privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் - வீடியோ!

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!

-

பாகம் – 1

பாகம் – 2

முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்த பிறகு நிலவுடைமையில் தனியுடமையை ஏற்படுத்தினாலும் அதற்கு முன் இருந்து வந்த அரசின் நீர்ப்பாசன – மராமத்து வேலைகளை புறக்கணிக்கிறார்கள். அதனால் 17-18 நூற்றாண்டுகளில் ஏராளமான பஞ்சங்கள் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் இறந்து போகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பிறந்து கேரளாவில் வீணே கலக்கும் முல்லைப் பெரியாறு நதியை தடுத்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு திருப்பி விடும் முயற்சி எடுக்கப்படுகிறது. அதன் வரலாறு இங்கே விரிவாக பதியப்பட்டுள்ளது. இங்கிலாந்து இராணுவத்தில் பொறியாளராக பணியாற்றிய கர்னல் பென்னி குயிக்கின் பெருமுயற்சியால் இந்த அணை திறமையாகவும், நுட்பமாகவும் கட்டப்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் இந்த அணை கட்டும் முயற்சியிலிருந்து இங்கிலாந்து பின்வாங்கிவிட பின்னர் பென்னி குயிக்கின் சொந்த முயற்சியால் அணை கட்டப்படுகிறது. கம்பம் குமுளிக்கு அருகே இருக்கும் இந்த அணையின் நீர் தேக்கடிக்கு திருப்பி விடப்பட்டு அங்கிருந்து குகை – டனல் வழியாக தமிழகத்திற்கு வந்து சேர்கிறது. அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயத் தேவைக்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் இந்த நீர் பயன்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் பயனடைந்திருக்கின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை படத்தில் காணலாம்.

மேலும் அணை குறித்து அன்று போடப்பட்ட ஒப்பந்தகளையும், அதன் விதிகளையும், தமிழகத்தின் பங்கு குறித்தும் படம் விரிவாக பேசுகிறது.

இந்த அணை இருக்கும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக மலையாள மனோரமா பத்திரிகை 1979ஆம் ஆண்டு ஒரு பீதியைக் கிளப்புகிறது. அன்றிலிருந்து கேரள அரசியல்வாதிகள் அணையை மூடுவதற்கு பெரும் பிரயத்தனம் செய்கின்றனர்.

அதன்பிறகு அணையை பலப்படுத்தும் வேலைகள் 90களிலிருந்து ஆரம்பித்து நடக்கின்றன. அது குறித்த அறிவியல் பூர்வமான விவரங்களை இந்த ஆவணப்படம் தெரிவிக்கிறது. மேலும் நில நடுக்கம் ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் விதமாக அணை எவ்வாறு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் விரிவாக தெரிவிக்கிறது.

அடுத்து அணை உடைந்து முழு நீர் வெளியேறினாலும் அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இடுக்கி அணைக்கு போகும் என்பதையும் தர்க்க பூர்வமாக தெரிவிக்கிறது. தற்போது புதிய அணை கட்டப் போவதாக கேரளா தெரிவித்திருப்பது எப்படி ஒரு சதி என்பதையும் நிரூபிக்கிறது. அதன்படி புதிய அணையின் நீர் தமிழகத்திற்கு வந்து சேரவே முடியாது.

இந்தப் பிரச்சினையின் பால் உச்சநீதிமன்றம் அளித்த உத்திரவையும், தீர்ப்பையும் கேரள அரசு மதிக்காதது குறித்தும், உச்சநீதிமன்றமும் அதை தட்டிக் கேட்க முடியாத நிலைமை நீடிப்பதையும் படம் எடுத்துரைக்கிறது.

தொகுப்பாக இந்தப்படம் வரலாறு, அறிவியல் உண்மைகள், கேரள அரசின் சதிகள், தீர்வுகள் அனைத்தையும் எளிய முறையிலும், உண்மையாகவும் எடுத்தியம்புகிறது. இந்தப்படத்தை நாம் விரிவான முறையில் கொண்டு செல்ல வேண்டும். வாசகர்கள், தோழர்கள் இதை உரிய முறையில் மக்களிடையே கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.

அடுத்து கேரள அரசியல்வாதிகள் குறிப்பாக காங்கிரசு மற்றும் போலிக் கம்யூனிஸ்டுகள் இந்த அணை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி மக்களிடையே ஒரு பதட்டத்தை தோற்றுவிக்கிறார்கள். இந்த இருகட்சிகளை நாம் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. இது கேரள மக்களுக்கு எதிரானது என்ற வகையில் கேரள ஓட்டுப்பொறுக்கிகள் பிரச்சாரம் செய்வதில் துளியும் உண்மையில்லை.

இந்த ஆங்கில சப்டைட்டிலோடு வரும் தமிழ் ஆவணப்படத்தை தமிழறியாத பிற மாநில மக்களுக்கும், குறிப்பாக கேரள மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

படத்தை பாருங்கள், பரப்புங்கள்!

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. பென்னிகுயிக் வழி வந்த பொறியாளர்க்கு வணக்கங்கள் பல்.உலகம் முழுவதும் பரப்பி பித்தலாட்ட அரசியல் நடத்தும் கேரள ஓட்டுப்பொருக்கிகளின் முகத்தில் காறி உமிழ்வோம்

  2. மிக்க நன்றி!!!! வினவிடம் இருந்து இக்கட்டுரையை எதிர்பார்த்தேன். தேசிய தொலைக்காட்சிகளில் தமிழகத்தின் நியாயம் மறைக்கப்படுவதைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே!!

  3. 116 ஆண்டுகளுக்கு முன் சுண்ணாம்பு கலவை கொண்டு கட்டப்பட்ட அணை பாதுகாப்பானது, ஆனால் இருபத்தியோறாம் நூற்றாண்டின் தொழில் நுட்பத்தோடு கட்டப்பட்ட கூடங்குளம் அணு உலை பாதுகாப்பற்றது. என்னையா நியாயம் இது. ரிக்டர் ஸ்கேல் 6 பூகம்பத்தை அணு உலை தாங்கும், ஆனால் அணை தாங்காது.

    அறிவியலைக்கூட அரசியலாக்கும் போக்கு வருந்ததக்கது.

    • ராம், 40 நிமிச வீடியோவை பார்க்ககூடவா உங்களுக்கு நேரமில்லை, அதுக்குள்ள அவசரக்குடுக்கைத்னமா இப்படி கருத்து எழுதறீங்களே..? மொதல்ல படத்தை பாருங்க, அப்புறம் பிரச்சனை என்னான்னு கண்டு பிடிங்க!

    • அமாம் அப்படிதான்.ஏனென்றால் தண்ணீரும் அனுகதிர்வீச்சும் ஒன்றல்ல…. அனுகதிர்வீச்சை கட்டுபடுத்தும்,அனுகழிவை மறுசுழற்ச்சி செய்யும் தொழில்நுட்பம் உலகில் எங்கும் இல்லை

    • சரியோ/தவறோ கேரளாவில் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்கின்றனர். . . மதம் வளர்க்க வந்த மா மனிதர் ஜி. யு. போப் ( வீரமாமுனிவர்/ பெஷ்கியார்)/கர்னல் பென்னி குவிக் அவர்களுக்கு உள்ள நன்றி உணர்வில் துளி கூட நம்முடன் ஒரு காலத்தில் ஒன்றாய் வாழ்ந்தவர்களுக்கும் /பலன் பெறுபவர்களுக்கும்/ தலை முறை, தலை முறையாய் இடம் பெயர்ந்து வாழும் சிலருக்கும் இல்லாதது பற்றி.. என்ன சொல்வது…சீ… இதுவும் ஒரு பொழப்பா?

    • எதை எதோடு தொடர்புபடுத்துகிறீர்கள்? அணு உலையும் , அணையும் ஒன்றா? நிலநடுக்கம் ஏற்பட்டால் அணையும், அணு உலையும் ஏற்படுத்தும் பாதிப்புகள் வெவ்வேறு.. அணு உலைக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தும் தொழில்நுட்பம் முன்னேறியநாடுகளான ஜப்பான், ரஷ்யா,அமெரிக்கா,ஜெர்மன் போன்ற நாடுகளிலேயே கிடையாது. ஆகவேதான் அணு உலைகளை மூடக்கோரி உலகம் முழுவதிலும் மக்கள் போராடுகிறார்கள். ஆனால் நிலநடுக்கம் வந்தாலும் அணை உடையாது என்பது பொறியியலாளர்களால் உறுதிசெய்யப்பட்டது, இதை கேரள அரசே உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது..

