privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை!

ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை!

-

ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை! பாண்டிச்சேரி – யேனம் போலீசாரின் கொலைவெறிச் செயல்!

தொழிலாளர் உரிமைக்காகப் போராடிய ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பாண்டிச்சேரி – யேனம் போலீசார் அடித்துக் கொன்று விட்டனர். இக்கொலையைக் கண்டித்து போரட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இப்படி கொலை செய்யும் அளவிற்கும், துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கும் என்ன குற்றம் செய்தனர்? ரீஜென்சி செராமிக்ஸ் தொழிலாளர்களாகிய இவர்கள் தொழிற்சங்கம் அமைத்தனர். அவர்களுக்கான கொரிக்கையை வலியுறுத்திப் போராடினர். இதுதான் அவர்கள் செய்த ‘குற்றம்’! இச்சங்கத்தை நிர்வாகம் ஏற்கவும் இல்லை. சங்கத்தை கலைப்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டது. மேலும், தொழிற்சங்கத்தைத் துவங்கியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக நிர்வாகிகளை, முரளிமோகன் உட்பட 6 பேரை ரீஜென்சி செராமிக்ஸ் நிர்வாகம் வேலை நீக்கம் செய்து விட்டது. இதை எதிர்த்து தொழிற்சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

நீதிமன்றமும் தொழிற்சங்கத்திற்க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இதையும் நீதுமன்றம் நிராகரித்து விட்டது. வேறு வழியின்றி நிர்வாகம் பணிந்தது. ஆனால், அடிமைச்சாசனம் எழுதி தந்து விட்டு வேலைக்கு வரும்படி கூறியது. இதை மறுத்த தொழிலாளர்கள், மீண்டும் போராட்டத்தை துவக்கி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கக் கோரியும், மேலும் 15 வருடத்திற்கு மேல் வேலை செய்யும் தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யக் கோரியும், விலைவாசி உயர்வுக்கேற்ப சம்பளத்தை உயர்த்தக் கோரியும், பழிவாங்கும் அடிப்படையில் சிலரை வேறு கிளைக்கு மாற்றம் செய்ததை ரத்துச் செய்யக் கோரியும் போராடி வந்தனர்.

1983-இல் ரீஜென்சி செராமிக்ஸ் கம்பெனி முதலாளி ஜி.என். நாயுடு ரூ. 4 கோடியை வைத்துக் கொண்டு ரூ. 8 கோடியைக் கடனாகப் பெற்று மொத்தம் 12 கோடியை மூலதனமாகக் கொண்டு இத்தொழிற்சாலையைத் தொடங்கினான். இன்று அந்தக் கம்பெனியின் சொத்து மதிப்போ ரூ. 2500 கோடி. கோடிக்கணக்கான ரூபாய் சொத்தை தனது உழைப்பால் பெருக்கிக் கொடுத்த தொழிலாளியோ இன்னும் அற்பக் கூலிக்காக கையேந்தி நிற்கிறார். தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த ஜி. என். நாயுடுவுக்கு தொழிலாளர் கோரும் அற்பக் கூலி உயர்வைக் கூட கொடுக்க மனமில்லை.

‘பசித்தவனைப் பார்க்க வைத்து தான் மட்டும் புசித்தவனை போல’ வக்கிர (வர்க்கப்) புத்தி பிடித்த ஜி.என். நாயுடுவோ இவர்களின் கோரிக்கையை நிராகரித்ததோடு தொழிற்சங்கத்தையும் ஒழிக்க முயன்றான்.

ஜி.என். நாயுடுவுக்கு மேலும் நிர்ப்பந்தம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் வேலைநிறுத்தம் செய்தனர்! இதில் சில தொழிலாளர்கள் அவ்வப்போது வேலைக்குச் செல்ல முயல்வதும் அதை போராடும் தொழிலாளர்கள் தடுப்பதும் நடந்துள்ளது. இப்படி வேலைக்குச் செல்ல முயலும் தொழிலாளர்களைத் தடுப்பதை நிறுத்த, நிர்வாகிகளை போலீசை வைத்து மிரட்டினான் ஜி.என். நாயுடு. போலீசு மிரட்டலுக்கு தொழிலாளர்கள் அஞ்சாததால், ஆத்திரம் அடைந்த போலீசார் தொழிற்சங்க நிர்வாகிகள் செயலர் முரளி மோகன் உட்பட 10 பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கினர். போலீசாரின் இந்தக் கொலைவெறி தாக்குதலினால் தான் ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்க செயலர் முரளி மோகன் இறந்தார்.

