Friday, August 12, 2022
முகப்பு செய்தி வினவு - ஆயிரம்!

வினவு – ஆயிரம்!

-

வினவு துவங்கி

மூன்றாண்டுகள்

ஆயிரம் பதிவுகள்

45,000 மறுமொழிகள்

150 நாடுகளிலிருந்து

40 இலட்சம் பார்வைகள்………

____________________________________________________________________

நான்காவது ஆண்டு தொடக்கத்தின் ஆயிரமாவது பதிவில் உங்களை சந்திக்கிறோம். எண்ணிக்கை முக்கியமில்லை என்றாலும் வினவின் வளர்ச்சியில் இந்த தொடக்க கால பதிவுகள் வகித்திருக்கும் இடம் முக்கியமானதுதானே?

குருவி சேர்த்த அரிசி போல இந்தப் பதிவுகள் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளில், பல்வேறு அவசரங்களில், பல்வேறு நிதானமான தருணங்களில் எழுதப்பட்டவை. ஆரம்பத்தில் எமது கருத்தை சொல்வது என்பதைத் தாண்டி பெரிய இலக்கு ஏதுமில்லை. ஆனால் வாசகர்கள், பதிவர்கள், நண்பர்கள், தோழர்கள் ஆதரவினால் வினவு ஒரு பெரிய நோக்கத்தை கொண்டிருக்க வேண்டியிருப்பது அவசியமாயிற்று. நீங்களும், நாங்களும் சேர்ந்து உருவாக்கிய அந்த பாதையில் வினவு தொடர்ந்து பயணிக்கும். மக்கள் நலனை மட்டும் மையமாகக் கொண்ட நமது வினவை எதிர்காலத்தில் சிறந்த மக்கள் ஊடகமாக உருவாக்குவதற்கு நாம் கை கோர்ப்போம்.

அனைவருக்கும் நன்றி!

 1. கடந்த மூன்று ஆண்டுகளாக வினவு ஆற்றியுள்ள பங்கு மகத்தானதாகும்.தமிழிலேயே மிக அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ள சமூக/அரசியல் பார்வைகளைக் கொண்ட வலைத்தளமாக உள்ளதையும் நாம் மறுக்க முடியாது.

  பல காரணிகளுக்காக நாம் வினவைப் பாராட்டலாம்.

  1.இணயத்தளத்தில் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனியக் கருத்துக்களை எதிர்கொள்ள.
  2.சமூகத்தில் நடக்கும் பொது விசயங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற சரியான மார்க்ஸியப் பார்வை.
  3.பதிவுகளைப் பொதுவெளியில் கொண்டு வந்து விவாதிக்கும் தன்மை.
  4.சொன்னக் கருத்துக்களின் எதிர் வினையாக எத்தகய கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும்
  அதற்காக சிறிதும் அசராமல் அதே சமயம் தெளிவான எதிர்வினையை ஆற்றியமை.
  5. ஈழப் படுகொலை நடந்த சமயங்களில் தந்த தெளிவான பார்வை.

  இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம்.

  இது எல்லாவற்றையும் விட, பல சமயங்களில் சமூகத்தில் நடைபெறும் பல நிகழ்வுகளால் என்னதான் நடக்கிறது என குழம்பிப் போகும் போதும்/சரியான நிலைப்பாடுகளை எடுக்கத் தடுமாறும் பொழுதும், சரி வினவைப் பார்க்கலாம் அதில் சரியாக சொல்லியிருப்பார்கள் என்கிற எண்ணம் வருகிறதே, அது அதுதான் வினவு தளத்தின் வெற்றி.இது எனக்கு மட்டுமல்ல, எனக்குத்தெரிந்து பலரும் இதையே சொல்வார்கள் என நினைக்கிறேன்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

 2. //வினவு துவங்கி

  மூன்றாண்டுகள்

  ஆயிரம் பதிவுகள்

  45,000 மறுமொழிகள்

  150 நாடுகளிலிருந்து

  40 இலட்சம் பார்வைகள்………//

  புரட்சிகர அரசியல் பரப்புரையில் வினவு ஒரு மைல் கல்லாக விளங்குகிறது.
  தன்னலம் பாராத, சோர்வடையாத, புத்துணர்ச்சியோடு புரட்சிகர அரசியலை கொண்டு செல்லும் வினவு தோழர்களிடம் நிறையவே எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் தோழர்களே !

 3. வினவு களஞ்சியத்திற்கு வாழ்த்துக்கள்!

  வினவு தளத்தில் சில குறியீடுகளின் கீழே காலியாக இருக்கும் இடத்தை நிரப்பவும் முயற்சி செய்யலாம்!

