privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்ஹசாரேவா, ராம்தேவா - யார் பெரியவர்? சபாஷ்! சரியான போட்டி!!

ஹசாரேவா, ராம்தேவா – யார் பெரியவர்? சபாஷ்! சரியான போட்டி!!

-

ஹசாரேவா, ராம்தேவா - யார் பெரியவர்? சபாஷ்! சரியான போட்டி!!
பாபா ராம்தேவ் - அண்ணா ஹசாரே (படம் thehindu.com)

ண்ணா ஹசாரேவின் பின் திரண்டுள்ள மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினருக்குப் போராட்டம் என்பதெல்லம் வெறும் நேரப்போக்கிற்காக மெழுகுவர்த்தியோடு நடத்தப்படும் பேஷன் பெரேடு தான் என்று முன்பு சொன்ன போது நம்பாதவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?

ராம்லீலா மைதானத்தில் கருப்புப்பண விவகாரத்திற்காக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த கார்பொரேட் பரதேசி ராம்தேவின் பக்தர்களை போலீசு அப்புறப்படுத்தியதைக் கண்டித்து அண்ணா ஹசாரே தலைமையிலான குழுவினர் நேற்று (6/6/2011) நடந்த ஜன்லோக்பால் முன்வரைவுக் கமிட்டிக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். மேலும், இந்த முன்வரைவை ஒழுங்கு செய்வதற்காகக் கூடும் கமிட்டிக் கூட்டங்களை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் அப்படிச் செய்யாவிட்டால் எதிர்வரும் கூட்டங்களையும் கூட புறக்கணிப்போம் என்றும் அண்ணாவின் குழுவிலிருக்கும் சாந்தி பூஷன் அறிவித்துள்ளார்.

முதலில் ராம்தேவ் விவகாரம் கருப்புப் பணம் சம்பந்தப்பட்டது – இவர்கள் செல்வதோ ஊழல் எதிர்ப்புக்கான ஒரு சட்ட முன்வரைவை ஒழுங்கு செய்யும் கூட்டம். அதற்காக இதைப் புறக்கணிக்க வேண்டிய தேவை எங்கேயிருந்து எழுந்தது? நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒரு கோரிக்கையை முன்வைத்து அந்த அலோசனைக் கூட்டத்தை இவர்கள் தவிர்க்கிறார்கள் என்றால் அதன் மேல் இவர்களுக்கே இருக்கும் உண்மையான அக்கறை குறித்து மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும், இவர்களின் புறக்கணிப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கபில் சிபல், அண்ணாவின் குழுவில் இருப்பவர்கள் தங்களை திருடர்கள் என்றும் பொய்யர்கள் என்றும் பொதுவெளியில் குற்றம் சாட்டுவதாகவும், இது போன்ற வரைமுறை மீறிய பேச்சுகள் குழுவின் நடவடிக்கைகள் சுமூகமாக நடக்க ஏதுவானதல்ல என்றும் தெரிவித்துள்ளார். மட்டுமல்லாமல், அண்ணாவின் குழுவினர் வராமல் போனாலும் கூட தாங்களே ஜூன் 30-க்குள் இந்த சட்ட முன்வரைவை இறுதி செய்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி வைப்போம் என்றும் அறிவித்துள்ளார்.

இது போன்ற கூத்துகளுக்கு அடிப்படையாய் இருப்பது இவர்களுக்குள் நிலவும் ஜனநாயகமற்ற தன்மையும் என்.ஜி.ஓ அரசியலின் ஆன்மாவாக இருக்கும் துரோகத்தனமும் கைக்கூலித்தனமும் தான். அண்ணாவோடு மேடையிலிருந்த ராம்தேவ், தன்னையும் ஜன்லோக்பால் வரைவுக் கமிட்டியில் இணைத்துக் கொள்ளாததை அப்போதே எதிர்த்திருந்தார். மேலும் அவரே சாந்தி பூஷனை சேர்த்துக் கொண்டதைப் பற்றி வெளிப்படையாகவே விமர்சித்தார். அப்போது ஊடகங்களில் அண்ணாவுக்குக் கிடைத்திருந்த ஸ்டார் அந்தஸ்தையும் நடுத்தர வர்க்கத்து மக்களிடையே அவருக்கு ஊடகங்களால் ஏற்பட்டிருந்த நற்பெயரையும் கணக்கில் கொண்டு உடனேயே தனது விமரிசனத்தை வாபஸ் பெற்றிருந்தார்.

