Sunday, November 27, 2022
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமுல்லைப் பெரியாறு: யாருடைய சதி? தினமணியின் சாணக்கியக் கவலை!

முல்லைப் பெரியாறு: யாருடைய சதி? தினமணியின் சாணக்கியக் கவலை!

-

கம்பம் – கூடலூர் – குமுளி தமிழக கேரள எல்லையில் கடந்த சில நாட்களாக பெருந்திரளான மக்கள் போராடி வருகிறார்கள். இது குறித்து “இதனால் யாருக்கு லாபம்” என்றொரு தலையங்கத்தை தினமணி நேற்று 12.12.2011 எழுதியிருந்தது.

எப்படி இவ்வளவு மக்கள் போராடினார்கள், போலீசாரால் அதை தடுக்க முடியவில்லை என்பதும் தினமணியின ஆதங்கம். முல்லைப் பெரியாறு போராட்டத்தில் தமிழக மக்களிடையே இப்படி தன்னெழுச்சியான போராட்டங்கள் வளர்ந்து வருவது குறித்து தினமணி ‘பல’விதங்களில் கவலைப்படுகின்றது.

முதல் கவலை இதை யார் செய்தார்கள் என்பதை விட யாரெல்லாம் செய்திருக்கவில்லை என்று ஆய்வு செய்கிறார்கள். இந்த விவகாரத்தில் இருமாநில மக்களின் நலன் கருதி எந்தவொரு பிரிவினை சக்திக்கும் இடம் தராமல் இருக்க வேண்டும் என்று ஜெயா விளம்பரம் கொடுத்திருந்ததை வைத்து இந்த போராட்டத்தை அ.தி.மு.க நடத்தவில்லை என்று நிம்மதி அடைகிறார் தினமணியின் ஆசிரியரான வைத்தி மாமா.

இந்த மக்களை ‘அமைதி’ப்படுத்தச் சென்ற நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மக்களிடம் செருப்படி பட்டதையும், ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டதையும் அவர் படித்திருக்கவில்லை போலும். அடுத்து பிரியாணிக்கும், பாட்டிலுக்கும், காசிற்கும் அழைத்து வரப்படும் அ.தி.மு.க கூட்டம் இப்படி போலீசின் தடியடிக்கு பயப்படாமல் எப்படி போராடியிருக்க முடியும் என்ற அடிப்படை அறிவு கூட வைத்தி மாமாவிற்கு தெரியவில்லை.

இதில் ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக எந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் இப்படி மக்களைத் திரட்டி போராடியிருக்க முடியாது என்று உறுதிப்படுத்துகிறது தினமணி. அம்மாவின் விருப்பத்திற்கு மாறாக அ.தி.மு.க தளபதிகள் மட்டுமல்ல, வைத்தி மாமா கூடத்தான் நடந்து கொள்ள மாட்டார் என்றது உலகறிந்த விசயம்தானே?

முதலில் இப்படி மக்கள் லட்சக்கணக்கில் போராட்டத்தை கையிலெடுத்திருப்பது தினமணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த போராட்டம் கேரள அரசை எரிச்சலூட்டவும், தமிழகத்திலிருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதலை முடுக்கிவிடவும்தான் பயன்படும் என்பது வைத்தி மாமாவின் கவலை. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையை விட பக்தர்களின் ஆன்மீக அரிப்புதான் தினமணிக்கு முக்கியம் என்பதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இது ஆர்.எஸ்.எஸ்இன் ஊது குழல் பத்திரிகைதானே?

முல்லைப் பெரியாறு விவகாரத்தை பிரச்சினையாக்கி இருமாநில மக்களிடையே முரண்பாட்டை தோற்றுவித்தது கேரள தேசியக் கட்சி அரசியல்வாதிகள்தான். தமிழகத்தின் நியாயமான உரிமையை மறுத்து அரசியல் இலாபத்திற்காக பெருங்கூச்சல் போட்டு மக்களிடையே பயபீதியூட்டி குளிர்காய்வது அவர்கள்தான். காங்கிரசு, சி.பி.எம், பா.ஜ.க முதலான அந்தக் கட்சிகளை கண்டிப்பதற்கு துப்பில்லாத தினமணி இங்கே போராடும் தமிழ் மக்களை கண்டிப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது?

மாறாக இந்த தேசியக் கட்சிகளுக்கு நல்லதோர் ஒளிவட்டத்தை போட்டு தமிழகத்தில் அவர்களின் குற்றச் செயலை மறைப்பது தினமணிதான். இல்லையென்றால் பா.ஜ.க ராதாகிருஷ்ணனும், காங்கிரசு தலைவர்களும் முல்லைப்பெரியாரில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமுடியாது என்று நாடகமாடும் போது அதற்கு செய்தி என்ற பெயரில் கூச்சமில்லாமல் விளம்பரம் தருவது தினமணிதானே?

அடுத்து இந்தப் பிரச்சினை காரணமாக இருமாநில மக்களும் பாதிக்கப்படுவதாக தினமணி கவலைப்படுகிறது. தமிழகத்திலிருந்து பொருட்கள் வராமல் போகும் போது கேரளாவில் விலைவாசி உயர்ந்துவிடும், அப்படி பொருட்கள் அனுப்பவில்லை என்றால் தமிழக விவசாயிகள் நட்டமடைவார்கள் என்று கண்டுபிடித்து எழுதுகிறது தினமணி.