  மேலும், தேடிக் கண்டுபிடித்து வெளியிடும் சில உலகமகா மொக்கை பதிவுகளை (ஷ்ரேயா கோஷல் பிடிக்குமா?) போடும் போதோ அல்லது எல்லா பதிவுகளுக்குமோ அதை எழுதியவரின் பெயரையோ அல்லது அதுவும் வினவின், வினவு செய்தியாளரின் கட்டுரை தானா என்பதையும் தெளிவாக குறிப்பிட்டால் படிக்க கொஞ்சம் வசதியாக இருக்கும் என்பதையும் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன். நன்றி.

  • வாழ்த்துக்கள்! பல மொக்கை பதிவுகளுக்கு மத்தியில் எப்போதாவது சில நல்ல பதிவுகளை தரும் ஊடகங்களுக்கு மத்தியில் எப்போதாவது சில மொக்கை பதிவை தரும் வினவை பாராட்டலாம்.

   இருந்தாலும்…….

   ஒரு வேலை உணவுக்கே மனிதன் போராடும் நிலையில் இசையை(பொழுதுபோக்கை) வினவு தூக்கி பிடிப்பதை தவிர்க்கலாம்.

   அரசியலின் மாறுபட்ட தளத்திற்கு என்னை அழைத்து சென்ற வினவுக்கு,
   ஆயிரம் ஆயிரம் நன்றிகள்

   • தோழன்,

    இசையை (பொழுதுபோக்கை) தூக்கிப்பிடித்தார்கள் என்று அர்த்தம் கொள்ளவில்லை. மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய பொழுதுபோக்கு அம்சங்களைப் பற்றிய கட்டுரைகளையும் வரவேற்கவே செய்கிறேன். எடுத்துக்காட்டாக, நடுத்தர வர்க்கத்தின் இன்றைய நடைமுறை வாழ்க்கையின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையும் அதன் மூலம் நமக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தும் வந்த ‘மங்காத்தா’ திரைப்படத்தின் விமர்சனமாக இருக்கட்டும், ‘கோ’, ‘உன்னை போல ஒருவன்’ போன்ற திரைப்படங்களில் உள்ள அரசியலை உணர்த்திய விமர்சனக் கட்டுரைகளாக இருக்காட்டும் அவற்றை நாம் தூற்றவில்லை; வரவேற்கிறோம், அது போன்ற கட்டுரைகள் வினவில் இன்னும் நிறைய வரவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன்.

    ஆனால், மறுமொழி 10 -ல் நண்பர் ‘உண்மை’ சொல்லும் “தனிமனித துதி” மங்காத்தா விமர்சன கட்டுரைக்கு அல்ல மாறாக ஸ்ரேயா கோஷல் பிடிக்குமா? பதிவுக்கு தான் பொருந்தும்.

    தனிப்பட்ட ஒரு நபருக்கு பின்னணிப் பாடகர் ஒருவரைப் பிடிக்கிறது. அதை “உங்களுக்கும் பிடிக்குமா” என்று பாடல் வரிசைகளோடு ஒரு கட்டுரை வருகிறது. அதுவும் பெயர் இல்லாமல் வினவு கட்டுரையாக வருகிறது! வினவில் வருகிறது!! நீங்கள் சொன்னது போல வினவு இணையதளத்திலும் நல்ல கட்டுரைகளுக்கு மத்தியில் சில மொக்கைகளும் வரும் என்பதை அன்று தான் புரிந்துக்கொண்டேன்.

    • ஏன் பாசிஸ்ட், ஸ்ரேயாவின் குரலை பாராட்டினால் பிடிக்காத உங்களுக்கு இளையராஜாவின் இசையை பாராட்டினால் பிடிக்குமா? வினவு இளையராஜாவை போற்றிப்புகழ்ந்தால் அது தனிநபர் துதி ஆகாதா?

     • டாக்டர் ஒன்டிப்புலி,

      எனக்கு பெரியாரியம் தெரியும் என்பதற்காக நான் பெரியார் ஆகிவிட முடியுமா? அதுபோல தான் இருக்கிறது நீங்கள் ஷ்ரேயாவையும், இளையராஜாவையும் கோர்த்தது!

      • இராசாவும் கலைஞர்தான், ச்ரேயாவும் கலைஞர்தான். உங்களுக்கு ச்ரேயாவை பிடிக்காத காரணத்தினால் அவரை பாராட்டினால் துதி, நீங்கள் இராசா இரசிகரென்பதால் அவரைப் பாராட்டினால் புரட்சியோ? என்ன முரண்பாடு இது?

