Friday, February 3, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்...பார்ப்பன பாசிஸ்டுகளை வேரறுப்போம்!

சோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்…பார்ப்பன பாசிஸ்டுகளை வேரறுப்போம்!

-

மூவர் தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போர்க்குணமிக்க போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் சாலை மறியல், ரயில் மறியல், மத்திய அரசு அலுவலக முற்றுகை என்று தங்கள் உணர்வுகளை வீரஞ்செறிந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த போராட்டச் செய்திகள் ஆங்கில ஊடகங்கள் மற்றும் தமிழக பார்பன ஊடகங்களில் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

இந்தப் போராட்டங்களெல்லாம் மக்களிடம் அரசியல் ஆதரவற்ற 2% பெயர்ப்பலகை அமைப்புகள் நடத்தி வருவதாக துக்ளக் சோ ஊளையிடுகிறார். மற்றபடி மூவர் தூக்கு பேஷாக நடைபெறும், முழு தமிழகமும் அமைதியாக அதை ஆதரிக்கின்றது என்பது போல அவர் பேசுகிறார். இந்து முன்னணி இராம கோபாலன் மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்று பகிரங்கமாக பேசி வருகிறார்.

சுப்ரமணிய சாமியோ இத்தனை ஆண்டுகளாக கருணை மனு மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக ஆகஸ்டு 15-ஆம் தேதி நீதிமன்றம் செல்ல இருந்ததாகவும், அதைக் கண்டு பயந்து மத்திய அரசு கருணை மனுவை நிராகரித்திருப்பதாக திமிரோடு பேசுகிறார். மேலும் இவாள்களின் முதல்வரான பாசிச ஜெயலலிதா தூக்குத் தண்டனையை ரத்து செய்ய தனக்கு அதிகாரமில்லை என்று கூறியிருப்பது சரிதான் என்று மெச்சுகிறார் இந்த மாமா சாமி. எனவே இனி யாரும் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய முடியாது, செப்டம்பர் 9 அன்று தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என்றும் யாரெல்லாம் இதை எதிர்க்கிறார்களோ அவர்களெல்லாம் தேசத்துரோகிகள் என்று நரித்தனமாக, பார்ப்பன வெறியுடன் ஊளையிடுகிறார்.

மூவர் தூக்கை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் எங்கும் நடக்கும் போராட்டங்கள் குறித்து தினத்தந்தி, தினகரன் முதலான நாளேடுகள் விரிவாக செய்திகள் வெளியிடும் போது பார்ப்பன தினமலரோ அப்படி ஒரு செய்தியைக்கூட வெளியிடவில்லை. மாறாக வேலூரில் எப்படி தூக்கு போடுவார்கள், தூக்கு போடுபவர்கள் யார், அவர்கள் ஆந்திராவிலிருந்து வருகிறார்கள், அவர்களுக்கு ஒரு தூக்கிற்கு நூறு ரூபாய் சம்பளம், வேலூர் சிறையைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு, தமிகத்தில் உள்ள அகதி முகாம்களை உளவுத் துறையினர் கண்காணிக்கிறார்கள் என்று நீரோ மன்னனை போல பார்ப்பன பிடில் வாசித்து மகிழ்கிறது இந்த பார்ப்பன நரி.

காஞ்சிபுரத்தில் தீக்குளித்த செங்கொடியின் தியாகத்தை கொச்சைப்படுத்தியும் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர். அவர் தீக்குளித்த போது யாருமே அங்கில்லையாம், ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் செங்கொடிக்கு எழுதப் படிக்கத் தெரியாதாம், அதனால் அவர் எழுதிய அந்தக் கடிதம் போலியானது என்றும் இதை போலீசாரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் விசத்தை கொண்டாட்டத்துடன் கக்குகிறது பார்ப்பன தினமலர்.

போராட்டச் செய்திகளை அதிகம் வெளியிட்டால் பத்திரிகை அதிகம் விற்கும் என்ற சந்தை இலாபத்தை விட பார்ப்பன மேலாதிக்கத்தை முன்வைத்தே தினமலர் எழுதுகிறது. காலணாவுக்கு தேறாத அண்ணா ஹசாரே போங்காட்டங்களை பக்கத்திற்கு பக்கம் பீத்தும் இந்த் தினமலர் செங்கொடியின் தியாகத்தை எள்ளி நகையாட வேண்டுமென்றால் எத்தனை வன்மம் வேண்டும்?

இதற்கு மேல் தங்கபாலு, இளங்கோவன் போன்ற பீஸ் போன பல்புகளும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்று அவ்வப்போது கத்தி வருகின்றன. அண்ணா ஹசாரேவின் இத்துப் போன் போராட்டங்களையே மாபெரும் சுதந்திரப் போராட்டமாக சித்தரித்து உருவாக்கிய ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் தமிழக மக்களின் போராட்டங்களை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்றன. இது குறித்து இவர்கள் எப்போதாவது செய்தி ஒளிபரப்பினால் அதற்கு தமிழகம் சார்பில் பேசுபவர்களாக சு.சாமியும், சோவுமே விகாரமாகத் தோன்றுகிறார்கள்.

பா.ஜ.க கும்பலும் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்றுதான் எப்போதும் வலியுறுத்தி வருகிறார்கள். அதில் மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.

ஆக ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பார்ப்பனக் கூட்டம் தனது முகத்தை ஒளித்து வைக்காமல் பச்சையாகவே இந்தப் பிரச்சினையில் காட்டிக் கொள்கிறது. தனக்கு அதிகாரமில்லை என்று ஜெயா கூறிவிட, அதற்குப் பின்பாட்டு பாடும் இந்தப் பார்ப்பனக் கூட்டம் கூடவே இனி யாரும் மரண தண்டனையை தடுத்து நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கிறது.

