விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் : சுற்றிவளைக்கப்படும் சீனா !
லிபியாவை மறுகாலனியாக்கி, புதிய உத்தியுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப்பொருட்களைப் பெறுவதை முடக்குவது, இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. அமெரிக்காவின் இம்மேலாதிக்கத் தாக்குதலுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய ஆளும் வர்க்கம் கிளம்பியுள்ளது.
கடந்த நவம்பரில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நிகழ்த்திய உரையில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தற்போது ஆசியா நோக்கி திரும்பியிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். வடக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள டார்வின் துறைமுகத்தில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ளும் என்றும், அத்துடன் ஆஸ்திரேலியாவின் இதர விமான மற்றும் கடற்படைத் தளங்களை அமெரிக்க இராணுவம் அதிகமாகப் பயன்படுத்தும் என்றும் அறிவித்துள்ளார். இது, ஆசியாவில் வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாகும்.
மேற்குலக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி பெரும்பாலும் மலேசியாவின் மலாக்கா நீரிணை (ஜலசந்தி) வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக,மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய், மலாக்கா நீரிணை வழியாகக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய பாதை கொண்ட மலாக்கா நீரிணை வழியே பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில், இன்னும் ஆழமான சுந்தா நீரிணை வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும். வடக்கு ஆஸ்திரேலிய நகரமான டார்வின் இந்த நீரிணைகளுக்கு அருகாமையில் உள்ளதால்தான், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகள் மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளிலும் விமானத் தளங்களை அமைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது.
மலாக்கா வழியாகக் கப்பல்கள் மூலம் தென்சீனக் கடல் பகுதிக்கு எண்ணெயைக் கொண்டுசெல்ல ஏறத்தாழ 1200 கி.மீ. சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாலும், அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்கும் நோக்கத்துடனும், மலாக்கா நீரிணையை மட்டும் சார்ந்திராமல் தரை வழியேயும் எண்ணெயைக் கொண்டு செல்ல சீனா முயற்சிக்கிறது. இதற்காக, வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியிலுள்ள தனது நட்பு நாடான மியான்மரின் (பர்மாவின்) கியாவ்க்பியூ துறைமுகத்தில் எண்ணெயை இறக்கி, அங்கிருந்து தரைவழியாக சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள குன்மிங் வரை கொண்டு செல்ல தரைவழி எண்ணெய்க் குழாயை சீனா பதித்து வருகிறது. 2013இல் நிறைவேறவுள்ள சீனாவின் இப்பெருந்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு மியான்மரைத் தன் பிடியில் விரைவாகக் கொண்டுவர அமெரிக்கா கிளம்பியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அரசுச் செயலரான ஹிலாரி, மியான்மருக்குப் பறந்து சென்று எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கியையும், அந்நாட்டின் அதிபர் தியன் சியன்ஐயும்சந்தித்தார். 50ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உயர்மட்ட அமெரிக்க அரசுச் செயலர் மியான்மருக்கு வருவது இதுவே முதன் முறையாகும்.
மியான்மரில் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் சீனாவின் செல்வாக்கை ஆசிய வட்டகையிலிருந்து அகற்றும் அமெரிக்கப் போர்த்தந்திர திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது நடத்தப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கட்டியமைக்கப்படும் மியான்மரின் அணுசக்தி திட்டத்தை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பில் வைக்கவேண்டும் எனப் புதிய கெடுபிடிகளை விதித்துள்ள அமெரிக்கா, மேகாங் நதியின் கீழ் பகுதி நாடுகளுடன் அதாவது வியட்நாம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கொண்ட, 2009இல் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட “கீழ் மேகாங் முன்முயற்சி” என்ற கூட்டமைப்பில் மியான்மரையும் சேருமாறு நிர்பந்திக்கிறது.
ஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர், இப்போது மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி, இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும் மியான்மரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக இந்தியப் பெருமுதலாளிகளின் சங்கமான “ஃபிக்கி” பூரிக்கிறது.
இவை ஒருபுறமிருக்க, கடந்த ஈராண்டுகளில் பிலிப்பைன்சுக்கும் சிங்கப்பூருக்கும் அதிநவீன போர்க்கப்பல்களை அமெரிக்கா கொடுத்துள்ளதோடு, வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளது. சீனாவை அடுத்துள்ள தைவானுக்கு மிகப்பெரும் அளவிலான ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. மேலும், அண்மையில் சீனாவின் நட்பு நாடான வடகொரிய அதிபரின் மறைவையடுத்து, எல்லையில் படைகளைக் குவித்துப் பதற்றநிலையை ஏற்படுத்தியுள்ளது, அமெரிக்காவின் விசுவாச நாடான தென்கொரியா. இவையனைத்தும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அமெரிக்க இராணுவபொருளாதார மேலாதிக்கத்தை வலுவாக நிலைநாட்டும் நோக்கத்தை உறுதிப்படுத்துகின்றன.
அமெரிக்காவின் போர்த்தந்திரத் திட்டத்தின்படி, ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான பொருளாதார, இராணுவ உறவுகள் அண்மையில் விரிவடையத் தொடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் 7ஆம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்த ஆஸ்திரேலியாவின் இராணுவ அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித், இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்வதில் உள்ள தடைகளை ஆஸ்திரேலிய அரசு அகற்றி விட்டது என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் அணு ஆயுத இருப்பு சீனாவுக்கு ஒப்பானதாக வர வேண்டும் என்பதே யுரேனிய விற்பனையின் நோக்கம் என்றும், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இராணுவப் பிரச்சினைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும், பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைனில் அமெரிக்காவின் ஏழாம் கடற்படையுடன் இந்திய, ஆஸ்திரேலிய கடற்படைகள் முக்கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப்பெரிய கடற்படைகளைக் கொண்டுள்ள நாடுகள் இந்தியாவும் ஆஸ்திரேலியாவுமாகும். சீனாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன்தான், இம்மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அவர் மறுத்த போதிலும், அவரது ஒவ்வொரு அறிவிப்பும் இந்தத் திசையை நோக்கித்தான் உள்ளன.
இவையனைத்தும் அமெரிக்காவின் போர்த் தேரில் இந்தியா பிணைக்கப்பட்டிருப்பதையும், சீனாவைச் சுற்றிவளைத்துத் தாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு விசுவாச அடியாளாக இந்தியா மாற்றப்பட்டிருப்பதையும் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இந்தியா வல்லரசாக வளர்வதற்கு நாங்கள் உதவுவோம் என்று அமெரிக்கா கூறுவதன் பொருள், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்துக்கு இந்தியா விசுவாசமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான்.
ஏற்கெனவே மறுகட்டுமானப் பணிகள் என்ற பெயரில் ஆப்கானிலும், கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சோமாலியாவிலும், அமைதிப்படை என்ற பெயரில் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவுக்கு விசுவாச சேவை செய்துவரும் இந்தியப் படைகள், இனி சீனாவுக்கு எதிரான பதிலிப் போர்களிலும் ஈடுபடுத்தப்படும். சீனா பாரம்பரிய உரிமை கோரும் தற்போது வியட்நாமால் உரிமை கோரப்பட்டுள்ள தீவுப் பகுதிகளில் இருந்து எண்ணெய் தோண்டுவதில் வியட்நாமுடன் உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதன் மூலம், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையுடன் பகிரங்கமாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு ஊழியம் செய்யும் இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆசிய கண்டத்தில் அமெரிக்காவின் அடியாளாகச் சேவை செய்வதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கங்கள் தெற்குதென்கிழக்காசிய நாடுகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடையத் துடிக்கின்றன. இதற்கேற்ப இந்திய அரசும் ஊடகங்களும் தேசபக்தியின் பெயரால் சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. இந்தியாவின் அணுசக்தித் திறன் கொண்ட அக்னி5 ஏவுகணை, சீனாவைத் தாக்கி அழிக்கும் அரக்கன் என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டது. தலாய்லாமாவின் புத்த மாநாட்டுக்கு இந்திய அரசு அனுமதியளித்து சீனாவை ஆத்திரமூட்டிய அதேநேரத்தில், ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தமிழனின் பெருமையைப் பறைசாற்றுவதாகக் காட்டிக்கொண்டு சீன எதிர்ப்பை உசுப்பி விடுகின்றன.
இந்நிலைமைகள் ஒருபுறமிருக்க, அமெரிக்காவின் விசுவாச நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுமிடையே அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. விசுவாச நாடாக இருந்த போதிலும், பாக்.கின் பெயரளவிலான சுயாதிபத்திய உரிமையை மிதித்து, அபோடாபாத் நகரில் அத்துமீறி தாக்குதல் நடத்தி, ஓசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கொன்றொழித்தன. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள வஜீரிஸ்தான் பகுதியில் நேட்டோ படைகள் நடத்தும் வான் வழித் தாக்குதலாலும், ஆளில்லா விமானத் தாக்குதலாலும் பாக். மக்கள் வாழ்வுரிமையையும் இழந்து கந்தலாகிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் 26 அன்று அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்படுகொலையை எதிர்த்து, நாடெங்கும் அமெரிக்கக் கொடிகளை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பெருகியதால், மக்களின் பொதுக்கருத்துக்கு எதிராகச் செல்ல முடியாமல் பாக். அரசு, ஆப்கானுக்குச் செல்லும் நேட்டோ படைகளுக்கான உணவு மற்றும் ஆயுத விநியோகப் பாதையை அடைத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளது. இப்படுகொலை பற்றி புலன்விசாரணை செய்யும் நேட்டோ தலைமையகத்துக்கும் பாக். அரசு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதோடு, ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும் ஆப்கான் குறித்த மாநாட்டிலும் பங்கேற்க மறுத்துவிட்டது. இனி, பாக். மீது அமெரிக்கா அல்லது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குவோம் என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார், அந்நாட்டின் இராணுவத் தளபதியான கயானி. மறுபுறம், பாக். இராணுவக் கும்பலுக்கும் சிவிலியன் அரசாங்கத்துக்குமிடையிலான அதிகாரப் போட்டியும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அபாயமும் நீடிப்பதால், அந்நாட்டில் தீராத குழப்பமும் நிலையற்ற தன்மையும் நீடிக்கிறது.
