Monday, January 17, 2022
முகப்பு வாழ்க்கை குழந்தைகள் குழந்தைகளை கொல்வது அரசா, பெற்றோரா?

குழந்தைகளை கொல்வது அரசா, பெற்றோரா?

-

1. கர்நாடாகாவில் 71,605 தீவிரமாக ஊட்டச் சத்துக் குறைபாடுடைய குழந்தைகளும், 11 லட்சத்து 29 ஆயிரத்து 947 ஊட்டச் சத்து குறைபாடுடைய குழந்தைகளும் இருக்கின்றனர். 2008-09-ல் 1070 சாவுகளும், 2009-10-ல் 1,144 சாவுகளும், 2010-11-ல் ஆகஸ்டு வரை 431 சாவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஜப்பூரில் 8983 தீவிரமாக ஊட்டக் குறைவு பீடித்த குழந்தைகளும் ராய்ச்சூரில் 4531 குழந்தைகளும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராய்ச்சூர் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், இதற்கான காரணங்களை ஆராய்ந்து, ‘உறவுக்குள் திருமணம் செய்து கொள்வது, இளம் வயதில் குழந்தை பெற்றுக் கொள்வது, படிப்பறிவின்மை, மூட நம்பிக்கைகள் போன்றவைகள்தான் இவற்றுக்கு காரணம்’ என்று அறிக்கை சமர்ப்பித்தனர்.

ராய்ச்சூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அப்பனடோடி கிராமத்தைச் சேர்ந்த மகாதேவிக்கு வயது மூன்று. அந்த ஊர் அங்கன்வாடியில் வழங்கப்பட்ட பிசிபேளாபாத்தை சாப்பிட்ட அன்று இரவு முழுவதும் வயிற்று வலியால் அவதிப்பட்டாள்.

‘படிப்பறிவு இல்லாததால் குழந்தைக்கு என்ன உணவு தேவை’ என்று தெரியாமல் இல்லை அவளது அம்மா நரசம்மாவுக்கு; சோறு, பருப்பு, சப்பாத்தி கொடுத்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் 60 ரூபாய் தினசரி வருமானத்தில் 5 குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் சோற்றுடன் மிளகாய்ப் பொடி கலந்து கொடுப்பதைத்தான் செய்ய முடிகிறது.

அங்கன்வாடியில் இணைக்கப்பட்டுள்ள 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அன்றன்று சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்பட வேண்டும் என்பது உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டல். ஆனால், கர்நாடகாவின் 60,000 அங்கன்வாடியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உணவு வழங்கும் ஒப்பந்தம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டி பிரைட்கிராம் இண்டஸ்ட்ரீ என்ற தனியார் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அரை கிலோ, ஒரு கிலோ பாக்கெட்டுகளில் வரும் பிசிபேளாபாத், கேசரி பாத், நியூட்ரியா கார்ன் பாப் மற்றும் சத்து மாவு குழந்தைகளுக்கு தரப்படுகிறது. அவை குழந்தைகள் சாப்பிடும் தரத்தில் இல்லாததோடு புதிதாக சமைத்த உணவைப் போல தேவையான சத்துகளையும் தருவதில்லை.

இப்படி மக்களின் மீது மோசடியை அவிழ்த்து விட்டுக் கொண்டே அந்த மக்களின் மீதே பழி போடுவது ஒரு ‘மக்கள் நல’ அரசின் கீழ்தான் நடைபெற முடியும். மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு வறுமையில் தள்ளி, அரசு நலத் திட்டங்கள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்க செயல்படும் இந்த பாவிகள் அந்த மக்களின் மீதே பழி போடுகிறார்கள்.

கர்ப்பமுற்றிருக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்காததிலிருந்து பிரச்சனை ஆரம்பமாகிறது. இதற்கு எந்த ஒரு மூட நம்பிக்கையும் காரணம் இல்லை. ‘நல்ல சாப்பாடு சாப்பிட்டால்தான் சரியான ஊட்டச்சத்து கிடைத்து ரத்த சோகை இன்றி ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்’ என்பதை தெரியாத தாய்மார்கள் யாருமே இல்லை. ஆனால், இந்தியாவின் ஒரே செயல்படும் தங்கச் சுரங்கம் இயங்கும் ராய்ச்சூரில் உழைக்கும் மக்களுக்கு அதற்கெல்லாம் ‘வசதி’ இல்லை, என்ன செய்ய?

குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் பாதிக்கப்பட்டதை ஆராய நியமிக்கப்பட்ட 15 உறுப்பினர் குழு குழந்தைகளுக்கு முட்டையும் பாலும் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதுவும் மக்களின் மூட நம்பிக்கைகளால் அல்ல, இந்துமதவெறியர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

ராய்ச்சூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஊட்டச் சத்து நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஐந்தரை கிலோ எடை மட்டும் இருந்த 18 மாத குழந்தை ஸ்ரீகாந்த் ஊட்டச் சத்து நிவாரண மையத்துக்குக் கொண்டு வரப்பட்ட பத்தே நாட்களில் அவனது எடை 1 கிலோ அதிகரித்தது. வாழைப்பழங்கள், பால், சோறு, பருப்பு, காய்கறிகள், சப்பாத்திகள், ராகி, அவித்த முட்டை போன்றவை தினமும் சாப்பிடுவதன் மூலம்தான் அது நடந்ததே தவிர, ஆய்வுக் குழு கண்டறிந்தது போல அறியாமையை அகற்றி விட்டதால் அல்ல.

_____________________________

2. நைட்ரஸ் ஆக்சைட் என்ற மயக்க வாயு இல்லாததால் அவசரமில்லாத (elective surgery) அறுவை சிகிச்சைகளை தள்ளிப் போட்டிருக்கிறது சென்னை அரசு பொது மருத்துவமனை. நவம்பர் 29 செவ்வாய் கிழமை அன்று அவசர சிகிச்சைகளுக்கு முதலிடம் கொடுத்து 64 அறுவை சிகிச்சைகள் மட்டும் நடத்தப்பட்டன, 29 அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டன.

‘மழை வெள்ளத்தினாலும், மின்சார தடையினாலும் உற்பத்தி 50% குறைந்து விட்டது. 24 மணி நேரமும் இயக்கப்பட வேண்டிய தொழிற்சாலையில் மின் தடை காரணமாக உற்பத்தி தடைப்பட்டது. அதனால்தான் ஜிஎச்சுக்கு  தேவைப்படும் 10 சிலிண்டர்களுக்கு பதிலாக 7 சிலிண்டர்கள் அனுப்பினோம்’ என்று காரணம் சொல்கிறார்கள் ஐநாக்ஸ் ஏர் புரோடக்ட்ஸ் என்ற நைட்ரஸ் ஆக்சைடு அனுப்பும் நிறுவனம்.

உண்மையில் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் கூட கையிருப்பில் இருக்காது என்பதுதான் சென்னை அரசு மருத்துவமனையில் வாடிக்கை. நோயாளிகளை வெளியில் அனுப்பி கடைக்குப் போய் விலைக்கு வாங்கி வரச் சொல்வதுதான் நடைமுறை. அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் நைட்ரஸ் ஆக்சைட் சிலிண்டர்களை அப்படி கடையில் வாங்கி கொண்டு வரும் சாத்தியம் இல்லாததால் விஷயம் வெளியில் வந்து விட்டிருக்கிறதே தவிர, இவர்கள் சப்பைக் கட்டு கட்டும் மழை, மின்தடை காரணம் இல்லை. சில உதாரணங்கள் கீழே:

ஒரு நாள் ஊசி போடுவதற்கான 10 மிலி சிரிஞ்சு இருக்காது. 5 மிலி சிரிஞ்சு மட்டும்தான் இருக்கும். ஒரு நோயாளிக்கு 10 மிலி மருந்து செலுத்த வேண்டுமென்றால் இரண்டு சிரிஞ்சுகளை நிரப்பி முதல் சிரிஞ்சுடன் ஊசி குத்தி விட்டு, அதை அப்படி பிடித்துக் கொண்டிருந்து விட்டு, சிரிஞ்சை மட்டும் கழற்றி விட்டு அப்படியே இரண்டாவது சிரிஞ்சை பொருத்தி ஊசி போட்டு முடிக்க வேண்டும்.

அடுத்த வாரம் 5 மிலி சிரிஞ்சு இருக்காது, 10 மிலி சிரிஞ்சு மட்டும்தான் இருக்கும். 4 மிலி மருந்து கொடுக்க 10 மிலி சிரிஞ்சை வீணாக்க வேண்டியிருக்கும்.