       • ஒரு கட்டுரை பிடிக்கவில்லை என்றால் அது சம்பத்தப்பட்டவரை பிடிக்காத காரணத்தினால் தான் என்கிற உங்கள் முடிவுக்கு 🙂

        நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இளையராஜா தமிழ் திரையிசையில் புரட்சி செய்தவர் தான். அது ஒரு பக்கம் கிடக்கட்டும், நான் இளையராஜாவின் ரசிகன், இளையராஜாவை எனக்கு பிடிக்கும் என்று என்னைப் பற்றி நீங்களே தான் சொல்கிறீர்கள், நான் எங்கேயும் சொல்லவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். (எனக்கு இளையராஜா இசை பிடிக்கும் என்பது உண்மை தான் ;))

        இளையராஜாவோடு ஷ்ரேயா கோஷலை ஒப்பிடுவது தான் எனக்கு முரணாகத் தெரிகிறது. ஆனாலும் இளையராஜாவின் இசையையல்லாமல் அவர் தொண்டையை சிலாகித்தால் அதுவும் தனிநபர் துதிபாடல் தான்! வினவில் அப்படியொரு கட்டுரை இருந்தால் சுட்டிக்கொடுக்கவும்.

        • இசை அமைப்பது உசத்தி பாடுவது மட்டம்.
         இசையமைப்பவன் உயர்ந்தவன் பாடுபவன் தாழ்ந்தவன்
         இசையமைப்பவனை கொண்டாடுவது சரி, பாடகனை கொண்டாடுவது தவறு

         பார்ப்பனியம் மனிதருள் தீண்டாமையை கொண்டுவந்தது போலவே கலைகளுக்குள்ளும், கலைஞர்களுக்குள்ளும் புகுத்தியுள்ளது என்பது தெரிந்ததுதான், ஆனால் அதை நீங்கள் வழிமொழிவீர்கள் என்பது எனக்கு வியப்பு.

         பெயரில் மட்டுமல்ல சிந்தனையிலும் நீங்கள் பாசிச்டுதான்

         ரசனையில் கூட ஏற்றத்தாழ்வு பார்க்கும் உங்களிடித்தில் பொதுவுடைமை, பெரியாரியம் போன்றவையெல்லாம் மாட்டிக்கொண்டுள்ளதை நினைத்து வருந்துவதை தவிர வேறு வழியில்லை

          • நீங்கள் எப்போது பாடகரை பாராட்டினால் தனிநபர் துதி, இசையமைப்பாளரை பாராட்டினால் அது கலை இரசனை என்று எழுதினீர்களோ அப்போது சிரிக்கத்துவங்கியதுதான்…..

 4. பாசிசம் என்ற வார்த்தையை விட்டால் வினவு எழுதும் கட்டுரைகளில் எந்த சரமும் இல்லை. வினவு வெளிப்படுத்தும் முற்றிலும் எதிர் மறையான மனபோக்கும் ஒருவித சமூதாய சிக்கலே !!!!! வினவு கட்டுரைகள், பல வாசகர்களிடையே குழப்பத்தையே விளைவித்திருக்கிறது என்பது மட்டுமே உண்மை .அப்புறம் விழிப்புணர்வு ?????????? ம்ம்ம் நோ கமெண்ட்ஸ்

  இன்னும் பொதுமுகத்தன்மை கொண்ட கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம். வினவின் கோபங்கள் பல இடங்களில் நியாயமானது . ஆனால் பல இடங்களில் அது வெறும் முகமற்ற வெட்டி கூச்சல்களாக உள்ளது.

  இருந்தும் பல கட்டுரைகளை புதிய தன்மையுடன் காட்டும் முயற்சி மகிழ்ச்சிக்குரியது
  நானும் வினவின் ஒரு வாசகன் என்ற முறையில் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ………….

 5. வினவிற்கு என்னுடைய புரட்சிகர வாழ்த்துக்கள்.

  ககடந்த நான்கு ஆண்டுகளில் என்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு, வினவின் பங்கு மிக அதிகம்.

  வினவு முதன்முதலில் வெளிவந்த காலத்தில் பல தோழர்கள் பதிவுலகில் எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வினவின் வருகைக்கு பிறகு, எழுதுவதை குறைத்துவிட்டார்கள். சிலர் எழுதுவதையே நிறுத்திவிட்டார்கள். தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும், வினவின் வேகமும், அரசியல் முதிர்ச்சியும் ஒரு முக்கிய காரணம்.

  வரலாற்றில், 40, 50 ஆண்டுகளுக்கு முன்பாக‌ திராவிட அரசியலில் ஒவ்வொரு தொண்டரும் பேச்சாளராக, எழுத்தாளராக இருந்ததை போல, நாமும் எல்லா தளத்திலும் வேலை செய்ய பழகவேண்டும். நமக்கும் எதிரிகளை, எதிரிகளின் கருத்துக்களை முறியடிக்க எல்லா தளங்களிலும் ஆட்கள் வேண்டும். ஆகையால், எழுதிக்கொண்டிருந்த தோழர்கள் மீண்டும் எழுத வேண்டுமாய் இதன் மூலம் கோருகிறேன்.

