Saturday, February 4, 2023
முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்காதலர்களுக்கு எதிராய் பார்ப்பன - வேளாள - வன்னியக் கூட்டணி!

காதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் கூட்டணி!

-

காதலுக்கு தடை“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் தங்களது கொள்கையை விளக்கி சிறப்புரை ஆற்றிய காடுவெட்டி குரு இவ்வாறு பேசியிருக்கிறார். காடுவெட்டி பேசிய அதே மேடையில் சமூக நீதிப் போராளி மருத்துவர் ராமதாசும் அவரது புத்திரனும் பசுமைப் போராளியுமான அன்புமணி ராமதாசும் அமர்ந்திருந்து காடுவெட்டியின் பேச்சை ரசித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பா.ம.கவைச் சேர்ந்த இளைஞர்கள், காடுவெட்டியின் பேச்சை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர்.

இதற்குச் சில வாரங்கள் முன்பு (15/04/2012) தான், தமிழகத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கரூரில் ஒரு திருமண மண்டபத்தில் கூடிய கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையினர், கலப்புத் திருமண எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்திருந்தனர். அதன் அழைப்பிதழில் சிறப்புப் பேச்சாளராக காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.கே குப்புசாமியின் பெயர் இடம் பெற்றிருந்தது. வேறு சாதியில் திருமணம் முடிப்பதால் கொங்குக் கலாச்சாரம் சீர்கெட்டுப் போய் விடுவதாகவும், பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதால் கொங்கு வேளாளர்களின் நிலவுடைமை பாதிக்கப்படுவதாகவும் மேற்படி கூட்டத்தில் பேசப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பார்ப்பனர் சங்க இதழான பிராமின் டுடே பத்திரிகையில் அதன் தலைவரான நாராயணன், “ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நடைமுறைகளின்படி நீண்டகாலம் கலப்பில்லாமல் உருவாகும் மரபணு சார்ந்தவர்களின் சந்ததியினர்தான் அந்த மரபணுவின் குண நலனை இயல்பாகப் பெறுகிறார்கள். எல்லாமே இதன்மூலம்தான் என்று நாம் சொல்லாவிட்டாலும் சில பிராமண இயல்புகள் இம்மாதிரி தொடர் நிகழ்வின் அடிப்படையில் வலுப்பெறுகின்றன என நம்பத் தயாராகவே உள்ளோம். இறுதியிட்டு உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் சிறிதளவாவது அறிவியல் அங்கீகாரம் பெற்றுவிட்ட இந்த ஒரு விஷயத்திற்காவது கலப்புத் திருமணம் என்னும் விஷப் பரிட்சையிலிருந்து நம் சமூகம் விலகி இருக்கலாமே” என்று திமிர்த்தனமாக எழுதுகிறார்.”.

இந்தக் கூத்துகளெல்லாம் கடந்த நாற்பதாண்டுகளாக சமூக நீதி கோலோச்சும் தமிழகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. சமூக விடுதலையின் அடையாளம் தான் சாதிவாரியான எழுச்சி என்று சொல்லிக் கொண்டு ராமதாஸை தொண்ணூறுகளின் துவக்கத்தில் தலைமேல் தூக்கி வைத்துக் கூத்தாடிய பின்னவீனத்துவ அறிவுஜீவி கும்பலோ சம்பிரதாயமான முணுமுணுப்பைக் கூட வெளிப்படுத்தாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. ராமதாசுக்கு ‘தமிழ்க்குடிதாங்கி’ பட்டமளித்து மகிழ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் இருக்கும் இடமே தெரியவில்லை. பார்ப்பனிய எதிர்ப்பை முன்வைத்த பெரியாரின் வழிவந்தவர்களோ நாராயணனின் திமிர்த்தனமான அறிவிப்புக்கு எந்தவிதமான எதிர்வினையையும் ஆற்றவில்லை.

இது ஒருபக்கமிருக்க, சமீப காலமாக தமிழகத்தில் கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதை நாளேடுகளில் வெளிவரும் செய்திகளின் மூலமே அவதானிக்க முடிகிறது. எவிடென்ஸ் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம்  ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 6,009 பெண் தற்கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 629 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட பெண்களில் 18-30 வயதுடைய பெண்கள் 236 பேர் என்றும், இதில் கணிசமானவை கௌரவக் கொலைகளாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறது.