இதற்கு எந்த மழை அல்லது மின்தடை காரணம்?

ஒரு நாள் அளவு 7 கையுறைகள் மட்டும்தான் இருக்கும். 7.5 அளவு கை உடைய மருத்துவர் விரல்கள் வலிக்க வலிக்கத்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இரண்டு வாரம் கழித்து 7.5 அளவு கையுறை மட்டும்தான் வழங்கப்படும். கை அளவு சிறிதாக இருக்கும் ஒருவர் நிமிடத்துக்கொரு முறை கையுறையை இழுத்து விட்டுக் கொண்டே அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

இவற்றுக்குமா மழை பெய்ததும், மின்சார தடையும் காரணமாக இருக்கும்?

இந்த லட்சணத்தில் நிர்வாகம் செய்யும் அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டிடத்தையும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் புதிய மருத்துவமனைகளாக மாற்றி நடத்த திட்டமிட்டுள்ளது!

மேற்கண்ட இரண்டு செய்திகளையும் பார்க்கும் போது மருத்துவத்தில் அரசின் அக்கறையின்மையையும் அதனால் பாதிக்கப்படும் மக்களையும், மறுபுறத்தில் தனியார் மருத்துவமனைகள் கொள்ளையடிப்பதற்கு அரசே முன்னின்று உதவி செய்வதையும், காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொள்ளையடிப்பதற்கு கடை விரிக்கப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

– அப்துல்

 1. ஏழைகளின் நலன்களுக்காய் அரசு மருத்துவமனைகள் இருக்கும்போது அதில் இருக்கும் குறைபாடுகளைக் களைந்து நல்ல மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டியது அரசின் கடமை. ஆனால் அக்கடமையை மறந்து அல்லது தனியார் நலன்களுக்காய் அக்கடமையை திட்டமிட்டே மறுத்து, பல நூறு கோடி ரூபாய் அளவில் தனியார் மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை ஊக்குவிப்பது ஈனச்செயல்.

 2. அரசுநலத்திட்டங்கள் மக்களுக்கானது தான் என்று தவறாக யாரும்நினைக்க வேண்டாம்.மக்களால் உருவாக்கப்ட்டதாக ஒரு மாயையை கொண்டுள்ள அரசு மக்களால் உருவாக்கப்பட்டதல்ல.தரகு முதலாளிகளாலும் கார்ப்பொரேட்நிறுவனங்களாலும் பர்ப்பனீய பனியா கும்பலாலும் உருவாக்கப் பட்டது.போடுகிற எலும்புத் துண்டுக்கு வாலை ஆட்டும் நாயைப் போல அரசு நலத்திட்டங்களும் எலும்பு துண்டு எஜமானர்களுக்காக உருவாக்கப் பட்டது.
  கழுதை மேய்ச்சாலும் கவர்மெண்டு
  கழுதை மேய்க்கனும்னு சொன்னது அந்த காலம்
  கவர்மெண்டே கழுதையா போனது இந்த காலம்
  காளையை பிடித்து வீரனானது அந்த காலம் -கழுதை
  காலைப் பிடித்து பதவி பெறுவது இந்த காலம்.

 3. அறுவை சிகிச்சைக்கு 10 சிலிண்டர் தேவைப்பட்டும். 7 இருந்ததை தவறென்று என்னாமல் மழையையும், புயலையும் காரணம் காட்டியிருப்பது சின்னப்புள்ள தனமாக இருக்கு. தேவைக்கு பொருந்தாத விதமாக இருக்கும் பொருட்க்களை ( ஊசி, கை உறை) சுட்டிக் காட்டியுள்ளது அருமை.

 4. பெரும்பாலான நடைபாதை வாசிகள், இரண்டும் அதற்கு மேலும் எண்ணிக்கையிலான குழந்தைகளை கொண்டிருக்கிறார்கள். நடுத்தர மற்றும் கீழ்தட்டு குடும்பங்களிலும் இதே நிலை தான். தாங்கள் பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருந்தாலும் குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் தயக்கம் இல்லை. ஒரு நாளைக்கு 60 ரூபாய் வருமானத்தில் மூன்று பேர் சாப்பிடுவதற்கும், 5 பேர் சாப்பிடுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் உள்ளது. குழந்தைகளுக்கு உணவு அளிப்பது பெற்றோர் கடமை. அதை விடுத்தது எல்லாவற்றுக்கும் அரசை எதிர் பார்ப்பது முட்டாள் தனம்.