அமெரிக்காவுக்கு நீண்டகால விசுவாச அடியாளாக இருந்த பாகிஸ்தான் மீதே அமெரிக்கா தாக்குதல் நடத்தி அந்நாட்டை உருக்குலைத்திருக்கும் போது, இந்தியாவோ கொள்ளியை எடுத்து கூந்தலைச் சொறிந்த கதையாக, நாட்டையும் மக்களையும் பேரழிவில் தள்ளிவிட்டு அமெரிக்காவின் புதிய விசுவாச அடியாளாக மாறி, தெற்காசியாவில் ‘வல்லரசாக’ விரிவடையத் துடித்துக் கொண்டிருக்கிறது.
/// மேற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப்பொருட்களைப் பெறுவதை முடக்குவது, இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது.///
அப்படியா ? புதிய ’கண்டுபிடிப்பாக’ இருக்கிறதே !! சீனாவின் உற்பத்தி திறனை நம்பி தான் பல ஆண்டுகளாக அமெரிக்க நுகர்வோர்கள் மற்றும் பொருதாளாதாரமே உள்ளது. சீனா பொருளாதாரம் மற்றும் உற்பத்தி முடங்கினால் டாலர் மதிப்பும் சரிந்து, அமெரிக்காவும் இன்னும் பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டும். இரு நாடுகளும் இன்று ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை. இதில் பல imbalances for global economy செயற்க்கையாக உருவாகியுள்ளது. முக்கியமாக டாலர் மதிப்பை செயற்க்கையா ஏற்றி, தமது கரண்சியான யுவானை செயற்க்கையாக குறைத்து வைத்து, ஏற்றுமதி செய்த்து வளர்கிறது. எனவே சீனாவிற்க்கு தாது பொருட்கள் மற்றும் பெட்ரோலியம் இறக்குமதி செய்வது தடைபட்டால், அமெரிக்க பொருளாதாரமும் அடி வாங்கும்.
மற்றபடி, இரு நாடுகளும், ஆசிய மற்றும் இதர பகுதிகளில் தாதா போல் கோலோச்சும் முயற்சி பல காலமாக தொடர்கிறது தான்.
அப்போ அதியமான் சீனா கம்யூனிசம் தான் அமெரிக்கா பொருளாதாரத்தை காப்பாற்றிக்கொண்டு இருக்கிறது. தங்களுடைய இந்த கண்டிப்பிடிப்பு மிகவும் ராணுவம்,அரசியல்,பொருளாதாரம் சார்ந்து உள்ளது. தாராளமயமாக்கல் என்பது ஆரோக்கியமான போட்டி அதில் ராணுவ தலையீடுகள்,அரசியல் தலையீடுகள் எல்லாம் கிடையாது. அப்படிதானே.யார் முந்திக்கொண்டு செயல்படுகிறார்களே,யார் அதிக உற்பத்திசெய்து குவித்து விற்க கற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் தான் வெற்றிவாகை சூடுவார்கள் அப்படிதானே! அப்போ சீனா கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு ஆபத்தே கிடையாது அப்படிதானே!
ஆதியமான் நீங்கள் சொல்லுவது எல்லாம் சரி, இதை ஆமெரிக்கா எத்தனை காலம் ஏற்கும்? ஆமெரிகாவின் பயம் அதுவல்ல சீனாவின் நாணயம் அடுத்த கிலோப்பிள் கரன்ஸியாக மாறும் பட்சத்தில் உலக வர்தக மேடையில் ஆமெரிக்காவின் நிலைப்பாடு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதே உன்மை அதனை முறியடிப் பதற்காகவே இந்த முயர்ச்சி. எதற்காக இன்றலவும் உலகத்தில் எந்த நாடும் ஓபெஃக் நாடுகளிலிடம் இருந்து கச்சா என்னைய் வாங்க வேண்டும் என்றால் ஆமெரிக்க டாலரில் தான் வாங்க வேண்டும் என்ற ஒரு நிர்பந்தம்?
மேலும் சீனா 454 வகையான பொருள்களை ஆமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது அதில் 91 வகைகள் ஆமெரிக்காவின் இரக்குமதியில் 33% மேலாக இடம் வகுகிறது அவை பெறும்பாலும் கனிப்பொரி, கனிப்பொரி உபரிபாகங்கள், ஒயர்லெஸ் ஏகியூப்மன்ட்ஸ், அதன் உபரிபாகங்கள், குழந்தைகள் விளையாட்டு சாதனம், விடியோ கேம்ஸ், ஆடைகள் போன்றவையே அதிகம். இதை ஆமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் “நான் ஸ்டிரடிஜிக் இம்பார்டன்ட் இம்போர்ட்ஸ்” என்று வகைபடுத்தி உள்ளார்கள். வெளியலவில் நீங்கள் கூறுவது உன்மை போல் இருந்தாலும் அவர்களை பொறுத்தவரை சீனாவின் ஆதிக்கத்தை தகற்க வேண்டும் என்று கோறுவது இரண்டு விசயங்களுக்காகவே.
1. சீனாவின் யுவானை கிலோபில் கரன்ஸியாக வருவதை தடை செய்ய வேண்டும்.
2. அதே நேரத்தில் சீனா “கிரிட்டிக்கல் மினரல்ஸ்” என்று சொல்லப் படும் Natural Resources Minngயில் 99% அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் இந்த இக்கட்டையும் தகர்பதற்க்கும் இந்தியாவின் வளங்களையும் ஆட்டையப் போடுவதற்காகவும் வேதாந்தா போன்ற நிறுவனங்களை இந்தியாவில் ஊடுறுவ செய்து உள்ளது. இந்தியாவின் துனை நாடுவதற்கும் அதுவே காரணம். மேலும் ஆப்பிரிகாவில் கால் பதித்ததும் அதற்காக தான்.
// சீனாவின் நாணயம் அடுத்த கிலோப்பிள் கரன்ஸியாக மாறும் பட்சத்தில் //
அதெல்லாம் சாத்தியமில்லை. அப்படியே மாறினால், அமெரிக்கர்கள் அப்பாடா என்று மகிழ்ச்சி தான் அடைவார்கள். ரிசர்வ் கரண்டியாக இருப்பது நன்மைகளை விட தீமைகளை தான் அதிகம் அந்நாட்டிற்கு புரிந்துள்ளது.
யுரோ உருவாக்கியதும் பெரும் தவறு. Monetary union without fiscal and political union has created terrible imbalances and frightful problems. கூடிய விரைவில் பெரும் பொருளாதார சிக்கல் உருவாகப் போகிறது. மொத்த உலக பொருளாதாரமும் 2008அய் விட மோசமாக பாதிப்படைய நிறைய வாய்ப்பு உள்ளது.
சரி, சீனா – அமெரிக்க பொருளாதார உறவில் ஒரு முக்கிய விசியத்தை சொல்ல தவறிவிட்டேன். ஏற்றுமதி மூலம் ஈட்டும் பல பில்லியன் டாலர்களை சீனா அமெரிக்க அரசுக்கு மீண்டும் கடனாகவே தொடர்ந்து கொடுத்து கொண்டிருக்கிறது. சீனா மட்டுமல்ல ஏற்றுமதி செய்யும் பல ஆசிய நாடுகள், பெட்டோரியம் ஏற்றுமதி செய்யும் OPEC நாடுகள் மற்றும் பல இதர நாடுகளும் தொடர்ந்து அமெரிக்க ரிஸ்ர்வ் வங்கி வெளியிடும் T-bills இல் தான் முதலீடுகளை தொடர்கின்றன. இது டாலரின் மதிப்பை செயற்கையாக தூக்கி நிறுத்தியுள்ளது. கண்டிப்பாக இது free market policy அல்ல. சமீபத்தில் ரூபாய் திடீரென் வீழ்ந்தற்க்கு ஒரே காரணம் : யுரோ மதிப்பு குறைந்து, அங்கு பொருளாதார சிக்கல் பற்றிய பயங்கள் பெருகியதால், எல்லோரும் டாலரில் மிக அதிக மறுமுதிலீடு செய்ய துவங்கியதன் விளைவு தான். இன்னும் சிக்கலான விசியங்கள் இவை..
//அதெல்லாம் சாத்தியமில்லை.//
ஏன் சாத்தியம் இல்லை. ஒரு நாட்டின் நாணயம் எப்பொழுது கிலோபுல் கரன்ஸியாக எற்க படும்?
1. ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்தக பரிமாண திறன்.
2. அந்நாட்டின் பங்கு சந்தையின் பங்குகளின் நீர்மை நிறை (லிக்விடிட்டி) திறன்
3. நிலைப்பாடான நாணயப் பரிமாற்ற விகிதம் இவை மூன்றும் தான் ஒரு நாட்டின் நாணயத்தை கிலோபல் கரன்ஸியாக மாற்றும் அடிபடை தத்துவம். இது சீனாவின் யுவானுக்கு இல்லையா?
//அமெரிக்கர்கள் அப்பாடா என்று மகிழ்ச்சி தான் அடைவார்கள். ரிசர்வ் கரண்டியாக இருப்பது நன்மைகளை விட தீமைகளை தான் அதிகம் அந்நாட்டிற்கு புரிந்துள்ளது. //
அமெரிக்கா நிச்சயம் மகிழ்ச்சி அடையாது. 1990 பிறகு யுஎஸ் ஃப்டரல் ரிசர்வ் ஃபினாசியல் கேப்பிடலிசத்தை வேகு வேகம்மாக உண்டாக்கியது எதற்காக? அமெரிக்காவின் ஃப்டரல் ரிசர்வ் அதன் வட்டி விகிதத்தை ஏற்றினால் அதன் அதிற்வுகள் உலகு எங்கும் உனரபடுவது ஏன்? ஃபிடரல் ரிசர்வின் தலைவர் இந்தியாவின் பங்குகளில் இப்பொழுது முதலிடு செய்வது நல்லது இல்லை என்று கூறினால் இந்தியாவின் பங்கு சந்தைகள் வீழ்வது ஏன்? அமெரிக்காவின் இந்த பொருளாதார மற்றும் அரசியல் இறுமாப்பு தான் அதன் டாலரை கிலோபல் கரன்ஸியாக தக்க வைத்துக் கொள்ள முயலுவதற்கு காரணம். அதற்கு அது கையாலும் ஒரே அனுகுமுறை இராணுவம்.
//யுரோ உருவாக்கியதும் பெரும் தவறு. Mஒனெடர்ய் உனிஒன் நிட்கொஉட் fஇச்சல் அன்ட் பொலிடிசல் உனிஒன் கச் ச்ரெஅடெட் டெர்ரிப்லெ இம்பலன்செச் அன்ட் fரிக்க்ட்fஉல் ப்ரொப்லெம்ச். கூடிய விரைவில் பெரும் பொருளாதார சிக்கல் உருவாகப் போகிறது. மொத்த உலக பொருளாதாரமும் 2008அய் விட மோசமாக பாதிப்படைய நிறைய வாய்ப்பு உள்ளது.//
மறுக்கவில்லை. இதுவும் ஒரு காரணம் சோவியத் ரூஸ்யா வீழ்வதற்கு. ஆனால் சோவியத்தின் பொருளாதாரம் வீழ்ந்தவுடன் கமியூனிசமே வீழ்ந்ததாக இன்றலவும் சொல்லுவது எந்தவிததில் நியாயம். அப்படியானால் கேப்பிடலிசமும் வீழ்ந்தது என்று சொல்ல முற்படலாமா?
//சரி, சீனா – அமெரிக்க பொருளாதார உறவில் ஒரு முக்கிய விசியத்தை சொல்ல தவறிவிட்டேன். ஏற்றுமதி மூலம் ஈட்டும் பல பில்லியன் டாலர்களை சீனா அமெரிக்க அரசுக்கு மீண்டும் கடனாகவே தொடர்ந்து கொடுத்து கொண்டிருக்கிறது. சீனா மட்டுமல்ல ஏற்றுமதி செய்யும் பல ஆசிய நாடுகள், பெட்டோரியம் ஏற்றுமதி செய்யும் ஓPஏC நாடுகள் மற்றும் பல இதர நாடுகளும் தொடர்ந்து அமெரிக்க ரிஸ்ர்வ் வங்கி வெளியிடும் T-பில்ல்ச் இல் தான் முதலீடுகளை தொடர்கின்றன. இது டாலரின் மதிப்பை செயற்கையாக தூக்கி நிறுத்தியுள்ளது. கண்டிப்பாக இது fரே மர்கெட் பொலிச்ய் அல்ல. சமீபத்தில் ரூபாய் திடீரென் வீழ்ந்தற்க்கு ஒரே காரணம் : யுரோ மதிப்பு குறைந்து, அங்கு பொருளாதார சிக்கல் பற்றிய பயங்கள் பெருகியதால், எல்லோரும் டாலரில் மிக அதிக மறுமுதிலீடு செய்ய துவங்கியதன் விளைவு தான். இன்னும் சிக்கலான விசியங்கள் இவை..//
அமெரிக்காவின் இந்த பொருளாதார மற்றும் அரசியல் இறுமாப்பு தான் ஒரே காரணம். அதை இப்பொழுது சீனா தகற்க முற்படுவதை அமெரிக்கா தடுக்க முயலுவது ஏன் என்று நன்றாகவே விளங்குகிறது. அதற்கு அது கையாலும் ஒரே அனுகுமுறை இராணுவ பலம், சோவியத் ரூஸ்யாவிடம் கையான்ட அதே பனிப் போர் அனுகுமுறையை அதன் தெற்கு ஆசியா நட்பு மற்றும் அடிமை நாடுகள் மூலமாக சாதித்துக் கொள்ள முயற்ச்சி செய்கிறது.
மேலும் ஒன்றை கூற விட்டுவிட்டேன். அமெரிக்கா அச்சிடும் டாலர்களில் 2/3 பங்கு பிற நாடுகளிடம் ரிசர்வ் நாணயமாகவும், வர்தக நாணயமாகவும் உள்ளதை அரிந்திருப்பீர்கள் அப்படி இருக்கும் பச்சத்தில் சீனாவின் யுவான் கிலோபல் கரன்ஸியாக மாறினால் பிற நாடுகளிடம் இருக்கும் ரிசர்வ் கரன்ஸியான அமெரிக்க டாலரின் மதிப்பு என்னாகும் என்பது உங்களுக்கு நன்றாக தெறியும். மேலும் அந்த டாலர்கள் அமெரிக்காவினுள் வந்தால் அதன் பொருளாதாரம் என்னவாகும் அதன் விலைவுகள் எப்படி இருக்கும் என்பதை நினைத்து கூட பார்க முடயவில்லை. ஆகையால் அமெரிக்காவின் இந்த சீன முற்றுகை யுவான் ஒரு கிலோபல் கரன்ஸியாக வருவதை தடுக்கவே என்பதே உன்மை.
//ஆசிய கண்டத்தில் அமெரிக்காவின் அடியாளாகச் சேவை செய்வதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கங்கள் தெற்குதென்கிழக்காசிய நாடுகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடையத் துடிக்கின்றன. ///
கண்மூடித்தனமான அமெரிக்க சார்பு தவறு தான். ஆனால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தான் உண்மையில் நேரடியான ஆதிக்க மற்றும் வணிக போட்டி. சீனாவுக்கு எதிரான ‘ராஜ தந்திர’ நடவடிக்கைகளில் இந்தியா அமெரிக்காவை ‘பயன் படுத்தி’ கொள்ளவே முயல்கிறது. எனவே அடியாள் என்பதெல்லாம் ஒரு கோணம் தான். இங்கும் குயுக்தி மூளை உள்ள ‘சாணாக்கியர்கள்’ நிறைய உண்டு. லிபெர்ட்டேரிய பார்வையில் இவை எல்லாம் தவறு,தேவையும் இல்லை. ஆனால் free trade helps in spreading prosperity and peace across the world. எனவே
///தெற்குதென்கிழக்காசிய நாடுகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடையத்///
இதில் தவறில்லை. இப்படி விரிவ படுத்த அனுமதித்த நாடுகள் தான் இன்று வளமுடன் இருக்கின்றன. தவறிய நாடுகளான மையன்மார், வட கொரியா போன்றவை வறுமையிலும், சர்வாதிகாராத்தாலும் வாடுகின்றன. இந்தியாவும் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படி தான் முடங்கி, வறுமையை கட்டுப்படுத்தம் முடியாமல் தவித்தது.
இந்தியா அமெரிக்காவை பயன் படுத்தி கொள்ள முயல்கிறதா இல்லை அமெரிக்கா இந்தியாவை பயன் படுத்தி கொள்ள முயல்கிறதா என்பதை காலம் சொல்லும். சரி ஃபிரி டிரேட் எல்லாம் சரி அப்போ பார்டர் சிஸ்டம் அமல் படுத்தலாமா. இந்த நாணயங்கள் மூலம் தானே இத்தனை நெருக்கடி. அதை உங்கள் கேபிடலிஸ்ட் பொருளாதார மையங்கள் ஏற்று கொள்ளும்மா?
//இதில் தவறில்லை. இப்படி விரிவ படுத்த அனுமதித்த நாடுகள் தான் இன்று வளமுடன் இருக்கின்றன. தவறிய நாடுகளான மையன்மார், வட கொரியா போன்றவை வறுமையிலும், சர்வாதிகாராத்தாலும் வாடுகின்றன. இந்தியாவும் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படி தான் முடங்கி, வறுமையை கட்டுப்படுத்தம் முடியாமல் தவித்தது.//
அப்போ அமெரிக்கா, ஃபின்லான்ட், கீரிக், இத்தாலி, பிரான்ஸ் போன்ற வளமான நாடுகளில் ஏன் வறுமையின் போராட்டங்கள். வேலையில்லா தின்டாட்டம், மக்கள் நலத்திட்டங்களின் செலவுகள் கட்டுப்பாடு போன்றவை ஏன் மேற்கொள்ள படுகிறது?