உள்ளூர் அளவில் போலீசு ஆதிக்கசாதி சார்பாகவே இருக்கிற காரணத்தால், பெரும்பாலான மரணங்களில் முறையான விசாரணையோ, பிரேதப் பரிசோதனையோ செய்யப்படுவதில்லை என்பதால் அனேகமான கௌரவக் கொலைகள் மறைக்கப்பட்டு விடுகின்றது. போலீசு மட்டுமின்றி, அதிகார வர்க்கமும் நீதித் துறையுமே பார்ப்பனர்களாலும் ஆதிக்க சாதியினராலுமே இட்டு நிரப்பட்டிருப்பதாலும் இந்திய அரசின் சிவில் மற்றும் நீதி நிர்வாக இயந்திரங்களின் ஆன்மாவாக பார்ப்பனியமே இருப்பதாலும் குற்றவாளிகள் அனேகமாக தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர்.

காதல் கலப்புத் திருமணங்கள் உண்டாக்கும் இனக்கலப்புகளின் மேல் பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியான வயிற்றெரிச்சல்கள் ஒருபக்கமிருந்தாலும், சமீப காலங்களில் இந்தப் போக்குகள் தீவிரமடைந்திருப்பது கவனத்துக்குரியது. தொழில்வளர்ச்சியின் பரவலும் , சமூகவளர்ச்சிக் குறியீட்டுப் புள்ளிகளும் தமிழகத்தை வடமாநிலங்களில் இருந்து ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு மேம்படுத்திக் காட்டினாலும், பார்ப்பனியக் காட்டுமிராண்டித் தனங்களுக்கு தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதையே இந்தப் புள்ளி விபரங்கள் அறிவிக்கிறது.

பெரியாருக்குப் பின் அவரது வழித்தோன்றல்களான திராவிடக் கம்பெனிகள் இன்று பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைகளை முற்றிலுமாகக் கைகழுவி விட்டு அப்பட்டமாக தரகு அதிகாரவர்க்கமாகத் திரிந்து போய் நிற்கிறார்கள்.  முகவரியில்லாத அரசியல் அநாதைகளாகத் திரிந்து கொண்டிருந்த சிறு சிறு சாதிக் கட்சிகளோடு தேர்தல் கூட்டணி வைத்து அவர்களை வளர்த்து விட்டதோடு தமது செயல்பாடுகளையும் ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்வது என்கிற அளவுக்குச் சுருக்கிக் கொண்டுள்ளனர்.

அதிகரித்து வரும் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு இலக்காகும் சாமானிய மக்களின் கவனம் வர்க்க ரீதியிலான அணிசேர்க்கையை நோக்கிச் செல்வதை சாதிக் கட்சிகள் தடுத்து தம்பக்கம் அணிதிரட்டுவதற்கு முயல்கின்றன.  இன்னொரு பக்கம் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் பலன்களை அறுவடை செய்து புதிய நடுத்தர வர்க்கமாக எழுந்துள்ள ஒரு புதிய பிரிவினரும் பார்ப்பனிய சாதி மனோபாவத்துக்கு இலக்காகி உள்ளனர். ஓரளவுக்குப் படித்து பன்னாட்டுக் கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்து பொருளாதார ரீதியில் ஒப்பீட்டளவில் ஒரு மேம்பட்ட நிலையைப் பெற்று விட்டாலும், சமூகதளத்தில் இவர்களுக்கும் ‘ஆண்ட பரம்பரைப்’ பெருமிதம் தேவையாய் இருக்கிறது.

முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் சாதி ரீதியிலான குழுமங்களில் அதிகளவில் சேர்வது பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகளில் வேலை செய்யும் இளைஞர்கள் தாம். இணையப் பரிச்சயம் உள்ள இவர்கள், சுய சாதியில் பெண் தேடுவதற்கென்றே சாதி வாரியாக வரன்களைத் தேடித் தரும் பிரத்யேக இணையதளங்களும் சமீப காலமாக பெருகி வருகின்றது.

