முகப்புசமூகம்சாதி – மதம்ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்!

ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்!

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 9

”பசுவை கோமாதா என்றும், காமதேனு என்றும் வணங்குகிற புண்ணிய பாரத பூமியில் – அரசின் புள்ளி விவரப்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடியே பதினேழு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 29,500 பசுக்கள், எருதுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் படுகொலை செய்யப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கு 20 கொலைகள் நடக்கின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களாகவும், இந்த மண்ணின் மைந்தர்களாகவும் உள்ள இந்துக்களுக்கு இது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. நமது நாடு சுதந்திரம் அடைந்து 42 ஆண்டுகள் ஆகியும் இந்தப் படுகொலை நீடித்து வருவது ஏன்? பசுக்கொலை செய்பவர்களில் பெரும்பாலோர் முசுலீம்களாயிற்றே, பசுக்கொலையை நிறுத்தினால் அவர்கள் வாக்களிக்காமல் போய் விடுவார்களோ என்ற  அச்சத்தில் இந்த அட்டூழியத்தை அனுமதித்து வருகிறார்கள்.”

– ‘பசு வதைத் தடைச் சட்டம் ஏன்‘,  இந்து முன்னணி வெளியீடு பக்கம்1.

‘பசுவைக் கொல்வதென்பது நம்மால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத விசயம். ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழ்நாடு பாழாகிவருகிறது. தள்ளுவண்டியில் வைத்து பசுமாமிச பிரியாணி, பசுமாமிச பக்கோடா, பசுமாமிச சூப் என்று விற்கிறார்கள். யார் விற்கிறார்கள் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால், யார் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் – நமது இந்து இளைஞர்களே வாங்கிச் சாப்பிடுகிறார்கள். காரணம் அவர்களுக்குப் பசுவைச் சாப்பிடுவதும் தாயை வெட்டிச்சாப்பிடுவதும் ஒன்றுதான் என்பது தெரியவில்லை.

– ”இந்துக்களுக்கு உரிமை கிடையாதா?” – இந்து முன்னணி வெளியீடு. பக்கம்8

”பசுவைக்காப்போம்! பாரதம்காப்போம். கோயிலுக்குத் தானமாக வரும் பசுக்களைக் கசாப்புகடைகளுக்கு விற்பதைத் தடை செய்யக் கோரியும், பசுக்காப்பகம் அமைத்து பசுக்களைப் பராமரிக்க தமிழக அரசை வற்புறுத்தியும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.”

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது  இந்து முன்னணியின் சுவரெழுத்து விளம்பரம்

 எதற்கும் உதவாத மாடுகள்தான் தற்போது இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. கோவிலுக்குத் தானமாக வரும் மாடுகள் கசாப்புக் கடைக்குப் போகிறது என்பதின் பொருள் என்ன? அவை விவசாய வேலைக்குப் பயன்படாத, மடி வற்றிய, எலும்பும் தோலுமாக உள்ள மாடுகள் என்றுதானே பொருள்? பக்தர்களின் இத்தகைய மோசடிக்கு அரசாங்கம் என்ன செய்யும்?

இருப்பினும் பா.ஜ.க. கூட்டணியின் தமிழகத் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆரம்பித்த உழவர் சந்தைக்குப் பக்கத்திலேயே ஒரு பசு காப்பகம் வைத்திருக்கலாம். மேலும் ‘வயது’ காரணமாக சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவரும் கருணாநிதி இதையும் அனுதாபத்தோடு பரிசீலித்து நிறைவேற்றியிருக்கலாம். அதாவது கருப்புத்துண்டு அரசியலை மஞ்சள் துண்டு அரசியலாக மாற்றிய கலைஞரின் ‘முதிர்ச்சியை’ யாரும் புரிந்துகொள்ள முடியும். இனி ‘பசுக் கொலை’யைப் பரிசீலிப்போம்.

கவனியுங்கள், இந்து மதவெறியர்கள் பசுவைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார்கள் என்றால் காளை மாடுகளைக் கொல்லலாமா? தமிழ் சினிமாவின் தாய்க்குல சென்டிமெண்டைப்போல, மாட்டிலும் பசுவை வைத்து அனுதாப அலை உருவாக்கும் தந்திரம் இது என்பது ஒருபுறமிருக்கட்டும். பசுவைக் கொல்பவருக்கு என்ன தண்டனை? எது கொடுப்பதாக இருந்தாலும் முதலில் இந்துமத வெறியர்களைத்தான் தண்டிக்க வேண்டும். வேத, இதிகாச, புராண உபநிடதங்கள், மனுஸ்மிருதி மற்றும் புத்த – சமண மத இலக்கியங்கள் அனைத்தும் பண்டைய ‘இந்துக்கள்’ மாட்டுக்கறி தின்னும் உலகளாவிய பழக்கத்தைக் கொண்டவர்களே என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

ரிக் வேத தெய்வமான இந்திரன் டன் கணக்கில் ‘பசு மாமிசம்’ விழுங்கியதாக பல சுலோகங்கள் தெரிவிக்கின்றன. இராமாயணம் எழுதிய வால்மீகி தனது ஆசிரம விருந்தினர்களுக்கு மாட்டுக்கறி விருந்தளிப்பது வழக்கம் என இராமாயணம் தெரிவிக்கின்றது. ‘கோமேத’ யாகத்தில் கொல்லப்படும் மாட்டின் பாகங்கள் பார்ப்பனப் பண்டாரங்களின் சமூக அந்தஸ்திற்கேற்பப் பங்கிடப்பட்டதாக நான்கு வேதங்களும் குறிப்பிடுகின்றன.

பிரம்மா பசுவைப் படைத்ததே வேள்வியில் கொல்லத்தான் என்று கூறும் மனுஸ்மிருதி, ‘உலக நன்மைக்காக வேள்வியில் கொல்லப்படும் பசுவை பிராமணன் உண்ணலாம்’ என்றும் தெரிவிக்கின்றது. அதிலும் யாக்ஞவல்கியர் எனும் உபநிடத முனிவர், கன்றுக்குட்டி இறைச்சியைப் பற்றி ஆனந்த விகடனின் சாப்பாட்டு ராமன்களைப் போல ரசனையுடன் விவரிக்கிறார். எனவே பசுவதையைத் தடை செய்யுமுன் அதைப் பிரச்சாரம் செய்யும் வேதம், புராணம், மனுஸ்மிருதி அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.

வேதகாலந்தொட்டு பாரப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட கோதானம், நடத்தப்பட்ட மாட்டுக்கறி வேள்விகளால் விவசாயமே சீர்குலையும் நிலை தோன்றியது. மக்களின் வாழ்வைப் பிணியாய் அரித்துத் தின்ற பார்ப்பனியத்தின் சடங்கு – வேள்விகளை எதிர்த்து அப்போது புத்த – சமண மதங்கள் எழுந்தன.

