privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்கா'இனி பயப்படாமல் தம் அடிக்கலாம்' - அமெரிக்க நீதிமன்றம்!

‘இனி பயப்படாமல் தம் அடிக்கலாம்’ – அமெரிக்க நீதிமன்றம்!

-

செய்தி -107

புகை பிடிப்பதால் ஏற்படும் தீங்கைப் பற்றி எச்சரிக்கும் படங்களை சிகரெட் பெட்டிகளின் மீது அச்சிட வேண்டும்’ என்ற உத்தரவுக்கு வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க முறையீட்டு நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

உலகெங்கிலும் புகை பிடிப்பதன் பாதிப்புகளைப் பற்றி பிரச்சாரம் செய்வது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ‘புகை பிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது’, ‘புகை கொல்லும்’ போன்ற வாக்கியங்கள் சிகரெட் பெட்டிகளில் அச்சிட வேண்டும் என்று சட்டம் உள்ளது. இந்த எச்சரிக்கையை இன்னமும் அழுத்தமாக சொல்லும் பொருட்டு ‘புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகளை சித்தரிக்கும் படங்களை அச்சிட வேண்டும் என்று  2008-ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப் பட்டது.

அமெரிக்காவில் அமெரிக்க தலைமை மருத்துவரின் எச்சரிக்கை வாசகங்கள் சிகரெட் பெட்டிகளின் மீது இடம் பெறுகின்றன. ஆனால், இந்த தடைகளையும் மீறி சிகரெட் கம்பெனிகள் தமது விற்பனையை அதிகரிப்பதற்கான செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றன. அமெரிக்காவில் சுமார் 4.5 கோடி மக்கள் புகை பிடிப்பதாக நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மதிப்பிட்டுள்ளது. ‘அமெரிக்க உயர் நிலை பள்ளிகளில் நான்கில் ஒரு மாணவர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்’ என்கிறார் அமெரிக்க தலைமை மருத்துவர்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், மனதை உலுக்கும் ஒன்பது விதமான படங்களை வடிவமைத்து, அக்டோபர் மாதம் முதல் அமெரிக்காவில் விற்கப்படும் சிகரெட் பெட்டிகளின் மீது அவற்றை அச்சிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

  • ஒரு குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருப்பது
  • ஆரோக்கியமான நுரையீரலுக்கு பக்கத்தில் புகை பிடித்தலால் சிதைந்து போன நுரையீரல்
  • தொண்டையில் இருக்கும் ஓட்டை வழியாக புகையை வெளியிடும் ஒருவர்

போன்ற அதிர்ச்சியூட்டும் படங்கள் அவற்றில் அடங்கும்.

சிகரெட் பெருநிறுவனங்களின் அரசியல் செல்வாக்கை மீறி கடந்த 25 ஆண்டுகளில் சிகரெட் எச்சரிக்கைகளில் செய்யப்பட இருந்த முதல் மாற்றம் அது.

சிகரெட்-அட்டை

புகை பிடித்தல் என்பது மக்கள் மத்தியில் நோயை வரவழைக்கும் ஒரு பழக்கம், ஆனால் முதலாளிகளுக்கோ அது சந்தை வழங்கும் பணப் புழக்கம். இந்த சந்தையை விட்டுக் கொடுக்க முதலாளிகள் தயாராக இல்லை. புதிய உத்தரவிட்டபடி படம் போட்டால் புகையிலை உபயோகப்படுத்துபவர்கள் குறைவார்கள், சந்தை விற்பனை குறையும். சிகரெட் கம்பெனிகளால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

‘சிகரெட் பெட்டிகளின் மீது இத்தகைய விளம்பர படங்களை போட கோரும் உத்தரவை தடை செய்ய வேண்டும்’ என்று ரெய்னால்ட்ஸ் அமெரிக்கன், லோரிலார்ட், காமன்வெல்த் பிராண்ட்ஸ், லிக்கெட் குரூப், சாந்தா பே நேச்சுரல் ஆகிய அமெரிக்காவின் சிகரெட் நிறுவன முதலாளிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

‘புகை பிடித்தலால் ஏற்படும் விளைவுகளை சித்தரிக்கும் படங்களை பார்த்தால் புகை பிடிப்பவர்கள் ஒரு நிமிடம் யோசிப்பார்கள், சிகரெட் வாங்குவதை குறைத்துக் கொள்வார்கள்’ என்பது மருந்து மற்றும் உணவு ஆணையத்தின் நோக்கமாக இருந்தது. குறிப்பாக, குழந்தைகளும் முதன் முறை புகை பிடிக்க வருபவர்களும் அத்தகைய எச்சரிக்கையால் புகை பழக்கத்துக்கு அடிமையாகாமல் தடுக்கப்படுவார்கள். ‘புகை பிடித்தலால் சிதைந்து போன பற்கள், நோய் பீடித்த நுரையீரல் போன்றவை சரியானவை, குழந்தைகளை எச்சரிப்பதற்கு தேவையானவை’ என்று வாதிட்டது எப்டிஏ.

கீழ்நிலை நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை இப்போது மேல் முறையீட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘நவீன ஜனநாயக அரசுகளின் அடிப்படைக் கோட்பாடுகள் மக்கள் நலனை விட முதலாளிகளின் தனிச் சொத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றன’ என்பதை இச்செய்தி முகத்தில் அடித்தது போல் சொல்லி இருக்கிறது.

உலக அளவில் ‘புகை பிடிப்பதை விட்டு விடுமாறு மக்களிடையே விழிப்புணர்வு உருவாக்கப்படா விட்டால் 2030-ல் புகை பிடித்தல் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் பேரை கொல்லும்’ என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் சுமார் 12 கோடி புகை பிடிப்பவர்கள் உள்ளனர், புகை பிடித்தலின் காரணமாக ஆண்டுக்கு 9 லட்சம் மக்கள் கொல்லப்படுகின்றனர்.

‘யார் எக்கேடு கெட்டால் என்ன, எங்களுக்கு வர வேண்டிய வருமானமும் லாபமும் குறைந்து விடக் கூடாது’ என்பதுதான் முதலாளிகளின் நடைமுறை கோட்பாடு. அதை உடைத்து மக்கள் நலனை நிலைநாட்டுவது தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமே சாத்தியமாகும்.

இதையும் படிக்கலாம்

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

    • அது எப்படி? பீடி சுத்துரது ‘உழைக்கும்’ வர்கம் ஆச்செ. பீடி உடம்புக்கு நல்லதுன்னு சொல்லாம இருந்தா சரி!

  1. தவறு என்று தெரிந்தும் செய்யும் செயல்களில் மிக முக்கியமானது இந்த சிகரட் பழக்கம். சிகரட் குடிப்பவர்களால், அதற்க்கு ஆயிரம் ஞாயமாண காரணங்கள் சொல்கிறார்கள். அது சிந்தனையை தூண்டும் தூண்டுகோலாக செயல்படுவதாக சொல்கிறார்கள். முதலாளிகளின் லாப நோக்கத்திற்க்காக அதில் உள்ள தீமையை கூட சொல்ல நினைக்காத முதலாளிகளின் என்னத்தை அம்பலப்படுத்தியதற்க்கு வினவுக்கு நன்றி. இதை பார்த்தாவது சிகரட் பிடிப்பவர்கள் திருந்துவார்கள?

Leave a Reply to Narayanan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க