Thursday, June 24, 2021
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் அரியானா: பயங்கரவாதத்தின் விளை நிலம்!

அரியானா: பயங்கரவாதத்தின் விளை நிலம்!

-

அரியானாந்தியாவின் தலைநகரான தில்லிக்கு மிக அருகில் உள்ளது அரியானா. 1966ஆம் ஆண்டு பஞ்சாப்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரு மாநிலங்களில் இதுவும் ஒன்று. தவிர, இந்தியாவின் வசதி மிக்க மாநிலங்களில் ஒன்று, நாடு பெறக்கூடிய வருமானத்தை வழங்கும் மூன்றாவது பெரிய மாநிலம் என்றெல்லாம் அரியானாவுக்கு பெயரும், புகழும் உண்டு. தவிர தெற்கு ஆசியாவில் விவசாயம் மற்றும் உற்பத்தி தொழிற்சாலையில் சிறந்து விளங்கக் கூடிய மாநிலமும் இதுதான். 2000-ம் ஆண்டுக்கு பிறகு அனைவரும் முதலீடு செய்ய விரும்பும் மாநிலமும் இதுவேதான். தொழில் நகரமான குர்கான் இருப்பதும் இதே மாநிலத்தில்தான்.

இப்படித்தான் ஊடகங்கள் அரியானா மாநிலத்தின் பெருமையை பேசுகின்றன, பறைசாற்றுகின்றன, விளம்பரம் தருகின்றன, இந்தியாவின் அடையாளமாக காலரை உயர்த்திக் கொள்கின்றன.

ஆனால், இதே மாநிலத்தில்தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையும் அதிகமாக இருக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 455 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அதாவது தினமும் இரண்டு பெண்கள் என்ற கணக்கில் இந்தக் கொடுமை அரங்கேறி வருகிறது.

இது காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள கணக்குதான். எனில், உண்மை நிலவரம் இன்னும் பயங்கரமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அரியானாவின் ஹிசார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்தான் அதிக அளவில் பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்றுள்ளன. இங்கு மட்டும் ஜனவரி – ஆகஸ்ட் மாத காலத்தில் 94 பெண்கள் இந்த வன் செயலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இருப்பது கர்னல் பகுதி. இங்கு 92 பெண்களும், ரெவாரி எல்லைக்குட்பட்ட பகுதியில் 89 பெண்களும், ரோஹ்டக் பகுதியில் 87 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ரோஹ்டாக் பகுதிதான், அரியானா மாநில முதல்வர் புபிந்தர் சிங் ஹுடா, பிறந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 80 வழக்குகள் குறைந்துள்ளன. ஊடகங்கள் இது பற்றி செய்தி வெளியிடும்போது தெளிவான தகவல்களை முழுமையாக தர வேண்டும்…’ என்று திமிராக பதில் அளித்திருக்கிறார் அரியானா டிஜிபி ரஞ்சிவ் சிங்க் தலால்.

அரியானாவை ஆள்வது காங்கிரசு கட்சி. தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகி இருக்கிறார் புபிந்தர் சிங் ஹுடா. எனவே ‘காங்கிரசு கட்சியின் மீது களங்கத்தை சுமத்த திட்டமிட்டு இதுபோன்ற தகவல்களை பரப்புகிறார்கள். இது அரங்கேறி வரும் சதிச் செயலின் ஓர் அங்கம்தான்…’ என முத்தை உதித்திருக்கிறார் காங்கிரசின் மூத்த தலைவரான பூல் சந்த் முலானா. உடனே ‘யார் அந்த சதிகாரர்கள்?’ என செய்தியாளர்கள் கேட்டிருக்கின்றனர். ‘அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்…’ என நழுவி இருக்கிறார்.

