Sunday, April 18, 2021
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் நீர்ப்பாசன ஊழல்: அஜித் பவாரின் பங்காளி நிதின் கட்காரி!

நீர்ப்பாசன ஊழல்: அஜித் பவாரின் பங்காளி நிதின் கட்காரி!

-

நிதின்-கட்காரி
நிதின் கட்காரி

காராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ள நீர்ப்பாசன ஊழலில் சிக்கியுள்ள தேசியவாத காங்கிரசாருடன் பாஜக எம்.பி அஜய் சாஞ்செட்டியின் நிறுவனம் கூட்டு சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஊழலுக்கெதிரான இந்தியா அமைப்பின் உறுப்பினரான அஞ்சலி தமானியா இந்த ஊழல் பற்றி பாஜக தலைவர் நிதின் கட்காரியிடம் கூறிய போது பவார் குடும்பத்துடன் வியாபார தொடர்பு இருப்பதால் எதிர்நிலை எடுக்க முடியாது என அவர் மறுத்து விட்டாராம்.

விதர்பா நீர்ப்பாசன வளர்ச்சிக் குழுமத்தின் விதிகளின் படி ஒரு ஒப்பந்ததார நிறுவனத்துக்கு அதிகப்படியாக மூன்று திட்டங்கள் வரைதான் ஒதுக்க முடியும். 2005 இல் தனது நிறுவனப் பெயரை சக்திகுமார் எம் சாஞ்செட்டி லிட் என்பதிலிருந்து எஸ்எம்எஸ் இன்ப்ராஸ்டிரக்சர்ஸ் என மாற்றி உள்ளார் அஜய் சாஞ்செட்டி. இரு நிறுவனங்களும் இணைந்து ஒரே ஒப்பந்ததாரர் எண்ணில் (1083) பத்துக்கும் மேற்பட்ட‌ ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன• 2007இல் விதர்பா நீர்ப்பாசன வளர்ச்சிக் குழுமத்தின் தலைவராக இருந்தவர் நீர்ப்பாசனத்துறையின் அமைச்சரான அஜீத் பவார். அப்போது தனியொரு குழுமத்திற்கு வழங்கப்படும் ஒப்பந்தங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு குழுமத்திற்கு தனிப்பட்ட முறையில் அவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதில் நடைபெற்றுள்ள ஊழலை நிதின் கட்காரியிடம் எடுத்துக் கூறி, போராட அழைக்க சென்றார் அஞ்சலி தமானியா. “ஆனால் நீங்கள் வேண்டுமானால் போராடிக் கொள்ளுங்கள். எனக்கு அஜீத் பவாருடன் வணிகத் தொடர்புகள் இருப்பதால் அவருக்கெதிராக போராட முடியாது” எனக் கூறி விட்டாராம் கட்காரி. தற்போது இது சம்பந்தமான கடிதங்களையும் அவர் வெளியிடவே முதலில் சந்திக்கவே இல்லை என மறுத்த பாஜக தரப்பு தற்போது அஞ்சலி தமானியாவை மன்னிப்பு கேட்குமாறு கோருகிறது. ஆனால் கட்காரி போன்றவர்கள் நாட்டு மக்களிடம் முதலில் மன்னிப்பு கேட்கட்டும் என்கிறார் அஞ்சலி.