அப்போது ராம்தேவுக்கு உண்டான பொறாமையும் காய்ச்சலும் தான் அவரைத் தன்னிச்சையாக ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் அமரச் செய்தது. எங்கே இந்தப் பய குறுக்கே புகுந்து தான் ஐந்து நாட்கள் சோறு தண்ணியில்லாமல் டிராமா போட்டு சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயரை அபேஸ் பண்ணி விடுவானோ என்று அஞ்சியதாலேயே அண்ணா ஹசாரே ராம்தேவை ஆதரித்திருந்தார். இவர்களுக்கு யார் பெரியவர் என்கிற குத்துபிடி சண்டை எந்த ஒளிவு மறைவுமில்லாமல் ஊடக ஒளியில் கனஜோராக நடந்து வந்தது.

அரசை விமரிசிப்பதில் தான் பின்தங்கி விட்டால் எங்கே தனக்குப் பெயர் கிடைக்காமல் போய் விடுமோ என்று அஞ்சிய அர்விந்த் கேஜ்ரிவால், தொலைக்காட்சி சேனல்களில் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டிக் கொண்டிருந்தார். சாந்தி பூஷனும் தன் பங்குக்கு எந்தக் குறையும் வைக்காமல் இதே போன்ற நாடகத்தை தொலைக்காட்சி ஸ்டூடியோக்களில் நடத்திக் கொண்டிருக்க, இக்குழுவின் இன்னொரு உறுப்பினரான சந்தோஷ் ஹெக்டே ‘எனக்கு அழுவாச்சியா வருது.. விடுங்க நான் வூட்டுக்குப் போறேன்’ என்று போன மாதம் தனி டிராக்கில் இன்னொரு நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

இது தான் இவர்கள் மக்களுக்காக போராடிய லட்சணம். இதே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு குழுவாக இருந்திந்தால் அவர்களுக்கு மக்களிடம் பதில் சொல்ல வேண்டுமே என்கிற குறைந்தபட்ச பயமாவது இருந்திருக்கும். ஆனால், இவர்களோ தன்னிச்சையாக தங்களைத் தாங்களே சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டவர்கள். தங்களை நியமித்துக் கொண்டதிலோ, தமது குழுவிற்குள்ளோ மருந்துக்குக் கூட ஜனநாயகத்தை அனுமதிக்காதவர்கள். அண்ணா ஹசாரே தனது குழுவினரை நியமித்துக் கொண்டதும் ஒரு ஆண்டி மடத்தில் சீனியர் ஆண்டி தனக்கு ஜூனியர்களை நியமித்துக் கொள்வதற்கும் சாராம்சத்தில் வேறுபாடே இல்லை.

அடுத்து என்.ஜி.ஓ அரசியலுக்கென்றே இருக்கும் ஒரு குணாம்சமான மக்களை அரசியலற்ற மொக்கைகளாகவும், ஓட்டாண்டிகளாகவும் ஆக்கும் துரோகத்தனமும் இதில் துலக்கமாக வெளிப்படுகிறது. சமீப வருடங்களாக மக்களை அடுத்தத்த ஊழல் செய்திகள் ஒரு சுனாமி போல தொடர்ந்து தாக்கி வரும் சூழலில், அவற்றுக்கெல்லாம் ஊற்றுமூலமாய் இருக்கும் தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி மக்களின் ஆத்திரமும் கோபமும் திரும்பி விடாமல் போராட்டம் என்பதையே பிக்னிக் சென்று வருவது போன்ற ஒரு இன்பமான நிகழ்வாக மாற்றியமைத்துள்ளது, அண்ணாவின் பின்னேயிருந்து இவை மொத்தத்தையும் இயக்கும் என்.ஜி.ஓ கும்பல்.