இம்மதங்களின் பார்ப்பன எதிர்ப்பும் – புலால் எதிர்ப்பும் மக்கள் ஆதரவு பெற்றதன் அடிப்படையும் அதுதான். பின்னர் இம்மதங்களைச் செரித்துக்கொண்ட பார்ப்பனியம் அவர்களது புலால் மறுப்புக் கொள்கையையும் திருடிக்கொண்டது. இருந்தாலும் இந்தியா முழுவதும் பார்ப்பன – மேல்சாதியினரிடையே ஒரே மாதிரியான சைவ உணவுப் பழக்கம் இன்றும் கிடையாது. காசுமீரப் பண்டிதர்கள், வங்கத்துப் பார்ப்பனர்கள், தக்காணப் பார்ப்பனர்கள் போன்றோர் புலால் உணவுப் பழக்கத்தைக் கொண்டவர்கள்தான். புத்தர், மகாவீரரின் முயற்சியால் பார்ப்பனர்களிடமிருந்து மாடுகள் காப்பாற்றப்பட்ட பின்பே பார்ப்பனிய இலக்கியங்கள் புலால் மறுப்பை ஏற்றுக்கொண்டு கறியின் மேல் துவேசத்தையும் பிரச்சாரம் செய்தன. அதற்கும் காரணம் உண்டு.

சாதிப் படிநிலைக்கு வெளியேயும், ஊருக்குப் புறத்தேயும் இருந்த பஞ்சமர்கள், செத்த மாட்டைத் தின்பதற்கும், புதைப்பதற்கும் பார்ப்பனியத்தால் பணிக்கப்பட்டனர். இதை வைத்தே தாழ்த்தப்பட்ட மக்கள் பிறப்பிலும் தொழிலிலும் இழிவானவர்கள் என்பதை பார்ப்பனியம் இன்றுவரை பிரச்சாரம் செய்து வருகிறது. ”ஆவுரித்துத் தின்னும் புலையர்” என்று தாழ்த்தப்பட்டோரை இழிவுபடுத்துகிறது தேவாரம்.

இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைக்குப் பயன்பட்ட மாடு தற்போது முசுலீம் எதிர்ப்புக்கும் பயன்படுகிறது. இந்நூற்றாண்டின் ஆரம்பத்தல் இந்து மத தேசியத்தை உருவாக்க முனைந்த மதவாதிகள்தான் பசுவுக்கு ஒளிவட்டம் போட்டு பசுவதையைத் தடைசெய்ய வேண்டும் எனப் பேச ஆரம்பித்தார்கள். வெள்ளையர்களிடம் அதிகாரமிழந்த மராத்திய சித்பவனப் பார்ப்பனர்களே இதைத் துவக்கினர்.

முசுலீம்கள் மீதான துவேசத்துடன் இந்து மதத்தையும், ஆங்கிலேய எதிர்ப்பையும் உருவாக்க முனைந்த திலகர்தான் மாட்டுப் பிரச்சினைக்கும் பிள்ளையார் சுழி போட்டார். சிவாஜி வழிபாடு, விநாயகர் ஊர்வலம் போன்றவையும் திலகரின் கைங்கரியங்கள்தான் என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அயோத்தி தொடங்கி பசுவதை வரை இந்து முசுலீம் பிரிவினையை வரவேற்ற வெள்ளையர்களும் இத்தகைய போக்குகளை ஊக்குவித்தார்கள். அதன்பின் வட இந்திய நகரங்களில் ‘இந்துக்களின் புனிதச் சின்னமான பசுவை முசுலீம்கள் கொன்று கோவிலில் வீசினார்கள்’ என்ற வதந்தியினால் மட்டும் பல கலவரங்கள் நடந்திருக்கின்றன. பிரிவினைக்குப் பின் 60-களில் சங்கபரிவார வானரங்கள் நடத்திய பசுவதை எதிர்ப்பு இயக்கத்தின் போதும் ஏராளமான கலவரங்கள் நடந்தன.

மாட்டுத் தலையை வைத்து ஆர்.எஸ்.எஸ். கொன்ற மனிதத் தலைகள்தான் இந்நாட்டின் மாபெரும் அவமானம். கேவலம் மாட்டிற்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் இந்து மத வெறியர்கள்தான், ஆயிரக்கணக்காக முசுலீம்களின் உதிரத்தைக் குடித்தவர்கள் என்பது வரலாறு.

ஆர்.எஸ்.எஸ்-இன் கலவரப்பட்டியலில் மட்டுமல்ல, அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாட்டிலும் பசுவதையைத் தடை செய்ய வேண்டுமெனக் கூறியிருக்கிறார்கள். எனவே அவர்களின் முசுலீம் எதிர்ப்புக் கலவரத்தில் பசுவதைப் பிரச்சினையின் பங்கைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தப் பிரச்சினையும் இல்லாதபோது இதைக் கையிலெடுப்பார்கள். கோமாதா, புனிதம், மதம் என்ற போர்வையில் பெரும்பான்மை சமூகத்தினை ஊடுருவும் பசுவதையை அதன் யதார்த்த நிலையிலிருந்து இனிப் பரிசீலிப்போம்.

குரங்கிலிருந்து மாறிய மனிதனின் கை, கால்கள் நேர்த்தியடைந்து, முதுகுத் தண்டு நிமிர்ந்து, மூளை வளர்ச்சியடைவதற்கும் இறைச்சி பெரும் பங்காற்றியது. ஆரம்பகால மனிதனது கடும் உழைப்பிற்கும், போராட்டத்திற்கும் மூளை வளர்ச்சிக்கும் தேவையான புரதத்தை அளித்தது இறைச்சிதான்.

இன்றைக்கு பார்ப்பன – மேல்சாதியினரைத் தவிர உலகமே மாட்டுக்கறியைத் தின்கிறது. மாடு மட்டுமல்ல. ஆடு, குதிரை, ஒட்டகம், நாய், முயல், பலவித பறவைகள் என்று எதெல்லாம் கிடைக்கிறதோ அதெல்லாம் உட்கொள்ளப்படுகின்றன. கால்நடை உற்பத்தி, விவசாய உற்பத்தியில் கால்நடைகளின் பங்கு, காலநிலை, உணவுப்பழக்கம் இவற்றுக்கேற்ப சில வேறுபாடுகள் இருக்கலாம். நாட்டுக்கு நாடு இறைச்சியின் பெயர்தான் மாறுபடுகிறதே தவிர ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்றெல்லாம் கிடையாது.

கணிப்பொறி வேலைக்காக நம்மூர் அம்பிகள் ஈக்களாய் ஒட்டிக் கொள்ளும் அமெரிக்காவில்தான் சிகாகோ நகரம் உள்ளது. இறைச்சிக்காக நவீன ஆலைகளில் தினமும் பல்லாயிரம் மாடுகள் கொல்லப்படும் இந்நகரம் ‘உலகின் கொலைக்களம்’ என்றழைக்கப்படுகிறது. ஆதலால் கோமாதாவைக் கொலை செய்யும் அமெரிக்காவிற்கு இந்துக்கள் போகக் கூடாது என இந்து முன்னணி தடை போடுமா?