    • அதெப்படி ராம்.நீங்கள் வாயை திறந்தாலே மக்களுக்கு எதிராகவே பேசுகிறீர்கள். பெரியார் அணையிலிருந்துதான் மைலாப்பூர்,மாம்பலத்துக்கும், மடிப்பாக்கம்,நங்கநல்லூருக்கும் குடிநீர் வரவேண்டும் என்றால் இப்படி பேசுவீர்களா.

      \\ ரிக்டர் ஸ்கேல் 6 பூகம்பத்தை அணு உலை தாங்கும், ஆனால் அணை தாங்காது.//
      7.5 நிலநடுக்கம் வந்தால் அணு உலையை நீங்களும் அப்துல் கலாமும் சேர்ந்து தாங்குவீர்களோ.

      \\அறிவியலைக்கூட அரசியலாக்கும் போக்கு வருந்ததக்கது.//

      மக்களின் வாழ்வாதாரமான பிரச்சனைகளில் கூட இனப்பகை பாராட்டும் கேரளத்தின் போக்கு மட்டும் மெச்சத் தகுந்தா.

    • ராமு அவர்களே. தண்ணிருக்கும் அனுகதிர் வீச்சுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில்

      தெரிந்து கொள்ளுங்கள். அடிப்படை கூட தெரியாமல் அறிவுஜிவி தனமாக கேள்வி கேட்பதாக

      னைக்க வேண்டாம். சுண்ணாம்பு கலவையால் கட்டிய அணையா?தொழில் நுட்பத்தோடு கட்டப்பட்ட அணு உலையா? என்பதல்ல பிரச்சனை இதில் உள்ள அரசியலை புரிந்துகொள்ளுங்கள்

    • //116 ஆண்டுகளுக்கு முன் சுண்ணாம்பு கலவை கொண்டு கட்டப்பட்ட அணை பாதுகாப்பானது, ஆனால் இருபத்தியோறாம் நூற்றாண்டின் தொழில் நுட்பத்தோடு கட்டப்பட்ட கூடங்குளம் அணு உலை பாதுகாப்பற்றது. என்னையா நியாயம் இது. ரிக்டர் ஸ்கேல் 6 பூகம்பத்தை அணு உலை தாங்கும், ஆனால் அணை தாங்காது.

      அறிவியலைக்கூட அரசியலாக்கும் போக்கு வருந்ததக்கது.

      /// இணைக்கப்பட்டுள்ள விடியோவை பாத்தாரா இந்த ராமன்? பெரியாறு அணை உடைந்து விழுந்தால் கூட ஆபத்து இம்மி கிடையாது. ஏனேனில் கீழே இடுக்கி அணை பெரியாறு அணை போல 11 மடங்கு பெரியது. இதைத்தான் நேற்று கேரள அரசு வழக்கறிஞர் நீதிமன்ற்த்திலும் கூறியுள்ளார். இப்படி கேரளா அரசு வழக்கறிஞர் உண்மையை போட்டுடைத்ததில் கேரள அரசியல கட்சிகளின் மூக்குடைந்து தொங்குகிறது.

    • காமேஸ்வரன்கள், ஹரிஹரன்கள், ராமகிருஷ்ணன்கள், சாரங்கன்கள் இவர்களுக்கெல்லாம் தமிழர், தமிழ் நாடு, தாமிழ் மீது என்ன ஒரு வெறுப்பு, வெறி..!?

      முல்லைப்பெரியாறு அணைக்கு ஏன் பாதிப்பில்லை? ஒரு ஜியாலஜிஸ்டின் ஆய்வு இங்கே..
      expressbuzz.com/opinion/op-ed/facts-dispel-dam-fears/345742.html

      அணுவுலை ஏன் ஆபத்தானது?
      yourlife.usatoday.com/health/story/2011-12-06/Radiation-traces-found-in-Japanese-baby-formula/51672392/1

  4. வைகை அணையும், முல்லைபெரியாறு அணையும் இல்லையென்றால், இந்த மாவட்டங்கள் எப்போதோ பாலைவனம் ஆகியிருக்கும். இவற்றை காப்பது நம் கடமை.

    • விஜய் இது நம்மை விட அவருக்கு நல்லா தெரியும், அவரே ஒரு அணு விஞ்ஞானிதான், வருசக்கணக்காக அணுவுலைகள்ல புழங்கியிருக்கார்…

  5. தயவுசெய்து உஙகள் கருத்துக்களை இஙு எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் பேஸ் புக், யு டுயூப் போன்ற ஊடகங்கள் வழி இந்த வீடியோவை பரப்புங்கள். கேரளாக்காரனுக இந்த ஊடகங்கள் வழி பரப்பும் விசமப்பிரச்சாரம் தாங்கமுடியவில்லை…

    இன்னொரு விசயம், அவனுகளாவது நமக்கு நீர் தான் தருகிறார்கள்,நாம் அதை அமுதாக மாற்றி அவ்ர்களுக்குத்தருகிறோம். ஏன் காட்ஸ் ஓன் க்ன்ட்ரீல காய்கறியெல்லாம் விளைவிச்சுச்சாப்பிடவேண்டியதுதானே…அங்க தென்னமரம் மட்டும்தான் வளரும்…

    இங்கு விளைவிக்கப்படும் ஒரு சிறுமணி அரிசிக்கும் தண்ணீர் தான் தேவை…னமக்கு உணவுப் பொருள் விளைவிக்கத்தண்ணி இல்லை என்றால் அவர்களுக்கும் தண்ணி இல்லை…

  6. http://www.facebook.com/pages/Thamizha-Namathu-Anai-Kaapom-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-/259484464100625

    பேஸ்புக்கில் தமிழர்களுக்கு இதன் தாக்கத்தை குறித்து விழிப்புணர் செய்யும் குழும் அணைவரும் சேர்ந்தால் தான் நமது உரிமை பெற முடியும்.

    • Mister tamils, i object all your comments and findings on our dam. all your non-destructive tests are against malayalees. But we believe in destructive tests which confirms our stand. Please allow us to collapse the dam and show the world where the dam really cracks and misbehaves. Give us a choice to have an artificial crack and watch whether crack improves are not? There are lot evidences that Bennie quikk by nature an anti malayalee think tank lived in 19th century. But at present those evidences are in madras. we keralites helpless in this regard. only lord guruvaaruppan knows all the truth.

      comments on behalf of achuchu anandhan

  7. தமிழர் பெரும்பான்மையுள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலையை தமிழகத்துக்கு திருப்பிக் கொடுத்தால் பக்கத்திலேயே புதிய அணையை தமிழகமே கட்டும், டாம்999 ’நிஜத்தில்’ நடக்காமல் இருக்க கேரள அரசு முன்வருமா?

  8. People check wikipedia website to know any thing.
    Article about Mullaperiyar Dam in wikipedia says that “Impact on lives and property downstream in the event of a disaster: The estimated population of the five districts of Kerala downstream is 3.5 million[citation needed]. Villages such as Vallakadavu, Vandiperiyar, Upputhara, Ayyappankoil, Kumili and parts of Kattappana and other parts of Idukki and Ernakulam Districts would be immediately affected, with loss of lives and property”

    Can anyone edit this site?

  9. இங்கு தரப்பட்டுள்ள வீடியோவும், கேரளத்துக்கு சாதகமாக சித்தரிக்கப்பட்டுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களையும் பார்த்ததிலிருந்து ஒரு முடிவுக்கே வர முடியவில்லை. சில சந்தேகங்கள்:

    1. மூன்று கட்ட வலுவூட்டும் பணிகள் நடந்துமுடிந்த பின் அணை உயரத்தை உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலில் ஒற்றுக்கொண்ட கேரள அரசு பணிகள் நிறைவடைந்த நிலையில் திடீரென பல்டி அடித்தது ஏன்?

    2. அணை பாதிகாப்பற்றது என்று ஐ.ஐ.டி ரூர்க்கியின் அறிக்கை (கேரள அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் இது செய்யப்பட்டது) உச்சநீதிமன்றாத்தால் நிராகரிக்கப்பட்டது. நிராகரிக்க உச்சநீதிமன்றம் கூறிய காரணம் யாருக்காவது தெரியுமா?

    3. சமீபத்தில் அணை பலம் குறித்து நடுநிலையான குழுவால் ஆய்வு நடத்தப்பட்டது எப்போது? அந்த அறிக்கையின் முடிவு என்ன?

    4. நிலநடுக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்பைப் பற்று தமிழக தரப்பின் கருத்து என்ன? (நில அதிர்வே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இடுக்கியில் சமீபத்தில் நில அதிர்வு 2 ரிக்டர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போலியான அறிக்கை என்பதற்கு சீஸ்மோகிராபிக் ஆதாரம் உண்டா?)