போலீசாரால் முரளிமோகன் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை படுகாயப்படுத்தியதோடு, சிலரை கவலைக்கிடமாகவும் கிடத்தி விட்டனர். இக்கொலைவெறியர்களை கைது செய்யவும் அவர்களை தூக்கிலிடும் வரை போராடுவதும் தொழிலாளர்களாகிய நமது கடமை என்பதை உணர்வோம்.

நம்முடைய உழைப்பைச் சுரண்டி கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டிக் கொள்ளும் முதலாளிகளின் கொட்டத்தை அடக்க தொழிலாளர்களாகிய நாம் சாதி, மதம், இனம் என்பதை மறந்து ஒரு வர்க்கம் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம். அனைத்து ஒடுக்கமுறைகளில் இருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நமக்கென்று ஒரு படையைக் கட்டுவோம். தொழிலாளர்களையும் – இதர உழைக்கும் மக்களையும் ஒட்டச் சுரண்டும் மூலதனக் கொடுமைக்கு முடிவு கட்டுவோம். அதற்கு தேவை ஒரு மாற்றம் என்பதை உணர்வோம். அந்த மாற்றத்தை ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் கொண்டு வருவோம்.

 _____________________________________________________________________________

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை. 

தொடர்புக்கு: அ.முகுந்தன், 110,2-வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. PH 9444834519.

_______________________________________________________________________________

போலீசின் வெறிச்செயலைக் கண்டித்து 2.2.2012 அன்று சென்னையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்களும் தொழிலாளிகளும் கலந்து கொண்டனர்.

  1. Murali mohan didn’t die because of the police.. he suffered a heart attack during the agitation and his co-workers did not allow the police to take him to the hospital..
    This was see in all the videos and later confirmed by his own family. If he died in police beating or custody, why these stupid people haven’t register a case??

    • தொழிற்சங்க தலைவர் இயல்பான heart attack ல் இறந்ததாக சொல்லியுள்ளார் நண்பர் இந்தியன். ஆனால் நிகழ்வு நடந்த முதல் நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி இந்து நாளிதழில் காவல் துறை தொழிற்சங்க தலைவரை தாக்கி அதன்காரணமாக அவருக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனை சென்று இறந்து விட்டதாகத்தான் செய்தி வந்தது. அதனை தொடர்ந்து நடந்த வன்முறையில் நிர்வாக தரப்பு அதிகாரி ஒருவர் இறந்ததும் மறுதினம் 28 ஜனவரி செய்தித் தாள்களில் செய்தியின் தன்மை மாற்றப்பட்டுள்ளது. இந்த செய்திகளையும் படித்துப் பாருங்கள்
      http://expressbuzz.com/topnews/union-leaders-seek-rule-of-law-in-yanam/357877.html

      http://www.thehindu.com/news/states/andhra-pradesh/article2836717.ece?homepage=true

      நிர்வாக தரப்பில் காவல்துறை, அரசு அதிகாரம் போன்றவற்றை பயன்படுத்தி தாக்குதல் என வந்தபின், தொழிலாளர் தரப்பு எதிர்வினை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது

      • //நிர்வாக தரப்பில் காவல்துறை, அரசு அதிகாரம் போன்றவற்றை பயன்படுத்தி தாக்குதல் என வந்தபின், தொழிலாளர் தரப்பு எதிர்வினை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது///

        தொழிலாளர் தரப்பு ‘எதிர்வினைகளை’ இப்படி நியாயப்படுத்த முயன்றால், பிறகு எதையும் யாரும் நியாயப்படுத்த முடியும். மேலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், வேலை செல்ல முயன்ற தொழிலாளர்களை, அவர்கள் தடுக்க முயன்றத்தில் தான் வன்முறை ஆரம்பித்தது.

        இப்ப லாக் அவுட் மூலம் எல்லோருக்கும் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்.

  2. தொழிற்சங்க தலைவரை போலிஸார் அடித்து கொன்றது பெரும் குற்றம். ஆனால் பதிலுக்கு தொழிற்சாலையின் தலைமை நிர்வாகியை தொழிலாளர்கள் அடித்து கொன்றதை பற்றி ஒரு வரி கூட எழுதாமல் இருப்பது என்ன விதத்தில் சேர்த்தி ? இது தான் புரட்சிக்கு வழியா என்ன ?

    http://www.thehindubusinessline.com/companies/article2837499.ece

    ..the Regency Ceramics President, Mr K.C. Chandrasekhar, succumbed to grievous injuries that he suffered as workers stormed his house and beat him up…

    வேலைக்கு செல்ல முயன்ற இதர தொழிலாளர்களை வன்முறை மூலம் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. அது அவர்களின் அடிப்படை உரிமை.