  வினவின் தொடர் வளர்ச்சியில், வரும் காலத்தில் ஒரு நாளேடாய், பல தோழர்களின் கூட்டு உழைப்பில் வளர வேண்டும்! வளரும்! வாழ்த்துக்கள்!

 6. உண்மையை தேடும் மனிதர்களுக்கு, மற்றும்மொரு சிந்தனையை, பாதையை கட்டும் வினவின் பணி தொடரட்டும்.

 7. தனி மனித தாக்குதல்களை நிறுத்தாமல் இருந்தாலும் பரவ இல்லை …தனி மனித துதி (சமிபத்திய மங்காத்தா புகழ் ) பாடுவதயவது நிறுத்தினால் வினவின் பாசிசத்துக்கு எதிரான கொள்கையில் அர்த்தம் இருக்கும் ..
  மற்றொன்று ஈழத்தின் நடந்த அக்கிரமத்தை சொல்வதோடு நிறுத்தாமல் , அது நடக்க காரணமாக இருந்த காங்கிரேசொடு நின்ற கருணாநிதியையும், திமூகாவையும் பற்றிய பதிவுகள் மிகவும் குறைவாக உள்ளது .. இதையும் வினவு பதிவு செய்தால் கொஞ்சம் நாடு நிலைமை இருக்கும் .. 🙂

  • கிழிஞ்சுது… ஐயா உண்மைன்னு பேரு வச்சிகிட்டு இப்படி கூசாம புளுக வெக்கமாவே இல்லையா??? இப்பத்தான் மங்காத்தாவுல உங்களுக்கு பதில் எழுதிட்டு வந்தேன், அதுக்குள்ள இங்க வந்து உளர ஆரம்பிச்சுடீங்க… எப்படி அது வினவு திமுகவையும் காங்கிரசையும் விமரிசனம் செய்யல, மங்காத்தாவின் புகழ் பாடியதா…..

   இதுவரைக்கும் வினவு எழுதிய பதிவுகள் ஒன்னேஒன்னையாவது படித்ததுண்டா? தெரியாமத்தான் கேக்கறேன், கருத்து சொல்றதுக்கு முன்னால சரியாத்தான் எழுதறோமான்னு கொஞ்சூண்டு உழைப்பு கூட செலுத்த முடியாத நீங்க எந்த துணிச்சலில் விவாதத்துக்கு வற்றீங்க?????

   சரியான காமெடி பீசுகளப்பா…..

   • ஊசி அண்ணே … நான் வினவுகு புதுசுதான் அண்ணே …நீங்கே இங்கேயே பழம் தின்னு கொட்டை போட்டவர்னு ஒத்துக்கிறேன் ..

    என்ன பண்றது எல்லார்த்துக்கும் புதுசா தானே ஆரம்பிக்கும் ..நீங்க பொறந்த உடனே இவ்வளவு பெரிய அறிவாளி ஆணிங்களா 🙂

    கொஞ்சம் புரியற மாறி இருந்த எங்கள மாறி மாற மண்டைன்களுக்கு தெரியும் நே…நாட் லே என்ன மாறி தான் நெறைய பேர் இருக்காங்க அண்ணே … உங்கள மாறி அதி மேதவிகள் கொஞ்சம் பேர் தான் என்ன பண்றது ..

    கதைக்கு வருவோம் …
    திமுக என்ற இடத்தை சொடுக்கினால் , அவர்களை பற்றியே துரோகம் கலந்த செய்தி கொஞ்சம் கம்மியா இருக்குனு தான் அண்ணே சொன்னேன் …

    அப்புறம் கருது சொல்றது அவன் அவன் சுதந்திரம் …
    உங்கள மாறியே பாராட்டி எழுதுனா நீங்களே உங்களுக்கு பாராட்டிக வேண்டியது தான் … எதிர்முனை கேள்வி இருந்தா தான் எதிலும் சிறப்பான எதிர்காலம் இருக்கும் ..
    இது வினவுக்கு என்னோட யோசனைன்னு கூட சொல்லலாம் .. ஒதுக்குங்க …இல ஒதுங்கிகொங்க 🙂

    • தோ பார்றா, பீலிங்சு….
     மிஸ்டர் பொய், கருத்து சொல்றது வேற, கடைந்தெடுத்த பொய்யை உண்மை மாதிரி எழுதுறது வேற… நீங்க எழுதுன பொய் ரெண்டு

     1) வினவு கருணாநிதி குடும்பத்துக்கு ஜால்ரா அடிப்பது
     2) மங்காத்தா படத்தை கொண்டாடுவது
     இந்த இரண்டு உளரலுக்கான ஆதாரங்கள் இங்கே
     https://www.vinavu.com/2011/09/05/mankatha-movie-review/#comment-48344

     இந்த கடைந்தெடுத்த பொய்களை நிரூபிக்கும் துணிச்சல் இருந்தால் மேலே பேசுங்க இல்லேன்னா சொன்னது பொய்யின்னு கெவுரமா ஒத்துக்கங்க… இது ரெண்டுக்குமே நேர்மை இருக்கணும்…. உங்க்கிட்டா இருக்கா?