தற்போது மூவர் தூக்கு உயர்நீதிமன்றத்தால் எட்டு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கூட இந்தக்கூட்டத்திற்கு தாங்க முடியாததாக இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு இடைக்காலத்தடை கொடுத்திருப்பது தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சோ கூறுகிறார். கூடவே ஜெயா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் கூட தீர்ப்பை மாற்றும் அதிகாரத்தை கொண்டிருக்கவில்லை என்று மகிழ்கிறார். எப்படியும் தூக்கு நிறைவேற்றப்படும் என்பதுதான் இவர் மட்டுமல்ல, காங்கிரசு, பா.ஜ.க, சு.சாமி, தினமலர் கூட்டத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகார, அரசு, ஊடக, முதலாளிகளது பலத்தில் காலத்தை ஓட்டும் இந்த பார்ப்பன பாசிஸ்டுக் கூட்டம் அந்த தைரியத்தில்தான் இப்படி பேச முடிகிறது. ஆனாலும் போராடும் தமிழக மக்கள் இந்தக் கூட்டத்தின் எண்ணத்திற்குக்கு வேட்டு வைக்கும் வண்ணம் தமது கோரிக்கையில் வெற்றி பெறுவார்கள். கூடவே இந்த பார்ப்பன பாசிஸ்டுகளுக்கும் ஆப்பு வைப்பார்கள்.

 1. ராஜீவ் கொலையில் இந்த மூன்று பேருக்கு இருக்கும் தொடர்பை விட, சு.சாமி மற்றும் சோ போன்றோருக்கு தொடர்ப்பு அதிகம். எனவே இந்த மூன்று பேரையும் அனுப்பிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்.

  • /*அதில் மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.*/
   கொஞ்சம் விரிவாக வினவு இந்த பதிவையும்… இமாம் அப்சல் அவர்களை பற்றியும்… எழுதுமானால்… நன்று…
   என் எனில் தலை மாநினலத்தில் (காஷ்மீரில்) …. முதல்வர்… கொகரிகிறார்… வினவு… விடை…சொல்லுமா…

   • Shameless VINAVU and other communist style::

    1. A revolution with peace and non violence is fake –BUT– A revoultion with violence, firing, bomb blast, blood is true – Even the root cause is same

    2. Hang to death is a crime – if that criminal is a terrorist –BUT– Kill anyone who ever they don’t like even with out trial… How many times VINAVU said we shold kill every rich, corrupt, politicians..etc ??

    3. When millions of poeple support ANNA HAZARE its fake and they paid to do that,….etc…etc –BUT– when 10s of people only gathered with them they will say its people revolution ???

    4. Where ever bomb blast occur blame RSS (Note i too hate RSS), if police said its from an islamic group tell its cheating…. but when that islamic group itself agreed that …then VINAVU will Justify that islamic group by taking false stories… (I know not all muslims are not terroirts, but when a small group misusing islam, you should come forward to oppose that…dont support them)

    VINAVU do have guts to arrange a online live chat and come for an open discussion to answer more and more question that we have ???

    I know you people will hide when anyone ask question !!

    • //When millions of poeple support ANNA HAZARE its fake and they paid to do that,….etc…etc –//

     லட்சக்கணக்கான மக்களை காலரா தாக்குது..லட்சக்கணக்கானோரின் ஆதரவைப் பெற்று பாட்சா படம் ஓடுது..அதனாலே காலரா நல்லவிசயம் ஆகிடாது..பாட்சா படமும் கலைச்சித்திரமும் ஆகிடாது.. என்ன விசயத்துக்காக போராடுறோம்..போராட்டத்தின் தன்மை என்ன என்பதைப் புரிஞ்சுக்காம..லச்சக்கணக்கிலே ஆதரிச்சாங்களேங்கிறது பைத்திரக்காரத்தனம் இல்லையா? நாட்டிலே கோடிக்கணக்கான பேர் சாதியை ஆதரிக்கத்தான் செய்யுறாங்க..அதனாலே அது பின்னாடி வால் பிடிக்கறது சரியா? அல்லது சாதி ஒழிக்கப்படணும்னு எதிர்த்து நிற்பது சரியா?

     //police said its from an islamic group tell its cheating// இஸ்லாமியர்க்கு எதிராக போலீசு பரப்பிய கட்டுக்கதை, எழுதிய திரைக்கதை டன் கணக்குல இருக்கதுனாலேதானே சொல்றோம்.. பயங்கரவாதிகளைத் தேடுறோம்னு போஸ்டர் அடிக்கும் காவல்துறையே ‘இஸ்லாமிய பயங்கரவாதி’ன்னு போஸ்டர்ல பேர் போடுது..தென்காசி, நந்தேடு, மாலேகான், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்னு நாடு முழுக்க குண்டுவெடிப்பு செய்தது ஆர் எஸ் எஸ் கும்பல் இல்லையா? அவங்களைத் தேடும்போது ஏன் பார்ப்பன பயங்கரவாதின்னு போஸ்டர் போடறதில்லே? போலீசும் காவிப்படைதான் ஓய்..

  • உண்மையில், இந்த தூக்கு தண்டனை எதிர்பிற்கும் சாமானிய மக்களுக்கும் எந்த வித தொடர்புமில்லை. ஹசாரே போராட்டம் எப்படி வட ஊடகங்கள் வழியாக விளம்பரப்படுத்தப்பட்டதோ அதேபோல் இந்த மூவரின் தூக்கு தண்டனைக்கான எழுச்சி தமிழக ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்டது. மற்றபடி இது தமிழக இளைஞர்களின் மத்தியில் எந்த மனபோக்கையும் ஏற்படுத்தவில்லை என்பதே திண்ணம்.

 2. கேள்வி : என்.பழனிசாமி, பல்லடம்: விலைவாசி ஏற்றத்தை பார்த்தால், இனி, ஏழைகள், அரிசி சோறு மறந்து, கூழ் தான் குடிக்க வேண்டும் போலுள்ளதே…

  அந்துமணி பதில் : ரொம்ப நல்லது தான்… சுத்தமாக்கி, தவிடு நீக்கி, பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில் என்ன சத்து இருக்கிறது? விலை ஏற்றம் காரணமாகவாவது கம்பு, கேழ் வரகு கூழ் குடிக்கட்டும்… உடம்புக்கு தேவையான சத்துக்கள், குறைந்த விலையில் கிடைக்கும்; ஆரோக்கியமாக வாழலாம்!

  (ஆகஸ்டு 14, 2011. தினமலர் வாரமலர் – அந்துமணி கேள்வி பதிலிலிருந்து…)

  • அரசின் பாசிசத்தை ஏற்று கொள்ள சொல்லி எப்படி பழக்குகின்றனர் ..இந்த பார்பன பாசிஸ்டுகள்…..இவர்களை வேரருக்காமல் தமிழின விடுதலை சாத்தியமில்லை…..நல்ல கட்டுரை …..நன்றி வினவு,,,,

   • Praabu .you all opposing “hang to death” criminals but want to kill millions of those caste people ??