ஒரு பிரச்சினையில் எது நியாயம், எது அநியாயம் என்று பரிசீலித்து பார்த்து விட்டு, அநீதி இழைத்தவர்கள் தண்டிக்க கோருவதுதான் சரியாக இருக்கும். ஈராக்கில் படையெடுத்து வரும் அமெரிக்காவை எதிர்த்தால் ஈராக்கில் சகஜமான வாழ்வு சீர்குலைந்து விடும், எனவே ஈராக் மக்கள் அந்த ஆக்கிரமிப்பை ஏற்றுக் கொள்வது சரி என்று சொன்னால் அது அடிமுட்டாள்தனமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தினமணிக்கும் பொருந்தும்.

கேரளாவுக்கு பொருட்கள் அனுப்பி தமிழக விவசாயிகள் பலனடைகிறார்கள் என்றால் அந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கு முல்லைப்பெரியாறு நீர் அவசியம். அந்த நீர் இல்லாமல், எதிர்காலத்தில் அது வராது எனும் பட்சத்தில் எப்படி உற்பத்த்தி செய்ய முடியும்? ஆக இந்த பிரச்சினை காரணமாக கேரள மக்கள் அடையும் பாதிப்பை விவரித்து அவர்களிடையே உருவாக்கப்பட்டிருக்கும் பீதியை அழிப்பதுதான் ஒரு பத்திரிகையின் கடமையாக இருக்கும். தினமணியின் எக்ஸ்பிரஸ் குழும பத்திரிகைகள் தமது கேரள பதிப்புகளில் அப்படி பிரச்சாரம் செய்யாமல் இங்கு போராடும் தமிழக மக்களை குறிவைப்பது ஏன்?

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியிலேயே வைத்திருப்பதால் அணையின் 4000 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அவர்களின் நலனுக்காக இந்த பிரச்சினையை கேரளா எழுப்புகிறது என்று ஜெயாவின் விளம்பரத்தில் பார்த்து தினமணி கண்டுபிடித்திருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு குறித்து கம்பம் பகுதியில் பத்து வருடங்களுக்கு முன்னரே ஒரு சாதாராண விவசாயியிடம் கேட்டிருந்தால் கூட சொல்லியிருப்பார். இந்த முக்கியமான விசயம், அங்கே விவசாயிகள் அனைவரும் அறிந்திருக்கும் விசயம் கூட தினமணியின் வைத்தி மாமாவிற்கு இவ்வளவு நாட்கள் தெரியவில்லை என்பதும் இந்த இலட்சணத்தில் இவர்களெல்லாம் மக்களுக்கு என்ன எழவுக்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பாதிக்கப்படும் தமிழக, கேரள மக்களைக் காட்டிலும், ”  அதிக ஆவேசமாகவும், யாரோ சிலர், ஏதோ ஒரு சக்தி, இந்த விவகாரத்தில் கூச்சல்போட்டு, அக்கறையாக மோதலை உருவாக்கப் பார்க்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று இறுதியாக தனது கவலை எது குறித்து என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறது தினமணி.

அதாவது தமிழகத்தில் உள்ள பிரிவினை சக்திகள்தாம் இதை ஊதிப்பெருக்குகின்றன, இதை வைத்து இந்திய ஒற்றுமையை சீர்குலைய வைப்பதை செய்கின்றன, மக்கள் அதற்கு பலியாகிவிடக்கூடாது என்பதுதான் தினமணி சொல்ல வரும் செய்தியின் பின்னணி.

இந்திய அளவு பிரச்சினை என்றால் இவர்கள் அது ஐ.எஸ்.ஐ சதி என்பார்கள். தமிழகம் தழுவியது என்றால் பிரிவினைவாதம் என்பார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் யார் என்ன சதி செய்தார்கள், என்பதை விட யார் சதி செய்ய முடியும், முல்லைப் பெரியாறு பிரச்சினை சூடு பிடித்தால் யாருக்கெல்லாம் ஆதாயம் என்று பார்த்தால் கண்டுபிடித்து விடலாமே?

கூடன்குளம் பிரச்சினையை திசைதிருப்பி, போராடிக் கொண்டிருக்கும் மக்களை தளர்வுறச் செய்வதற்கு முல்லைப்பெரியாறு பிரச்சினை சூடுபிடித்தால் அது யாருக்கு ஆதாயம்? நிச்சயம் மத்திய அரசுக்குத்தான். மேலும் இந்திய அரசும், அதன் உளவுத்துறைகளும், இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல. புரூலியாவில் ஆயுதங்களை விமானத்திலிருந்து போட்டு சதி செய்ததாகட்டும், வடகிழக்கில் பல்வெறு தேசிய இனங்களுக்கிடையே போட்டி குழுக்களை ஆரம்பித்து மோதவிட்டதாகட்டும் எல்லாம் இந்திய அரசின் யோக்கியதைக்கு சான்று பகருபவை.

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியின் ஆக்கிரமிப்பில் குடியிருக்கும் சில ஆயிரம் ஓட்டுக்களுக்காக இல்லாத பீதியை எழுப்பும் கேரள அரசியல்வாதிகள் பிரவாகம் இடைத்தேர்தலுக்காக இந்த பிரச்சினையை கிளப்பி ஆதாயம் அடைவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஜெயலலிதாவுக்கோ கட்டண உயர்விலிருந்து மக்களை திசை திருப்புவதற்கு முல்லைப் பெரியாறு கை கொடுத்திருக்கிறது. இவற்றினைத் தாண்டி இதில் யார் என்ன சதி செய்திருக்க முடியும்? இந்திய அரசு, கேரள தேசியக் கட்சிகள், ஜெயலலிதா இம்மூவரும்தான் இதில் ஆதாயம் அடைகின்றனர் எனும் போது தினமணி இவர்களை குறிவைத்து எழுதாமல் சும்மா பிரிவினைவாதம் என்று பீதி கிளப்புவது எதனால்?

