Friday, June 2, 2023
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய ஜனநாயகம் ஆகஸ்டு 2011

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1. “சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து! பாடநூல்களை உடனே வழங்கு!” – கல்வி தனியார்மயத்துக்கு எதிராகத் தமிழகமெங்கும் பரவும் போராட்டம்

2. பா.ஜ.க.-வின் ஊழல் எதிர்ப்பு: ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!

3. இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி!

4. தோழர் கணபதியின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

5. “வணிகமயமாகும் கல்விக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!! -பு.மா.இ.மு, ம.க.இ.க கருத்தரங்கம்

6. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

7. 2-ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணை: குற்றவாளி ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்

8. இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!

9. நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம்: நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி!

10. “டாஸ்மாக் கடைக்கு இடமுண்டு; ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கபு இடம் கிடையாது!” – தமிழக அரசின் மோசடியை அம்பலப்படுத்தி வி.வி.மு.-வின் ஆர்ப்பாட்டம்

11. சல்வாஜூடும் கலைப்பு: உச்சநீதிமன்றத்தின் கோணல் பார்வை!

12. குஜராத்: கார்ப்பரேட்மயமாகும் விவசாயம்! ஓட்டாண்டிகளாகும் விவசாயிகள்!!

13. பாலியல் அவதூறு – வக்கிரத்துக்கு எதிராக பெண்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டம்

14. வர்க்க ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி! – மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம்

15. மத்திய கினியா: சர்வாதிகார எதிர்ப்பில் அமெரிக்காவின் இரட்டை வேடம்

16. பாலியல் வக்கிரத்துக்கு எதிராகப் போராடிய வீரப்பெண்மணி தேவியை விடுதலை செய்! – பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்

17. வீரவணக்கம், தோழர் மாசானம்!

18.போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

  • நண்பர்களே, எழுத்துரு இணைக்கப்பட்ட புதிய மின்னிதழ் கோப்பை ஏற்றியிருக்கிறோம், அதை தரவிறக்கம் செய்து கொள்ளவும். தவறான கோப்பை ஏற்றியதால் ஏற்பட்ட சிரமங்களுக்காக வருந்துகிறோம்.

 1. வணக்கம் தோழர்,

  புஜ மின்னூல் பதிப்பு படிக்க முடியாதபடி வித்தியாசமான எழுத்துருக்களோடு இருக்கிறது. எழுத்துரு மாற்றி மூலமும் சரி செய்ய முடியவில்லை. சரி செய்து மீண்டும் பதிவிடவும்.

  செங்கொடி

 2. ஹலோ படிக்க முடியால என்ன கொடும

  முட்ட முட்ட கொடு மாதிரி
  ஜிலாபியே பிச்சு போட்ட மாதிரி இருக்கு.
  சரிபன்னுங்கப்ப

 3. “வகுப்புக் கலவர தடுப்பு மசோதா’ என்ற செய்தி, பத்திரிகைகளில் வெளிவருவதற்கு முன், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, தமிழக முதல்வர் எச்சரித்தது, வாசகர்களுக்கு நினைவிருக்கும். வகுப்புக் கலவர தடுப்பு மசோதா, சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் வடிவமைத்தது. இந்தியாவில் எங்கு மதக் கலவரம் நடந்தாலும், அதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதற்கு, அப்பகுதியில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ய, இம்மசோதாவின் ஒரு பிரிவு அனுமதிக்கிறது. இதனால், இம்மசோதாவில் உள்ள பாதுகாப்பை பயன்படுத்திக் கொண்டு, சிறுபான்மையினர் கலவரத்தை தூண்டி விட்டாலும், அவர்கள் பாதுகாக்கப்படுவதுடன், பெரும்பான்மை இந்துக்கள் தான் பாதிக்கப்படுவர். அதாவது, விசாரணைக்கு முன்பே, தீர்ப்பு வாசிக்கப்படுவதைப் போல! மேலும், இம்மசோதா, சட்டமாக்கப்பட்டால், காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், சட்டம் – ஒழுங்கு கெட்டு விட்டது என்று, அம்மாநில அரசை கலைத்துவிட்டு, கவர்னர் ஆட்சியை பிரகடனப்படுத்த முடியும். எந்தவொரு கலவரத்தையும் அடக்குவதற்குத் தேவையான காவல்துறையை, அந்தந்த மாநில அரசே தன் வசம் வைத்துள்ளது. மேலும், இது, அம்மாநிலத்தின் உள்விவகாரம். தேவைப்பட்டால், மத்திய அரசிடம் கேட்டு, துணை ராணுவத்தின் உதவியைப் பெற முடியும். எனவே, இம்மசோதாவே தேவையற்றது. இந்த தேசிய ஆலோசனை கவுன்சில் என்பதே, அரசியல் சட்டத்துக்கு முரணானது. அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. மத்திய அரசின் அமைச்சரவை அங்கீகரித்த எந்த ஒரு சட்டமும் அல்லது முடிவும், இந்த தேசிய ஆலோசனை கவுன்சிலில் வைத்து, அதன் அங்கீகாரத்தை பெற்ற பின் தான், அதை நடைமுறைப்படுத்த முடியும். இந்தியாவில், இந்த தேசிய ஆலோசனை கவுன்சில் என்பது, வல்லரசு நாடுகளின், “வீட்டோ பவர்’ அதிகாரத்துக்கு சமமானது என்றால், அரசியலை ஒரு பாடமாக விரும்பிப் படித்த பட்டதாரிகளுக்கு எளிதில் புரியும். இது, சட்ட முன்வடிவு பெறுவதற்கு முன், பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவிக்க, தன் கட்சி பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு, தமிழக முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். “வரும் பொருள் உரைத்தல் மந்திரிக்கழகு’ என்ற பழமொழியின்படி, தமிழக முதல்வர் ஜெ.,யின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டத்தக்கது.