க‌ட‌ந்த‌ புத‌ன‌ன்று அஞ்ச‌லி த‌மானியா செய்தியாள‌ர்க‌ள் ச‌ந்திப்பில் ஊழலுக்கெதிராக போராட‌ தான் எதிர்க்க‌ட்சி த‌லைவ‌ரை ச‌ந்தித்த‌போது, அவ‌ர் வியாபார‌ தொட‌ர்புக‌ள் இருப்ப‌தால் முடியாது என‌ ம‌றுத்து விட்ட‌தாக‌ பெய‌ர் குறிப்பிடாம‌ல் தான் கூறினார். ஆனால் எங்க‌ப்ப‌ன் குதிருக்குள் இல்லை என்ற‌         க‌தையாக‌ நிதின் க‌ட்காரி தானாகவே முன்வ‌ந்து நான் அஞ்ச‌லியை ச‌ந்திக்க‌வே இல்லை என‌க் கூறி விட்டார். ஆனால் நான் ஆகஸ்டு 14 ஆம் தேதி காலை பத்து  ம‌ணிக்கு மும்பை ஒர்லி ப‌குதியில் உள்ள‌ அவ‌ர‌து இல்ல‌த்தில்தான் க‌ட்காரியை ச‌ந்தித்தேன் என்றார் அஞ்ச‌லி.இத‌ற்கு முன் இருமுறை ச‌ந்தித்துள்ள‌தாக‌வும், பொது விவாத‌மொன்றுக்கு வ‌ருவாரானால் சந்தித்ததை அவரால் மறுக்க முடியாமல் செய்கிறேன் என‌ ச‌வால் விடுகிறார் அஞ்ச‌லி த‌மானியா.  இத‌ற்கிடையில் நில‌க்க‌ரி ஊழ‌லில் அஜ‌ய் சாஞ்செட்டியுட‌ன் த‌ன‌க்கு கூட்டு       இருப்ப‌தாக‌ கூறிய‌த‌ற்காக‌ காங்கிர‌சின் செய்தித் தொட‌ர்பாள‌ர் திக் விஜ‌ய் சிங் மீது அவ‌தூறு வ‌ழ‌க்கு தொடுத்துள்ள‌ நிதின் க‌ட்காரி, அஞ்ச‌லி மீது எதுவும் வ‌ழ‌க்கு தொட‌ர‌வில்லை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. ஆனால் வ‌க்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளார். ஆனால் அதில் ஆக‌ஸ்டு ச‌ந்திப்பு ப‌ற்றி எதுவும் குறிப்பிட‌வில்லை.

கர்ஜட் தாலுகாவிலுள்ள கோண்டேன் அணைக்கட்டுத் திட்டத்தை தென்புற‌மாக‌ 700 மீ த‌ள்ளி அமைத்தால் த‌ன‌து குடும்ப‌ ந‌ண்ப‌ர்க‌ள் சில‌ர‌து 38 ஏக்க‌ர்க‌ள் நில‌ம் அணைத்திட்டத்திற்காக கையக‌ப்படுத்தப் ப‌டாது என்பத‌ற்காக‌ க‌ட‌ந்த‌ ஆண்டு டெல்லி ச‌ந்திப்பில் க‌ட்காரியிட‌ம்  உத‌வி கேட்டிருக்கிறார் அஞ்ச‌லி. மேலும் அருகிலுள்ள‌ பௌத்த‌ குகைக‌ளுக்கும் வ‌ந்து போவ‌தில் பார்வையாள‌ர்க‌ளுக்கு சிர‌ம‌மிருக்காது என்றும் கூறிய‌ த‌க‌வ‌ல் அறியும் உரிமை ஆர்வ‌ல‌ரான‌ அஞ்சலி,   அப்ப‌டி த‌ள்ளிப்போவ‌தால் த‌னிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள‌து நில‌ங்க‌ளை எடுக்க‌ வேண்டிய‌   அவ‌சிய‌மில்லை என்றும், ப‌ழ‌ங்குடியின‌ர‌து நில‌ம்தான் எடுக்க‌ப்ப‌டும் என்றும், அவர்களுக்கு போதுமான‌ இழ‌ப்பீடு த‌ந்து விட‌லாம் என்றும் 2011 ஜீன் 10 அன்று நீர்ப்பாச‌ன‌த் துறைக்கு எழுதிய‌ க‌டித‌மொன்றில் குறிப்பிட்டிருந்தார். இதுப‌ற்றி இப்போது குறிப்பிடும் பாஜ‌க‌ வின் செய்தித் தொட‌ர்பாள‌ர் மாத‌வ் ப‌ண்டாரி ஆதிவாசி நில‌ங்க‌ளை எடுப்ப‌து ப‌ற்றிய‌ க‌டித‌த்தை அஞ்ச‌லி க‌ட்காரியிட‌ம்   ம‌றைத்து விட்டார். நாங்கள் ஆதிவாசி நிலங்களை எடுப்பதை ஆதரிக்கவில்லை.  ந‌ல்லெண்ண‌த்துடன் மட்டுமே உத‌வ‌ முய‌ன்றிருக்கிறார் க‌ட்காரி என்கிறார்.