    Are you human ??

    Don’t say that i am an iyer …i am not and i don’t believe god.

    • சுரேஷ்…
     ////all opposing “hang to death” criminals/// முதலில் இம்மூன்று உறவுகளும் நிரபராதிகள்…இவர்கள் மீது தொடுக்க பட்டுள்ளது ஜோடிக்க பட்ட வழக்கு….உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட்ட அதிகார வர்க்கம் அப்பாவிகளை குற்ற வாளி ஆக்கி உள்ளது….நாங்கள் கோருவது நிரபராதிகளை தண்டிக்க கூடாது என்பதுதான்….

     // kill millions of those caste people ??//// இரண்டாவது பார்ப்பனர்களை கொல்ல சொல்லவில்லை….பார்ப்பனீயத்தை கொல்ல வேண்டும்…இரண்டையும் வேறுபடுத்தி பாருங்கள்…பார்ப்பனீய சிந்தை கொண்ட பார்பான்களை விரட்டியடிக்க வேண்டும்……

     ////Are you human ??//// சக மனிதனை பிறப்பின் அடிப்படையில் அடிமை படுத்த முனையும் , நிரபராதிகளை தண்டிக்க துடிக்கும் பார்பனர்களை ,பார்ப்பனீயத்தை எதிர்த்து போராடுபவன் தான் மனிதன் என நான் நினைக்கிறேன் ….உங்கள் பார்வையில் நான் எப்படி தெரிந்தாலும் கவலையில்லை…..

     /////Don’t say that i am an iyer …i am not and i don’t believe god//// நீங்கள் அய்யராக இருந்தாலும் உண்மையை உணருங்கள்….தமிழகம் தமிழர்களுடையது….எங்களை வெளியே போக சொல்ல கைபர் போலன் வழியா ஆடுமாட்டை மேய்க்க வந்த எந்த ஒரு பார்ப்பானுக்கும் உரிமையில்லை…பார்ப்பன
     பாசிஸ்டுகளை வேரருக்காமல் தமிழின விடுதலை சாத்தியமில்லை….

 3. பார்ப்பன பாசிசவாதிகளின் முகத்திரையை கிழித்து,மீண்டும் ஆரிய – திராவிட போரை ஒடுக்குபவன் – ஒடுக்கப்படுவன் முறையில் தொடுத்து அதிகார பார்ப்பன கூட்டத்தை வேர் அறுப்போம்.

 4. சோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்…பார்ப்பன பாசிஸ்டுகளை வேரறுப்போம்!

  இவாளின் “மனுநீதி”மனிதாபிமானம் அற்றது,இவர்களின் கருத்துக்கள் விசம்

  தோய்ந்தது.பார்ப்பனியத்தின் எச்சங்களை விடாது போராடி முறியடிக்க வேண்டும்.மக்கள்

  மன்றத்தில் இவர்களை தோலுரித்து அம்பலப்படுத்தவேண்டும்.

 5. கடைசி பாப்பானும்,கடைசி பாப்பாத்த்யும்
  விரட்டம்படும் வரை மற்ற இனங்கள் நிம்மதியாக வாழ முடியாது!

  • ஆகா என்ன அற்புதமான கருத்து . பாஸிச்ட்ட்டுகளை எதிர்த்து இதை விட பாசிச தனமான பின்னோட்டம் கொடுக்க முடியாது. வாழ்க வினவு

 6. இவர்கள் இவ்வளவு வெளிப்படையாக தமிழ் விரோத செயல்களில் ஈடுபடுவது எந்த தைரியத்தில்? சமச்சீர் கல்வியை எதிர்த்து சோ எழுதுகிறான். ராமன் கட்டியது என்று சேது கால்வாய் திட்டத்தை நிறுத்துகிறான்,தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில் தீட்ஷிதனுக்கு சொந்தம் என்று சுப்ரீம் கோர்ட்ல தடை வாங்குறான் சூ.சாமி.ஒரு திறமையும் இல்லாத சசிகலாவின் கைப்பாவையான ஜெயலலிதாவை அறிவாளி திறமையாளர் பெரிய நிர்வாகி இரும்பு பெண்மணி என்று பக்கத்துக்கு பக்கம் காது கூசும் அளவு கதை கட்டும் தினமலர் மற்றும் தினமணி…ராஜாஜி துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியது போல் இவர்கள் ஓடும் நாள் தொலைவில் இல்லை.

 7. சு.சாமியை ராயபுரம் போலிசு நிலையத்தில் வைத்து நொறுக்கினால்
  உண்மையை கக்குவான்!

  • ஏற்கனவே ராயபுரம் போலிசு நிலையத்தில் அடி வாங்கிய அனுபவம் போல.
   வாழ்க்க இதை போல பாஸிஸ்சிட்டுகள் கருத்துகள். இவனுங்க தான் தமிழ் நாட்டை திருத்த போராங்க.,

 8. தமிழர்களின் தன்னெழுச்சியானப்போராட்டங்களால்தான் இந்தத்தற்காலிக வெற்றி கிட்டியுள்ளது..ஆனால் தமிழ்மக்கள் இந்தியப்பார்ப்பனீய மேலாதிக்க அரசுகளின் தமிழின எதிர்ப்புப்போக்கை உணரத்தொடங்கிவிட்டார்கள். தமிழ்ஈழம்,கச்சத்தீவு,காவிரி,முல்லைப்பெரியாறு,பாலாறு,கல்பாக்கம்-கூடங்குளம் அணுமின்உலைகள்,தமிழகத்தை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் பரந்து விரிந்திருக்கிறது தமிழின அழிப்பு அரசியல்.இனிஇவற்றை முன்னெடுத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இளைஞர்கள் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் களமிறங்கு கண்டுபேருவகை அடைகிறோம்.புதிய சனநாயகசக்திகள் இதனைகருத்தில்கொண்டு கல்லூரிமாணவர்களுக்கு தூண்டுகோலாய் இருக்கவேண்டும்.மூவருக்கும் இவைஎல்லாவற்றையும் மீறிதூக்கிலிடத்துணிந்தால் அது தமிழ்நாட்டுவிடுதலைக்கானப் போராக மாறவேண்டும்.காந்தி பகத்சிங்,சுகதேவ் ,இராசகுரு விடயத்தில் காணாமல் இருந்ததைப்போலத்தான் தமிழக அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்பதை மறக்கலாகாது.