 8. Dear Vinavu
  My wishes to your team. To be honest I feel one can get the ” other side of the coin ” by reading your articles. Though I am a so called ” PARPANAN ” I used to read your aticles for the same purpose and gained a lot of knowledge from you. Sorry for my english since I didn’t learned to type in Tamil with this key board.

 9. எனககு அரசியல் அரிச்சுவடி சொல்லிக் கொடுத்தது இரன்டு காரியங்கள் ஒன்று புதிய கலாச்சாரம் அடுத்தது ம க இ க வின் பாடல் வரிகள். இன்று தினமும் வகுப்பு நடத்துவது வினவில் நான் படிப்பது மட்டும் தான்.நாங்கள் வளர நீங்கள் வாழ வேன்டும்.

 10. இந்த ஆண்டிலிருந்து நீங்களாவது கம்யூனிஸ்டுகளின் பின்னடைவுகள் அல்லது கம்யூனிஸ்டுகளின் சறுக்கல்கள் பற்றிக் கேள்வி எழுப்பினால் அவர்கள் போலிக்கம்யூனிஸ்டுகள் (உ-ம்: சீனா) என்ற காரணம் தவிர்த்து சரியான காரணங்களைத் தேடிச் சொல்லுவீர்கள் என நம்புகிறோம். இப்படியே போனால் கம்யூனிஸ்டுகள் ஒரு நாள் சொல்வார்கள் ‘மார்க்சும் ஏங்கெல்சும் போலிக் கம்யூனிஸ்டுகள்’ என்று

  • உண்மையான முதலாளித்துவத்தைவிட போலியான கம்யுனிசம் ஏற்படுத்திய பதிப்பு குறைவே. (குறிப்பு: எனக்கு சீன நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்)

   • உண்மையான முதலாளித்துவத்தைவிட போலியான கம்யுனிசம் ஏற்படுத்திய “பாதிப்பு”
    குறைவே. (குறிப்பு: எனக்கு சீன நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்)

 11. மொக்கைகள் கோலோச்சும் இந்த வலைப்பூ உலகில் வினவு பல்வேறு விடயங்களில் ஆணித்தரமான கருத்துகளையும்,புரிதலையும்,தெளிவையும்,ஈர்ப்பையும் பாடம் போல பல்வேறு விடயங்களிலும் எனக்கு போதித்துள்ளது.வினவில் புகுந்துதான் மற்ற வலைப்பூக்களை உலா வருவது என்ற முக்கியத்துவத்தை கட்டுரைகளும்,குறிப்பாக பின்னூட்ட விவாதங்களும் தந்துள்ளது.இளைய தலைமுறைக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகவே வினவை கருதுகிறேன்.மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

 12. வலைதள மனிதர்களை மட்டும்மின்றி வலைகளுக்குள் சிக்கிகொண்டிருக்கும் மனிதர்களையும் வினவு சென்றடைய வாழ்த்துக்கள்.

 13. ஆயிரம் கட்டுரை கண்ட வினவிற்கும், தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் .நன்றிகள்….

  கடந்த ஓராண்டாக வினவை தொடர்ந்து படித்து வருகிறேன்..

  நூற்றிற்கு தொண்ணூறு சதவீத கருத்து வேறுபாடுகள் கொண்டு கட்டுரைகளை தாங்கி வந்தாலும் வினவை மீண்டும் மீண்டும் அணுகுகிறோம்…

  குறிப்பாக அப்பாவி இந்துக்கள் மற்றும் மேல் சாதியினர் மீதான கடுமையான விமர்சனங்கள். மற்ற சிறுபான்மையினர் மீதான மறைமுக மற்றும் நேர்முக ஆதரவு கட்டுரைகள். தவறே செய்திருந்தாலும் அவற்றை மறுத்து ஒரு சாராருக்கு ஆதரவான நிலைகள்..

  மாற்று கருத்து வெளிப்படும் சில கட்டுரைகளுக்கு பின்னோட்டம் இட்டு கருத்தை சொல்கிறோம்..மற்ற சில கட்டுரைகளுக்கு அமைதியாக பார்வையாளனாய் இருந்து உற்று கவனிக்கிறோம்.. நம்மால் செய்ய இயலாததை நமது தோழர்கள் செய்கிறார்கள் என்ற வகையில்..

