Sunday, April 18, 2021
முகப்பு செய்தி திருப்பதி மலையில் ஒரு 'போராட்டம்' !

திருப்பதி மலையில் ஒரு ‘போராட்டம்’ !

-

திருப்பதி-லட்டுமுதலாளித்துவ அமைப்பிற்கெதிராக உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் போர்க்குணம் மிக்க கலகங்களை நடத்தி வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளில் மக்களால் மக்களுக்காக அமைக்கப்பட்டதாக கூறப்படும் நாடாளுமன்றங்களை மக்களே முற்றுகையிடுகின்றனர். உழைக்காமல் உண்ணும் முதலாளிகளுக்கு தமது உழைப்பிலிருந்து வாரி வழங்கும் இந்த அநீதியான சமூக அமைப்பை வேரோடு பிடுங்கி எறியும் கலகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்தியாவிலும் மறுகாலனியாக்கத்திற்கெதிராக நாளும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. அணு உலைக்கு எதிராக கூடங்குளம் மக்களும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து வணிகர்களும் போராடுகின்றனர்,  தமிழகம் முழுவதும் மின்வெட்டை கண்டித்து ஊர் ஊராக போராடிக் கொண்டிருகின்றனர், ஹூண்டாய் தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ‘வரிசை’யில் திருப்பதிக்கு சென்ற பக்தர்களும் ஒரு போராட்டத்தை நடத்தி இணைந்து கொண்டுள்ளனர் !

திருப்பதி திருமலையின் உச்சியில் ஆக்ரோஷமாக முழக்கமிட்டபடி பக்தர்கள் நடத்திய போராட்டத்தால் பதட்டமடைந்த தேவஸ்தான நிர்வாகிகள் உடனடியாக போராட்ட களத்திற்கு வந்து என்ன பிரச்சினை என்று கேட்டறிந்து பக்தர்களை சமாதானம் செய்தனர். பக்தர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவை விரைவில் சரி செய்யப்படும் என்று சாந்தப்படுத்திய பிறகு தான் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும் செய்தி திருமலை முழுவதும் தீ போல பரவி விட்டது.

உடனே களத்திற்கு வந்த பத்திரிகையாளர்கள் தேவஸ்தான அதிகாரிகளை சுற்றி வளைத்துக்கொண்டு ஏதோ பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை கேட்டறிவதை போல ‘நிலைமை எப்போது சீரடையும்’ என்று மைக்குகளை நீட்டிக்கொண்டு நின்றனர். நிர்வாகிகளும், பக்தர்கள் கூட்டம் குறைந்ததும் நிலைமை சீரடைந்து விடும் என்று பதிலளித்தனர்.

ஏழுமலையானின் இருப்பிடத்திலேயே போராட்டமா ?  எதற்காக யாரை எதிர்த்து இந்த போராட்டம் ?

மன்மோகன் சிங், மான்டேக் சிங், ப.சிதம்பரம் கும்பல் மொத்த நாட்டையும் மொட்டை அடிக்க கொலைவெறியோடு அலையும் ஏகாதிபத்தியங்களிடம் ”கண்ணா லட்டு திங்க ஆசையா” என்று நாட்டையே துண்டு துண்டாக்கி லட்டு பிடித்து கொடுத்துக்கொண்டிருக்கும் போது திருப்பதியில் லட்டு தட்டுப்பாடாம் !

பக்தர்கள் கூட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதால் “வழக்கமா குடுக்கிற லட்டுல ரெண்டை கட் பன்னிட்டாங்களாம் ! இதனால் கொதித்தெழுந்த பக்தர்கள் நாலு லட்டு பெறுவது எங்களுடைய பிறப்புரிமை நாலு லட்டுகளையும் உடனே வழங்கு” என்று போராட்டத்தில் குதித்து விட்டனர். உலகிலேயே லட்டுக்காக போராடிய ஒரே நாடு பாரதத்திரு நாடு தான் என்கிற செய்தி நிச்சயமாக வரலாற்றில் இடம்பெறும். அதற்காக ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

உலகெங்கும் மக்கள் வாழ்வுரிமைக்காக போராடும் போது திருப்பதியில் மட்டும் லட்டுக்காக போராட்டம் என்றால் இந்து ஞானமரபின் பெருமைதான் எத்தகையது?

 1. // உலகிலேயே லட்டுக்காக போராடிய ஒரே நாடு பாரதத்திரு நாடு தான் என்கிற செய்தி நிச்சயமாக வரலாற்றில் இடம்பெறும். அதற்காக ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

  உலகெங்கும் மக்கள் வாழ்வுரிமைக்காக போராடும் போது திருப்பதியில் மட்டும் லட்டுக்காக போராட்டம் என்றால் இந்து ஞானமரபின் பெருமைதான் எத்தகையது? //

  டாச்மாக் விலை உயர்த்தியதை எதிர்த்து போராட்டமும், குடிமக்களின் கருத்துகளும், அரசியல் கட்டுரைகளும், தொலைக்காட்சி செய்திகளும் வெளிவரும்போது, திருப்பதி லட்டை பெறமுடியாதென்ற தவிப்பில் பக்தகோடிகள் போர்க்கோலம் பூண்ட செய்தியை இந்தவாரக் கோட்டாவில் வெளியிட்ட வினவுக்கு நன்றிகள்..

  • அப்படியென்றால் “டாஸ்மாக் அயிட்டம் = திருப்பதி லட்டு” என்கிறீர்களா?

