Thursday, April 15, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!

தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்த கும்பல்! தந்தை தற்கொலை!

-

வன்புணர்ச்சி

ரியாணா மாநிலத்தின் ஹிஸ்ஸார் மாவட்டத்தில் உள்ளது தப்ரா கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த 16 வயது தலித் பெண் செப்டம்பர் 9ஆம் தேதி அருகாமை ஊருக்கு உறவினர்களை பார்க்கச் சென்றிருக்கிறாள். அப்போது 12 பேர் அடங்கிய பொறுக்கிக் கும்பல் ஒன்று அந்த பெண்ணை கடத்தி கும்பலாய் வன்புணர்ச்சி செய்திருக்கிறது. அவர்கள் அனைவரும் இளைஞர்கள். எட்டு பேர் வன்புணர்ச்சி செய்தபோது அக்கும்பலைச் சேர்ந்த நால்வர் பாதுகாப்பாக நின்றதோடு செல்பேசியிலும் பதிவு செய்திருக்கின்றனர். பிறகு அதை பரப்பவும் செய்திருக்கின்றனர். இதன்பிறகே அந்த பேதைப்பெண் நடந்ததை பெற்றோரிடம் கூறுகிறாள்.

இதைக் கேள்விப்பட்ட போது அந்த இளம் பெண்ணின் தந்தை போலிசில் புகார் தருகிறார். ஆனால் அந்த புகார் ஏற்கப்படவில்லை என்பதால் முனமுடைந்து தற்கொலை செய்துவிட்டார். வன்புணர்ச்சி செய்த கும்பலில் பெரும்பான்மையினர் ஜாட் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களும், ஏனையவர்கள் யாதவர் முதலான இதர ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஜாட் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் ஹரியாணா மாநிலத்தில் இந்தக் குற்றவாளிகளை தண்டிக்க முடியாது என்று அந்த தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

பிறகு தப்ரா கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள் தற்கொலை செய்து கொண்ட தந்தையின் உடலை பெறாமல் ஹிஸ்ஸார் நகரத்தில் போராடி வந்தார்கள். ஐந்து நாட்களுக்குப் பிறகு போலீஸ் ஒருவரைக் கைது செய்தும் ஏனையோரை விரைவில் கைது செய்வதாக உறுதி மொழி அளித்ததும் போராட்டத்தை கைவிட்டுவிட்டு உடலை பெற்றுக் கொண்டனர், மக்கள்.

தற்போது சீது என்ற பொறுக்கி மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறான். அவன் அளித்த தகவல் படி ஏனைய பொறுக்கிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சாதி வேறுபாடு கடந்து எல்லா பிரிவு மக்களும் அந்த பொறுக்கிகளை கைது செய்ய உதவுவதாக போலீஸ் கண்காணிப்பாளர் சதீஷ் பாலன் தெரிவித்துள்ளார். பிறகு மாநில அரசு வழக்கம் போல நிதி நிவாரணத்தை அளிப்பதாக அறிவித்துள்ளது.

இவையெல்லாம் போராடும் தலித் மக்களின் வாயை அடைத்து விடலாம் என்று அரசும், போலீசும் கருதுகிறது. ஜாட் ஆதிக்க சாதிவெறியின் பின்னணியில் நடந்திருக்கும் இந்த வன்புணர்ச்சி கொடுமையை தனிப்பட்ட கிரிமினல் நடவடிக்கையாக மட்டும் கருதுவதால் ஜாட் சாதிவெறியின் கௌரவத்திற்கு தீங்கு வராது என்றும் போலீசு செயல்படுகிறது.

ஆனால் தனது தற்கொலையின் மூலம் அந்த தலித் இளம்பெண்ணின் தந்தை இவர்கள் மீது காறி உமிழ்ந்திருக்கிறார். அவரது தியாகம் அந்தக் கிராமத்தின் எளிய மக்களை போராடும்படி மாற்றியுள்ளது. பார்ப்பனியத்தின் சமூகக் கொடுமைகள் கொடிகட்டிப் பறக்கும் ஹரியானா மாநிலத்தில் இத்தகைய குற்றங்கள் அவ்வப்போது நடக்கிறது. அரசும், நீதி, நிர்வாக அமைப்புகளும் இந்தக் குற்றவாளிகளை தண்டிக்காது என்பதோடு, தப்பி விடுவதற்கும் காரணமாக இருக்கின்றனர்.

சாதி வேறுபாடுகளைக் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றாக சேர்ந்து போராடும்போதுதான் இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

 

 1. இதை படிக்கும் போது தலித் பெண் தானே என்று சாதரணமாக கடந்து போய் விடுகிறோம். அப்படி ஒரு மனப்பான்மை நம்மில் ஊறி இருக்கிறது இந்த சாதிய கட்டுமானங்களால், அனால் ஒரு சேட்டு பெண்ணுக்கோ ஐயர் ஆத்து பெண்ணுக்கோ இப்படிநடந்து செல்போனில் ஊரெங்கும் உலவினால் பதைத்து போய் அரசை கேள்வி கேட்கிறோம் அரசும் என்கவுண்டர் செய்தால் தான் மனம் நிம்மதி அடைகிறது. இப்படி ஒரு மனப்பான்மையை என் ரத்தத்தில் பதித்த சாதி ஒழிக ஒழிக அவள் ஆன்மா சாந்தி அடைவதாக. அடுத்த பிறவிவில் அவள் ஆதிக்க சாதியில் பிறக்க எல்லாம் வல்ல பிள்ளையாரையும் ராமபிரானையும் வணங்குகிறேன்

 2. இங்கு பாதிக்கப்பட்டது தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த பெண் ஆவாள். ஆனால் இதை செய்தது உயர்வகுப்பு இனம் மட்டுமே. இதில் பார்பனீயம் எங்கே வந்தது?. எனவே பார்பனர்களை எதற்கெடுத்தாலும் குற்ரம் சொல்லுவதை விட்டு ஒழிக்கவும். இப்பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டது அதை விடகொடுமை. இருந்து போராடி இருக்கலாம். இந்த நாடு எங்கு தான் போகிறது?