இறுதியாக ,”  நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவது, மாநிலங்களுக்கிடையே உள்ள உறவு சீர்கெடுவது இந்திய ஒற்றுமைக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்பதைத்தான். இந்தப் பிரச்னையில் ஏன் தமிழக, கேரள அரசுகளை விடவும் அதிக அக்கறையும் கவலையும் கொள்ள வேண்டியது மத்திய அரசுதான். இது வெறும் நதிநீர்ப் பிரச்னை அல்ல; இந்திய ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்னை, நினைவிருக்கட்டும்!” என்று தேசபக்தி ஒற்றுமைக்காக சாமியாடுகிறது தினமணி!

ஒரு தேசிய இனத்தின் உரிமையை மறுப்பதின் மூலம் இந்திய ஒற்றுமை எப்படி ஏற்பட முடியும்? முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அனைத்து சட்ட, நீதிமன்ற ஆணைகளை தமிழகம் ஏற்கும் போது கேரளா மட்டும் ஏற்காமல் சண்டித்தனம் செய்யும் போது தமிழகம் என்ன செய்ய முடியும்? இந்திய ஒன்றியத்தில் இருக்கும் தமிழகத்தை பிடித்து வெளியே தள்ளுவதை இந்திய அரசும், கேரள அரசும் செய்வதற்கு தமிழக மக்கள் என்ன செய்ய முடியும்?

மேலும் இந்தியாவில் பாரத மாதாவை பூசையறை படமாக வழிபடுகிறவர்கள்தான் இந்த இந்திய ஒற்றுமை குறித்து கவலைப்படுகிறார்கள். அதிலும் பாரத மாதா சாய்ந்திருக்கும் சிங்கத்தின் பற்களாக இருந்து சிக்கியிருக்கும் ஆடுகளை பதம் பார்ப்பவர்கள்தான் ஓயாது பாரத ஒற்றுமை குறித்து உபதேசம் செய்கிறார்கள். காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கொல்லப்படும் மக்களையும், போராடும் மக்களை ஒடுக்கியும் இந்திய ஒற்றுமையை காக்க நினைக்கும் இவைதான் தேசபக்தி என்றால் அந்த தேசபக்தி நமக்கு தேவையில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தில் எழும் போராட்டத்தை “பிரிவினைவாதம், பயங்கரவாதம்,” என்று முத்திரை குத்தி ஒடுக்குவதுதான் தினமணியின் நோக்கம். அதற்குத்தான் இந்த சாணக்கிய கவலை!

 1. இதைப்பற்றி நேற்றே எதிர்ப்பு தெரிவித்து தினசனியில் இட்ட பின்னூட்டத்தை அவர்கள் வெளியிடவில்லை.

  • இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.

   தினமணி, தினமலர் இரண்டுபேரும் இதை போல் இருட்டடிப்பு செய்வதில் கெட்டிக்காரர்கள்.

 2. “முல்லைப் பெரியாறு அணைப்பகுதியின் ஆக்கிரமிப்பில் குடியிருக்கும் சில ஆயிரம் ஓட்டுக்களுக்காக இல்லாத பீதியை எழுப்பும் கேரள அரசியல்வாதிகள் பிரவாகம் இடைத்தேர்தலுக்காக இந்த பிரச்சினையை கிளப்பி ஆதாயம் அடைவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஜெயலலிதாவுக்கோ கட்டண உயர்விலிருந்து மக்களை திசை திருப்புவதற்கு முல்லைப் பெரியாறு கை கொடுத்திருக்கிறது. இவற்றினைத் தாண்டி இதில் யார் என்ன சதி செய்திருக்க முடியும்? இந்திய அரசு, கேரள தேசியக் கட்சிகள், ஜெயலலிதா இம்மூவரும்தான் இதில் ஆதாயம் அடைகின்றனர் எனும் போது தினமணி இவர்களை குறிவைத்து எழுதாமல் சும்மா பிரிவினைவாதம் என்று பீதி கிளப்புவது எதனால்?”

  மாமா இதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார் சும்மா கேள்வி மேல் கேள்வி கேட்டு தொல்லை பண்ணாதேள்

 3. ஏண்ணா நீங்க சும்மாவே இருக்க மாட்டேங்குறேள்.இதுல தான் நாங்கெல்லாம் தலயங்கம் எழுதி பொழப்பை ஓட்டுரோம்.வைத்தி மாமாவை இப்படியெல்லாம் கடுப்பேதேத்தாதீங்கோ.அப்புறம் அவர் “கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்”னு கத்த ஆரம்பிச்சுடுவார்…..

 4. //முல்லைப் பெரியாறு அணைப்பகுதியின் ஆக்கிரமிப்பில் குடியிருக்கும் சில ஆயிரம் ஓட்டுக்களுக்காக இல்லாத பீதியை எழுப்பும் கேரள அரசியல்வாதிகள் பிரவாகம் இடைத்தேர்தலுக்காக இந்த பிரச்சினையை கிளப்பி ஆதாயம் அடைவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஜெயலலிதாவுக்கோ கட்டண உயர்விலிருந்து மக்களை திசை திருப்புவதற்கு முல்லைப் பெரியாறு கை கொடுத்திருக்கிறது. இவற்றினைத் தாண்டி இதில் யார் என்ன சதி செய்திருக்க முடியும்? இந்திய அரசு, கேரள தேசியக் கட்சிகள், ஜெயலலிதா இம்மூவரும்தான் இதில் ஆதாயம் அடைகின்றனர் எனும் போது தினமணி இவர்களை குறிவைத்து எழுதாமல் சும்மா பிரிவினைவாதம் என்று பீதி கிளப்புவது எதனால்?
  // its becasue their eyes/ears are closed. also they think that what they think is correct.