  • இவைஎல்லாவற்றையும் மீறிதூக்கிலிடத்துணிந்தால் அது தமிழ்நாட்டுவிடுதலைக்கானப் போராக மாறவேண்டும்…… உண்மையே.தமிழினம் இதனை எற்று
   கொள்ளதான் வேண்டும்.

 9. வெல்லட்டும் உண்மைத்தமிழர்களின் (போலி இந்தியர்கள் அல்ல) இந்த போராட்டம்.

 10. பார்ப்பன பயங்கரவாத கூட்டத்தை இந்த நாட்டை விட்டே வேரறுத்தால் ஒழிய பிரச்சனைகளுக்கு தீர்வில்லை!
  ஜனநாயக சக்திகள் அனைவரும் புரட்சிகர தலைமையின் கீழ் ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது!
  ஒன்றிணைவோம் வாருங்கள்!

 11. இந்த பதினோரு ஆண்டுகள் கழித்து வெளி வந்த முடிவு ஒன்று குற்றவாளிகளுக்கு வழக்காட இருக்கும் முக்கியமான ஒரு கருத்துரு. இந்த காரணத்திற்காக பல் வேறு வழக்குகளில் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. அதே போல் இதுவும் நடக்க வாய்ப்புகள் அதிகமே. ஆனால் அப்பிடி நடந்தால் கூட தமிழ், தமிழ் உணர்வாளர்கள் என்ற அடியாளபடுத்திக்கொள்ளும் வாய்ப்பு பறி போய்விடும் என்பதற்காக நடத்தப்படும் நாடகங்களே இந்த போராட்டங்கள். பல மரண தண்டனைகள் காலம் கடந்தது கருணை மனு நிராகரிக்க பட்டதற்காக எளிமையான சட்ட நடைமுறைக்கு பிறக்கு முடிவுக்கு வந்து உள்ளது. இன உணர்வு வாய்ப்பு, தமிழ் பைத்தியங்களுக்கும் மக்கள் போராட்டம் என்ற உண்டியல் குலுக்கும் கூட்டத்திற்கும் வசதியாக போனது காலத்தின் கோலமே!

  • சானல் 4 வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’, தமிழ்நாட்டின் இலங்கை மீதான தீர்மானமும் அதற்கு இந்தியாவின் எதிர்ப்பு,நடந்து முடிந்த இனப் படுகொலையில் இந்தியாவின் பங்கு — இதுபோன்ற முக்கியமான விசயங்களை விடுத்து, இந்த மூவரின் தூக்கு பற்றிதான் தமிழன் தானாகவே பேசி ஆர்ப்பாட்டம் செய்கிறான் என்ற் தொணியில் நீங்கள் சொல்லியிருப்பது “என்னடா வடிவேல் இனிநடிக்க மாட்டாரா” என்ற என்போன்றோரின் கவலையை சற்று தீர்த்துள்ளது.

 12. ஊடுறுவி ஒன்றாய் கலந்து இருந்து கொண்டு தமிழனை ஊடறுக்க,அதனை இட ஒதுக்கீட்டிலிருந்து ஈழம் வரைக்கும் வஞ்சமாக,தந்திரமாக செயல்படும் இந்த சு.சாமி,சோ,’குண்டு’ராம்,ராமகோபாலன்,தின மலம்,கும்பலை,முடக்க வேண்டியது அவசியம்.அவ்சியம்.அதை தமிழ்மக்களிடம் ஒவ்வொருவரும் இந்த நேரத்தில் கொண்டு செல்வோம்

 13. இந்திய பார்ப்பன அரசும் அதற்கு சொம்பு தூக்கும் ஆங்கில ஊடகங்களும் (குறிப்பாக timesnow மற்றும் ndtv) காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களைப் போல தமிழக மக்களையும் தேச விரோதிகளைப் போல சித்தரிக்குரானுக… அது சரி மிகப்பெரிய ஜனநாயக நாடுன்னு பீற்றிக் கொள்ளும் இந்த நாட்டுல உண்மையா போராடுறவங்க எல்லாம் தேச துரோகிங்கதான. பார்ப்பன வெறி பிடிச்ச நாய் டைம்ஸ் நொவ் அர்னப் கோஸ்வாமி வார்த்தைக்கு வார்த்த தீவிரவாதி தீவிரவாதி னு கத்துறான். அப்படி கத்தனும்னா நீங்க உத்தமன்னு சொல்ற ராஜீவ் வழக்க முழுமையா விசாரிச்சிட்டு கத்தவேண்டியது தானே. இந்தியானா அன்னா மட்டுமே கண்ணுக்கு தெரியுற இவனுகளுக்கு தமிழ்நாடுன்னா சோ, சு..சாமி, இந்து ராம், குஷ்பு (கருமம்டா) போன்றவங்கள மட்டுமே தெரியுறதுல ஒன்னும் ஆச்சிரியமில்லையே… நீங்க எவ்வளவு தான் கத்தினாலும் தமிழக மக்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும்…

  • எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் சொல்லிடாரு. தமிழக மக்கள் என்றால் இண்டர்நேட்டில் உண்டியல் குலுக்கும் பாஸிச்ஸ்ட் வினவு மட்டும் இல்லை சாரே

   • இன்னா சாரே .. நானும் பாக்குறேன்.. ஒரு கேள்வியாவது உருப்படியா கட்டுரையை ஒட்டி கேப்பீயானு?.. தக்காளி சும்மா எதாச்சும் கமெண்ட் போடனும்னு நேத்திக்கடன் போட்டு வந்து கமெண்ட் போடுவீயோ ?.. உருப்படியான கேள்வி ஏதாச்சும் கேளு சார். அட்லீஸ்ட் உருப்படியா கட்டுரையை ஒட்டி எதாவது கமெண்ட் போடு சார் ..
    அத விட்டுட்டு, மெண்டல் மாதிரி சம்மந்தம் இல்லாம பேசாத ..

    • ஜோக்கர் இல்லாமல் ஆட்டம் எப்படி தோழரே… விடுங்கள் அற்பத்தனை… ச்சீ.. அற்புதனை….!!!

 14. \\அதில் மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.\\

  The above statement is more than enough to understand your real face.

