareenga!!!///

      அவ பத்தினியா இல்லையானு அவ புருசன் கவலப் படட்டும். நீ எதுக்கு தம்பி கவலப்படுற?.

      ///Highlight comedye pinnadi thaan varudhu paarunga////
      ஹி ஹி ஹி ஹி .. சிரிப்பு வருதுங்க …

      ////Dei yaaru yaarada merattina?? Andha perusu thaan 5 varushama congressa meratti ABCD theriyavadhanalam Cabinet ministera poda vechaaru adhoda palana ippo anubhavikkiraaru… avarukku idhuvum venum innamum vennum!!!///

      சாமிக்கு என்னமா கோவம் வருது பாரு ?.. ஹ்ம்ம் .. சரி சாமி., இன்னைக்கு என்னத்துக்கு காங்கிரஸ் கருணானிதிக்கு பயப்படனும். அன்னிக்கு கருனானிதி தயவு அவனுங்களுக்கு தேவை. பம்முனானுங்க … இன்னைக்கு தனிப் பெரும்பாண்மை . தேவை யில்லை.

      ///Ippo latest news Paathengala Karunanidhikku 35000 kodi swiss bankla irukkam (courtesy Reporter)udanae indha jaalra kootam en matha yaarukkum illayanu oru periya katturaya podum, idhu paarpana medianu oru angalaipu varum.. enna bet???///

      உங்க தலைய வைக்கலாமா பெட் ?.. ரிப்போர்ட்டரு , ஜூ.வி., நக்கீரன் இப்படித் தான் பொறுக்கித் திண்ணு நக்கி பொழச்சிக்கிட்டு இருக்கானுங்க .. எனக்குத் தெரிஞ்சு அப்படி 35000 கோடி இருந்தா அதை எதிர்த்து வினவு கட்டுரை எழுதுனா … ”ஆமா, கலைஞர் இவருக்கு போன் போட்டு சொன்னாராம்”னு பின்னூட்டம் போடுவீங்க …

      வாழ்த்துக்கள் …

      • மீதி 1,45,000 கோடி ஆட்டையப் போட்ட அம்பானிய முதல்ல பேசிட்டு அப்புறம் ராஜாவைப் பத்தி பேசலாம். எப்படி வசதி ?.

        Enga raja unga aalungarathanalayee?? comedy pieceunga neenga oru stance edukka mudiyalla ungalalla

        சி.பி.எம்., சி.பி.ஐ., இவனுங்களையும் சுப்பிரமணிய சாமி லிஸ்ட்ல சேத்துக்கோங்க .. சிவப்பு சட்டை போட்டவனெல்லாம் கம்யூனிஸ்ட் அல்ல.

        APpuram enna solla vareenga.. ulagathuliye communismna neenga nadathuradhuthaannna.. enpa pakkathu state karanukku theriyuma ivangalapathui… pakkathu statea vidu.. enpa inga ellarukkum theriyuma ivanunga pathi…

        இங்க கேள்வி அது இல்லை சார். மாட்சிமை தாங்கிய நீதிமன்றம் என்ன மசுத்துக்கு இன்னும் மன்மோகன் சிங்கையும், சிதம்பரத்தையும் ஏன் சேர்க்கவில்லை?..

        பதில் சொல்லுங்க அண்ணாச்சி..

        … Neenga en thiruuttu rajakku support panreenganu solllunga appuram aduthavana kelvi kekkalam annachi!!!!

        இப்போ என்ன சொல்ல வர்றீங்க சாமி?..

        Poi vadivelu comedya paaru kanna!!!

        நீங்க என்ன களட்டுனிங்க ?..

        unga trousera kalattinale podhume.. adha kooda naanga panna vennam neengalae appo appo kalatti unga komanatha kaatureengale… indha velayum engalukku micham…
        .
        நகர முடியாத கேள்வி கேட்டா இப்படி சந்தேகம்னு பேசிட்டு போறதுக்கு வெக்கமா இல்லையா தம்பி …

        thambi, unga vinavu kita modhalla adhellam irukkanu keluppa!!! avanga romba kolambi irukkanga po mudinja avangalukku help pannu

        அவ பத்தினியா இல்லையானு அவ புருசன் கவலப் படட்டும். நீ எதுக்கு தம்பி கவலப்படுற?.
        Ammanda, beachla kannagi sela pakkathula oru edam ready panniruveenga pola!!! Enda neenga kushbu, Suhasiniya pathi ezhuduveenga kanimozhiya pathi ezhuduna unnala poruthukka mudiyala … komanam heriyudhu thambi paathukka!!!