  10. நீ கூடங்குளத்தில கோடி பிடிக்கிற அவன் அங்க கோடி பிடிக்கிறான் மக்களை கம்யூனிஸ்ட் வேஷம் போட்டு எமத்திங்க கருணாநிதியின் வாரிசுகளே

  11. தமிழக மக்களே! விழித்தெழுங்கள். நாடெங்கும் கேரள விஷமிகள் பொய் ப்ரச்சாரதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் சதியை முறியடிப்போம். வேன்டுமென்றே தமிழகத்தின் நியாயத்தை மறைக்கும் ஆங்கில நாளேடுகளையும், தொலைக்காட்சிகளையும் புறக்கனிப்போம்.நாம் துடிப்புடன் செயல்படும் நேரம் வந்துவிட்டது. முல்லை பெரியாரை காப்போம், கோவை ரயில்நிலையத்தை மீட்டெடுப்போம். கேரள மற்றும் தமிழக ஓட்டுப்பொறுக்கிகளுக்கு பாடம் கற்பிப்போம். ஒன்று கூடுங்கள் தமிழர்களே!!!நமது நீர்,நமது மண்,நமது கலாச்சாரம் காத்திட இணைவோம் தோழர்களே!!

  12. தமிழன், மலையாளி என்று உணர்ச்சி பூர்வமாக இந்த பிரச்சினையை அணுகாமல், சர்வதேச அணைகள் கவுன்சில் (ICOLD) போன்ற அமைப்பைக் கொண்டு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்திய பொறியியலாளர்களின் திறமையில் எந்த ஐயமும் இல்லை என்றாலும் அனைத்து தரப்புக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய நடுநிலையான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
    http://www.icold-cigb.org/GB/ICOLD/mission_icold.asp

    • அதை மலையாளிகளிடம் தான் நீங்கள் சொல்ல வேன்டும்!நம்மைப் பற்றி தரக்குறைவாக பேசிக்கொன்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வட இந்தியர்களும் ஒத்து ஊதுகிறார்கள், பரதேசிகள்.

    • உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கேரள அரசு ICOLD-யின் அறிக்கை தனக்குப் பாதகமாக வந்தால் ஏற்றுக் கொள்ளுமா? க்ராவிட்டி வகையான முல்லை-பெரியாறு அணை அடிவாரத்தில் 138 அடிகள் அகலமும், உச்சத்தில் 12 அடிகள் அகலமும் உடைய சுண்ணாம்பு சுதையால் உருவாக்கப்பட்ட, கான்கிரீட்டால் கவசம் போடப்பட்ட ‘செயற்கைக் குன்று”. இப்பேற்பட்ட அணை நிலநடுக்கத்தால் சேதமுறும் என்றால் இடுக்கி அணையும் (க்ராவிட்டி வகை அணைகளை விட உறுதி குறைந்த ஆர்ச் வகை) அல்லது புதிதாகக் கட்டப் புறப்பட்டிருக்கும் அணையும் தகர்ந்துவிழுவதும் நிச்சயம்.

      புதிய அணை கட்டி, இருக்கும் அணையை இடித்து, முல்லை-பெரியாறு நீர்த்தேக்கத்தையே மேற்க்கில் சில 100மீ நகர்த்தி, நீர்த்தேக்கத்தின் நீர் கிழக்குப் பக்கமுள்ள முல்லையாற்றின் வழியாக ( வைகையாற்றில் இணைகிறது )வெளியேறுவதைத் தவிர்த்து, பெரியாறு நீர் முழுவதையும் இடுக்கி மின் திட்ட நீர்த்தேக்கத்துக்கு கொண்டுபோவதற்கே அணை உடையும் என்று புரளியைக் கிளப்புகின்றனர்.

      நியாயமாக நமக்குச் சொந்தமான பெரியாற்று நீருக்காக நாம் கையேந்திக் கொண்டிருக்கிறோம்.

  13. இதற்கான ஆங்கில மொழிபெயர்பு இருந்தால் அனைவரும் உண்மயை அறிய உதவியாக இருக்கும்

  14. ” உச்ச நீதிமன்றத்தின் அதிகாரமளிக்கப்பட்ட குழு விசாரணை நடத்தி வரும்போது, அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு முடிவு .” – தென் மாநிலங்களில் மொத்த வியாபாரம் செய்பவறாலோ/ அண்டைமாநில மொழியை தாய் மொழியாக கொண்டவறாலோ இம்மாதிரியான முடிவை
    எடுக்க முடியுமா?… சிந்திப்பீர்!… செயல்படுவீர்!

  15. மானிடராய் பிறந்த ஒவ்வொருவரும் பார்த்து பெருமைப்பட வேண்டிய வீடியோ இது!.

    அணையை வலுப்படுத்திய தொழில்நுட்பத்தை விளக்கியது, கல்லணை 1900 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்பதை சுட்டிக் காட்டியது, புதிதாக கட்டப்போவதாகச் சொல்லப்படும் அணையின் உண்மை நிலையை விளக்கியது மனித திறமைகளின் எடுத்தக்காட்டாகவும் இருக்கிறது.

    ‘கொலவெறி’ போன்ற வீடியோக்களில் நாம் சிக்கிக் கொண்டிருக்கும் காலத்தில் இப்படிப்பட்ட வீடியோ மூலம் தொழில்நுட்ப ரீதியாக நிதானமாக விளக்கும் பொறியாளர்கள் நம் நாட்டில் இருப்பது ஆதரவான ஒன்று.

    பகிர்ந்த வினவு தோழர்களுக்கு நன்றி.

  16. பேச்சுவார்த்தை கிடையாது: தமிழக அரசுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு.

    தினமணியில் வந்த பழ. நெடுமாறன் கருத்துக்கு- சில வாசகர் கருத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளன:

    “பழ நெடுமாறன், வைகோ, சீமான், தொல்.திருமா மற்றும் இவர்களைப் போன்றே கேரளத்தில் இருக் கின்ற சில அரசியல்வாதிகளின் அறிக்கைகள் செயல்பாடுகள் அனைத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக தமிழக கேரளா மக்களிடையே பெரும் மோதலை உருவாக்கிடும் வகையிலே இருந்து வருகிறது. இவர்கள் தொடர்ந்து வன்முறை யைத் தூண்டிவிடும் வகையிலேயே பேசி வருகின் றனர். இவர்கள் கருத்தைக் கேட்டு தமிழக முதல்வரின் நடவடிக்கை அமையுமானால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பெரும் தீங்குதான் நேரிடும். கேரளம் மற்றும் தமிழகத்தில் பல்லாயிரக்கணக் கான எண்ணிக்கையில் இரு மாநில மக்களும் வசித்து வருகின்றனர் என்பதை மறந்து விட்டு பிரிவினை எண்ணத்துடன் பேசி வருகின்ற இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நதிகளை தேசிய மயமாக்கிட வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுவானதொரு நதி நீர் பங்கீட்டு மேலாண்மை அமைப்பை உருவாக்கி அதன் வசம் ஒப்படைக்க வேண்டும்.By பராங்குச தாசன்-

    “அண்டை மாநிலத்துடன் பேச்சுவார்த்தை இல்லை என்ற நிலைப்பாடு ,நாம் இன்றும் இந்தியர் இல்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது . By சுதர்சன தாஸ்”

    ” சொல்லாதே யாரும் கெட்டால் எல்லோரும் தாங்க
    மாட்டார்”.. என்று சிலரும் ” உண்மையை சொல்பவன் சதிகாரன் இது உலகத்தின் / இந்தியாவின் ஆள்பவன் அதிகாரம்” என்று சிலரும்.. இது தான் நாட்டுப்பற்றா ?

    அறிக்கைகள் மட்டும் பயன் தருமா? என்ன செய்ய வேண்டும்? சட்டசபை/சர்வ கட்சி கூட்டம் என்பதெல்லம் மக்களுக்கு மறந்தே போகும் நிலையில் நாம் அடித்துக்கொண்டு
    உள்ளோம். ஊரு ரெண்டு/ எட்டு பட்டால் கூத்தாடிக்கு/கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் தானே?. யார் சொன்னது நமக்கு ஆறு/ ஏழு அறிவு என்று?

    எரிவதை பிடுங்குங்கள்- கொதிப்பது தானாக நின்றுவிடும்.