 5. புருலியாவில் ஆயுதம் போட்டது இந்திய உளவுத்துறைதானா? அடப்பாவிகளா? பார்லி. தாக்குதலும் அவனுங்கதான். நாட்டிலேயே பெரிய பயங்கரவாத கும்பல் உளவுத்துறைதான். புருலியா பற்றி தெகல்கா மாதிரி ஏதாவது சுட்டி தர முடியுமா?

 6. வினவு…. நீங்கள் சொன்ன சுட்டியில் சென்று படித்துப் பார்த்தேன்.. காய்தல் உவத்தல் இன்றி தினமணி தலையங்கம் தீட்டியுள்ளது… தினமணி சொன்ன விசயத்தில் என்ன அப்படி தவறு கண்டீர்… பாப்பான் என்ன சொன்னாலும் தப்பு என்பது குருட்டு வாதம்.. உண்மையான அக்கறை உள்ளவன் அப்படித்தான் எழுதுவான்…தினமணி சொன்னது 100 சதம் உண்மை அதுதான் காரிய சாத்தியம். பொறுப்பற்று பேசுவது நீர்தான்…. இதுவே ,இந்தியாவை நீர் ஆண்டால் உம் தோரணையே வேறு மாதிரி இருக்கும்…போராட்டத்தை அடக்கப் பார்ப்பீர்… முடியாவிட்டால் ஸ்டாலினியப் பாணியில் தமிழ் தேசிய இனத்தையும் மலையாள தேசிய இனத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருப்பீர்… நல்ல வேளை உம்மிடமிருந்து எங்களை கடவுள் எங்களை காத்தார்…

 7. அவாளுக்கு மக்கள் தன் எழுச்சியா போராடுநாளே பிரிவினைவாதம், தேச பக்தினு உளற ஆரம்பிச்சுடுவா,

  /கூடன்குளம் பிரச்சினையை திசைதிருப்பி, போராடிக் கொண்டிருக்கும் மக்களை தளர்வுறச் செய்வதற்கு முல்லைப்பெரியாறு பிரச்சினை சூடுபிடித்தால் அது யாருக்கு ஆதாயம்? நிச்சயம் மத்திய அரசுக்குத்தான்./

  /ஜெயலலிதாவுக்கோ கட்டண உயர்விலிருந்து மக்களை திசை திருப்புவதற்கு முல்லைப் பெரியாறு கை கொடுத்திருக்கிறது./

  இருக்கலாம்.

 8. தமிழகத்தில் இருக்கிற அனைத்து ‘மாமா’ பத்திரிக்கைகளும் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் யார் உண்மையான குற்றவாளிகள்? என்பதைக் கூறுவதில்லை.

  உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறியது, அணை இடிந்துவிடுவது போன்ற வீடியோ காட்சிகளைத் தயாரித்து கேரள மக்களிடம் ஒலிபரப்பியது, அணை சேதமடைந்து விட்டது என்ற வதந்தியைப் பரப்பி கேரள மக்களைப் பீதி கொள்ளச் செய்த்து, அணையை சேதப்படுத்த முயன்றது, கேரளாவில் உள்ள தமிழ் மக்களைத் தாக்கியது போன்ற அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்த்தது கேரள அரசு.

  இவற்றை எல்லாம் மறைத்து விட்டு “இரு மாநில நல்லுரவு” , “ஒருமைப்பாடு” , “தமிழகத்தில் இருந்து உணவுப் பொருட்கள் செல்ல வில்லை என்றால் அது தமிழக விவசாயிகளைத்தான் பாதிக்கும்” என்று நயவஞ்சகமாக உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றன பத்திரிக்கைகள்.

  தமிழக மக்கள் தாக்க வேண்டியது கேரள மக்களையோ, அல்லது கேரள மக்களது கடைகளையோ அல்ல. மாறாக மாநிலத்துக்கு ஒரு கொள்கை வைத்துக்கொண்டு, தவறு செய்பவர்கள் தங்கள் கட்சிக்காரர்கள் தான் என்பது தெரிந்தும் தங்களது கட்சித்தலைமையைக் கண்டிக்காமல் ஆர்ப்பாட்ட நாடகம் நடத்தி தமிழக மக்களை ஏமாற்றும் சி.பி.எம், பா.ஜ.க, காங்கிரசு ஆகிய கட்சிகளைத்தான் தமிழக மக்கள் தாக்க வேண்டும்..

 9. இதுக்கே இப்படி ஷாக் ஆகிட்டீங்களே,நீங்க டைம்ஸ் ஆப் இந்தியா படிச்சீங்கன்னா நொந்து போடுவீங்க. அதுல இருக்குற மலையாளிங்க தமிழ் நாட்டுல வேலை பார்த்துட்டு, தமிழனை பத்தி தரக்குறைவா எழுதிட்டு, அதை தமிழனையே வாங்கி படிக்கவைத்து, துட்டு சம்பாதிக்கரானுங்க. வைத்தி மாமா பாவம், ஏதோ பொழப்ப ஓட்ட இப்டியெல்லாம் பன்றார். வினவு அன்ட் கோ ஆர்ப்பாட்டம் செய்ய சிறந்த இடம், டைம்ஸ் அலுவலகம் தான், என்னைக்கு இந்த டைம்ஸ் நாதாரிங்க போட்ட நியூஸ் நீங்களே படிச்சு பாருங்க மக்களே!

  http://timesofindia.indiatimes.com/india/DMK-Bloodshed-if-UPA-doesnt-act-on-dam-row/articleshow/11089129.cms

 10. இதில் ஆதாயம் அடைவது,ஜெயா கும்பலும்,கேரளா மற்றும் இந்தியரசுதான் என்பது தினமணிக்கு புரியாதது மீண்டும் தான் ஒரு பார்பன பத்திரிக்கை என்று நிருபிக்கிறது. _நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்,நீலகிரி மாவட்டம்.