        ஹி ஹி ஹி ஹி .. சிரிப்பு வருதுங்க

        romba sandhosam.. neenga sandhosama irundha naanum sandhosapadren

        சாமிக்கு என்னமா கோவம் வருது பாரு ?.. ஹ்ம்ம் .. சரி சாமி., இன்னைக்கு என்னத்துக்கு காங்கிரஸ் கருணானிதிக்கு பயப்படனும். அன்னிக்கு கருனானிதி தயவு அவனுங்களுக்கு தேவை. பம்முனானுங்க … இன்னைக்கு தனிப் பெரும்பாண்மை . தேவை யில்லை.

        yaaru yaara merattananu oorukke theriyum.. ayya poi modhalla komanatha irukki kattunga illa karunanidhi madhiri adhuvum kizhinjuu poida povuddhu… thani perumbaanmaya????

        உங்க தலைய வைக்கலாமா பெட் ?.. ரிப்போர்ட்டரு , ஜூ.வி., நக்கீரன் இப்படித் தான் பொறுக்கித் திண்ணு நக்கி பொழச்சிக்கிட்டு இருக்கானுங்க .. எனக்குத் தெரிஞ்சு அப்படி 35000 கோடி இருந்தா அதை எதிர்த்து வினவு கட்டுரை எழுதுனா … ”ஆமா, கலைஞர் இவருக்கு போன் போட்டு சொன்னாராம்”னு பின்னூட்டம் போடுவீங்க …

        En thalaya enpa naan vekkanum?? nee thaan thambi karunanidhikku edhavadhunaa theekulikara thondan madhiri pesura.. Ammam naan check pannen ulaguthula ellarum virumbi padikkara ore pathirikka Vinavu thaan!!1

        Double Vaazhthukka1!!!

  7. விரைவில் கம்யுனிச ஆட்சி அமைக்க வினவு கோஷ்டிக்கி வாழ்த்து !!!

  8. ஆரம்பத்திலிருந்தே ராஜா ஏதோ பச்சக்கொழந்த மாதிரிப் பேசுரதே வினவின் பொழப்பு..

    என்ன காரணம், ராஜா தலித் என்பதாலா??

    • DMK கு வக்காலது வாங்குவதே வினவுக்கு வேலையா போய்யிடுச்சுபா!!!!பொழப்பத்த எவனோ எதையோ என்னமோ பன்னுனதா சொல்லி ஒரு பழமொழி இருக்கு தெரியுமா அந்தமாறி…………..

  9. ஆட்டு மந்தை பதில்கள்… குரங்குகள் தூக்கி எரியும் தொப்பிகள்…
    இந்த ஊழலில் லாபம் அடைந்த முதலாளிகள் டாடா, அம்பானி கைது ஏன் இல்லை!!!
    நீதி செலுத்தப்படும் நாட்டில் அதெல்லாம் நடக்கும்… மனுநீதி உள்ள நாட்டில் இந்த ‘ம…ரு’ தான் நடக்கும்.

  10. இதில் தி.மு.க.வை மட்டும் தனிமைப்படுத்திக் காவு கொடுப்பதில் இவர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்பதனாலும் இந்த நாடகம் இதுவரை இடையூறின்றித் தொடர்ந்துள்ளது

    Good article especially for ADMK’s sombu thookis

  11. அரசுக்கு வரவேண்டிய தொகை மக்களுக்கு லாபமாக மாறியதையோ அவருக்கு முன்னர் இருந்தவர் அதையேதான் செய்தார் என்பதோ அவர் கோர்ட்டில் வைத்த வாதங்கள் மிகவும் நியாயமானவை என்பதோ இன்று வரை அந்த ஒதுக்கீட்டில் இருந்து பெரும் லாபம் வருகிறது என்பதோ அந்த துறையில் ஏற்பட்டுள்ள மலையளவு முன்னேற்றமோ என் மனதில் உரைக்கவில்லை, ஒரு பவர்புல்லான துறையின் மந்திரி தலித்தா?என்பது மட்டுமே அவர் மீது வெறுப்பு வரவழைக்கிறது.