    சுரண்டி கொழுக்கும் முதலாளிகள் என்ற பல்லவி எப்போதே பொய்பிக்கப்பட்டுவிட்டது.
    சுரண்டல் என்று எதுவும் எப்போதும் இல்லை. டாஸ் கேபிடலின் மூலமே தவறு என்று நடைமுறையில் உணரப்பட்டு பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தொழிலாளர்களின் உழைப்பு மட்டும் தான் லாபமாக மாற்றப்படுகிறது என்பதெல்லாம் உண்மை அல்ல :

    http://www.tamilpaper.net/?p=4350
    லாபம் என்றால் சுரண்டலா?

    கார்ல் மார்க்ஸ் 1820இல் கண்ட கொடுமையான நிலை இன்று அய்ரோப்பாவில் இல்லை. மான்சென்ஸ்டரின் தொழிலாளர்களின் நிலையை கண்ட மார்க்ஸ் பற்றி சமீபத்த்தில்
    ஒரு நல்ல பதிவு இது : (பின்னூட்டங்களில் நானும் எழுதியிருக்கிறேன்) :

    http://www.bloomberg.com/news/2011-09-26/manchester-gave-human-form-to-marx-s-theories-commentary-by-mary-gabriel.html

    இந்தியாவில் இன்னும் பெரும்பாலான தொழிலாளர்கள் நிலை மோசமாகதான் உள்ளது. ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட இன்று பரவாயில்லை. இன்னும் சில நூறு ஆண்டுகளில் உயரலாம். அய்ரோப்பாவில் அது கடந்த 150 ஆண்டுகளில் சாத்தியமானது, இங்கும் படிப்படியாக சாத்தியம் தான்.

    • அதியமான் ஐயா,

      அமெரிக்காவில் “வீ ஆர் 99%” என்று தட்டி வைத்து பங்குச் சந்தை வாயிலில் ”வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்” என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பாவில் மேற்கில் உள்ள நாடுகளே திவால் நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. நாளொரு ஆர்ப்பாட்டமும் போராட்டமுமாக உலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. உமக்கு அவர்கள் வாழ்க்கைத் தரம் ’உயர்ந்து கொண்டே’ சென்றிருக்கிறதா?

      அப்துல் கலாம் கூறும் ”கனவு உலக”த்தில் சஞ்சரித்துக் கொண்டு மற்றவர்களைக் கனவுவாதிகள் என்று கூறுவதும் ’வாழ்க்கைத்தரம் கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் உயரும்’ என்று ஆலோசனையளிப்பதும் கேலிக்குரிய விஷயங்கள் என்றால் கொல்லன் பட்டறையிலேயே வந்து ஊசி விற்பதைப் போல இந்தக் குப்பைகளை மார்க்சிய விவாதத் தளங்களிலேயே கடைவிரிப்பது இன்னும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.

      எப்படியும் முருங்கை மரம் ஏறப் போகும் இந்த வேதாளம் இன்னும் எத்தனை விக்கிரமாதித்தன்களைப் பாடாய்ப் படுத்தப் போகிறதோ…ஆயினும் நமது தோழர்களுக்குத் தத்துவத்தில் விழிப்பூட்டி நல்ல பயிற்சியாளராக மாறி விட்டிருக்கிறீர்கள் என்பது தான் உண்மை. அதற்கு நன்றிக்குரியவர் தான் நீங்கள்.

      • //உமக்கு அவர்கள் வாழ்க்கைத் தரம் ’உயர்ந்து கொண்டே’ சென்றிருக்கிறதா?///

        150 ஆண்டுகளுக்க்கு முன்னால் அவர்களின் வாழ்க்கை தரம் இருந்த நிலையை கண்ட கார்ல் மார்க்ஸ் பற்றிய அந்த சுட்டியை முழுசா படிக்கவும். 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை, பின்பு படிப்படியாக நிலை உயர்ந்த வரலாறு : இவை பற்றி முழுசா படிக்கவும்.

        முதலாளித்தத்தை ஒழுங்காக, சரியாக அமல்படுத்தாதல் தான் இன்று சிக்கல். pure free market has never been possible due to continous govt intervention. இதை பற்றி ஏற்கெனவே பெரிய விவாதம் இங்கு பல முறை நடந்துள்ளது. பழைய பதிவுகளில் தேடிப்படிக்கவும்.

        Occupy wall street பற்றி : (1% Vs 99% என்பது தவறான சித்திரம்)

        http://swaminomics.org/?p=2071

        Indian analysts like Pratap Bhanu Mehta see this as a protest against not just Wall Street but the breaking of the old social contract of welfare capitalism. This social contract accepted high inequality because the bulk of the population also became better off. This contract, say critics, has eroded with middle class and working class stagnation, which now challenges the very fundamentals of liberal democracy.

