Friday, May 2, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமதுரை, ஈரோடு, கோவையில் மின்வெட்டு!

மதுரை, ஈரோடு, கோவையில் மின்வெட்டு!

-

டுத்தர வர்க்கத்தைப் பொறுத்த வரை மின்வெட்டு என்பது அதிகமும் மின்விசிறி, தொலைக்காட்சி போன்றவற்றை பாதிக்கும் ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும் இதை ஈடுகட்ட இப்போது பல்வேறு சிறுநகரங்களில் கூட இன்வெர்ட்டர் வாங்கி பயன்படுத்தும் பழக்கம் வந்துவிட்டதால், வசதியிருப்பவர்களுக்கு இந்த மின்வெட்டு பெரிய பிரச்சினை இல்லை. என்றாலும் பேட்டரி சார்ஜ் ஆகும் நேரம் வரைக்கும் கூட மின்சாரம் இருப்பதில்லை என்பது புதிய பிரச்சினை.

ஆனால் வணிகர்கள், சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் போன்றவற்றில் மின்சாரம் இல்லை என்பது அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒன்று. தற்போது 12 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருக்கிறது. இதனால் மதுரை, கோவை, ஈரோட்டில் இருக்கும் சிறு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையை தினமணியின் இந்த மூன்று கட்டுரைகளும் தெரிவிக்கிறது. சிறு முதலாளிகளும், இவற்றில் வேலை செய்யும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையின்றி தவிக்கின்றனர்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையின்றி நாள்முழுவதும் மின்சாரம் வழங்கப்படுகின்றது. சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ், ஷாப்பிங் மால்கள் அனைத்திற்கும் அளிக்கப்படும் மின்சாரம் தமிழகத்தின் வேறு பகுதிகளுக்கு இல்லை. இவர்களெல்லாம் மின்சாரம் இல்லையென்றாலும் ஜெனரேட்டர் மூலம் எப்போதும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வசதியைக் கொண்டவர்கள். ஆனால் மின்சாரத்தை நம்பியே வாழும் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் மின்வெட்டு என்பது பட்டினியைக் கொண்டு வரும் அடக்குமுறையாகும். தினமணியின் மூன்று கட்டுரைகளையும் படியுங்கள்!

படிக்க