    • அது எப்படி கேப்சிகம் பிரச்ச்னை வரும் போது மட்டும் தலித் என்று சொல்லித்தப்பிக்கத் தோன்றுகிறது…ராஜா கைது செய்யப்பட்டவுடன் கருணா சொல்லிய முதல் வார்த்தை, ராஜ தலித் என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்பது தான்….சி பி இக்கு ராஜா, தேவரா,நாடாரா, கவுண்டரா என்பது பிரச்ச்னை அல்ல…ராஜா தவறு செய்துள்ளான்..அவன் தண்டிக்கப்படவேண்டும்….ஊழலின் ஊற்றுகளான மக்கு சிங், காரக்குடி செட்டியாரு என அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்…

      • அப்போ டாட்டா அம்பானியை எந்தக் கணக்கில் சேக்கலாம் பையா ?..

        ராஜா தண்டிக்கப் படக் கூடாது என்று இந்தக் கட்டுரையில் எந்தப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது?. எடுத்துக் காட்டவும்.

        தம்பி .. உங்களைப் பாத்தா பாவமா இருக்கு .. கொஞ்சம் தெளிவாப் பேசுங்க …

        • உங்க பேரப் பாத்தா காமிடியா இறுக்கு அண்ணா…

          அண்ணா நீஙக காமிடி பீஸா..

  12. “ராஜா தண்டிக்கப் படக் கூடாது”

    கட்டுரையின் சாராம்சமே அது தானே !!!! இதுக்கு என்று ஒரு பையா எனும் பொய்யா என்ற அவதாரம் வேறு திருட்டு கும்பலுக்கு ஜால்ரா அடிக்க !!!

  13. ராசா மற்றும் கனிமொழியை நிரபராதி என்று இங்கு யாரும் கூறவில்லை , இதனுடன் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்பதே வினவு.

  14. இங்கே பையா Taken ஆகியோர், யாருடைய கேள்விக்கும் நின்று பதில் சொல்லாமல் போகிற போக்கில் ”எவ்வாறு ஒரு மனநோயாளி போவோர் வருவோரை சம்மந்தமில்லாமல் திட்டுவாரோ அதைப் போன்று” சாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

    நின்று விவாதிக்கத் தயாரா ?.. இது ஒரு சவால் கேள்வி ..

    இந்த பின்னூட்டத்தைப் பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு வெளிப்படையான விவாதத்தில் ஈடுபட்டு உங்கள் கருத்துக்களை நிலைநாட்டுங்களேன்.

    இது பையா டேக்கன் ஆகியோருக்கு மட்டும் விடுக்கப்படும் அழைப்பு அல்ல. யாரேனும் ஏற்று வரலாம்.

    இங்கு பதில் சொல்லாமல் ’பையா’ தப்பிக்க நினைக்காதீர்கள். அது உங்கள் தோல்வியை, அரசியல் மொட்டைத்தனத்தை இந்த இணைய தளத்தில் பதிவிட்டுவிடும் என்பதை மறக்க வேண்டாம்.

    – பகத் சிங்

    • இந்த அட்டைப்படத்திற்கு பொருத்தமா ஒரு பட்டம் பையாவுக்கு கொடுக்கலாமா?

      வெளிப்படையான விவாதத்தில் பங்கு பெறாமல் வெட்டிதனமாகவே பேசும் பையா, இன்றுமுதல் நீ ‘அரசியல் மொட்டை’ என்று அன்போடு அழைக்கப்படுவாய்.

  15. இங்கு paiya மற்றும் மாக்சிமம் போன்றோர் வினவு தோழர்களை தி மு க ஆதரவாளர்கள் என்ற கண்ணோட்டத்திலேயே கட்டுரையை அணுகி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தயவு செய்து அந்த எண்ணங்களை தூக்கி ஓரமாக வைத்து விட்டு கட்டுரையை மீண்டும் ஒரு முறை ஆழமாக படிக்கவும். அப்பொழுதாவது கட்டுரையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிகிறதா என்பதை பார்க்கலாம். ராசா கனிமொழி போன்றோரை அப்பாவிகளாய் எந்த இடத்திலும் வினவு தோழர்கள் குறிப்பிடவில்லையே. மண் மோகன் சிங்கை அப்பாவி என்று சு சா கூறியது போல.

Leave a Reply to Taken பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க