  தறிகெட்ட வேகத்தில் இந்திய மக்கள் தொகை உயர்ந்துகொண்டே போகிறது. மத்திய அரசுக்கு ஊழல் பிரச்சனைகளை சமாளிக்கவே நேரம் போதவில்லை. மாநில அரசுக்கு பழி வாங்கவே நேரம் போதவில்லை.
  மக்கள் தங்களை தாங்களாகவே பாதுகாத்து கொள்ளவேண்டும். இனிவரும் காலங்களில் ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதுமே.

 5. அறிவு பசியுடன் குழந்தைகள் வயிற்று பசியையும் தீர்தார் காமராசர் என்ற காங்கிரஸ்காரர். ஆனால் குழந்தைகள் அரை வயிறு புசிப்பதை கூட வழியில்லாமல் செய்துவிட்டான் இன்று மத்தியில் ஆளும் காங்கிரஸ்காரன்.

  பத்து மாசம் பெத்த வயிறு எரியுது
  ஏலை புள்ள சோத்த பாக்க ஏங்குது
  அரசு கிடங்குள உணவு தீயிது
  திங்கத்தான் குடன்டா பவாரு

  ஏலைக்கு விபத்துனா உசாரு
  அரசு மருத்துவமனையில இல்லடா டின்சரு
  நிதி இல்ல நீதி இல்ல ஏலைக்கு
  எலவு இந்த அரசு எதுக்குடா பிரனாபு

  மல்லயாவுக்கு மால்குடுக்க தயாரு
  ஆனால் பால் குடுக்க குழந்தகளுக்கு தகராறு
  ஓட்டு மட்டும் கேக்க வந்த ஆசாது
  ஏலைகள் மருந்துக்கு என்னடா செய்வது

  ஏலைகளின் அலுவலுக்கு தானடா
  திட்ட கமிசன் அலுவாலிய நீயடா
  திட்டம் ஒன்னும் உறுபடியா இல்லடா
  ஆனா பேச்சு மட்டும் காது வரை எதுக்குடா

  ஏலைகளின் வேதனையை தீர்கதான்
  செங்கொடி வீச வேண்டும் ஒசரமா

 6. Rationalism says keep food in godowns and maintain storage costs untill u can sell it for a profit.

  Paarpaneeyam says feed people in the temples out of state coffers.

  so the choice is between faith and hunger? who is going to do that?

 7. சீர்கேடுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது உழைக்கும் ஏழைமக்களே, ஏகாதிபத்தியங்கள் இம்மக்களை என்றும் நிம்மதியாக வாழவிடாது. மதவாதிகள் இம்மக்களின் மனதை தெளிவடைய எந்நாளும் விடமாட்டார்கள். இதனை எதிர்த்து போராடிதான் வீழ்த்தவேண்டும். நல்ல கட்டுரை, வாழ்த்துக்கள் தோழர்கள்…

 8. //மேற்கண்ட இரண்டு செய்திகளையும் பார்க்கும் போது மருத்துவத்தில் அரசின் அக்கறையின்மையையும் அதனால் பாதிக்கப்படும் மக்களையும்,///

  அரசு ஊழியர்களின் பொறுப்பு அல்லது பொறுப்பின்மை, ஊழல் பற்றி பேசாமால், என்னவோ அரசு என்பது ‘அதிகார வர்கம்’ மட்டும் தான் என்பது போல் பேசுகிறீர்கள். 1980அய் ஒப்பிடும் போது இன்று அரசுக்கு வரி வசூல் பெரும் மழை போல் கொட்டுகிறது. (எல்லாம் இந்த கேடு கெட்ட தாரளமயமாக்கலுக்கு பின் தான்). கல்வி, மருத்துவம் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிகர தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. (ஆனால் விகிதப்படி அதிகம் இல்லை). ஆனாலும் அவல நிலைக்கு தனியார் அல்லது ஏகாதிபத்திய சதி தான் காரணம் என்று வறட்டு வாதம் தொடர்ந்து புரிந்தால், தீர்வு ஒன்றும் கிடைக்காது. லச்சகணக்கான அரசு (மருத்துவ) ஊழியர்களை மொதல்ல தங்க கடமையை ஒழுங்கா, நேர்மையா செய்ய வலியுருத்துங்க. பிறகு தனியார் ’கொள்ளையை’ பற்றி பேசலாம்.