இந்தியா இப்பொழுதும் இப்படி தான் இருக்கிறது. மான்டேக் சிங் அலுவாளியா கூறியது போல் ரூ 32 கீழ் உள்ளவர்களே வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் அனைவரும் வளமுடன் வாழ்வோராக கருதபடுவார்கள் என்று சொன்னால் மட்டுமே இந்தியா வளமாக உள்ளது என்று நம்ப முடியும்.
சீனா 1962 முதலே நமக்கு எதிரி. எப்போதும் இந்தியாவை நேரடியாகவே, மறைமுகமாகவோ கபளீகரம் செய்யத் துடிப்பது. எனவே அது அமெரிக்காவோ இல்லை அர்ஜென்டினாவோ…யாராவது சீனாவை அடக்கினால் நமக்கு நல்லதுதான்.
மேலும், உலக ஜியோ பாலிடிக்ஸில் சென்டிமென்டுகளுக்கெல்லாம் எப்போதுமே இடம் கிடையாது. அமெரிக்காவின் இந்த முயற்சி (அது நிஜமாக இருக்கும் பட்சத்தில் – காண்க அதியமான் மடல்)இந்தியா அதற்கு மறைமுகமான உதவினால் தவறே இல்லை.
//இந்தியா அதற்கு மறைமுகமான உதவினால் தவறே இல்லை.//
பிறகு, இந்தியாவுல நெறய குண்டுகள் வெடிக்கும் பரவாயில்லியா!
*** பிறகு, இந்தியாவுல நெறய குண்டுகள் வெடிக்கும் பரவாயில்லியா! **
யார் வைப்பார்கள்? மாவோக்களா?
சரவணன்,
அமெரிக்காவின் பதலிப்போரில் எதற்கு இந்தியா தலையிட வேண்டும்? இது தேவையில்லாமல் ஒரு யுத்தத்தை நம் வீட்டு வாசலுக்கு கொண்டு வருவதாகாதா?
அப்படி சீனாவை எதிர்த்துத்தான் ஆகவேண்டுமென்றால் அதை நேரடியாக செய்ய வேண்டியதுதானே? அதற்கு துணிவில்லாமல் எதற்கு அமெரிக்காவின் அடியாளாக போக வேண்டும்?
அப்படி என்ன அமெரிக்கா உலகை ரட்சிக்க வந்த கடவுளா? அவனே ஒரு உலக ரவுடி, பொருளாதாரத்தில் ஓட்டாண்டி தேசம்… சொந்த நாட்டு மக்களை கஞ்சித்தொட்டி முன்னால் நிற்க வைத்து உலகுக்கு படியளப்பதாக வேடமிடும் போக்கிறி.
எதையும் குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காமல் நீண்ட கால நோக்கில் பரிசீலிக்க வேண்டும். இதுவரை அமெரிக்காவின் விரிவாக்க முயற்சியில் உதவிய நாடுகள்-தலைவர்களின் கதியை மறந்துவிட்டு எடுத்தோம்-கவுத்தோம்னு ஆதரிக்க முடியுமா?
//அப்படி சீனாவை எதிர்த்துத்தான் ஆகவேண்டுமென்றால் அதை நேரடியாக செய்ய வேண்டியதுதானே?//
ஏற்கனவே வாங்கின அடி மறந்து போச்சா…
நல்ல செய்தி
இப்படி நடந்தால் இந்தியாவிற்கு நல்லதே!!!!!!!!!!!.எதிரிகள் பாகிஸ்தானும் சீனாவும் கட்டம் கட்டப்படுவதும்,இந்தியாவின் அரசியல் பொருளாதார நலன்களுக்கு வழி வகுக்கும்.ஈரான் தாக்கப்பட்டு மொத்த மத்திய கிழக்கும் அமெரிக்காவின் கீழ் வரும். நல்ல செய்தி சொல்ல வினவுக்கு வாழ்த்துகள்.
இந்தியாவுக்கு மட்டுமல்ல. வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு சீனாவின் வளர்ச்சி அபாயகரமானது. தனது நாணய மதிப்பை செயற்கையாக குறைத்து வைத்து பல்வேறு நேரடி மற்றும் மறைமுக மான்யம் மூலம் மலிவான உற்பத்தி மூலம் ஆப்ரிக்க,தென் அமெரிக்க மற்றும் ஆசிய வளரும் மற்றும் ஏழை நாடுகளின் தொழிற்துறையை முற்றிலும் அழித்து, மக்களின் வாழ்க்கை தரத்தை குறைத்து கொண்டுள்ளது. ஏற்கனவே வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஆப்ரிக்க நாடுகளில், நிதி தருவது போல் கொடுத்து அங்கு பல லட்சம் சீனர்களை அனுப்பி அந்நாடுகளின் ஒட்டு மொத்த தொழிற்துறை மற்றும் வணிபத்தையும் தங்கள் கட்டுபாட்டில் வைக்க முயற்சி செய்கிறது.
சீனாவிற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் வரவேற்க தக்கதே.
இந்து பத்திரிக்கை ராம் போல் சீனாவை கண்மூடி தனமாக ஆதரிப்பதும், சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஏகாப்திபத்தியத்திற்கு ஆதரவான நடவடிக்கையாக சித்தரிப்பதும் நல்லதற்கல்ல.
Well said Sathukka Bootham… I too oppose monopoly of anyone. Whether it is China or USA. I hate Apple, Microsoft, Google and also Communism.
அமெரிக்க – இந்திய உறவு நல்ல விசியம் தான். சீனாவிற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் வரவேற்க தக்கதே.கூடவே இஸ்ரேல் சேர்ந்து கொண்டால் பொறுக்கிஸ்தான்னையும். ஒரு கை பார்க்கலாம்.அமெரிக்க – இஸ்ரேல்-இந்திய உறவு சூப்பர் ஹிட் நல்ல செய்தி சொல்ல வினவுக்கு வாழ்த்துகள்.
//சீன உதவியுடன் கட்டியமைக்கப்படும் மியான்மரின் அணுசக்தி திட்டத்தை//
Koodangulam mattum thappa sir?
China censors even internet. Are you support such actions? There is no freedom in China. Ughyr (Muslims) and Christians are persecuted in China. Students who ask for democracy are killed like dogs on streets. China is such a stupid country. So first know about what you support.
AMERICA IS MILLION TIMES BETTER THAN CHINA.
CHINA IS INDIA’S NUMBER ONE ENEMY.
IT GOBBLED THOUSANDS OF SQUARE KILOMETERS OF INDIAN TERRITORY.
IF ANY INDIAN WANTS TO SUPPORT CHINA ON ANY GROUND, THEY ARE AGAINST OUR FUTURE GENERATION.
சீனா எனிமி நாடென்றால் பிறகு ஏனப்பா இந்திய நாட்டு மூலப்பொருள்களை சீனாவிற்கு விற்கிறீர்கள்.
இந்த பதிவில் சீனா ஆதரவு நிலை எங்கும் தென்படவில்லை. அமெரிக்க சார்பு நிலையால் இன்று சிக்கி சின்னாபின்னாமாகிக் கிடக்கும் பாகிஸ்தான் போன்று இந்தியாவின் அமெரிக்க சார்பு நிலையால் ஏற்படலாம் என எச்சரிக்கிறது. மோடி மாநிலத்திலிருந்துதான் அதிகமான மூலப்பொருட்கள் சீனாவிற்குள் செல்லுகின்றன. ஆனால் இந்துத்வா ஆதரவாளர்கள் சீனாவை எனிமி என்கிறார்கள். இதுவும் இந்துத்வாவின் பித்தலாட்டம் தானோ!
போலி கம்யூனிஸ்ட்களானாலும் சீனப் பாசம் போகாது! BLOOD IS THICKER THAN WATER!
புலிகளுடுனேயே நேரடியாக மொத வக்கில்லாத இந்தியா சீனாவுடா மோதபோகிறது ? எந்த பக்கத்தால் சிரிப்பது என்றே புரியவில்லை.கோழைகள் எப்போதும் அடியாள் ஆகவும் ஒழித்திருந்துமே தாக்குவார்கள். இந்திய அடிமை அரசு எஜமானின் காலை நக்குவேன் என்கிறது. கைக்கூலிகளாக போகும் இந்தியர்கள தாங்களாகவே தங்கள் வீட்டுக்கு (அமைதிப்பூங்காவுக்கு )குண்டுகளை அழைக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.