  17. முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமையும் தமிழகத்துக்கு தான் என்ற கருத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை. ஆனால் ஒரு எதார்த்த தமிழனாக இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

    அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு ஊடகங்களின் பீதி கூட்டலின் உச்சம் வேறு. அணு அணுவாக செத்துமடியும் இந்த உயிர்களின் மரண கூக்குரலை தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்கள்.

    அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

    முல்லைபெரியாறு அணையின் பயன்பாடு இல்லாமலே தமிழகம் தாராளமாக தண்ணீர் எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கும்போது எதற்காக பிரச்சனையையே தீர்வாக வலியுறுத்தி வருகிறீர்கள்? ஒரு பிரச்சனைக்கு அதன் மாற்றுவழி ஒன்று தானே உண்மையான தீர்வு.

    கிழக்கு இந்திய கம்பெனியால் முதன் முதலில் பரிசீலிக்கப்பட்ட திட்டம், பென்னிகுயிக் விரும்பிய திட்டம் இது ‘‘கூடுதல் கால்வாய்கள் மூலம் தண்ணீரை நேரடியாக தமிழகத்துக்கு கொண்டு வருதல்’’. பென்னிகுயிக்கிடம் நிதி இல்லாமல் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதே தவிர வாய்ப்பு இல்லாமல் அல்ல. இந்த திட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக அமையும். கேரள மக்களின் தலைக்கு மேல் உள்ள மரண பயத்திற்கு முழுமையான ஆறுதலை தரும்.

    இந்த திட்டத்தை ஏன் பரிசீலித்து செயல்படுத்தக்கூடாது?

    இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு உண்டா? சுமூகமான தீர்வுகள் இருக்கும்போது ஏன் தமிழர்கள் வீண்பிடிவாதம் பிடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை என்றும் தமிழர்களுடையது தான். ஆனால் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையிலாவது கேரள போராட்டக்குழுவின் கோரிக்கையை பரிசீலியுங்கள்.

    இந்த கோரிக்கையில் 1% மேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

  18. கூடன்குளம் அணுமின் உற்பத்திநிலையம் முதலில் கேரளத்தில் தான் கட்டப்பட இருந்தது. ஆனால் அவர்கள் சதி செய்து தமிழகத்தின் தலையில் கட்டி விட்டார்கள். கீழே உள்ள செய்தியை காணவும்.

    Kerala gives nod to N-power plants
    P K SURENDRAN, TNN Nov 18, 2001, 08.59pm IST

    thiruvananthapuram: “heads or tails, we lose. then, why be left behind in reaping the gains?,” wondered kerala power minister kadavoor sivadasan. the minister was referring to the state’s new stance that it was not averse to having nuclear power plant. a few years ago, during the left front’s rule, the state government had rejected the idea fearing nuclear disasters, a la chernobyl. “we will not hesitate to go in for nuclear power projects,” he assured the kerala assembly on friday. lately, there has been a lot of heartburn after kerala lost a nuclear power plant project to neighbour tamil nadu. “the nuclear power plant of koodamkulam in tamil nadu is only 75-km from thiruvananthapuram. if there is an accident, the state capital would also be hit,” is the new line of thinking, supporting n-power plants in the state. blaming the “intellectual-environment” lobby that smothered the proposal of nuclear plant in the state, the minister rued that while tamil nadu reaped the benefits from the plant, kerala may bear the consequence if something goes wrong in the koodamkulam plant. the koodamkulam plant was originally proposed to be set up in the kerala capital. but the opposition to nuclear plant from some quarters helped tamil nadu snatch the opportunity. sivadasan, however, dwelt on the brighter side of it. technology available today make atomic power project near-total safe, he reasoned. with a minuscule risk on the flip side, the temptation of getting cheap energy notched-up the credit side, he added. kerala, after rejecting atomic plant, readily gave green signal for a thermal power plant at kayamakulam in alappuzha district. but soon, the state learnt that thermal power is an expensive proposition. the current thermal power rate being rs 5 per unit as against the prevailing power sale tariff in kerala of 75 paise per unit, kerala finds itself a loser. “we have urged the centre to draw into the central grid the total power produced at the plant,” the minister said. meanwhile, the congress-led ruling coalition has decided to go slow on the ldf-sanctioned chinese-aided 18 mini hydel projects. work on four pilot projects is on. the fate of rest of them hangs in balance. the power minister has indicated that the government would not go blindly on the project “just because the technology is from china”. the work on 14 small and mini hydel projects would be taken up only if the four pilot projects prove viable. according to sivadasan, the rate of interest on the financial package was higher than that offered by the asian development bank. besides, the technology offered too was not unique as the same was available with bhel at more economical rate. for the record, during the past ldf regime, there was a clamour for the chinese micro hydel power projects.

    http://articles.timesofindia.indiatimes.com/2001-11-18/thiruvananthapuram/27241168_1_nuclear-power-plant-thermal-power-power-projects

  19. முல்லைபெரியாறு -மத்திய அரசின் போக்கை கண்டிக்கும் மாநில கட்சிகள், பொது இலக்கை அடையும் கலையை செயல்படுத்த, மற்ற மாநில கட்சிகளிடம் உள்ள இன ஒற்றுமை தங்களிடம் இல்லாதது குறித்து வெட்கப்படவேண்டும். சிறு கட்சிகள் சிசு, குழந்தை/சிறுவர் பருவங்களை கடக்காமல் வாலிபப்பருவம் அடைய நினைப்பதும் /ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதுவும் பல குழப்பங்களுக்கு காரணம். இது உழைக்காமல் லாட்டரி சீட்டில் திடீர் பணக்காரர் ஆக நினைப்பவரை நினைவுபடுத்துகிறது. வாய்ப்புக்கு நன்றி.

  20. MULLAI PERIYAR DAM, THEKKADY. KERALA
    MWL + 155 ft FRL + 152 ft
    100 % FIELD TEST to TEST THE STRENGTH OF DAM at SITE
    By STORING WATER upto + 155 Ft at u/s SIDE OF DAM
    A R C C . WATER WALL IS CONSTRUCTED 100 Ft AWAY ON u/s SIDE OF
    DAM UPTO + 155 Ft WATER LEVEL
    WATER IS STORED UPTO + 155 Ft BETWEEN WATERWALL & DAM to
    TEST THE STRENGTH OF DAM at SITE
    IF THE DAM BREAKS DURING TEST FLOODWATER WILL FLOW IN D/S
    TO PREVENT THIS FLOOD , A R C C . WATER WALL IS CONSTRUCTED
    200 Ft AWAY ON d/s SIDE OF DAM UPTO + 136 Ft WATER LEVEL
    EVEN IF + 120 ft WATER IS STORED TO LOWER FLOOD IMPACT, WATER
    WILL RISE upto 120+[155-120]/3=+120+36/3=+132 ft LEVEL ONLY[4 ft SHORT]
    HENCE NOWATER WILL FLOW TO VALLAKADAVU, even IF DAM
    BREAKS DURING TEST
    SAME FOR BABY DAM
    “ HIGHER LEAKAGE LEADS TO HIGHER STRENGTH IN MASONRY DAM “
    HIGHER LEAKAGE IS STORAGE LOSS
    COST 210+200+60 = 470 Crores 36 Months
    M ANDIAPPAN, M E , Executive Engineer P W D [ Rtd]

  21. மத்திய அரசு எதிலும் தாமதம்: கருணாநிதி

    “இப்புவியில் நான் வந்து செல்வது ஒருமுறைதான். எனவே நான் இங்கே ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும். இதைத் தள்ளி வைப்பதற்கோ அல்லது தவிர்ப்பதற்கோ இடமில்லை. ஏனெனில், மீண்டும் ஒருமுறை நான் இப்புவியில் வரப்போவதில்லை” என்று குறிப்பிட்டார்.- மாமனிதர் பென்னி குவிக்.தேசிய ஒருமைப்பாடு, ஒன்றுபட்ட இந்தியா என்பதற்கெல்லாம் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற வேதனை ஏற்படுகிறது. ” – கே.எஸ்.ஆர் & தினமணி -நன்றி.

    தும்பை விட்டு வாலை பிடிப்பதே நமக்கு பழக்கமாகிவிட்டது. என்ன செய்வது? காலத்தின் கோலம். மிகச்சிறந்த அரசியல் அனுபம் வாய்ந்த தாங்கள் நல்ல கட்டுமரமாக இப்போது பயன்படுவீர்கள் என்று நம்பும் பாமரத் தமிழன்.

