Saturday, February 4, 2023
முகப்புவாழ்க்கைஅனுபவம்சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!

சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!

-

முன்னுரை:
1996-97ஆம் ஆண்டுகளில் தென்மாவட்டங்களில் நடந்த கொடியங்குளம் ‘கலவரத்தை’ உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். உண்மையில் இந்தக் ‘கலவரத்தில்தான்’ தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் சமூக வன்முறைக்கு எதிராக தலைவணங்காத உறுதியினைக் காண்பித்தார்கள். இக்காலத்தில் எமது அமைப்புகள் தமிழகமெங்கும் குறிப்பாக கிராமப்புறங்களில் சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை நடத்தியது. பல்வேறு அளவுகளில், களங்களில் நடந்த இந்த இயக்கத்தின் போது நடந்த மணவிழாவின் பதிவுதான் இந்தக் கட்டுரை. சாதி மறுப்பு மணங்களின் சிக்கலையும், நம்பிக்கையையும் ஒருங்கே புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும். படித்துப்  பாருங்கள்!
–    வினவு

மிழகமெங்கும் ம.க.இ.க, பு.மா.இ.மு, வி.வி.மு. சார்பாக சாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கம் கருத்திலும், களத்திலும் நடைபெற்றது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும். தமிழ்ச் சமூக வாழ்க்கையில் குறுக்கும்- நெடுக்குமாக ஊடுருவிய இவ்வியக்கத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று விழுப்புரத்தில் 1997-ஆம்ஆண்டு நவ. 22-இல் நடைபெற்ற சாதி மறுப்பு மணவிழா.

சாதி சடங்கு பொருத்தங்களுடன் சமூகத்தில் நடக்கும் திருமணம், ஒரு மகிழ்ச்சியான நினைவு. ஆனால் சாதி மறுப்பு மணவிழா ஒரு மலரும் நினைவல்ல.

வெட்டரிவாள் மூலம் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் ‘மேல்’ சாதிக் கொடூரத்தைக் கூட நேருக்கு நேர் சந்திக்க முடியும். ஆனால் கண்ணீரும், ஒதுக்கும் போக்கும், வெட்டவெளி வசவுகளும், திண்ணைப் பேச்சு அவதூறுகள் முதல் பொதுக் குழாய் குடிநீர் பிடிப்பது வரையிலும் ஒவ்வொன்றையும் எதிர்த்து சாதி மறுப்பு மணமக்கள் ஒவ்வொரு நொடியிலும் போராட வேண்டும்.

இன்று தீண்டாமை, நகரங்கள்- அதன் சுற்றுப்புறங்களில் பெருமளவு ஒழிந்திருந்தாலும், தீண்டாமை மறுப்பு மணம் என்பது இந்தியாவெங்கும் கிராமப்புறங்களில் நடக்க முடியாத ஒன்று. சாதி ஆதிக்கத்தின் உயிர் போகும் ‘மானப் பிரச்சனை’ இதில்தான் அடங்கியுள்ளது. எந்தச் சாதியில் பிறந்த பெண்ணும் தீண்டாமை மறுப்பு மணத்தை ஏற்கும் போது ‘மேல்’ சாதியினர் தமது ஆத்மா குத்திக் கிழிக்கப்பட்டதாக அலறுகிறார்கள்.

இதனால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆண்- பெண் இயல்பினால் காதலித்து கல்லறைக்கு போன மணமக்கள் எத்தனை பேர் என்பதற்கு வரலாறு ஏதுமில்லை.

பறையரான காத்தவராயன் பார்ப்பன ஆரியமாலாவை காதலித்து ஊரைவிட்டு ஓடுகிறார். இவ்வழக்கு அரசனுக்கு வருகிறது. முதலில் விடுதலை செய்தவன் பார்ப்பனர்களின் போராட்டத்தினால் முடிவை மாற்றுகிறான். மணமக்கள் உயிரோடு கொளுத்தப்படுகிறார்கள். நாட்டுப்புற பாடல் ஒன்றின் கதை இதுவென்றால் தற்றோதைய நாட்டு நடப்பும் மாறவில்லை. தேர் இழுப்பதற்கு மட்டும் ஊர் கூடுவதில்லை, கலப்பு மணம் கண்ட மணமக்களை ஒற்றைப் பனையில் கட்டிவைத்து எரிப்பதற்கும் கூடுகிறது.

சாதி – மறுப்பு மணவிழா வெறும் பெருமையடையக் கூடிய ஒன்றல்ல. மாறாக இதில் சந்திக்கின்ற பிரச்சனைகளை வென்று கடப்பதுதான் முக்கியம்.

70 ஆண்டுகளுக்கு முன்பே ‘சுயமரியாதைத் திருமணம்’ என்ற பெயரில் தந்தை பெரியாரின் இயக்கம் இதை ஆரம்பித்து வைத்தது. 1968-ல் இத்திருமணங்களை அங்கீகரிக்கின்ற  சட்டப் பிரிவும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இயற்றப்பட்டது. எழுபது ஆண்டுகளாய் சமூகத்தில் பரவ வேண்டிய சாதி மறுப்பு மணம் வளராமல் போனது ஏன்?

இன்றைக்கு சுயமரியாதை மணம் என்பது புரோகிதர் இல்லாத மணம் என்பதாகச் சுருங்கி விட்டது. தாலி, சாதி, ஆடம்பர விருந்துகள், அலங்காரங்கள் இவையெல்லாம் இருந்துவிட்டு ஐயர் இல்லை என்பதால் மட்டும் இவை பார்ப்பனிய எதிர்ப்பாகாது. மாறாக பார்ப்பனியமயமாக்கப்பட்ட தமிழ்த் திருமணங்கள் என்று தான் அழைக்க முடியும்.

ஆனால் எழுபது ஆண்டுகளில் உள்ளுர் அளவிலான சாதி தனது வலைப் பின்னலை இந்திய அளவில் நிறுவியிருக்கிறது. நகரமயமாக்கம், செய்தி ஊடகத்தின் வளர்ச்சி காரணமாக, ஃபேக்ஸ், கணிப்பொறி, இணைய வசதிகளுடன் சென்னையில் தலைமையகத்தை வைத்துக் கொண்டு சாதிச் சங்கங்கள் செல்வாக்குடன் செயல்படுகின்றன. பத்திரிகைகளில் வரும் மணமக்கள் விளம்பரங்கள் வயது. உயரம், நிறம், சம்பளம், போன்ற எண் கணக்குகளோடு உட்சாதிப் பிரிவையும் அழுத்தமாகக் குறிப்பிடுகின்றன.

காலனீய ஆட்சியிலிருந்தே ‘வடமாள், பாரத்வாஜம், அனுஷம்’ என்று தனது குல- கோத்திர- ஜாதக விவரங்களை வெளியிட்டு மண விளம்பரம் செய்யும் பார்ப்பன சாதியினரே இதற்கு முன்னோடிகளாவர். தெரு- ஊருக்குள்ளே சம்பந்தம் முடிக்கும் சாதியினரெல்லாம் இன்று அவாள் பழக்கப்படி தேச அளவில் தேடுகிறார்கள். முன்பை விட உட்சாதி அக மணமுறை மேலும் இறுகியிருக்கிறது. மேலும் நிச்சயதார்த்தம் முதல் சாந்தி முகூர்த்தம் வரை விரிவான சடங்குகள், மாப்பிள்ளை அழைப்பு, கார்- குதிரை ஊர்வலம், ஆடம்பர மண்டபம்- விருந்து- வீடியோ என்ற பார்ப்பனியத்துடன் நுகர்வுப் பண்பாடும் சேர்ந்துவிட்ட திருமணங்கள் தான் இன்று அனைத்துச் சாதிகளும் ஏற்றுக் கொண்ட முறையாகிவிட்டது.

இப்படி சுயமரியாதைத் திருமணங்களையே வீழ்த்திவிட்ட பார்ப்பனியமயமாக்கம் மட்டும்தான் கடந்த தலைமுறையின் வரலாறா? இல்லை. நகரமயமாக்கம், திரைப்படம், தொலைக்காட்சி, தொழில் வளர்ச்சி, கல்விப் பரவல் காரணமாக காதல்- கலப்புத் திருமணங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. அப்படியானால் இயல்பாகவே சமூகத்தில தோன்றி வளருகின்ற காதல் திருமணங்களுக்கும், நமது மணவிழாவிற்கும் என்ன வேறுபாடு?

சமூக அக்கறை இன்றியும், வாழ்க்கை- பண்பாடு குறித்து சுயநல கண்ணோட்டமும் கொண்ட காதல் திருமணங்களின் புரட்சியும்- போராட்டமும் மணமேடையிலே தாலி கட்டியவுடன் முடிவுக்கு வருகிறது. ஆணாதிக்கமும், பார்ப்பனிய- சாதியப் பண்பாட்டை ஏற்றுக் கொண்டும், ஆண் அல்லது பெண்ணின் சாதிக்குள் சங்கமமாகிவிடும் இந்தக் காதல் மணங்கள் சாதி ஒழிப்பு என்ற சமூகப் போராட்டத்திற்கு எவ்வகையிலும் உதவவில்லை.

விழுப்புரம் மணவிழாவில் தோழர். மருதையன் குறிப்பிட்டதைப் போல எமது திருமணங்கள்- குடும்பங்கள், மூலமாக சாதி வெறியை எதிர்த்து மட்டுமல்ல, நான்கு சுவற்றுக்கு நடுவில் தாமும்- தன் வாரிசுகளுமே வாழ்க்கையின் இலட்சியம் என்று வாழும் குடும்பத்தின் கடைந்தெடுத்த சுயநலத்தையும் எதிர்த்தும் தான் போராடுகின்றனர். புரட்சிக்காக தன்னையும், குடும்பத்தினரையும் மாற்றிக் கொண்டு போராடுவதற்கு அமைப்பு வாழ்க்கை உதவி செய்கிறது. ஊருக்குள்ளே தீண்டாமை மறுப்பு மணமக்கள் போராடி வாழ்வதற்கும் இதுவே காரணம்.

மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மதுரை பாளையம் வட்டார வி.வி.மு. செயலர் தோழர். மோகன் பேசும் போது, ”தென் மாவட்ட ஆதிக்க சாதியினர் கலவரங்கள் நடத்தும் காலகட்டத்தில் தங்களது திருமணத்தின் மூலம் சாதி ஒழிப்புப் போராட்டத்தினைத் தொடுத்திருக்கும் மணமக்கள் இந்தப் பெருமையை தங்கள் வாரிசுகளுக்கும் வழங்க வேண்டும்” என்று வாழ்த்தினர். தீண்டாமை மறுப்பு மணம் செய்திருக்கும் தோழர். மோகனது வாழ்க்கையும் அந்தப் போராட்டப் பெருமையைக் கொண்டதுதான்.

‘அமைப்பிற்கு வருவதற்கு முன்பே என் திருமணம் முடிந்துவிட்டபடியால் குழந்தையில்லாதவன் தொட்டிலை முகர்வது போல தீண்டாமை மறுப்பு மணம் புரியும் இந்த மணமக்களை வாழ்த்தி நிறைவடைகிறேன்’ என்று பேசிய ஆண்டிப்பட்டி வி.வி.மு. செயலர் செல்வராசின் வாழ்க்கையும் போராட்டங்களைக் கொண்டதுதான். அருகாமை தாழ்த்தப்பட்டவர் வீட்டில் வடை சாப்பிட்டதற்காகச் சிறுவயதில் அவரைக் குளிப்பட்டி வீட்டில் அனுமதித்தவர் அவரது தாய். இன்று சேரியோடு உறவாடும் தோழரை தாயால் சகிக்க முடியவில்லை. தாயும், தனயனும் தத்தமது போராட்டங்களைக் கைவிடவும் தயாரில்லை. விளைவு? இருவரும் 13 வருடங்களாகப் பேசுவதில்லை. அவரவர் வீடுகளுக்குப் படியேறுவதில்லை.

கலப்பு மணம் கண்ட தம்பதியினர் சேரியில் குடியிருப்பது எளிது. ஊருக்குச் சென்றால்? தருமபுரி அருகே ‘மேல்’ சாதித் தெருவில் குடியிருக்கும் தோழர் ஒருவரது மனைவி தாழ்த்தப்பட்டவர். பொதுக் குழாயில் குடிநீர் பிடிக்கும் போது மேல் சாதி கௌரவத்தை நெஞ்சிலே கொண்டிருக்கும் பெண்கள் சண்டை போடுகிறார்கள். முன்பு போல ஊரைவிட்டு ஒதுக்கவோ, பனைமரத்தில் கட்டி வைத்து அடிக்கவோ முடியவில்லை. தமது சாதிக் கௌரவத்தை குத்திக் கிளறும் வி.வி.மு. என்ற ‘அரக்கனை’ பகைத்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை. போராட்டத்தை தொடருகிறார்கள் எமது தோழர்கள்.

பார்ப்பனச் சாதியில் பிறந்த அந்த பெண்ணும் ம.க.இ.க. தோழர் ஒருவரும் விரும்புகிறார்கள். பெண்ணின் உறவினர்களது தடைகளைத் தாண்டி அமைப்பின் உதவியுடன் காதல் வெற்றி பெருகிறது. புதிய ஊரில் நிலையில்லாத வேலை- பொருளாதார நெருக்கடிகளுடன் குடும்ப வாழ்க்கை தொடங்குகிறது. தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு ‘வெண்மணி’ என்று பெயரிட்டு மகிழுகின்றனர். விழுப்புரம் மணவிழாவில் ‘மாட்டுக்கறி விருந்துண்ணும்’ அளவிற்கு தன்னை மாற்றிக்கொண்டுவிட்ட அந்தப் பெண் தோழரை அவரது உறவினர்கள் இன்றுவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

சாதி- தீண்டாமை மறுப்புத் திருமணங்களைத் திட்டமிட்டு எமது அமைப்பே ஏற்பாடு செய்கிறது. அப்படி ஒரு விதியில்லை என்றாலும் உறுப்பினர்கள் அனைவரையும் அவ்வாறே மணம் செய்யுமாறு போராடுகிறோம். சமூகத்தில் நடைபெறும் காதல் மணங்கள் வெற்றியடைய கவர்ச்சி- வர்க்க அந்தஸ்த்தை உள்ளடக்கிய காதல் உணர்வு ஊக்குவிக்கிறது. தீண்டாமை மறுப்பு மணம் வெற்றியடைவதற்கு எம் தோழர்களின் சமூக உணர்வே காரணமாகிறதன்றி வெறும் காதல் உணர்வல்ல.

சென்ற ஆண்டு சாதி மறுப்புத் திருமணங்களை பல தோழர்கள் அவரவர் ஊர்களில் நடத்திவிட்டார்கள். விழுப்புரம் மணவிழாவிற்காக அமைப்பை பற்றித் தெரிந்த ஆதரவாளர்கள், நண்பர்கள், மற்றும் பொதுவானவர்கள் வீட்டிற்குச் சென்று மணவிழா குறித்து பேசி விளக்கிய போது மக்களுக்கு பல சந்தேகங்கள், கேள்விகள், ‘தாலியில்லாமல் கல்யாணம் செஞ்சா கூட்டிக் கொடுக்கிற மாதிரியில்லை’ என்றனர். திருச்சி அருகே துறையூரைச் சேர்ந்த சி.பி.எம். கட்சிக்காரர் ‘இந்தத் திருமணங்களுக்கு அத்தாட்சியில்லை’ என்று பெண் கொடுக்க வந்த ஒரு வீட்டினரைத் தடுத்து விட்டனர்.

‘உங்க சைடுல நீங்க எப்படி வேணா கல்யாணம் செஞ்சாலும் எங்களுக்கு ஒரு மாதா கோவில்ல மோதிரம் மாத்தினாத்தான் நிம்மதி’ என்றனர் ஒரு குடும்பத்தினர். அழைப்பிதழில் ‘மாட்டுக்கறி விருந்து’ என்று போட்டிருப்பதால் ‘எங்க உறவுக்காரங்களுக்கு எப்படி பத்திரிக்கை வைக்க முடியும்’ என்றார் ஒரு தந்தை.

இப்படி பல சுற்றுப் போராட்டங்களைத் தாண்டி ஆறு தம்பதியினர் தயாராயினர் என்றாலும் சரி பாதி மணமக்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை. மேலும் மணப்பெண்கள் இருவருக்கு இது மறுமணமும் கூட. மணமகன்களில் ஒருவரான விழுப்புரம் பகுதி தோழர். நடராசன் விழா நடந்த அன்று காலை வரை தனது பெற்றோர்களைத் திருமணத்திற்கு வருமாறு மன்றாடுகிறார். ‘ஊர் முன்னாடி அசிங்கப்படுத்தி அவமானமாக்கிட்ட’ என்ற பெற்றோர்கள் திருமணத்தன்று வெளியூருக்குச் சென்றுவிட்டனர்.

வேறு ஒரு தோழர் தனது தந்தையை திருமணத்திற்கு அழைத்த போது, ”நம்ம உறவுக்காரங்க இருக்குற கிராமத்தில உள்ள ‘இந்த’ பெண்ணை என்னை இழிவுபடுத்துறதுக்குன்னே கல்யாணம் செய்யப் போறே’ என்று வர மறுத்து விட்டார்.

வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் ஊரைச் சேர்ந்த தோழர் ராஜா விழுப்புரம் நிகழ்ச்சியில்தான் தனது சாதி மறுப்பு மணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்கிறார். சாதி ஆதிக்கத்திற்குப் பேர் போன அவரது ஊரைக் கண்டஞ்சி பல பெண் வீட்டினர் தயங்குகின்றனர்.

இதே வட்டாரத்தில் இரு மாதங்களுக்கு முன்னர்தான் அமைப்பில் சேர்ந்த தோழர் ஒருவரது தங்கையை மணப்பதற்க்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ராஜாவின் உறவினர், பெற்றோர் யாரும் விழுப்புரம் வரவில்லை. பின்னர் தம்பதியினராய் ஊருக்குத் திரும்பும் தோழர்கள் இருவரையும் சாணிக் கரைசல் ஆரத்தி வரவேற்கிறது. குடியிருக்க வீடு கூட கிடையாது என முடிவு செய்த ஊரார். அதனாலென்ன? அதே ஊரில் மணமக்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை பொதுக்கூட்டமாக நடத்தினார்கள் தோழர்கள்.

இப்படிப் பல தடங்கல்கள் இருந்தாலும் விழுப்புரம் மணவிழா தோழமையின் குதுகலத்தோடு நடந்தேறியது. தமிழகம் முழுவதிலிருந்தும் பல தோழர்கள், நண்பர்கள் குடும்பத்தோடு விழாவில் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து, மணமக்களின் பின்னே சாதிய ஒழிப்பு முழக்கங்களோடு அனைவரும் அணிவகுத்து வர- இந்த புதிய திருமண ஊர்வலத்தை விழுப்புரம் மக்கள் மகிழ்ச்சி கலந்த வியப்புடன் பார்த்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநரான அவர் தேநீருக்காக விழா மண்டபம் அருகே லாரியை நிறுத்தியவர், திருமண நிகழ்ச்சியைக் கேட்டறிந்து மணமார வாழ்த்தி நன்கொடையும் அளிக்கிறார். மண்டபத்தின் கடைசியிலே அமர்ந்து நிகழ்ச்சிகளை முழுவதுமாய் கவனித்துக் கொண்டிருந்த கருப்புச் சட்டையணிந்த இரண்டு முதிய திராவிட இயக்கத் தோழர்களின் கண்களில் ஆனந்தம் ததும்புகிறது.