//சீனா பாரம்பரிய உரிமை கோரும் தற்போது வியட்நாமால் உரிமை கோரப்பட்டுள்ள தீவுப் பகுதிகளில் இருந்து எண்ணெய் தோண்டுவதில் வியட்நாமுடன் உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதன் மூலம், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையுடன் பகிரங்கமாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு ஊழியம் செய்யும் இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.// Comedy 🙂
சீனா இந்தியவை முத்துமாலை ஏன்ற ஒரு யுதயெய் கடைபிடிக்கும் பொழுது நம் பாதுகாப்புக்காக இந்திய கடைபிடித்தால் தவற இதுவும் ஒரு ராஜதந்திரம்தான் சீனா அமெரிக்காவால் வளர்ந்தது இந்தியாவும் வளரட்டும்
http://deviyar-illam.blogspot.com/2011/06/blog-post_27.html
நல்ல சொன்னீங்க.. இவனுங்க சீனாவோட சொம்பு தூக்கின்னு அப்பவே சொன்னேன். பர்மாவுல இவனுங்க யோக்கியதை தான் சிரிப்பா சிரிக்குதே…
எவனோ ஒரு கேனயன்… ஹிந்துவ வாதிகள் எல்லாம் ஏன் மூல பொருட்களை சைனாவிற்கு ஏற்றுமதி செய்கிறீர்கள் என்று… சரியான லூசு தனமான பேச்சு…
ஏற்றுமதி இறக்குமதி மத்திய அரசின் கட்டுபாட்டில் இருக்கிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசும் அதிபுத்திசாலிகள் எல்லாம் என்ன சொல்வது…
அது சரி இதில் ஹிந்துவ வாதிகள் எங்ககு இருந்து வந்தார்கள். காமாலை கண் உள்ளவனுக்கு கண்டது எல்லாம் மஞ்ச என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு இவர்கள் தான் சரியான பொருத்தம்
ராஜேஷ் குமார் கதை போல இருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் மூலம் இந்தியாவிற்கு என்ன விதமான முடிவு வரப் போகும் என்பதை பார்க்க சோனியா மண்ணு பானாசீனா அலுவாலியா போன்றோர்கள் இருக்க மாட்டார்கள். செத்த இடத்தில் புல்லு முளைத்து இருக்கும். தப்பு தப்பு சாம்பலை எங்கேயோ தூவியிருப்பார்கள். ஆனாலும் இதில் உள்ள பின்னூட்டங்கள் முக்கியமானது. எதிர்மறை கருத்துக்கள் என்றாலும் சரியான விதத்தில் தான் எழுதியுள்ளார்கள்.
அதியமான சொன்னது முற்றிலும் உண்மை. நிச்சயமான அமெரிக்கா இப்போதுள்ள சூழ்நிலையில் நேரிடையாக பகைத்துக் கொள்ள முடியாது. இது போன்ற தப்பிலித்தனம் மூலமாகத்தான் வளர்ச்சியை நிறுத்த முயற்சிக்கலாம். அவர்களுக்கு அது குறித்த கவலையில்லை. சீனா அமெரிக்காவில் வைத்துள்ள பணத்தை எடுத்தாலே ஏற்கனவே பிச்சைக்காரன உடம்புக்கு மேலே போட்டுள்ள கோட்டு வேசம் கலைந்து போய்விடும். மேலும் நாம் தான் எழுதிக் கொடுத்து விட்டோமே? நக்கி பிழைக்க நாங்க இருக்கும் போது நீ ஏன் வேறு இடத்திற்கு போக வேண்டும் என்று? இந்தியாவிற்கு நல்லது செய்கின்றேன் என்று பம்மாத்து காட்டும் அமெரிக்காவின் செய்லபாடுகளில் இதுவும் ஒன்று.
அப்படி என்ன அமெரிக்கா உலகை ரட்சிக்க வந்த கடவுளா? அவனே ஒரு உலக ரவுடி, பொருளாதாரத்தில் ஓட்டாண்டி தேசம்… சொந்த நாட்டு மக்களை கஞ்சித்தொட்டி முன்னால் நிற்க வைத்து உலகுக்கு படியளப்பதாக வேடமிடும் போக்கிரி. நச்… நச்..
உண்மைதானே அதியமான்.
ஆப்ரிக்க,தென் அமெரிக்க மற்றும் ஆசிய வளரும் மற்றும் ஏழை நாடுகளின் தொழிற்துறையை முற்றிலும் அழித்து, மக்களின் வாழ்க்கை தரத்தை குறைத்து கொண்டுள்ளது. ஏற்கனவே வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஆப்ரிக்க நாடுகளில், நிதி தருவது போல் கொடுத்து அங்கு பல லட்சம் சீனர்களை அனுப்பி அந்நாடுகளின் ஒட்டு மொத்த தொழிற்துறை மற்றும் வணிபத்தையும் தங்கள் கட்டுபாட்டில் வைக்க முயற்சி செய்கிறது.
ஆப்பிரிக்காவில் உள்ள நிலங்களில் பயிர் செய்து தங்கள் நாட்டுக்கு எடுத்துக் கொண்டு செல்லும் அளவிற்கு வரப்போகும் உணவு பஞ்சத்தை தவிர்க்க அவர்களால் முடிந்த அத்தனை வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்கா போல் அடுத்தவன் வயிற்றில் அடித்து பிடுங்கவில்லை.
அவர்களால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் தங்கள் வழியில் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்
http://deviyar-illam.blogspot.com/2011/12/blog-post_19.html
போட்டி என்றால் கில்லியாக இருக்கும் சீனாவின் வளர்ச்சியும் அதனை தடுக்க நினைக்கும் அமெரிக்காவின் ஆட்டம் இந்தியாவிற்கு நல்லதே. ஆனாலும் இந்தியா சீனாவைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
அமெரிக்கா வளர்த்த கடாக்களின் கதி என்வாயிற்றென்று தெரிந்த விடயம்தானே, கொழுத்த கிடா நல்ல தீனியாமே? இந்தியா வளருதா? யாரு வளக்குறாங்க….?
///சீனா 1962 முதலே நமக்கு எதிரி. எப்போதும் இந்தியாவை நேரடியாகவே, மறைமுகமாகவோ கபளீகரம் செய்யத் துடிப்பது. ///
இந்த செகப்புசட்டை கூட்டத்தினருக்கு அதுபற்றி என்ன கவலை, சீனாவிற்கு அடிமையாக இருப்பதை பெருமையாக நினைப்பார்கள், ஆனால் அமெரிக்க உறவு தான் அடிவயிற்றை பிசையுமாம். தூ!
ஈராக்கின் எண்ணை வளங்களை ‘கொள்ளை’ அடிப்பதற்க்கா அமெரிக்கா ஈராக் மீது படை எடுத்ததாக பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகள் ஆக்கிரமிப்பிற்க்கு பிறகு இன்று ஈராக்கிய எண்ணை வயல்களில் எண்ணை எடுக்கும் நிறுவனங்கள், படை எடுப்பிற்க்கு முன்பு இருந்த அதே நிறுவனங்கள் தான். பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
அமெரிக்கா பற்றி ஒரு விசியத்தை புரிந்து கொள்ள வேண்டும். 1973இல் இஸ்ரேல்-அரேபிய போரில் (யாம் குப்பாம் போர்) அமெரிக்கா இஸ்ரேலையும் (சோவியத் ரஸ்ஸிய எகிப்பத் மற்றும் இதர அரேபிய நாடுகளையும்) ஆதரித்தால் வெகுண்ட OPEC நாடுகளான் சவுதி அரேபியா முதலியா நாடுகள், அமெரிக்காவையும், அய்ரோப்பிய நாடுகளையும் ‘தண்டிக்க’ பெட்டோல் விலையை திடிரென நான்கு மடங்கு உயர்த்தின். கடும் தட்டுபாடும் ஏற்பட்டது. உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டது. அதில் இருந்து அமெரிக்காவின் collective psyche மிகவும் மாறிவிட்டது. Energy security மிக மிக முக்கியமாக ஆகியது. தேவையான எண்ணை வரும் பாதைகள் மற்றும் supply chain and areas ’பாதுகாப்பாக’ இருக்க வேண்டும் என்ற பயம் தொடர்ந்து அவர்களை ஆட்டுவித்தது. எண்ணை வயல்களின் ‘உரிமையாளர்கள்’ யார் என்பது முக்கியமல்ல. சந்தையில் எண்ணை தட்டுபாடு செயற்கையாக வராமல் பார்த்து கொள்வதே அவர்களின் அடிப்படை நோக்கமாக இருந்தது.
மேலும் சோவியத் ரஸ்ஸியா தனது முரட்டு ராணுவ பலத்தால், அரேபிய எண்ணை வளங்களை கைபற்றினால், இதை விட பெரும் அபாயம் ஏற்ப்படும் என்ற பயமும் அன்று இருந்தது.
இன்று நிலைமை வெகுவாக மாறிவிட்டது :
http://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/entry/us-may-quit-gulf-india-s-loss-china-s-gain
US may quit Gulf: India’s loss, China’s gain
Foreign policy analysts have long believed that US troops in the region (and two invasions of Iraq) were “all about oil.” That is only partially true. The US is quitting Iraq after eight years without any oil windfalls. Iraq’s oilfields remain government-owned , and foreign companies hired to rehabilitate fields are getting a puny fee of $2 per barrel.
After the rise of OPEC in the 1970s, all Gulf oilfields owned by foreign oil companies (including US ones) were nationalized , converting US giants like Exxon and Chevron from owners to mere traders of oil. But the Gulf still mattered strategically to the US, since it (and Nato) depended substantially on oil imports from the region.
However, that is about to change dramatically . US imports of oil from Saudi Arabia and other Gulf countries have already fallen from a peak of 2.76 million barrels per day (mbd) in 2001 to 1.71 mbd in 2010. Fast-rising US production of shale oil is the big new surprise, helping oil imports to decline from 60% of consumption to an estimated 47% this year. Much of that is being met by rising Canadian oil production from tar sands.