    வாழ்க தமிழகம். வாய்ப்புக்கு நன்றி

  22. மலையாளிகளை பற்றி இன்று நேற்று அல்ல. நாம் என்றோ தெரிந்தும் அறிந்தும் வைத்திருக்க வேண்டிய விடயம். அவர்கள் அனைத்து விடயங்களிலும் மிக கவனமாகவும், அலட்சியமின்றியும் தம் இனப்பற்றை எந்த இடத்திலும் நேரத்திலும் விட்டுகொடுக்காதவர்களாய் தான் உள்ளார்கள். அவர்களைப் பற்றி கூற வேண்டுமானால் ஒரு மிகப் பெரிய ஆய்வுக்கட்டுரையே தேவை.

    அதற்கு நேர் மாறான குணங்களை கொண்டவர்கள் தமிழர்கள். அவர்களின் தொடர்புகள் ஐ.நா. சபை வரை உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். அதற்காகதான் ஐ.நா. சபையின் தலைவர் பதவிக்கு கூட அவர்களின் இனத்தை சேர்ந்த ஒருவரான சசி தரூர் மூலம் முயன்றார்கள்.

    அவர்களின் ஆதிக்கம் இல்லாத இடமோ பதவியோ இல்லை என்ற அளவில் உலக அளவில் பரவியுள்ளார்கள்.

    ஆனால் தமிழன் உணர்சிபூர்வமானவன். அறிவுபூர்வமானவன் இல்லை. எளிதில் உணர்ச்சி வசப்படகூடியவன். அதே சமயம், அனைத்து மட்டத்திலும் தனது தொடர்புகளை ஏற்ப்படுத்த தவறியவன். அதே நேரம் பார்பான்கள் (தமிழன் என கூறிக்கொள்ளும்) பல உரிய இடங்களில் அமர்ந்திருந்தாலும் தமிழர்களுக்கு ஆதரவாக சிறு துரும்பையும் அசைப்பதில்லை என்பது தொன்றுதொட்டு அறிந்த ஒன்று.

  23. CHALLENGE to KERALA, Dr SINDHU of KERALA,
    MULLAI PERIYAR DAM
    SOLUTIONS IS AVAILABLE
    TEST THE DAM at + 155 Feet MWL
    COST INR 430 Cr 3 Yrs
    EVEN IF DAM FAILS,
    NO DROP WILL BE at VALLAKADAVU
    MAIN DAM, SHUTTER, BABY DAM
    WILL NOT BE TOUCHED AT ALL
    M ANDY APPAN, M E ,
    EXE ENGR PWD [R]
    CUMBUM THENI Dt

  24. MULLAI PERIYAR DAM, THEKKADY. KERALA

    MAIN DAM, BABY DAM, SHUTTERS WILL NEVER BE DISTURBED
    MWL + 155 ft FRL + 152 ft SILL + 136 Ft
    100 % FIELD TEST to TEST THE STRENGTH OF DAM at SITE
    By STORING WATER upto + 155 Ft at u/s SIDE OF DAM

    A R C C . WATER WALL IS CONSTRUCTED 100 Ft AWAY ON u/s SIDE OF
    DAM UPTO + 155 Ft WATER LEVEL
    WATER IS STORED UPTO + 155 Ft BETWEEN WATERWALL & DAM to
    TEST THE STRENGTH OF DAM at SITE

    IF THE DAM BREAKS DURING TEST FLOODWATER WILL FLOW IN D/S.
    TO PREVENT THIS FLOOD , A R C C . WATER WALL IS CONSTRUCTED
    200 Ft AWAY ON d/s SIDE OF DAM UPTO + 136 Ft WATER LEVEL

    EVEN IF + 120 ft WATER IS STORED TO LOWER FLOOD IMPACT, WATER
    WILL RISE upto 120+[155-120]/3=+120+36/3=+132 ft LEVEL ONLY[4 ft SHORT]
    HENCE NOWATER WILL FLOW TO VALLAKADAVU, even IF DAM
    BREAKS DURING TEST

    SAME FOR BABY DAM
    “ HIGHER LEAKAGE LEADS TO HIGHER STRENGTH IN MASONRY DAM “
    HIGHER LEAKAGE IS STORAGE LOSS

    COST 210+200+60 = 470 Crores 36 Months
    M ANDIAPPAN, M E , Executive Engineer P W D [ Rtd]

    MULLAI PERIYAR DAM

    NET = [ H1*H1_H2*H2 ]/2

    DAM D/S NET %
    +155 +136 +19 (155^2-136^2)
    /155^2
    12012.5 9248 2764.5 23.01

    M Andy Appan, M E 45 Yrs Expert
    Former Executive Engineer , PWD
    Done RCC Capping, Cable Anchor, Vent

  25. தமிழர்களுக்கென்று தனி அப்பா, அம்மா வேண்டுமென்று தானே நாங்கள் கேட்கிறோம்?

    முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை? தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர் இனி இருக்கக்கூடாது.- பாரதிராஜா

    திராவிட அரசியல் வாதி வைகோ அவர்களை யார் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள்? எங்களுக்கென்று தனி அப்பா, அம்மா வேண்டுமென்று தானே நாங்கள் கேட்கிறோம்? இதில் என்ன தவறு கண்டீர்கள்? தர்மம் ஒரு நாள் வெல்லும். வாழ்க பத்திரிகை தர்மம். வாழ்க வையகம்.

  26. தமிழர்கள் அரசியலில் சம பங்கும், மலையாளி/தெலுங்கர்/கன்னடர் என இனத்தகுதி அடையும், இரட்டை கலையை கொஞ்சம் கற்று கொடுங்களேன்.???

    தமிழகப் பிரச்னைகளுக்காக மீண்டும் போராட்டம்: விஜயகாந்த்

    தமிழர்கள் நலன் காக்கும் இந்த விஷயத்தில் -உங்களுக்கு என்ன வேலை???

    ஹி… ஹி….ஹி… என்னங்க அண்டைமாநிலங்களில் நூற்றாண்டுகளாக வாழும் தமிழர்கள் தனது ஏழு அறிவை பயன்படுத்தி அரசியலில் சம பங்கும், மலையாளி/தெலுங்கர்/கன்னடர் என இனத்தகுதி அடையும், இரட்டை கலையை தமிழர்களுக்கு கொஞ்சம் கற்று கொடுங்களேன். வாழ்க தேசியம்.

  27. நாமே நமக்கு எதிரிகள். எப்படி எளிதில் வெற்றிக்கான முடியும்???

    “”கொதித்துப் போராடும் தமிழக மக்களின் உணர்ச்சி விரைவில் வடிந்துவிடும் என கேரள அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். தமிழகக் கட்சிகள் ஒருபோதும் ஒன்றுபட்டுப் போராடப்போவதில்லை என மத்திய அரசு நினைக்கிறது.””- பழ.நெடுமாறன்.

    தமிழ் நாட்டில் நாமே நமக்கு எதிரிகள். எப்படி எளிதில் வெற்றிக்கான முடியும்? ஒத்துழையாமை / ஒற்றுமைக்கான அறிகுறி உண்மையிலேயே இன்னும் வந்ததாகத் தெரியவில்லை.

  28. PLEASE ATTACH MY CALCULATED STATEMENT TO TEST THE DAM at *155 Feet WATER LEVEL
    CONSTRUCTION , BENENEFITS FIGURES / IMAGES
    OR
    GET ME ALL E MAIL ID I WILL SEND IT
    NOW BRIEF IS ON OKAY THANKS
    MAY I KNOW NAME OF EDITOR, LOCATION, NATIVE, QUALIFICATION
    CONSULT Er RVS VIJAYAKUMAR, Er A VEERAPPAN ON THIS
    REPLY
    ANDY

  29. For all those who claim here that Tamizh Brahmins did nothing for TN,why the fuck would they do anything for u?

    You give them nothing,nor peace of life,not opportunities,nothing.You hate them from the bottom of your heart,gut and intestine but we guys despite all these blockades,work hard,get into good positions and all this fighting the bullshit the others give day in and day out and after all this sweat and blood,we have some komalis here saying why Paarpans do nothing for TN.

    Who was Venkatraman?who was

    My father was a SBI manager and served all across TN,u can go and ask anybody in all the branches in TN about what kind of man he was,he helped everyone regardless of their caste,creed and sect when he could have been caste crazy and do nothing.

    In Kerala also there are big divides based on religion and caste and the atrocities that happened there are much more than what happened here.But despite all this they are united,because they think positively and move on and the biggest deal is those movements brought real empowerment to the affected parties,the ezhavas.Thats why they are going forward in life.They dont have hate.

    What happened here?The real offenders the middle castes got away with nothing and continue to oppress the dalits and people completely unconcerned with this whole thing,the brahmins are targeted.

    This is the answer answer to your ara-vekkadu statement.