விழுப்புரம் அருகே ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் அந்த நண்பர் விழாவினைப் பாராட்டி தனது முகவரியைக் கொடுத்து அமைப்பில் சேரவேண்டும் என்கிறார். விழாவிற்கு வந்த அனைவரும் மணமக்களுக்கு பல்வேறு நூல்களை பரிசாக அளிக்கின்றனர். விருத்தாசலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் சாதி ஒழிப்பு வெளியீட்டைப் (சிறு நூல்) பாராட்டி ரூ.500 நன்கொடை அளிக்கின்றனர்.

குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு மாட்டுக்கறி பிரியாணி சமைக்கின்றனர் அந்த முஸ்லீம் இளைஞரின் தலைமையிலான குழுவினர். இளைய தலைமுறையினர் விருந்தைச் சுவைத்த போது, சில முதியவர்கள் மட்டும் விருந்துண்ணவில்லை. ஒரே நாளில் அவர்கள் மாறிவிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாதுதான். அதே சமயம் பல நண்பர்கள் முதல் முறையாக மாட்டுக்கறியைச் சுவைக்கிறார்கள். இந்த விழா அவர்களது புதிய சிந்தனைக்கு ஒரு துவக்கம்.

புதிய ஜனநாயகப் புரட்சிக்காக தமது குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாக மணமக்கள்  உறுதி மொழியேற்று மாலை மாற்றுகின்றனர். சாதி- தீண்டாமை மறுப்பு மணமக்கள் வாழ்க வாழ்கவே என்ற முழக்கம் மண்டபத்தை நிறைவிக்கிறது. இதுவரையிலும் இனிமேலும் வாழ்க்கையை போராட்டப் பாதையில் அமைத்துக் கொள்வதற்கான நம்பிக்கையையும், துணிவையும், பொறுப்புணர்வையும் அக்கணத்தில் பெறுகிறார்கள் மணமக்கள்.

விவசாயப் புரட்சி என்ற வர்க்கப் போராட்டத்தினூடாகத்தான் சாதி ஒழிப்பிற்கான அடித்தளத்தை நிறுவமுடியும் என்ற போதிலும், சாதிகளற்ற எதிர்கால சமூகத்தை இன்றே வாழ்ந்து காட்டுவதன் மூலம், சாதிகளிலான இன்றைய சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். அதுதான் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் செயலூக்கமுள்ள நம்பிக்கை.

மணவிழா நடந்த மண்டபத்தில் வேலை செய்யும் ஒரு பெண்மணி, முறையான திருமணங்களைக் கண்டிருந்த அவர் இவ்விழாவை ஆரம்பத்தில் சட்டை செய்யவில்ல. நேரம் செல்லச்செல்ல மண்டபத்தில் நிறைந்திருந்த மக்களை வியப்புடன் பார்க்கிறார். நிகழ்ச்சிகளையும் சற்று கவனிக்கிறார். ஒதுங்கியிருந்தவர் முழு மனதுடன் உரைகளைக் கேட்கிறார். விழா முடிந்து நள்ளிரவு அமைதியில் தோழர்களை அணுகிக் கேட்கிறார், ”எங்க வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கு. உங்க தோழர்கள்ள ஒருத்தருக்கு கட்டிக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.”

– புதிய கலாச்சாரம், மார்ச் 1998

 1. சாதி மறுப்புத் திருமணம் சாதி ஒழிப்புத் திருமணம் இரண்டிற்கும் வேறுபாடுகள் இருப்பின் விவரம் அனுப்பவும்.

  • சமுக அக்கறை ஏதும் தேவையில்லாமல் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் மணம் புரிந்து பின் அதில் ஒரு சாதியினராக தன் சந்ததியை வளர்ப்பது- சாதி மறுப்பு திருமணம்
   சாதி ஒழிக்கும் சமூக அக்கறையோடு எக்காலத்திலும் சாதியை ஏற்காமல் ஒழிக்க பாடுபடுவதை நோக்கமாக கொண்டு மணம் புரிவது – சாதி ஒழிப்பு திருமணம்

 2. சமூகத்தை மாற்றத் துடிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி!

 3. விழா முடிந்து நள்ளிரவு அமைதியில் தோழர்களை அணுகிக் கேட்கிறார், ”எங்க வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கு. உங்க தோழர்கள்ள ஒருத்தருக்கு கட்டிக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.”

  சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்க்கிறார் – மண்டபமே காலி!

  • அதெப்படி திரு. அனானி அவர்களே, உங்களுக்கு மட்டும் அனர்த்தமாக சிந்திக்க முடிகிறது. (திரு. எம்.ஆர். ராதா அவர்கள் ஒரு படத்தில் சொல்வார்கள் – குடுமிக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லை என்று. அது உங்கள் விஷயத்தில் சரியாக இருக்கும் போல் தெரிகிறதே?)

   • விழா முடிந்துவட்டது என்று பதிவிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் மண்டபம் காலியாகத்தனே இருக்கும் 🙂 🙂

    (சீரியஸாகச் சொன்னால் – கட்டுரை அம்போவென்று அந்த விஷயத்தை விட்டுவிட்டது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளேன்!)

 4. // மண்டபத்தின் கடைசியிலே அமர்ந்து நிகழ்ச்சிகளை முழுவதுமாய் கவனித்துக் கொண்டிருந்த கருப்புச் சட்டையணிந்த இரண்டு முதிய திராவிட இயக்கத் தோழர்களின் கண்களில் ஆனந்தம் ததும்புகிறது //

  அவருக்கு மட்டுமல்ல. கட்டுரையைப் படிக்கும் எங்களுக்குதான்.

  பெருமிதமாக இருக்கிறது தோழர்களே. செவ்வணக்கம்..

 5. // மண்டபத்தின் கடைசியிலே அமர்ந்து நிகழ்ச்சிகளை முழுவதுமாய் கவனித்துக் கொண்டிருந்த கருப்புச் சட்டையணிந்த இரண்டு முதிய திராவிட இயக்கத் தோழர்களின் கண்களில் ஆனந்தம் ததும்புகிறது //

  அவருக்கு மட்டுமல்ல. கட்டுரையைப் படிக்கும் எங்களுக்கும்தான்.

  பெருமிதமாக இருக்கிறது தோழர்களே. செவ்வணக்கம்..

  • அந்த முதிய திராவிட இயக்க தோழர்களுக்கு கண்ணுல தூசி விழுந்திருக்கும்…

   • உங்களுக்கு மூளைல தூசி இல்ல காவி கலர்ல புழுதி படலமே விழுந்து இருக்கு.

 6. // மண்டபத்தின் கடைசியிலே அமர்ந்து நிகழ்ச்சிகளை முழுவதுமாய் கவனித்துக் கொண்டிருந்த கருப்புச் சட்டையணிந்த இரண்டு முதிய திராவிட இயக்கத் தோழர்களின் கண்களில் ஆனந்தம் ததும்புகிறது //

  1998ல் எழுதப்பட்ட கட்டுரை என்றாலும் படிக்கும்போது நெஞ்ஞு விம்முகிறது.வாழ்த்துக்கள் தோழர்கள்,

  மற்றபடி ஒரு விவரம் வேண்டும், சாதி ஒழிப்பு மற்றும் புரட்சிகர திருமணம் செய்ய யாரிடம் தகவல் பெறமுடியும்? இரண்டு வருடங்களாக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

  • புரட்சி செய்வதற்காவே வாழ்கையை அர்ப்பணித்திருக்கும் தமிழின தலைவர் கி வீரமணியை அல்லது கூடிய விரைவில் செம்புராட்சி நிகழ்த்தவிருக்கும் சி பி எம் தோழர்களை அணுகுங்கள்.வெற்றி நிச்சயம். வாழ்க வளமுடன்.

   • தோழர் தவறாக அர்த்தப் பட்டுக்கொண்டிருக்கிறீர்கள், அல்லது, நாந்தான் சரியான புரிதல் இல்லாமல் செய்தியிட்டேனா என்று தெரியவில்லை. நான் புதிய ஜனநாயக பண்பாட்டு நெறிமுறைகுட்பட்டு கேட்கிறேன்.

 7. பிரமாதம்! மாட்டுக்கறி சாப்பிட்டு எதிர்ப்பை காட்டுகிர்ரர்கலாம் ?

  தாய்ப்பாலுக்கு பிறகு அந்த பசுமாட்டின் பாலுன்பதால், அன்னைக்கு சமமமாக பார்க்கிறோம்
  மாட்டிற்குதான் பொங்கல் வைத்தான் தமிழன். கோழிக்கோ பன்றிக்கோ அல்ல. ஒரு வேளை அது கூட பார்பனமோ ?

  புலால் உன்ன வேண்டாம் என்றானே வள்ளுவன். அவன் தமிழன் அல்லவோ?

  Vinavu cult has sickening attitude!

  • பால் மட்டுமா உண்ணுகிறோம்.மாம்பழம் பலாப்பழம் கூட சாபிடுறோம். ஆனா அந்த மரங்கள வெட்டி கதவு கட்டில்னு செய்யுறத எப்புடி ஏத்துக்கிறீங்க.அந்த பசு மாட்டு தோல்ல செருப்பு,பெல்ட் னு எத்தனையோ பொருள செஞ்சு பயன்படுத்தும்போது மட்டும் ”தாய்ப்பாசம்” என்னவாகுது. கேவலம் ஒரு ஐந்தறிவு மிருகத்திர்காக லச்சார்ல ஐந்து தலித் இளைங்கர்களை அடித்தே கொல்லும்போது மட்டும் தாய்ப்பாசம் பொங்குதோ.