பார்ப்பனியத்தின் தீண்டாமைக் கருத்துக்கு அப்பாற்பட்டு, விவசாயத்திற்கு உதவும் மாடுகளைக் கொன்று உண்பது நமது விவசாயிகளிடமும் பொதுவில் இல்லை. அதேசமயம் விவசாயத்திற்கு உதவாத மாடுகளை வீணே பராமரிக்கத் தேவையில்லாத விவசாயிகள் அதை விற்கிறார்கள். அவையே கறிக்காக வெட்டப்பட்டு நாடெங்கும் விற்கப்படுகின்றன. நகர்ப்புறங்களில் மாட்டுக்கறி என்பது ஒரு சாதாரண உணவுதான். ஆடு, கோழி இறைச்சியின் விலை மிகவும் உயர்ந்துவிட்ட நிலையில் மலிவான மாட்டுக்கறிதான் நமது உழைக்கும் மக்களின் புரதத் தேவையை ஈடு செய்கிறது. எனவே கறிக்காக பிராய்லர் கோழி வளர்ப்பது போல, இறைச்சிக்கென்றே மாடுகள் வளர்ப்பது, ஆலைகள் நிறுவுவதற்கு அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.

பசு புனிதமென்றால், மீன் விஷ்ணுவின் மச்சாவதாரம், கோழி முருகனின் அவதாரம், ஆடு கிருஷ்ணன் மேய்த்தது என அனைத்தையும் தடை செய்யலாமா? மாட்டுக்கறி தின்னக்கூடாது என்பவர்கள் கோமாதாவைக் கொன்று தோலை உரித்துச் செருப்பு போட்டு மிதிக்கலாமா? கடவுளே பிள்ளைக் கறியை ஏற்கும்போது, பக்தன் மட்டும் மாட்டுக்கறியைத் தின்னக் கூடாதா? எனவே மாட்டுக்கறி பிரச்சினையில் முசுலீம் எதிர்ப்பும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான துவேசமும் இருப்பதால், சாதியை மறுக்கவும், இந்து மத வெறியர்களின் அவதூறை ஒழிக்கவும் மாட்டுக் கறியைத் தின்னாதவர்களும் தின்று பழகுக!

பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்? பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.

நாம் பசுவதைத் தடைச் சட்டம் நீக்கப் போராடுவோம்!

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. வே.மதிமாறன் அவர்களின் அவன் இவன் விமர்சனத்திலிருந்து…

  “ஒரு ஜாதி இந்துவுக்கு இருக்கிற மாடுகளின் மீதான புனித உணர்வும், மாடுகளை உண்கிற தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான்.

  சைவம் சாப்பிடுகிறவர், அசைவ உணவை சாப்பிடுவதை எப்படி அருவருப்பாக பார்க்கிறாரோ, அதுபோலவே, ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிற ஜாதி இந்து மாட்டுக்கறி சாப்பிடுவதை அருவருப்பாக பார்க்கிறார்.

  சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் மாமிச உணவு மீதான அவர்களின் அருவருப்பை புரிந்து கொள்ள முடிகிறது. ஆடு, கோழி, மீன் சாப்பிடுகிறவர்கள் மாட்டுக்கறியை அருவருப்பாக பார்க்கிற மோசடியை என்னவென்று சொல்வது?

  ஆடு, கோழிகளை பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கிற உணவு பொருளாகவும், மாடுகளை புனிதமாகவும் பார்க்கிற ஜாதி இந்து மனோபாவத்தை, உலகின் எந்த நாட்டு மக்களிடத்திலும் பார்க்க முடியாது

  இந்த மோசடிக்குள்தான் மறைந்திருக்கிறது தீண்டாமைக்கான மூலக்கூறு.”

 2. கோழி முருகனின் அவதாரமல்ல. அது சூரபன்மன். தெரிந்துகொண்டு திட்டினால் விளைவு நன்றாக இருக்கும்.

  • அப்போ சேவலும்,பசு மாடும் ஆரியனோட ஐட்டமா? அதுக்கு தான் இம்புட்டு காண்டா?

 3. Iyooo.. don’t you have any other topics to write. Don’t criticise always hinduism. I don’t think that you have dignity to talk about it…
  We hope that at least talking about hinduism will bring you some brain to your empty head.

 4. பசுவைத் தூக்குவோம்
  பசியடங்குவோம்!
  ***
  ஆ.
  அது…
  அதுவாய்ச் செத்தது.
  ஆதலால்
  ஆவுரி.
  அந்த ஆவை உரி.
  அது…
  அடித்துக் கொல்லப்படவில்லை.
  அக்ரகாரத்துக் கொட்டகையில்தான்
  அது
  அதுவாகவே செத்துப்போனது.
  http://puthiyapaaamaran.blogspot.com/2011/09/blog-post_30.html

 5. பசுக்களைக் கொல்வது மட்டும்தான் வதையா? தனது குழந்தைக்காக (கன்றுக்காக) சுரக்கும் பாலை வேறு மிருகங்கள் (மக்கள்தான்) ஒட்ட உறிஞ்கிக் குடிப்பது வதையில்லையா? சுதந்திரமாகக் காடுகளில் வசிக்க வேண்டிய மாடுகளை (பசு உட்பட) கட்டிப் போடுவது வதையில்லையா? ஏர் உழுவதற்கும், வண்டி இழுப்பதற்கும் பயன் படுத்துவது வதையில்லையா? வேலை வாங்கும் போது முரண்டு பிடித்தால் தார்க் குச்சியால் அடிப்பதும் குத்துவதும் வதையில்லையா? தோட்டத்தில் பயிர்களை பேய்ந்தாலோ அல்லது தனது நிலத்தில் புற்களை மேய்ந்தாலோ அடித்து விரட்டுவது வதையில்லையா? மாட்டுத் தோல் செருப்பு, மாட்டுத் தோல் பைகள் பயன் படுத்துவது பசு வதைக்குத் துணைபோகும் குற்ற உடைந்தையாகாதா?

  பாவம்! பசுக்களுக்கு மனிதனின் மொழி தெரியாது. அதனால்தான் பசுக்கள் நமக்கு பயன்பட வில்லை என்றாலோ அல்லது வேலை செய்ய மறுத்தாலோ அல்லது பால் சுரக்க மறுத்து மடியை உள்ளிழுத்துக் கொண்டாலோ வசை மாறி பொழிகிறோம். இது abusing ஆகாதா?

  இப்படி பசுக்களுக்கு பொதுவாக மாடுகளுக்கு இழைக்கப்படும் வன் கொடுமைகளை பட்டியலிட்டால் வலைப் பூக்கள்கூட வாடி விடும். பசுக்களை வதைக்கக் கூடாது அதாவது உயிர் வதை ஊடாது என்று பேசுவதுதான் நியாயமானதாகும். எறும்பை மிதிப்பதையே பாவம் எனக் கருதும் பாரத தேசத்தில் பசுக்களை மட்டும் இப்படி வதைக்கலாமா?