  30. Mr.Subramanian,
    Please go through this intersting articlce posted in http://bruno.penandscale.com/search/label/Racism
    Racism and solution:
    This scene took place on a British Airways flight between Johannesburg, South Africa & London.
    A white woman, about 50 years old, was seated next to a black man.
    Very disturbed by this, she called the air hostess. “You obviously do not see it then?” she asked. “You placed me next to a black man. I did not agree to sit next to someone from such a repugnant group. Give me an alternative seat.”
    “Be calm please,” the hostess replied.
    “Almost all the places on this flight are taken. I will go to see if another place is available.”
    The hostess went away & then came back a few minutes later.
    “Madam, just as I thought, there are no other available seats in Economy Class.
    I spoke to the captain & he informed me that there is also no seat in Business Class. All the same, we still have one place in First Class.”
    Before the woman could say anything, the hostess continued.
    “It is not usual for our company to permit someone from Economy Class to sit in First Class. However, given the circumstances, the captain feels that it would be scandalous to make someone sit next to someone so disgusting.”

    The Hostess turned to the black guy, & said, “Therefore, Sir, if you would like to, please collect your hand luggage, a seat awaits you in First Class.”

    At that moment, the other passengers, who’d been shocked by what they had just witnessed, stood up & applauded.

    This is a true story. If you are against racism, please send this to all your friends; please do not delete it without sending it to at least 1 person.
    Welldone British Airways.

    Mr.Subramanian- After 64 years of Indepence- Brahmins are not ready to share, Archakar services to GOD alnog with our people ( Temple- Financed,constructed by us.)SHAME TO REPUBLIC OF INDIA / BRAHMINS.

    YOU WILL NOT SPEAK NOW.

  31. u really want to be an archakar now?

    isn’t it a government appointed post?if the govt says that guy ll be an archakar,can anyone stop him and why doesn’t the govt build a new temple and appoint other people as archakars?

    In my native village,brahmadesam which has a huge shiva temple built by rajaraja chozhan.It is the temple that u saw in Radhika’s Annamalai serial and mamadesam serial.

    But all our religious offerings and respect is done at another temple by the banks of the river fully financed by my grandfather and the priest is not a brahmin,they belong to a different caste.

  32. And nobody is stopping the government from building new temples and promoting tourism and appointing anybody as the archakar.And dont have negative emotions.

    Pirpaduthapatta makkal inaikku ias,ips,politics ellathulayum irukkanga.avunga nenacha nalla velai seyya mudiyum.

  33. நீங்கள் தமிழன் என்று நினைத்தால் தமிழில் பதிலளித்து இருக்காலாமே???
    நாட்டில் கலவரம் என்று வரும் பொது தமிழ் இன உணர்வு வரும்..

    அர்ச்சகர் பணி சாதரமானது என்றால் அதை பங்கு போட்டுக்கொள்ள உங்களுக்கு ஏன் கசக்கிறது? உங்கள் தம்புராசுக்கு சொல்லுங்கள் தடையை நீக்க.

    சின்ன சின்ன கோயில்களில் உள்ள நடைமுறையை சொல்லி குழப்பவேண்டாம். அங்கேயும் வருமானம் கூடியவுடன் எப்படியும் நுழைந்து விடுகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சாமி பக்தி இருப்பதாக காட்டி கொள்ளும் உங்களுக்கு சாமி பயமும் இல்லை; அதர்ம பயமும் இல்லை. ஆண்டவன் உங்களை கோயிலுக்குள் சேர்க்கக்கூடாது;முடியாவிட்டால் ஆண்டவன் வெளியேறி விடவேண்டும்.

    கோயில்களில் ஆண்டவனை பூஜை செய்வதற்கு பிராமணனுக்கு ஒரு நீதி- மற்றவர்களுக்கு ஒரு நீதியா??? வெட்கப்படவேண்டும் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் இந்நிலை தொடர்வதற்கு.

    பிராமணன், பிராமணன் என்று நினைப்பதை நிறுத்தி தமிழன்/தெலுங்கன்/கன்னடன்/மலையாளி/ குஜராத்தி/மராத்தி/….என நினைக்கவும். தமிழ் பிராமனுக்கென்று
    தனி பாஷை, கலாச்சாரம், தனி அடையாளங்கள்- நாங்களா ஒதிக்கி வைக்கிறோம். சத்யம் பேசுங்கள். ஞாயமாக நடந்துகொள்ளுங்கள். முடிவில் தர்மம் தான் வெல்லும்.
    முடிவில் தர்மம் தான் வெல்லும்.முடிவில் தர்மம் தான் வெல்லும்.

  34. I am typing in english because the font translation is not good.I did not grow up in a i dont know tamil kind of a family.

    Enakku paaarpanar alladhavara archakar aakurathula endha prachanayum illa.But one question,ella velaikkum reservation vechirukeenga,idhayavadhu summa vidungalein?

    Enakku yaar kittayirundhum tamizhannu certificate thevai illa.infact enakku kadavul nambikkaye kidyatahu and my family is very orthodox shaivite believers.

    i like the temples of my native place.i go there,but not so religious myself.

    I dont have any great pride as a brahmin and all but one thing is true,the way regular brahmin boys get treated in madras is very bad.After that treatment even a neutral brahmin ll become conservative.

    enga sondha orru tirunelveli mavattam,both parents from there.Enakku naadu,mozhinnu ellam periya patru kedyatahu.

    I like Tirunelveli,Thootukudi,Kanyakumari and southern Kerala comprising Trivandrum and Kollam.we share a common culture and despite being divided as states and languages,we r the same people.I have maximum pride of belonging to that area.

    I like South Madras, especially Kodambakkam,Vadapalani,Ashok Nagar,KK Nagar,West Mamabalam.I grew up there in the 90s and unlike today back then it was a very normal relaxed place and not posh and all.

    And last u have no idea about me or my family or tirunelveli brahmins as such.We are not like the ones in Thanjavur and in our villages we share a close relationship with everyone.I dont see this behaviour of abusing brahmins in my native place and people hard working,forward looking and genuinely nice.My family is loved by our tenants/leasors of our land and we still share a great relationship with them even after selling the land 30 years ago.

    Not only tamizh brahmins,there are many many such people in TN like that.telugu speaking naickers/naidus,sourashtra people in madurai,many native tamizh marathis and even culture and customs vary from district to district but brahmins alone are the vandherigal,mathavunga ellam bhoomi porandha vudane nera vandhu ukkanthuttanga.

    Enakku tamizh ina unarvu ellam nerayave irukku aana adhuverum oru unarvu thaan engira arivum irukku,ungalukku illai.chinna prachanaiyai kooda alavukkua adhigamaga unarvu poorvamaga aaraichi seidhu,periyadaaki vidukireerkal.

    I am reacting as a brahmin because u r identifying me as one or people as such.If you stop talking abt it,i wont be replying like this.

    And naan thaan sonnane,govt pudhusa koyil kattatum,courtla vaadhattum.enna ella judgeum brahmanargala enna?

    adhulayum thaan reservation irukkulla,appuram enna?

    Neenga thaan odhukki vekkareenga,neengale thaan.Dravida iyakkame,nadu nilai saadhigal brahmanargalai odhukki vittu tamizhnaatin aatchiyay pidikka seidha sadhi thaan.indha iyakkathinaal pipaduthapattor evarum payan adayavillai,naatin aatchoyum kooda seeradayavillai.

    what u see in the movies is also representative of the people’s mindset.In no other place is a set of people so clearly hated with such vindictive hatred.

    I ask every single tambram person,i meet to move out of TN.It is a godforsaken place with no sense of justice.

  35. தூங்குபவனை எழுப்பிவிடலாம். தூங்குபவனை போல நடிப்பவனை எழுப்ப முடியாது.

    அன்றைய கால கட்டத்தில் சாதி உயர்வு/ தாழ்வு மனப்பான்மையிளுருந்து வெளிவர ஒரு கூட்டணி பிராமணர் அல்லாத கீழ் சாதி மக்களை பயன்படுத்திக்கொண்டது.

    அன்று பிராமனரல்லாதவர்களிடமிருந்து, தண்ணீர் தெளித்த பின்னரே பொருளை பெற்றுக்கொண்டனர் பிராமணர்கள்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் இன அடையாளம் தேவைப்படுகிறது. இந்திய பிராமணர்கள் தனக்கென ஒரு கூட்டமைப்பு வைத்து, உயர்த்திக்கொள்ள உதவுகிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது.

