privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!

கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!

-

கூடங்குளம்-மறியல்மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் தமிழகத்தில் தீவிர பிரச்சார இயக்கத்தினை மேற்கொண்டு வருகின்றன. இதனடிப்படையில் தோழர்கள் பலர் விடுமுறை எடுத்துக் கொண்டு தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டப் பகுதிகளில் மக்களிடையே தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பாடல்கள், கலை நிகழ்ச்சிகள், துண்டுப் பிரசுரம், வெளியீடு, தெருமுனைக்கூட்டங்கள் ஆகிய வடிவங்கள் மூலம் கருத்துக்கள் மக்களை சென்றடைகின்றன.

சென்ற இடங்களிலெல்லாம் 99% மக்கள் எமது தோழர்களை ஆதரித்திருக்கின்றனர். பல கிராமங்களில் தங்க இடமும், உணவும் கொடுத்து தோழர்களை பராமரிக்கின்றனர். தெருமுனைக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் கணிசமான நிதியுதவியும் அளிக்கின்றனர்.

அதே நேரம் மின்வெட்டு பாதிப்பு, மின்சாரத் தேவை என்ற அரசு மற்றும் ஓட்டுக் கட்சிகளின் ஓயாத பிரச்சாரத்தால் மக்களில் பலர் குருட்டாம் போக்கில் அணு உலையை ஆதரிக்கின்றனர். இது நகர்ப்புறங்களில் வெளிப்படுகிறது. தோழர்கள் இதற்கு பொருத்தமக பதில் அளித்துப் பேசும் போது ஏற்கின்றனர். காங்கிரசு, பா.ஜ.க மற்றும் போலிசார் எமது பிரச்சாரத்திற்கு சில தடைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவற்றையெல்லாம் முறியடித்துத்தான் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த பிரச்சார இயக்கத்தின் மைய நிகழ்வாக வரும் பிப்ரவரி 11-ம் தேதி சனிக்கிழமை அன்று நெல்லையில் இருந்து பேரணியாகச் சென்று கூடங்குளம் அணு உலையை முற்றுகையிடுவது என்ற போராட்டம் நடக்க இருக்கிறது.

பேரணி துவங்கும் இடம்: பாளையங்கோட்டை மார்க்கெட் ஜவகர் திடல், திருநெல்வேலி.

நாள்: 11.02.2012 சனிக்கிழமை.

நேரம்: காலை 10.30

மறியல் அழைப்பிதழ் PDF வடிவில் பெற இங்கே அழுத்தவும்

இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் குறிப்பாக தென்மாவட்டங்களில் இருக்கும் வாசகர்கள், பதிவர்கள் தமது நண்பர்கள், குடும்பத்தினருடன் கலந்து கொள்ளுமாறு கோருகிறோம்.

கூடங்களும் அணு உலையை மூடக்கோரி ம.க.இ.க அமைப்புக்கள் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் சிறு வெளியீடு பல ஆயிரம் பிரதிகளாக தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சார இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு உங்களையும் அழைக்கிறோம். அவர்களுக்கு அரசு, ஊடகங்கள், ஓட்டுக் கட்சிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து கூடங்குளம் அணு உலையை திறக்க முயற்சிக்கும் போது நாம் மக்களை நம்பி அதை தடுக்க வேண்டியிருக்கிறது. அந்த வரலாற்றுக் கடமையாற்ற உங்களையும் உரிமையுடன் அழைக்கிறோம்.

இந்த மைய இயக்கத்தின் முழக்கங்கள்:

இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!

அணுஉலை = பல்நோய் உற்பத்திக் கூடம் + பேரழிவு ஆயுதக் கிடங்கு!

பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்
அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்!

அணு மின்சாரத்தை விட மலிவான, ஆபத்தில்லாத,
சுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,
சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப் போராடுவோம்!

42% கிராமங்களுக்கு மின்னிணைப்பே இல்லை!
சிறு- குறுந்தொழில்கள், விவசாயத்துக்கோ என்றைக்கும் மின்வெட்டு!
நாட்டின் மின் உற்பத்தியை விழுங்குவது
டாடா, அம்பானிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளே!
அணு மின்சாரம் அவனுக்கு, புற்றுநோய் சாவு எங்களுக்கா?

அணு உலைகளால் அறவே ஆபத்து இல்லையென்றால்
அப்புறம் எதற்கு அணுஉலை விபத்து காப்பீட்டுச் சட்டம்?

தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்
எட்டு இலட்சம் கோடிக்கு அணு உலை வாங்க
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு – இதுதான் தேசத்துரோகம்!

பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
இந்திய மக்களை பலியிடாதே!

