Thursday, April 15, 2021
முகப்பு செய்தி ஒரு வரிச் செய்திகள் – 04/10/2012

ஒரு வரிச் செய்திகள் – 04/10/2012

-

செய்தி: அதிமுக 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 12 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

நீதி: புரட்சித் தலைவி செருப்பு மாற்றுவதெல்லாம் ஒரு செய்தியா?

______

செய்தி: அடுத்த 6 மாதங்களில் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை வசதியை ஏற்படுத்தித் தரவேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதி: கல்வியைத் தனியார்மயமாக்கிவிட்டு கக்கூசுக்கு கவலைப்படும் கனவான்கள்!

______

செய்தி: டீசல் விலை உயர்த்தப்பட்டதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் லாரிகளின் வாடகையை 20 சதவீதம் உயர்த்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

நீதி: விலைவாசி உயர்வுக்காக வயிற்றையும் வாயையும் கட்டுவதற்கு பதில் வீதியில் இறங்கி போராடலாம்.

_______

செய்தி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து, பெங்களூர் தமிழ்ச்சங்கம் தலைமையில் தமிழ் அமைப்புகள் பெங்களூரில் புதன் கிழமை தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டன.

நீதி: என்னடா இது இனவாதிகளுக்கு வந்த சோதனை!

________

செய்தி: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது அணுஉலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அணு மின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதி:  அமெரிக்க அணுவுலை ஆண்டைகளுக்கு அடிமைகளின் ஸ்டேடஸ் அப்டேட்!

________

செய்தி: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் ஒரே நாளில் ஒடுக்கி விடுவார் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

நீதி: பாம்பின் கால் பாம்பறியும். ஒரு பாசிஸ்டின் மனது இன்னொரு பாசிஸ்ட்டுக்குத்தான்  தெரியும்!

_________

செய்தி: அ.தி.மு.க அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த மனிதச் சங்கிலி போராட்டம் போலீசின் அனுமதி மறுப்பால் கைவிடப்பட்டதாக திமு.க தலைமை அலுவலகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

நீதி: பெர்மிஷன் கொடுத்தால் பாயும் எலி !

________

செய்தி: வியாழக்கிழமை நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், காப்பீட்டுத் துறையில் 26சதவீதமாக உள்ள அன்னிய முதலீட்டை 49சதவீதமாக அதிகரிக்கவும், ஓய்வூதியத் துறையில் 26 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

நீதி: அடிமடியில் கைவைத்த பின்னராவது அமெரிக்க அடிமைகள் ஆபத்தை உணர்வார்களா?

________

செய்தி: இலங்கை ராணுவ வீரர்கள் இந்தியாவில் பயிற்சி பெறும் நடைமுறை தொடரும்; இம்மரபை மாற்றி, சீனாவில் பயிற்சி பெறும் எண்ணமில்லை என்று இலங்கை அமைச்சர் பசில் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

நீதி: ஆக இந்தியாவில் பயிற்சி வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வது இந்தியா அல்ல, இலங்கைதான். நல்ல வல்லரசு!

_________

செய்தி:  “இலங்கை விவகாரத்தில், என்னைப் போல பிரதமர் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.

நீதி:  ஆமாமா நீங்க சிவப்பா பயங்கரமா இருக்கீங்க அவரு பயங்கரமா சிவப்பா இருக்காரு!

________

செய்தி: “கொள்ளை சம்பவங்களும், ஆயுதம் ஏந்திய கும்பல்களின் தாக்குதல்களும், ஆசிய கடல் பகுதியின் அச்சுறுத்தலாக விளங்குகின்றன; இவை, ஸ்திரத்தன்மையைப் பாதிக்கின்றன,” என, ராணுவ அமைச்சர் அந்தோணி பேசினார்.

நீதி: அவர் சொல்லவில்லை என்றாலும் அது அமெரிக்காதான்!

_______
செய்தி:
பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்காக, வாதாடிய வழக்கறிஞர்கள், தங்களின் சம்பள தொகையை, மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த, போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு வழங்க முன் வந்ததற்காக, சுப்ரீம் கோர்ட், அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

நீதி:  இது போல நரோடா பாட்டிய வழக்கில் இந்து வெறியர்களுக்காக வாதாடிய வக்கீல்கள், கிடைத்த ஃபீசை கலவரத்தால் பாதிக்கப்பட்ட இசுலாமிய மக்களுக்கு கொடுக்கவில்லை யுவர் ஆனர்!

  1. //செய்தி: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் ஒரே நாளில் ஒடுக்கி விடுவார் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

    நீதி: பாம்பின் கால் பாம்பறியும். ஒரு பாசிஸ்டின் மனது இன்னொரு பாசிஸ்ட்டுக்குத்தான் தெரியும்!//

    துரோகி , இப்படித்தா முள்ளிவாய்க்காலில் 50 ஆயிரம் ஈழத்தமிர்களை கூட்டு சேர்ந்து உயிரை குடிச்சீங்க. இன்னமுமா அடங்கள உங்களுக்கு இரத்த வெறி.

  2. செய்தி: “கொள்ளை சம்பவங்களும், ஆயுதம் ஏந்திய கும்பல்களின் தாக்குதல்களும், ஆசிய கடல் பகுதியின் அச்சுறுத்தலாக விளங்குகின்றன; இவை, ஸ்திரத்தன்மையைப் பாதிக்கின்றன,” என, ராணுவ அமைச்சர் அந்தோணி பேசினார்.

    நீதி: அவர் சொல்லவில்லை என்றாலும் அது அமெரிக்காதான்./// இல்லை இல்லவே இல்லை அது தமிழனுக்கு வெறிலங்காதான் இந்திய அரசும்+தமிழக அரசும் தமிழர்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர்.அதனால் அரசை நடத்துகின்ற, நடத்துவதாக நடிக்கின்ற,அறிக்கையிடுகிற,ஒப்பாறிவைக்கின்ற வேலை நமக்கு வேண்டாம் எக்கேடு கெட்டால் என்ன? முடிந்தால் இப்பொது உள்ளவர்களை மாற்றிநாம் வழிநடத்துவோம். ஆகவே வினவு கவலைப்பட வேண்டாம்.பாக்கிசுத்தான்,அமெரிக்கா,சைனா யாராக இருந்தால் என்ன?

  3. ஒரு வரி செய்தியின் ‘நீதி’ நக்கல் செய்வதுபோல் சாட்டையடியாக உள்ளது. இந்த ஒரு வரி செய்தி மிகவும் அருமை வினவு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க