  • “இருந்து போராடி இருக்கலாம்.”

   எப்படிப்பட்ட போராட்டமாக அது இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிவிடுங்கள். எப்படி போராடினால் நீதி கிடைக்கும் என்பதையும் சொல்லுங்கள்.

 3. பெண்களை தெய்வமென்று போற்றும் இந்தியாவில் பெண்களை மதிப்பது, போற்றுவது என்பது கற்பழிப்பின் எண்ணிக்கையின் அடிப்படையில் தானே!!!

  இந்த மேட்டுக்குடி நாய்களுக்கு தீண்டப்படாதவர்களான தலித் பெண்களின் மூத்திர உறுப்பு மட்டும் கருவறையில் இருக்கும் தெய்வம் போன்று தெரிகிறது போலும்.

  த் தூ மானங்கெட்டவர்களே. உஙகளையெல்லாம் நடு ரோட்டில் வைத்து “அதை” அறுத்தெறிய வேண்டுமடா.

 4. எல்லோரும் போல் அவளும் ஒரு பெண் தான் எல்லா பெண்ணையும் போல் அவளுக்கும் மான உணர்ச்சி இருந்திருக்கும் எல்லா தகப்பன் போல் தான் அவள் தகப்பனும பாசம் வைத்திருப்பான், ஆனால் அவன் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து விட்டானே……அவன் பெண்ணை கற்பழித்தால் மீடியாக்கள் அலறுமா?நம்மிடையே நிலவும் காட்டுமிராண்டித்தனத்தை சுட்டிக்காட்டுமா?சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று எதிர் கட்சிகள் கூச்சலிடுமா?மகளிர் ஆணையம் சம்பவ இடத்திற்கு விரையுமா?அடுத்தநாளே என்கவுண்டர் செய்வானா?…வாய்ப்பே இல்லை தலித்கள் ஆயுதம் ஏந்தி ஸ்பாட் ஜஸ்டிஸ் வழங்கினால் தான் இவை போன்ற நிகழ்வுகள் நிற்கும் நிற்கும் நிற்கும்.

 5. நிச்சயம் அந்த மாணவியினை பலாத்காரம் செய்யப்பட்டமைக்கு நாம் வருந்துகின்றோம். அவற்றை கண்டித்து பதிவு எழுதிவிட்டாலோ, அல்லது செய்தியாக்கி விட்டாலோ அந்தக் கொடுமைகள் நீங்கிவிடுமா என்ன ?

  அவற்றின் ஆணிவேரை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை முன் வைக்க வேண்டும். பெண்கள் மீதான வன்முறை எங்கோ ஹரியானாவில் மட்டும் நடந்துவிடவில்லை, நாம் வசிக்கும் ஒவ்வொரு தெருவிலும் எதோ ஒரு வடிவத்தில் நடந்து வருகின்றன…

  அதற்கு முக்கியக் காரணமே ஆண் – பெண் சமமல்ல என்ற முட்டாள் சிந்தாந்தங்களே. அத்தோடு நில்லாமல் பெண் ஆணின் சொத்தாகவும், போகப் பொருளாகவும், ஆணை விட மட்டமானவள் என்ற காட்டுமிராண்டிக் கால ஆணாதிக்க சிந்தனையே ஆகும்…. !!!

  தவறு செய்பவர்கள் சொல்லும் விமோசனம் என்ன தெரியுமா ? அவள் ஒழுங்காக இருந்தால் தாம் ஏன் அவளைத் தொடுகின்றோம் என்பது தான். மூடிக் கொண்டு போனால் விட்டுவிடுவோம் என்று நடிப்பார்கள் … !!!

  பாருங்கள் அமீரா அல் தவீல், சௌதியின் இளவரசியை அவர்களை யாரும் தொட நினைக்க மாட்டார்கள்… ஏன் தெரியுமா ? அவரிடம் அதிகாரம், வசதி, கல்வி போன்றவை இருக்கின்றது ..

  சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், பழமை சிந்தனை வாழ்க்கை முறையுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான அச்சாணி சகோ… !!!

  பெண்களுக்கான சுதந்திரத்தைக் கொடுங்கள், அதிகாரத்தைக் கொடுங்கள், அவர்கள் அவர்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்கள் … !!!

 6. //நிச்சயம் அந்த மாணவியினை பலாத்காரம் செய்யப்பட்டமைக்கு நாம் வருந்துகின்றோம். அவற்றை கண்டித்து பதிவு எழுதிவிட்டாலோ, அல்லது செய்தியாக்கி விட்டாலோ அந்தக் கொடுமைகள் நீங்கிவிடுமா என்ன ?

  இங்கு அப்படி யார் சொன்னது?

  //பெண்களுக்கான சுதந்திரத்தைக் கொடுங்கள், அதிகாரத்தைக் கொடுங்கள், அவர்கள் அவர்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்கள்//

  இப்படி பின்னூட்டம் போட்டு விட்டால் மட்டும் போதும் என்கிறீர்களா?

 7. // இதில் பார்பனீயம் எங்கே வந்தது?//

  தாழ்ந்த சாதியாகவும் உயர்ந்த சாதியாகவும் வைத்திருப்பது பார்ப்பனீயம் தானே! பிறகு புத்த மதத்தையா குற்றம் சொல்ல முடியும் :))

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க