  மனித வதைச் சட்டங்கள் அமல்படுத்துவதைப் போல மிருக வதை சட்டங்களை முறையாக அமல் படுத்தி பசுக்கள் மற்றும் மிருக வதைகளை தடுத்து நிறுத்தப் போராடுவோம்.

  உயிர் போகும் தருவாயில் பிடிவாதத்தை கைவிட்டு காந்தி மாட்டுப் பால் குடித்து உயிர் பிழைத்ததைப் போல நாங்கள் ஒருக்காலும் கொண்ட கொள்கைக்கு துரோகமிழைக்க மாட்டோம் என சபதமேற்போம்.

  காலில் தோல் செருப்பும் தோளில் தோல் பையும் இருந்தால் அவர்களை கையும் களவுமாகப் பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைப்போம்.

  மாடுகளை வதை செய்யப் பயன் படுத்தும் மாட்டு வண்டி, ஏர் கலப்பைகளை தடை செய்யக் கோரி போராடுவோம்.

  மடியடித்து பால் கறக்கும் பால்கறப்பாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி காவல் துறையை கையில் வைத்திருக்கும் அம்மாவிடம் முறையிடுவோம்.

  கிரகப் பிரவேசம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாக புது வீடுகளுக்குள் பசுக்களை அடித்து நுழைக்கும் மாபாதகச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு இதற்குத் தூபமிடும் புரோகிதர்களை பொது இடத்தில் கட்டி வைத்து கோமாதாவின் கோமியத்தால் குளிப்பாட்டி அவர்கள் செய்த பாவச் செயலுக்கு பரிகாரம் தேடுவோம். பரிகாரம் கிடைக்கவில்லை என்றால் காவல் துறையிடம் ஒப்படைத்து உரிய தண்டனை வழங்கிட அம்மாவிடம் முறயிடுவோம்.

  மாடுகளை சுதந்திரமாக வாழவைக்க டைடல் பார்க்குகளைப் போல கோமாதா பார்க்குகளை ஊரெங்கும் உருவாக்குவோம். அப்படி உருவாக்கப் படும் பார்க்குகளுக்குள் மனித மிருகங்கள் நுழையாமல் தடுக்க ஆளுயர வேலிகளை அமைப்போம்.

  இச்சட்ட-திட்ட அமலாக்கத்தால் வேலையிழந்து பாதிக்கப்படும் அனைவருக்கும் கோமாதா பார்க்குகளில் வேலைக்கு உத்திரவாதம் அளிக்க அதற்குத் தனியாகப் பிறகு போராடுவோம்.

  இவண்,

  கோமாதா எழுச்சிப் பேரவை

  குறிப்பு: இதற்கு எதிர் கருத்து போடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க முறையிடுவோம்.

   • சுய விளம்பரம் என்ற மூலக்கருத்தினை விவாதிக்க புறப்படும்போது உங்கள் இணைப்பையும் அவ்வகையினதாக சுட்டியிருந்தேன்…. அவ்வளவே… மற்றபடி வேறு எங்கும் எப்போதும் நான் இணைப்பு சுட்டிகள் இட்டோருடன் சண்டைக்கு சென்றதில்லை… இணைப்பு சுட்டிகள் படிப்பவர்க்கு ஒரு தொல்லையும் தருவதில்லை… ஆகவே இனி சுட்டிகளை பற்றி சுட்டிக்காட்டமட்டேன்…

 6. எங்கள் வீட்டில் புரட்டாசி மாதம் விரதமாம் ஒரு மாதம் அசைவம் கிடையாது அதனால்
  வண்டலூர் சிக்னல் அருகே உள்ள ஒரு தள்ளுவண்டி கடையில் மாட்டுகறி வறுவல் வாங்கி சாப்பிட்டேன் அருமையான சுவை ஒரு பிளேட் 25ரூபாய் ஜாதி இந்துகளை சொல்வதை தூக்கி குப்பையில் போடுங்கள் அவன் யார் என் உணவை முடிவு செய்ய மகஇக தோழர்கள் நீ யாருடா நாயே எனக்கு அரிசன்னு பேரு வைக்க என்று கேட்பதை போல் நாமும் கேட்போம் நீ யாருடா நாயே என் உணவை முடிவு செய்ய
  (பின் குறிப்பு) இன்று இரவும் வண்டலூர் செல்கிறேன்

  • வண்டலூர் ஜூ லேந்து ஒரு மலைப்பாம்பு தப்பிடுத்தாம். பாத்து சாப்பிடும் ஓய். மலைப்பாம்பு வறுவலாய் இருக்கப் போறது. புரட்டாசி மாசம் வேற. புரட்டிபுரட்டி எடுக்கப் போறது.

   • எந்த பாம்பு கிடைத்தாலும் சாப்பிடறது தான் அதை சாப்பிடுற சைனாகாரன்லாம் செத்தா போய்டான்

 7. உயிர் என்பது எல்லாவற்றுக்கும் பொதுவானது. ஒருவன் பசுவை உண்ணமாட்டான் என்றால் அவன் ஆடு, மாடு,கோழி என எதையுமே உண்ணக்கூடாது. இந்து மதம் பொதுவாகத்தான் உயிரைக் கொல்ல வேண்டாம் என்கிறதே தவிர பசுவைக் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் தமது வசதிக்கேற்ப இதனைக் கடைப்பிடிக்கின்றனர். ஒருவர் அசைவம் உண்கிறார் என்றால் அது அவர் விருப்பம் அதைத் தவறு என்பது முட்டாள்தனம். நான் சைவம் உண்பவன் தான் அதற்காக மற்றவரும் அதையே செய்ய வேண்டும் என நான் எதிர்பார்த்தால் என்னை விட மிகப் பெரிய அறிவிலி வேறு யாரும் இருக்க முடியாது.

 8. /////// மாட்டுத் தலையை வைத்து ஆர்.எஸ்.எஸ். கொன்ற மனிதத் தலைகள்தான் இந்நாட்டின் மாபெரும் அவமானம். கேவலம் மாட்டிற்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் இந்து மத வெறியர்கள்தான், ஆயிரக்கணக்காக முசுலீம்களின் உதிரத்தைக் குடித்தவர்கள் என்பது வரலாறு /////// அருமை .

 9. ஐயா.. தாங்கள் நல்ல கற்பனை வளமிக்கவர் என தெரிகிறது. இல்லையேல் இப்படி தங்கள் கற்பனையை அள்ளி விடுவீர்களா..

  “வேதகாலந்தொட்டு பாரப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட கோதானம், நடத்தப்பட்ட மாட்டுக்கறி வேள்விகளால் விவசாயமே சீர்குலையும் நிலை தோன்றியது.”