  • இப்படி புளுதிவாறி தூற்றுவதோடு மட்டுமே நீங்கள் நிறுத்திவிட்டீர்களே? அதற்கு மேல் ஏன் செல்லவில்லை? “எதுக்கு அப்சல் குருவை அப்பாவின்னு சொல்ற்?”ன்னு வினவை திருப்பி கேட்க வேண்டியது தானெ? அதைவிட்டுட்டு மூஞியை பாத்துட்டேன், அப்புறம் மூனு எழுத்துல ஒரு உறுப்பு இருக்குமே…ம்ம்ம்ம்… ஆங்… முதுகு… அதை பாத்துட்டேன்னு ஏன் பொலம்பனும்?

 15. கவனித்தீர்களா இப்போது சீமானின் வலை தளத்தில் பெரியாரின் படமும் இல்லை பொன்மொழியும் இல்லை. கடையை மூடுவதற்குள் காசு பார்க்கணுமில்லை. கருமம்டா முக்குறவன் எல்லாம் முக்கியமானவன்

  • நாம் தமிழர் தளத்தில் பெரியார் படமும் பொன்மொழியும் போட்டு விட்டால் முக்கியமானவர்கள் னு ஒப்பு கொள்வீங்களா….

 16. ” மூவர் தூக்கை விட அப்சல் குரு என்ற காஷ்மீரத்து அப்பாவியை தூக்கில் போட்டே ஆக வேண்டுமென்பது இந்தக் கூட்டத்தின் நோக்கம்.”

  என்னது அப்சல் குரு அப்பாவியா? சூப்பர்…
  அப்டியே நம்ம கசாப் தம்பியையும் உத்தமபுத்திரன்னு சொல்லுங்க ! இன்னும் நல்லா இருக்கும்…


  மாக்ஸிமம்

  • கசாப் ஒரு அப்பாவியே அவரு என்ன தப்பு செய்தாரு.மும்பை போன்ற முதலாளிகளின் சொர்க நகரில் வாழ்ந்த வந்த பல அப்பாவிகளுக்கு மோட்சம் கொடுத்தார். அவரை எப்படி தவறு செய்தார் என்று சொல்ல முடியும். ஆதாரம் இருக்கா? ஆதாரம் இருந்தாலும் நாங்க அவரை நிரபராதி என்று தான் சொல்வோம். தூக்கு தண்டனை போட்டால் அதை நீக்க சொல்லி ..அக்கா தாயே நான் தப்பு மன்னிட்டேம்மா என்னை மன்னித்து விடும்மா என்று கெஞ்சுவோம்.அப்படிய்ம் காரியம் நடக்கவில்லையா . நான் நிரபாராதி நான் நிரபாரதின்னு டிராமா போடுவேன். தூண்டி விட்டு கலவரம் செய்வேன்.அப்பாவிங்களை தீக்குளிக்க சொல்வேன். ஆனா நான் நிரபாரதிதான்.

   போங்கடா நீங்களும் இந்த வினவுதனும் தூ

    • என்ன சார் இப்படி கேட்டுபுட்டீங்க.!.

     நீங்க சொன்ன ரெண்டு பேரும் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் அழித்து ரத்த ருசி பார்க்க வந்தவர்கள்.. இரண்டு பேரும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்..ஒருத்தன் 2001 ல குண்டு வச்சான், இன்னொருத்தன் 2008 ல குண்டு வச்சான் செத்தது எல்லாம் அப்பாவி பொதுஜனம் தான்…ரெண்டு பேருமே லஷ்கர் இ தொய்பாவை செர்ந்தவனுங்க. என்ன ஒரு சின்ன வித்தியாசம் ஒருத்தன் இங்கேயே பொறந்தவன், இன்னொருத்தன் நம்ம பங்காளி நாட்டுல பொறந்தவன். ஆனா ரெண்டு பேருக்கும் கொள்கை என்னமோ ஒண்ணுதான்.

     இவனுங்க ரெண்டு பேரை பத்தி சொல்லிட்டா போதும் உடனே நம்ம உண்மையான தேச பகதர்களுக்கு கொலை வெறி வந்துடும்… இதைவிட வேறே என்ன சம்மந்தம் வேணும்.?

     மாக்ஸிமம்

     • அப்சல் குரு யார்? காஷ்மீர் விடுதலை இயக்கத்தில் வேலை செய்து பின் சரணடைந்தவர். சரணடைந்த பின்னால் இந்திய அரசின் ஆட்காட்டியாக செயல்படுமாறு நச்சரிக்கப்பட்டவர்..வேணான்டா சாமின்னு ஓடி வந்து வேறு தொழில் பார்த்துக்கிட்டு இருந்தவரை இந்த வழக்கில் ஜோடித்து தூக்குக்கு அனுப்பிவைத்தனர். அப்சல் குருவுக்காக வாதாட வக்கீல்கள் இல்லை..அரசே நியமிக்கும் வழக்கறிஞர் வாதாடியது என்ன என்பதும் அப்சலுக்கு மொழிப்பிரச்சினையால் தெரியவில்லை..இப்படிப்பட்ட நபர்தான் பாராளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியவராம்..இத்தாக்குதல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட கீலானி மீது சிபிஐ ஜேம்ஸ்பாண்டுகள் புனைந்த கதைகள் மிகவும் பிரபலம்..கீலானி வந்த கார் கண்ணாடியில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததாம் ..அதில் இந்திய அரசைக் கண்டித்த வாசகங்கள் இருந்ததாம்..கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த போஸ்டரை கார் கண்ணாடியில் உண்மையிலே ஒட்டி இருந்தால், கார் டிரைவர் கழுத்தை வெளியில் நீட்டியபடிதான் வண்டி ஓட்டி இருக்கமுடியும்..ஜேம்ஸ்பாண்டுகள் அந்த மாதிரி “துப்பு” அறிந்திருந்தார்கள்..இந்த 007 களின் புனைசுருட்டில் தூக்குக்கு அனுப்புவதுதான் தேசபக்தி என்றால்..தூ..அது எவ்வளவு கேடுகெட்ட பக்தி!!

      • டேச பக்டி ஒரு தரம், டேச பக்டி ரென்டு தரம், டேச பக்டி மூன் தரம்

   • ‘கசாப் ஒரு அப்பாவின்னு’ எந்த முஸ்லீமும், பிற்படுத்தப்பட்ட இந்தியர்களும் எதுவும் சொல்லல… ஏன்னா ‘மும்பைல’ கொள்ளப்பட்டவங்கள்ள சுமார் 40 சதவீதம் அப்பாவி முஸ்லீம் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள்தான்.