ஆக, தொழில் வளர்ச்சியோ அதன் மூலம் ஏற்படும் பொருளாதார முன்னேற்றமோ சாதி போன்ற பிற்போக்குக் கருத்தியல்களை பலவீனப்படுத்தி விடுவதில்லை. பார்ப்பனியம் தனது வரலாற்றில் மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப புதியவைகளை எப்படி உட்செறித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோ அதே போல இன்றைய தொழில்நுட்பயுகத்தின் சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்து வருகிறது.  அதற்கு பக்கபலமாக அதிகாரவர்க்கமும் ஆளும் வர்க்கமும் இருக்கும் போது, தனது அடித்தளத்தின் மேல் நிகழ்த்தப்படும் கலப்புத் திருமணம் சாதாரண தாக்குதல்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் கொலை வரை செல்லும் துணிவைப் பெறுகின்றது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கவுரவக் கொலைகள் பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனமான எவிடென்ஸ், இதைத் தடுக்க வலுவான சட்டங்கள் தேவை என்கிறது. வேறு என்.ஜி. ஓக்களும் அறிவுஜீவிகளும் கூட இதையே வலியுறுத்துகின்றனர். ஒருவேளை அப்படிப்பட்ட வலுவான சட்டங்கள் இயற்றப்பட்டாலுமே கூட, அதனை அமுல்படுத்தப் போவது பார்ப்பனியமயமான அதிகார வர்க்கத்தின் இயந்திரங்கள் தான் எனும் போது, கிடைக்கப் போகும் நீதியின் யோக்கியதை என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

உத்திரபிரதேசத்தின் டி.ஐ.ஜியான எஸ்.கே மாத்தூர், வெளிப்படையாகவே காதல் திருமணம் புரிந்த பெண்ணின் தந்தையிடம் அப்பெண்ணைக் கௌவரவக் கொலை செய்யத் தூண்டும் விதமாகப் பேசியதற்கு ‘தண்டனையாக’ பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளார். எஸ்.கே மாத்தூரின் பேச்சு பகிரங்கமாக ஊடகங்களில் அம்பலமாகி, பெண்ணிய இயக்கங்கள் போராடியதன் பின் தான் இந்த நடவடிக்கையும் கூட எடுக்கப்பட்டுள்ளது.

ஆக, வெறுமனே வலிமையான சட்டங்கள் இயற்றுவதால் மட்டுமே தீர்ந்து விடக் கூடிய பிரச்சினையல்ல இது. அப்படிப்பட்ட சட்டங்கள் தற்போது இல்லாமலுமில்லை. சமூகத் தளத்திலும் அரசியல் அரங்கிலும் பார்ப்பனியம் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு, அதிகார மட்டத்தில் அதன் செல்வாக்கு வீழ்த்தப்பட்டால் மட்டுமே சாதி வெறியர்களைத் தண்டிக்க முடியும்.

__________________________________________________

தமிழரசன்.
__________________________________________________

  • ஒரு பிரச்சனையும் இல்ல. வன்னிய பெண்ணை தலித் ஆணை மணம் செய்து கொண்டால் உனக்கு என்ன பிரச்னை ?

   • ஏன் முச்லிம் பெண்ணையோ இல்ல ஷ்ரிச்டிஅன் பெண்ணையோ கல்யாணம் பண்ண வேண்டியதுதானே.

  • “”பார்ப்பனர் சங்க இதழான பிராமின் டுடே பத்திரிகையில் அதன் தலைவரான நாராயணன், “ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நடைமுறைகளின்படி நீண்டகாலம் கலப்பில்லாமல் உருவாகும் மரபணு சார்ந்தவர்களின் சந்ததியினர்தான் அந்த மரபணுவின் குண நலனை இயல்பாகப் பெறுகிறார்கள். எல்லாமே இதன்மூலம்தான் என்று நாம் சொல்லாவிட்டாலும் சில பிராமண இயல்புகள் இம்மாதிரி தொடர் நிகழ்வின் அடிப்படையில் வலுப்பெறுகின்றன என நம்பத் தயாராகவே உள்ளோம். இறுதியிட்டு உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் சிறிதளவாவது அறிவியல் அங்கீகாரம் பெற்றுவிட்ட இந்த ஒரு விஷயத்திற்காவது கலப்புத் திருமணம் என்னும் விஷப் பரிட்சையிலிருந்து நம் சமூகம் விலகி இருக்கலாமே” என்று திமிர்த்தனமாக எழுதுகிறார்.”.”

   உங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு ஒருமித்தக் கருத்துக்களை எழுத முயற்சி செய்யுங்கள் திரு.harikumar அவர்களே.

 1. Mr.Vinoth, vinavu does not have anything against vanniar marrying vanniar, but didnt u see what that Guru said? He asked to behead any boy/girl who marries a non-vanniar, is that not a problem to you?