இது மக்களின் ஆத்திரத்தையும் இயல்பாகவே மாற்றத்தை விரும்பும் அவர்களின் அபிலாஷைகளையும் அவர்கள் மொழியிலேயே பேசி கூட இருந்தே கருவறுக்கும் செயலாகும். இப்போது ஜன்லோக்பால் கமிட்டியினுள் அரசாங்க உறுப்பினர்களுக்கும் அண்ணாவின் குழுவினருக்கும் இடையே எழுந்திருக்கும் முரண்பாடுகளை ஏதோ மக்களுக்கே நடந்து விட்ட துரோகம் போலச் சித்தரித்து ஒட்டுமொத்தமாக இந்தச் சட்டம் ஏற்படாமலே போக வைக்கும் வேலையைத் தான் அவர்கள் கவனமாகச் செய்து வருகிறார்கள்.

ஊழலே சட்டபூர்வமாகிவிட்ட ஒரு சூழலில் ஜன்லோக்பால் சட்டம் மட்டுமே ஊழலை ஒழித்து விடக்கூடிய தீர்வு என்று யாராவது கருதமுடியுமா? ஊழல் என்பது மறுகாலனியாக்கத்தில் கருக்கொண்டிருக்கிறது – ஆனால் இவர்களோ வெறும் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் மட்டுமே கடல் அலைகளைக் கைகளால் தடுத்து விட முடியும் என்று நம்மிடம் சொல்கிறார்கள். ஆனால், எதார்த்தத்தில் இவர்களின் ஆன்மாவாக இருக்கும் என்.ஜி.ஓ அரசியலோ அதைக் கூட உருப்படியாய் நிறைவேறாமல்  தடுக்கும் வேலையைச் செய்கிறது. அதைத் தான் இவர்களுக்குள் நடக்கும் குத்துபிடி சண்டைகளும் ஈகோ மோதல்களும் மெய்பித்துக் காட்டுகின்றது.

இவர்களுடைய ஓட்டாண்டித்தனங்களை முன்பே வினவில் அம்பலப்படுத்தி எழுதிய போது அறவுணர்ச்சி பொங்க கூத்தாடிய நண்பர்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? ஊழல் முறைகேடுகளை எதிர்க்கும் உங்களின் நியாயமான கோபத்தையும் உணர்ச்சியையும் இவர்களிடம் தானா நீங்கள் அடகுவைக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்; உண்மையாகப் போராடும் உலகமும் போராட்டக் களங்களும் இவர்களுக்கு வெளியே காத்துக் கொண்டிருக்கிறது. சமூக முறைகேடுகள் குறித்து கோபமிருப்போர் அத்தகைய களங்களுக்குள் வரவேண்டும். மெழுகுவர்த்தி கோமாளிகளைப் புறக்கணிக்க வேண்டும்.

_________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. Like Vinavu, i don’t supported Anna Hazaare’s previous fast and i won’t support his current fasting. What i thought, the same, i read from Gnani’s article in his ‘O’pakkangal. He also not supported his fast. Now, the comedian (In reality, a fascist) Ramdev started his show.

    I want to say enge poguthu naadu!!!!!!!!!!!

    Thanks for Vinavu’s good and fabulous articles.

    May i know the author name? Special thanks for the author.

    Regards
    Kalesha

  2. ###சமூக முறைகேடுகள் குறித்து கோபமிருப்போர் அத்தகைய களங்களுக்குள் வரவேண்டும். மெழுகுவர்த்தி கோமாளிகளைப் புறக்கணிக்க வேண்டும்### good lines.

    • ஊழலை எதிர்க்கவா வேண்டாமா சரியாக பதில் சொல்லுங்கள் . குழப்பம் குடியில் இல்லை.

  3. யார் மிகத் திறமையாக மீடியாக்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு, நாடகமாடி, கண்ணீர் விட்டு, கதறி, அதிக பட்சமாக மக்களின் கவனத்தைக் கவர்ந்து, அடுத்த ஜனாதிபதி பதவியில் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியைப்பிடித்து, நாற்காலியில் தொபுகடீரென்று அமர்ந்து கொள்கிறாரோ, அவர்தான் மஹா பெரியவர்…!

    ஆனால் இவர்கள் இருவரில் யாரோ ஒருவர்தான் அடுத்த ஜனாதிபதி!

    இதற்காகத்தான் இந்த ‘டகால்டி’ வேலையெல்லாம்…

    • டாக்டர் பட்டம் படித்த தலைமை மந்திரியும் அப்படித்தான் உள்ளார்.

  4. ஒரு கிராமத்தை முன்னேற்றி காட்டியவர் என்ற வகையில் அன்னாவுக்கு என் வணக்கங்கள் மற்ற படி அவர் வினவு கூறுவது போல் தன்னைதானே சிவில் சமுகத்தின் பிரிதிநிதியாக நியமித்து கொண்டுள்ளார் இவர்கள் குழுவுக்குள் ஜனநாயகமே கிடையாது என்பது உண்மையே

  5. கோமாளிகள் கூத்தாடுகிறார்கள். கோடிக்கணக்கானோர் வேடிக்கை பார்க்கிறார்கள். ஊடகங்களின் ‘ரன்னிங் கமெண்ட்ரி’ படு ஜோராய் நடக்கிறது. மற்றபடி விடிந்தால் கூத்து முடியும்.தூக்கம் கெட்ட மக்களும் கண்களைக் கசக்கிக் கொண்டு வீடு திரும்புவார்கள். தூக்கம் கெட்டது பற்றி மக்களுக்குக் கவலையில்லை. உழைப்பின் களைப்பை மறக்க மக்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பொழுது போக்கு கூத்து. மற்றபடி ஒரே நேரத்தில், ஒரே மேடையில் இரண்டு பபூண்கள் என்பதில் மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். அந்த வயைில் கூத்துகள் நடக்கட்டும். மக்கள் நோயின்றி வாழட்டும். நோய் தீர்ப்பதில் இருவரும் பெரியவர்களே.

  6. அது சரி ,னமதுநாட்டில்நடக்கும் மிக மொசமான ஊழல்கலைக் கன்டுகொல்லாமல் இருக்க வென்டியதுதானா?
    நாய் பிஷ்கட்டுக்கு அலையும் MC கூட அரசு பனத்தை மொசம் பன்ரானுக.ஒப்பந்தக்காரர்கிட 60 சத வேதத்தை புடுஙேராங.அப்பரம் யார்தான் அவஙலைத் தட்டிக் கெட்பது?

    • சூத்திரன் கொள்ளையடித்தால் அது தவறில்லை என்று இங்கு கூறலாம். நேர்மையான சூழ்ச்சி இல்லாத இந்தியாவை உருவாக்க முயற்சிப்போம் சாதி மத பேதமின்றி . சம தர்மம் தளைக்க மக்களாகிய நாம் இடை விடாது போராட வேண்டும்.

  7. இங்கு எல்லோரும் தரக்குறைவாக தனி நபர் விமர்சனம் செய்கிறார்கள். ஏன் ஊழல் பற்றி பேச முன் வர மறுக்கிறீர்கள்? ஏனென்றால் ஊழல் இல்லாத மனிதனே (என்னையும் சேர்த்து) ஒருவனுமே இந்தியாவில் இல்லை என்பதுதான் உண்மை. ஊழல் செய்பவர்களை எதிர்ப்பதற்கு பதிலாக வேறு என்னென்மோ இங்கு பேசுகிறார்கள். ஆரோக்கியமான சிந்தனை நம்மில் இல்லை என்றே சொல்ல வேண்டும். சிவப்பு சிந்தனைகள் எதற்கும் பயன் தராது. ஊழலை எதிர்க்க முயற்சியுங்கள் …………….

  8. வினவு என்ற ஒரு வலைத் தளம் போதும் இந்தக் கயவர்களின் கெட்ட புத்தியைத் தெரிந்து கொள்வதற்கு. இந்த வலைத் தளத்தில் தெரியாத்தனமாகச் சென்று பின்னூட்டம் இட்டு எனது நேரத்தைப் பலமுறை வீணடித்து இருக்கிறேன்.

    http://www.jeyamohan.in/?p=15076

  9. //சமூக முறைகேடுகள் குறித்து கோபமிருப்போர் அத்தகைய களங்களுக்குள் வரவேண்டும். மெழுகுவர்த்தி கோமாளிகளைப் புறக்கணிக்க வேண்டும்//
    மக்கள் அனைவரும் மனம் மாறவேண்டும்……… மாறும் ஒரு நாள்

  10. ராம் லீலா மைதானத்தில் போலிசார் இவரை தேடி வந்த போது கூட்டத்தில் குதித்து, பெண்களின் நடுவே சுடிதார் அணிந்து கொண்டு ஒளிந்து கொண்டார். அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில், உண்ணா விரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதி கூறி விட்டு, அதிலிருந்து பின் வாங்கினார்.

    இவரது நடவடிக்கைகள் எந்த விதத்திலும் மக்களை வழிநடத்தக் கூடிய தலைமைப் பண்புகள் இவருக்கு இருப்பதாக தெரிவிக்கவில்லை. இவரை நம்பி போரடுபவர்களை பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.

  11. பாகிஸ்தானில் மத துவேஷ சட்டத்த எதிர்த்த கவர்னர் கொல்லப்பட்டார் அதா பத்தி எழுத வக்கில்ல ஒனக்கு

  12. மக்களுக்கு ஏன் நிகழ்கால அரசியல், நிர்வாகம் மீது கோபம் வருகிறது ? காரணங்கள் இதோ ………….

    ஜனாதிபதி தகுதி :
    முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர்.
    குற்ற பின்னணி உடையவர்.

    பிரதமர் :
    முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர். இதோ சில தெரியதுகள் …

    1) 2G ஊழலா .. தெரியாது

    2) commonwealth games ஊழலா .. தெரியாது

    3) adarsh ஊழலா .. தெரியாது

    4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கெட்டு போகிறதா ? தெரியாது.

    5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.

    6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.

    தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.

    நிதி அமைச்சர்:

    மேற்படி அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்து இருப்பவர்.

    உள்துறை அமைச்சர் :
    வெற்றி பெற்றாரா என்ற சந்தேகம் உலகம் முழுதும் உண்டு. கருப்பு பணம் பட்டியலில் இவரது மகன் பெயர் முதலில் உள்ளதாக செய்தி. இவர் குடும்பம் பற்றி தனியாக எழுதலாம்.

    முன்னாள் உள்துறை அமைச்சர் :
    தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அதிக அக்கறை உள்ளவர். டெல்லி மற்றும் மும்பையில் குண்டு வெடித்தால் கண்டு கொள்ளாதவர்.

    தொலைதொடர்பு துறை :

    முன்னாள் அமைச்சர் திகார் சிறையில்.
    இந்நாள் அமைச்சர் மிக சிறந்த வக்கீல் (திருடர்களுக்கு). 2G “ஜீரோ லாஸ்” என்ற தத்துவத்தை உதிர்த்தவர்.

    மத்திய வேளாண் அமைச்சர்:
    இவர் எதற்கான அமைச்சர் என்பது உலகம் முழுவதும் தெரியும். கிரிக்கெட் அமைச்சர். திருடர்களின் (சாஹிட் பால்வா) கூட்டாளி. உணவு தானியங்கள் கிடங்குகளில் கெட்டு போகின்றன என்று உச்ச நீதி மன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவர்களின் தலைவர் :
    என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் pizza விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.

    முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை :
    பல முறை கேடுகளுக்கு சொந்தம். இன்று சொத்து கணக்கை வெளியிட மாட்டேன் என்று சொல்லி விட்டார்.

    முன்னாள் ஊழல் கண்காணிப்பு தலைவர் :
    இவரைப்பற்றி நாடே அறியும். நான் என்ன சொல்ல வேண்டும்.

    கருப்பு பணம் தலைவர் :
    இவருக்கு இந்நாள் உள்துறை மனைவி வக்கீல். நல்ல குடும்பம்.

    பாண்டிசேரி ஆளுனர் :
    மேற்படி ஆளுக்கு பாஸ்போர்ட் வாங்கி கொடுத்தவர்.

    தமிழ் நாட்டை பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை.

    எனவே இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு யார் தலைவர் என்று மக்கள் பார்க்கவில்லை.

    தாவூத் இப்ராஹீம் அல்லது நாதுராம் கோட்சே உயிருடன் எழுந்து வந்து போராடினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகி விட்டார்கள். மக்கள் பகத்சிங், சுபாஷ் அல்லது ஜெயப்ரகாஷ் நாராயணன் வரும் வரை பொருத்து கொள்ளத் தயாராக இல்லை.

    • //இவர்களின் தலைவர்:
      என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் pizza விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.//

      அப்படியே தன் சொந்த நாட்டில் மது பாரில் பணிப் பெண்ணாக வேலை பார்த்தவர் என்பதையும் சொல்ல மறந்து விட்டீர்களே…

  13. அய்யா:

    பொதுவாக நீங்கள் என்.ஜி.வோக்களை விமர்சனம் செய்யும் விதம் நேர்மையாக இல்லை. இந்த நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே போர்வையில் போர்த்தி விமர்சிப்பது சரியானது அல்ல. உலக அளவில் தற்போது பயன்படுத்தும் இந்த என்.ஜி.வோ (N.G.O) என்ற வகைப்பாடு மேற்குலகில் தோன்றியதே. இந்த வகைப் படுத்தல்களை அவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுவதில்லை. இதே மேற்குலகம் இன்று இந்த நிறுவனங்களை- அரசு அல்லாத செயல்பாட்டாளர்கள் (Non State Actors) என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். இந்த வகைபாட்டில் வினவு போன்ற நிறுவனங்களும் அடக்கம்.

    சில காலம் முன் சுமந்தா பானர்ஜி எழுதிய மலரிடைப் புதைந்த கந்தகக் குண்டுகள் என்ற சுய விமர்சனக் கட்டுரையை நீங்கள் ஒரு முறை படிப்பது நலம். இந்தியக் கம்யுனிஸ்டுகள் (வினவின் தாய் தந்தையர் உட்பட)எவ்வாறு சமுக சீர்திருத்தவாத இயக்கங்களை- குறிப்பாக மக்களிடம் நேரடியாக இணைந்து பண் செய்யும் பல தன்னார்வ நிறுவனங்கள், சுயமரியாதை நிறுவனங்கள், குடியுரிமை, ஜனநாயக உரிமைக்காக வாதிடும் சட்டவாத இயக்கங்களை- எவ்வித விமர்சனமும் இன்றி காறி உமிழ்வதை அவர் விவாதித்திருப்பதைக் காணலாம். உங்களைப் போன்ற நிறுவனங்கள் அதே வழமையைக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்வது நலம். மீண்டும் ஒரு முறை அந்தக் கட்டுரையை நீங்களும் உங்கள் எழுத்தாளர்களும் படிப்பது நலம்.

    இத்தகைய குருட்டுத்தனமான விமர்சனத்தால் பழங்குடிகள், போராடும் நகர்ப்புற ஏழைகள், போன்ற மிகப் பெரும் பிரிவினரிடம் இருந்து புரட்சிகர இயக்கங்கள் பல காத தூரம் விலகி நிற்பதை அவர் விமர்சனம் செய்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
    விசயத்திற்கு வருவோம்.

    நீங்கள் அன்னா ஹஜாரே குறித்து எழுதியிருக்கும் கட்டுரைகளில் அவர் ஏதோ ஒரு அரசின் கைக்கூலி போன்று வருணனை வருவது உண்மை அல்ல. அவர் மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகளின் சுயமரியாதைக்கும், கிராமப்புற சீர்திருத்ததிற்கும் கடந்த முப்பது ஆண்டுகளாகச் செய்து வரும் பணிகளை அறிந்து கொண்டு அதன் பின் விமர்சனம் செய்வது நலம். அவர் லஞ்சத்திற்கு எதிராக பல போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தியாவர். நடத்தி வருபவர். அவர் கடந்த என்பதாம் ஆண்டுகளில் இருந்து விவசாயிகளைத் திரட்டி மின்சார வாரியம், நீர்ப் பாசனம் போன்ற அரசுத் துறைகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புப் போராட்டம் நடத்திப் போராடிவருகிறார். மராட்டிய மாநில அமைச்சர்கள் பலர் (சிவ சேனை, காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் கட்சியினர்) மீது நேரடியாக குற்றம் சாட்டி மக்களைத் திரட்டிப் போராடியவர்.

    உங்கள் வினவு தளத்தின் எழுத்தாளர்களும் விவரம் அறியாத சிறுபிள்ளைகள் போல இன்டர்நெட்டில் தேடி கட அண்ட் பேஸ்ட் (சுட் அன்ட் பச்டெ) செய்யும் எழுத்தாளர்களாக மாறி வருவது வருந்தத்தக்கது. அரசியல் நேர்மை பற்றி எழுதுவதற்கு/பேசுவதற்கு முன் உங்களிடம் தனி மனித நேர்மை மிகவும் அவசியம். மக்கள் நிஜ உலகின் செயல் பாடுகளில் இருந்துதான் அரசியல் கற்றுக் கொள்கிறார்கள். மாற்றுக் கருத்து இருப்பினும் நேர்மையான ஒருவரை அவதூறாகப் பேசுவதும் எழுதுவதும் நல்லதல்ல. உங்களை போன்றவர்கள் மீண்டும் தனிமைப் படத்தான் வழிவகுக்கும்.

    அன்னா ஹசரே போன்றவர்களை தனியார் தொலைக் காட்சிகள் தூக்கிப் பிடிப்பது தொலைக் காட்சி நிறுவனங்களின் சுயலாபத்திற்குத் தான். ஆனாலும் அதற்காக அண்ணா ஹஜாரேயும் தன்னுடைய சுயலாபத்திற்காக செயல்படுகிறார் என்ற பாணியில் எழுதுவது நேர்மையான செயல் அல்ல.

    அரசியல் சாராத இயக்கங்களை ஒவ்வொரு பிரிவினரும் தமது நலனுக்கு பயன்படுத்த விழைவது இயல்பே. அதுபோலத்தான் இந்த டி.விக்களும் செய்கின்றன. ஆனாலும், அதற்காக அத்தகைய இயக்கங்களை கோமாளிகள், நீங்கள் வசைபாடுவது சுமந்தா குறிப்பிடுவது போல உண்மையைப் பார்க்கத் தவறுவது. இப்படித் தான் மிகப் பெரும் போரட்டங்களான தமிழ் நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு, நர்மதை ஆணை எதிர்ப்பு, ஒரிசாவின் சுரங்கங்கள் எதிரான போராட்டங்களை இந்திய புரட்சிகர இயக்கங்கள் கண்டுகொள்ளவே இல்லை. மீண்டும் அதே தவறைச் செய்ய வேண்டாம்.

    கணபதி

    • நல்லா சொன்னீங்க கணபதி அய்யா. சம்ந்தா பானர்ஜி அவர்களின் கட்டுரைக்கான லிங்க் அளிக்க முடியுமா ? தேடிக்கொண்டிருகிறேன்…

  14. வினவுக்கு,
    சாதி ,மதம் சார்ந்த இந்த போலி போராளிகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் ,வுன்ன உணவு ,உடுத்த உடை ,இறுக்க இடம் என தேவை வுள்ள மக்கள் இந்த வுலகில் இறுக்கும்போது இவனுன்கலுக்கு மட்டும்தான் கருப்பு பணமும்,லஞ்சமும் முக்கியபிரசினை,எத்தனையோ பிரசினை தலை விரித்தாடும் இந்த நேரத்தில் மீடியா என்று சொல்கிற முட்டாள்களை கையில் வைத்து கொண்டு சுஷ்மா போன்ற டான்ஸ் காரியை ஆடவைத்து ,நாட்டில் உள்ள மக்களை கேனையாக்கி விட்டார்கள் அரசின் வுள்துறை கொண்டு.போராளிகளை வுருவக்குவேன் என்று வொருவன் (144 கோடிஅதிகார பூர்வ சொத்து) சொல்கிறான்.அவன் ஹெல்பர் ஒரு போலி பாஸ்போர்ட் வேறு அவனுங்களுக்கு ஒரு உள்துறை மந்திரி பதில் சொல்கிறார் ,மனது கொதிக்கிறது. சாமானியர்களை நினைவில் கொள்ளாத இந்த போலி அரசாங்கமும் சாதி,மதம் என்ற போர்வையில் வலுவான கட்டமைப்பில் இறுக்கும்போது ,வினவு போன்ற வலை தளம் பலப்பல வுருவாக வேண்டும்.அவர்களை வேர் அறுக்கவேண்டும். – மெய்தேடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க