privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிலையேற்றம்: பாசிச ஜெயாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

விலையேற்றம்: பாசிச ஜெயாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

-

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் போன்ற மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவைகளின் விலை இரண்டு மூன்று மடங்கு என ஜெயலலிதாவால் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலைவாசி உயர்வு உழைக்கும் மக்களின் கழுத்தை நெறிப்பதாக உள்ளது. தினசரி வருமானம் சராசரியாக 20 ரூபாய்க்கு கீழே உள்ள 80 கோடி மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டில் அடிக்கடி உயர்த்தப்படும் விலைவாசி என்பது மக்களை கடுமையான நெருக்கடியில் தள்ளியுள்ளது.

உழைக்கும் மக்களின் வருமானத்தை, வாழ்வாதாராத்தை உயர்த்தாமால் திட்டமிட்டு அவர்களின் வாழ்வை அழிப்பது போல் உள்ள இந்த விலையேற்றம் தனியார் முதலாளிகள் லாப நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வினை தனியார் பேருந்து முதலாளிகள் வரவேற்பதிலிருந்தே இந்த அரசு தனியார் முதலாளிகளுக்காக செயல்பட்டது நிரூபணமாகி உள்ளது.

இந்த அரசின் உள் நோக்கத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும், தினசரி பேருந்திற்கு மட்டும் 50 ரூபாயக்குமேல் மக்களிடம் பறிக்கும் ஜெயலலிதாவின் தடாலடி அறிவிப்பினை கண்டித்தும்,

திங்கள் 21.11.2011 அன்று காலை 10.30 மணியளவில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளைச் செயலர் தோழர் வ. கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காலை முதல் நூற்றுக்கணக்கான போலீசார், தி.நகரை சுற்றி வளைத்து அந்த சாலைகளில் இருந்த அனைவரையும் விசாரித்து விரட்டியபடி இருந்தனர். தி.நகர் பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க சென்றவர்களை கூட போலீசு விட்டு வைக்கவில்லை. அங்கிருந்த சில சிவப்பு சட்டைகளை பார்த்தவுடன் சமரசம் பேசியது போலீசு.

பால் விலை, பேருந்து கட்டணம், மின்சாரம் கட்டணம் இரண்டு, மூன்று மடங்கு விசம் போல ஏறி உழைக்கும் மக்களை கொன்று கொண்டு இருக்கும் சூழலில் இதற்கு காரணமான தனியார் முதலாளிகளுக்கு உறுதுணையாக இருக்கும் இந்த அரசு உழைக்கும் மக்களுக்காக போராடும் தோழர்களிடம் பேசும் சமரசம்  எடுபடுமா என்ன?

தனியார் முதலாளிகளுக்கு அவர்களின் லாபத்திற்கு விலை போகின்ற இந்த அரசும், அதன் அடியாள் படையான போலீசையும் எதிர்த்து கண்டன முழக்கமிட்டபடி, இந்த விலைவாசி உயர்விற்கு காரணமான தனியார் முதலாளிகளை அம்பலப்படுத்தும் விதமாக சுமார் 300க்கும் மேற்பட்ட தோழர்கள் சீறிபாய்ந்து பேருந்து நிலையத்தின் முன் குவிந்தனர்.

15 நிமிடங்களுக்கு மேல் தோழர்களை முழக்கமிடவோ, ஆர்ப்பாட்டம் நட்த்தவோ அனுமதிக்காத போலீசு அனைவரையும் இழுத்து வண்டியில் ஏற்றிய சிறிது நேரத்தில் பெண்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பரித்து கண்டன முழக்கமிட்டனர். அப்போது அவர்களை பெண் போலீசார் சுற்றி வளைத்து கொண்டு இருந்தபோது குறிக்கிட்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஆர்ப்பாட்டத்தை படம் பிடித்து கொண்டு இருந்த செய்தியாளர்களை பார்த்து, ’நீங்கள் கொஞ்சம் கேமராக்களை நிறுத்துங்கள், இவர்களை நாங்கள் எப்படி வண்டியில் ஏத்துகிறோம் என்று பாருங்கள்’ என காட்டுமிராண்டிதனமாக பேசினார். இதனை பொருட்படுத்தாமல் தோழர்கள் முழக்கமிட்டபடியே இருந்தனர்.