 2. தலைப்பு தவறாக உள்ளது.இது காதலுக்கு எதிரான கூட்டணி இல்லை, தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு எதிரான கூட்டணி ஏனென்றால் இது காதலருக்கு மட்டுமல்ல , நண்பர்களுக்கும் பொருந்தும். நாமக்கல்லில் சென்ற மாதம் நான் பார்த்த ஒரு கூத்து ” கலப்பு திருமணத்தை எதிர்த்து கொங்கு இனத்தின் படித்த இளைஞர்கள் , தன சாதி பெண்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்”. பத்திரிகை நிருபரான என் நண்பன் மூலம் அவர்களிடம் பேசியபோது அவர்கள் உதிர்த்த முத்துக்குள் இதோ “எங்கள் சாதி பண்பாடு (?) எல்லாம் தமிழ் நாட்டிலேயே உயர்ந்தது, சமீப காலமாக , எங்கள் சாதி பொண்ணுகளை , கீழ்சாதி இளைஞர்கள் பொய்கள் சொல்லி , impress பண்ணி brainwash பண்ணி திருமணம் செய்து சொத்துகளை ஏமாற்றி வாங்கி விடுகின்றனர், இந்த அவல நிலையை போக்க படித்த அறிவாளிகளான நாங்கள் எங்கள் சாதி பொண்ணுகளை educate பண்றோம் , awareness கிரியேட் பண்றோம்.” . எனக்கு சிப்பு சிப்பா வந்துச்சு.

  • கோவை சதீஷ் அவர்களே, உங்களுக்கு ஏன் சிரிப்பு, சிரிப்பஆக வந்தது என்று தெரியவில்லை,மன ரீதியாக, அறிவு ரீதியாக வளர்ச்சசியில் சென்று கொண்டிருக்கும் மாணவிகள், அந்த குழநதிகளை, காதல் என்ற மாயை செய்து, அவர்களின் வாழ்க்கை சீரழிக்க துடிக்கும் ஒரு கயவர்களின் கூடத்தின் சதி உங்களுக்கு கண்டிப்பாக தெரியும். அவர்களின் தலைவனின் வழிமுறைகள் தெருபோற்குதலை விட கேவலமானது.மற்ற மனிதனின் தனி உரிமைகளில் தலயிட நீங்கள் யாரு???

 3. வேற ஒண்ணும் சாதிக்க வேணாம் இந்த சாதியில் பொறந்துட்டாலே போதும் மத்த சாதியை விட நீ உயர்ந்தவன் என்ற ஒரு மிக மிக முட்டாள் தனமான கருத்து ஒருவனை மற்றவரை விட உயர்ந்தவனாய் உணர வைப்பதும்,அதில் மயங்கி கிடப்பதும் அந்த மப்பு பறிபோய் விடாமல் இருக்க சக மனிதனை கொலை செய்வதும்,வெட்கம்.. வெட்கம்…மிக மிக கேவலம்.இதை எல்லாம் திருத்த வேண்டிய சூழ்நிலையில் சுதந்திர நாடு, ஜனநாயகம், 21 ஆம் நூற்றாண்டு,வல்லரசு விஞ்ஞான வளர்ச்சி போன்ற வார்த்தைகளை கேட்கும் போது அடச்சே ன்னு இருக்குங்க தோழர்

 4. இது போதாது என்று அருள் என்ற (அருள் கிரீன்) ராமதாசின் ராமதாஸ் ஏதோ தமிழ் கூறும் நல்லுலகை காக்க வந்த தேவ ரட்சகன் போல் பிரச்சாரம் பண்ணி கொண்டு இருக்கிறார்.

 5. சொந்தச் சாதியில் பெண் எடுத்தவன் எத்தனை பேர் தனது மனைவியை துன்புறுத்தாமல் இருக்கிறான்? மிக சொற்பமே! அயோக்கியர்களைத்தான் நான் அதிகமாக பார்த்திருக்கிறேன். இந்த லட்சணத்தில் கலப்புத்திருமணம் கூடாதாம். கலப்புத் திருமணம் செய்தவர்களில் ஆகப்பெரும்பான்மையோர் தனது மனைவியை அதிகம் துன்புறுத்துவதில்லை. கலப்புத் திருமணம் கூடாதென்பது கடைந்தெடுத்த பார்ப்பனியமே. இதோ பார்ப்பனர்கள் சொல்வதைக் கேளுங்கள்

  பிராமணர்கள் சொல்கிறார்கள்,

  “சமீபத்திய உலகமயமாக்கல் மற்றும் கணினிமயமாக்குதல் (IT Revolution) காரணமாக மாபெரும் கலாச்சார சீரழிவு அனைத்து சமூகங்களையும் பாதித்தாலும் நமது பிராமண சமூகத்தை மிகப்பெரும் அளவில் பாதித்துள்ளது. இதன் விளைவாக பல பிராமண சமூகப் பெண்களும், சில பிராமண சமூக ஆண்களும் கலப்புத் திருமணம் செய்து கொள்வது பெருகி வருகின்றது. கலப்புத் திருமணம் நமது பிராமண பாரம்பரியத்தை வேரறுக்கச் செய்திடும்.

