பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான ஆபத்தான கூடங்குளம் அணு உலையை மூடு!
மாற்று மின் உற்ப்த்தி திட்டங்களை செயல்படுத்தி தடையற்ற மின்சாரம் வழங்கு !
டீசல் விலை உயர்வு, சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதன அனுமதி,
சமையல் ஏரிவாயு சிலிண்டர் கட்டுப்பாட்டினை திரும்பப்பெறு !
பொதுக்கூட்டம்
நாள் : 29.9.2012 சனிக்கிழமை நேரம் மாலை 5.30 மணி
இடம் : பூபால்ராயர்புரம் மீன் மார்க்கெட் அருகில், தூத்துக்குடி.
தலைமை :
வழக்குரைஞர். கெ.அரி ராகவன்,
தூத்துக்குடி மாவட்ட தலைவர், மனித உரிமை பாதுகாப்பு மையம்.
உரை :
வழக்குரைஞர். சே.வாஞ்சி நாதன்,
மதுரை மாட்ட துணைச் செயலாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
பேராசிரியர். திரு. அ. பிரான்சிஸ்,
முன்னாள் முதல்வர், வ.உ.சி கல்லூரி, தூத்துக்குடி.
திரு.பொன்.தனகரன், முத்தையாபுரம்.
சிறப்புரை :
சி.ராஜீ,
மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப்பாதுகாப்பு மையம்.
தோழர் காளியப்பன்,
மாநில இணைச்செயலாளர்,மக்கள் கலை இலக்கியக் கழகம்.
ம.க.இ.க மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.
நன்றியுரை :
தி. ஜோவர்,
தூத்துகுடி மாவட்ட பொருளாளர், மனித உரிமைப்பாதுகாப்பு மையம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
வழக்குரைஞர். சு.ப.இராமச்சந்திரன்,
தூத்துகுடி மாவட்ட செயலாளர், மனித உரிமைப்பாதுகாப்பு மையம்.
தமிழக அரசே !
கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப்போராடும் மக்கள் மீதான போலீசு ஒடுக்குமுறையை நிறுத்து !
பொய் வழக்குகளை ரத்து செய் ! கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய் !
மணப்பாடு அந்தோனிராஜ், இடிந்தகரை சகாயராஜ் படுகொலைகளுக்கு காரணமான போலீஸ் மற்றும் கடலோர விமானப்படை அதிகாரிகளை கொலை வழக்கில் கைது செய் !
ஜனநாயக ஆர்வலர்களே, பொது மக்களே !
அணு உலை வேண்டாம் என்று போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை !
போராடும் மக்கள் மீதான அரசு அடக்குமுறையை எதிர்ப்பது நம் ஜனநாயகக் கடமை !
அணி திரள்வீர் !
______________________________________________________________________
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு
HUMAN RIGHT PROTECTION CENTRE -TAMILNADU
தொடர்புக்கு : 94435 27613, 94435 84049.
_____________________________________________________________________
ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் புகுஷிமா அழிவுகளுக்கு பின்னர் அணு மின் உற்பத்தியை நிறுத்துவதற்கான முடிவுக்கு வந்தன.
புகுஷிமா அழிவின் பின்னர் ஜப்பானிற்கு முன்னதாக அணு ஆலைகளை மூடுவதற்கான தீர்மானத்தை பிரான்ஸ் நிறைவேற்றியது.
நாட்டு மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் 14 ஆம் ஜப்பான் நாட்டு அரசாங்கம் அணு மின் உற்பத்தியை நிறுத்துவது என்ற முடிவெடுத்தது.
இப்படி உலகமே மாற்று மின் உற்பத்தி திட்டங்களுக்கு மாறிக்கொண்டு இருக்கிறது.ஆனால் இங்கு மட்டும்முள்ள ஆளும் அடிமைகளுக்கு உரைக்கவில்லை.எனவே இந்த அடிமைகளின் அணு உலை திட்டத்தை நிறுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
எனவே புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணி திரள்வோம்!
தூத்துக்குடி,திருநெல்வேலி,விருதுநகர் மாவட்ட பதிவர்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.