   பன்றிக்கும் கோழிக்கும் பொங்கல் வைக்க அதையா ஏர்ல பூட்டி உழுகிறோம்.

   பார்ப்பன வர்ணாசிரம மதத்தை எதிர்த்து எழுந்த சமண மதத்தை சேர்ந்தவர் வள்ளுவர்.அந்த கால கட்டத்தில் பார்ப்பனர்கள் வேள்வி தீயில் மாடுகளை போட்டு அதன் மாமிசத்தை உண்ணும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.அதானால் விவசாயத்திற்கு கால்நடைகள் கிடைப்பது பாதிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில்தான் சமணமும் அதன் வழி வள்ளுவரும் புலால் மறுப்பை வலியுறுத்தினர்.

   • அறம் பொருள் இன்பம் வீடு எனபது இந்து மதத்தில் உள்ளது
    அறம் பொருள் இன்பம் என்பதை கருவாக கொண்டு திருக்குறள் எழுதப்பட்டு உள்ளது

    அது சரி சமண மதமும் ஆரிய மதம் அன்றோ
    புத்த மதம் அதுவும் ஆரியர்களுடையதே ?
    அடடா மார்க்சியம் கூட ஆரியர்களுடையதே ?

    என்ன ஒரு சோதனை திராவிடனுக்கு!

   • தலித் இளைஞர்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் முதலைகளே! வவ்வால்களே
    பொருளாதார காராணம் இல்லாமல் உலகில் எதுவும் நடப்பதில்லை!
    உத்தபுரம், இரட்டை குவளை முறை எல்லாம் நடத்தி விட்டு பார்பனர் மீது பழி போட்டு தப்பிக்கும் உங்கள் குணத்தை அறிந்து கொள்ள நான் ஏற்கனவே கூறிய வலைதளத்தை படியுங்கள்

    • தலித் இளைங்கர்கள அடிச்சுக் கொன்ன அயோக்கிய பயல்களுக்கு வக்காலத்து வாங்க வெட்கப்படல.எங்கள முதலன்னு சொல்ல என்ன யோக்கியதை இருக்கு.
     வர்ணாசிரமத்த எதுத்த புத்தமும் சமணமும் வர்ணாசிரம வெறியர்களான ஆரியர் மதமாம்.பித்தலாட்டமே உன் மறு பெயர்தான் ஆரியமோ.

     வேத காலத்துல பசு மாட்டு கறிய முழுப் போடு போட்டுட்டு இப்ப என்ன புலால் மறுப்பு வேஷம் வேண்டிக் கெடக்கு.நீங்க திங்காட்டா விடுங்க.எதுக்காக திங்கிறவன கொல்ல வேண்டும்.

     இந்து மதத்துல இன்னும் என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க இந்த வலைத்தளத்துக்கு போவலாம்.

     http://thathachariyar.blogspot.in/2011/02/3.html

     • தலித்களை அடித்து கொடுமை படுத்தி கொண்டு, அப்படியே பார்ப்பான் மீது பழிபோட்டு இட ஒதுக்கீடு வாங்கும் நம் இனத்தின் தந்திரம் பிரமாதம்.
      தலித்களும் பாவம் இதை உண்மை , நாம் நல்லவர்கள் என நம்பிக்கொண்டு ஏமாந்து போகிறார்கள்

      இந்தியாவில் கடல் வழியாக வந்தவர் , தரை வழியாக வந்தவர் என ரெண்டே பேர் தான்.
      சமணரும் புத்தரும் கடல் வழி வந்தவர்கள் இல்லை.

      வேத காலத்தில தவறு செய்தார்கள் என்று பார்பானை திட்டுகிறாயே, இன்றைக்கு தீண்டாமை தவறு செய்யும் பிற்படுத்தப்பட்ட மக்களை கேள்வி கேட்கும் துணிவு இருக்கிறதா ?

      திருப்பி அடிக்க மாட்டன் பார்பான் என்பதால் திட்டு கொண்டே இருக்க வேண்டியது. திருப்பி அடிப்பான் என்று தெரிந்தால் வாலை சுருட்டி வைத்துகொள்வது

      • மனிதன் இந்த விவாதத்தை கவனிக்க வேண்டும்.பாருங்க நா போங்க வாங்கன்னு பன்மையில் பேசுறேன்.ரகு ”திட்டுகிறாயே” என ஒருமையில் பேசுறார். பதிலுக்கு நா எழுதுனா தனிநபர் தாக்குதல்னு குத்தம் சொல்றீங்க.”திட்டுவது”கூட அவர் ஆரம்பிச்சதுதா.நடிக்கும் வவ்வால்கள்னும் முதலைகள்னும் பின்னூட்டம் போட்டதே அவர்தான். நான் வசை மொழி எதுவும் சொல்லவில்லை.கடும் விமர்சனத்திற்கு பதில் சொல்ல முடியாமல் திட்டுகிறேன் என்கிறார்.

       \\தலித்களை அடித்து கொடுமை படுத்தி கொண்டு, அப்படியே பார்ப்பான் மீது பழிபோட்டு இட ஒதுக்கீடு வாங்கும் நம் இனத்தின் தந்திரம் பிரமாதம்.
       தலித்களும் பாவம் இதை உண்மை , நாம் நல்லவர்கள் என நம்பிக்கொண்டு ஏமாந்து போகிறார்கள் //

       \\ வேத காலத்தில தவறு செய்தார்கள் என்று பார்பானை திட்டுகிறாயே, இன்றைக்கு தீண்டாமை தவறு செய்யும் பிற்படுத்தப்பட்ட மக்களை கேள்வி கேட்கும் துணிவு இருக்கிறதா ? //

       தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினரால் நடத்தப்படும் வன்கொடுமைகளை எதுத்து களத்தில் நின்று போராடுபவர்கள் இடதுசாரிகள்தான். உத்தபுரம் தீண்டாமை சுவரை இடித்ததில் இடதுசாரிகளின் பங்கை மனசாட்சி உள்ள எவரும் மறுக்கமாட்டார்கள்.

       பஞ்சமர்கள் என ஒடுக்கப்பட்ட தலித்கள் மற்றும் சூத்திரன்னு ஒடுக்கப்பட்ட மக்கள் இடையே ஒற்றுமையை சாதிக்க பாடுபடுபவர்கள் முயற்சி வெற்றி பெற்று விட கூடாதுங்கிற கெட்ட எண்ணத்துளதா இது போன்ற பிரசாரம் நடத்தப்படுது.

       தேவர்,கவுண்டர்,வன்னிய சாதிவெறிக்கு எதிராக எழுதப்பட்ட ஏகப்பட்ட பதிவுகளும் அதற்கான ஏராளமான பின்னூட்டங்களும் வினவில் உள்ளன.படித்து விட்டு வரவும்.

       வேத காலத்துல மாட்டுக்கறி தின்பது பார்ப்பனர் வழக்கம்னு சுட்டிக்காட்டினா அது திட்டுறதா.இப்ப மாட்டுக்கறி உண்பது மட்டும் எப்படி தவறாகும்னு கேட்டதுக்கு பதில் இல்லையே.

       \\ திருப்பி அடிக்க மாட்டன் பார்பான் என்பதால் திட்டு கொண்டே இருக்க வேண்டியது. திருப்பி அடிப்பான் என்று தெரிந்தால் வாலை சுருட்டி வைத்துகொள்வது//

       சமணமும் புத்தமும் தமிழகத்தில் தழைத்தோங்கியதே பார்ப்பனிய எதிர்ப்பு உணர்வின் காரணமாகத்தான்.அதனால்தான் பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வர்ணாசிரமத்துக்கு எதிரா பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் வள்ளுவர்.அதனால் அன்று தொடங்கி இன்று வரை எங்கள் பார்ப்பனிய எதிர்ப்பில் என்றும் தொய்வு கிடையாது.உங்கள் பாசையில் ”வால சுருட்டி வைக்கல”

       மனிதன்,இதையும் கவனிங்க.எது வால சுருட்டி வைக்கும்.இதுக்கு கடசியா பதில் இருக்கு.

       நாங்க என்னைக்கும் பார்ப்பணர்கள மீது physical violence பிரயோகித்ததில்லை.ஆனால் அவர்கள் யோக்கியதை என்ன.பாண்டிய மன்னன கைல போட்டுக்கிட்டு சமணர்கள கழுவுல ஏத்தி கொன்றதிலிருந்து இப்ப இந்து முன்னணி காலிகள ஏவி கூடங்குளம் போராட்ட குழுவினர தாக்கியது வரை அவர்கள் எப்படிப்பட்ட வன்முறையாளர்கள்னு தெரிஞ்சுக்கலாம்.

       திருப்பி அடிப்பது என்பதை விடபார்ப்பணர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கொலை வெறி சங்க பரிவார் ரவுடிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதுலையே புரிந்து கொள்ளலாம்.

       ஒரு ஐந்தறிவு மாட்டுக்காக ஐந்து மனித உயிர்கள கொடூரமா கொலை பண்ணிய அயோக்கிய பயல்கள கண்டிக்கிறேன்னு சொல்ல மனசு இல்லாத ரகு எங்க மேல ”வள் வள் ”ன்னு விழலாமா.

       • // பாண்டிய மன்னன கைல போட்டுக்கிட்டு சமணர்கள கழுவுல ஏத்தி கொன்றதிலிருந்து //

        கர்னாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்த சமணர்களின் சமகால / அதற்குப்பின்னான சமண ஆவணங்கள் எதிலும் பாண்டிய நாட்டில் நிகழ்ந்ததாகக் கூற்ப்படும் இத்தகைய கொடூர நிகழ்ச்சியைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. திருமுறைப் பாடல்களில் வரும் சமணக் கழுவேற்றம் மிகைப்படுத்தப்பட்ட வெற்றியின் குறியீடாக இருக்கலாம். தவிர, வாதத்திற்கு முன் சமணராக இருந்த பாண்டிய மன்னர் தான் மதித்த சமணர்களை இவ்வாறு கொலை செய்ய சம்மதித்திருப்பார் என்பதை நம்பமுடியவில்லை.