    அதே நேரம் ‘காஞ்சி சங்கராச்சாரி’ ஜெயந்தர சரஸ்வதி, கசாப் மாதுரியே எந்த கொலையும் பண்ணல, ஒரு அப்பாவை, ‘பொம்பளை பொருக்கி’ கிடையாது, சங்கரராமனுக்கும் தன்னோட ‘காஞ்சி’ மடத்துல வந்த மத்த சில அப்பவிகளுக்கும் ‘மோட்சம்’ கொடுத்தா, ‘அனுராதா ரமணனுக்கு’ சொர்கத்த காட்ட ‘ட்ரை பண்ணா’.

    அவா செய்தத்துக்கு ஆதாரம் இருக்கா? கசாபுக்கு எதிரா உறுதியா சாட்சி சொன்னா எல்லாரும். ஆனா ‘காஞ்சி சங்கராச்சரிக்கு’ எதிரா ‘கருணாநிதி கூட’ பல்டி அடிச்சுட்டரோ இல்லையோ.. அப்புறம் அவா ‘பிரமனா’ இல்லையோ, அதனால் யார கொன்னாலும் ‘அவாளுக்கு’ தண்டனை கிடையாதுன்னு ‘மனு தர்மம்’ வேற சொளிண்டுத்து.. அப்புறம் என்னா..

    ஒரு வேலை ‘ஐயங்காரான’ சங்கரராமன் கொலை பண்ண அது ‘பிரம்ம ஹத்தி’ இல்லையோ?

    என்னா ஒன்னு ‘ஜெயலலிதா அம்மா’ மாட்டும் பெரியவாள இன்னும் நம்ப மாற்றா… ‘சங்கரராமான’ கொன்னதும் ‘பிரம்ம ஹத்தி’ அப்படின்னு நம்புறா…

    ஆதாரம் இருந்தாலும் நாங்க அவரை நிரபராதி என்று தான் சொல்வோம். தூக்கு தண்டனை போட்டால் அதை நீக்க சொல்லி ..அக்கா தாயே நான் தப்பு மன்னிட்டேம்மா என்னை மன்னித்து விடும்மா என்று கெஞ்சுவோம்.அப்படிய்ம் காரியம் நடக்கவில்லையா . நான் நிரபாராதி நான் நிரபாரதின்னு டிராமா போடுவேன். தூண்டி விட்டு கலவரம் செய்வேன்.அப்பாவிங்களை தீக்குளிக்க சொல்வேன். ஆனா நான் நிரபாரதிதான்.

    போங்கடா நீங்களும் இந்த ‘காஞ்சி சங்கர மடமும்’ தூ..

  • உலக வங்கிக்கு நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் அன்னா ஹசாரே நல்லவனாம். ஆதாரம் ஏதும் இல்லாமல் சிறையிலிருக்கும் இஸ்லாமியர்கள் கெட்டவர்களாம்.

   ” போதுமான சாட்சியம் இல்லாவிட்டாலும் சமூக மனசாட்சிக்காக அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கிறேன்” – அப்சல் குரு வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி.

   டேய் .. உங்களுக்கு வெக்கமாவே இல்லையாடா ?..

   • என்னது உலக வங்கிக்கு அண்ணா ஹசாரே பெருசு நாட்டை கூட்டி கொடுத்தாரா? இம்ம் , அப்புறம் … வேறென்ன லாம் செஞ்சாரு கொஞ்சம் சொல்லுங்க பாப்போம்..

    கொஞ்சமாவது மனசாட்சியோட பொய் சொல்லுங்க பிரதர்..

    ராம்லீலாவில் அண்ணா சொன்ன வந்தே மாதரமும், ஜெய் ஹிந்தும் காதுல கம்பியை விட்டு ஆட்டுன மாதிரி இருந்த எபக்ட் உங்களுக்கு இன்னும் குறையலை னு நினைக்கிறேன்…

    அடுத்து ..

    நீதிபதி உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னால் ரொம்ப நல்லவர். அதுவே எதிராக சொன்னால் நாட்டாமை தீர்ப்பை மாதி சொல்லு ன்னு குதிக்கறது… என்னே உங்களது பக்குவம்…

    “இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதை ஒப்புக் கொள்வதோடு, அந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட ராமர் கோவில் கமிட்டிக்கு அனுமதிக்க வேண்டும்”

    — ராம ஜென்ம பூமி வழக்கில் நீதிபதி சொன்ன தீர்ப்பு…

    இந்த தீர்ப்பு கூட ஒரு நீதிபதி சொன்னதுதான்…

    இப்போ சொல்லுங்க ! யார் வெட்கப்பட வேண்டும்?


    மாக்ஸிமம்

    • ///“இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதை ஒப்புக் கொள்வதோடு, அந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்ட ராமர் கோவில் கமிட்டிக்கு அனுமதிக்க வேண்டும்”

     – ராம ஜென்ம பூமி வழக்கில் நீதிபதி சொன்ன தீர்ப்பு…

     இந்த தீர்ப்பு கூட ஒரு நீதிபதி சொன்னதுதான்///

     @ மாக்ஸிமம், அப்படின்னு பேற வைச்ச மட்டும் போதாது புத்தியும் மாக்ஸிமமா வைச்சுக்க பாக்கணும்.

     அலஹாபாத் உச்சநீதிமன்றம் ‘மனு தர்ம மிருகங்களால்’ நடத்தப்பட்டு, நீதிபதிகள் யாவரும் ‘கிரிமினல்கலாகவே’ இருப்பது யாவரும் அறிந்த உண்மை.

     உதாரணமாக நீ கூறியுள்ள ‘பாபர் மஸ்ஜித்’கு எதிராக தீர்ப்பு வழங்கினனே, தெருப்பொறுக்கி நாய், அவன் ‘ரிடர்யர்ட்’ ஆகிய உடனே ‘பாஜக’ வில் இனைந்து விட்டான்.

     அலஹாபாத் நீதிமன்றம் ஒரு கேவலப்பட்ட ‘மனு ஜாதி மிருகங்களின்’ ஊழல நீதி மன்றம் என்பதற்கு மற்றுமொரு ஆதாரம், உச்சநீதி மன்ற நீதிபதியும் நேர்மைக்கு பேர் போனவருமான நீதிபதி ‘கட்ஜு’.