ஈராக்கின் மீது அமெரிக்க படை எடுத்தது எண்ணை வளங்களுக்காக தான். அமெரிக்க முதலில் என்ன சொல்லி ஈராக் மீது போர் தொடுத்தது, ஈராக் மிகவும் ஆபாயகரமான ரசாயின ஆயுதங்களை வைத்துள்ளதாலும் உலக “சமாதானத்தை” கெடுக்கும் திவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாலும் ஈராக் மீது போர் தொடுக்கிறோம் என்று அமெரிக்க மக்களையும் உலக நாடுகளையும் நம்பவைத்தது.
ஆனால் அந்த போரின் முடிவில் அமெரிக்கா கூறியது போல் எதுவும் கண்டரிய முடியாமல் போக தன் போர் காரணத்தை மீண்டும் பொய் புரட்டியது.
அதவது அமெரிக்காவின் இந்த ஈராக் ஆக்கிரமைப்பு ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக என்று சொல்லி அதிலும் தொல்வியை அடைந்தது.
பிறகு இறுதியாக ஒரு தீவிரவாத நாட்டிடம் இவ்வளவு எண்ணை வளங்கள் இருந்தால் அதன் முலமாக ஈராக் தனது ராடிக்கள் குரிக்கோள்களை அடைய முற்படும் என்று கடசியில் ஈராக்கை ஒரு தீவிரவாத நாடாக சித்தரித்தது. இத்தனை பொய் பகட்டுகள் எதற்கு எண்ணைகாக தானே அதியமான்.
ஈராக் போருக்கான முக்கிய காரணம் சதாம் எண்ணையை டாலரில் விற்க மறுத்ததும் தான்.
//ஆனால் பத்தாண்டுகள் ஆக்கிரமிப்பிற்க்கு பிறகு இன்று ஈராக்கிய எண்ணை வயல்களில் எண்ணை எடுக்கும் நிறுவனங்கள், படை எடுப்பிற்க்கு முன்பு இருந்த அதே நிறுவனங்கள் தான். பெரிய மாற்றம் எதுவும் இல்லை. //
ஆமெரிக்காவின் பித்தலாட்டத்தை முதலில் உணருங்கள். ஆமெரிக்க சொல்லுவதை போல் ஈராக்கிடம் இருந்து எறக்குமதி செய்யும் எண்ணையின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் குறைந்து உள்ளதாக சொல்லுவதே முதல் பொய்.
இதில் இரண்டு விசயங்கள் ஒன்று 10 ஆண்டு காலம்மாக ஈராக்கில் இருந்த அமெரிக்க இராணுவத்துக்கு தேவையான எண்ணைகள் ஈராக்கில் இருந்தே உபயோக படுத்தபட்டுள்ளது. இந்த எண்ணை உபயோகம் அமெரிக்க எறக்குமதி குறிபீட்டில் இருக்காது. இருப்பதும் பொருளாதர முறைபடி தவறு. மேலும் அமெரிக்காவின் மேற்கு ஆசியா இராணுவ தலங்களுக்கும் ஈராக்கில் இருந்து எண்ணை உபயோக படுத்தபட்டுள்ளது.
இராண்டாவது விசயம் ஆமெரிக்காவின் என்னப்படி ஈராக் நாள் ஒன்றுக்கு அதன் எண்ணை உர்பத்தியை பெருக்க வேண்டும் அதற்கு அமெரிக்கா நிறுவனங்கள் மற்றும் செயல் பட்டால் முடியாது என்பதால் தான் பிற உலக நாடுகளும் அனுமதிக்க பட்டுள்ளார்கள். உலக மேடையில் தனது துய்மையை நிலைநாட்டுவதற்காக செய்ய படும் ஒரு கபலி நாடகம்.
இன்னொரு உன்மை ஈராக்கில் எண்ணை வயல்களில் உரிமை எடுத்துள்ள பிற நாடுகள் அதன் சப் கான்டிராக்டை பெரும்பாலும் ஆமெரிக்க நிறுவனங்களுக்கே தர வேண்டும் என்பது ஒரு கிலாஸ். அதன் படி Halliburton, Baker Hughes, Weatherford International and Schlumberger இந்த நாண்கு நிறுவனங்களே 90% சப் கான்டிராக்ட் உரிமம் பேற்றுள்ளார்கள்.
இந்த நாண்கு டிர்லிங் நிறுவனங்களும் எண்ணை வயல்களின் உரிமை பேற்ற பிற நாட்டு நிறுவணங்களை காட்டிலும் கோடி கணக்கான டாலர்களை லாபம் பார்த்து விடுமாம் அதுவும் அந்த நிறுவனங்களை காட்டிலும் வேகமக. இதன் வற்தக மதிப்பு எவ்வளவு தெறியுமா 150 பில்லியன் டாலர். இந்த டாலர்கள் எங்கே போகுது அதியமான்?
ஆகையால் அமெரிக்கா குறித்து நீங்கள் சொல்லும் வாதம் ஏற்பதற்கு இல்லை.
//ஆமெரிக்க சொல்லுவதை போல் ஈராக்கிடம் இருந்து எறக்குமதி செய்யும் எண்ணையின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் குறைந்து உள்ளதாக சொல்லுவதே முதல் பொய்.//
நான் எழுதியதை ஒழுங்காக படிக்கவும். ஈராக் எண்ணை பற்றி சொல்லவில்லை. மொத்த அரேபிய வளைகுடா பகுதியில் இருந்து இறக்குமதியின் விகிதம் பற்றி தான் அந்த சுட்டியும் பேசுகிறது.
ஜார்ஜ் புஸ், அல் கோர் என்னும் டெமாக்ரட்டி கட்சி வேட்பாளரை சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 2000 வருட தேர்ததில் தோற்க்கடித்தார். அல் கோர் வென்றிருந்தால், இராக் படை எடுப்பை அமெரிக்க கண்டிப்பாக செய்திருக்காது. டெமாக்ரட்டிக் கட்சி அப்படிபட்டது. எனவே எளிமை படுத்தி புரிந்து கொள்ளும் முறையில் பல அடிப்படை உண்மைகள் தெரியாமல் போய் விடும்.
1979 முதல் ஈரான் தான் அமெரிக்காவின் முக்கிய ‘எதிரி’ ; மதவாத நாடு என்ற கோனமும். சதாம் ஹுசனை மதசார்பற்ற கொடுங்கோலன் தான். அல் கொய்தாவை ஈராக்கினுல் அனுமதிக்கவில்லை. 80களில் ஈரானுக்கு எதிராக சதாமை அமெரிக்கா ஊக்குவித்தது. சோவியத் ரஸ்ஸியா ஈரானை. பனிப் போரின் அம்சங்கள்.
1991இல் முதலாம் ஈராக் போரின் முடிவில் சதாமை முற்றாக அழித்திருக்க அமெரிக்காவால் முடியும். வேண்டுமென்றே விட்டுவைத்தார்கள். இரான் மீது ஒரு செக் வைக்க..
ஜார்ஜ் டபளியு புஸ்ம் அவரின் சகாகளும் போட்ட கணக்கு வேறு. மேலும் சி.அய்.ஏ ஈராக் பற்றி, அல் கொய்தா பலம் பெறும் என்றும் எச்சரித்தையும் மீறி, பொய் காரணிகள் கூறி இராக் மீது மீண்டும் படை எடுத்தனர்.
ஒபாமாவும் டெமாக்ரடிக் தான்
//நான் எழுதியதை ஒழுங்காக படிக்கவும். ஈராக் எண்ணை பற்றி சொல்லவில்லை. மொத்த அரேபிய வளைகுடா பகுதியில் இருந்து இறக்குமதியின் விகிதம் பற்றி தான் அந்த சுட்டியும் பேசுகிறது.//
இல்லை அதியமான் நீங்கள் ஈராகின் எண்ணை பற்றிதான் சொன்னீர்கள் ஆதாரம், இங்கே சுட்டிக் காட்டியுலேன். நீங்கள் ஈராகின் எண்ணை பற்றி சொன்னதால் தான் என் வாதமும் அதை சார்ந்தே இருந்தது.