 11. //இவற்றை எல்லாம் மறைத்து விட்டு “இரு மாநில நல்லுரவு” , “ஒருமைப்பாடு” , “தமிழகத்தில் இருந்து உணவுப் பொருட்கள் செல்ல வில்லை என்றால் அது தமிழக விவசாயிகளைத்தான் பாதிக்கும்” என்று நயவஞ்சகமாக உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றன பத்திரிக்கைகள். //

  இது 100% உன்மைதான். உச்சநீதிமன்றமும் ஜெயா செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்ததை கன்டித்திருக்கிறது. இந்த அம்மையார் உருப்படியான எந்த செயலையும் செய்யப்போவது இல்லை. மக்களுக்காக மக்கள் தான் போராட வேன்டும், ஆனால் அப்படி போராடினாலும் வெறி கொன்ட போலீசு அவர்களை அடித்து அடக்க நினைக்கிறது. வெட்கக்கேடான நிலை.

 12. பாரத மாதா சாய்ந்திருக்கும் சிங்கத்தின் பற்களாக இருந்து சிக்கியிருக்கும் ஆடுகளை பதம் பார்ப்பவர்கள்தான் ஓயாது பாரத ஒற்றுமை குறித்து உபதேசம் செய்கிறார்கள். காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கொல்லப்படும் மக்களையும், போராடும் மக்களை ஒடுக்கியும் இந்திய ஒற்றுமையை காக்க நினைக்கும் இவைதான் தேசபக்தி என்றால் அந்த தேசபக்தி நமக்கு தேவையில்லை.

 13. இதே தினமணி 2004இல் கொலை செய்த பெண் பொறுக்கி சங்கராச்சாரிகளை உள்ளே போட்ட போது… ஜெவை எதிர்த்து எழுதிய பார்ப்பன சொரிகளான தினமணி…

  அணையை உடைக்க வேண்டும் என சொல்லும் கேரளா அரசின் மோசடிகளை பற்றி மூடி கொண்டு… வாழ்வுரிமைகாக போராடும் மக்களை கொஞ்சைபடுத்துவது பார்ப்பன சைகோதனமே…

  உண்மையில் நடக்க போவது… கேரளாவின் தாளத்திற்கு ஆனந்த் கமிட்டி ஆடி எழுதி கொடுக்க போகிறது…

 14. நம்மவா பயப்படற மாதிரியெல்லாம் ஒண்ணும் இல்லை அரசுக்கு எதிராய் மக்கள் ஒன்றும் பெருமளவில் திரண்டுவிடவில்லை.ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் போல் மீண்டும் தமிழர் எழுச்சி எல்லாம் நடக்காது என்று தம் மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை வைத்தி மாமாவுக்கு இருக்கிறது அல்லவா? கூர்ந்து கவனித்து காட்டிகொடுக்கும் வேலையை செய்கிறார் விடுங்கள் சிறுபான்மையினர் இப்படிதான் இருக்கமுடியும்.

 15. //பாரத மாதா சாய்ந்திருக்கும் சிங்கத்தின் பற்களாக இருந்து சிக்கியிருக்கும் ஆடுகளை பதம் பார்ப்பவர்கள்தான் ஓயாது பாரத ஒற்றுமை குறித்து உபதேசம் செய்கிறார்கள். காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கொல்லப்படும் மக்களையும், போராடும் மக்களை ஒடுக்கியும் இந்திய ஒற்றுமையை காக்க நினைக்கும் இவைதான் தேசபக்தி என்றால் அந்த தேசபக்தி நமக்கு தேவையில்லை.//

  வழிமொழிகிறோம்.

 16. கேரளா: 100 சதவிகிதம் படித்தவர்கள் உள்ள மாநிலம் என்று பாட புத்தகத்தில் படித்திருக்கிறேன். எல்லாரும் படித்து என்ன பிரயோஜனம், பண்பட்டவர்களாக இல்லையே!

  தமிழ் நாடு: எனக்கு தெரிந்த வரையில், கடந்த 15 வருட காலத்தில், தமிழகம் எந்த ஒரு நதி நீர் பிரச்சனையும் தீர்த்ததில்லை. எல்லாம் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளன. அரசியல் ஆதாயம் வேண்டும் போது பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும்.

  ஒருபக்கம் நதி நீருக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் மழை வெள்ளத்தில் மிதக்கிறோம். கிடைத்த மழை நீரை கடலில் விட்டுவிட்டு மற்ற மாநிலங்களிடம் கையேந்துகிறோம். ஏன் இந்த முரண்?

 17. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடியதை மாமிகள் புரிந்துக்கொண்ட மாதிரி மாமாக்கள் புரிந்துக்கொள்ளாதது வேதனையில் ஆழ்த்துகிறது.மாமிகள் மட்டும் சற்று முற்போக்காக இல்லாதிருந்தால் இந்த மாமாக்கள் நாட்டையே ஆட்டையை போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

   • ஆமாண்ணா அப்பத்லேர்ந்தே எங்காத்து பொண்கள் ரொம்ப ஓபனா வேத்து ஜாதி பையன்களை லவ் பண்ணி கல்யாணமும் பண்ணிட்ரதுகள் அங்க போய் ரொம்ப அட்ஜஸ்ட் பண்ணி நன்னாவே குடித்தனமும் நடத்ரதுகள்.பசங்கலானா கட்ண பொடவையோடு வந்தாபோதும்னுட்டு அள்ளிண்டு போய்டரா.இவா போறது மட்டும் இல்லை போறதுக்கு மின்னாடி விஜய் டீவீல நாங்கல்லாம் அம்மாஞ்சி பிராமின் பாய்ச கட்டிக்க மாட்டோம்னுட்டு கோபிநாத்தாண்ட இண்டர்வியூவும் கொடுக்கறா மிச்ச பொண்ணுகளையும் கெடுக்கரா. கலி முத்திடுத்துண்ணா.தமிழகத்தில் அதிகம் இன்டர்காஸ்ட் மேர்ரேஜ் பண்ணறது எங்க பொண்ணுங்கதான் பெருமையாவும் இருக்கு போக போக வெறுமையாகிடுமோ ன்னுட்டு பயமாகவும் இருக்கு.

