privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமணல் கொள்ளையை எதிர்த்து விவசாயி தீக்குளித்தார்!

மணல் கொள்ளையை எதிர்த்து விவசாயி தீக்குளித்தார்!

-

மணல்-கொள்ளை

ற்றிராப்பு என அழைக்கப்படும் வற்றியிரா இருப்பு பகுதியின் நீர்வளத்திற்கு ஆதாரமாக இருந்து வருவது பிளவக்கல் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கத்தை நம்பியே அந்தப் பகுதியின் விவசாயமும், குடிநீரும் தேவையும் நிறைவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணையை ஆழப்படுத்துவதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறிக் கொண்டு ஆறுமுகசாமி என்பவர் மணல் அள்ளுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார்.

இந்தப் பணிகளுக்காகவே மலையில் அதுவரை ஒற்றையடிப் பாதைகளாக இருந்ததை கனரக வாகனங்கள் வந்து செல்லும் அளவுக்கு செப்பனிட்டு இருக்கிறார்கள். அணையை ஆழப்படுத்துதல் என்றால் அனைக்கட்டை ஒட்டி நீர் தேங்கும் பகுதியை ஆழப்படுத்த வேண்டும். ஆனால் அணையை ஒட்டிய நீர்தேங்கும் பகுதிகள் மேடாக இருக்க; அணையிலிருந்து ஒரு கிமீ தூரத்தில் நாற்பதடி ஆழம் வரை தோண்டிப் பார்த்து ஏராளமான மணல் இருப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அந்த இடத்தில் மணல் அள்ளும் வேலையை துவக்கியுள்ளனர்.

இதை அறிந்த அந்தப் பகுதி விவசாயிகள் தன்னெழுச்சியாக விவசாயிகள் குழு ஒன்றை ஏற்படுத்தி பாதையை மறித்தனர். இதனால் மணலை வெளியே கடத்தாமல் அந்தப்பகுதியிலேயெ வாடகைக்கு ஒரு இடத்தை அமர்த்திக் கொண்டு அங்கு மணலை சேமித்து வந்தனர். அந்தப் பகுதியில் இயங்கி வரும் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் விவசாயிகள் குழு சந்தித்து நிலமையை விளக்கி ஆதரவு கோரினர்.

ஆனால் எந்தக் கட்சியும் ஆதரவு தெரிவிக்காததுடன் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியிடம் பணம் வாங்கிக் கொண்டு எதிர் வேலைகளையும் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 30/08/2012 அன்று வற்றிராப்பில் இந்த மணல் கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டத்தை நடத்தினர். (இதில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC) தோழர் லயனல் மணல் கொள்ளையை கண்டித்து சிறப்புரை ஆற்றினார்) தொடர்ந்து அந்தப் பகுதி மக்களிடையே பிரச்சாரம் செய்து மணல் கொள்ளைக்கு எதிராக மக்களை அணிதிரட்டி வருகின்றனர். ஆனாலும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தமுடியாமல் அந்த வேலையும் தொடர்ந்து நடந்து கொண்டுளதே எனும் விரக்தியிலும் விவசாயிகள் இருந்தனர்.

இந்த நிலையில் 09/10/2012 இரவு எட்டு மணியளவில் கூமாபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 55 எனும் விவசாயி கூமாபட்டி பேருந்து நிலையத்தின் முன்னால் இந்த மணல் கொள்ளையை கண்டித்து தன்னைத்தானே எரித்துக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். செய்தியை கேள்விப்பட்ட விவசாயிகள் கவலையுடனும் கொந்தளிப்புடனும் இருக்கிறார்கள். விவசாயி ராஜேந்திரன் இன்னும் ஆபத்தான நிலையிலேயே இருக்கிறார்.

மணல் கொள்ளை மாபியாக்கள் தங்களை எதிர்க்கும் மக்களை கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதை மக்கள் செய்தி ஊடகங்கள் வழியே ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள். அந்தக் கொள்ளையர்களுக்கு அரசு அனைத்து வழிகளிலும் துணையாக இருப்பதாலும், விவசாயத்தை அழித்தே தீருவது என்று திட்டம் தீட்டிச் செயல்படுவதாலும், இதை எதிர்த்து இந்த மண்ணையும், மக்களையும் காக்க முடியாமல் நிற்கிறோமே எனும் ஆதங்கமும், மக்கள் அந்தக் கொள்ளையர்களை அடையாளம் கண்டு விரட்டியடிக்க முன்வரத் தயங்குகிறார்களே எனும் விரக்தியுமே ராஜேந்திரனை தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் முடிவுக்குத் தள்ளியிருக்கிறது.

இன்னும் எத்தனை ராஜேந்திரன்களை நாம் விரக்திக்குத் தள்ளப்     போகிறோம் .. .. ?