    நீங்கள் வட இந்தியரிடம் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் போது; அவர் காஷ்மீர்,
    பஞ்சாபியோ, குஜராத்தி பிராமின் ஆக இருந்தால்- உங்களை தமிழ் பிராமினாக காட்டிக்கொள்வீர்கள், அவர் பிராமனரல்லாதவராக இருந்தால் சிம்பிளாக ப்ரம் தமிழ்நாடு என்று சொல்வீர்கள்.

    நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது. நீ அரிசி எடுத்துக்கொண்டு வா- நான் உமி எடுத்து வருகிறேன் ஊதி,ஊதி சாப்பிடலாம் என்பதைப்போல. எங்களுக்காக அரசு கோயில் கட்டிகொடுத்து அதில் நாங்கள் செல்ல வேண்டுமா?? அப்புறம் நாட்டை காலி செய்து அந்தமான்- நிகோபார் போகச்சொன்னாலும் சொல்வீர்கள்.

    போராடி தனி ஒதுக்கீடு பெற்றபின்னரும் 27% கோட்டாவில் – 5% கூட எட்டவில்லை என obc தகவல் சொல்கின்றன. நல்லதை நினையுங்கள். நல்லது நடக்கும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

  36. 27% quota yen fill aaga mattengudhu?Neenga yoseenga.

    Yenna,primary educationla investmentey illa.Arasu palligalin tharam anaivarukkum theriyum.Adha modhalla sari seyyunga.

    Appuram naan yaar kittayume,naan brahmin,tamizh appadi ellam sollikka matten.My looks are pan indian.I can be from anywhere but when i mention my name,people figure that i should be tamizh.In fact even in TN most people r shocked when i tell them,i am an iyer.My tamizh is neutral,i say ch,not S or Sh.

    I told u clearly,i am a proper tirunelveli origin guy and thats the identity that gives me maximum pride.

    well,nonetheless the idea here.stop hating upon someone for so long.the real issues are far more important and hating upon the brahmins was just a ploy mu.ka used to fool the whole 6 crore people.

  37. நல்லதை நினைப்போம் நலமாக வாழ்வோம். ஒன்று படுவோம்- சாதிப்போம். வாழ்க வளமுடன்!!!வாழ்க வையகம்!!!

    ( 5% கூட எட்டவில்லை என்பது சென்ட்ரல் GOVT வேலைகளில் இந்திய மக்களின் OBC
    சாதிகளின் வாய்ப்பு இடங்களை குறித்து).

  38. sari,central govtaave irukkatum,but adhaan yennu kekkuran?

    I know the plight of students who get reservation and come to IITs and IIMs.They r much better off getting in somwhere on their own merit.

  39. தமிழகத்தில் பல ஆண்டுகளாக ரிசர்வேஷன் முறை கடைபிடிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன்னேற்றத்தை கீழ் வரும் தகவல் மூலமாக அறியவும்:

    Monday, June 30, 2008
    What is the Community wise Composition of Top 500 Rankers in Tamil Nadu
    Counseling for Admission to MBBS / BDS in Tamil Nadu starts from 04.07.2008 and Director of Medical Education, 162, Periyar Road, Chennai has releasted the counselling schedule The Community of the Top 500 Rankers can be seen from that
    Of the Top 500 Rankers in Tamil Nadu

    Forward Community – FC – 55 Students – 11 %
    Backward Community – BC – 293 Students – 58.6 %
    Christians – BCC – 29 Students – 5.8 %
    Muslims – BCM – 20 Students – 4 %
    Most Backward Community – MBC – 70 Students – 14 %
    Scheduled Castes – SC – 32 Students – 6.4 %
    Scheduled Tribes – ST – 1 Student – 0.2 %

    இதே போல IIT களில் வரும் முன்னேற்றத்தை பார்க்க சில வருடங்கள் பிடிக்கத்தானே செய்யும். இப்போது தானே மண்டல் கமிஷன் மூலமாக உள்ளே அனுமதித்து உள்ளீர்கள் துரியோதனன்/வி.பி.சிங் தயவில் – கர்ணனுக்கு/ ஒ.பி.சி மக்களுக்கு வாய்பு கிடைத்தது போல)

    வாழ்க!!!வாடிய பயிரை கண்டு மனம் வாடிய-வள்ளலார் பிறந்த/ வாழ்ந்த ” தமிழ் நாடு”

  40. u r talking about TN without a proper entrance examination and a rote by learning 12th std course.

    This is not a success of reservartion and like i said before TN OBCs are pretty good as such,as good as General category even without reservation and like the data u gave here,are pretty good.

    And what r u putting christians and muslims here for?They have been having education from a very long-time.

    The biggest concern should be about SC/ST students,because they are the ones who often come from economically poorer sections of the society.

    Basically the data you gave justifies that OBCs dont need reservation,since they are doing pretty well even without it.

    and IIT already has/had enough OBC people even from long back.

    BTW,instead of giving me all this,go and see what happens to these gusy after they finish engineering/BDS and how well they do it.

  41. Pl c link which is self expalatory:
    http://planningcommission.nic.in/reports/genrep/resedu/rpresedu_a10.pdf
    Interim report of the oversight committee on the implementation of the new reservation policy in higher educational Institutions ; 348 [Annexure X]
    RESERVATION POLICY AND ACADEMIC PERFORMANCE:
    A TAMILNADU CASE STUDY: Dr. M. Anandakrishnan (Chairman MIDS & Chairman IIT Kanpur)
    Abstract: The evolution of reservation policy in Tamilnadu over the past several decades has resulted in the following distributions of the reservation among the different categories:

    OC Open Category 31%;BC Backward Class 30% ; MBC Most Backward Class 20%;SC Scheduled Caste 18%;ST Scheduled Tribes 1%.; Total 69%.

    The academic performance of the various categories in the Higher Secondary Education in Tamilnadu State Board, the professional courses Entrance Examinations and the Final year performances at the State level institutions as well as in a premier engineering institution and a prestigious Arts and Science College in Tamilnadu are analyzed. The analysis shows the performance of the students in reserved categories in comparable to those in the Open Category and the institutions with high percentage of students from reserved categories have not in anyway deteriorated in quality.
    ………………………………………………………………………………………………..
    ………………………………………………………………………….
    9. CONCLUSION
    The experience in Tamilnadu reservation policy has clearly demonstrated that the
    students from backward sections of the society have performed at a level of excellence comparable to the Open Categories. This policy has not resulted in any deterioration in the standards of the premier institutions. However, it is also seen without the reservation policy large number of students from backward communities would have been denied admission to the prestigious institutions because of shortage of a few percentage points in their Higher Secondary and Entrance Examination Scores.

  42. தமிழ்நாடு எல்லாத் துறையிலும் முன்னணியில் – இந்தியாவிலேயே முதல் மூன்று இடங்களில் வருவதற்கு 10%மக்கள் தொகையை உடைய, சாதி மக்கள் தான் காரணம் என்று சத்தியம் செய்தால்- அதை நிரூபிக்கும் மக்களும்/ வக்காலத்து வாங்கும் மீடியாக்களும்/ மக்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்……

    ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்.

    ஹி…ஹி…ஹி சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டம்பா!!!

  43. prachanai adhu illa,yaarume 10% makkal uzhaippalinga 90% makkal somberingana yaarum sollala.

    Unga languagela sollanumna, paarpan mattume uyarvukku kaaranam illa aana neenga thinamum thootrum paarpneeyam adarkku oru mukkiya karanam.inraikkum thee.kaa kootathil itkaarnthu nerathai veenakum makkalai vida paarpaneeyathil oonriya uzhaikkum makkale indha vishayathirkku kaaranam.

    10% thee.kaa vala thaan indrum naam maharshtra,gujarat alavirku munneramal irukkinrom.

  44. pl c link – page NO 105 :http://oversightcommittee.gov.in/ocrep.pdf

    இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களில் சாதி வித்தியாசங்கள் இருப்பினும்- எல்லா
    சாதியினரும், மத குரு / அர்ச்சகர்கள் ஆகவும் ஆண்டவனை தொட்டு பூஜிக்கவும்
    / அபிஷேகம் செய்து அலங்கரிக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்து மதத்தில் பிராமணர் தவிர பிறருக்கு அனுமதி மறக்கப்படுகிறது. பொறியியல் படித்தவன்
    பொறியாளர் ஆகலாம், மருத்துவம் படித்தவன் மருத்துவர் ஆகலாம்- ஆனால் அர்ச்சக மந்திரம் படித்தவன் அர்ச்சகராக பிராமண சாதியும் தேவை. இந்தக்கொடுமை உலகத்தில் எங்காவது உண்டா?