 4. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது வேதனையளிக்கிறது. ராமேஸ்வரம், நாகை மீனவர்கள், கடந்த 28ம் தேதி கூட, இலங்கை கடற்படையினரின் மூர்க்கமானத் தாக்குதலுக்கு உள்ளாகி, படகிலிருந்து கடலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் இந்த அராஜகங்கள் தொடர்வது, வழக்கமாகி விட்டது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களின் படகுகள், வலைகள், இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுகின்றன. பிடித்த மீன்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
  ராமேஸ்வரம் மீனவர்கள், தனுஷ்கோடி பகுதியில் மீன் பிடித்துவிட்டு, ராமேஸ்வரம் திரும்புகையில், அதிவிரைவுப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். தொடர்ந்து நடக்கும் இத்தகைய சம்பவங்களால், தமிழக மீனவர்களிடையே, ஒருவித அச்சமும், பீதியும் நிலவுகிறது.
  ஐரோப்பிய நாடுகளின், அந்தந்த நாடுகளால், கடல் எல்லைகளை எளிதில் கண்டுகொள்ளும்படியாக, கடலில் மிகப்பெரிய மிதவைகள் விடப்பட்டிருக்கும். அதுபோல், இந்திய கடல் எல்லைகளும், மிகத் துல்லியமாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் குளறுபடிகளால் தான், மீனவர்கள் எல்லை தாண்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக அரசு முன் வரவேண்டும். வரலாறு சொல்வது என்னவென்றால், பலம் வாய்ந்த நாடுகள், பக்கத்தில் இருக்கும் நாடுகளையோ அல்லது தீவுகளையோ ஆக்கிரமிக்க முயலும் அல்லது அந்நாடுகளின் மீது அதிகாரம் செலுத்த விரும்பும். உதாரணத்திற்கு, சீனா (தைவான்), ஈராக் (குவைத்), இங்கிலாந்து (அயர்லாந்து), அமெரிக்கா (கியூபா). ஆனால், நம் விஷயத்தில் தலைகீழாக உள்ளது. தொடர் தாக்குதல்களால், எத்தனையோ அப்பாவி மீனவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருந்தும், மத்திய அரசு ஏன் மவுனம் சாதிக்கிறது என்று தான் புரியவில்லை. நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும், ராணுவத்திலும், இந்தியா பலம் பொருந்திய நாடாக உள்ளது. இருந்தும், சின்னஞ்சிறு குட்டி நாடான இலங்கையிடம் குட்டுப்படுகிறோம். ஏற்கனவே, காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து, இந்நாள் வரை, அந்நாட்டின் கட்டுப்பாட்டிலேயே அப்பகுதிகள் உள்ளன. அதே போன்று, அருணாச்சலப் பிரதேசத்திற்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இலங்கையின் அடாவடித்தனத்தால், சர்வதேச அளவில் இந்தியா பலவீனமான நாடு என்ற எண்ணம் ஏற்பட வழிவகுக்கும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வு காணவேண்டும். நாகையிலிருந்து, குமரி வரை உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையின் அசட்டு தைரியத்தையும், துணிச்சலையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்.

 5. பதிவிறக்கம் செய்த பிறகு எதுவுமேய் படிக்க இயலவில்லை, தயவு செய்து பிரச்சனையை சரி செய்யவும்

 6. அட்டைப் படம் அருமை….படத்துல ஏதோ ஒன்னு குறைகிற மாதிரி இருந்தது…..

  மீசையின் ரெண்டு பக்கமும் பூ வைத்திருந்தால் இன்னும் தூளாக இருந்திருக்கும்….

 7. எதிலிருந்து காப்பி அடிச்சீங்க? கருத்து உங்கள் லெவெலுக்கு ஏத்த மாதிரி மட்டமா இருந்தாலும் கோர்வையா இருக்கு.. உங்களுக்கு தான் அப்டி எழுத தெரியாதே… சும்மா வசை பாட மட்டும் தான செய்வீங்க Mr பையன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க