  உலக மயமாக்களால் தனியார் மயம் – தாராள மயக் கொள்கைகள் அமுலுக்கு வந்ததால் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். விவசாயம் நொடிந்து போய் லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படார்கள். சிறு தொழில், சிறு வணிகம் உள்ளிட்ட உள்நாட்டுத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.பன்னாட்டுக் கம்பெனிகள் இந்நாட்டைக் கொள்ளையடிக்க கதவுகள் திறக்கப்பட்டதால் உள்நாட்டுத் தொழில் நலிவடைந்தது.உலகமயமாக்கலின் விளைவால் இன்று கோடிக் கணக்கானோரின் வாழ்வு கேள்விக்குரியதாகிவிட்டது. இதெல்லாம் நமக்குக் கவலை அளிக்கிறது‘‘.

  ஆனால் அவாளுக்கு கலப்புத் திருமணங்கள் பெருகிவிட்டதே என்கிற கவலை.
  பிராமண பாரம்பரியத்தை காதல் திருமணங்கள் வேரறுக்கச் செய்து விடுமாம். அதனால் பிராமணர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளக் கூடாதாம். உலக மயத்தால் சமூகம் சீரழிகிறது, காதல் திருமணங்கள் அதிகரிக்கிறது, பிராமணியம் அழிகிறது என்றால் உலக மயத்தையல்லவா பிராமணர்கள் எதிர்க்க வேண்டும். அவன் பேண்டதைத் இவன் தின்பானாம். ஆனால் ‘நோய்’ மட்டும் வரக்கூடாதாம் என்பது போல இருக்கிறது இவாளின் கவலை.

  “பிறவியிலே மிகச் சிறந்த பிறவியான மனிதப் பிறவியில் அதிலும் புண்ணிய பாரத தேசத்தில், மேலும் குறிப்பாக ரிஷிவர்க்கமாக பிராமணத் தாயார், தகப்பனாருக்குப் பெண்ணாக / பிள்ளையாக பிறந்த நான் எனது வாழ்நாள் முழுவதும் பிராமண பாரம்பரியத்தை கடைப்பிடிப்பேன்.”
  “எதிர்காலத்தில் என்னுடைய கணவர் / மனைவி பிராமண சமூகத்தினராகவே இருந்திடுவார். அதாவது வேறு ஜாதியினரை, வேறு மதத்தினரை கலப்புத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனது குடும்பப் பெரியவர்கள் மத்தியில் / ஸ்வாமி சந்நிதியில் / தாம்ப்ராஸ் நடத்துகின்ற சத்யப்ரமாண நிகழ்ச்சியில் நான் இந்த சத்யப் பிரமாணத்தை எடுத்துக் கொள்கின்றேன்.”

  என்று பிராமணப் பெண்களும் பையன்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டுமாம்.

  “நடந்தவகைள் நடந்தவைகளாக இருக்கட்டும்!
  இனி நடக்க இருப்பவை நம்மவைகளாக மட்டுமே இருக்கட்டும்!!”

  என நம்பிக்கை வைத்து அந்த அறிவிப்பை முடித்துள்ளார்கள்.

  *****

  தனுஷின் கொலவெறியும் தம்ராஸின் கவலையும்!

  http://hooraan.blogspot.in/2012/02/blog-post_26.html

 6. Ooran,

  Iyer ayyangar ellam british kaalathula vantha peru.real classification based on genetic detail is vadama,brahacharanam,vathima,choziya,kurukkal and all that.

  The spiritual classification is smartha,vaishnava.

  And Dhanush is nothing,that girl married dhanush and hence she belongs to his caste and that girl herself is not a brahmin,she belongs to her father’s caste.

  And Iyengar,Iyer can inter marry,not a problem.

  • “And Dhanush is nothing,that girl married dhanush and hence she belongs to his caste and that girl herself is not a brahmin,she belongs to her father’s caste.”