  ஆயினும் இது போன்ற கட்டுரைகள் ஒருவிதத்தில் நன்மையே பயக்கின்றன…

  தாங்களது எழுத்துக்கள் மூலம் ஒருவேளை தவறு செய்ய துணியும் / செய்த ஒரு சிலர் திருந்தக்கூடும்,

  நம்மை கேள்வி கேட்க, தட்டி கேட்க ஒரு சில இயக்கங்கள் இருக்கிறது என்ற பயமே அவர்களை தடுத்து நிறுத்தும். அந்த வகையில் வினவின் பணி போற்றுதலுக்குரியது..

  மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ..


  மாக்ஸிமம்

 14. உழைக்கும் மக்கள் நலனை மட்டும் மையமாகக் கொண்ட நமது வினவை எதிர்காலத்தில் சிறந்த மக்கள் ஊடகமாக உருவாக்குவதற்கு நாம் கை கோர்ப்போம்.

  புரட்சிகர வாழத்துக்கள்

 15. வழ்க்ட்ட்குக்கல் & பாரட்டுக்கல் ,உமட்கு பானி மென்மெலும் ட்கொடர வென்டும்

 16. வாழ்த்துக்கள்

  4ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பன் புதிய கலாச்சாராம், புதிய ஜனனாயகம் இதழ்களை படிக்க கொடுத்த போது, படிக்க மறுத்தேன், அப்போது எனக்கு பெரியாரை மட்டும்தான் தெரியும், மார்க்ஸை தெரியாது, பிறகு இயல்பாக மார்ஸியத்தை படிப்பதற்கான தேவை ஏற்பட்டது. மார்கிஸியம் கற்றபின் ஒவ்வொரு செய்தியையும் எப்படி அணுகவேண்டும் என்பதை வினவின் மூலமே தெரிந்துகொள்கிறேன்.

  இதன் சமீபத்திய உதாரணம்: மங்காத்தா குறித்த உங்கள் பதிவும், அதன் பின்னூட்டங்களும். நான் படம் பார்த்துவிட்டு வெளிவந்தவுடன், “என்னடா இது ஒருத்தன் கூட நல்லவன் இல்லியா எல்லாரும் வில்லனாவே இருக்காங்களே, இதற்கும் ரசிகர்கள் கைதட்டுகிறார்களே, பணம்தான் கதாநாயகனா!, இதை எப்படி புரிந்துகொள்வது” என்று குழம்பினேன். உங்கள் விமர்சனத்தை படித்த பிறகு தெளிவான புரிதல் ஏற்பட்டது.

  என்னுடைய ஒரே வேண்டுகோள்:
  வினவில், மார்க்சிய தத்துவம்(வரலாற்று இயக்கவியல் பொருள்முதல் வாதம்), மார்க்சிய பொருளாதாரம் (உபரி மதிப்பு கோட்பாடு), மார்க்சிய அரசியல் (விஞ்சான கம்யூனிசம்) குறித்த கட்டூரைகள் நிறைய வெளியிட வேண்டும். சிரமம் பார்க்காமல் நீங்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் அவை சார்ந்த அறிமுகங்கள் அல்லது சுட்டிகள் இருப்பதும் நலம், ஏனெனில் பின்னுட்டமிடுபவர்களில் சிலர் மார்க்சியத்தை முழுமையாக அறிந்திராததால்தான் அவர்களால் உங்கள் கட்டுரைகளை உள்வாங்கிகொள்ள முடியவில்லை. கேலியும் கிண்டலுமாக பின்னூட்டம் நீள்கிறது.

  வினவுக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்
  நன்றி

  • வினவு தோழர்களுக்கு

   விழிவேந்தன் சொல்வது முற்றிலும் உண்மை. வினவில் சமகால அரசியல்,கலை,இலக்கிய விமர்சன கட்டுரைகள் அதிகம் கிடைக்கிறதே தவிர, மார்க்சிய தத்துவம் சார்ந்த விளக்க கட்டுரைகள் கிடைப்பதே இல்லை. இடதுபுற கீழ் பக்கத்தில் கம்யூனிசம் எனும் தலைப்பில் உள்ள “என்றால் என்ன?”- எனும் இணைப்பு நெடு நாட்களாய் காலியாய் உள்ளது. மற்ற இணைப்புகளிலும் குறிப்பிட்ட நிகழ்வு அல்லது பிரச்சனை சார்ந்த விடயங்களே உள்ளன. வினவை தொடர்ந்து படிக்கும் நபர்களுக்கு இடதுசாரி பார்வை கிடைக்கலாம்,ஆனால் மார்க்சிய தத்துவ அறிவு?

 17. சட்டக்கல்லுரி தொடங்கி சட்டப்பபோராட்டம் வரய் நெடிய பயனம் தான்

 18. வினவின் கருத்தில்லாமல் எதுவும் இல்லை என்கிற நிலையை உருவாக்க அயராது பாடுபடுவோம் தோழர்களே!
  தோழர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!