        அவர் இவருக்கு ஆப்பு வைத்தார், இவர் அவருக்கு ஆப்பு வைத்தார் என்று இன்று நாம் பதிவதை நமக்கு 10 தலைமுறைக்குப்பின் வரும் சந்ததிகள் சொல்லளவில் எடுத்துக் கொண்டால் நம்மையெல்லாம் ஆப்படித்த கூட்டம் என விபரீதமாக புரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதால் ஆப்பை அனைவரும் கைவிட வேண்டும் என இதன்மூலம் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

     • இந்து மததில என்ன இருக்குன்னு புத்தகம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா யாரும் புத்தகம் படித்து மதம் வளர்ப்பதில்லை. நடைமுறை வாழ்க்கை தான் இந்து மதம். ஒரு புத்தகத்தை பிடித்துகொண்டு அது படி நடக்கலன்னா நரகம் என்று யாரும் மிரட்டி வளர்ந்தது அல்ல இந்து மதம்.

      • இந்த நக்சல், கருஞ்சட்டை, செஞ்சட்டை கோஷ்டிகளுக்கு தெரிந்ததெல்லாம் இரண்டே சாதிகள் தான் ஒன்று பார்ப்பான், இன்னொன்று தலித், இடையில் இருக்கும் சாதிகள் எல்லாம் இவனுக கண்ணுக்கு தெரியாது, ஏன்னா இந்த பார்ப்பனீயம் மேல் பழி போடும் தொண்ணூறு சதவீதம் பேர் இந்த இடைப்பட்ட ஆதிக்க மேல் சாதியை சேர்ந்தவன்… இவனுங்களும், இவனுங்க தந்தை, பாட்டன், பூட்டன் தான் தலித்களுக்கு அதிகப்படியான கொடுமைகள் செய்த கயவர்கள்…

       இரட்டை குவளை முறை பார்ப்பானால் வந்ததா இல்லை பிற்படுத்தப்பட்ட சாதிக்காரன் என்று சொல்லிக்கொள்ளும் கயவர்களால் வந்தாதா ?
       தீண்டாமை சுவர் கட்டியது எந்த சாதி…?
       இம்மானுவேலை இழிவுபடுத்தியது எந்த சாதி…?
       தமிழத்தில் 40 ஆண்டுக்காலமாக ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு தலித்களை முன்னேற விடாமல் தடுப்பது எந்த சாதி கூட்டம்…
       சாதிக்கலவரங்களை நடத்தி தலித்களை கொன்று வெற்றி களிப்பிடுவர் எந்த சாதி..
       முதுகுலத்தூரும், பரமக்குடியும் பந்தாடப்பட எந்த சாதி தீண்டாமை….?
       வீரசிகாமணி வீண் கலவரத்துக்கு எந்த சாதி காரணம்… ?
       கொடியங்குளம் கொடூரகுளம் ஆக எந்த குலம் காரணம் ?
       தலித் பெண்டிரை கேலி செய்து, விஷம் கொண்டு தீண்டுபவன் எந்த சாதி…. ?
       தாழ்த்தப்பட்ட நபர் கலந்துகொள்ளுவதை தடுக்க அரசு விழாக்களையே புறக்கணிக்கும் நபர்கள் எந்த சாதி…. ?
       ஏலே! அவன் காதை பாத்தியாலே! அவன் நம்ம சாதிக்கார பயலே என்று ஒவ்வொரு அதிகாரியை பார்த்தும் சந்தோசப்படும் சாதி எந்த சாதி… ?
       கோயில்கள் கலவரங்களின் கூடாரமாக எந்த ஆதிக்க சாதி காரணம்…?
       மண்டகப்படிகளில் மண்டைகள் உருளுவதர்க்கு எந்த சாதி காரணம்….
       தேருக்கு முட்டுக்கட்டை போடும் சாதி எது?
       தலித் அதிகாரிகளை ட்ரான்ஸ்பர் செய்ய குள்ளநரித்தனம் செய்யும் சாதி எந்த சாதி… ?
       கிராமங்களில் தலித்துக்கு நிலம் விற்க மறுக்கும் சாதி எந்த சாதி…?
       தன வீட்டு பெண்டிரை பார்த்தான் என்று தலித்தை இன்றைக்கும் கட்டி வைத்து உதிக்கும் சாதி எந்த சாதி…?

       வழக்கம் போல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியன்தான் அப்படி செய்ய கற்றுக்கொடுத்தான்… ஆகவே அவன்தான் இதுக்கெலாம் காரணம் என்று சொல்லி உங்கள் குற்றங்களில் இருந்து தப்பிக்காமல்… இந்த பிரச்னைகளுக்கு தீர்வு என்ன என்று யோசியுங்கள்….

       • என்ன மனிதன் எங்களுக்குலாம் மரியாதைய பத்தி புத்திமதி சொல்லிட்டு இப்ப நீங்களே அவனுங்க, இவனுங்க, சேர்ந்தவன்,ன்னு தரம் தாழ்ந்து எழுதுறீங்க.இதுலேர்ந்தே உங்க தரம் என்னனு தெரியுது.

        நீங்க சொல்ற சட்டைஎல்லாமே எல்லா சாதி வெறியையும் எதிர்த்து போராடுகிறார்கள்.பிற்பட்ட சாதியினரில் உள்ள வெறியர்களுக்கு அவர்கள் துணை போவதாக சொல்வது பொய்.பித்தலாட்டமேயன்றி வேறில்லை.

        உங்கள் வாதப்படி இன்று தலித்கள் மீது சாதி ஒடுக்குமுறையை ஏவுபவர்கள் இடைநிலை சாதியினர்.மறுக்கவில்லை.அவற்றையும் எதுத்துதான் போராடுறோம்.வினவில் இடைநிலை ஆதிக்க சாதி வெறியை கண்டித்து ஏராளமாக எழுதியிருக்கிறார்கள்.நீங்களும் அவற்றில் பின்னூட்டங்கள் எழுதிவிட்டு சிவப்பு சட்டை பாப்பனர்களை மட்டும் குறை சொல்லுதுன்னு சொல்றீங்க.என்ன நியாயம்.

        அதே சமயம் இந்த சாதி ஒடுக்குமுறைகளுக்கு பார்ப்பனர்கள் காரணம் இல்லன்னு சாதிக்க பாக்குறீங்க.ஏன் ரெண்டாயிரம் ஆண்டு பின்னால போறீங்க.அப்போதிருந்து நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் அக்ரகாரம் கட்டி வாழ்ந்தது யார்.அந்த தெருவுல பள்ளு பறலாம் நடக்காதன்னு சொன்னது யாரு.அப்படி நீங்க கத்துக் கொடுத்த தீண்டாமையத்தா இன்னைக்கும் இடைநிலை சாதி முட்டாள்கள் புடிச்சுகிட்டு தொங்கறானுங்க.கிராமத்த விட்டு நகரங்களுக்கு டேராவ மாத்திக்கிட்டதுனால பார்ப்பனர்கள் முன்னர் போல தீண்டாமைய வெளிப்படையா காட்டிக்கிறதில்ல.அவ்வளவுதான்.

        இன்னைக்கும் மடிப்பாக்கம்,வேளச்சேரி நங்கநல்லூர்ல பார்ப்பனர்கள் செறிவாக இருக்கும் இடங்களில் பிற சாதியினர் வாடகைக்கு வீடு பிடிக்க முடியாது.அதுக்கு தீண்டாமை மனோபாவம் காரணமில்லையா. அலுவலகங்களில் கடை நிலை ஊழியராக வேலை பார்க்கும் முதியவரை கூட பேர் சொல்லி கூப்பிடுவது அவர் கீழ்சாதி என்பதால்தானே. மாட்டுக்கறி உண்பது காலம் காலமாக தலித்களின் வழக்கம்.மாட்டுக்கறி உண்பவர்களை கொல்லவேண்டும் எனும் அளவுக்கு வெறியூட்டுவது யார். இப்போது கூட சுப்பிரமணி i hate beef eaters ன்னு பின்னூட்டம் போடுவது தீண்டாமை இல்லையா. அவன் காசுல வாங்குன மாட்ட அவன் அறுத்து திங்கிறதுக்கு நீங்க என்ன அனுமதி கொடுக்கிறது.பசுவதை தடை சட்டம் கொண்டு வர்றதே தீண்டாமைதானே.லச்சார்ல பசு மாட்டு தோல உரித்த ”மாபாதகத்துக்காக” அஞ்சு தலித்களை கொலை பண்ணிட்டு பசுவின் உயிர் எங்களுக்கு புனிதமானது ன்னு பேட்டி கொடுக்கும் அசோக் சிங்காலையும்,அந்த கிழட்டு நரியின் சங்க பரிவார் கும்பலையும் முழு மூச்சாக ஆதரிக்கும் பார்ப்பனர்கள் தீண்டாமைக்கு காரனமில்லைன்னு நீங்க கதை அளக்கலாம்.நம்புவதர்குத்தான் ஆளில்லை.