  இதற்கு ஏதேனும் வரலாற்று ஆதாரம் உண்டா? இந்தியாவில் தான் உலகிலேயே அதிகமான பசுக்கள் உள்ளன. நீங்கள் கூறும் பற்றாக்குறை எப்போது ஏற்பட்டது?

  “குரங்கிலிருந்து மாறிய மனிதனின் கை, கால்கள் நேர்த்தியடைந்து, முதுகுத் தண்டு நிமிர்ந்து, மூளை வளர்ச்சியடைவதற்கும் இறைச்சி பெரும் பங்காற்றியது”

  அடடா.. சிங்கம் புலி எல்லாம் மனிதனை விட புத்திசாலியாக மாறி இருக்கவேண்டுமே.. ஆதிமனிதன் முதலில் வேட்டையாடி உணவு உண்டு பின்னர் விவசாயம் செய்ய தொடங்கினான் என்று வரலாறு கூறுகிறது. ஆனால் இறைச்சி சாப்பிட்டதால் தான் அவன் மூளை வளர்ச்சி அடைந்தது என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

  “இன்றைக்கு பார்ப்பன – மேல்சாதியினரைத் தவிர உலகமே மாட்டுக்கறியைத் தின்கிறது. மாடு மட்டுமல்ல. ஆடு, குதிரை, ஒட்டகம், நாய், முயல், பலவித பறவைகள் என்று எதெல்லாம் கிடைக்கிறதோ அதெல்லாம் உட்கொள்ளப்படுகின்றன.”

  எனக்கு தெரிந்து தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தோரும் பெரும்பாலானோர் மாட்டுக்கறி உண்பதில்லை. அப்படி ஒரு ஜாதியில் பிறந்தவன் தான் நான். என் உறவினர்கள் யாருமே மாட்டு இறைச்சி உண்பதில்லை. அவர்களும் பசுவை புனிதம் என்றே நினைக்கின்றனர். ஆனால் என்னைப் போன்று சிலர் மாடு, பன்றி முதலியவற்றையும் உண்கிறோம். எவரும் தடைப்போடவில்லை.

  அப்படியே, பன்றிக்கறி தின்பவர்களை அசுத்தமானவர்கள், தீண்டத்காதவர்கள் என் கருதும் இஸ்லாமியரையும் கண்டிக்கலாமே. எப்படி மாட்டுக்கறியை வைத்து ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பிரச்சாரம் செய்கிறதோ, அப்படியே பன்றிக்கறி தின்னும் கிறித்துவர்கள் அசுத்தமானவர்கள் என்று இஸ்லாமியர் பிரச்சாரம் செய்கின்றனர்.

  ஒரு விலங்கின் இறைச்சியை வைத்து அரசியல் பண்ணுபவர் எவராய் இருப்பினும் கண்டிக்கப்பட வேண்டியபவர். இறைச்சி பற்றிய இந்த கட்டுரையில் பொய் புரட்டுகளை அடுக்கி படிப்பவரை முட்டாளாக்கும் வினவிக்கும் இது பொருந்தும்.

 10. விஜய் , பன்றிக் கறி இஸ்லாமியர்கள் தின்னத்தான் தடையே தவிர கிறிஸ்தவர்கள் சாப்பிடிகிறார்கள் என்பதாலேயே அசுத்தமானவர்கள் என்றோ தீண்டத்தகாதவர்கள் என்றோ சொல்லவே இல்லையே 🙂 அட சவுதிலே ஐரோப்பியன் கேம்ப் ( ஏன்னா வெள்ளைக்காரனுக்கு எங்க போனாலும் ஸ்பெஷலா வேணும் எல்லாமே ) சவுதி அராம்கோ கேம்ப் ஆகிய இடங்களில் அந்த பன்றிக்கறி கூட கிடைப்பதாகக் கேள்வி; செவிவழிச் செய்தி – இத ஏன் சொல்ல வாரேன்னா … பன்றிக்கறி சாப்பிடகிற யாரையும் அசுத்தமானவன்னோ இல்லை தீண்டத்தகாதவன்னோ இஸ்லாம் ஒதுக்கிவைக்கலீங்க . இன்னொன்னு பன்றிக் கறி சாப்பிடக்கூடாதுன்னு சொல்றது பன்றியை காக்கனும்னோ இல்லை புனிதமானதோன்னோ கிடையாது பாஸ். இஸ்லாத்திற்க்கும் கிருத்துவத்திற்க்கும் சித்தாந்தத் தகராறுதானே ஒழிய சாப்பாட்டுத் தகராறு இல்லை . வேணும்னா உங்களுக்குக் குறை சொல்ல வேற ஒரு பாய்ண்ட் எடுத்துக் குடுக்குறேன் – இஸ்லாமியர்கள் மட்டும் ஹலால் கறி மட்டும் தான சாப்டுறாங்கன்னு சண்டைக்கு வாங்க பாஸ் 🙂

  • \\விஜய் , பன்றிக் கறி இஸ்லாமியர்கள் தின்னத்தான் தடையே தவிர \\
   ஏன்……………???????? இதையும் கண்டிக்க வேண்டுமா வேண்டாமா? இந்துக்கள் செய்தால் தப்பு… இஸ்லாமியர் செய்தால் இல்லீங்கோ ஜோல்லீங்கனு ஒரு மழுப்பல்… பண்ணி கறி சாபிடுபவனை இஸ்லாம் ஏற்காது என குரானிலேயே இருக்கு தம்பி… அதுக்கு பேரு குரான்ச்மிருதி… 🙂 மற்றபடி செவிவழிச் செய்தி என்பதெல்லாம் பிதற்றலை தவிர வேறு எதுவுமில்லை… சவுதி அரேபியாவில் போய் ஒரு ஷேக் கிட்ட பண்ணி கறி கேட்டுப்பாரு… தலை இருக்காது உடம்புல…

   \\இஸ்லாமியர்கள் மட்டும் ஹலால் கறி மட்டும் தான் சாப்டுறாங்கன்னு சண்டைக்கு வாங்க பாஸ்\\… உன் வீட்டுல கறி சமைச்சு ஒரு இஸ்லாமியனுக்கு கொடுத்துப்பாரு.. தொடுவானா? அது ஹலால் அல்ல தொடமாட்டேன்-நு சொல்வான்… இது உணவுத் தீண்டாமை இல்லையா… இதையெல்லாம் கண்டிக்க வீரமில்லையோ…

   • இஸ்லாமியன் வேற்று மதத்தவன்ப்பா. நீங்க அல்லாரும் ஒரே இந்துன்னு சொல்றீங்கல்லே அதபத்தி பேசுங்க..