//ஈராக்கின் எண்ணை வளங்களை ‘கொள்ளை’ அடிப்பதற்க்கா அமெரிக்கா ஈராக் மீது படை எடுத்ததாக பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகள் ஆக்கிரமிப்பிற்க்கு பிறகு இன்று ஈராக்கிய எண்ணை வயல்களில் எண்ணை எடுக்கும் நிறுவனங்கள், படை எடுப்பிற்க்கு முன்பு இருந்த அதே நிறுவனங்கள் தான். பெரிய மாற்றம் எதுவும் இல்லை. //
//அமெரிக்கா பற்றி ஒரு விசியத்தை புரிந்து கொள்ள வேண்டும். 1973இல் இஸ்ரேல்-அரேபிய போரில் (யாம் குப்பாம் போர்) அமெரிக்கா இஸ்ரேலையும் (சோவியத் ரஸ்ஸிய எகிப்பத் மற்றும் இதர அரேபிய நாடுகளையும்) ஆதரித்தால் வெகுண்ட ஓPஏC நாடுகளான் சவுதி அரேபியா முதலியா நாடுகள், அமெரிக்காவையும், அய்ரோப்பிய நாடுகளையும் ‘தண்டிக்க’ பெட்டோல் விலையை திடிரென நான்கு மடங்கு உயர்த்தின். கடும் தட்டுபாடும் ஏற்பட்டது. உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டது. அதில் இருந்து அமெரிக்காவின் சொல்லெச்டிவெ ப்ச்ய்ச்கெ மிகவும் மாறிவிட்டது. ஏனெர்க்ய் செசுரிட்ய் மிக மிக முக்கியமாக ஆகியது. தேவையான எண்ணை வரும் பாதைகள் மற்றும் சுப்ப்ல்ய் ச்கைன் அன்ட் அரெஅச் ’பாதுகாப்பாக’ இருக்க வேண்டும் என்ற பயம் தொடர்ந்து அவர்களை ஆட்டுவித்தது. எண்ணை வயல்களின் ‘உரிமையாளர்கள்’ யார் என்பது முக்கியமல்ல. சந்தையில் எண்ணை தட்டுபாடு செயற்கையாக வராமல் பார்த்து கொள்வதே அவர்களின் அடிப்படை நோக்கமாக இருந்தது.//
இதுவும் முற்றிலும் தவரான பார்வை. அமெரிக்கா பெரும்பாலும் தனது எண்ணை எறக்குமதியை ஓபெஃகிடமும் மற்ற எண்ணை வளம் கொண்ட நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொள்வது உன்மை மறுக்கவில்லை ஆனால் இஅட்கற்கு பின் இருக்கும் வரலாறு மிகவும் பிரம்பிப்பானது.
1. இராண்டாம் உலக போருக்கு பின் ஜப்பான், ஐரோப்பியா நாடுகளின் பொருளாதாரம் மிகவும் பதிப்புக்கு உள்ளானது ஆனால் அமெரிக்கா மட்டும் இதில் இருந்து தப்பியது. மேலும் இரண்டாம் உலக போருக்கு முன்னால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் எழுச்சிகளால் தங்களது பெரும்பாலான தங்கத்தை அமெரிக்காவிடம் மாற்றினார்கள்.
2. அதன் விலைவாக இராண்டாம் உலக போரின் முடிவில் உலகத்தின் 80% தங்கம் அமெரிக்காவிடம் இருந்தது. மேலும் 40% இன்டஸ்டிரியல் பிரொடக்ஸனை அதுவே உர்பத்தி செய்தது. மேலும் 1944 – 45 உலக வங்கி மற்றும் ஐ எம் எஃப் தோற்றுவிக்கபட்ட பொழுது பிக்ஸட் கரன்ஸி எஃக்ஸ்சேஞ்ஜ் தங்கத்திற்கு எதிராக நிறுவப்பட்டது அப்போ பெரும்பாலான தங்கம் அமெரிக்காவிடம் இருந்ததால். அமெரிக்க டாலர் எழுச்சி பெற்றது.
3. ஒரு கட்டத்தில் அமெரிக்கவிடம் 30 பில்லியன் டாலர் மதிப்பான தங்கம் வைப்பு இருந்தது. ஆனால் 1967 -72 வரை நடந்த வியட்னாம் போரில் அமெரிக்கா 500 பில்லியன் டாலர்களை செளவிட்டது. அந்த காலக்கட்டத்தில் அமெரிக்க உலகம் முழுவதும் 110 இராணுவ தளங்களை அமைத்து இருந்தது. இந்த தள்ங்களுக்கு ஆண்டுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் செளவு செய்ய பட்டது. இந்த செளவுகள் அனைத்தும் டாலர்களிலே எதிர் கொள்ளபட்டது. அதன் விலைவாக அமெரிக்கவிடம் அட்கன் தங்க வைப்பை காட்டிலும் அதன் டாலர் வைப்பு குறைந்தது. அதனை ஈடு கட்டுவதற்காக தங்கம் விற்கபட்டது ஒரு கட்டத்தில் அமெரிக்கவிடம் வெறும் 10 பில்லியன் டாலர் தங்கமே இருந்தது. அதன் விலைவாக நிக்ஸன் 1971 ஆம் ஆண்டு தங்கத்துக்கு எதிரான டாலர் பரிமாற்றத்தை தடைவிதித்தார். அதன் விலைவாக டாலர் சர்வதேச பணச் சந்தையில் மிதக்க பட்டது.
4. பின்பு அமெரிகாவின் இராணுவ ஆராய்ச்சிகளுக்கு பெரும் பண்ம் தேவை பட்டதால் 1973இல் இஸ்ரேல்-அரேபிய போரை அடித்தலமாக அமைத்தும் 1950 -1960களில் அரேபிய நாடுகளில் நடந்த அரசியல் எழுச்சி மற்றும் மாற்றங்கள் காரணமாகவும் அமெரிக்க தனது டாலரை எப்படி எண்ணை வாங்க பிற நாடுகளிடம் தினித்தது என்று யாவரும் அறிந்ததே.
மேலும் நீங்கள் சொல்லுவது போல் அரேபிய நாடுகள் அமெரிக்காவையும், அய்ரோப்பிய நாடுகளையும் ‘தண்டிக்க’ பெட்ரொல் விலையை திடிரென நான்கு மடங்கு உயர்த்தின என்பதும் அமெரிக்க துனையுடன் நடத்தபட்ட நாடகம். அப்படி தண்டிக்க வேண்டும் என்று அரேபிய நாடுகள் நினத்து இருந்தால் அமேரிக்க டாலரையும் வர்தக நாணயமாக ஏற்காமல் அமெரிக்காவை தண்டித்து இருக்கலாமே. ஏன் செய்யவில்லை அதியமான். மேலும் சவுதி அரேபியாவில் ஈராக் போன்றும், லிபியா போன்றும், எகிப்த் போன்றும் அரசர்களின் ஆட்ச்சி தூக்கி ஏறியப்ட்டது போல் சவுதியிலும் நடந்துவிட கூடாது என்பதற்காக சவுதி அமெரிக்காவின் மரைமுக உதவியை நாடியது என்பதும் யாவரும் அறிந்ததே.
1970 கலில் இருந்து பெட்ரொலிய பொருள்களுக்கு ஒரு செயற்கை தட்டுப்பட்டை உறுவாக்கும் சில் பல கைய்ங்கறியங்களை அமெரிக்க மரைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரித்தது. இதனால் இந்த நிலையற்ற பெட்ரொலிய சப்பிளையால் உலக நாடுகள் பெட்ரொல் கொள்முதளை அதிகம்மாக வாங்க முற்பட்டர்கள். பெட்ரோல் வங்கினால் டாலரில் தான் வாங்க வேண்டும் அதற்கு பிற நாடுகள் தங்கள் பொருள்களை அமெரிகவிடம் வந்தவிலைக்கு விற்று டாலரை சேமித்து பெட்ரொல் வாங்கும் நிலை. அமெரிக்க நாணயத்தை மட்டும் அச்சிட வேண்டும். உலகத்தில் எந்த நாடும் உல்க வங்கிடமோ ஐ எம் எஃப்யிடமோ கடன் வாங்கிலால் டாலரில் தான் வாங்க வேண்டும் வட்டியும் டாலரில் தான் கெட்ட வேண்டும். அதான் அமெரிக்க டாலரை உலக நாடுகள் முழுவதும் சேமித்தர்கள் அமெரிக்கர்களை தவற.
ஆகையால் அமெரிக்காவின் Collective psyche, energy security, supply chain safety என்று எல்லாம் காரணம் சொல்லாதீர்கள் அதியமான்
இதே அதியமான் முன்பொரு முறை இராக் மீதான போரை தவறானதென கருத்து கூறியிருக்கிறார்.
இப்போதும் தவறு என்று தான் கூறுகிறேன்.
இந்திய ஆளும் வர்க்கங்கள் தொடர்ந்து ஊட்டி வரும் போலி தேச பக்தி போதையில் இந்திய சீன எல்லை தகராறு மற்றும் போர் குறித்து பல தவறான கருத்துக்கள் இந்திய மக்கள் மனதில் ஆணி அடித்தாற்போல் இறக்கப்பட்டுள்ளன.இது குறித்து சில வரலாற்று தகவல்கள் சுருக்கமாக. ஆர்வமுள்ளோர் இணையத்தில் தேடலாம்.உண்மைகள் கொட்டிக் கிடக்கின்றன.
1914- ல் சிம்லா ஒப்பந்தம் இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையில் கையெழுத்தானது.அது முத்தரப்பு ஒப்பந்தமாக இருந்திருக்கவேண்டியது, ஆம் அந்த பேச்சு நடவடிக்கையில் சீனாவும் பங்கெடுத்தது.ஆனால் பிரிட்டிசு இந்தியா ”மக்மோகன்”எல்லை கோட்டையே இந்திய சீன எல்லையாக கொள்ள வற்புறுத்தியதை ஏற்காமல் சீனா வெளியேறி விட்டது.கவனிக்கவும்.அந்த பேச்சின்போது கூட திபெத் தனிநாடாக கலந்து கொள்ளவில்லை.சீன நாட்டின் ஒரு தன்னாட்சி பகுதியாகத்தான் கலந்து கொண்டது.திபெத் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி எனபது பன்னாட்டு ஒப்பந்தங்கள் எதிலும் ஆட்சேபிக்கப்பட்டதில்லை.சுவையான தகவல்,தலாய் லாமாவே தனி நாடு கொடு என கோருவதில்லை. கோருவதற்கான வரலாற்று அடிப்படை எதுவும் கிடையாது.அவர் கேட்பது கூடுதல் மத உரிமை,புத்த லாமாக்களுக்கு ஆட்சியில் பங்கு போன்றவைதான்.