    • உங்காத்துப் பொண்களுக்கு உடனடியா பர்தா போட்டுவிட்றா அம்பி, இல்லேன்னாக்கா ஜொள்ளு விடறவன்கள்ல்ல எவனயாச்சும் இழுத்துண்டு ஓடிறுவா எல்லாரும்.

 18. theriyamaa kekaren……….kudan kulam nuclear plant, ippo mullai periyar dam issuenu thamizh nattai serndha graamathu manushaa elaam thadikki vizhundha kamba yeduthundu poradaraalaame? avaalukku yelaam office kadayaadho? delivery timeline kadayaadhaa? jollyaa 365 naalum kadaya elaam saathi vachundu irundhaa vyaabaaram epdi nadakum? elaam kaili dressaa kattindu, bikaa yeduthundu thadi thadiyaa vandhurardhugale? vera worke kadayaadhaa?

  naan oru naal leave kekaa, avlo vendaam one day trainingla irukka evlo plan panna vendirkku? ivaal ennadaanaa eppa paarthalum kadai adaippu, maanankattinu alayaraale? andha timeaa usefulaa oru dhyaanam, yogam or agriculture technologynu selavu panna pdaadhaa?

  perumaalukku dhaan velicham

  sonnaa maatum kovam varum………….ipdi Ayyappa bhakthaalukku thadai yerpaduthi enna saadhika poradhugal? kandhu alayaraa……………..poradraalaam….

  • //perumaalukku dhaan வெளிச்சம்/
   வந்துட்டான்யா ஐடியா சொல்ல ,தியானம் , யோகானு

 19. முதலில் இப்படி மக்கள் லட்சக்கணக்கில் போராட்டத்தை கையிலெடுத்திருப்பது தினமணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை……..

  வினவு மாமா…ஒரு லட்சதிர்கு யெவுலோ சைபர் தெரியுமா…
  போடா கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்….

 20. Mர்.Kரிஷ்னன்.உங்களுக்கெல்லாம் மாட்டு மூத்திரம் பிடிச்சிருக்கு.மக்கள் போராட்டம் பிடிக்கவில்லயோ? சமூக பிரச்சனைகளை தியானிக்க முடியாமல் வெற எதை தியானிக்க போறீங்க?முதல்ல மக்களை பார்க்க கற்றுக் கொள்ளூங்கள்.அப்புறம் ஊஊஊஊஊஊஊஊங்க பகவானை தேடுங்கோ.மக்களை எல்லாம் பகவானண்டையில் அழச்சுண்டு போறேள்.அந்த பகவானை எப்போ மக்கள் கிட்ட அழச்சுண்டு வரபோறேள்????????????

 21. Enna periya makkal, makkal? Mediala varadhe — eppo paarthaalum kailiya kattindu muunjila thejase thuuli kuuda ilaama oru bika yeduthundu kalambaraale?

  Ivaala yaaru japam panna vendaamnu sonaa? mudhala swamy mela bhakthi venum….brahmnaala vidungo…….bhagavan para paksham paarpaanaa? adhu yen puriya maatengaradho therila…..

  yeppo paarthaalum low level unparliamentary language pesa vendiadhu….comedy kaakshigalngara perla keka sagikala……….ipdiye yen ozhandundu irukel? apdi enna veruppu vandhurthu bhagavan mela? swamy ilaamaa jagat kadayaadhe…….

  evlo sonaalum yerichal, veruppu , sanda idhu dhaan badil…

  makkal makkalnaa avaa kitta ponaale cheap jokes, cheap dialogue dhaan…..epdi mingle panradhu………..dress azhukaa irundhaa parava illa……manasu muzhuka vadivelu paani jokes, kozhi, aadu maatu kari, pongal idhu dhaan irukku…..

  andha manasa suthamaa vechuka vendaamo?

  24 hours poradradhnunaa avaalukku yelaam office, work kadayaadhaa? illa business, farming kadayaadhaa?

  Neer bhagavana nambarelaa illayaa? nambina sollungo naanum swamya pathi pesaren….avana kuttindu varadhu anbaala dhaan mudiyum……aasaiyaala illai

  elaa brahmnaalum uthamamnu solla varala………per alavu braahmanaalukkum serthu dhaan solren

  anushtaanam panravan, simple lifeaa irukaravan, japam panravan, saadhu idhu dhaan braahmna lakshnam…..it is not a social dignity to bear ourselves this title Brahmnaa…..who is in the pursuit of God or Brahman athatho brahma jig nyaasaa — he alone is a brahmin.

  • //Enna periya makkal, makkal? Mediala varadhe — eppo paarthaalum kailiya kattindu muunjila thejase thuuli kuuda ilaama oru bika yeduthundu kalambaraale?//

   அவன் கைலியக் கட்டிக்கிட்டு சேத்துல கால் வைக்கலேன்னா, நீரு சோத்துல உம்ம கைய வைக்கமுடியுமாய்யா?? தேஜஸாம்ல தேஜசு..