    • ம்ம்ம் நாங்க இந்துக்களை பத்தி பேசி அடிசிக்குவோமம்.. இவரு அதுல குளிர் காயுவாரம்… ஏன் நீங்க நாலு முஸ்லிம் சேந்து உங்களுக்குள்ள உள்ள தீண்டாமையை பத்தி பேசுங்களேன்… லெப்பை, மரைக்காயர், அஹமதியர், சன்னி, ஷேக், ஷியா நு 32 உட்பிரிவோட வர்க்க பேதம் வசிருக்கேன்களே அதை பத்தி பேசுங்களேன்… நாங்க கொஞ்சம் சூடாருஹி..ஹி..ஹி ரோம்…

   • முட்டாள் தனமான வாதம். விதண்டா வாதம். இஸ்லாமியர்கள் பன்றிக்கறி சாப்பிடுவதில்லையே தவிர மற்றவர்கள் சாப்பிடுவதை தடுக்கவில்லை. அதில் தலையிடவும் இல்லை. மற்றவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை தடை செய்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பது தான் கேள்வி.

    • மதங்கள் நல்ல காரணத்துக்காக நல்ல நபர்களால் உருவாக்கப்பட்டவை… அந்த அந்த மதத்தின் கோட்பாடுகள் அந்த அந்த மத தோன்றலின் புவியியல் அமைப்பையும், கால சூழலையும் பொருத்தமைந்தவை.. அனால் இன்றைய சூழலிலும் அந்த நம்பிக்கைகளை நியாயப்படுத்த முயற்சிப்பது பகுத்தறிவிக்கு உகந்ததா?

     1 பசுவதை தடுப்பு – பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பால், தயிர் போன்ற உணவுப்பொருளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை போக்க அக்கால சூழலில் பசுக்களை உணவுக்காகவோ, வேதத்தின் பெயராலோ கொல்லுதல் கூடாது என சட்டமாகியிருந்தது… இன்றைய சூழில் தேவையற்றது…
     2 பன்றிக்கறி… கருப்பு நிற சாக்கடை பன்றிகளின் அருவறுப்பை பார்த்து தம் குழந்தைக்கு ஒரு தாய் கூறுவது போலமைந்த கூற்றே இதன்றி வேறல்ல.. உணவுக்காக வளர்க்கப்படும் வெள்ளை பன்றிகள், மற்றும் கொழுப்பு பன்றிகள் அக்கால கட்டத்தில் இஸ்லாம் மாக்கள் அறிந்திலர்…
     3 ஹலால் – ஒரு உயிரை துடிக்க துடிக்க கழுத்தை கத்தியால் கீறி, இரத்த நாளங்களை அறுத்தெறிந்து, முழு இரத்தத்தையும் வடித்து, அல்லாவின் பெயரை ஓதி பின் அதை உண்பது என்ற குரூர மிருக வதைக்கு இன்று சொல்லப்படும் காரணம் குருதி அசுத்தமானதம்… அப்பா இரத்தத்தை பொரிச்சி தின்கிரவனேல்லாம் என்ன செத்தா போய்ட்டான்? … ஹலால் ஆதரவு நண்பர்கள் குருதிக்கொடையை மட்டும் ஏற்கிறார்களே…?
     4 கோள்கள் வழிபாடு – சந்திரனிலும், செவ்வாயிலும் மனிதன் நடந்து சென்று மண்ணள்ளி வந்து ஆராய்ச்சி செய்யும் இந்த காலத்திலும் செவ்வாய் தோஷம், பிறை வழிபாடு என பிதற்றுவது…

     • மனிதன்,

      ஷியா, சன்னி, அஹமதியா போன்ற இஸ்லாமியப் பிரிவுகளில் பெரும்பான்மையாக உள்ள பிரிவு சன்னியாகும். ஈரான், பஹ்ரைன் நாடுகளில் மட்டுமே ஷியா அதிகமாகவும் அஹமதியாக்கள் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மிகவும் சொற்பமாகவும் உள்ளனர். சித்தாந்த ரீதியில் அஹமதியாக்கள் அதிகமாக முரண்படுவதால் ஏனைய இரு பிரிவினரும் இவர்களை இஸ்லாமியர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. மேலும், இவர்களிடையே முரண்பாடுகள் இருந்தபோதிலும் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு மாறிச் செல்வதை அங்கிகரிக்கிறார்களே தவிர தடுப்பதில்லை (இங்கு இந்து மதத்தில் உள்ள சாதி இந்துக்களின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கவும்.) மேலும், இப்பிரிவுகள் யாவும் குரானுக்கு வெளியில் உள்ளவைகள். குரானே இப்பிரிவுகளை ஏற்படுத்தவில்லை (இங்கும் இந்து மதத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும்). மற்ற பிரிவினரின் மசூதிகளில் தொழுவதை தடுப்பதுமில்லை.
      அடுத்து, நீங்கள் குறிப்பிட்ட லெப்பை, மரைக்காயர், ஷேக், ராவுத்தர் போன்றவைகள் இந்தியாவில் ஏற்பட்ட உட்பிரிவுகள் அல்லது சாதி என்றும் குறிப்பிடலாம். இவைகள் இந்தியாவில் மட்டும் உள்ள பிரிவுகள். இச்சாதிகள் இந்தியாவில் இஸ்லாம் பார்ப்பனீயத்திடம் சரணடைந்ததினால் ஏற்பட்டவைகளே தவிர இதற்கும் குரானுக்கும் சம்பந்தமில்லை. இவைகள் தொழிற்பிரிவினையின் காரணமாக ஏற்பட்டவைகள். வெவ்வேறு பிரிவுகளாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் இவர்களிடையே மண உறவு கொள்வதிலோ, மசூதிக்குச் செல்வதிலோ முரண்பாடுகள் இல்லை. இன்றளவும் கூட, கிராமங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கொடுக்கப்படும் விருந்தில் ஒரு தட்டிற்கு 4 நபர்கள் ஒன்றாக உட்கார்ந்து உண்ணுவதைக் காணலாம். அதில் அனைத்துப் பிரிவினரும் கலந்திருப்பர்.
      இரத்தம், பன்னிக்கறி ஆகியவற்றை உண்ணாதே என்று முஸ்லீம்களுக்காக மட்டும் சொல்லப்பட்டது. அதற்காக உண்பவனுடன் சேராதே, அவனுடைய கையை வெட்டு, தோலை உரி என சொல்லவில்லை. எந்த உணவும் கிடைக்காத போது அங்கு பன்றிதான் கிடைக்கிறது என்றால்கூட கடவுளின் பெயரை கூறிவிட்டு பன்றி உண்ண அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மாற்று மத நண்பர்களின் வீட்டில் மாமிசம் விருந்துண்ண நேர்ந்தாலும் கூட கடவுளின் பெயரை கூறிவிட்டு தின்பதற்கும் தடையேதுமில்லை.

      மனிதன், எனக்கும் கூடத்தான் இஸ்லாத்தின் மீது விமர்சனம் இருக்கிறது. அதற்காக மல்லாக்க படுத்துக்கொண்டு காறித் துப்பிக்கொண்டிருக்க முடியாதல்லவா.

      • Qur’an (5:51) – “O you who believe! do not take the Jews and the Christians for friends; they are friends of each other; and whoever amongst you takes them for a friend, then surely he is one of them; surely Allah does not guide the unjust people.”