    தமிழ்த்தேசியம்:

    தெலுங்கருக்கு – நைனா, அம்மா; மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா;
    கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி; தமிழருக்கு – பொது அப்பா, அம்மா;

    என்ன ஞாயம் இது???? திராவிடம், திராவிடம் என்று ஏமாந்ததைச் சொல்லுகிறோம்.

    தமிழர் வாழ்வியல் நடவடிக்கைகள்/ பிரச்சினைகள் ஆகியவற்றை- வீட்டிலும், வெளியிலும், கனவிலும் /நனவிலும் தமிழ் பேசும் தமிழர்களே, நமக்காக கையாள வேண்டும்.. இல்லாவிடில் பிற மாநிலத்தவர்களிடம் இருந்து முழுதாக ஒதுக்கப்படும்/ வெறுக்கப்படும் சூழ்நிலைக்கு ஆளாகுவோம். யாரும் நம்மை காப்பாத்த முடியாது. வீரம் வேறு- விவேகம் வேறு என்பதை உணரவும். தமிழர் முன்னேற்றம் விரும்புவோர் தயவு செய்து இவற்றை சிந்திக்கவும். வாழ்க தேசியம்.

  45. MULLAI PERIYAR DAM, THEKKADY. KERALA

    MWL + 155 FT FRL + 152 FT

    100 % FIELD TEST TO TEST THE STRENGTH OF DAM AT SITE
    BY STORING WATER UPTO + 155 FT AT U/S SIDE OF DAM

    A R C C . WATER WALL IS CONSTRUCTED 100 FT AWAY ON U/S SIDE OF DAM
    UPTO + 155 FT WATER LEVEL WATER IS STORED UPTO + 155 FT BETWEEN
    WATER WALL & DAM TO TEST THE STRENGTH OF DAM AT SITE

    IF THE DAM BREAKS DURING TEST FLOOD WATER WILL FLOW IN D/S
    TO PREVENT THIS FLOOD , A R C C . WATER WALL IS CONSTRUCTED
    200 FT AWAY ON D/S SIDE OF DAM UPTO + 136 FT WATER LEVEL

    EVEN IF + 120 FT WATER IS STORED TO LOWER FLOOD IMPACT, WATER
    WILL RISE UPTO 120+[155-120]/3=+120+36/3=+132 FT LEVEL ONLY[4 FT SHORT]
    HENCE NO WATER WILL FLOW TO VALLAKADAVU, EVEN IF DAM BREAKS
    DURING TEST
    SAME FOR BABY DAM
    “ HIGHER LEAKAGE LEADS TO STRENGTH IN MASONRY DAM “
    HIGHER LEAKAGE IS STORAGE LOSS
    COST 210+200+60 = 470 CRORES 36 MONTHS

    M ANDIAPPAN, M E , EXECUTIVE ENGINEER P W D [ RTD ]

    GO TO WEB BELOW FOR DATA ON TESTING
    .
    https://www.hidrive.strato.com/lnk/mgTPwn9h
    .

    • நீங்க யாரு சார்? என்ன சொல்ல வர்றீங்க.. உங்களுக்குத் தெரிஞ்சத விரிவா விளக்கமா தமிழ்ல அனுப்பினா எங்களுக்குப் புரியும்ல? மொக்க மொக்க கேபிடல் எழுத்துல ஹின்ட்ஸ் கொடுக்கற மாதிரி செய்தியச் சொன்னீங்கன்னா ஒண்ணுமே புரியாது.

      • He is a Ex-PWD engineer and without any useless discussion he has given statsistical evidence as to why Mullaiperiyar is strong.It is so straightfroward man.Just read carefully and many old people not too comfortable with computers and englishw rite like this only.

        • இதெல்லாம் புரிகிறது. அவரது உணர்வுகளையும், உண்மையை விளக்கிக் கூற முற்படும் தன்மையையும் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் அவருக்கு யாரும் இங்கு பதில் கூறவில்லை. அவருடன் விவாதிக்கவும் இல்லை.
          //YOU ARE NOT SENDING SOLUTIONS
          .
          SUPPRESSING//

          இப்படியெல்லாம் எதற்கு கூறுகிறார் என்றும் புரியவில்லை. திரும்பத் திரும்ப பின்னூட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். அதனால் விளக்கம் கேட்டேன்.

            • //aaka poorvama yosichi prachanai theerunga//

              அப்படி ஆக்கபூர்வமா யோசிச்சு அவர் சொல்லியிருக்கற மாதிரியெல்லாம் பண்ணி, அதன்பின் அணை உடைய வாய்ப்பில்லைன்னுதானே சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருக்கு. அப்புறமும் அதை கேரள அரசு கேட்கலேன்னா, அதை எப்படி அவங்களுக்குப் புரிய வைக்கிறது பங்காளிச் சண்டை போடாமல்?

                • சரி. வர்த்தகப் புறக்கணிப்பு வேண்டாம். வேறு எப்படி சொல்லி / செய்து புரிய வைப்பது?

                  • mukkiyama idhu congresum DMKvums eyya vendiya velai.Avunga thaan kootanila irukkanga,avunga centrela pesi pechuvarthai nadathalam.Positiona cleara sollalam.

                    Moreover,we should talk only to supremem court.not doing tit for tat with kerala.They know they are in a weaker position,thats why the usual cunning mallus are acting emotional now.we should not fall for the trap.

  46. COMRADES
    MY SOLUTION IS FOR PRIYAR DAM NOT TAMBRAHS
    FACTS to BEAR IN MIND FIRMLY:
    1 WATER LEVEL WAS + 152.5 Feet WHEN A SUDDEN FLOOD GATE OPENING
    WAS DONE BY then DAM SUPT THIRUDAN DEVADOSS from NAGER KOIL
    [ MALAYALEE] WHO WAS PURCHASED BY KERALA FOR 5 LAKHS IN 1978-79
    “”” NO DAMAGE TO DAM, DELAYED FLOOD DISCHARGE ONLY”””
    2 ON THE DATE AGREEMENT WATER LEVEL WAS +142 Feet IN 1979
    IT WAS LET INTO KERALA NOT INTO TAMILNADU BY KERALITE MGR
    3 SUPREME COURT”s DELAYED DECISION IS BASED ONLY ON FACT [2]
    4 + 155 Fett WATER LEVEL TEST AT DAM SITE CAN BE DONE ON
    [A] NO DAMAGE TO EXISTING STRUCTURES
    [B] DAM, BABY DAM, SHUTTERS WIILL NEVER BE TOUCHED
    [C] EVEN IF DAM FAILS DURING TEST , NO DROP WILL GO TO VALLAKADAVU
    5 COST 470 Crores, 36 MONTHS

    SEE TEST PROPOSALS IN LINK BELOW :

    https://www.hidrive.strato.com/lnk/mgTPwn9h

  47. RAMAR SETHU SHIPPING CANAL
    2300 Crores 30,000 GRT 2 Trips/DAY ROI = 9 %
    400 Crores 30,000 GRT 12 Trips/DAY ROI = 100 %
    FREIGHT $ 1 / 25 km / T
    CONSTRUCTION PERIOD 1 Year

    NO CUTTING, NO DREDGING, NO DAMAGE TO ENVIRONMENT

    30,000 GRT SHIP CARRIED IN 3 M DRAUGHT WATER at 165 knots for 300 KM
    INBETWEEN INDIA- SRI LANKA WATERS- ADAMS BRIDGE

    LOADING/UNLOADING 1 Hour, TRAVEL 1 Hour = 2 Hours/Trip
    24/2 = 12 Trips/Day

    CLINK LINK BELOW FOR DETAILS

    https://www.hidrive.strato.com/lnk/y9TPwdmt

  48. முல்லைப் பெரியார் அணைப்பாதுகாப்பு போராளிகளுக்கு இந்த குறும்படம் வலிமைமிக்க ஆயுதம் பொறியாள்ர்களின் மகத்தான இந்தப் பணியை வரலாறு போற்றும். பாராட்டுக்கள்.இதுவரை யாரும் சொல்லாத உண்மைகள் ஆச்சரியம்.

  49. […] முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசியல்வாதிகளின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணமாக தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். Turn off the lights […]

  50. இந்தியாவில் மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக எம்.ஜி.ஆரை தமிழக மக்கள் வைத்திருந்தார்கள் முல்லைப்பெரியார்ப் பிரச்சினையில் தமிழக உரிமையினை கேரளத்திடம் விட்டுக்கொடுத்தார் அதை கேரளா முழு உரிமை ஆக்கிவிட்டது.நமது உரிமையை மக்கள் மீட்டெடுப்பார்கள்.

Leave a Reply to ரிஷி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க