  நிரந்தர வேலை இருப்பதால், சங்கம் வலுவாக இருப்பதால், இவர்களை என்றும் ’திருத்தவே’ முடியாது. ஊழல் மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை தொடரும் தான்.
  வேலை பெறவும் இன்று லஞ்சம். போட்டி போட்டுக்கொண்டு பணம் கொடுத்து ’அரசு வேலை’ பெறும் அவலம். இதுக்கேல்லாம் எந்த ‘கொள்கை’ காரணம் ? தனியார்களுக்கும் இதற்க்கும் என்ன சம்பந்தம் ? சதி பற்றி தொடர்ந்து புலம்புகிறீர்கள். அது ஒரு வகை பாரோனியா வியாதி தான். யதார்த்தை சரியாக புரிந்து கொள்ள மறுக்கும் மனோபாவம்.

  கிராமபுர ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஊழியர்கள், மருத்துவர்களின் பணி நேர்மை மற்றும் ஒழுக்கம் பற்றி ஒரு கள ஆய்வு செய்யவும். முன் முடிவுகள் இல்லாமல் ஆராய முயலவும்.

 9. அரசு என்பது அதிகார வர்கமாக மட்டும் சித்தரிக்க படவில்லை. நீங்கள் சொல்லும் பொறுப்பின்மை ஊழல் ஆகியவற்றையும் இந்த கட்டுரையின் நுனுக்கத்தில் உள்ளது. வினவு சொல்வது கலக்டிவ் இன்ஸ்டிடுசனல் ஃப்லியர் பற்றி தான். தனியார் நிறுவனங்களின் பங்கையும் இனைத்து தான் ஆராய வேண்டும் ஏன் நீங்கள் சொல்லும் பொறுப்பு தனியார் அமைப்புகளுக்கு இல்லையா? தரமான பொருள்களை கொடுப்பதாக சொல்லிதானே பணி உரிமம் பெறுகிறார்கள்? தரமற்ற பொருள்களை கொடுபதும் ஒரு வகை ஊழல் தானே?

  இந்த கட்டுரையை அங்கம் அங்கமாக ஆராய்ந்து பாருங்கள் உண்மை புலப்படும். சுகாதார துறை, உணவு மற்றும் பொது வினயோக துறை, மாநிலம் மற்றும் தேசிய திட்ட கமிசனின் செயல்பாடு, உணவு ஏற்றுமதி மற்றும் எறக்குமதி கொள்கை, குழந்தை நல வாரியத்தின் செயல்பாடு ஆகிய அனைத்தையும் ஆராய்ந்தாள் தெரியும்.

  நீங்கள் சொல்வதை போல் வரிகள் நிரம்புகின்றன, கல்வி மற்றும் மருத்துவ துறைகளுக்கு நிதி ஒதிக்கீடு ஏற்றம் பெற்றுள்ளது எல்லாம் சரி ஒதுக்கபடும் நிதி எங்கே செலவு செய்ய படுகிறது என்பதை கண்கானிக்கும் லோக்கள் ஃபன்ட் ஆடிட்டின் செயல்பாடு என்ன?

  நீங்கள் சொல்லும் பொறுப்பின்மை, ஊழல் (அரசு மற்றும் தனியார்)எல்லாம் இதிலடைங்கி விடும், மறுக்கவும் இல்லை. அப்படியானால் மொத்த அரசின் அனைத்து நிலை செயல் பாடு தவறு தானே? இதை மாற்ற முற்பட வேண்டும் என்பதே வினவின் இந்த கட்டுரை விளக்குகிறது. அரசின் செயல்பட்டில் ஆதிகம் செலுத்திக் கொண்டு இருக்கும் தனியார் மற்றும் மத அமைப்புகளை களைந்தாலே பாதி பிரச்சனை முடிந்துவிடும். இது தான் இன்றைய அரசு அமைப்புகள் முடங்குவதற்கு காரணமே தவற அரசு ஊழியர்களின் நிரந்தர வேலையும் சங்கமும் காரணம் என்றால் அது நகைப்பு தான்.

Leave a Reply to senthamizlan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க