     உச்சநீதி மன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு ‘உயர்நீதி மன்றம்’ ஊழலால் அழுகி போய் விட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி, பின்னர் அதை ஆட்சேபித்த போது தனது நிலையில் உறுதியாக நின்றார்.

     நீதிபதி கட்ஜூ கூறினார், எனது பாட்டனார் காலத்திலிருந்தே ‘அலகாபாத் நீதிமன்றத்தோடு’ வேலை செய்த தொடர்புள்ள குடும்பத்தில் வந்தவன் என்ற முறையில் அது எப்பேர்ப்பட்ட ஊழல ‘நீதிமன்றம்’ என்று தெரியும், இன்றும் அதைத்தான் கூறுகிறேன். அது ‘அழுகி போய் விட்டது’ என்று கூறினார்.

     இதே நீதிபதி ‘கட்ஜு’ முஸ்லீம்கள் தாடி வைத்து கொண்டு ‘கல்வி நிறுவனங்களில்’ படிப்பது தீவிரவாதிகளை உருவாக்கும் என்று ஒரு ‘வேகத்துடன்’ கூறினாலும், அவரின் நேர்மை மீது உள்ள மரியாதையால், அவரது கருத்தை பணிவோடு எதிர்த்தார்கள் ‘சமத்துவ சமுதாயத்தை’ இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள ‘முஸ்லீம்’ சகோதரர்கள்.

     அத்தகைய மனிதர் ‘அலகாபாத்’ நீதிமன்றம் அழுகிப்போனது என்று கூறினார். இதைதான் ‘மனு தர்ம மிருகங்கள்’ சில, ‘பாபரி மஸ்ஜித்’ விடயத்தில் நீதிபதி தீர்ப்பளித்தார் என தொங்குகின்றன.

     மேலும் குறிப்பிட்ட நீதிபதியின் தீர்ப்பு பற்றி மேல் முறையீட்டில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், ‘யாருமே கேக்காத ஒரு தீர்வை, கட்ட பஞ்சாயத்து போன்று’ வழ்கப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்து ‘தடை விதித்துள்ளது’.

     எனவே ‘லூசுத்தனமாக’ பேசி செருப்படி வாங்காமல் வேலைய பாரு வெங்காயம்.

     • “எனவே ‘லூசுத்தனமாக’ பேசி செருப்படி வாங்காமல் வேலைய பாரு வெங்காயம்.”

      மரியாதை — அதை முதல்ல கத்துகிட்டு கருத்து சொல்ல வாங்க முதல்ல..


      மாக்ஸிமம்

 17. இம்மூவரின் தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்து விட்டால் இஃதொரு பிரிசிடன்ட் (Precedent) ஆகிவிடும். இதைக்காட்டி மற்ற தீவீர்வாதிகளும் தங்கள் தணடனையைக் குறைக்க விண்ணப்பித்தால், அல்லது அவர்களின் இயக்கம் போராடினால், அரசு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற பயம் எதார்த்தமானதே.

  • நிச்சயமாக!. எல்லோர் மனதிலும் அந்த பயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

   இன்று தமிழர் என்ற இன உணர்வு அடிப்படையிலும், அவர்கள் மீதான வலுவற்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையிலும், எல்லாவற்றையும் தாண்டி மனிதாபிமான அடிப்படையிலும் நாம் மூவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறோம், போராடுகிறோம்.

   நாளை இதே போன்று அப்சல் குருவிற்கும் , அஜ்மல் கசாபிற்கும் ஆதரவாக இதேபோன்று இங்கே இருக்கும் சிலர் போராடுவார்கள். அப்போது அவர்களையும் தண்டனையில் இருந்து விடுவித்து விட்டால் / தண்டனையை குறைத்து விட்டால் ? நினைக்கவே பயமாக இருக்கிறது..

   இன்று மூவர் மீதான தண்டனையை ரத்து செய்ய / குறைக்க வேண்டும் என்று போராடும் சிலரின் முகங்கள் போலியானது. அவர்களுக்கு என்றுமே தனி தமிழ் ஈழமும், புலிகளும்,இசுலாமியர் அல்லாத தமிழர்களும் எதிரிகள் தான்.

   இன்று இவர்கள் மூவர் மீது இத்தனை பரிவு காட்டி குரலெழுப்புவது, நாளை அஜ்மல், மற்றும் கசாபை இதே வழக்கை காரணம் காட்டி விடுவிக்க வைப்பதர்க்காகதான்

   அரேபியாவில் இருப்பதுபோலான கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் போன்ற அவர்களது கடுமையான சட்ட உதாரணங்களை கொஞ்ச காலத்திற்கு மறந்து விடுவார்கள்..

   காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் இன்றே தனது திருவாயை மலந்து விட்டார்..

   பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்கிறதென்று…


   மாக்ஸிமம்

   • அமல குமலர்களே …

    அய்யோ பாவம் பச்சைப் புள்ளைகள் அழுது பயப்படுகின்றன..

    குஜராத்தில் நரேந்திர மோடி என்னும் வெறி நாய் பல்லாயிரம் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த போது கண் விரிய இரசித்தீர்கள் அல்லவா ?.. அப்பொழுதெல்லாம் பயம் இல்லை. அத்வானி ரதயாத்திரையின் போது செல்லும் இடமெல்லாம் ரத்தக் கோடிட்டுச் சென்றானே … அப்பொழுதெல்லாம் பயம் இல்லை. ஆதாரங்களோடு இவர்கள் நடத்திய படுகொலைகள்க் கண்டு உங்களுக்கு கோபம் வரவில்லை. அந்த இரத்தத்தைக் கண்டு பயம் வரவில்லை.
    ஆனால் பேட்டரி வாங்கிக் கொடுத்த்வனும் வண்டி வாடகைக்கு எடுத்துத் தந்தவனும் தூக்கிலிடப்படுவதைத் தடுத்தால் உங்களுக்கு பயமாய் இருக்கிறது. உங்களைப் போன்ற வெறியர்களை என்ன செய்யவேண்டும் என்பதை மக்களுக்கு நாங்கள் சொல்லித் தெரியத் தேவையில்லை. தெருவில் வெறிநாய்களைப் பிடித்துச் செல்லும் ஊழியர்களிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும்.