போலி விடுதலைக்கு பிறகும இந்திய அரசு அடாவடியாக மக்மோகன் கோடே இந்திய சீன எல்லை கோடு என விரிவாதிக்க நோக்கில் சாதித்ததே அன்றி அமைதிப் பேச்சு மூலம் சுமுக தீர்வு காண ஒத்துழைக்கவில்லை.
இந்த நிலையில் 1959 திபெத் ஆயுத எழுச்சிக்கு பிறகு இந்தியா அடாவடியை கூடுதலாக்கியது.மக்மோகன் கோட்டையும் தாண்டி சீனப்பகுதிக்குள் காவல் சாவடிகளை அமைத்தது.சீனாவின் மக்கள் ராணுவம் அந்த சாவடிகளை தாக்கவில்லை.அவற்றை சுற்றி பாதுகாப்பை வலுப்படுத்தியது.உடனே சீன ராணுவத்தை அப்புறப்படுத்துமாறு இந்திய ராணுவத்துக்கு உத்தரவிட்டார் சமாதனப் புர்ர்றா நேரு. ஆம் நண்பர்களே சண்டைக்கு அடிக்கொள்ளி போட்டது உலக அமைதிக்காகவே உயிர் வாழ்வதாக நம்மை நம்ப வைத்து இலங்கையில் கழுத்தறுத்த இந்தியாதான்.
துவங்கியது யுத்தம்.இந்திய ராணுவத்தை தங்கள் பகுதியை விட்டு விரட்டிய சீனாவின் மக்கள் ராணுவம் ஒரு மாதம் நீடித்த சண்டைக்கு பிறகு தாமாக முன்வந்து போர்நிறுத்தம் அறிவித்தது.அது மட்டுமல்ல சண்டையில் தான் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து தாமாகவே விலகி கொண்டது. இந்திய ஆட்சியாளர்கள் இங்கிலாந்தின் அரசப் பிரதிநிதியாக [viceroy] தம்மை கருதிக் கொண்டு பேச்சு நடத்துவதால் எல்லை பிரச்னை கடந்த அரை நூற்றாண்டு காலமாக தீர்க்கப்படாமல் நீடிக்கிறது.
இந்த பின்னூட்டத்திற்கு எதிர்வினையாக கடும் கண்டனங்கள் வரலாம். ஆனால் உண்மையை தேடித் பார்க்க ஒரு ஆர்வமூட்டும் முயற்சி என்ற அளவில் அவற்றையும் வரவேற்கிறேன்.
அருணாசல பிரதேசத்தை சீனாவுக்கு தாரை வார்ப்பது செஞ்சட்டையினருக்கு வேண்டுமானால் உவப்பாக இருக்கலாம், ஆனால் எல்லா இந்தியருக்கும் அதே கருத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல
http://www.southasiaanalysis.org/%5Cpapers23%5Cpaper2290.html
வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் காஸ்மீர் மக்களிடைய ஒரு வெளிப்படையான, நேர்மையான பொது வாக்கெடுப்பு நடத்தி, இந்தியாவை விட்டு பிரிந்து செல்ல பெரும்பாலானவர்கள் அங்கு வாக்களித்தால், தாரளமாக அனுமதிப்பது தான் சரியான, விவேகமான செயல். ஒரு கூட்டு குடும்பத்தில் ஒரு சகோதரன் தனி குடித்தனம் செல்ல விரும்பினால், அன்போடு அனுப்பி வைப்பது தான் விவேகமான செயல்.
ஆனால் பிரிந்து செல்லும் பகுதிகள் சுதந்திரமான, ஜனனாயக நாடுகளாக இருக்குமா என்பது கேள்விக்குறி. காஸ்மீரை பாகிஸ்தானும், வட கிழக்கை சீனாவும் உடனே விழுங்கி, சர்வாதிகார ஆட்சியின் கீழ் இன்று உள்ளதை விட மோசமான அடக்க்குமுறைகளுக்கு ஆளாக்குவார்கள். ஆனால் அது இந்தியாவின் பிரச்சனை அல்ல.
ஜம்மூவை காஸ்மீரில் இருந்து பிரித்து, தனி மாநிலமாக மாற்றி, கஸ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த் வேண்டும். மேலும் அணு ஆயுத மற்றும் ராணுவ போட்டிகளை, செலவுகளை இதன் மூலம் மிக மிக குறைக்க முடியும். ஆனால் இதெல்லாம் வீண் பகற் கனவு. இரண்டு பக்கமும் உள்ள மத மற்றும் தேசிய வெறியர்களால் கண்டிப்பாக இவை அனுமதிக்கபட்டாது. இந்திய துணை கண்டத்தில் மனித உயிரின் மதிப்பு மிக மிக குறைவுதான். எனவே இன்னும் பல லச்சம் அப்பாவிகள் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து கொல்ல்பபடுவது தொடரவே போகிறது. Both sides will continue to bleed…
//ஜம்மூவை காஸ்மீரில் இருந்து பிரித்து, தனி மாநிலமாக மாற்றி, கஸ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த் வேண்டும்.//
RSS சொல்வதும் இதையேதான்.
http://www.telegraphindia.com/1101003/jsp/nation/story_13011947.jsp
திபெத்திற்கான உங்களது நோக்கத்தை காஷ்மீருக்கும் பொறுத்துவீர்களா!
தலாய் லாமாவைப் பற்றி சீன கம்யூனிஸ்ட் கழிசடைகள் பரப்பும் அவதூறு பிரசாரங்களுக்கு இதோ ஒரு சாம்பிள்.
தலாய் லாமாவை சமீபத்தில் சந்தித்தவர்கள் அநேகம் பேர் மர்மமான முறையில் இறந்து விட்டார்களாம். அப்படி இறந்தவர்களின் பட்டியல்: திபேத்திய மதகுரு ஜெட்ஸுன் தம்பா, செக் நாட்டின் முன்னாள் அதிபர் வாக்லாவ், போலந்து நாட்டின்முன்னாள் அதிபர் லெஹ் காஸின்ஸ்கி, அருணாசல் பிரதேஷின் முதல்வர் தோர்ஜி காண்டு, ஆகியோர் இதில் அடங்குவர்.
http://eng.tibet.cn/2010gd/ydgd/201201/t20120106_1466733.html
Likewise, another friend of the Dalai Lama also died from a plane crash. Arunachal Pradesh (in China’s southern Tibet) Chief Minister Dorjee Khandu met with the Dalai Lama warmly in November, 2009 when the Dalai Lama dubbed himself the “son of India”. It was so unexpected that just a year and a half later, Dorjee Khandu died. The helicopter he took disappeared in the jungle on its way to India’s Itanagar from Tawang on May 5, 2011.
இப்படிப்பட்ட அபசகுணம் பிடித்த தலாய் லாமாவை சந்திப்பதற்கோ, அவரை தங்கள் நாட்டிற்கு வரவேற்பதையோ பல தலைவர்களும் அஞ்சுகிறார்களாம்.
Maybe we could find such a rule. In the recent years, so many countries have rejected the Dalai Lama’s visits. Some leaders who are afraid of mishaps avoided meeting him even if he arrived in their countries. So even an official of the “Tibetan government-in-exile” had to admit that the host country or organization will bear a big pressure to meet with the Dalai Lama himself than the “Tibetan government-in-exile”.
கம்யூனிஸ பகுத்தறிவு புலிகளின்,( தலாய் லாமாவின் புகழையும் செல்வாக்கையும் பொறுக்கமுடியாத) வயிற்றெரிச்சல் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள்.
கம்யூனிஸ பிரெய்ன் வாஷ் தாங்க முடியாமல் தீக்குளித்து உயிர்துறந்த புத்த் பிக்குக்களின் சோகக் கதையை Amnesty யின் வலைத்தளத்தில் காணவும்.
http://www.amnesty.org/en/library/asset/ASA17/046/2011/en%20/bbff2952-0cd5-4c4d-881c-3e1f241863ff/asa170462011en.pdf
Of particular concern to many Tibetan monks and nuns is the requirement that they undergo compulsory political indoctrination under the guises of “patriotic” and “legal education” within the monasteries.
Nine Tibetan monks or former monks and two Tibetan nuns in Sichuan Province have
attempted to set themselves on fire between March 16, 2011, and October 25; six are
believed to have subsequently died.
இந்த கட்டுரையாளர் சீனாவில் பிறக்க வேண்டியவர். தப்பி இந்தியாவில் பிறந்துவிட்டார். அதனால் என்ன இப்ப… அவர் பணியை செம்மையாக செய்கிறார்தானே…. வாழ்த்துக்கள்
கட்டுரையாளருக்கு நல்ல கற்பனை வளம் உள்ளது. பல நடப்புகளை சம்பந்த படுத்தி சீனா சுற்றிவளைக்கபடுவதாக கூறியுள்ளார்!
//ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தமிழனின் பெருமையைப் பறைசாற்றுவதாகக் காட்டிக்கொண்டு சீன எதிர்ப்பை உசுப்பி விடுகின்றன.// —> இது ரொம்ப ஓவரு.