       5:51 முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் தம்க்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

       Can you explain why this is in quran?

      • DEAR MR.SUJID

       IT IS VERY ENTERTAINING TO DISCUSS ON AVOIDANCE OF BEEF IN HINDU SOCIETY.

       BUT DO YOU DISAGREE THE FACT THAT PORKEATERS WILL COME UNDER THE CATEGORY OF

       KAFIRS-INFIDELS. PORK WAS CONSUMED BY HUNTERS,FOODGATHERERS OF ANCIENT

       INDIA. SO WHY CANT INDIAN MUSLIMS ESPECIALLY TAMIL MUSLIMS WHO APPRECIATE

       PERIYAR FOR HIS ANTI TRADITION AND ANTI SUPERSTITION POLICIES TRY PORK
       ALSO
       INDIA.

    • Did you know what happened in Egypt? With the lame excuse of swine flu, the muslim government slaughtered all pig and hence ruined the livelihood of millions of Christians. get your facts!

     In no way I oppose cow salughter. I eat both beef and pork!

 11. 1999இல் குஜராத்தில் கூலி வேலைக்காக மாட்டின் தோலை உரித்த தலித்களின் தோலை உரித்து கொலை செய்த ஆர்.எஸ்.எஸ். மதவெறி ஓநாய்கள்… மாட்டு கறி சாப்பிட கூடாது என்கிறார்கள்…

  சைவ சமய கடவுள் சிவனுக்கு கறி கொடுத்த கண்ணப்பன் கதை எல்லாம் உண்டு…

 12. //சிவாஜி வழிபாடு, விநாயகர் ஊர்வலம் போன்றவையும் திலகரின் கைங்கரியங்கள்தான் என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.//
  அப்போ மார்க்ஸ் வழிபாடு, செங்கொடி ஊர்வலம் போன்றவை யாரோட கைங்கரியங்கள்?

  • எதையாவது பேசணும்னு பேசுனா என்ன பிரயோசனம், மனிதன்?

   புரட்சிகர கம்யூனிஸ்டுகள் என்னைக்காவது மார்க்ஸ் ‘வழிபாடு’ நடத்தினாங்களா? இல்லை செங்கொடி ஊர்வலம் நடத்தி கல்லெறியிராங்களா, தண்ணியடிச்சுட்டு கலர் பூசிட்டு கெட்டவார்த்தைல திட்டிட்டு போறாங்களா?

   உங்க கருத்த சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்கன்னு தான் சொல்ல வரேன்.

 13. மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கும் , மூளை அளவு மற்றும் திறனுக்கும் ஆரம்ப காலங்களில் மனிதனின் மூதாதையர்கள் உட்கொண்ட பூச்சிகள், தாவரங்கள், இறைச்சி வகைகள் உள்ளிட்ட ‘ quality food ‘ முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

  கூகிளில் தேடிப் பார்க்கலாம்.

  மாட்டிறைச்சி உண்பதை கீழ்மையாக கருதும் பார்ப்பனியத்திற்கும் அதை ஒடுக்கப்பட்டோருக்கும் இஸ்லாமியர்க்கும் எதிராக ஒரு ஆயுதமாக பயன்படுத்தும் இந்துத்துவ வாதிகளுக்கும் எதிராக எதிர்க்கலாச்சாரமாக ஆவுண்ணுதலை ஆதரிப்போம்.

 14. பாசிச இந்து மத சட்டங்களின் புரட்டும் அது சைவ அசைவப் பித்தலாட்டத்தை வைத்து நூற்றாண்டுகளாக நிகழ்த்தி வரும் சமூக அரசியல் ஒடுக்குமுறைகளும் இவளவு வெளிச்சமாகத் தெரிகின்றபோதிலும் கூட இந்த எதிர் கலாச்சார, ஆதிக்க எதிர்ப்பு பண்பாட்டு அரசியலை இங்கிருக்கும் “தலித் கச்சிகளோ” “முற்போக்கு” அமைப்புகளோ எடுக்காமல் இருப்பது ஒரு ஏன்? இது அறிவீனம் மட்டும் அல்ல, அவைகள் எந்த அளவுக்கு நியாயமான போராட்டங்களில் இருந்து விலகி ஓடிவிட்டனர் என்பதும்தான் புலனாகிறது. இதைத் தொடர்ந்து ஒரு அரசியல் எதிர் வினையாகப் புரிந்து வரும் புரச்சிகர அமைப்புகள் பாராட்டுக்குரியான.

 15. மாட்டுக்கறியோ, மரக்கறியோ, பண்ணிக்கறியோ எல்லாம் ஒரு உயிர்க்கறிதான்… சுவை மற்றும் இருப்பு பொறுத்துதான் விலையே… வெகு பழங்கால சமண ரிஷிகள் போல எந்த உயிர்களையும் தின்ன மாட்டேன்னு சொல்லி வெறும் தண்ணி மட்டும் குடிக்கறவன் மாதிரி பேசக்கூடாது…
  அத்தனை பேரையும் மாட்டுக்கறி சாப்பிட சொல்லுவதால் ஒரே ஒரு எதிர் விளைவுதான் ஏற்படும்…
  மாட்டுக்கறி விலை ஏறி போய்டும்… மற்றும் அத்தனை மேல் சாதி பணக்கார கருப்பு பாப்பநீயன்களும் மாட்டுக்கறியை வாங்கி முக்க ஆராம்பிசுருவாங்க…. அப்புறம் சீனா காரன் மாதிரி கரப்பான் பூச்சி, பாம்பு, பல்லி, தேள்-னு அலைய வேண்டியாத போயிரும்… அதுனால இந்த மாட்டுக்கறி பிரச்சாரத்தை பண்ணி ஏழை பாழை வயித்தில அடிக்காதீங்கோ…

  • \\பழங்கால சமண ரிஷிகள் போல எந்த உயிர்களையும் தின்ன மாட்டேன்னு சொல்லி வெறும் தண்ணி மட்டும் குடிக்கறவன் மாதிரி பேசக்கூடாது…//

   வெறும் தண்ணீரை மட்டும் குடித்து உயிர் வாழ்வதாக கொண்டாலும் அதுவும் உயிர்க் கொலைதான்.தண்ணீரில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளனவே. அப்படியே குடித்தால் உயிர்க்கொலை.கொதிக்க வைத்து குடித்தால் சாறு [soup] வைத்து குடிக்கிறார்கள்.அதாவது சமைத்த அசைவ உணவு.

   • எந்த பால் போட்டாலும், கோல் போட்டுறானுங்க…. பய புள்ளைங்க…. 🙂

    • இனிமே பால் போடுற வேலையே வேணாம்… பேசாம கோல் கீப்பர் ஆகிட்டா என்ன… 🙂

 16. மாட்டுல் தார் குச்சி குத்துற மாதிரி குத்து வாங்கிட்டு நமக்கென்ன வந்தததுன்னு இருக்கானே
  மாட்டுகறி தின்னுகிட்டு இருக்கானே ! அவனுக்கு எப்பத்தான் ரோசம் வருமோ?