  • டாஸ்மாக் சரக்கு விலை ஏறி விட்டதற்குப் போராட்டம்!! ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்!!!!
   நம் தாய்த் திருநாட்டில் போராட்டத்திற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. அதற்கு வாழ்க என்று கோஷம் போடுவதற்கும் ஆட்கள் அதிகமாகி விட்டது. சீக்கிரம் விடிந்து விடும்

 2. 2 லட்டு கிடைக்கட்டும் பாஸு. அந்த போராட்டத்தையே இப்படி வளச்சி வளச்சி கவர் செய்யுறீங்களே…சென்னையில அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட போது ரொம்ப பிஸி போல? மூச்சையே காணோம்? :)))))))))

  • நக்கல், கேலி எல்லாம் இந்து மதத்திற்கு தான்.
   எந்த ஊரிலோ வெளி வந்த படத்திற்காக சென்னையில் வெறியாட்டம் ஆடிய கூட்டத்தை பற்றி வினவு ஒன்றும் சொல்லாது.

  • மிஸ்டர்.நொநெந்துபோனவன், அந்த லட்டு போராட்டத்துல கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருத்தரும் இல்லை. அப்படி ஒருத்தர் இருந்திருந்தால் அவர் கடவுளிடம்கூட லட்டு கேட்டிருக்க மாட்டார், ஏனெனில் கடவுளே எல்லாத்தையும் தருவார் என்ற நம்பிக்கை அவருக்கும் இருக்கும். அங்கு போனவர்கள் எல்லோரும் ஒன்று பேராசைக்காரர்கள் அல்லது முட்டாள்கள், அவ்வளவே…

 3. திருப்பதி தேவஸ்தானம் ஒரு மோசடிக்கும்பல் …இதை சாக்காக வைத்து இன்னும் பணம் பண்ணுவார்கள்…எத்தனை பெரியார்கள் வந்தாலும் தானாக சிந்திக்கும் வரை இம்முட்டாள் மக்கள் மாற மாட்டார்கள் …இவர்கள் தலைமுறைதோறும் தொடர்வார்கள் ..சாபக்கேடு

 4. கடவுளை கொடுப்பவனாக எளிய மனிதர்கள் பார்கிறார்கள். விளைவு: கடவுள் நம்பிக்கையால் ஏழைகள் கடனாளியாவதுதான் மீதி.பணக்காரர்கள் + நியாய வழியில் செல்வம் பெறாதவர்கள் தங்கள் செல்வத்தை பாதுகாக்கிறவறாக, மேலும் வளப்படுத்துகிறவராக கடவுளை நோக்குகிறார்கள். இதற்கு கை மாறாக காணிக்கை கடவுளுக்கு. இத்தகைய வழியில்தான் எல்லா மனிதர்களும் கடவுளை தேடுகிறார்கள் ———- இந்த மோசமான பாதை நமக்கு நியாயம் என கற்பிக்கப் பட்டு வருகிறது. அதாவது ”ஊரை அடித்து உலையில் போட ஆண்டவன் துணை இருப்பான் — அவனுக்கு காணிக்கை கொடுத்தால்” என்பதை நாம் நேர்மை என பழகி விட்டோம். தவறுகள் ஆழமானவை. அவை அடிப்படையிலேயே கலையப்பட வேண்டும்.அப்போதுதான் லட்டுக்கான சண்டைகள் காணாமல் போகும். visitanand2006@yahoo.com SRIDHARAN,Pondicherry.

  • பெரும்பாலான மக்கள் முட்டாள்களே…
   இவர்களை மதங்கள் மட்டுமா மூலதனமாகக்கருதுகின்றனர்?
   – சினிமா பார்க்கவும் / டிக்கெட் எடுக்கவும் நம் மக்கள் போராடும் காட்சி கண்ணுக்குப்புண்… பலநடிகர்கள் ‘புரட்சி’ அடைமொழியுடன் அவ்வார்தையை அசிங்கப்படுத்தி விட்டனர்…பன்ச் டயலாக் பேசும் அவர்களை ‘தலைவன்’ என்கிறார்கள்நம் மக்கள்…என்ன செய்ய?
   – ‘பகுத்தறிவு’ அரசியல் செய்பவர்கள் சாமானியரை விட அதிகமாக ஜோசியர்களை நம்புகிறார்கள்…இவர்களை நம் மக்கள் ‘தலைவர்கள்’ என்கிறார்கள்…
   – கல்வி வியாபாரிகள் ‘கல்வி வள்ளல்’ என்று அழைக்கப்படுகிறார்கள்…
   – ஜாதி எதிர்ப்பாளர்கள் நாங்க ‘சத்திரிய குலம்’ /நாடாண்டவர்கள் என்று மைக் போட்டு கூவுகிறார்கள்..இவர்களை ‘சமநீதிக்குப்பாடுபட்டவன்’ எஙிறார்கள்…
   இப்படி உட்கார்ந்த இடத்தில் மற்றவர் உழைப்பில் வாழும் அனைவரும் மக்களை முட்டாள்களாகவே வைத்துள்ளனர்…மக்கள் அறிவு பெற இவர்கள் விட மாட்டார்கள்…

   மக்கள் முட்டாள்களாகவே நிலைக்க மதம், டாஸ்மாக், சினிமா, சின்னத்திரை மெகா தொடர் போன்ற போதைகள் இவர்களுக்கு உதவுகின்றன…

 5. ஆகா எம்புட்டு ” பவரு:
  மகிந்தாவுக்கு ராத்திரி
  தஙி சாமி கும்பிட எல்லா செலவும் இந்திய ஆத்தாதான்(னம்ப வரிப்பணம்….)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க