  • வினவு மென்மேலும் வளர்ந்து, புரட்சிகர அரசியல் பாதையில் தொடர்ந்து பயணிக்க புரட்சிகர வாழ்த்துக்கள்.

   ராஜசூரியன்

 19. வினவிற்கு வாழ்த்துக்கள் , மேலும் சிறப்பான பணியை எதிர்பார்க்கும் -பாலா

 20. முதலில் வினவுக்கு தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  போழுதன்னைக்கும் இதே பொழப்பா கேடந்து எழுதி சாதித்து வீட்டீர்கள் வாழ்த்துக்கள்

 21. அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வினவின் திட்டம், அதற்காக அதனுடைய பயனாளிகள் என்ன செய்ய முடியும் என்பதையும் வினவு தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும்.

 22. வாழ்த்துக்கள் தோழர்களே……தங்களின் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்…….:)

 23. முதலில் எனது வாழ்த்துகள்.

  நடப்பு அரசியல்-சமூக-பண்பாடு தொடர்பான பல்வேறு தளங்களில் வந்துள்ள படைப்புகள் பலரையும் சிந்திக்கத் தூண்டியுள்ளன. இதுவே வினவின் முதற்கட்ட வெற்றியாக நான் பார்க்கிறேன்.

  வினவோடு உடன்படுபவர்கள் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் வினவோடு முரண்படுபவர்களும் அதிகமாகவே இருக்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. முரண்படுவதற்கு முக்கியக் காரணம் ஒவ்வொருவரும் தாங்கள் கருதுவதுதான் சரி என எண்ணுவதுதான். இதற்குக் காரணம் people not talk about the world (reality) but about their perception). ஒவ்வொருவரும் தாங்கள் உணர்ந்ததைத்தான் பேசுகிறார்களே ஒழிய அவர்கள் எதார்த்தத்தை அதாவது உண்மையை பேசுவதில்லை. தாங்கள் பேசுவது உண்மைதானா என்பதை உரசிப்பார்க்கும் உரைகல் இயங்கியல். அத்தைகைய இயங்கியல் தெளிவு இல்லாத காரணத்தால்தான் பல்வேறு கருத்துக்களும் முரண்பாடுகளும் எழுகின்றன. அரசியல்- சாதி- மத- பொதுவுடமை குறித்த பல்வேறு கட்டுரைகளில் வினவுக்கு எதிராக எழுதப்படும் பின்னூட்டங்களும் இதை நிரூபிக்கின்றன.

  கோட்பாடுகளோ நோக்கமோ எதுவும் இல்லாத அடிமட்ட வர்க்கத்தினர்கூட பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். தங்களின் சிந்தனையே தங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதைக்கூட அறியாமலேயே அவர்கள் அப்படி இருக்கிறார்கள்.

  அரசியல்- சமூக- பண்பாட்டுத் தளங்களில் பல்வேறு வர்க்கத்தினரின் சிந்தனைப் போக்கு எப்படி இருக்கிறது, அத்தகைய சிந்தனைப் போக்கிற்குக் காரணம் என்ன, அதில் சரியான சிந்தனைமுறை எது என்பதை விவாதிக்கத் தூண்டும் கட்டுரைகள் போதவில்லை என்பதே எனது கருத்து. மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் படைப்புகள் அதிகம் வரவேண்டும் என்பதே எனது அவா.

  தொடரட்டும் வினவின் பணி. விலகட்டும் அறியாமை எனும் இருள்.
  தொடர்புடைய சில பதிகள்:
  அறிவை ஆண்டவனா கொடுக்கிறான்?
  http://hooraan.blogspot.com/2011/03/blog-post_15.html
  எதார்த்தத்தை நோக்கி….
  http://hooraan.blogspot.com/2010/11/blog-post.html

 24. சீனிவாசன் ,விழிவேந்தன் போன்ற தோழர்களின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.
  ஒவ்வொரு சம்பவங்கள் நிகழும் போது வினவு என்ன சொல்கிறது என்று அறியும் ஆவலை ஏற்ப்படுத்தியுள்ளீகள்.தோழர் மருதையன் போன்றவர்களின் படைப்புகளையும் நிறைய எதிபார்க்கிறோம்.
  தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

  t.சௌந்தர்

  • எனது கருத்தும் இதுவே…மேலும் கம்யுனிச வரலாற்று கட்டுரை அல்லது தொடர் எதாவது இனிமேலாவது வரும் என நம்புகிறேன்..

 25. அரசியல் சீர்கேடுகளை பாதிக்கப்படும் அடித்தள மக்களின் பிரச்னைகளின் ஊடாக அலசி ஆராய்ந்து வெளியிடும் வினவு தமிழின் ஒரு முக்கியமான மாற்று ஊடகம்.