 17. “மதம்’ என்ற பெயரால் சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எதிராக- மதத்தின் பெயரால் மனிதர்களைப் பிளவுபடுத்தி சுயலாபம் தேடிக்கொண்டிருந்த ஒரு கூட்டம. கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் சாத்திரங்களும் வேதங்களும் மேல்சாதியினருக்கு மட்டுமே சொந்தமானது. தாழ்ந்த வர்ணத்தினர் வேதங்களையோ சாத்திரங்களையோ கற்கக் கூடாது என்பது மட்டுமின்றி, மேல்சாதியினர் அவற்றை ஓதும்போது எதேச்சையாக கீழ்சாதிக்காரன் அதைக் கேட்க நேரிட்டாலும் அவனுக்கு தண்டனை உண்டு. இந்த மகாபாதகச் செயலுக்கு மனுநீதி தர்மம் கூறும் தண்டனை என்ன தெரியுமா? பழுக்கக் காய்ச்சி உருக்கிய ஈயத்தை அந்த கீழ்சாதிக்காரனின் காதுகளில் விட வேண்டும்!

 18. Islam prohibits eating pork, blood, dead animals for healthy reasons. even in case of extreme conditions (in case some one not found any other foo for survival) it allows to eat this prohibited things. Tape worms in pork & red meat will survive even after cooking and cause dreadful diseases. Further islam consider pork as hateful thing not the pork eaters as hateful persons.

 19. அப்படியே அனைவரும் பன்னிக்கறியும் உண்ண வினவு சார் ஒரு வேண்டுகோள் விடுத்தா ரெம்ப நல்லாருக்கும்.

 20. சின்ன புள்ளைல,பள்ளிகூடத்துல நீதிக்கதைன்னு சொல்லி ‘மனுநீதி சோழன்’ கதையை சொல்வாங்க…!!! எதோ அவன் புள்ள ஒரு பசுவின் கன்னுகுட்டியை தேர்காலால் ஏத்தி கொன்னுட்டானாம்…அதனால கண்ணீர்வடிச்ச பசு அரணமனை வாசலில் இருந்த ‘மணியை’ டாங்…டாங்’னு அடிச்சி நடந்த கதையை சொல்லுச்சாம்… அதனால கன்னுகுட்டியை போலவே தன்னோட புள்ளையையும் அதே தேர்காலால் ஏத்தி கொன்னுட்டானாம்.. (பொறம்போக்கு)…!!! எனக்கு அப்போ கேக்கனும்னு தோணல… இப்போ தோணுது…!!!
  ஒரு நாய்குட்டி செத்திருந்தாலோ, ஒரு பன்னிகுட்டி செத்திருந்தாலோ, ஒரு எருமைகுட்டி செத்திருந்தாலோ சோழன் தன் புள்ளையை கொன்னுருப்பானா? கண்டிப்பா கொன்ன்ருக்க மாட்டேன்… அதெப்படி சூடம் அணைச்சி சத்தியம் பண்றேன்னு கேக்குறீங்களா? பதில் ரொம்ப சிம்பிள்…!!! சோழனோட முழுபெயரையும் ஒரு தடவை திரும்ப படிங்க… புரியும்..!!!

  • புறாவுக்காக தன் தொடைச் சதையை அறுத்து கொடுத்த இன்னொரு சோழ மன்னர் சிபிச் சக்கரவர்த்தி. காக்கா, கவுதாரியா இருந்தா அறுத்துக் கொடுத்திருப்பாரோ? புறா வெள்ளையா இருந்திருக்கும், பக்..பக்..ன்னு நாலு ஸ்லோகம் சொன்னதால் சிபி உருகிட்டார். அறுத்துக் குடுத்துட்டார்.

 21. \\ரிக் வேத தெய்வமான இந்திரன் டன் கணக்கில் ‘பசு மாமிசம்’ விழுங்கியதாக பல சுலோகங்கள் தெரிவிக்கின்றன. இராமாயணம் எழுதிய வால்மீகி தனது ஆசிரம விருந்தினர்களுக்கு மாட்டுக்கறி விருந்தளிப்பது வழக்கம் என இராமாயணம் தெரிவிக்கின்றது. ‘கோமேத’ யாகத்தில் கொல்லப்படும் மாட்டின் பாகங்கள் பார்ப்பனப் பண்டாரங்களின் சமூக அந்தஸ்திற்கேற்பப் பங்கிடப்பட்டதாக நான்கு வேதங்களும் குறிப்பிடுகின்றன.

  பிரம்மா பசுவைப் படைத்ததே வேள்வியில் கொல்லத்தான் என்று கூறும் மனுஸ்மிருதி, ‘உலக நன்மைக்காக வேள்வியில் கொல்லப்படும் பசுவை பிராமணன் உண்ணலாம்’ என்றும் தெரிவிக்கின்றது. அதிலும் யாக்ஞவல்கியர் எனும் உபநிடத முனிவர், கன்றுக்குட்டி இறைச்சியைப் பற்றி ஆனந்த விகடனின் சாப்பாட்டு ராமன்களைப் போல ரசனையுடன் விவரிக்கிறார். எனவே பசுவதையைத் தடை செய்யுமுன் அதைப் பிரச்சாரம் செய்யும் வேதம், புராணம், மனுஸ்மிருதி அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.\\

  ஹ்ம்ம்… பொய் சொல்ல வேண்டும் என்று ஆன பிறகு அதில் வரைமுறை என்ன? மனுஸ்ருதி என்ன ஹிந்துக்களின் புனித நூலா என்ன? புனித நூல் என்று ஊறுகாய் போட ஆப்பிரகாமியர்கள் அல்ல…. இது எந்த மனுஸ்ருதியில் இருந்து எடுத்தீர்கள். கம்யூனிஸ்டுகள் எழுதிய மனுஸ்ருதியில் இருந்தா / மேக்ஸ் முல்லர் என்ற கிறித்துவ ஆராய்ச்சியாளர் எழுதிய மனுஸ்ருதியில் இருந்தா 🙂

 22. வேதத்தை பொருத்தவரை ‘பசு’ என்றால் இன்று நாம் சொல்லிகொண்டிருக்கும் ‘பசுமாடு’ அல்ல. ‘பசு’ என்றால் ‘நான்கு கால் விலங்கு’ என்று அர்த்தம். ஆக,நம்மவாள்கள் சமயம் கிடைத்தபோதெல்லாம் கண்ணுக்கு தெரிந்த அம்புட்டு நாலுகால் பிராணிகள் எல்லாத்தையும், தீயில போட்டு ‘கண கண முனு முனுன்னு’ என்னத்தையோ ஓதி பிரிச்சு மேய்ந்திருக்கிறா….பேஸ் பேஸ்… ரொம்ப நன்னா இருக்கு….!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க