‘வளர்ச்சி – வேலைவாய்ப்பு – வல்லரசு’ என்று ஆசை காட்டி
தேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுபட்டிருக்கும்
காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்-
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

தொடர்புக்கு:

அ.முகுந்தன் – 94448 34519 ,  வினவு – 97100 82506

மக்கள் கலை இலக்கியக் கழகம்விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி

  1. போராட்ட எதிர்ப்புணர்வை தொய்வில்லாமல் எடுத்து சென்ற உதயகுமார் அவர்களுக்கு முதலில் நமது நன்றியைச் சொல்ல வேண்டும். நிச்சயம் கலந்து கொள்கிறேன். நிச்சயம் போராட்டம் வெற்றியடையும். இந்தப் போராட்டங்கள் மறுகாலனிய எதிர்ப்பு போராட்டமாக நீட்சியடைய வேண்டும். பன்னாட்டு நிருவனங்கள் முற்றுகையிடப்படவேண்டும். அந்நிய கைக்கூலி அரசுகளை அம்மணமாக ஓடவிடவேண்டும்.

    • நன்று சொன்னீர் ஐயா ! பன்னாட்டு நிறவனங்களை நாம் சாராது வடகொரியாவை போல வாழ்ந்து காட்ட வேண்டும்

      பன்னாட்டு நிறுவனங்களே!
      உன்ன உணவா , தேவை இல்லை !
      உயிர் காக்கும் மருந்தா, தேவை இல்லை !
      மின்சார தொழில் நுட்பமா தேவை இல்லை!
      கணக்கு போட கணினியா தேவை இல்லை!
      பறந்து செல்லும் விமானமா தேவை இல்லை!
      தகவல் தரும் இணையமா தேவை இல்லை !
      கடல் நீரை நன்நீராகுகிராய தேவை இல்லை !
      தொலை பேசியா தேவை இல்லை !

      தேவை இல்லை ! தேவை இல்லை ! பன்னாட்டு நிறுவனங்களே!
      நாங்கள் காட்டிலும் குகையிலும் உங்கள் தொல்லை இல்லாமல் வாழ்ந்து காட்டுவோம்!
      கிம் ஜாங் உன் வழியில் ….வாழ்ந்து காட்டுவோம் ! உறுதி எடுப்போம்! உரக்க கூறுவோம் !

      • 139 கோடி ஹெக். விளை நிலங்கள்
        உலகில் 4ல் ஒருவர் இந்திய விவசாயி
        இருந்தும் தேவையில்லை
        தொன்மைவாய்ந்த இந்திய மருத்துவம்
        இருந்தும் தேவையில்லை
        தாய்நாட்டில் பரவிக் கிடக்கும்
        மின் உற்பத்திச் செல்வங்கள்
        இருந்தும் தேவையில்லை
        உலகின் 19% இந்தியர்கள்
        பயன்படுத்துவார் யாரும் இல்லை

        தேவையில்லை! தேவையில்லை! இந்தியர்கள் உற்பத்திக்கு தேவையில்லை!
        பன்னாட்டு நிறுவனங்களே! உலகின் மூத்த நாகரீகம் எங்களுடையது. உங்களின் தயவால் இன்று பிளாட்பாரத்திலும் வாழ்கிறோம்! மன்மோகனின் வழியில் வாழ்ந்து காட்டுவோம்! அடிமைச் சாசனத்தில் கையொப்பமிட உறுதி ஏற்போம்! உரக்கச் சொல்வோம் நாங்கள் பன்னாட்டு அடிமைகள்!

        தரகு முதலாளிங்கன்னு சும்மாவா சொன்னாங்க!

        • யப்பா வசீகரா, இந்த வெட்டி பேச்சு பழம் பெருமை எல்லாம் இருக்கட்டும், யதார்த்த நிலைக்கு வந்து பேசுங்கள்.

          ஆயிரம் விவசாயிகள் இருந்தாலும் மழை இன்றி பஞ்சம் வரும் போது தெரியும் பன்னாட்டு உதவி என்றால் என் வென்று.

          பச்சிலை வைத்து வைதியியம் செய்ய முடியுமோ? உனது உறவினர்களுக்கு அல்லது உனக்கு வியாதி வரும் போது தெரியும் பன்னாட்டு மருந்து வேண்டுமா இல்லையா எனபது.

          மின்சாரம் இல்லாமல் , இணையம் இல்லாமல் தொலை பேசி இல்லாமல் உன்னால் வாழ முடியுமோ!

          எனால் முடியும் என்று பிதற்றுபவர்கள், ஒரு நடை வட கொரியா சென்று வரவும்.

          பழம் பெருமை வீர கதைகள், குழந்தைகளுக்கு உணவு ஊட்ட வேண்டுமானால பயன்படும்.