        • \\என்ன மனிதன் எங்களுக்குலாம் மரியாதைய பத்தி புத்திமதி சொல்லிட்டு இப்ப நீங்களே அவனுங்க, இவனுங்க, சேர்ந்தவன்,ன்னு தரம் தாழ்ந்து எழுதுறீங்க.இதுலேர்ந்தே உங்க தரம் என்னனு தெரியுது.\\
         சாதி மத துவேசம் கொண்டவர்களுக்கு என்னிடம் மரியாதையை எதிர்பார்க்கவேண்டாம்… சாதி வெறி பிடித்தவர்களை மனிதன் என்பதைவிட மிருகம் என்றே அழுத்தம் கொடுத்து குறிக்க ஆசைப்படுகிறேன்… பிறகு மரியாதை எங்கிருந்து…. நீங்கள் கூட “இடைநிலை சாதி முட்டாள்கள் புடிச்சுகிட்டு தொங்கறானுங்க” என்று செல்லமா திட்டுறீங்களே…

         \\சாதி ஒடுக்குமுறைகளுக்கு பார்ப்பனர்கள் காரணம் இல்லன்னு சாதிக்க பாக்குறீங்க\\
         காரணத்தை கற்றுக்கொண்ட நீங்கள், நிவாரணத்தை நினைக்கவே இல்லையே… பூகம்பம் தோன்ற பாறை அடுக்குகள் காரணம்தான், ஆனால் நிவாரணம் என்ன? எப்படி இந்த சாதி வெறியை ஒழிக்கப்போகிறோம்? சில பதிவுகளில் குறிப்பட்டது போல, பார்ப்பனர்களை மட்டும் வேறு மாநிலத்துக்கு புலம் பெயர செய்துவிட்டால் சாதி ஒடுக்குமுறை ஒழிந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?

         \\அப்படி நீங்க கத்துக் கொடுத்த தீண்டாமையத்தா இன்னைக்கும் இடைநிலை சாதி முட்டாள்கள் புடிச்சுகிட்டு தொங்கறானுங்க\\
         நான் யாருக்கும் தீண்டாமையை கற்று கொடுப்பவன் அல்ல… இடைநிலை சாதி முட்டாள்கள் என்று இந்த சாதி வெறி கயவர்களை இலகுவாக விமர்சிக்கும்போதே நீங்கள் அந்த இடைநிலைக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் என்று தெரிகிறது….

         \\கடை நிலை ஊழியராக வேலை பார்க்கும் முதியவரை கூட பேர் சொல்லி கூப்பிடுவது அவர் கீழ்சாதி என்பதால்தானே\\
         எந்த காலத்தில இருக்கீங்க, இன்றைய அந்நிய பொருளாதார ஆதிக்க சூழ்நிலையில் MD முதல் ஆபீஸ் பாய் வரை அனைவரும் பெயர் சொல்லி தான் அனைத்து அலுவலகங்களிலும் அழைக்கப்படுகின்றனர்… நீ, நீங்க, நீர், நீவிர் எல்லாமே இன்றைக்கு ‘யு’ என்ற ஒரெழுத்தில் முடங்கிவிட்டது…

         \\மாட்டுக்கறி உண்பது காலம் காலமாக தலித்களின் வழக்கம்\\
         ஏற்கனவே கூறியிருக்கிறேன், பல வெளிநாடு வாழ் தலித் நண்பர்கள் “ஐ ஹேட் பீப்” என பீட்டர் விடுகிறார்களே… பிரச்னை எங்கே உள்ளது? உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் சமைத்தும் சமைக்காமலும் ஒரே மேடையில் பரப்பி தின்று வாழும் பிற ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாட்டவரிடம் அதே மேசையில் அமர்ந்து இன்றைய பிசினஸ் பார்ப்பனர்களும், இடைநிலை மேல் சாதி வியாபாரிகளும் உன்னுகிறார்களே.. இது தீண்டாமையா இல்லை பச்சோந்திதனமா இல்லை டார்விநிசமா?

         \\அவற்றையும் எதுத்துதான் போராடுறோம்.வினவில் இடைநிலை ஆதிக்க சாதி வெறியை கண்டித்து ஏராளமாக எழுதியிருக்கிறார்கள்\\
         அந்த பதிவுகளில் குவிந்துள்ள இடைநிலை சாதி ஆதரவு கருத்துக்களை பாருங்கள்… எத்தனை பேர் கொலை வெறியோடு சாதி துவேசத்தை வினவில் விதைத்து சென்றிருக்கிறார்கள்… பார்ப்பன வெறியர்களுக்கு ஈடாக இந்த வெறியர்களின் செயல்பாடுகள் இருக்கிறதா இல்லையா… இவனை பார்ப்பன் தான் தூண்டுகிறான் என்று சொல்லுகிறீர்களா… அப்ப அதே பார்ப்பன் போய் தலித்துக்கள் நமது சகோதரர்கள் அவர்களை அரவணைத்து செல் என்று சொன்னால் இந்த வீரம் பொதிந்த சமுதாயங்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் நபர்கள் ஏற்பார்களா?

         வினவின் பதிவுகளிலே பார்ப்பனீய தீண்டாமை ஒழிப்பு, அகமதியர் பிரச்னை, இஸ்லாமிய கிறித்தவ சாதி மோதல் என்ற உடன் வரிந்து கட்டி ஆதரவு கருத்துக்களை அள்ளி தெளிக்கும் இடைநிலை சாதி வெறி இந்துக்களில் எத்தனை பேர் தென்மாவட்ட கலவரங்களை முதுகெலும்போடு கண்டிக்கிறார்கள் என்று சற்று யோசித்து பார்க்கவும்…

         பார்ப்பனர்கள் புலம் பெயர்ந்தால் சாதீயம் ஒழிக்கப்படும் என்று கருதுகிறீர்களா, அல்ல பார்ப்பனர்களை தாண்டியும் பல சாதி வெறியர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறீர்களா என தெளிவுபடுத்தவும்…

         மேலும் என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ள இரட்டைக்குவளை பிரச்னை முதலான கருத்துகளுக்கு உங்களது மாற்று கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்…

         • பார்ப்பன் போய் தலித்துக்கள் நமது சகோதரர்கள் அவர்களை அரவணைத்து செல் என்று சொன்னால் இந்த வீரம் பொதிந்த சமுதாயங்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் நபர்கள் ஏற்பார்களா?முதல்ல நீங்க சொல்லுங்க மனிதன்????? நீங்க சொல்லறத எல்லா பிராமணரும் சொன்னால் நிச்சயம் மாற்றம் வரும் பல விஷயங்களில் உங்களை பின்பற்றுவதை பெருமையாக நினைப்பவர் தான் அதிகம். அன்பு தெரிவித்த அனைத்து கருத்துக்களும் எற்புடையவே.

          • \\முதல்ல நீங்க சொல்லுங்க மனிதன்????? நீங்க சொல்லறத எல்லா பிராமணரும் சொன்னால் நிச்சயம் மாற்றம் வரும் பல விஷயங்களில் உங்களை பின்பற்றுவதை பெருமையாக நினைப்பவர் தான் அதிகம்.\\
           இந்த சமூக ஏற்றத்தாழ்வை நீக்க முடியாமல் இருக்க மற்றொமொரு முக்கிய காரணம், தலித்துக்காக குரல் கொடுப்பவன் அனைவரும் தலித் என்றும், பிற இடைநிலை சாதி பிரச்னையை பேசுபவன் அந்த சாதிக்காரன் என்றும், பார்ப்பனீயத்தை சாக்கிட்டு பழிபோட்டு தப்புவனை கேள்வி கேட்டால் அவன் பார்ப்பன் எனவும் நடுநிலையாளர்கள் கருதுவதே… பார்ப்பனீயத்துக்கு ஆதரவளிப்பதர்க்கும், பார்ப்பனீயத்தின் மீது பழி போட்டு தப்புபவனை தட்டி கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர கோருகிறேன்…

           \\அன்பு தெரிவித்த அனைத்து கருத்துக்களும் எற்புடையவே.\\
           அன்புடன் நீங்கள் தெரிவித்த கருத்துகளை ஏற்கிறேன்…

           ஆனால் முக்கிய கேள்வி தலித்தல்லாத எத்தனை பேர் தலித் மக்களை சகோதரத்துடன் அரவணைத்து செல்கின்றனர் என்பதே… தலித் வீடுகளில் உன்ன உன்ன மறுப்பவனும், ஏன் தலித் திருமண நிகழ்வுகளிலேயே வெறும் குளிர்பானம் குடித்துவிட்டு திரும்புபவனும் நம்மிடையே உள்ள இடை நிலை மேலாதிக்க சாதியில் இருக்கிறானா இல்லையா?

         • \\சாதி மத துவேசம் கொண்டவர்களுக்கு என்னிடம் மரியாதையை எதிர்பார்க்கவேண்டாம்… சாதி வெறி பிடித்தவர்களை மனிதன் என்பதைவிட மிருகம் என்றே அழுத்தம் கொடுத்து குறிக்க ஆசைப்படுகிறேன்… பிறகு மரியாதை எங்கிருந்து//

          சரிதா.சாதி மத துவேசம் கொண்ட அயோக்கியபயல்களுக்கு மரியாத குடுக்க வேணாம்.ஆனால் நீங்கள் மரியாதையின்றி பேசியது சாதி மத வெறியை எதுத்து போராடும் நக்சல்பாரிதோழர்களையும், இடதுசாரி மற்றும் திராவிடர் கழக தோழர்களையும்தான்.இப்புடி புரட்டி பிரட்டி பேசுவது நாணயமா.

          பாருங்க;\\ இந்த நக்சல், கருஞ்சட்டை, செஞ்சட்டை கோஷ்டிகளுக்கு தெரிந்ததெல்லாம் இரண்டே சாதிகள் தான் ஒன்று பார்ப்பான், இன்னொன்று தலித், இடையில் இருக்கும் சாதிகள் எல்லாம் இவனுக கண்ணுக்கு தெரியாது,//

          \\சில பதிவுகளில் குறிப்பட்டது போல,பார்ப்பனர்களை மட்டும் வேறு மாநிலத்துக்கு புலம் பெயர செய்துவிட்டால் சாதி ஒடுக்குமுறை ஒழிந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?//

          பொய் சொல்ல தயங்க மாட்டீங்க போல.பார்ப்பனர்களை தமிழகத் திலிருந்து துரத்தனும்னு நாங்க யாரும் சொன்னதில்லை.அவர்கள் இங்கு சகல உரிமைகளுடன் பிற பிரிவு தமிழ் மக்களுக்கு சமமாக வாழலாம்.அதற்கான உரிமை படைத்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. என்ன ”we are more equal than others” என்ற மனோபாவத்தைத்தான் அனுமதிக்க முடியாது.