        Such analysis exaggerates the impact of OWS and neglects that of the Tea Party. The New York Times estimates that OWS, with trade union backing, mobilized 70,000 people in 150 cities across the US. But the Tea Party, without any organizations backing it, garnered 300,000 protestors in its peak protests last year. The bottom half of the US pays no income tax (it does pay payroll and sales taxes) and so is happy to demand ever-more government rescues. But the Tea Party comes from the middle class that pays the bulk of taxes, and so seeks very different solutions.

        The Tea Party has no love at all for Wall Street. But it also castigates the Bush and Obama administrations for encouraging over-borrowing and overspending by home owners, discouraging saving, and then asking prudent Americans for ever more taxes to bail out the imprudent. They represent a social split not between the rich 1% and the remaining 99%, but between prudent taxpayers and others. The numbers suggest that this split runs deeper than the old rich-versus-poor conflict.

        This is not an American peculiarity. In Europe, prudent northern Europeans are fed up bailing out what they see as lazy, spendthrift southern European members of the Eurozone. This is not a Tea Party movement, yet is definitely a Tea Party attitude. Voters in Germany Holland, Finland and other northern countries strongly oppose further rescues, although their politicians desperately want to keep the Eurozone intact.

        • எனக்கும் அண்ணன் அதியமன் சொல்லுவது சரி என்றே தோன்றுகிறது.

          கார்ல் மார்க்ஸ் காலத்தில் இண்டர்நெட், ஐபேட், ஐ போன் இல்லை ஆனால் இப்பொழுது அதெல்லாம் இருகிறது மக்கள் முன்னேறி தான் உள்ளார்கள்.

          ஆனால் கார்ல் மார்க்ஸ் காலத்திலும் மக்கள் தொகையில் பதி பேர் அன்றாடம் காய்சிகளாக இருந்தனர், இன்று அதே அளவு மக்கள் அன்றாடம் காய்சிகளாக இருக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டாம்.

          ஆமாம், அதியமன் க்ரிஸ் ரெண்டாவ்து பெர்யிலவுட் கேட்கிறார்களாம்,பெயில் அவுட் கொடுக்க காசே இல்லையாம். நீங்க முதலாளித்துவம் அது இதுன்னு சொல்லாம க்ரிஸ் ஜாதகத்த பார்த்து ஜோசியம் சொல்ல கூடாதா? க்ரீஸ் தேறுமா தேறாதா?

          ஏன்னா நீங்க அண்ண அசாரே போராட்டம் தொடங்கிய நல்ல நேரப்படி கண்டிப்பா ஜெயிக்கும்ன்னு சொன்னிங்க அதுக்கப்புறம் எனக்கு ஜோசியத்து மேலே அபார நம்பிக்கை வந்திடுச்சு அதுவும் நம்ம அதியமன் ஜோசியம் சூப்பர்…

  3. உங்களுடைய பதிவில் மிக எளிமையாக ‘போலிஸ் அராஜகம்’ என முடித்துவிட்டீர்கள். இந்த பிரச்சனையில் ஜாதி அரசியல் (மீனவ, தலித்) மற்றும் சில அரசியல் தலைகளும் ஈடுபட்டுள்ளதாக படித்த நியாபகம். அதை பற்றி ஒற்றை வரியும் இல்லையே.

    சங்கம் அமைப்பதை எதிர்த்தும், பின்னர் சங்கத்தினரைப் பழிவாங்கியும் உள்ள நிர்வாகத்தை சாடியுள்ளீர்கள். சரி. ஆனால் போராட்டத்தில் பங்குபெற விரும்பாத தொழிலாளிகளை மிரட்டும் சங்க தோழர்களின் செயலை கண்டிக்கவில்லை. அந்த மிரட்டல்களை தவிர்த்து தொழிலாளர்களுக்கு பாட்குகாப்பு வழங்கிய போலீசை ‘ரெளடிகளை’ப் போல சித்தரிக்கிறீர்கள். முரளி மோகன் மரணத்துக்கு பின் தொழிலாளர் + ரெளடிகள் நடத்திய கலவரம், தீவைப்பு சம்பவங்கள், இறந்த சந்திரசேகர் பற்றியும் ஒன்றையும் எழுதவில்லை. ஏன் இந்த பாரபட்சம்?

Leave a Reply to மாருதி கார் அதிகாரிகளின் அடக்குமுறைக்கு எதிராக வெடித்த போராட்டம் வெல்க! « புரட்சிகர மாணவர்- பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க