பின்னர் அனைவரையும் கைது செய்து தி.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது. மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விலைவாசி பலமடங்கு ஏற்றி உழைக்கும் மக்களின் கழுத்தை நெறிக்கும் இந்த பாசிச பேய் ஜெயலலிதாவை பார்த்து பம்மி பதுங்கும் கருணாநிதி முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக சொல்லும் விஜயகாந்த், புலம்பிக் கொண்டு இருக்கும் போலிகள் வரை செய்வதறியாது திகைத்து நிற்கும் போது மக்களிடம் போராட்ட குணத்தை தூண்டும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த விலை ஏற்றத்தை வெறுமனே அரசு அறிவிப்பாக பார்க்காமல் நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் மயத்திற்கும் விலைபேசும் நடவடிக்கையாக புரிந்து கொள்வதும், மக்களிடையே அதை பரப்பவும் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்புகள் இத்தகைய கண்ணோட்டத்தோடு மக்களை அணி திரட்டி போராடி வருகின்றன.

ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்:

சென்னை தி.நகர்:

கடலூர்:

தரும்புரி:

மதுரை:

_____________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

  1. போராட்டங்கள்/நிகழ்வுகள்/கருத்தரங்கங்கள் ஆகியவற்றை வினவின் முகப்பிலிட்டு முன்னறிவிப்பு செய்தால், அந்தந்த நகரங்களிலுள்ள தோழர்களும், நண்பர்களும், சமுதாயச் சிந்தனையுள்ள பொதுமக்களும் அவரவர் வசதிக்கேற்ப கலந்துகொள்ள ஏதுவாகும்.

  2. விலைவாசி பலமடங்கு ஏற்றி உழைக்கும் மக்களின் கழுத்தை நெறிக்கும் இந்த பாசிச பேய் ஜெயலலிதாவை பார்த்து பம்மி பதுங்கும் கருணாநிதி முதல் உண்ணாவிரதம் இருக்க போவதாக சொல்லும் விஜயகாந்த், புலம்பிக் கொண்டு இருக்கும் போலிகள் வரை செய்வதறியாது திகைத்து நிற்கும் போது மக்களிடம் போராட்ட குணத்தை தூண்டும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.-உண்மை.சரியான முழக்கங்கள். பெருமைப்படுகிறோம்.முன்னெடுத்து செல்லுங்கள்.தமிழகம் உங்கள் பின்னால் அணிவகுக்கும்.

  3. பால், பேருந்து கட்டணம் ஏற்றம் தனியார்மயம் என்பதைவிட தனியாருக்கு நிகரான கொள்ளைக்காகதான். முதலில் இது பிறகு அது.

  4. இந்திய அரசாங்கம் சொன்ன தினசரி வாழ 32 ரூபாய்க்கு 26 ரூபாய்க்கு பால் வாங்கிட்டேன்.. மீதி 6 ரூபாய்க்கு என்ன வாங்கலாம்..யாராவது சொல்லூங்கப்பா…

  5. எவ்வளவு விலை உயர்த்தினாலும், பேருந்தில் மக்கள் கூட்டம் குறையாது என்பதே இந்த கட்டண உயர்வின் சாராம்சம். குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாய் என்றாலும், 10 ரூபாய் ஆனாலும் மக்கள் பயணம் செய்து தான் ஆகவேண்டும். இது
    மக்களே ஏற்படுத்திக்கொண்ட dependency . மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், இந்த நாட்டில், ஏன் இந்த உலகில், எல்லா பொருள்களின் விளையும் ஏறிக்கொண்டேதான் போகிறது, எறிய விலைவாசி ஒரு போதும் இறங்குவதில்லை. இது உலக உண்மை. இதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

    இது போன்ற விலையேற்றங்களை பொது மக்கள் எதிர்த்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போராடுவதில்லை. என்னால் இதை அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும், இதற்கான போராட்டத்தில் நாம் ஈடுபட வேண்டியதில்லை என்று தனக்கு தானே ஒரு சமாதனம் செய்து கொள்கிறான். யாரவது போராடி விலையை குறைத்தால் அதனால் ஏற்படும் வசதியை அனுபவிக்க தயங்குவதில்லை.

    இந்த விலை உயர்வை மக்களால் நீர்த்துப்போக செய்ய முடியும். போக்குவரத்து கழகங்களும், மின் துறையும், ஆவின் நிறுவனமும் இந்த விலை உயர்வால் எந்த நன்மையும் அடைய போவதில்லை என்பதை மக்கள் அரசுக்கு உணர்த்த முடியும், மக்கள் முயன்றால்.

    நிர்வாக சீர்கேடு கொண்ட நிறுவனங்களுக்கு எவ்வளவுதான் சலுகை அளித்தாலும் அவை மீண்டு வர முடியாது என்பதை அரசுக்கு புரியவைக்க வேண்டும். ஓட்டை பையில் எவ்வளவு காசு போட்டாலும் அவை தங்காது.

    இதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும்?
    பேருந்து பயணத்தை முடிந்த அளவு புறக்கணிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் எக்காரணம் கொண்டும் பேருந்தை பயன்படுத்தாதீர்கள். பால் பயன்பாட்டை சிறிது காலத்திற்கு குறைத்து கொள்ளுங்கள். அல்லது முற்றாக நிறுத்தி விடுங்கள். டிவி சீரியல் பார்ப்பதை நிறுத்துங்கள். மின்சார பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள்.

    இந்த மூன்று நிறுவனங்களும் மக்களை நம்பி தான் இயங்குகின்றன. மக்கள் இதன் பயன்பாட்டை குறைக்கும் போது தானாக நம்ம வழிக்கு வந்து விடும்.

    இரண்டு நாட்கள் ஒட்டு மொத்த மக்களும் முற்றாக இந்த பயன்பாடுகளை நிறுத்துவதால், அதனால் ஏற்படக்கூடிய இழப்பை சரிகட்ட இந்த நிறுவனகளுக்கு பல வாரங்கள் பிடிக்கும்.

    சாட்டை நம் கையில். சுத்துவதும் சுத்தாததும் நம் பொறுப்பு. அதை விடுத்தது அரசிடம் கெஞ்சுவதால் ஒன்றும் நடக்கபோவதில்லை.

    மக்களின் மவுன புரட்சி வெல்லட்டும்.

    • sarodgl,
      //பேருந்து பயணத்தை முடிந்த அளவு புறக்கணிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் எக்காரணம் கொண்டும் பேருந்தை பயன்படுத்தாதீர்கள். பால் பயன்பாட்டை சிறிது காலத்திற்கு குறைத்து கொள்ளுங்கள். அல்லது முற்றாக நிறுத்தி விடுங்கள். டிவி சீரியல் பார்ப்பதை நிறுத்துங்கள். மின்சார பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள்.//

      இது சரியான அணுகுமுறையாக படவில்லை. பேருந்தில் பயணிப்பதும், மின்சாரம் பயன்படுத்துவதும் மக்களின் உரிமை. ஒரு சில நபர்கள் கொள்ள அடிக்க வசதியாக கட்டணங்கள் உயர்த்தப்படும் போது அதை எதிர்த்து போராடி உயர்வை திரும்பப் பெற வைப்பதுதான் சரி!

      இப்படி மக்கள் எல்லோரும் துறவறம் பூண்டு விட்டால் என்ன ஆவது?

    • தோழரே அருமையான உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.பின்னது இரண்டும் ஓகே. ஆனால் வேலைக்கு செல்பவர்கள் பஸ் இல்லாமல் எப்படி செல்வது.எவ்வளவு கூட்டினாலும் பஸ்ஸில் பயனம்செய்யாமல் இருக்க முடியாது என்பதை உணர்ந்துதான் இப்படி உழைப்பவர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள்.குறைந்த அளவில் தான் மக்கள் போராட்டத்தில் குதிக்கிறார்கள் என்றால் மக்களிடத்தில் எந்த அளவிற்கு விழிப்புணர்ச்சி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.ஒருவேளை நாம் தானே தேர்ந்தெடுத்தோம் நாம் தான் அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ?

      • தங்கள் கூருவது உண்மையன ஒன்றுதான்! ஆனால்? தமிழர்கள் செய்யும் தவறு அதிகம் நன்பரே!

  6. //நிர்வாக சீர்கேடு கொண்ட நிறுவனங்களுக்கு எவ்வளவுதான் சலுகை அளித்தாலும் அவை மீண்டு வர முடியாது என்பதை அரசுக்கு புரியவைக்க வேண்டும். ஓட்டை பையில் எவ்வளவு காசு போட்டாலும் அவை தங்காது.//
    100% true statement.

    //இதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும்?
    பேருந்து பயணத்தை முடிந்த அளவு புறக்கணிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் எக்காரணம் கொண்டும் பேருந்தை பயன்படுத்தாதீர்கள். //
    For last 6 months, i am walking to office, up and down 10 kms.

    //டிவி சீரியல் பார்ப்பதை நிறுத்துங்கள். மின்சார பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள்.//
    i agree.

  7. உங்கள்! போரடம் தமிழ் நாடின்! வேற்றி!… இவன்: உங்களில் ஒருவன்!
    நற்றி வினவு!

Leave a Reply to மா சிவகுமார் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க