          \\நான் யாருக்கும் தீண்டாமையை கற்று கொடுப்பவன் அல்ல…//

          புரியாத மாரி நடிக்கிறீங்களா.உண்மையிலேயே புரியலையா.எந்த context ல ”நீங்க” என்ற சொல் வருதுன்னு பாருங்க.”நீங்க” எனபது நீங்களாகிய ”மனிதனை”குறிக்கவில்லை.தீண்டாமையை தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் அக்ரகாரத்தை நிறுவிகற்றுக் கொடுத்த பார்ப்பனர்களை குறிக்குது.

          \\இடைநிலை சாதி முட்டாள்கள் என்று இந்த சாதி வெறி கயவர்களை இலகுவாக விமர்சிக்கும்போதே நீங்கள் அந்த இடைநிலைக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் என்று தெரிகிறது//

          இதென்ன புதுக்கரடியா இருக்கு.புத்தியில்லாத செயலை செய்கிறார்கள் என்பதால் ”முட்டாள்கள்” என கடுமையா சொல்றது கூட உங்க கண்ணுக்கு வக்காளத்தா தெரியுதுன்னா என்ன சொல்ல. காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்.

          \\ பல வெளிநாடு வாழ் தலித் நண்பர்கள் “ஐ ஹேட் பீப்” என பீட்டர் விடுகிறார்களே… பிரச்னை எங்கே உள்ளது? உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் சமைத்தும் சமைக்காமலும் ஒரே மேடையில் பரப்பி தின்று வாழும் பிற ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாட்டவரிடம் அதே மேசையில் அமர்ந்து இன்றைய பிசினஸ் பார்ப்பனர்களும், இடைநிலை மேல் சாதி வியாபாரிகளும் உன்னுகிறார்களே.. இது தீண்டாமையா இல்லை பச்சோந்திதனமா இல்லை டார்விநிசமா?//

          என் கேள்விக்கு இது பதில் இல்லையே.வாதத்தை மீண்டும் பதியுறேன்.

          மாட்டுக்கறி உண்பது காலம் காலமாக தலித்களின் வழக்கம்.மாட்டுக்கறி உண்பவர்களை கொல்லவேண்டும் எனும் அளவுக்கு வெறியூட்டுவது யார். இப்போது கூட சுப்பிரமணி i hate beef eaters ன்னு பின்னூட்டம் போடுவது தீண்டாமை இல்லையா. அவன் காசுல வாங்குன மாட்ட அவன் அறுத்து திங்கிறதுக்கு நீங்க என்ன அனுமதி கொடுக்கிறது.பசுவதை தடை சட்டம் கொண்டு வர்றதே தீண்டாமைதானே.லச்சார்ல பசு மாட்டு தோல உரித்த ”மாபாதகத்துக்காக” அஞ்சு தலித்களை கொலை பண்ணிட்டு பசுவின் உயிர் எங்களுக்கு புனிதமானது ன்னு பேட்டி கொடுக்கும் அசோக் சிங்காலையும்,அந்த கிழட்டு நரியின் சங்க பரிவார் கும்பலையும் முழு மூச்சாக ஆதரிக்கும் பார்ப்பனர்கள் தீண்டாமைக்கு காரனமில்லைன்னு நீங்க கதை அளக்கலாம்.நம்புவதர்குத்தான் ஆளில்லை.

          • \\இடையில் இருக்கும் சாதிகள் எல்லாம் இவனுக கண்ணுக்கு தெரியாது, ஏன்னா இந்த பார்ப்பனீயம் மேல் பழி போடும் தொண்ணூறு சதவீதம் பேர் இந்த இடைப்பட்ட ஆதிக்க மேல் சாதியை சேர்ந்தவன்… இவனுங்களும், இவனுங்க தந்தை, பாட்டன், பூட்டன் தான் தலித்களுக்கு அதிகப்படியான கொடுமைகள் செய்த கயவர்கள்…\\

           மற்றொரு முறை படிக்கவும்… இடைப்பட்ட ஆதிக்க மேல் சாதியை சேர்ந்தவர்களை தான் ‘இவனுக’ என்ற பதத்தில் குறிக்கிறேன்… ஆதிக்க சாதி மனோபாவமும், போலி சாதி வெறுப்பு வேடமும் போடும் கயவர்கள் பலர் கம்யுனிச, தி.க வேடமிட்டு உலவுகிறார்கள் நீங்கள் ஒப்ப மறுத்தாலும்… அடிக்கடி நானும் ஒரு கம்யனிஸ்ட் என்ற குரலை நீங்கள் கேட்டிருக்கலாம்…

           ‘இவனுக’ என்ற சொல் உங்களுக்கு மரியாதைக்குறைவாக தெரிகிறது… ஆனால் அவன், அவள், இவன், நீ என்பதெல்லாம் ஒருமையை குறிக்கவே அன்றி மரியாதையை குறிப்பதல்ல… அரசனையே அவன் என்று சொல்லுவது இலக்கிய சான்று… மேலும் ‘இவனுக’,’இவிங்க’, ‘இவிக’ என்பது அந்தந்த வட்டரத்துக்கேற்ப இவர்கள் என்ற சொல்லின் வழக்கு மொழி..
           இருந்தாலும் தற்போதைய சூழலில் இந்த வார்த்தையை பிரயோகப்படுத்தியமைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்…

           நக்சல் பாரிகள் பரஸ்பரம் தமக்கு தாமே தோழர்கள் என விளிப்பதை தவிர, வேறு யாருக்கேனும் இதுவரை மரியாதை கொடுக்கும் வழக்கம் உண்டா? பொது வெளியில் பதாகைகளில் நாட்டின் பிரதமர், முதல்வர்கள், மாற்று கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைவரை பற்றியும் ஏகவசனம் எழுதி, நீ, வா, போ, ஓடு, காலி, கயவன், வஞ்சகன், நரி என்றெல்லாம் எழுதியும், கோஷமிட்டும் அவர்களின் தனி மனித மரியாதையை பற்றி எள்ளளவும் கவலையுறாத நீங்கள் பொதுமக்களிடம் மரியாதையை கோருவதற்கு உரிமையற்றவர்கள்…

           இங்கே பதிவுலகில், நீங்கள் இதை விட மோசமாக, பிரதமர் முதல் கடைநிலை காவலர் வரை அனைவரையும் நாய், பேய் என மிக கேவலமாக அழைத்து தனி நபர் தாக்குதலில் ஈடுபடுகிறீர்கள், அவ்வேளையில் யாரேனும் உங்களை மருத்தெழுதினால் அதே தனி நபர் தாக்குதலை மருப்பெழுதுவர் மேலும் தொடுக்கிறீர்கள், அதனால் தான் எம்மை காத்துக்கொள்ள அவ்வப்போது உங்களிடம் தாக்கதீர், வையாதீர், திட்டாதீர், தயவுசெய்து அவமரியாதை செய்யாதீர் என கெஞ்ச வேண்டியுள்ளது…

           ஒவ்வொரு மறுப்பையும் எழுதிவிட்டு கயவாளி என்றோ, நயவஞ்சகன் என்றோ, குருடன் என்றோ, நரி என்றோ, என்ன பட்டம் கொடுப்பீர்களோ என்று அஞ்சும் நிலைக்கு எம்மை தள்ளியது நீங்கள்தான்…

           \\புத்தியில்லாத செயலை செய்கிறார்கள் என்பதால் ”முட்டாள்கள்” என கடுமையா சொல்றது கூட உங்க கண்ணுக்கு வக்காளத்தா தெரியுதுன்னா என்ன சொல்ல. காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்.\\
           உங்களின் கடுமை என்ன என்று எங்களுக்கு தெரியாதா என்ன… அப்ப பார்ப்பனர்களும் புத்தியில்லாத செயல்களை செய்யும் முட்டாள்கள் என்று விட்டு விடுவீர்களா…

           \\பார்ப்பனர்களை தமிழகத் திலிருந்து துரத்தனும்னு நாங்க யாரும் சொன்னதில்லை\\
           கடைசி பார்ப்பான் இருக்கும் வரை தமிழகத்தில் தீண்டாமை ஒழியாது என்ற பொருள்படும் பல பின்னூட்டங்கள் வினவில் தோழர்களால் பதியப்பட்டுள்ளது…

           \\என் கேள்விக்கு இது பதில் இல்லையே.வாதத்தை மீண்டும் பதியுறேன்.
           மாட்டுக்கறி உண்பது காலம் காலமாக தலித்களின் வழக்கம்.மாட்டுக்கறி உண்பவர்களை கொல்லவேண்டும் எனும் அளவுக்கு வெறியூட்டுவது யார். இப்போது கூட சுப்பிரமணி i hate beef eaters ன்னு பின்னூட்டம் போடுவது தீண்டாமை இல்லையா.\\

           i hate beef eaters ன்னு பின்னூட்டம் போடுவது தீண்டாமை இல்லையா – இந்த கேள்விக்கு தொடர்புடையது தான் “ஐ ஹேட் பீப் ” எனும் பதத்தை உள்ளடக்கிய பின்வரும் பதில்

           பல வெளிநாடு வாழ் தலித் நண்பர்கள் “ஐ ஹேட் பீப்” என பீட்டர் விடுகிறார்களே… பிரச்னை எங்கே உள்ளது? உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் சமைத்தும் சமைக்காமலும் ஒரே மேடையில் பரப்பி தின்று வாழும் பிற ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாட்டவரிடம் அதே மேசையில் அமர்ந்து இன்றைய பிசினஸ் பார்ப்பனர்களும், இடைநிலை மேல் சாதி வியாபாரிகளும் உன்னுகிறார்களே.. இது தீண்டாமையா இல்லை பச்சோந்திதனமா இல்லை டார்விநிசமா?