க‌ட‌ந்த‌ பிப்ர‌வ‌ரி ம‌ற்றும் மே மாத‌ங்க‌ளில் மாநில‌ நீர்ப்பாச‌ன‌த் துறை, அணைக்க‌ட்டை மாற்றி அமைப்ப‌தால் வ‌ன‌ப்ப‌குதியில் ப‌ல‌ ஏக்க‌ர் நில‌ம் நீரில் மூழ்கி விடும் என்றும், பௌத்த‌ குகை அமைந்துள்ள‌ இட‌ம் நீர்ப்பிடிப்பு   ப‌குதியிலிருந்து 58 மீ உய‌ர‌த்தில் இருப்ப‌தாக‌வும், மாற்றி அமைத்தால் தேங்கும் நீரின் அள‌வு 30 ச‌த‌வீத‌ம் குறையும் என்றும், த‌ற்போதுள்ள‌ நிலையை நீடித்தால் அப்பகுதியை சுற்றுலா ஸ்த‌ல‌மாக்க‌லாம் என்றும்  குறிப்பிட்டிருந்த‌து.

க‌ட‌ந்த‌ மே மாத‌ம் நீர்ப்பாச‌ன‌த் துறைக்கு கோரிக்கை ம‌னு ம‌ற்றும் லீக‌ல் நோட்டீசு ஒன்றும் அனுப்பினார் அஞ்சலி. ஆனால் சில‌ காண்டிராக்ட‌ர்க‌ள் ஆகஸ்டு மாத‌ம் அவ‌ரை அணுகி ஏக்க‌ருக்கு ரூ.12 ல‌ட்ச‌ம் வ‌ரை இழ‌ப்பீட்டுத் தொகை த‌ர‌த் த‌யாராக‌ இருந்த‌ன‌ராம். அப்போதுதான் உருவாகியிருந்த‌ அண்ணா ஹ‌சாரே குழுவில் இணைந்து ஊழ‌லுக்கு எதிராகப் போராட‌ நினைத்திருந்த‌ அஞ்ச‌லிக்கு ப‌ண‌த்தை வாங்க‌ ம‌ன‌ம் வ‌ர‌வில்லை. பின்ன‌ர் நீர்ப்பாச‌ன‌த் துறை அமைச்ச‌ர் சுனில்  தாக்க‌ரேவையும் ச‌ந்தித்துள்ளார். அவ‌ரும் ந‌ட‌வ‌டிக்கை எடுப்ப‌தாகக் கூறி ஏமாற்றி விட்டார்.

த‌க‌வ‌ல் பெறும் உரிமை மூல‌ம் அணைத்திட்ட‌த்தில் ந‌ட‌ந்துள்ள‌ முறைகேடுக‌ளை அறிந்து கொண்ட‌ அஞ்ச‌லி 2012 ஏப்ர‌ல் 10 இல் உய‌ர்நீதி ம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொடுத்து, ந‌ட‌ந்துள்ள‌ ஊழ‌ல் ம‌ற்றும் முறைகேடுகளைக் கார‌ண‌ம் காட்டி திட்ட‌த்திற்கு த‌டை வாங்கினார். மாநில‌ ஆளுந‌ர் த‌லையிட்டு திட்ட‌த்தையே ர‌த்து செய்தார். க‌ட‌ந்த‌ ஆக‌ஸ்டில் வ‌ருவாய்த்துறை அஞ்ச‌லி ராய்காடு மாவ‌ட்ட‌ம்  ம‌னோகான் தாலுகாவில் மூலிகைச் செடி வ‌ள‌ர்ப்ப‌த‌ற்காக‌ ச‌லுகை விலையில் பெற்ற‌ ம‌ற்றும் வாங்கிய‌ நில‌ங்க‌ளை திருப்பி எடுத்துக் கொண்டுள்ள‌து. நிதின்   க‌ட்காரி வ‌ழ‌க்கு தொட‌ர‌ த‌யாராகி வ‌ருகிறார். அஜீத் ப‌வாரோ பேர‌ணி ந‌ட‌த்தி காங்கிர‌சு நில‌க்க‌ரி ஊழ‌லை ம‌றைக்க‌ என்னைப் ப‌லிக‌டா ஆக்கி விட்ட‌து என்கிறார்.

ஊழ‌லில் காங்கிர‌சின் இளைய‌ ப‌ங்காளிதான் பாஜ‌க‌ என்ப‌த‌ற்கு ம‌காராஷ்டிர‌ நீர்ப்பாச‌ன‌ ஊழ‌ல்தான் துல‌க்க‌மான‌ எடுத்துக்காட்டு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க