          எல்லா சுகங்களையும் அனுபவித்து கொண்டு பின்னூட்டம் போடுவது, வெட்டி கோசம் போடுவது மிக எளிது

          • உண்மை தாங்க… பன்னாட்டு கம்பெனிகள் இங்க கால்வைக்கிற வரைக்கும், இங்கெ இருந்த எல்லா பயபுள்ளைங்களும் தினமும் சோத்துக்கே சிங்கி அடிச்சிகிட்டும், கட்டை வண்டி ஓட்டிகிட்டும், முட்டா பசங்களா தாங்க இருந்தாங்க….!!! ஆனா பாருங்க… அப்படி இருந்த பல பயமக்கா இன்னும் 110 வருசம் கழிச்சும் வய வேலைக்கு போய்கிட்டு இருக்கானுவ… அது தான் எப்படின்னே தெரிலீங்க…?

            • அப்புடி கேளு சின்ராசு, விவசாயம் உலகோட முதல் தொழிலப்பா !

              “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் ” அப்பிடின்னு ஒரு சாமியார் சொல்லிகீறார் அப்பா

              நம்ம பய புள்ளைங்க வியாதி வந்தா பூசாரி கிட்டவும் , பெயோட்ட்றவன் கிட்டவும் போவோங்கோ! பன்னாட்டு கம்பெனி வந்து தான் மருந்து கண்டுபிடிச்சு குடுத்தாங்கோ !

              தரகு முதலாளித்துவம் இல்லைனா நீங்க இலவசமா ஈமெயில் செக் பண்ண முடியாது !
              அது ஏன் உலக நடப்பு கூட இணையம் பார்த்து தெருன்சுக்க முடியாது!

              பொன்ராசு உங்களை மூளை சலவை செஞ்சுகிடான்கப்பா ! விளிசுகப்பா !
              கம்யூனிசம் என்பதை வெளியில இருந்து பாக்குற வரைக்கும் நல்ல தான் இருக்கும் .
              இம்பிளிமேண்டசன் வர்றப்போ தெரியும் தலைவலி! அதனால தான் உங்கள ஒருக்கா வடகொரியாவோ , சைனாவோ போய் பாக்க சொல்றேன்

  2. தானே புயல் அடிச்சப்பவே வந்து ஒரு எட்டு பாத்துட்டு, வேணுங்கிறதை செஞுசு உசுரை காப்பாத்தாத மகராசனுங்க தான், அங்கிட்டு தள்ளி கூடங்குளத்தில் காத்து வீசிருந்தா வந்து ஒரே தாங்கா தாங்கி இருக்க போறானுங்களா? இதை நெனச்சி சூ**தால தான் சிரிக்கணும்… அணு உலையை விட இந்திய அரசாங்கம் தான் மக்களுக்கு ரொம்ப டேஞ்சர் என்பதற்கு ஒரே சாட்சி இன்றைய ‘கடலூரே’…!!!

  3. தேவையே இல்லாத ஒரு போராட்டம்!

    உதயகுமார் அடிக்கும் சரக்கிற்கு நான் ஊறுகாய் ஆக ரெடி இல்லைங்க..!

    “சென்ற இடங்களிலெல்லாம் 99% மக்கள் எமது தோழர்களை ஆதரித்திருக்கின்றனர்.”

    உதயகுமார் வசதி படைத்தவர். பணம் வருது, அதை செலவு செய்து கூட்டம் கூட்டுகிறார்.

    மனசாட்சியோட சொல்லுங்க….உங்க போராட்டத்துக்கு 100 பேராவது வந்தாங்களா..?

  4. அரச பயங்கரவாதத்தை மக்கள் திரள் போராட்டங்களின் மூலம்தான் முறியடிக்க முடியும். இப்போராட்டம் நிச்சயமாக அதை முறியடித்துக் காட்டும்..

    புரட்சிகர வாழ்த்துகள் தோழர்களே.

  5. மகஇக வின் போராட்டாம் எங்கும் சோடைபோனதில்லை. போராட்டம் வெல்லும், ஆளும் வர்க்கத்தை கொல்லும்.