           சாராம்சம் – “i hate beef eaters” & “ஐ ஹேட் பீப்” இரண்டுமே தீண்டாமைதான் சொல்லுபவன் பார்ப்பனாயிருந்தாலும், தலித்தாயிருந்தாலும்… ஒத்துக்கொள்ளுவீர்களா?

          • உங்களுக்கு ஒரு நாயம்.எங்களுக்கு வேறு நாயமா.

           \\சாதி மத துவேசம் கொண்டவர்களுக்கு என்னிடம் மரியாதையை எதிர்பார்க்கவேண்டாம்… சாதி வெறி பிடித்தவர்களை மனிதன் என்பதைவிட மிருகம் என்றே அழுத்தம் கொடுத்து குறிக்க ஆசைப்படுகிறேன்… பிறகு மரியாதை எங்கிருந்து//

           நாட்டை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைக்கும்,மக்களின் கொஞ்சநஞ்ச வாழ்வாதரங்களையும் பிடுங்கி,மக்களை பசி பட்டினியில் தள்ளும் கொடூர கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஆட்சியாளர்களுக்கும் ஆளும் கும்பலின் எடுபிடிகளுக்கும் உங்கள் வார்த்தைகளில் சொல்றதுன்னா மரியாதை எங்கிருந்து.

           நான் கூட அசோக் சிங்காலை கிழட்டு நரி என சொல்லியுள்ளேன்.ஐவர் கொலையை பகிரங்கமாக நியாயப்படுத்துவதால் அப்படி சொல்ல வேண்டியிருக்கு.அதுல தப்பு இருக்கறதா

           \\ ‘இவனுக’ என்ற சொல் உங்களுக்கு மரியாதைக்குறைவாக தெரிகிறது… ஆனால் அவன், அவள், இவன், நீ என்பதெல்லாம் ஒருமையை குறிக்கவே அன்றி மரியாதையை குறிப்பதல்ல//

           சுட்ட பழம் வேணுமா.சுடாத பழம் வேணுமா.அருமையா தமிழ் சொல்லி தர்றீங்க மிக்க நன்றி.

           \\சாராம்சம் – “இ கடெ பேf எஅடெர்ச்” & “ஐ ஹேட் பீப்” இரண்டுமே தீண்டாமைதான் சொல்லுபவன் பார்ப்பனாயிருந்தாலும், தலித்தாயிருந்தாலும்… ஒத்துக்கொள்ளுவீர்களா?//

           ஒத்துக்கிறேன்.முதன்முறையா பார்ப்பனியத்தின் வஞ்சக பிரச்சாரம் ஒன்றை தீண்டாமை என ஒப்புக் கொள்கிறீர்கள்.ரெம்ப நன்றி.ஐ ஹேட் பீப் என ஒரு தலித் சொல்வார் என்பதை வாதத்திற்காக உண்மை என வைத்துக் கொண்டாலும் நிச்சயமாக அது பார்ப்பனிய அடிமைத்தனமும் முட்டாள்தனமும் ஆகும்.மக்களில் ஒரு பிரிவினர் விரும்பி சாப்பிடும் உணவை விரும்பாவிட்டால் புடிக்காதுன்னு சொல்லலாம்.தாராளமா உண்ண மறுக்கலாம். அவர்களை உண்ண சொல்லி வற்புறுத்தவும் யாருக்கும் உரிமையில்லை. அதே சமயம் வெறுக்கிரதுகு எந்த கொம்பனுக்கும் உரிமையில்லை.

          • \\நான் கூட அசோக் சிங்காலை கிழட்டு நரி என சொல்லியுள்ளேன்.ஐவர் கொலையை பகிரங்கமாக நியாயப்படுத்துவதால் அப்படி சொல்ல வேண்டியிருக்கு.அதுல தப்பு இருக்கறதா\\
           தப்பு எதுவும் இல்லை.. ஆனால் இப்படி திட்டுவதால் என்ன பயன்? திட்டப்படும் நபருக்கு தெரியப்போகிறதா ? அல்லது அப்படி ஒருவேளை தெரிந்தால் தான் அவர் மறுக்க போகிறாரா.. பிறகேன் இந்த வசை மழை வழக்கம்.. தங்களது அதிகாரத்திற்குட்பட்ட, சம்பந்தப்பட்ட தலைவர்கள் அறிய வாய்ப்பே இல்லாத, அவர் அறியா மொழியில், அவருக்கு தெரியாமல் ஒருவரை திட்டி மகிழ்வது ஒரு வியாதிதானே…

           \\சுட்ட பழம் வேணுமா.சுடாத பழம் வேணுமா.அருமையா தமிழ் சொல்லி தர்றீங்க மிக்க நன்றி\\
           \\தற்போதைய சூழலில் இந்த வார்த்தையை பிரயோகப்படுத்தியமைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்…\\ – நீங்கள் இப்படி கேட்பீர்கள் என்று தெரிந்துதான் வருத்தம் தெரிவித்திருக்கிறேன்…

           \\ஐ ஹேட் பீப் என ஒரு தலித் சொல்வார் என்பதை வாதத்திற்காக உண்மை என வைத்துக் கொண்டாலும் நிச்சயமாக அது பார்ப்பனிய அடிமைத்தனமும் முட்டாள்தனமும் ஆகும்\\
           இது மடமை… தலித் என்றால் கட்டயாம் பீப் சாப்பிட வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன? இந்த நாட்டில் எத்தனயோ பேர் எனக்கு கோழி பிடிக்காது, நண்டு பிடிக்காது, காடை பிடிக்காது ஏன் பால் பிடிக்காது, உப்புமா பிடிக்காது என்று சொல்லுவது போல பீப் பிடிக்காது என்று சொன்னால் அது பார்ப்பன அடிமைத்தனமா? ஒரு உணவுப்பண்டத்தை பிடிக்காது என்று சொல்லுவதற்கு கூட சாதி முத்திரை குத்தப்படும் அவல நிலை இன்னும் தொடர்கிறதே…

           \\அவர்களை உண்ண சொல்லி வற்புறுத்தவும் யாருக்கும் உரிமையில்லை. அதே சமயம் வெறுக்கிரதுகு எந்த கொம்பனுக்கும் உரிமையில்லை.\\
           பிடிக்காத உணவை உன்ன சொல்லி வற்புறுத்தலும், பிடித்த உணவை உன்னுபவனை வெறுத்தலும் தனி மனித உரிமை சார்ந்த பிரச்னைகள் அல்ல, மனித தன்மையற்ற செயல், பாவச்செயல், பெருங்குற்றம்… மொத்தத்தில் மிருகவெறி…

          • \\இது மடமை… தலித் என்றால் கட்டயாம் பீப் சாப்பிட வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன? இந்த நாட்டில் எத்தனயோ பேர் எனக்கு கோழி பிடிக்காது, நண்டு பிடிக்காது, காடை பிடிக்காது ஏன் பால் பிடிக்காது, உப்புமா பிடிக்காது என்று சொல்லுவது போல பீப் பிடிக்காது என்று சொன்னால் அது பார்ப்பன அடிமைத்தனமா? //

           \\மக்களில் ஒரு பிரிவினர் விரும்பி சாப்பிடும் உணவை விரும்பாவிட்டால்.புடிக்காதுன்னு சொல்லலாம்.தாராளமா உண்ண மறுக்கலாம். அவர்களை உண்ண சொல்லி வற்புறுத்தவும் யாருக்கும் உரிமையில்லை. அதே சமயம் வெறுக்கரதுக்கு எந்த கொம்பனுக்கும் உரிமையில்லை.//

           .புடிக்காதுன்னு சொல்லலாம்.அடிக்கோடிடுக

           \\பிடிக்காத உணவை உன்ன சொல்லி வற்புறுத்தலும், பிடித்த உணவை உன்னுபவனை வெறுத்தலும் தனி மனித உரிமை சார்ந்த பிரச்னைகள் அல்ல, மனித தன்மையற்ற செயல், பாவச்செயல், பெருங்குற்றம்… மொத்தத்தில் மிருகவெறி…//

           நன்றி.

          • திரு அன்பு அவர்களே, உங்கள் விவாதங்களுக்கும் கருத்துக்கும் நன்றி…

      • \\அறம் பொருள் இன்பம் வீடு எனபது இந்து மதத்தில் உள்ளது
       அறம் பொருள் இன்பம் என்பதை கருவாக கொண்டு திருக்குறள் எழுதப்பட்டு உள்ளது//

       கல்கி என்பவர் எழுதும் ப்ளோக்கை படியுங்கள்
       http://reservationfraud.blogspot.com

       இதுக்கு சொன்ன பதில்தான் இது.

       இந்து மதத்துல இன்னும் என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க இந்த வலைத்தளத்துக்கு போவலாம்.

       http://thathachariyar.blogspot.in/2011/02/3.html

       • // இந்து மதத்துல இன்னும் என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க இந்த வலைத்தளத்துக்கு போவலாம்.

        http://thathachariyar.blogspot.in/2011/02/3.html //

        வேறொரு பதிவில் மனிதன் கொடுத்த சுட்டி :

        http://www.dajoseph.com/Essays.html

        “அணையட்டும் இந்த அக்னி” என்ற தலைப்பில் தாத்தாவின் புரட்டுகளை அம்பலமாக்குகிறார் ”வைணவச் சுடராழி” என வைணவர்களால் புகழப்படும் திரு டி.ஏ.ஜோசப்.