   “தனுஷின் கொலவெறியும் தம்ராஸின் கவலையும்!” என்கிற தலைப்பில் வெளியான பதிவு வேறு கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. மேற்கண்ட தங்களின் மேற்கோள்படி அல்ல.

 7. தமிழ்நாட்டில் தமிழகத்தில் சாதியையும் சாதி உணர்வையும் இயக்கங்களால் ஒழிக்க முடியாது. தமிழகத்தில் சாதியையும் சாதி உணர்வையும் இயக்கங்களால் ஒழிக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்துவமான கலாச்சாரம், தெய்வங்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியன உள்ளன. ஒருவரின் உணவுப்பழக்கத்தை கூட சாதி தான் தீர்மானிக்கிறது. அது மட்டுமல்லாமல் தங்களுக்கென ஆண்ட வரலாறும் அடிமைப்பட்ட அல்லது அடிமைப்படுகிற வரலாறும் உள்ளதாக ஒவ்வொரு சாதியினரும் நம்புகிறார்கள். தாழ்த்தப்பட்ட சாதிகள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. சாதி இருக்கிறது என்று சொல்பவர்களை விடவும் சாதி இல்லை என்று சொல்பவர்கள் (குறிப்பாக தி.க, பெரியார் தி.க போன்றவர்கள்) தான் மோசமானவர்கள். அவர்களிடம் தான் நாம் உஷாராக இருக்க வேண்டும் என தாழ்த்தப்பட்ட மக்கள் நினைக்கிறார்கள். ஆகவே சமூக நோக்கம் கொண்ட இயக்கங்கள் சாதிகளுக்கிடையே சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பேண உழைக்க வேண்டும். சாதி ஒழிப்பை காலம் பார்த்துக்கொள்ளும்.

  • நமக்கு தெரிந்து முப்பது கோடி முகமுடையாள் என்று வெள்ளைக்காரன் எடுத்த சென்செசை வைத்து பாரதி பாடியிருக்கிறான்.அப்ப தமிழ் மக்கள் தொகை ஒரு இருபது முப்பது லட்சமாய் இருந்திருக்கும்,அதில் எல்லா சாதியையும் வெறும் நூறுகளிலும் ஆயிரங்களிலுமே இருந்திருக்கும். சத்தியமாய் கஞ்சிக்கு செத்த பிக்காளியாய் தான் இருந்திருக்கிறான் வறுமை பஞ்சம் அறியாமை ஆகியவற்றில் அடிபட்டு இவர்கள் வாழ்ந்த முறைகளை ராபர்ட் கிளைவ் அப்படியே படம் பிடித்தது போல் எழுதி இருக்கிறார்.சுதந்திரத்திற்கு பிறகு வலுத்தவன் இளைச்சவனை அழித்து வாழ்ந்தது கண்கூடு.கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கலாசாரம் பண்பாடு பழக்க வழக்கம்—–ன்னு எல்லாம் எப்படி பேசுறோம்…

 8. எப்படியோ தன் இனத்துப் பெண்களைக் கேவலமாக அவர்களே சித்தரிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட ஆண்களைப் பார்த்து மதி மயங்குவதாக அவர்களே சொல்லிக்கொள்ளவது கேவலமாக இல்லை? எந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சோ்ந்த எந்த இளைஞனும் சொத்துக்காக பெண்ணைக் காதலிப்பதும் இல்லை.. கர்ப்பமாக்கி விட்டு ஒடுவதுமில்லை. இந்தக் குணம் எல்லாம் நிலவுடைமை சாதிக்கு மட்டுமே உண்டு. சொத்தில் தங்கைக்குப் பங்கு தரவேண்டும் என்ற கவலையுடன் பார்க்கும் இளைஞனின் தங்கைக்கும் வரதட்சனைத் துன்புறுத்தலைப் பார்க்கும் அனுபவிக்கும் பெண்களுக்கும் உழைப்பை மட்டுமே நம்பும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது இயல்பாகவே ஈர்ப்பு வரத்தான் செய்யும். தன் இன பெண்கள் சாதி கடந்து திருமணம் செய்யக்கூடாது என்று நினைக்கும் இளைஞர்கள் முதலில் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களைச் சுதந்திரமாக செயல்படுவதைத் தடுக்கக்கூடாது.

 9. I don’t find difference between this article and Guru’s speech. You too induce public against a particular community. You are all blood sucker in the name of community.

 10. Nobody is against true love.but now a days pseudo love with hidden agenda against some communities happens. Y cant the so called anti caste people can preach for inter religion maariage?if they r sincere in society reform.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க