   //Ivaala yaaru japam panna vendaamnu sonaa? mudhala swamy mela bhakthi venum….brahmnaala vidungo…….bhagavan para paksham paarpaanaa? adhu yen puriya maatengaradho therila…..//

   உச்சி வெயில் மண்டையைப் பொளக்குற நிலையில, சேத்துல மிதிச்சி மிதிச்சு வெடிப்பு வந்த காலை நிலத்துல பதிய வச்சு களையெடுக்கற எம்ம விவசாய சமுதாயத்துக்கு சூரியனும், தண்ணியும், ஆகாசமும்தான்யா கடவுள்! களைப்பு தீர பாடுற நாட்டுப்புறப்பாட்டுதான்யா எங்க சங்கீதம். ஏஸி ரூம்ல உட்கார்ந்துகிட்டு ஜபமும் நாம கீர்த்தனமும் பாடுற வாயல்லாம் எங்களப் பார்த்து கமெண்ட் அடிக்குது பாரு…!

   //yeppo paarthaalum low level unparliamentary language pesa vendiadhu….comedy kaakshigalngara perla keka sagikala……….ipdiye yen ozhandundu irukel? apdi enna veruppu vandhurthu bhagavan mela? swamy ilaamaa jagat kadayaadhe…….//

   தண்ணி இல்லைன்னா வாழ்க்கையே இல்லன்னு பேசிக்கிட்டிருக்கோம். எங்களுக்கு வாழ்க்கை கொடுக்காத ஜகம் இருந்தா என்ன ஒழிஞ்சா என்ன??

   //24 hours poradradhnunaa avaalukku yelaam office, work kadayaadhaa? illa business, farming kadayaadhaa?//

   வொயிட் காலர் ஜாப்ல இருந்துக்கிட்டு வொய் திஸ் கொலவெறி பாடற ஜனங்க இல்ல சாமி நாங்க. வாழறதுக்குண்டான அடிப்படை ஆதாரங்க மேலேயே கைய வச்சா, விரல் சூப்பிக்கிட்டு ஒண்ணுக்கா போக முடியும்?

   //anushtaanam panravan, simple lifeaa irukaravan, japam panravan, saadhu idhu dhaan braahmna lakshnam…..it is not a social dignity to bear ourselves this title Brahmnaa…..who is in the pursuit of God or Brahman athatho brahma jig nyaasaa — he alone is a brahmin.//

   வாயில நல்லா வருது. காறித்துப்புறதுக்கு ஏனோ மனசு எடம் கொடுக்கல..

 22. // illa business, farming kadayaadhaa? //

  ஜலம் கெடைக்காதுன்னுட்டா எங்கென ஃபார்மிங் செய்யும் ஓய்??

 23. டய் எல்லோரும் மெலெயும் கீலெயும் பொத்தி கிட்டு போங்கடா.சுப்ரிம் கோர்ட் அதான் ரென்டு ச்டெட் காரனுக்ககும் வச்சான் இல்ல மன்டேல போதலயா.னீ உன் ச்டேட் க்கு சப்போர்ட் அவன் அவன் ச்டேடுக்கு அதுவும் உன்ன போல மூலகெட்ட முன்டங்க பன்ர வேல.இத சால்வ் பன்ன கோர்ட்நு ஒன்னு இருக்கு தெரியுமா?ரவ்டி பய கூட்டங்கலா.

  • ஒழுங்கா டைப் பன்ன கூட தெரியாத நீதான் முன்டம். பை தெ பை, மூல கெட்டதும், மூளை கெட்டதும் உனக்குதான். விவசாயி என்னைக்குடா ரவுடித்தனம் பன்னிருக்கான்? முதல்ல டிசன்ட்டா கமென்ட் போட கத்துக்கடா வெங்காயம்.

  • indian!

   தமிழ் எழுத்துக்களை கொண்டு எதோ சொல்ல வருகிறாய் என்று தெரிகிறது. ஆனால் என்ன சொல்ல வருகிறாய் என்றுதான் புரியவில்லை. எதற்கும் நீ தமிழ் படித்துவிட்டு இங்கு வருவது நல்லது.

 24. bhagavana kuttindu varadhu anbaala dhaan mudiyum……aasaiyaala illai…….இந்த சுனாமி பூகம்பம் பஞ்சம் போர் எல்லாம் வர்றதோல்லியோ அப்ப போய் அன்பால உங்க பகவானை கூட்டிண்டு வாங்கோ மாமா அந்தாளு எதுனா செய்றாரா பாப்போம்.

 25. ரெண்டு ஸ்டேட் காராலும் பொத்திண்டு போங்கோன்ன்றவா எந்த ஸ்டேட்காரான்னு தெரியலை,ஒரு வேலை நம்ம காசில் IIT யில் படித்துவிட்டு அமெரிக்காவில் வேலையில் சேர்ந்து நன்னா சம்பாரிச்சுட்டு நம்ம நாட்டையே திட்டுவாளே நான் ரெசிடென்ட் INDIANSU அவாளா?

 26. கிருஷ்ணா…எனக்கு ஒரு சந்தோஷம்.உம்மை இவ்ளோ பேச வச்சிருக்கேன்.இங்க பாருங்க… அவா எல்லாம் உம்மை போல நெய்யும் பருப்பும் திங்கறவா இல்லை.அவாளுக்கு தேஜஸ் எல்லாம் இருக்காது.ஆனா மனசில தைரியம் இருக்கும்.அது தான் ஒய் தேஜஸ்..யார் கடவுள்? இந்த உலகத்தை படைத்தவன் தான் கடவுள் என்றால்,தேஜஸ் இல்லேன்ன்னு சொன்னீங்களே அவன் தான் கடவுள்.அவன் தான் படைத்தலும் காத்தலும், அழித்தலும் செய்கிறவன்.புரியுதா? எம்ம கிட்ட வாரும் நாங்க காட்டுறோம் உங்க பகவாவாவாவானை… இன்னும் நிறைய பேசலாம் வாங்கோ…

  • Nixen

   Unfortunately you dont believe in God. God has nothing to do with our karma. We suffer or enjoy due to the past inherent tendencies. These things you will never accept. Even buddha accepted the doctrine of karma.