இதே அரியானாவில்தான் தலித்துகளுக்கு எதிரான ஆதிக்க சாதி வன்முறையும் தலைவிரித்து ஆடுகிறது. மாட்டைக் உரித்த ‘குற்றத்துக்காக’ 5 தலித்துகளை எரித்துக் கொன்றதை நாம் மறக்க முடியாது.  கப் பஞ்சாயத்துகள் நாட்டாமைதனமும், சாதி வெறிபிடித்த கொளரவக் கொலைகளும், தலித் பெண்களை கும்பலாக வண்புணர்வு செய்வதும் அரியானாவில் இயலபான நிகழ்வு.

குர்கான் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துகின்றனர். குறைந்த சம்பளமே இவர்களுக்கு வழங்கப்படுகின்றன. வேலை நேரமும் அதிகம். போதிய ஓய்வு நேரங்கள் வழங்கப்படுவதேயில்லை. மாநிலத்தின் சுகாதாரமும், அடிப்படைக் கல்வியும் கேள்விக்குறியாக இருக்கிறது. பெரும்பாலான மக்களுக்கு எந்த கட்டமைப்பு வசதியையும் மாநில அரசு செய்து தரவேயில்லை. ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அனைத்து வசதிகளும் செய்துத் தரப்படுகின்றன. இப்படி உழைக்கும் மக்களின் ரத்தத்தில் குளித்தபடிதான் அரியானா மாநிலம் நாடு பெறக்கூடிய வருமானத்தை வழங்கும் மூன்றாவது பெரிய மாநிலமாக திகழ்கிறது.

ஆமையைப் போல் அரியானா மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் புகுந்து தொழிலாளர்களை ஒடுக்கி வருவதும், ஆதிக்க சாதிவெறி பயங்கரவாதமும், அம்மாநில பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு தினமும் ஆளாகி வருவதும் வேறு வேறல்ல. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான், ஒரே சமூகத்தின் அடிப்படையிலிருந்துதான் பிறக்கின்றன.

 1. கடந்த முப்பது நாட்களில் நடந்த 15வது கற்பழிப்பு சம்பவம் மற்றும் அரசின் கையாலாகாத தனத்தை எந்த தமிழ் ஊடகமும் கண்டு கொல்லாத வேலையில் ,வினவின் இக்கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது..

  //இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 80 வழக்குகள் குறைந்துள்ளன. ஊடகங்கள் இது பற்றி செய்தி வெளியிடும்போது தெளிவான தகவல்களை முழுமையாக தர வேண்டும்…’ என்று திமிராக பதில் அளித்திருக்கிறார் அரியானா டிஜிபி ரஞ்சிவ் சிங்க் தலால்.//
  டிஜிபி மட்டுமல்ல ,காங்கிரஸ் எய்தி தொடர்பாளர் ரேணுகா சௌத்ரியிடம் இது பற்றி கேட்டபோது ,”ஹரியானாவில் மட்டுமல்ல உலகமெங்கிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்திரக்கிறது” என்கிறார் ..இவர் சொல்ல வருவது என்ன ? இவர் ஒரு பெண் என்பதையும் மறந்து பேசுகிறாரா ?எவ்வளவு அலட்சியாமான பதில் …
  ஹரியானாவின் காப் பஞ்சாயத்து பிரதிநிதிகள் சொல்கிறார்கள் இக்கற்பழிப்புகளை தடுக்க பெண்களை 16 வயதில் திருமணம் செய்து குடுக்கவேண்டுமாம் ..இதற்கு அம்மாநில முன்னால் முதல்வரும் வக்காலத்து வாங்குகிறார் …..

  குற்றவாளிகளை பிடித்து கடும் தண்டனை குடுக்க வக்கில்லாமல் இந்த மாதிரி பினாத்தல்களை என்ன சொல்வது ?

  ஷீலா தீட்சித் ,மாயாவதி ,மம்தா பேனர்ஜி ,ஜெயலலிதா என இந்தியன் யூனியனில் நான்கு பெண் முதலமைச்சர்கள்..

  காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ,எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் என தேசிய கட்

  சிகளின் அதிகாரமிக்க பெண்கள் ..

  பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சபாநாயகர் மீரா குமாரி ….

  இப்படி நம் நாட்டில் ஆட்சி அதிகாரத்திலும் ,அரசியல் துறைகளிலும் இவ்வளவு பெண்கள் இருந்தும் ,குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் தொடர்ந்து நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையினை தடுக்க எந்த துணிச்சலான நடவடிக்கையும் இதுவரை மாநில சர்காரோ ,மத்திய சர்க்காரோ எடுக்கவில்லை…

  நம் உச்ச நீதிமன்றமும் தானாக முன்வந்து ஒரு வழக்காகவும் எடுக்கவில்லை …

  குற்றவாளிகள் தண்டிக்க படுவதில்லை ..

  பின் ஏன் பூலான் தேவிகள் உருவாக மாட்டார்கள் ?

 2. மத அடிப்படை வாதம்(குறிப்பாக பார்பனிய இந்து மதம் மற்றும் இஸ்லாம் ) உள்ள நாடுகளில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன.

 3. இதையெல்லாம் எப்படி தடுத்து நிறுத்துவது. மறுபடியும் நாடு தழுவிய ஒரு புரட்சி வெடிச்சா தான் இப்படி பேயாட்டம் போடுறவங்களை ஒடுக்க முடியும். அதுவும் குறிப்பா தலித்ன என்ன இழிச்சவய்தனமா?

  • ஒவ்வொரு தலித் மக்களும் தங்களுடைய நிலையை உணர்ந்து பொங்கி எழுந்தால் இந்த நாடு தாங்குமா?

   • கடவுள் எதற்காக மனிதனை படைத்தது இப்படி விலங்குகள் போல நடந்து கொள்வதற்காகவா? எல்லா உயிரினங்களுக்கும் பகுத்தறிவு கொடுக்காம ஏன் மனித பிறவிக்கும் மட்டும் கடவுள் பகுதறிவ கொடுத்தான் இதுபோல வெறித்தனமா நடந்த கொள்வதற்காகவா?

    மனித இனமே சற்று சிந்தித்து செயல்படு நமக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் எல்லாம் அரசியல் என்ற போர்வையால் மூடி மறைத்து கிடக்கிறது. விழிப்பது எப்போது?

 4. ஷீலா தீட்சித் ,மாயாவதி ,மம்தா பேனர்ஜி ,ஜெயலலிதா என இந்தியன் யூனியனில் நான்கு பெண் முதலமைச்சர்கள்..

  காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ,எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் என தேசிய கட்

  சிகளின் அதிகாரமிக்க பெண்கள் ..

  பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சபாநாயகர் மீரா குமாரி ….

  இப்படி நம் நாட்டில் ஆட்சி அதிகாரத்திலும் ,அரசியல் துறைகளிலும் இவ்வளவு பெண்கள் இருந்தும் ,குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் தொடர்ந்து நடக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையினை தடுக்க எந்த துணிச்சலான நடவடிக்கையும் இதுவரை மாநில சர்காரோ ,மத்திய சர்க்காரோ எடுக்கவில்லை…

  இவர்கள் எல்லாம் பெண்களாக இருக்கலாம், ஆனால் பெண் விடுதலைக்கான புரட்சியாளர்கள் அல்ல, இவர்கள் அனைவரும் அதிகார வெறி மற்றும், ஒட்டு பொருக்கி அரசியலின் கழிசடைகள், இவர்கள் கட்சியில் முக்கியத்துவம் பெறுவதற்கு, இவர்களுடைய போற்குனமோ கட்சியின் முன்னைநியாக செயல்பட்டதற்கோ அல்ல, இவர்கள் எப்படி அதிகாரத்திற்கு வந்திருப்பார்கள் என்று அனைவரும் அறிவர், இவர்களிடம் போய் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பார் என்று எதிர்பார்க்கலாமா?

Leave a Reply to arun nedunzhezhiyan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க