    • அடிப்படை அற்ற வாதம்…

     குஜராத்தில் நடைபெற்ற படுகொலைகளை யாரும் நீங்கள் சொல்வது போல் கண்விரிய ரசிக்கவில்லை. ரசித்தவன் மனிதனுமில்லை..

     மூவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்ய / குறைக்கதான் தமிழர் அனைவரும் முற்றாக விழைகிறோம்.. அதே சமயம் இதே வழக்கை காரணம் காட்டி எதிர்காலத்தில் பல்வேறு குற்ற செயல்கள் ஈடுபடுவோர் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. அதை நினைத்து அஞ்சுகிறோம். அவ்வளவுதான்.

     நீங்கள் மோடிஉடனும், அத்வானி உடனும் எல்லா இந்துக்களையும் இணைத்து பார்ப்பது சரி அல்ல.

     ‘ மக்களுக்கு நாங்கள் சொல்லித் தெரியத் தேவையில்லை. தெருவில் வெறிநாய்களைப் பிடித்துச் செல்லும் ஊழியர்களிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும்.’

     உங்களது கருத்தை ஆமோதிக்கிறேன்.. அராஜகம், தீவிரவாதம் செய்யும் வெறி நாய்களை நீதி என்னும் ஊழியர் பிடித்து செல்லட்டும்…ஆட்சேபனையே இல்லை


     மாக்ஸிமம்

     • @ மாக்ஸிமம், அப்படி என்றால் உலகின் மிக மோசமான அரஜாகமான ‘மனு தர்மத்தை’ 2000 வருடங்களாக செய்து ஆயிரம் கோடி மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் ‘மனு தர்ம’ தீவிரவாதிகளைத்தான் முதாளின் தெருவில் வெறிநாய்களைப் போல இழுத்து செல்ல வேண்டும், என்பதை நாங்களும் ஒத்து கொள்கிறோம்.

      ஏனெனில், இந்த பயங்கரவாதிகளும் இந்தியாவின் பூர்வ குடிகள் அல்ல. இந்தியாவிற்குள் ஆரியர்களாக வந்து, திராவிடர்களை 2000 வருடங்களாக அடிமைப்படுத்திய இவர்கள் தான் மிக பெரும் பயங்கரவாதிகள் என்பதை ‘நீதியின் மீது அக்கறையுள்ள’ 95 சதவீத இந்தியர்கள் ஒத்துகொள்கின்றனர்.

      இந்த ஆரியர்கள்தான் ‘குண்டு வெடிப்புகளை’ நடத்தி முஸ்லீம்கள்,கிருத்துவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது பழியை பொட்டு இனச்சண்டை மூட்டி குளிர்காய பார்கின்றனர், என்பது யாவருக்கும் தெரியும்.

      • ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்ணே…. 2% ஆரியன், 98% திராவிடனை எப்படி 2000 வருடம் அடிமை படுத்தி வைத்திருக்கமுடியும்? ஆரியன் ஸ்ட்ராங்கா? இல்லை, திராவிடன் வீக்கா? ‘தகுதி உள்ளது தப்பி பிழைக்கும்’ என்ற டார்வின் தியரியை இங்கே ஏன் நீங்கள் கருத்தில் கொள்ள கூடாது?

   • மாக்சிமம்,

    \\நாளை இதே போன்று அப்சல் குருவிற்கும் , அஜ்மல் கசாபிற்கும் ஆதரவாக இதேபோன்று இங்கே இருக்கும் சிலர் போராடுவார்கள்.அப்போது அவர்களையும் தண்டனையில் இருந்து விடுவித்து விட்டால் / தண்டனையை குறைத்து விட்டால் ? நினைக்கவே பயமாக இருக்கிறது. //

    \\அரேபியாவில் இருப்பதுபோலான கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் போன்ற அவர்களது கடுமையான சட்ட உதாரணங்களை கொஞ்ச காலத்திற்கு மறந்து விடுவார்கள்..//

    நீங்கள் சொல்ல வருவது கசாபையும் விடுவிக்கக் கோரி முசுலிம்கள் போராடுவார்கள் என்பதுதானே. ஆனால் உண்மையோ இத்தகைய அவதூறு கூறுவோரின் முகத்தில் அறைகிறது.கசாபை தூக்கிலடக் கோரி முசுலிம்களே போராடுகிறார்கள்.

    ஆதாரம்,http://videos.sify.com/—-Agra-Muslims-demand-death-for-Kasab-ANI-watch-kfdvkebgieh.html.

    கசாபை விடுவிக்க வேண்டும் என யாரும் கோரவில்லை.அப்படி கோரிக்கை வைக்கப்படும் என கற்பனை செய்ய வேண்டாம்.நாமாகவே ஒன்றை கற்பனை செய்து கொண்டு அதை ”நினைக்கவே பயமாக இருக்கிறது”என அரற்றுவது ஒரு வகையான மனநோய்.பார்த்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.

    அப்சல் குருவை பொறுத்தவரை அவர் கிட்டத்தட்ட பேரறிவாளனின் நிலையில்தான் இருக்கிறார்.அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை என அவ்வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.ஆனாலும் ”சமூகத்தின் கூட்டு மனசாட்சியை”திருப்தி படுத்துவதற்காக அவருக்கு சாவுத்தண்டனை அளிப்பதாக தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.ஆதாரமோ சாட்சியமோ இன்றி ஒரு மனித உயிரை காவு வாங்குவதை ஏற்க முடியாது.ஆகவே அப்சல் குருவை விடுவிக்க கோரி நியாய உணர்வு செத்துப் போகாத மனம் கொண்டவர்கள் குரல் கொடுப்பது நியாயமானது.

  • அமலன்,
   முன்மாதிரிகள் [precedent] உருவாக்கப்படுவதில் தவறேதுமில்லை.அவை சரியான முன்மாதிரிகளா,தவறான முன்மாதிரிகளா என்பதே விவாதத்திற்கு உரியது.பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவர் மீதும் கொலைக்குற்றச்சாட்டு ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. ஆகவே அவர்கள் நிரபராதிகள்,அநியாயமாக ராசீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் என்ற அடிப்படையில்தான் அவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மக்கள் போராடுகிறார்கள்.எனவே அவர்களது விடுதலை பின்பற்றத்தக்க அழகிய முன்மாதிரியாகவே அமையும்.