privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர்கள்!

ஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர்கள்!

-

கிங்பிஷர்
கிங்பிஷர் ஊழியர் போராட்டம்

நோய்டாவில் நடக்கவிருக்கும் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள வரும் விஜய் மல்லையாவுக்கு எதிராக கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

2007-ம் ஆண்டு விஜய் மல்லையா டச்சு முதலாளி மைக்கேல் மோல் உடன் சேர்ந்து 90 மில்லியன் யூரோ (சுமார் ரூ 630 கோடி) விலை கொடுத்து பார்முலா ஒன் கார் பந்தய அணியான ஸ்பைகர் F1ஐ விலைக்கு வாங்கியிருந்தார். போர்ஸ் ஒன் என்ற பெயருடன் அந்த அணி 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ போட்டியில் களமிறங்கியது.

2011ம் ஆண்டு இன்னொரு இந்திய கார்ப்பரேட் சகாரா இந்தியாவுக்கு 42.5 சதவீதம் பங்குகளை விற்று விட்டார் மல்லையா. அதைத் தொடர்ந்து அந்த  அணி சஹாரா போர்ஸ் ஒன் என்று அழைக்கப்படுகிறது. இந்த கார் பந்தய அணியை பராமரிக்க ஆண்டுக்கு $120 மில்லியன் (ரூ 650 கோடி) தேவைப்படுகிறது என்று பார்முலா ஒன், பந்தய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் கிராண்ட்-பிரி போட்டியில் சகாரா போர்ஸ் ஒன் அணியும் கலந்து கொள்ளவிருக்கிறது.

கிங் பிஷர் ஏர்லைன்சில் பணி புரியும் 7,000 ஊழியர்களுக்கு 7 மாதம் சம்பள பாக்கி வைத்திருக்கும் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே லாக்அவுட் அறிவித்திருந்தது. கிங் பிஷர் நிறுவனத்துக்கு வங்கிகள் கடனாகக் கொடுத்த ரூ 7,500 கோடியையும் ஆட்டையைப் போட்டிருக்கிறார் விஜய் மல்லையா.

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 20, 2012) மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், கிங் பிஷரின் உரிமத்தை ரத்து செய்திருந்தது. “உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் முடிவு தாமதமாக வந்திருக்கிறது” என்கிறார் ஏர் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குனர். “உரிமத்தை தற்காலிகமாக முடக்குவதன் மூலம் விஜய் மல்லையாவுக்கு அரசாங்கம் உதவி செய்திருக்கிறது. 7,000 ஊழியர்களின் நலன்களையும், ரூ 7,500 கோடி பொதுப் பணத்தையும் பாதுகாக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்கிறார் அவர்.

இந்தத் தருணத்தில் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா லண்டனில் அரை நிர்வாண மாடல்களை வைத்து கிங்பிஷர் காலண்டருக்கான புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். மல்லையா கார் பந்தய அணிக்கு ஆதரவாக கொடியாட்ட வந்திருக்கிறார்.

கிங்பிஷர் ஊழியர்கள் இது வரை யூனியன் எதுவும் அமைக்கவில்லை. ஆனால், “போராடுவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?” என்று கேட்கிறார் ஒரு பெண் ஊழியர். “நாங்கள் அனைவரும் மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் போது அப்பாவும் மகனும் தமது ஆடம்பர வாழ்க்கை முறையை கவலையில்லாமல் தொடர்கிறார்கள்” என்கிறார் அவர்.

‘நெருக்கடி கொடுத்தால் ஒழிய நிறுவனம் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை’ என்று ஊழியர்கள் கருதுகிறார்கள்.

மக்களின் சேமிப்புப் பணத்தை வங்கிக் கடன் என்ற பெயரில் கொள்ளை அடித்து விட்டு, வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து விட்டு, கொள்ளை அடித்த பணத்திலிருந்து கார் பந்தயம், ஆபாச காலண்டர் தயாரிப்பு என்று கூத்தடிக்கும் மல்லையா அப்பா/மகன் கிரிமினல்களை இன்றைய ஆளும் அமைப்பு தண்டிக்கப் போவதில்லை என்பது தெளிவு.

படிக்க: