Friday, June 2, 2023
முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விஅறிவாளிகளின் அந்தரங்கம் - லெனின்

அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்

-

மார்க்சியத்தை ஏற்கிறேன்; ஆனால் கட்சியில் இருக்க மாட்டேன் என்று ஒருவர் கூறினால் அவர் வேறு எதுவாகவோ இருக்க முடியுமே தவிர கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உயிரே கட்சி அமைப்புதான் என்றார் லெனின். பல்வேறு போக்குகள் கொண்ட குழுக்களாக இருந்த ரசிய சமூக ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மாநாடு 1903-இல் நடந்தது. அதில் கட்சி கட்டுவது குறித்த பாட்டாளிகளின் கண்ணோட்டம், செயல்முறை, அமைப்புமுறை பற்றி உறுதியுடன் வழக்காடிய லெனின் அதையெல்லாம் தொகுத்தளித்த நூல்தான் ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அறிவாளிகள் வழியா? பாட்டாளிகள் வழியா? எது சரி என்பதை சுவைபட விவரிக்கிறது இந்நூல்.

மாநாட்டில் லெனினின் வழியை ஏற்ற பெரும்பான்மையினர் போல்ஷ்விக்குகள் என்று பிரிந்தது அப்போதுதான். அன்று மட்டுமல்ல, இன்றும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளும், அறிவாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கிறது, இனியும் அப்படித்தான். ஏன்? அறிவாளிகளின் சமூக, உளவியல் பின்னணியை ‘காவுட்ஸ்கி’யின் கட்டுரையின் மூலம் விளக்கி பதில் தருகிறார் லெனின்.

அறிவாளிகளின் பண்புகள் ‘மண்ணுக்கேற்றபடியெல்லாம் மாறுவதில்லை’, உலகெங்கிலும் ஒரே மாதிரிதான். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு சமூக நடவடிக்கையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஏராளம் இருக்கிறார்கள். புரட்சிகரக் கம்யூனிஸ்டுக் கட்சிகளை எதிர்ப்பதில் மட்டும் இவர்கள் ஒன்றுபடவில்லை. தமது கத்துக்குட்டி அறிவின் மூலம் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் இவர்களது சிந்தனைமுறை, வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வு, தன்னகங்கார தனித்துவம் இன்னும் ஏராளமானவற்றில் ஒன்றுபடுகிறார்கள்.

பெரும்பான்மை மக்களோ, கட்சியோ, சமூகமோ இவற்றுடன் முரண்பட்டு தன்னை உயர்வாய் நினைத்துக் கொள்ளும் அறிவாளிகளின் பாத்திரத்தை ‘அதே அறிவைக்’ கொண்டு ஆய்கிறார் லெனின். இனி அவரது வார்த்தையிலேயே பார்ப்போம்.

_________________

அறிவாளிகளின் அந்தரங்கம் - லெனின்.இந்தச் சந்தர்ப்பத்தில், இங்குமில்லாமல் அங்குமில்லாமல் ஊசலாடும் அறிவாளியின் பண்பு பற்றி கார்ல் காவுட்ஸ்கி அண்மையில் கூறிய சிறப்புமிக்க சமூக, உளவியல் வரையறையை நினைவுக்குக் கொண்டுவராமல் இருக்க முடியாது. பல்வேறு நாடுகளின் சமூக ஜனநாயகக் கட்சிகள் அண்மைக் காலங்களில் இப்படிப்பட்ட குறைபாடுகளுக்கு அடிக்கடி ஆளாகின்றன.

எனவே இத்தகைய நோயின் குணம் பற்றியும் அதிக அனுபவமிக்க தோழர்கள் வாயிலாகக் கற்றுக் கொள்வது நமக்கு மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும். எனவே குறிப்பிட்ட சில அறிவாளிகள் குறித்த காவுட்ஸ்கியின் வரையறை நாம் எடுத்துக் கொண்ட பொருளிலிருந்து விலகிச் செல்வது போன்று மேற்பார்வைக்குத் தோன்றலாம்.

”இன்றைக்கு நமது கவனத்தை மிகுந்த அளவு ஈர்க்கிற பிரச்சனை அறிவாளிகளுக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள பகை முரண்பாடாகும். (ஜெர்மன் சொற்களான லிட்டராட் மற்றும் லிட்டராடென்டம் ஆகிய சொற்களை மொழி பெயர்த்து அறிவாளி, அறிவுத்துறையினர் என்று நான் பயன்படுத்துகிறேன்). நான் இந்த முரண்பாட்டை ஏற்றுக் கொள்வதால் எனது நண்பர்கள் அநேகமாக என்மீது கோபமாக இருப்பார்கள். (காவுட்ஸ்கியே ஓர் அறிவாளி, ஓர் எழுத்தாளர், ஓர் பத்திரிகையாசிரியர்- லெனின்) ஆனால் உண்மையிலேயே அந்தப் பகை முரண்பாடு இருக்கிறது.

ஏனைய விஷயங்களைப் போலவே, இதனை மறுப்பதன்மூலம் வெல்ல நினைப்பது பேதமையான தந்திரமாகும். இம்முரண்பாடு சமூகப் பண்பாகும்; அது வர்க்கங்கள் சம்பந்தப்பட்டது; தனி நபர் சம்பந்தப்பட்டதல்ல. ஒரு தனிப்பட்ட அறிவாளி, ஒரு தனித்த முதலாளியைப் போல, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் பாட்டாளிகளோடு தன்னை இணைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும் போது, அவர் தனது குணாம்சத்தையும் மாற்றிக் கொள்கிறார். கீழே பிரதானமாக நான் பேசப்போவது இப்படிப்பட்ட வகை மாதிரியான அறிவாளிகளைப் பற்றி அல்ல. காரணம், அவர்கள் ஒரு சில விதி விலக்கானவர்கள்.

முதலாளித்துவச் சமுதாயத்தின் நிலைப்பாடுகளையே தனது நிலைப்பாடுகளாக ஏற்றுக் கொண்ட பரவலாகக் காண கிடைக்கிற அறிவாளிகளைக் குறிப்பிடவே நான் அறிவாளி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன். அறிவுத்துறையினர் என்ற வகையில் ஒரு தனி வர்க்கத்தின் குணாம்சத்தை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். இந்த வர்க்கம் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒருவகையில் பகை முரண்பாடு கொண்டதாக இருக்கிறது.

”எனினும், இந்த முரண்பாடு முதலுக்கும் உழைப்புக்குமான முரண்பாட்டிலிருந்து வேறுபடுகிறது. அறிவாளி ஒரு முதலாளி அல்ல. அவரது வாழ்க்கைத்தரம் முதலாளித்துவத்தன்மை உடையது என்பது உண்மையே; தான் ஒரு ஓட்டாண்டியாகாமல் தடுக்க அத்தகைய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது; ஆனால் அதே நேரத்தில் தன் உழைப்பின் விளைபொருளை அவர் விற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார். பெரும்பாலும் உழைப்புச் சக்தியை விற்கும்படி ஆகிறது. அடிக்கடி அவர் முதலாளியால் சுரண்டப்படுகிறார்; அவமதிப்புக்குள்ளாகிறார்.

எனவே, அறிவாளிக்குப் பாட்டாளி வர்க்கத்தோடு பொருளாதாரப் பகை முரண் ஏதுமில்லை. ஆனால் அவரது வாழ்க்கை நிலையும், உழைப்புச் சூழலும் பாட்டாளி வர்க்க ரீதியாக இல்லை. இதுவே உணர்வுகளிலும் கருத்துக்களிலும் பகை முரண்பாட்டைத் தோற்றுவிக்கிறது.

”தனிப்படுத்தப்பட்ட ஒரு தனிநபராக இருக்கும் பாட்டாளி ஒரு பொருட்டேயல்ல. அவரது சக்தி அனைத்தும், அவரது முன்னேற்றம் முழுவதும், அவரது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாமும் அமைப்பிலிருந்தும் அவர் தமது தோழர்களோடு சேர்ந்து எடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கையிலிருந்தும் பெறப்பட்டவை. பெரியதும் வலிமை மிக்கதுமான அமைப்பின் ஓர் அங்கமாக அவர் விளங்கும்போது அவர் பெரியவராக வலிமை மிக்கவராக விளங்குகிறார். இந்த அமைப்புதான் அவருக்குப் பிரதானமானது; இதனோடு ஒப்பிடும்போது தனிநபர் பொருட்டாக மாட்டார். முகம் தெரியாத மிகப் பெரும் மக்கள் திரளின் பகுதியாகப் பாட்டாளி மிகப் பெரும் ஆர்வத்தோடு போராடுகிறார். இதில் சுயநலனுக்கோ, தனிப்பட்டவர் புகழுக்கோ இடமில்லை. தாம் நியமிக்கப்படும் எந்த ஒரு நிலையிலும் சுயகட்டுப்பாட்டோடு அவர் கடமையாற்றுகிறார்; அது அவரது உணர்வுகள் எண்ணங்கள் முழுமையையும் தழுவிக் கொண்டுவிடுகிறது.

”அறிவாளிகளின் விஷயமோ முற்றிலும் வேறானது. தனது சக்தியை வைத்துப் போரிடாமல் வாதங்களை வைத்துப் போரிடுகிறார். அவரது ஆயுதங்களோ அவரது சொந்த அறிவு, சொந்ததிறமை, சொந்த நம்பிக்கைகள் மட்டுமே; எந்த ஒரு பதவியையும் கூட அவர் தனது சொந்தப் பண்புகளால் மட்டுமே அடையமுடியும். எந்த ஒரு வெற்றிகரமான நடவடிக்கைக்கும் தனது தனித்துவத்தைக் கட்டவிழ்த்து விடுவதே அவருக்கு முக்கிய நிபந்தனையாகப்படுகிறது. முழுமைக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தி ஒரு பகுதியாக விளங்குவதற்கு அவர் மிகுந்த சிரமத்தின் பேரில்தான் ஒப்புக் கொள்கிறார். அதுவும் கூட அவசியத்தினால் ஏற்றுக் கொள்கிறாரே தவிர, ஆர்வத்தினால் அல்ல. ஒழுங்கு கட்டுப்பாடு மக்கள் திரளுக்கு மட்டுமே அவசியம் என்று அவர் அங்கீகரிக்கிறார்; ஆனால் தேர்ந்த உள்ளங்களுக்கல்ல. தம்மை பின்னதாகச் சொல்லப்பட்டவர்களோடு சேர்த்துக் கொள்கிறார்.

நீட்சேயின் தத்துவமே அறிவாளியின் உண்மைத் தத்துவமாகும். அதி மனிதன் கோட்பாட்டையும் சேர்த்து அத்தத்துவத்தில் தனிமனித ஆளுமையை நிறைவு செய்வதே எல்லாம்; இப்படிப்பட்ட தனித்துவத்தை பெரியதொரு சமூக நோக்கத்திற்குக் கீழ்ப்படுத்துவது இழிவானது, கேவலமானது. இத்தத்துவமே அறிவாளியை பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்க முடியாதபடி ஆக்கி விடுகிறது.

”நீட்சேவுக்கு அடுத்து, அறிவுத் துறையினரின் உணர்வுகளுக்கு விடையளிக்கத்தக்க ஓர் தத்துவத்தை எடுத்து விளக்கியவர் அநேகமாக இப்சனாகத்தான் இருக்க வேண்டும். அவரது ‘மக்களின் எதிரி’ என்ற நாடகத்தில் வரும் டாக்டர் ஸ்டாக்மான், பலர் சொல்வது போல, சோசலிஸ்டு அல்ல; பாட்டாளி வர்க்கத்தோடு நிச்சயம் மோதலுக்கு வரப்போகும் அறிவாளி வகையைச் சேர்ந்தவரே. பாட்டாளி வர்க்க இயக்கத்தோடு மட்டுமல்ல, பொதுவில் வேறு எந்த வகையான மக்கள் இயக்கமாக இருந்தாலும் அதற்குள் அவர் வேலை செய்ய ஆரம்பித்ததுமே அதற்கெதிராக மோதத் தொடங்கி விடுவார்.

பாட்டாளி வர்க்க இயக்கம், ஏன் ஒவ்வொரு ஜனநாயக இயக்கத்தின் அடித்தளமாக விளங்குவது, ஒருவர் தனது சக தோழர்களின் பெரும்பான்மைக்கு மதிப்புக் கொடுப்பதாகும். ஆனால் ஸ்டாக்மன் வகையைச் சேர்ந்த அறிவாளியோ ‘திட்டவட்டமான பெரும்பான்மை’யை தூக்கி எறியப்பட வேண்டிய ஓர் அரக்கனாகவே கருதுகிறார்….

”பாட்டாளி வர்க்க உணர்வுகளோடு ஊறிப்போன ஓர் அறிவாளிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஜெர்மானிய லீப்னெக்ட் ஆவார். இவர் சிறந்த எழுத்தாளராக இருந்தும் அறிவாளியின் குறிப்பான தனிப்பட்ட குணாம்சத்தை இழந்துவிட்டார்; அவர் பாட்டாளிகளின் படை அணிகளோடு மகிழ்ச்சியோடு நடை போட்டவர்; தான் நியமிக்கப்பட்ட எந்த ஒரு பதவியிலும் அவர் பணிபுரிந்தார். நமது மாபெரும் லட்சியத்திற்கு முழுமனத்தோடு தன்னைக் கீழ்ப்படுத்தினார். இப்சனிலும் நீட்சேவிலும் பயிற்சி பெற்ற அறிவாளிகள் தமது தனித்தன்மை ஒடுக்கப்படுகிறது என்று தீனமான குரல் ஊளையிட்டதை அவர் வெறுத்து ஒதுக்கினார்.

சிறுபான்மையில் தங்களைக் காண நேர்ந்த அறிவாளிகள் இப்படிப்பட்ட பண்புகளை வெளியிடக்கூடும். லீப்னெக்ட், சோசலிச இயக்கத்திற்குத் தேவையான அறிவாளி வகையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். காரல் மார்க்சையும் கூட இங்கே நான் குறிப்பிடலாம். அவர் தன்னை முன்னுக்குத் தள்ளிக் கொண்டதேயில்லை; சர்வதேச அகிலத்தில் பலமுறை சிறுபான்மையாக இருந்த போதும் அவர் கட்சிக் கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டது மிக மிக அசாதாரணமானது.

(மூலம்: ஆங்கிலம். ஓரடி முன்னே ஈரடி பின்னே – லெனின்: தொகுப்பு நூல்கள்  தொகுதி 7, பக்கம் 322 – 4)

– புதிய கலாச்சாரம், ஜூலை 1998

  1. சிறப்பான கட்டுரை, மொழி நடை புரிந்துகொள்வதற்க்கு சற்று கடினமாக இருக்கிறது, இன்னும் சற்று எளிமைப்படுத்தியிருக்கலாம்.

  2. கம்யூனிசத்தை பின்பற்றாதவர்களை அறிவாளிகள் என்று அழைப்பதையே மறுக்கிறேன்.. ஒவ்வொரு அறிவாளிக்குள்ளும் ஒரு காம்ரேடும் ஒரு முதலாளியும் சமமாக உள்ளனர். யாரை அந்த அறிவாளி உயர்த்த நினைக்கிராறோ அதாக உருவெடுக்கிறார்.. எனினும் மற்றொன்று முழுவதுமாக அழிவதே இல்லை.. நானே உதாரணம்.. இயற்பியல் கற்பிக்கும் பேராசிரியனான நான், கடவுள் மறுப்பையும் சாதி மறுப்பையும், தொழிலாளர் உயர்வயும் முழு மனதோடு ஆதரிக்கும் அதே நேரத்தில் என் பெயரிலுள்ள “ஐயர்” என்ற சொல்லை நீக்க தயங்குகிறேன்.. உண்மையிலேயே “பெயரளவில்” மட்டும் பிராமணனனாக உள்ள எனது பெயரை கேட்டால் “சாதி வெறி பிடித்தவன்” என்ற எண்ணம் வருவது இயல்புதான்.. ஆனால் அது முழுமையாக காம்ரேடாக மாறாத எனக்குளுள்ள என்னால் இன்னும் கொல்ல முடியாத முதலாளியேயன்றி அது முழுமையான நான் அல்ல..

  3. //முழுமைக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தி ஒரு பகுதியாக விளங்குவதற்கு அவர் மிகுந்த சிரமத்தின் பேரில்தான் ஒப்புக் கொள்கிறார். அதுவும் கூட அவசியத்தினால் ஏற்றுக் கொள்கிறாரே தவிர, ஆர்வத்தினால் அல்ல. ஒழுங்கு கட்டுப்பாடு மக்கள் திரளுக்கு மட்டுமே அவசியம் என்று அவர் அங்கீகரிக்கிறார்; ஆனால் தேர்ந்த உள்ளங்களுக்கல்ல. தம்மை பின்னதாகச் சொல்லப்பட்டவர்களோடு சேர்த்துக் கொள்கிறார்.//

    தமிழ்நாட்டில் இருக்கும் புத்திஜீவிகள் பெரும்பாலனோரின் பிரச்சினை இது. கமிசார்கள் கமிசார்கள் என்று புலம்பித் தவிக்கும் ஜெயமோகன் இதில் கொஞ்சம் இழிந்த கேட்டகிரி என்றால் இன்னும் சிலர் கொஞ்சம் மைல்டாக இதே கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.

    //பாட்டாளி வர்க்க இயக்கம், ஏன் ஒவ்வொரு ஜனநாயக இயக்கத்தின் அடித்தளமாக விளங்குவது, ஒருவர் தனது சக தோழர்களின் பெரும்பான்மைக்கு மதிப்புக் கொடுப்பதாகும்.//

    அருமையான பதிவு.

    நன்றி வினவு.

  4. மெய் பொருள் காண்பதறிவு. கற்றது கைமண் அளவு. இவை எல்லோருக்கும் பொருந்தும். லெனின் அல்லது மார்க்ஸ் சொன்னா அப்படியே வேத வாக்கா எடுத்த முடியாது. ஜெனிடிக்ஸ் மற்றும் புதிய இயற்பியல் பற்றி லெனின் சொன்னதை எடுத்தியம்புங்களேன் !!

    ’அறிவுஜீவிகளை’ பாட்டாளி வர்க சர்வாதிகார நாடுகள் எப்படி நசுக்கின என்ற வரலாறு கண் முன்னே உள்ளது. இவை எல்லாம் அவதூறகள் அல்ல, நிஜம் தான் என்பதற்கு வினவு மற்றும் அசுரன்களின் பதிவுகளே சாட்சி. இப்பவே இத்தனை ‘மேட்டிமை திமிருடன்’ சகட்டுமேனிக்க பலரையும் கீழ்தரமாக சாடுபவர்கள் கையில் நாளை அதிகாரம் கிட்டினால், கண்டிப்பாக பலரையும் போட்டு தள்ளுவாக அல்லது சிறையில் அடைக்க தயங்கமாட்டார்கள். நல்ல வேளையா அப்படி ஒரு ’சாத்தியம்’ இனி எப்போதும் இருக்காது..

    • ////“ஜெனிடிக்ஸ் என்பதே முதலாளித்துவ – கருத்துமுதல்வாத பிற்போக்குவாதிகளின் வக்கிரம். உயிரினங்களையே மாற்றி அமைப்பதில் சோவியத் அடையப்போகும் வெற்றியைத் தடுத்து, குழப்பம் விளைவிக்கச் செய்யும் சதி வேலை” என்று கூறினார் ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட லைசென்கோ என்கிற வேளாண்மை அறிவியலாளர்./////

      பார்க்கவும் :

      ஒரு மடாதிபதியின் அறிவியல்
      http://www.tamilpaper.net/?p=430

    • லெனின் என்ன சொன்னாருன்னு குருநாதர் அ.மார்க்சு கிட்ட கேட்டு சொல்லுங்க‌

  5. //////“ஜெனிடிக்ஸ் என்பதே முதலாளித்துவ – கருத்துமுதல்வாத பிற்போக்குவாதிகளின் வக்கிரம். உயிரினங்களையே மாற்றி அமைப்பதில் சோவியத் அடையப்போகும் வெற்றியைத் தடுத்து, குழப்பம் விளைவிக்கச் செய்யும் சதி வேலை” என்று கூறினார் ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட லைசென்கோ என்கிற வேளாண்மை அறிவியலாளர்./////

    பார்க்கவும் :

    ஒரு மடாதிபதியின் அறிவியல்
    http://www.tamilpaper.net/?p=430
    //

    வலதுசாரி தமிழ்ப்பேப்பரில் அரவிந்தன் போன்றோர் (சுட்டியில் இருப்பதை கழிந்தவர் யார் என்று பார்க்கும் அவசியம் எழவில்லை) கழிந்து வைப்பதை ஆதாரமாகக் கொள்ளும் அதியமானுக்கு மெய்ப்பொருளைக் காண இயலுமா?

    அரவிந்தன் இதே போல புளுகுமூட்டைகளை தமிழ்மணத்தில் அவிழ்த்துவிட்டு அவற்றை மறுத்து அவனது அண்டப் புளுகுகளை எழுதிய பொழுது பதில் சொல்ல் இயலாமல் புழுங்கி தவித்தான். அதே பொய்கள் இன்று தமிழ் பேப்பரில். அதை தூக்கிக் கொண்டு அதியமான் இங்கு வருகிறார். அதியமான் அவர்களே உங்களுக்கென்று சொந்த புத்தி உண்டா?

  6. அரவிந்தனின் மேற்படி பொய்களை ‘மெய்ப் பொருள்’ காணாமாலேயே தூக்கி வரும் அதியமான் பார்வைக்கு.

    இதே பொய்களை பயங்கரவாதி அரவிந்தன் தமிழ்மணத்தில் கழிந்த பொழுது அப்பொய்களை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.

    சோசலிசமும் – பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
    http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_8142.html

    ####
    “”Following Weismann, the Mendelist-Morganists contend that the chromosomes contain a special “hereditary substance” which resides in the body of the organism as if in a case and is transmitted to coming generations irrespective of the qualitative features of the body and its conditions of life. The conclusion drawn from this conception is that new tendencies and characteristics acquired by the organism under the influence of the conditions of its lift and development are not inherited and can have no evolutionary significance.””

    மேண்டலின்-மார்க்ன் பிரிவைச் சேர்ந்தவர்களின் கூற்றுப் படி, குரொமோசோமில் இருக்கும் ஒரு சிறப்பு பொருள் குறிப்பிட்ட உயிரினத்தின் சுற்றுச் சூழலினால் பாதிக்கப்படாமலேயே ஒரே தகவலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது. உண்மை என்னவெனில், சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல விசயங்களின் பாதிப்பினால் உருவாகும் தகவல்களும் சேர்ந்தே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.

    இதைத்தான் லைசென்கொ மறுக்கிறார். மேலேயுள்ள கருத்து தவறுதானே? இது பரினாமத்துவத்தை மறுப்பதுதானே? அதை லைசென்கோ மறுப்பதில் என்ன தவறுள்ளது?

    “”In other words, whether qualitative variations of the nature of vegetable and animal organisms depend on the conditions of life which act upon the living body, upon the organism.

    The Michurin teaching, which is in essence materialist and dialectical, proves by facts that such dependence does exist.

    The Mendel-Morgan teaching, which in essence is metaphysical and idealist, denies the existence of such dependence, though it can cite no evidence to prove its point.””

    “”Naturally, what has been said above does not imply that we deny the biological role and significance of chromosomes in the development of the cells and of the organism. But it is not at all the role which the Morganists attribute to the chromosomes.””

    இங்கு லைசென்கோ, மரபணுவில் நடைமுறை வாழ்க்கை ஏற்படுத்தும் பாதிப்புக்குள்ள தொடர்பு குறித்து சொல்கிறார். நீலகண்டன் சொல்லுவது போல குரோமோசோம் உள்ளிட்டவற்றின் பங்களிப்பை அவர் மறுக்கவில்லை(இதனை இரண்டாவது மேற்கோள் குறிப்பிடுகிறது). மாறாக அவற்றுக்கு மட்டுமே அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைத்தான் மறுக்கிறார்.

    ஆக, நடைமுறை வாழ்க்கை மரபணுவில் பதிய வைக்கும் செய்திகளை மறுக்கும் மாண்டலிய-மார்கன் குழுவினரின் சில கருத்துக்களைத்தான் லைசென்கோ மறுக்கிறார். இப்படிப்பட்ட கருத்துக்கள் யாருக்கு தேவைப்படுகிறது? வேறு யாருக்கு கருத்து முதல் வாதிகளான மத வெறியர்களுக்குத்தான் தேவைப்படுகிறது. ஏனேனில் சுற்றுச்சூழல் அல்லாத வேறு எதோ விசயம் உயிரணங்களின் பண்பை தீர்மானிப்பதாக நிறுவ முடியும் எனில் அந்த இடைவெளியில் கடவுளை கொண்டு வந்து உட்கார வைப்பது வெகு சுல்பமல்லவா?(அறிவியலை திரிக்கும் இந்த வேலையை பார்ப்ப்னிய, கிறுத்துவ வெறியர்கள் உலகெங்கும் வெகு விமரிசையாக செய்து வருகிறார்கள்)
    ####

    அரவிந்தனின் இப்பொய்களை ஒருவன் நம்பவேண்டுமென்றால் ஒன்று அவன் கடைந்தெடுத்த முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது சுத்தமான வலதுசாரி வெறியனாக இருக்க வேண்டும். அதியமான் எந்த வகையறா?

    • பொய்கள் எவை என்று அறிவுலகம் அறியும். வாவாலிவ் என்ற பெரும் அறிஞரை 40களில் ஏன் சிறையில் அடைத்து, பட்டினி போட்டு கொலை செய்தனர் ? பின்னாட்களில் அவரை சிறப்பித்தனர் சோவியத்துகள். ஏன் ? மாற்று கருத்துகள் வைத்தால், அவர்களை சிறையில் அடைத்த நிகழ்வுகள் எல்லாம் பொய்களா என்ன ? அசுரன் : நீர் தான் பெரிய பொய்யர்.
      லைசென்க்வோவை பற்றி பின்னர் சோவிய அரசு என்ன கருதியது ?

      • //நீர் தான் பெரிய பொய்யர்.
        லைசென்க்வோவை பற்றி பின்னர் சோவிய அரசு என்ன கருதியது ?// ஒன்னு மட்டும் புரியுது நீங்க எதையும் படிக்கப் போவதில்லை என்று. வாழ்த்துக்கள்.

        • அசுரன்,

          அரவிந்தனின் நூலை படிக்காமலே நீர் இங்கு இஸ்டத்துக்கு பேசும் போது, உமது பழைய பல்லவியை படிக்க தேவையில்லை. விஞஞானிகளின் கருத்து முரண்களை பற்றி விவாதிக்கவில்லை. லைசென்கோவின் தியரிகளை மறுத்த, முரண்பட்ட இதர சோவிய்த அறிஞர்களை சிறையில் இட்ட கொடுமையான வரலாற்றை பொய் என்று நீர் சொல்லவதை தான் சொல்கிறேன். வாவிலிவோ மாபெரும் அறிஞர். 40களில் சோவியத் சிறையில் பட்டியானால் கொடுமையான சாவு அவருக்கு. பின்னர் பல பத்தாண்டுகள் கழித்து அதே சோவியத் ரஸ்ஸியாவில் அவர் officialஆக ஏற்க்கப்பட்டு, பாராட்டப்பட்டார். லைசென்க்கோவை அன்று மறுத்தால், சிறையில் அடைப்பது மதவாதத்தை விட மோசமான கொடுமை. அதை இன்றும் நியாயப்படுத்தும் நீர் அரவிந்தனை அவன் என்று பேசுவது தான் இன்னும் கொடுமை.

          மேலும் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருந்தேன் : அ.நீலகண்டனுடன் பல விசியங்களில் கடுமையாக முரண்படுகிறேன் என்று. அதற்க்காக எல்லா விசியங்களிலும் அல்ல. 1977இலும், பின்னர் 1989இலும் இடதுசாரிகளும், ஆர்.எஸ்.எஸ் உம் பொது எதிரியை எதிர்க்க ஒன்றுபட்டனர். எனவே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்பவர்கள் தீண்டதகாதவர்களை போல் சும்மா பேச வேண்டாம். (உடனே இடதுசாரிகள் கும்பலில் இல்லாத தூய்மைவாதிகள் நீர் என்று கதைக்க வேண்டாம்).

          • //மேலும் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருந்தேன் : அ.நீலகண்டனுடன் பல விசியங்களில் கடுமையாக முரண்படுகிறேன் என்று. அதற்க்காக எல்லா விசியங்களிலும் அல்ல. 1977இலும், பின்னர் 1989இலும் இடதுசாரிகளும், ஆர்.எஸ்.எஸ் உம் பொது எதிரியை எதிர்க்க ஒன்றுபட்டனர். எனவே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்பவர்கள் தீண்டதகாதவர்களை போல் சும்மா பேச வேண்டாம். (உடனே இடதுசாரிகள் கும்பலில் இல்லாத தூய்மைவாதிகள் நீர் என்று கதைக்க வேண்டாம்).// எஸ்கேப் எஸ்கேப் கிரேட் எஸ்கேப்பு.. நான் கேட்டது என்ன இவர் சொல்வது என்ன? ஸப்பா….. காலங்கள மாறினாலும், சூரியன் மேற்கே உதித்தாலும் அதியமானது மோடஸ் ஒபராண்டி மட்டும் மாறுவதே இல்லை.

            //அரவிந்தனின் நூலை படிக்காமலே நீர் இங்கு இஸ்டத்துக்கு பேசும் போது, உமது பழைய பல்லவியை படிக்க தேவையில்லை.// ஒருவன் வெறிபிடித்த மூடன் என்பது போதுமான அளவு நிரூபிக்கப் பட்ட பின்பும் அவனது நூலை படிக்குமளவு எனக்கு எந்த வலதுசாரி வெறியும் இல்லை. உங்களுக்கு உள்ளாதா இல்லையா என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை.

          • //வாவிலிவோ மாபெரும் அறிஞர். 40களில் சோவியத் சிறையில் பட்டியானால் கொடுமையான சாவு அவருக்கு. பின்னர் பல பத்தாண்டுகள் கழித்து அதே சோவியத் ரஸ்ஸியாவில் அவர் officialஆக ஏற்க்கப்பட்டு, பாராட்டப்பட்டார். லைசென்க்கோவை அன்று மறுத்தால், சிறையில் அடைப்பது மதவாதத்தை விட மோசமான கொடுமை. அதை இன்றும் நியாயப்படுத்தும் நீர் அரவிந்தனை அவன் என்று பேசுவது தான் இன்னும் கொடுமை.// கட்டுரையை படிக்காமலேயே வாய்பந்தல் போடுவது என்று இதைத்தான் சொன்னேன். அய்யா அரவிந்தன் இந்த புளுகை இப்போது சொல்லவில்லை. அப்போதே சொல்லி அதற்காகத்தான் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டான். எதையும் புதிதாக கற்றுக் கொள்ள பணிவு வேண்டும். இது பொதுவான கருத்து யாருக்குமான அட்வைசு அல்ல. சும்மா நூல் விடுவதை விட்டுவிட்டு நான் கேட்டுள்ளவற்றுக்கு பதில் சொல்லலாமே?

            ஆர் எஸ் எஸ் அரவிந்தனுக்காக இவ்வளவு வக்காலத்தா அதியமான். சரி உங்கள் நண்பர் பயங்கரவாதி அரவிந்தனை குறிப்பிட்டு பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது பற்றிய பதிவில் பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்டிருந்தேன். நீங்க வழக்கம் போல எஸ்கேப். இதோ அக்கேள்விகள்.. பாகிஸ்தான் கொடி மற்றும் மலேகான் குண்டு வெடிப்பு பற்றி உங்கள் நண்பன் அரவிந்தன் பொய் சொல்லாமல் என்ன பதில் சொல்கிறார் என்று கேட்டு இங்கு பதிவு செய்யுங்களேன்?

            ###
            //மாலேகான் (குண்டு வைத்த சுவாமி அசீமானந்தாவின் வாக்குமூலம்) உள்ளிட்ட பேர்வாதி குண்டு வெடிப்புகளை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்தான் என்பது இப்படித்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இப்படி எசகுபிசகாக தொண்டர்கள் மாட்டிக் கொண்டதும், ‘அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை’ என கையை விரிப்பதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நரித்தந்திரங்களில் ஒன்றுதான்.//

            அரவிந்தன் என்ற ஆர் எஸ் எஸ் பயங்கரவாதியை மாரியாதையுடன் பேச வேண்டும் என்றார் அதியமான். நாடு முழுவதும் ஆர் எஸ் எஸ்ன் பயங்கரவாதச் செயல்கள் அம்பலப்பட்டு நாறுகின்றன. இவை பற்றி அதியமானின் கருத்து என்ன? இப்படிப்பட்ட தேசத் துரோக பயங்கரவாத அமைப்பில் இருக்கும் அரவிந்தனை நண்பன் என்று சொல்ல அவர் ஏன் வெட்கப்படுவதில்லை? நம்ம அதியமான் தனது நண்பன் அரவிந்தனிடம் இவை குறித்து கருத்துக் கேட்டு இங்கு பகிர்ந்து கொள்வாரா? அல்லது இந்து பயங்கரவாதி அரவிந்தனை அவர் இவர் என்று குறிப்பிட வேண்டும் என்று சொல்வது போலவே இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் குறிப்பிட வேண்டும் என்பாரா?
            ####

            • வாவோலிவ் இன் வாழ்க்கையை பற்றி பேச மறுக்கும் அசுரன், சும்மா வெத்து கூச்சல் மட்டும் போடு சமாளிப்பதால், மேல் பேச ஒன்றும் இல்லை. அ.நீலகண்டன் மட்டும் புதிதாக் அந்த வரலாற்றை பற்றி சொல்லவில்லை.

              ஒரே ஒரு ஆசை எனக்கு : லைசென்க்கோவை மறுத்ததால் வாவோலிவை உள்ளே போட்டு சித்தரவதை செய்த்தை போல், அசுரனுக்கு நட்ந்தால் ‘புரியும்’ ; இல்லாவிட்டால் he will continue to live in denial.

              //ஒருவன் வெறிபிடித்த மூடன் என்பது போதுமான அளவு நிரூபிக்கப் பட்ட பின்பும் அவனது நூலை படிக்குமளவு எனக்கு எந்த வலதுசாரி வெறியும் இல்லை. உங்களுக்கு உள்ளாதா இல்லையா என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை.///

              இதெல்லாம் சும்மா நொண்டி சாக்கு. உண்மையை சந்திக்க திரண் இல்லாத சமாளிப்பு. வாவிலோவ் பற்றி பேசுவதானால், தொடர்க. இல்லாவிட்டால் வேறு உருப்படியான வேலை செய்யலாம்.

              by the way, இந்த வலதுசாரி / இடதுசாரி என்ற பாகுபாடெல்லாம் சும்மா மேலோட்டமானது. வலதுசாரிகள் என்பவர்கள் ஃபாசிஸ்டுகளும் அல்ல. இடதுசாரிகளில் பலரும் ஃபாசிஸ்டுகளாக இருந்தவர்களும் உண்டு. பார்கவும் :

              இடதுசாரிகளும், வலதுசாரிகளும்
              http://nellikkani.blogspot.com/2009/09/blog-post.html

              • /வாவோலிவ் இன் வாழ்க்கையை பற்றி பேச மறுக்கும் அசுரன், சும்மா வெத்து கூச்சல் மட்டும் போடு சமாளிப்பதால், மேல் பேச ஒன்றும் இல்லை. அ.நீலகண்டன் மட்டும் புதிதாக் அந்த வரலாற்றை பற்றி சொல்லவில்லை.

                ஒரே ஒரு ஆசை எனக்கு : லைசென்க்கோவை மறுத்ததால் வாவோலிவை உள்ளே போட்டு சித்தரவதை செய்த்தை போல், அசுரனுக்கு நட்ந்தால் ‘புரியும்’ ; இல்லாவிட்டால் he will continue to live in denial.//

                யோவ் மரமண்ட. கட்டுரையை படியா. மேற்படி உங்க புரளியத்தான் சில வருசம் முன்பு அரவிந்தன் கழிஞ்சு வைச்சி அத அந்தக் கட்டுரையில பதில் சொல்லப்பட்டுள்ளது. அதே பழைய சாணிய கொண்டாந்து தட்டுறதுக்குன்னு ஸ்பெசல் அறிவு வேணும். அது உங்ககிட்ட மட்டும்தான் இருக்கு. அப்புறம் உங்களுக்கான கேள்வி இன்னும் வெயிட்டிங்.

                ஆர் எஸ் எஸ் அரவிந்தனுக்காக இவ்வளவு வக்காலத்தா அதியமான். சரி உங்கள் நண்பர் பயங்கரவாதி அரவிந்தனை குறிப்பிட்டு பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது பற்றிய பதிவில் பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்டிருந்தேன். நீங்க வழக்கம் போல எஸ்கேப். இதோ அக்கேள்விகள்.. பாகிஸ்தான் கொடி மற்றும் மலேகான் குண்டு வெடிப்பு பற்றி உங்கள் நண்பன் அரவிந்தன் பொய் சொல்லாமல் என்ன பதில் சொல்கிறார் என்று கேட்டு இங்கு பதிவு செய்யுங்களேன்?

                ###
                //மாலேகான் (குண்டு வைத்த சுவாமி அசீமானந்தாவின் வாக்குமூலம்) உள்ளிட்ட பேர்வாதி குண்டு வெடிப்புகளை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்தான் என்பது இப்படித்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. இப்படி எசகுபிசகாக தொண்டர்கள் மாட்டிக் கொண்டதும், ‘அவர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை’ என கையை விரிப்பதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நரித்தந்திரங்களில் ஒன்றுதான்.//

                அரவிந்தன் என்ற ஆர் எஸ் எஸ் பயங்கரவாதியை மாரியாதையுடன் பேச வேண்டும் என்றார் அதியமான். நாடு முழுவதும் ஆர் எஸ் எஸ்ன் பயங்கரவாதச் செயல்கள் அம்பலப்பட்டு நாறுகின்றன. இவை பற்றி அதியமானின் கருத்து என்ன? இப்படிப்பட்ட தேசத் துரோக பயங்கரவாத அமைப்பில் இருக்கும் அரவிந்தனை நண்பன் என்று சொல்ல அவர் ஏன் வெட்கப்படுவதில்லை? நம்ம அதியமான் தனது நண்பன் அரவிந்தனிடம் இவை குறித்து கருத்துக் கேட்டு இங்கு பகிர்ந்து கொள்வாரா? அல்லது இந்து பயங்கரவாதி அரவிந்தனை அவர் இவர் என்று குறிப்பிட வேண்டும் என்று சொல்வது போலவே இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் குறிப்பிட வேண்டும் என்பாரா?
                ####

                • //யோவ் மரமண்ட. கட்டுரையை படியா. மேற்படி உங்க புரளியத்தான் சில வருசம் முன்பு அரவிந்தன் கழிஞ்சு வைச்சி அத அந்தக் கட்டுரையில பதில சொல்லப்பட்டுள்ளது. // அரவிந்தனாவது கட்டுரையை படிச்சிட்டு பதில் சொல்ல முடியாம ஓடிப் போனான். நீங்களோ படிக்காமலேயே லந்து பன்னுவது கொஞ்சம் ஓவர். உங்க ‘வயசுக்கும்’ ‘அனுபவத்துக்கும்’ இது பொருத்தமில்லை ஆமா சொல்லிட்டேன்.

                • //யோவ் மரமண்ட. கட்டுரையை படியா.////

                  டேய் வெண்ண, ஒரு நாள் இல்லீன்னா ஒரு நாள் நீ நேரில் சிக்காமலா போவ. அப்ப வச்சிக்கிறேன். this is a small world. இணைய்த்தில், போலி பெயர் தரும் ‘தைரியத்தில்’ தானே இப்படி எல்லாம் வீராப்பு பேச முடியுது. நேரில் நீ அரவிந்தனையோ, என்னை இப்படி எல்லாம் பேசு பார்க்கலாம் ?

                  மாலோகான் பற்றி அரவிந்தனின் அனுமானங்கள் தவறு. பொய்கள் தான். அறிந்து சொன்னாரா இல்லையா என்று தெரியவில்லை. வினவு கூட தான் பல கட்டுரைகளைல் பொய்களை கூசாமல் சொல்லி பிறகு அம்பலமாகியுள்ளது. அவை தெரிந்து சொன்னவைகளா இல்லையா என்பது வேறு விசியம். அதனாலேயே வினவு எழுதுவது அத்தனையும் பொய்கள் என்று நான் கருதவில்லை. ஆனால் நீ, பெரிய தந்திரசாலி போல், வாவிலோவ் பற்றி மிக ஆதாரத்துடன் எழுதப்பட்டதை பொய் என்று ஒற்றை வார்த்தையில் சொன்னால், அது பொய் ஆகிவிடுமா என்ன ? பெரிய புடுங்கியாட்ட மட்டும் வார்த்தைகளை இறைக்க தெரியும். இரு, இரு ஒரு நாள் சிக்காம போக மாட்ட. உன்மை மாதிரி இணைய ’புலிகளை’ எல்லாம் நேரில் பேச தைரியமே இல்லாத கோழை பசங்க தான்.

                  • ஒரு நாள் இல்லீன்னா ஒரு நாள் நீ நேரில் சிக்காமலா போவ>>>

                    அதியமான்கிட்ட நேர்ல சிக்கினா தொலைஞ்சீங்க, உங்க கைரேகையை பார்க்னும்பாரு, பிறந்த தேதியை கேட்டு ஜோசியம் சொல்லுவாரு… ஏற்கனவே சிலபல தோழர்களுக்கு இது போன்ற மயிர் கூச்செரியும் அனுபவம் கிடைச்சிருக்கு…, ஜாக்ரத!!!

                  • அதியமான்,

                    தப்பி ஓட வழியில்லாத முட்டுசந்தில் அசுரனிடம் மாட்டிக்கொண்டு நீங்கள் அடி தாங்க முடியாமல் அலறுவது புரிகிறது.அந்த அலறலையே வீராப்பாக காட்டிக்கொண்டு ”ஒரு நாளைக்கு நேர்ல மாட்டுவ அப்ப வச்சுக்கிர்றேன்” என்று ஒரு பேட்டை ரௌடி போன்று வீரம் பேசுகிறீர்கள்.

                    அரவிந்தனை அவன் இவன் என மரியாதை இன்றி எழுதுவதற்காக அசுரன் மீது பாயும் நீங்கள் அந்த அரவிந்தன் ஆதரிக்கும் RSS எத்தனை தலித் மற்றும் இசுலாமிய பெண்களை மானபங்கப் படுத்தியுள்ளது என்பதை எண்ணிப் பார்த்து அந்த மத வெறியன் மீது சினம் கொள்ளாதது ஏனோ.

                    சென்னையில் ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி ஆணோ பெண்ணோ யாராவது ஒரு பயணியிடம் கட்டண உயர்வு குறித்து பேச்சு கொடுத்து பாருங்கள்.அந்த பேருந்தின் நடத்துனர் அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நீங்கள் நினைப்பது போல் செயலலிதாவுக்கு மரியாதையெல்லாம் கிடைக்காது.தனது அன்றாட வருமானத்தில் கணிசமான பகுதி பிடுங்கிக் கொள்ளப்படும் ஆத்திரத்தில் அடிவயிற்றிலிருந்து பீறிட்டெழும் ஆற்றாமை நாகரீக சொற்களை தேடிக் கொண்டிருக்காது.அத்தகைய உழைக்கும் மக்களின் உள்ளக் குமுறலை இணையத்தில் பிரதிபலிக்கும் தோழர் அசுரனுக்கும் நாகரீக பாசாங்குகள் தேவை இல்லை.

                    \\ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருந்தேன் : அ.நீலகண்டனுடன் பல விசியங்களில் கடுமையாக முரண்படுகிறேன் என்று. அதற்க்காக எல்லா விசியங்களிலும் அல்ல. 1977இலும், பின்னர் 1989இலும் இடதுசாரிகளும், ஆர்.எஸ்.எஸ் உம் பொது எதிரியை எதிர்க்க ஒன்றுபட்டனர். எனவே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்பவர்கள் தீண்டதகாதவர்களை போல் சும்மா பேச வேண்டாம். //

                    நீங்கள் ஒரு இந்துத்வ வெறியர் என முந்தைய விவாதங்களில் குற்றம் சாட்டப்பட்ட போதெல்லாம் அதை கடுமையாக மறுத்து வந்துள்ளீர்கள்.இந்த விவாதத்தில் உங்களை அறியாமல் பூனைக்குட்டியை வெளியே விட்டு விட்டீர்கள்.

                    அரவிந்தனுடன் முரண்படும் ”விசியங்களில்” RSS இல்லை.அதனால்தானே அவர்களை தீண்டதகாதவர்களை போல் பேச கூடாது என உத்தரவு போடுகிறீர்கள்.இந்த நாட்டின் சொந்த மக்களில் ஒரு பகுதியினர் மீது வன்மம் மூட்டி கொலை வெறியாட்டம் போடும் ஒரு அமைப்பை ஆதரித்துக் கொண்டே libertarian என சொல்லிக் கொள்ள நீங்கள் வெட்கப் பட வேண்டும்.

                    • திப்பு,

                      முட்டு சந்தில் மாட்டிகொண்டு பதில் சொல்லாமல் நழுவது யார் என்று வாசகர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

                      வாவலிவ் என்ற சோவியத் நிபுணர் பற்றி அ.நீலகண்டனின் நூலில் ஒரு அத்தியாயம் உள்ளது. அதை பற்றி தான் நான் பேசினேன். இதுவரை அந்த சோக வரலாற்றை பற்றி ஒரு வரி கூட யாரும் இங்கு விவாதிக்க முன்வரவில்லை.

                      http://vir.nw.ru/history/vavilov.htm
                      Biography of Nikolai I. Vavilov

                      Vavilov, the symbol of glory of the national science, is at the same time the symbol of its tragedy. As early as in the beginning of the 1930’s his scientific programs were being deprived of governmental support. In the stifling atmosphere of a totalitarian state, the institute headed by Vavilov turned into a resistance point to the pseudo-scientific concepts of Trofim D.Lysenco. As a result of this controversy, Vavilov was arrested in August 1940, and his closest associates were also sacked and imprisoned.

                      இதை பற்றி விவாதிக்க யாராவது தயாரா ?

                    • For his expedition to Afghanistan in 1924 Vavilov was awarded the N.M.Przhevalskii Gold Medal of the Russian Geographic Society. From 1931 to 1940 Vavilov was its president.

                      These missions and the determined search for plants were based on the Vavilov’s concepts in the sphere of evolutionary genetics, i.e. the Law of Homologous Series in Variation (1920) and the theory of the Centers of Origin of Cultivated Plants (1926).

                      N.I.Vavilov was a prominent organizer of science. In the period from 1922 to 1929 he headed the Institute of Experimental Agronomy (the former ASC) which developed in 1930 into the V.I.Lenin All-Union Academy of Agriculture; from 1930 to 1935 Vavilov was its first president. From 1930 to 1940 he was director of the Institute of Genetics. Vavilov organized and participated in significant home and international scientific meetings and congresses on botany, genetics and plant breeding, agricultural economy, and the history of science. All around the world N.I.Vavilov has gained respect and renown; he was elected member of many academies of sciences and various foreign scientific societies.

                    • //இந்த நாட்டின் சொந்த மக்களில் ஒரு பகுதியினர் மீது வன்மம் மூட்டி கொலை வெறியாட்டம் போடும் ஒரு அமைப்பை ஆதரித்துக் கொண்டே libertarian என சொல்லிக் கொள்ள நீங்கள் வெட்கப் பட வேண்டும்.//

                      இல்லை திப்பு. அப்படி எல்லாம் கண்மூடித்தனமான ஆதரிக்க இல்லை. அப்படி ஆதரிப்பதானால், வெளிப்படையாக, நேர்மையாகவே ஆதரிப்பேன்.

                      மாவோயிஸ்டுகள், விடுதலை புலிகளின் படு கொலைகளையும் மீறி அவர்களை வெளிப்படையாக ஆதிர்ப்பவர்களை போல் நான் இல்லை.
                      ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதாலேயே அவர் எழுதிய நூலை முழுவதுமாக உள்வாங்காமல், outright rejection as lies செய்வது பகுத்தறிவல்லவே.

                      வாவிலோவ் எப்படி நசுக்கப்பட்டார், பின்னர் சிறையில் உணவு போதாமையால இறந்தார் என்பதை பற்றி தான் விவாதிக்க முயன்றேன்.

                      சொல்லியிருக்கும் விசியத்தை பற்றி தான் விவாதிக்க முயலவேண்டும். சொல்பவர் யாராக இருந்தால் என்ன. சொல்பவரின் சார்புனிலை பற்றி விவாதம் வேறி தளங்களில் செய்யலாம்.

                  • னல்ல வேளை, அதியமான் அசுரனுக்கு பில்லிசூனியம் வைப்பேண்ணு மிரட்டல.. தப்பீச்சிட்டீங்க அசுரன்.. உங்களுக்கு ஆயுசு கெட்ட்ட்டி..

                • // இப்படிப்பட்ட தேசத் துரோக பயங்கரவாத அமைப்பில் இருக்கும் அரவிந்தனை நண்பன் என்று சொல்ல அவர் ஏன் வெட்கப்படுவதில்லை?இந்து பயங்கரவாதி அரவிந்தனை அவர் இவர் என்று குறிப்பிட வேண்டும் என்று சொல்வது போலவே இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் குறிப்பிட வேண்டும் என்பாரா?// இதுக்கு இன்னும் பதில் சொல்லலை அதியமான் அவர்களே.

                  • //// இப்படிப்பட்ட தேசத் துரோக பயங்கரவாத அமைப்பில் இருக்கும் அரவிந்தனை நண்பன் என்று சொல்ல அவர்(அதியமான்) ஏன் வெட்கப்படுவதில்லை?இந்து பயங்கரவாதி அரவிந்தனை அவர் இவர் என்று குறிப்பிட வேண்டும் என்று சொல்வது போலவே இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் குறிப்பிட வேண்டும் என்பாரா?////

                    எதெதுக்கோ அக்கறையுடன் பதில் சொல்லும் அதியமான் மேலே உள்ளதுக்கு பதில் சொல்லாமல் நழுவுவது ஏன்? வவிலோவ் விசயத்தில் கட்டுரையே எழுதியாகிவிட்டது அதியமான், அசுரன் தளத்தில் உள்ள கட்டுரைக்கு சுட்டி உள்ளது அதை நீங்களும் படிக்கலாம், பிறரும் படிக்கலாம். அங்கு பெரிய விவாதமே நடந்துள்ளது அதை நீங்களும் தொடரலாம், பிறரும் தொடரலாம். இங்கு இப்போது விசயம் உங்களுடய அரவிந்தன் நட்புதான் எனக்கு பிரச்சினையானது. அது குறித்து பேசவே எனக்கு விருப்பம். அரவிந்தன் போன்ற அயோக்கிய பயங்கரவாதியை நண்பன் என்று சொல்லிக் கொண்டு என்னிடம் விவாதம் செய்ய வருவேன் என்பவரது நேர்மையை நான் சாக்கடைக்கு சமானமாகவே கருதுவேன்.

                    • //முட்டு சந்தில் மாட்டிகொண்டு பதில் சொல்லாமல் நழுவது யார் என்று வாசகர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.// வாசகர்கள் என்று மரியாதையுடன் அதியமான் குறிப்பிடுவது வாசகராகிய தன்னைத்தான். அவர் மாட்டிக் கொண்டுள்ள முட்டுச் சந்து கீழே உள்ளது.

                      //// இப்படிப்பட்ட தேசத் துரோக பயங்கரவாத அமைப்பில் இருக்கும் அரவிந்தனை நண்பன் என்று சொல்ல அவர்(அதியமான்) ஏன் வெட்கப்படுவதில்லை?இந்து பயங்கரவாதி அரவிந்தனை அவர் இவர் என்று குறிப்பிட வேண்டும் என்று சொல்வது போலவே இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் குறிப்பிட வேண்டும் என்பாரா?////

                  • //வாவிலோவ் எப்படி நசுக்கப்பட்டார், பின்னர் சிறையில் உணவு போதாமையால இறந்தார் என்பதை பற்றி தான் விவாதிக்க முயன்றேன்.//

                    உங்கள் விவாதம் நேர்மையானது அதில் தனிநபர் தாக்குதல் செய்த அசுரனை (நட்புசக்தியிடம் இப்படி பேசலாமா?) என விமர்சிக்கிறேன்

                    ஏற்கனவே நான் சொன்னபடி நீங்கள் புரட்சி திட்டத்தின் (மக இகவின் புதிய ஜனநாயக )நகலை படிக்காமல் வந்து மேலும் மேலும் விவாதிப்பது தகுமா

                    அடுத்து தனிநபர் தாக்குதல் சரியல்ல என வினவு சொன்னதை கேட்டு திருந்திய இந்த தியாகு உங்களை கேட்டு கொள்வது அசுரனை இப்படி பேசியதை வாபஸ் வாங்குங்கள் அவரு ஒருத்தருதான் உங்களோட கேள்விக்கு கடந்த 5 வருசமா பதில் சொல்லிகிணுகிறாரு

                    • இத்துப்போன ஈசல் தியாகு சொல்வதை கேட்டு எல்லாரும் திருந்துங்கப்பா

              • கட்டுரை தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் வந்து வாவிலோவ் வெர்சஸ் லைசன்கோ விசயத்தை முன்னிறுத்திய வாதியான அதிகமான் இருதரப்பு வாதங்களையும் வாசகர்களுக்கு முன்வைப்பதுதான் சரியானது. அப்போதுதான் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கூட மறுத்துரைக்க இயலும். இதனை முதலாளித்துவ நீதிமன்றங்களும் கூட முன்வைக்கின்றன• அதன் நடைமுறை கூட அதுதான். மீறியும் இணைய ஜனநாயக அன்பர்கள் தமக்கு உவப்பில்லாத பதிலைக் கூட பிரசுரிக்காத பின்னூட்டமாக்குகையில் இவ்விவாத்த்தை அனுமதித்த ஜனநாயக‌ப் பண்பை நீங்கள் கம்யூனிஸ்டுகளிடம்தான் காண இயலும்.
                தவிரவும் பிரதிவாதியாக தானாகவே அதியாமானுக்கு எதிராக ஆஜ‌ராகிறேன்.
                1. http://tamilparai.blogspot.com/2007/04/blog-post_19.html . இதனை படித்துப் பார்க்கலாம்
                2. உடற்செல்களின் வளர்ச்சிக்கும் அதன் இனப்பெருக்க செல்லின் வளர்ச்சிக்கும் தொடர்பில்லையா ?
                3. மெண்டலின் மார்கன் வகை மதவாத கோஷ்டியின் வாதங்களில் தங்களது ஆதரவு என்ன?
                4. வாவிவோவ் மட்டுமல்ல சில டாக்டர்களும் கூட ஸ்டாலினைக் கொல்ல முயன்றுள்ளார்கள். பிடலின் சுருட்டு வரை அவரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது இது எல்லாமுமே பொய்தானா
                5. அதியமான் – இது உங்களுக்கு புரியாது என்பதால் பொதுவானவர்களின் பார்வைக்கு. 40 களின் இரண்டாம் உலகப்போர் ஆரிய மேன்மைக்கு எதிராக பாசிசத்திற்கு எதிரான போராட்டம். தத்துவ தளத்தில் மக்கள் சோசலிச சமூகத்தில் மெண்டலின் மார்கன் வகை மதவாதிகளை எதிர்த்து போராடியது சரிதானே.
                http://tamilparai.blogspot.com/2007/04/blog-post_19.html

                • //வாவிவோவ் மட்டுமல்ல சில டாக்டர்களும் கூட ஸ்டாலினைக் கொல்ல முயன்றுள்ளார்கள்.//

                  வாவிலோவ் பற்றி இது கட்டுகதை. லைசென்க்கோவின் முட்டாள்தனமான கொள்கைகளை எதிர்த்து குரல் கொடுத்தலாலே அவர் மேல் இப்படி எல்லாம் பொய் குற்றசாட்டுகள் சுமத்துவது தான் சோவியத்களின் வழக்கம். கைது செய்ய ஏதாவது காரணம் வெண்டுமே. அப்ப பின்னாட்களில் அவர் இறந்த பின் ஏன் அதே சோவியத்களால் மரியாதை செய்யப்பட்டார் ? பதில் சொல்லுங்களேன். ஆனால் லைசென்கோ அம்பலப்படுத்துப்பட்டார். மறுபடியும் ஏப்படி ?

                  // அதியமான் – இது உங்களுக்கு புரியாது என்பதால் பொதுவானவர்களின் பார்வைக்கு. 40 களின் இரண்டாம் உலகப்போர் ஆரிய மேன்மைக்கு எதிராக பாசிசத்திற்கு எதிரான போராட்டம். தத்துவ தளத்தில் மக்கள் சோசலிச சமூகத்தில் மெண்டலின் மார்கன் வகை மதவாதிகளை எதிர்த்து போராடியது சரிதானே.//

                  சொந்தமாக ஏதாவது எப்பவாச்சு பேசுங்களேன். von Ribbentop Molotovo Pact
                  பற்றி கொஞ்சம் படித்து பார்க்கவும் :

                  http://en.wikipedia.org/wiki/Molotov%E2%80%93Ribbentrop_Pact

                  முக்கியமாக 1939இல் இட்டலர் போலந் மீது படை எடுத்து ஆக்கிர்மத்தவுடன்,
                  போலந்தை ஜெர்மனியிம், ரஸ்ஸியாவும் பங்கு போட்டு கொண்ட வரலாற்றை. 1941க்கு பிறகு தான் இந்த ஆரிய மேன்மை எதிர்ப்பு, ஃபாசிச எதிர்ப்பெல்லாம்.. ஆனால் இட்டலரை தோற்க்கடித்ததில் சோவியத் ரஸ்சிய பின்னர் பெரும் பங்காற்றியது.

                  ஆனால் போலந் நாட்டினர் இன்றும் ஸ்டாலினையும், அவர் கட்டளையிட்ட Katyn படும்கொலைகளையும் மன்னிக்க தயாரில்லை :

                  http://en.wikipedia.org/wiki/Katyn_massacre

                  ————

                  வாவிலோவ் பற்றி அ.நீலகண்டனில் நூலில் ஒரு முழு அத்தியாம் உள்ளது. அதை பற்றியும், ஜெனிட்டுகள் மற்றும் அறிவியலை சோவியத் அரசு அணுகிய ‘முறைகள்’ மற்றும் மாற்று கருத்து கொண்டு விஞ்ஞானிகளை நடத்திய விதம் பற்றியும் தான் பேசினேன். இதை இதுவரை dodge செய்யும் அசுரன், ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து வண்டி ஓட்டுகிறார். எங்கு ஊரில் வறட்டு இழுப்பு கேஸ் என்போம். நடக்கட்டும். பல நூறு வாசகர்கள் இதை தொடர்ந்து படித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

                  • வாலிவோவ் இதற்காக கைது செய்யப்பட்டாரா அல்லது அதற்காக கைது செய்யப்பட்டாரா என்பதற்கான தரவுகளை வாதியான அதியமான் ஆதாரத்துடன் முன்வைக்க வேண்டும். அதுதான் பித்தலாட்டமில்லாதவர்கள் செய்யக்கூடியது என்பதை அனைவரும் அறிவார்கள். மற்றபடி மனம்போன படி லீணா போலவோ அல்லது அ.மார்க்சு போலவோ எழுதலாம். அதற்கு தக்க ஆதாரம் கேட்பது சரியானதுதானே. சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கையை நீங்கள் ஏற்க மாட்டீர்கள் என்பதால் இதனை முன்வைக்கிறேன்.
                    சோவியத்துகள் என்பவை மக்கள் மன்றங்கள். அவை ஒரு அறிவியலாளனுக்கு ஆதரவாக இன்னொருவரை தண்டித்த்து அதுவும் போர்க்காலத்தில் என்பதை கொஞ்சம் நம்பும்படி சொல்லுங்கள் (ஆதாரம் கூட வேண்டாம் – என்ன பண்றது குற்றம் சாட்டுவது நீங்களாச்சே ! ). பெரும்பான்மை மக்கள் ஒன்றுகூடி திட்டமிட்டு தவறாக முடிவெடுப்பார்கள் என்பதுதானே தாங்கள் சொல்ல வருவது. இந்த வாதம் ஜனநாயகத்திற்கு ஆதரவாகவா இருக்கிறது அதியமான்.
                    லைசன்கோவோ அல்லது வாவிவோவோ அல்லது பேராசான்களோ அவர்களின் மொத்த பங்களிப்பில் இருந்துதான் மதிப்பிடப்படுகிறார்கள். ஒருவர் தவறே செய்யாதவராக இருப்பார் என்று கம்யூனிசம் போதிக்கவில்லை. தவறிலிருந்து திருத்திக் கொள்கிறாரா அல்லது நியாயப்படுத்துகிறாரா என்றுதான் பார்க்க வேண்டும் என்றும் போதிக்கிறது.

                  • ஆரியர்கள் ஆளப் பிறந்தவர்கள் என்பது உலகப்போரின் நடுவில்தான் ஹிட்லரின் மூளையில் உதித்த்தா ?

                  • //வாவிலோவ் பற்றி அ.நீலகண்டனில் நூலில் ஒரு முழு அத்தியாம் உள்ளது. அதை பற்றியும், ஜெனிட்டுகள் மற்றும் அறிவியலை சோவியத் அரசு அணுகிய ‘முறைகள்’ மற்றும் மாற்று கருத்து கொண்டு விஞ்ஞானிகளை நடத்திய விதம் பற்றியும் தான் பேசினேன். இதை இதுவரை dodge செய்யும் அசுரன், ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து வண்டி ஓட்டுகிறார்.// யோவ் மரமண்ட. திரும்பயும் ஒண்ணாங்கிளாஸ் மூளைதான் உமக்கு என்பதை நிருபிக்காதீரும். கர்நாடக மாவொயிஸ்ட் தோழர் சாகேத்ராஜன் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டது கர்நாடகாவின் வரலாறு பற்றிய அவரது ஆய்வுக்காகவா அல்லது அவர் மாவோயிஸ்டு என்பதாலா? அதியமான் ஒரு வேளை மாவோயிஸ்டு ஆதரவாளர் எனில் சாகேத்ராஜன் கொல்லப்பட்டது அவரது வரலாற்று ஆய்வுக்காக என்று திரித்துக் கூறுவார். இது போலத்தான் வவிலோவ் விசயத்திலும் பயங்கரவாதி அரவிந்தன் மற்றும் அவனது நண்பர் அதியமான் பித்தலாட்டம் செய்கின்றனர்.

                    இந்த இழவை அம்பலப்படுத்தித்தான் அசுரன் தளக் கட்டுரை(தமிழ்ப்பறை சுட்டியிலும் அதே கட்டுரைதான்) எழுதப்பட்டது. எதையும் வாசிக்காமல் நான் பிடிச்ச முயலுக்கு மூனு கால் என்று வாதிடும் வறட்டு பிடிவாதக்காரரிடம் என்ன விவாதம் செய்திட இயலும்? அதியமான் நியாயமானவர் எனப்தை விடுங்கள் அரவிந்தன் போல ரோசமுள்ளவர் எனில் அதியமான் பற்றி நான் எழுப்பிய பிற கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமே? ஏன் சொல்லாமல் எஸ்கேப்பு? இதோ அக்கேள்விகள்.
                    //// இப்படிப்பட்ட தேசத் துரோக பயங்கரவாத அமைப்பில் இருக்கும் அரவிந்தனை நண்பன் என்று சொல்ல அவர்(அதியமான்) ஏன் வெட்கப்படுவதில்லை?இந்து பயங்கரவாதி அரவிந்தனை அவர் இவர் என்று குறிப்பிட வேண்டும் என்று சொல்வது போலவே இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் குறிப்பிட வேண்டும் என்பாரா?////

                    அரைவேக்காடு அரவிந்தனையும், முழுவேக்காடு அதியமானையும் மறுத்து வாதிடுபவர்கள் யார் தெரியுமா? லைசென்கோவிடம் போராடிய சோவியத கால விஞ்ஞானிகள்தான்(ரஷ்யா மற்றும் பிறநாட்டு விஞ்ஞானிகள்) அவர்கள். லைசென்கோ உள்ளிட்டவர்களின் தவறுகளை எதிர்க்கும் அவர்கள் சோசலிசத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்(இவ்விஞ்ஞானிகள் அதியமான் கதை விடுவது போல சோவியத்தில் லைசென்கோ எதிர்ப்பாளர்கள் ஒடுக்கப்பட்ட காலத்தில்தான் பிற நாடுகளிலிருந்து ரஷ்யாவிற்கு சென்றனர்). அதியமான் போல தன்னகங்காரத்தால் ஐம்புலன்கள் மூடப்பட்டவர்களுக்கு இவைப் புரிய வாய்ப்பில்லைதான்.

                    அரவிந்தன் அதியமான் அன்கோவின் பித்தலாட்டத்தின் நோக்கமென்ன என்பதை சுட்டும் அசுரன் தளக் கட்டுரை வரிகள் கீழே :

                    //மேலும் நீலகண்டன் குறிப்பிடுகிறார், லெனினியத்தை விட நடைமுறை பலனில் நம்பிக்கைக் கொண்ட ஸ்டாலினிசத்தால் இயற்பியல் துறை தப்பித்தது. என்று. ஆனால் ரஸ்ய வரலாறு வேறாக உள்ளது. மரபணு துறையில் மாண்டேலிய-லாமார்க்கம் இரண்டிற்க்கும் முக்கியத்துவம் கொடுத்தே விவாத சூழல் நிலவி வந்துள்ளது. ஏன், ஹேல்டேன், முல்லர் முதல் பலரும் லைசென்கோவை மறுத்து அவர்தான் இயக்கவியலுக்கு முரனானவர் என்று வாதிடுகிறார்கள். ஆக, இந்த விசயம் சோவியத்தில் நிலவிய ஆரோக்கியமான விவாத சூழலையே காட்டுகிறது. நீலகண்டனின் கூற்றை மறுப்பதாகவே உள்ளது. நீலகண்டன் குறிப்பிட்ட விஞ்ஞானிகள் யாருமே லைசென்கோவைத்தான் குற்றம் சாட்டினரே ஒழிய சோசலிசத்தையோ அல்லது மார்க்ஸியத்தையோ அல்ல. மேலும் சொன்னால் இவர்கள் லைசென்கோவை குற்றம் சொன்ன அடிப்படை என்பதே லைசென்கோ மார்க்ஸியத்தை சிதைக்கிறார் என்பதாக இருப்பது, நீலகண்டன் தனது கட்டுரையில் நிறுவ விரும்பும் கருத்துக்கு முரனாக உள்ளது. அதாவது மார்க்ஸியம் அறிவியலுக்கு முரனானது என்ற அவரது அவதூறுக்கு எதிராக இவை உள்ளன.

                    அறிவியல் அறிஞர்கள் ரஸ்யாவிலிருந்து வெளியேறியது என்பது உள்ளிருந்தே சிதைக்கப்பட்ட ரஸ்ய சோசலிச போராட்டத்தின் ஒரு அங்கமாகவே வருகிறது. இதனாலேயே இந்த அறிஞர்கள் யாரும் சோசலிசத்தை இன்று வரை குறை சொல்லவில்லை.

                    ஆனால் வவிலோவ் சதி செய்தார் என்று குற்றம் சாட்டி கொல்லப்பட்டது இந்த ஆராய்ச்சி துறை போராட்டங்களுக்கு சம்பந்தமில்லா ஒன்றாகவே நிகழ்ந்துள்ளது. இதனை ஆராய்ச்சி துறையுடன் சம்பந்தப்படுத்தி அவதூறு கிளப்ப முயற்சித்துள்ளார் நீலகண்டன். இங்கு லைசென்கோவின் அதிகார துஸ்பிரயோகம் நிகழ்த்திய பாதிப்புகளை ஸ்டாலினுக்கும், அதை லெனினுக்கும், பிறகு கம்யுனிசத்துக்கும் விரிவு படுத்தி பேசுகிறார் நீலகண்டன். ஆனால் பாதிக்கப்பட்ட தலைசிறந்த விஞ்ஞானிகளோ தனிமனித தவறுகளை கண்டிதத்தார்கள் ஆனால் சோசலிசத்தையோ இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையோ குறை சொல்லவில்லை இன்று வரை. //

                    பயங்கரவாதி அரவிந்தன் மற்றும் பயங்கரவாதியின் நண்பர் அதியமானுக்கு விரிவாக சில வருடங்கள் முன்பு எழுதப்பட்ட கட்டுரை அது. மான ரோசமுள்ள (இருக்குமா சந்தேகேமே) நியாயாமானவர் எனில் அக்கட்டுரையில் தனது விவாதத்தை அதியமான் தொடர வேண்டும், மேலும் அவர் பயங்கரவாதியும் அயோக்கியத் துரோகியுமான அரவிந்தனின் நண்பனாக இருப்பது பற்றி பதில் சொல்ல வேண்டும். வெறுமனே வவிலோவ் விசயத்தை மட்டும்தான் பேசுவேன் என்று அவர் சொல்வதும் பயங்கரவாதியின் நண்பனாய் இருக்க எனக்கு வெட்கமில்லை என்று சொல்லுவதும் ஒன்றுதான்.

                    • வவிலோவ் விசயத்தை விவாதிக்க ‘ரொம்ப’ ஆர்வமாக இருப்பது போல காட்டி கீழ் வரும் விசயங்களுக்கு பதில் சொல்லாமல் தப்பிக்கலாம் என்று நினைத்துவிடாதீர்கள் அதியமான். வினவில் இனி வரும் பதிவுகள் அனைத்திலும் உங்களிடம் இக்கேள்விகளை முன் வைப்பேன்.

                      //// இப்படிப்பட்ட தேசத் துரோக பயங்கரவாத அமைப்பில் இருக்கும் அரவிந்தனை நண்பன் என்று சொல்ல அவர்(அதியமான்) ஏன் வெட்கப்படுவதில்லை? இந்து பயங்கரவாதி அரவிந்தனை அவர் இவர் என்று குறிப்பிட வேண்டும் என்று சொல்வது போலவே இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் குறிப்பிட வேண்டும் என்பாரா?////

                    • //யோவ் மரமண்ட. திரும்பயும் ஒண்ணாங்கிளாஸ் மூளைதான் உமக்கு என்பதை நிருபிக்காதீரும். //

                      டேய் தாயோளி,

                      நேரில் மட்டும் தான் இனி உன் கூட விவாதம். ம.க.இ.க அலுவலகத்தில், மருதையன் முன்னிலையில் விவாதிக்க நான் தயார். நேரில் வா, மேற்கொண்டு பேசிக்கலாம்.

                    • //டேய் தாயோளி,//

                      அப்படியென்றால் என்ன்வென்று உங்கள் அனுபவம் மூலம் விளக்கவும்.

                    • //நேரில் மட்டும் தான் இனி உன் கூட விவாதம். ம.க.இ.க அலுவலகத்தில், மருதையன் முன்னிலையில் விவாதிக்க நான் தயார். நேரில் வா, மேற்கொண்டு பேசிக்கலாம்.//

                      ஏன்? இங்க இருக்கிறவன் எல்லாம் உங்களுக்கு மனுசனா தெரியலியா?

                    • //ஏன்? இங்க இருக்கிறவன் எல்லாம் உங்களுக்கு மனுசனா தெரியலியா?//

                      பரமேசு என்ற பெயரில் வந்திருப்பவருக்கு :

                      ஆம். சொந்த பெயரை உபயோகிக்க தைரியம் இல்லாமல், கோழைகள் போல் மறைந்திருந்து ‘வீரம்’ பேசுவ்பவர்கள் எமக்கு மனிதர்களாக தெரியவில்லை தான். சொந்த பெயரில் வந்தால் இப்ப என்ன சி.பி.சி.அய்.டி புடுச்சுக்குவாங்களா என்ன ?

                      Give respect and take respect என்பது தான் எம் பாணி. கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நேரில் ஒருவருடன் விவாதிக்கும் போது எப்படி ‘மரியாதையா’ பேசுவோமோ, அதே போல் தான் இணையத்திலும் பேச வேண்டும். சில ஜந்துக்களுக்கு (அசுரன் போன்ற இணைய வீரர்களுக்கு) புரிய வேண்டிய ’பாசைலை’ பேசினா தான் புரியும். நேரில் இப்படி எல்லாம் எம்மை ஒருமையில், மரமண்டை என்றெல்லாம் பேச யாராவது தயாரா ? சந்திக்க நான் எப்போதும் தயார். அதான் சொன்னேனே : ம.க.இ.க அலுவலகத்தில் வைத்து பேசலாம். வர்ரீகளா ?

                    • //பரமேசு என்ற பெயரில் வந்திருப்பவருக்கு :

                      ஆம். சொந்த பெயரை உபயோகிக்க தைரியம் இல்லாமல், கோழைகள் போல் மறைந்திருந்து ‘வீரம்’ பேசுவ்பவர்கள் எமக்கு மனிதர்களாக தெரியவில்லை தான். சொந்த பெயரில் வந்தால் இப்ப என்ன சி.பி.சி.அய்.டி புடுச்சுக்குவாங்களா என்ன ?
                      //

                      அவசியம் இல்லாவிட்டாலும் சொல்கிறேன். பரமேசு என்னுடைய சொந்தப் பெயர் தான். நான் மகஇக அமைப்பிலோ செயல்பாட்டிலோ இல்லை என்பதால் எனக்கு வேறு பெயர் தேவைப்படவில்லை அவ்வளவு தான்.

                      ஆனால் சொந்த பெயரில் வரச்சொல்லி நீங்க அழைப்பதன் காரணம் புரியவில்லை. ஏன் identity -யை மறைக்கும் உரிமை லிபர்டேரியநிசத்தில் கிடையாதா? இல்லை சும்மாக்காச்சும் அசுரனின் அடி தாங்க முடியாமல் சாக்குப் போக்கு தேடுகிறீர்களா? 🙂

                      //நேரில் வா வச்சிக்கிறேன். // செம காமடி. நேரில் வந்தால் என்ன கிழிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

                  • //போலந் நாட்டினர் இன்றும் ஸ்டாலினையும், அவர் கட்டளையிட்ட Katyn படும்கொலைகளையும் மன்னிக்க தயாரில்லை : // போலந்து மக்கள் சார்பாக வாசகர்கள் சார்பாக ஒன் மேன் ஆர்மி அதியமான். இதை உண்மை என்று நம்பாதவர்கள் பகுத்தறிவுவாதிகள் அல்லாதவர்கள், முட்டாள்கள், ஏன் மனிதர்களே இல்லை.

                    அகில உலக சதுரச் செயலாளர் அதியமான் ரசிகன்.

                    இஸ்டம் போல அடுத்தவனுக்கும் சேத்து கமெண்டு போடுவது கருத்துச் சொல்வது போன்ற பழக்கத்தை எப்ப விடுவதாக உத்தேசம் அதியமான்?

                    • //டேய் தாயோளி,

                      நேரில் மட்டும் தான் இனி உன் கூட விவாதம். ம.க.இ.க அலுவலகத்தில், மருதையன் முன்னிலையில் விவாதிக்க நான் தயார். நேரில் வா, மேற்கொண்டு பேசிக்கலாம்.// நான் திட்டினா அதை விடக் கேவலாம கெட்ட வார்த்தையில திருப்பி திட்டுறதுல காட்டுற உங்க ரோசத்தை கீழ் வரும் எனது கேள்விக்கு பதில் சொல்லுவதன் மூலமும் வெளிப்படுத்தலாமே? இல்லையெனில் எனக்கு வயசும் அனுபவமும் கூட என்பதை திட்டுவதில் மட்டும்தான் என்பதாக ‘வாசகர்கள்’ நினைத்துவிடும் ஆபத்து உள்ளதே?

                      அதியமானுக்கு சில கேள்விகள்:
                      //// இப்படிப்பட்ட தேசத் துரோக பயங்கரவாத அமைப்பில் இருக்கும் அரவிந்தனை நண்பன் என்று சொல்ல அவர்(அதியமான்) ஏன் வெட்கப்படுவதில்லை? இந்து பயங்கரவாதி அரவிந்தனை அவர் இவர் என்று குறிப்பிட வேண்டும் என்று சொல்வது போலவே இஸ்லாமிய பயங்கரவாதிகளையும் குறிப்பிட வேண்டும் என்பாரா?////

                    • //Give respect and take respect என்பது தான் எம் பாணி. கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நேரில் ஒருவருடன் விவாதிக்கும் போது எப்படி ‘மரியாதையா’ பேசுவோமோ, அதே போல் தான் இணையத்திலும் பேச வேண்டும். சில ஜந்துக்களுக்கு (அசுரன் போன்ற இணைய வீரர்களுக்கு) புரிய வேண்டிய ’பாசைலை’ பேசினா தான் புரியும். // அதாவதுங்க யுவர் ஆனர், அசுரன் அதியமான திட்டினா அதியமானுக்கு ரொம்ப கோவம் வரும்.. ஒகே நல்ல விசயம். அசுரன் அரவிந்தனை திட்டினா கோவம் வரும்.. ஒகே அது பயங்கரவாதிக்கும் பயங்கபீதிக்குமுள்ள நட்பின் அடிப்படையிலான கோவம். இந்த கோவத்தையெல்லாம் அண்ணல் அதியமான் முடிஞ்சா கெட்ட வார்த்த இல்லைனா மீடியமா ஒரு வார்த்தையப் போட்டு திட்டுவார். ஆனாப் பாருங்க பொய்யும், புனைச்சுருட்டுமாக இஸ்லாமிய மக்களையையும், தாழ்த்தப்பட்ட மக்களையையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தும் அரவிந்தன், ஆர் எஸ் எஸ்க் காரன மட்டும் கண்டா அதியமானுக்கு கோவம் வராது. ஆனா தோழர்களுக்கு வரும்.

                      விசயம் என்னவென்றால் அது இழிவுபடுத்தும் போது வரும் கோவம்தான் ஆனால் அது யாரை இழிவுபடுத்தும் போது என்பதில்தான் அதியமான் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் பக்கமும், அசுரன் தோழர்கள்-ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கமும் நிற்கும் நிலை அப்பட்டமாகத் தெரிகிறது. என்ன அதியமான் இதுக்காவது பதில் உண்டா இல்லை சேம் பேட் வேர்ட்ஸ்தானா?

                    • //உங்க ரோசத்தை கீழ் வரும் எனது கேள்விக்கு பதில் சொல்லுவதன் மூலமும் வெளிப்படுத்தலாமே//

                      நேரில் வா. விலாவாரியாக பதில் சொல்கிறேன்.

                      அ.நீலகண்டனை திட்ட கூடாது என்று சொல்லவில்லை. நேரில் போய் திட்டு, எதிர்த்து போராடு. அதை தான் நேர்மையானவன் செய்வான். கோழையை போல் இணைய இருட்டில் மட்டும் வார்த்தைகளை இறைப்பது கேவலமான பொழப்பு. அ.நீலகண்டனின் சார்புநிலைகள் பற்றி கடுமையாக வேறு பலரும் தான் விமர்சிக்கிறார்கள். சுகுணா திவாகர் முதல் பல பதிவர்கள். ஆனால் யாரும் உன்னை போல் தனி மனித தாக்குதலில் இறங்கியதில்லை. காரணம் அவர்களுக்கு பண்பு மற்றும் நிதானம் இருக்கிறது. டோண்டு ராகவனை அன்று மலேசியா மூர்த்தி ‘தாக்கிய’ முறைக்கும் உமது சொல்லாடல்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் ? டோண்டுவுடன் கடுமையாக முரண்பட்ட பெரியாரிஸ்டுகள் யாரும் அவரை அப்படி எல்லாம் பேசவில்லை. விமர்சனம் மட்டும் தான் செய்தார்கள். இதெல்லம் உம்மை போன்ற இணைய புலிகளுக்கு புரியாது தான். விளக்கமாக சொல்ல வேண்டியிருக்கு.

                    • இப்போ நீங்க அரவிந்தன திட்டியதால கோபப்படுறீங்களா இல்ல உங்கள திட்டியதால கோபப்படுறீங்களா!

                    • //அ.நீலகண்டனை திட்ட கூடாது என்று சொல்லவில்லை. நேரில் போய் திட்டு, எதிர்த்து போராடு. அதை தான் நேர்மையானவன் செய்வான்.//

                      இங்கு அரவிந்தனை திட்டியது பிரச்சினையில்லை. ஒரு பாசிஸ்டை ஆதரிக்கும் ஒரு பாசிஸ்டை நண்பன் என்று சொன்னதுதான் பிரச்சினை. அதுவும் லிபட்டேரியன் என்று கூறிக்கொண்டு.

                  • katyn படுகொலைக்கு நியூரெம்பெர்க் இல் தண்டனை கொடுத்திருப்பாங்க தானே அதியமான். அதுக்கு எதுவும் சுட்டி கிடைக்கலையா.. எல்லாரும் உங்க விவாத தொடர்ச்சியோட நேர்ம‌ய பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க•.

                    • //katyn படுகொலைக்கு நியூரெம்பெர்க் இல் தண்டனை கொடுத்திருப்பாங்க தானே அதியமான்.//

                      மணி,

                      என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறீங்களே. உங்களோடு உரையாடாவே தேவையில்லை என்றே கருதுகிறேன். இருந்தாலும் ஒரே ஒரு முறை :

                      நியரம்பர்க் விசாரணைகளில் நாசிகள் தான் தண்டிக்கப்பட்டனர். சோவியத் ராணுவம் விசாரிக்கபடவே இல்லை. அன்று சாத்தியமும் இல்லை.
                      கேடின் படுகொலையை நிகழ்த்தியது சோவியத் படை தான். கொல்ல்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் போல்ந் ராணுவ அதிகார்கள் மற்றும் இதர வீரர்கள்.