  1. கொள்ளை அடிப்பதைக் கண்டிக்க மானமுள்ளவர்கள் தன்னைத்தானே தீக்கு இரையாக்கிக் கொள்கிறார்களே எனும் போது வருத்தம் மட்டும் தான் தெரிவிக்க முடிகிறது. கட்சிக்காரர்களுக்கு மானம், சூடு, உணர்வு இவையெல்லாம் எங்கே போயிற்று? இவற்றை விற்றுத்தான் பிழைக்கிறார்களோ? கேடுகெட்ட அரசியல் இருக்கும் வரை மானமுள்ள மனிதர்கள் வாழ முடியாது என்பதை உறுதிப் படுத்துகிறது வற்றியிராயிருப்பு இராசேந்திரனின் மரணம். நல்ல அரசியல்……? ஊழல்களை மட்டுமே உருப்படியாகச் செய்யும் ஆட்களைக் கொண்டு காய் நகர்த்தும் அரசியல் இருக்கும் வரை தமிழகத்தில் இருட்டும் கொள்ளையும் தான் இருக்கும். இது பொற்காலமா? சாதனைவிழா வேறு கொண்டாடுகிறது அரசு. முன்னாள் முதல்வர் சட்டையை மாற்றுவதில் மட்டுமே குறியாயிருக்கிறார். இந்நாள் முதல்வர் சிறீரங்கத்தில் சோறு போடுவதிலும் விளம்பரம் தேடுவதிலும் குறியாயிருக்கிறார். இவர்களின் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆங்காங்கே திருட்டுத்தொழிலைத் திறம்படச் செய்கின்றன.

  2. சட்டையை மாற்றுவதையும், பெயர் மாற்றுவதையும் பெரிய புரட்சியாக சித்தரிக்கும் இந்த போலி ஜனநாயக கட்சிகளை புறக்கணிக்கும் நாள் தூரம் இல்லை, கூடங்குளத்தில் ஏற்கனவே இவர்கள் அம்பலப்பட்டு விட்டார்கள்.இங்கேயும் அது விரைவில் நடக்கும்…

  3. சிறீரங்கத்தில் சோறு போட்ட சீமாட்டி ,சட்டையை மாற்றும் அரசியல் கோமாளி ,பச்சை துரோகி காங்கிரஸ் கும்பல் மற்றும் இன்ன பிற ஒட்டு பொருக்கி அரசியல்வாதிகளால் நமக்கு ஒரு பிரோஜனம் இல்லை …மேலும் நமக்கெதிரான அநீதகளில் நம் உயிரை தக்கவைத்துக்கொண்டு நாம் நம் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் ..நமது மேலான உயிரினை பலியை குடுப்பது வேதனையான விஷயம் …தோழர் ராஜேந்திரனுக்கு வீர வணக்கம்

  4. எனக்கு ஒரு விசயம் புரியவில்லை..

    மக்களுக்காக போராடுபவர்கள்
    நியாயத்திற்க்காக போராடுபவர்கள்
    உரிமைக்காக போராடுபவர்களில்
    சிலர் ஏன் தன்னைத் தானே நெருப்பில் பொசுக்கிக்கொள்கின்றனர்.

    மக்னமாராவுக்கு எதிராக எரிந்த அந்த புத்த பிக்கு,
    பின் எகிப்து,
    முத்துக்குமார், செங்கொடி….
    தற்போது ராஜேந்திரன்…

    ஏன் எரிகிறார்கள் ?

    நினைத்தது நடக்கவில்லையே
    என்ற கவலையா ?
    நினைத்ததை நடத்த
    முடியாத சுய அவலமா?
    நினைத்ததை நடத்த
    நான் உடன் வரவில்லை
    என்ற ஆதங்கமா?

    என்றால்….

    அவர்களின் மரணம்
    கெதிரிகளுக்கு எதிரானது
    அல்ல ….

    எங்கு தான்
    போய் தொலைந்தேன்..

    அலுவலகத்தில் மிகுந்த
    வேலையோ…

    அம்மாவுடன் ஆஸ்பத்திரிக்கு..

    தங்கையின் மறுவீடு..

    சினிமாவுக்கு..

    பாருக்கு..

    இடிந்தகரை சகாயத்தை
    பேஸ்புக்கில் லைக் பண்ண…

    கடுப்படிக்கும் மனைவியின்
    மீதான எரிச்சலில்
    கக்கூசுக்கு…

    இன்னும்
    எத்தனை பேர்
    நான் களமிறங்கும் முன்
    தீக்குளிக்க வேண்டும்…?

    எவ்வளவு பேரானாலும்
    முடியாதென்றால்….

    நான் ஏன்
    இன்னும்
    தீக்குளிக்கவில்லை..?

    இந்த
    ஒரு விசயம் மட்டும்
    எனக்கு புரியவே இல்லை…

  5. தீக்குளிப்பு,

    போராட வருமாறு விடுக்கும்

    இறுதி அழைப்பு..

    ஓரிருவர் போராடவும்

    நூறு பேர் புகழ்பாடவும் வரலாம்

    மீதிப்பேருக்கு இது கிறுக்குத்தனம்..

    எனவே வேண்டாம் தீக்குளிப்பு.

    தடியடிகளுக்கஞ்சாத காந்தி வழி

    தோற்காது ஜெயிக்கும்,

    திலீபன்களின் பட்டினிப் போர்

    தோற்றாலும் ஜெயிக்கும்..

    இரண்டும் போராடும் வழியும் சூழலும்

    எதுவென காட்டுவதால்.

  6. கூமாப்பட்டி விவசாயி ராஜேந்திரன் தற்போது இறந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் தடுத்து மக்களைக் காட்டுமிராண்டித்தனமாகத்தாக்கி சிதையில் போலீசே உடலை எடுத்துவைத்து எரியூட்டுமாறு மிரட்டியிருக்கிறது. மணல் கொள்ளையை ஜெயா அரசு தடுக்கும் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனம். மின்வெட்டுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தையும் கூட இப்படித்தான் ஜெயா அரசு அடக்க்குகிரது. போராட்டத்தை அடையாளமாகச்செய்யாமல் உண்மையான போராட்டமாக நடத்துவேண்டுமென்பதுதான் ராஜேந்திரனின் மரணம் நமக்கு உணர்த்தும் செய்தி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க