   Your mind is either really pre-occupied and auto suggested to atheism or atleast you pose so in the society. Deep within your heart, if you have inkling of doubt on atheism, that precise moment you write to me. I will be happy to converse.

   For now it seems you are in no mood to listen.

   Forget about the whole society — for now ,, for this moment, see deep within you and reflect — Love is God , God is love. If you dont like brahmins and temples, please dont spread the same hatred towards God.

   I have all good will for all of you.

   Life teaches lesson where all else fails — Nisarghadatta Maharaj the famous advaitin and a jnani told in 1980s in Mumbai. He is no more in body. His teachings stand for their message.

   These things will never make sense or going to make for you in the near future. And I am not talking about social service — if you want to do , do it. But dont ignore and overlook your deeper mind simply because you have hatred towards brahmins.

   There is no use in me talking to you — that does not diminish the good will and love I have for those who speak to me.

   Any case, I am stopping here. Grace decides and Grace pulls the mind towards devotion. If you want to learn advaita or in general about God or your own Self — let me know. Until then (one day you will turn inward) , I need to say bye.

   • if there is no use, why the hell do you preach and waste time with us. nobody hates brahmins but it is the brahmins who hate fellow humans. why don’t you make your times useful by teaching them how to behave with humans and then with God? because they still think superior and act the same way they did centuries ago.

 27. வணக்கம் அர்ஜுன், முக்கினா புரட்சி வராது. ஆய் தான் வரும். அப்பறம் முக்கி முக்கி புரட்சி செய்ய நாங்கள் ஒன்றும் மைலாப்பூர் அன்னா அசாரேக்களோ அல்லது சுயராச்சிய புரட்சி நடத்தியவர்களோ அல்ல. உங்களை எல்லாம் குடும்ப அட்டையை எடுத்துக் கொண்டு பட்டியலிட்டு கொல்ல நிரம்ப நாள் ஆகாது. பின்னர் எங்களுக்கும் சிங்களவர்களுக்கும், பார்ப்பானுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். புரட்சி மெதுவாக தான் வரும். ஆனால் வரும்.

 28. ஆட்சி செய்கிறவர்கள், கோடிகணக்கில் மக்கள் திரண்டு போராடினாலும் அதை ஒடுக்கத்தான் பார்க்கிறர்கள்.போராட்டத்தின் நியாயத்தை ஏற்றுக்கொள்வதில்லை. தாங்கள் செய்கிற எல்லா அநியாயதிற்கும் அரசு எந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்கின்ற்னர்.மக்கள் போரட்டம் விரிவடைந்து செல்லும்போது அரசு நமக்கு சேவை செய்யாது என்று தம் சொந்த அனுபவஙகளிலிருந்து புரிந்துகொள்கிறார்கள்.மக்கள் போராட்டம் தீவிரமடைகிறது.இதை ஆளுகிறவர்கள் தான் உருவாக்குகிறார்கள்.ஆளுகிறவர்களால் ஒடுக்காமல் ஆள முடியாது.மக்களால் போராடாமல் வழ முடியாது.மக்கள் போராட்டஙகளில் சிஙகூர்,நந்திகிரமம்,கூடஙகுளம்,முல்லைப்பெறியாறு இவையெல்லாம் அடங்கும்.இவை மேன்மேலும் பற்றிப்படரும்.

 29. Tamilaragal poradinal athu pirivinaivatham vanmurai athuvey mumbail ula maratiyargal pondror appavi vada inthia makal methu vanmurai nadathinal intha vaithi pondra udaka narigal pattum padamal kandipathu pol kandithu amaithi agi viduvargal. Tamilargal mithu nadathapadum evvithamana adakumarai endralum tamilaragal vai mudi kai katti adangi iruka vendum, urimaikaga kural elupinal athu thesa throgam. Nadapathu jenanayaga atchidhana?. Ithagaiya adakumarikal maraimugam agavum neradiagavum nam mithi thinipathai enthirka vendum porada vendum. Kerala ellail anuthinamum poradum ovaru tamil maganukum em tholamai therivipathil perumai adaigiren. Vizlvathu nam aginum Vazlvathu tamilum tamil inamum agatum.

 30. முல்லைப் பெரியாறு அணை காக்க , நமது உரிமையை தக்கவைத்துக் கொள்ளவும் , மத்திய அரசைக் கண்டித்தும், கேரளா அரசைக் கண்டித்தும் சென்னை மெரீனா கடற்கரையில் பெரும் கூட்டம் கூடவிருக்கிறது.
  நாள் – ஞாயிறு , டிசம்பர் 25 , 2011, நேரம் மாலை 3 மணி

  அழைப்பு – அனைத்து தமிழர் இயக்கங்கள்.

  தோழர்களே, அனைவரும் கலந்து கொள்வோம். நமது உரிமையைக் காப்போம்

 31. mullaip periyaru its just a sample balefully .for tamil nadu .before koodang kulam now mullaip periyar then next /?????? oru valiya in srilanga tamilans have mul wayly open jail – that status have granted in india by fimicolous crowd as camarilla also they wants to admiya eru thamila indiyavukkay @

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க