  வாழ்த்துக்களும், மிக்க மகிழ்ச்சியும்!!

  நன்றி – சொ.சங்கரபாண்டி

  • பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி! உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம்.

   சில நண்பர்கள் கோரியபடி மார்க்சிய தத்துவம், அரசியல் நோக்கிலான கல்வி, கட்டுரைகள் இதுவரை வெளியிடவில்லை. இனி அதற்கும் முக்கியத்துவம் அளித்து வெளியிடுகிறோம்.

   தற்போது வினவில் செய்திப் பதிவுகள், செய்திக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், பு.க, பு.ஜ கட்டுரைகள், கேள்வி – பதில் ஆகிய வடிவங்களில் கட்டுரைகள் வெளிவருகின்றன. இதில் மார்க்சிய கல்வி மட்டும் விடுபட்டிருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதையும் வெளியிடுகிறோம். மேலும் இது தொடர்பாக கேள்விகளும் நிறைய வந்திருக்கின்றன. அந்த வடிவிலும் மார்க்சிய கல்வியை வெளியிடுகிறோம்.

   அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்!

 26. ஒரு பதியாலொண்ணு…
  _______________________

  காந்தியக் குல்லாய்.
  கறையில்லாக் கதர்.
  பஞ்சாலான மெத்தை.
  பஜனையிலே லயிப்பு.
  மைதானத் தென்றல்.
  மெல்லிய மெழுகொளி.
  காமிராக் கோணம்.
  காணொளிச் செய்தி.
  திட உணவை மட்டும்
  தின்னத் தவிர்த்த
  உண்ணாவிரதம்.
  ஊழலொழி எனும்
  உன்னதக் கோரிக்கை.
  மேடையிட்டு, மேடையிட்டு,
  மயக்கத்திலேயொரு
  அஹிம்சா வழி
  அறப்போர்.
  ஆரஞ்சுப் பிழிசலை
  அரிசனம் கொடுக்க
  இனிதாய் ஓர் நாள்
  முடிந்தேபோனது.
  கடைசியில் மிஞ்சியவை :
  மனிதாபிமானங்கள்,
  கண்ணீர்த் துளிகள்,
  மன்மோகனின்
  மர்மப் புன்னகை,
  டன் கணக்கில்
  டீம் அன்னாக்கள்
  விட்டுச் சென்ற
  குப்பைகள்!

  ***

  தடியடித் தாக்குதல்.
  தடித்துப்போன
  தழும்புகள்.
  உடைந்துபோன எலும்புகள்.
  சூட்டால் இளகும்
  தார்ச்சாலைக் கொதிப்பில்
  சிந்திச் சிதறிய
  செங்குருதி.
  கைது; சிறை!
  கரங்களில் இருந்தவை
  மெல்லிய மெழுகுகளல்ல.
  முழக்கப் பதாகைகள் :
  ‘விருத்தாசல விவசாயியின்
  நெல்லைத் திருடாதே.
  சமச்சீர் கல்வியை
  சட்டமாக்கு.
  வெட்டியாய்ப் பள்ளிக்கனுப்ப
  வெட்கப்படு.
  படிக்க எங்களுக்கு
  புத்தகங் கொடு.
  பள்ளிக்குள் புகுந்த
  பகற் கொள்ளையரை
  கைது செய்.
  மூவர் தூக்கை
  முற்றிலும் ரத்து செய்.
  தமிழக மீனவனுக்கு
  துப்பாக்கி வழங்கு…’

  கடைசியில் கிடைத்தது
  திருடப்பட்ட நெல்
  மறுக்கப்பட்ட கல்வி.
  நிறுத்தப்பட்ட தூக்கு.
  கூடவே…
  குருதி, தழும்பு,
  காயம், கைது.

  அதற்காகச் சிந்தப்பட்டது
  கண்ணீரல்ல
  குருதி.
  போடப்பட்டது
  குப்பைகளல்ல
  வித்துக்கள்.
  எழுப்பப்பட்டது கோரிக்களல்ல.
  போராட்ட முழக்கங்கள்.
  இதற்குத் தேவை
  மனிதாபிமானமல்ல.
  மனசாட்சி.
  வீரம் செறிந்த மனசாட்சி.

  இந்த வீரப்போராட்டங்களை
  உணர்வூட்டி,
  வித்திட்டு,
  விளக்கி,
  எங்களுக்கு
  எடுத்துரைக்கும் வினவே…

  உன்
  ஏற்றப் பாட்டு
  என்றென்றும்
  தொடரட்டும்.
  நீர் பாயும்;
  நெல் விளையும்…!

  ஒருபதியாலொண்ணு…!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க