  6. திரு.முத்துகிருட்டிணன் (சமூக ஆர்வலர்) அளித்த பேட்டில் இருந்து:
    மும்பையை சுற்றியுள்ள ஒரு கடற்பகுதியில் இருந்து பிடிக்க படும் மீன்கள் கதிர்வீச்சினால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், அதை உண்ண தகுந்தவை தானா என்று அறியவும் வேண்டி ஒரு பொதுநல வழக்கு ஒன்று மும்பை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அந்த நீதிபதியும் மீன்களை ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்பிக்க் சொன்னார். அறிக்கையும் வந்தது. அவர் தீர்ப்பை கீழ்கண்டவாறு வாசித்தார். “நீங்கள் சொன்னது போல அங்குள்ள மீன்களில் வழக்கத்துக்கு மாறாக அதிக கதிர்வீச்சு உள்ளது நிரூபணம் ஆகி உள்ளது.அதை இந்த நீதிமன்றம் ஒப்புகொள்கிறது. ஆனால் இந்த தேசத்தின் பாதுகாப்பு கருதி அந்த ‘கதிர்வீச்சின்’ அளவை வெளியிட முடியாது. வழக்கு இத்துடன் முடிவடைகிறது”.

  7. கூடங்குள்ம், கல்பாக்கம் அணு உலைகளை விட மிக பயங்கரமான, கொடுமையான பக்க விளைவுகளை கடந்த 50 ஆண்டுகளாக இந்திய அரசின் யுரேனியம் சுரங்க துறையின் ஜாருகோடா சுரங்களை சுற்றி வாழும் பழங்குடி மக்கள் மீது ஏற்படுத்தி வருகிறது. முதலில் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் :

    http://jadugoda.jharkhand.org.in/2009/04/health-status-of-indigenous-people.html

    http://www.tarunbose.blogspot.in/2010/10/tribals-living-under-shadow-of-nuclear.html

    http://intercontinentalcry.org/its-time-to-show-support-for-indias-navajo-nation-the-people-of-jadugoda/

    இந்த படங்களை பார்க்கவும் :

    http://www.google.co.in/search?hl=en&q=jadugoda+cancer+picture&gs_sm=3&gs_upl=176l3639l1l3910l14l14l0l0l0l1l1507l6675l2-4.2.5.2.8-1l14l0&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&biw=1280&bih=625&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=37UzT7LGCYPYrQed1p2WDA

    • அதியமானை பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் போராட்டத்தில் சனிக்கிழமை எதிர்பார்க்கும் – நான் மணி

  8. கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளை விட மிக மிக மிக கொடுமையான விளைவுகளை கடந்த 50 வருடங்களாக புரியும் இந்திய அரசு யுரேனிய துறையின் சுரங்களை மொதல்ல மூட வேண்டும்.

    ஜாருகோடா பகுதியில் உள்ள இந்திய அரசின் யுரோனிய சுரங்களின் கழிவுகளினால் கொடுமையான பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியினர் பற்றி :

    http://intercontinentalcry.org/its-time-to-show-support-for-indias-navajo-nation-the-people-of-jadugoda/

    http://jadugoda.jharkhand.org.in/2009/04/health-status-of-indigenous-people.html

    http://www.tarunbose.blogspot.in/2010/10/tribals-living-under-shadow-of-nuclear.html

  9. எத்தனை நாள் தான் கூடங்குளம் பதிவுகள் மட்டுமே போட்டு காலத்தை ஓட்டுவீர்? வெட்டி விஷயங்களான விஜயகாந்த்-ஜெ சண்டை, மாட்டுக்கறி மேட்டர் இதற்கெல்லாம் பதிவு போட்டீர். இப்போ சென்னை தவிர தமிழகம் முழுக்க எட்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைகின்றனர். இதைப்பற்றி பதிவு எழுத, போராட உமக்கு திராணி உள்ளதா? உங்களால் முடியுமா என்று யோசித்து விட்டு பேசுங்கள்.

  10. ஏன்டியம்மா ஜெயலலிதா, அணுஉலை எதிர்ப்பு போராட்டம் என்பது, இந்த ஏட்டு மணி நேர கரண்ட் கட்டுக்கும் சேர்த்துதான் என்பதை. அரசியல் கண்ணோட்டத்துடன் புரிந்துள்ளனுத்தா! பன்னாட்டு மூலதனத்தினால் உருவாகிய கம்பனிகளினாலும், அதிகார வர்க்க முதலாளிகளாலும்தான் அனைத்து தரப்பினரும் பாதிப்படைகின்றனர். அப்டிதான் நாம் இதை சரியா புருச்சுக்கனுடிம்மா. வி.ஜெ சண்டை, மாட்டுக்கறி மேட்டர் இதல்லாந்தான் இன்றைக்கு அரசியலா மக்கள் மத்தியில கொண்டுசெல்லப்படுது. உண்மையான அரசியலை திரையிட்டு மறைப்பதற்க்கான வேலை என்பதையும். இதையெல்லாம் வெட்டி விசயமாக நினைக்கிற உம்ம மாதிரி ஆளுங்களுக்காகதான் இத்தமாதிரி பதிவுக்டிம்மா ஜெயலலிதா.

Leave a Reply to Ragu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க