privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஹுண்டாய் தொழிலாளர் போராட்டம் வெல்க!

ஹுண்டாய் தொழிலாளர் போராட்டம் வெல்க!

-

சென்னையிலுள்ள ஹுண்டாய் ஆலையில் கடந்த வாரமஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பான்மையான நிரந்தரத்தொழிலாளர்கள் சி.பி.எம் மின் ஹுண்டாய் மோட்டார் யூனியன் (HMU) சங்கத்தில் உள்ளனர்.

ஹுண்டாயில் மொத்தம் பதினோராயிரத்து ஐநூறு தொழிலாளிகள் பணிபுரிகிறார்கள்.  அதில் வெறும் ஆயிரத்து ஐநூறு பேர் மட்டுமே  நிரந்தரத் தொழிலாளிகள். மிச்சமுள்ளவர்கள் அனைவரும் தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள். ஹுண்டாயின் கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக இந்த தொழிலாளர்கள் கடந்து பத்தாண்டுகளாக நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்தியுள்ளனர்.  ஆனால் அனைத்து போராட்டங்களும் சங்கத்தின் பலவீனம் காரணமாக நிர்வாகத்தால் முறியடிக்கப்பட்டது.

தொழிலாளிகள் ஒன்றாக இணைந்துவிடக்கூடாது என்பதற்காக நிர்வாகம் பல்வேறு சதிவேலைகளில் ஈடுபடுகிறது. தொழிலாளிகள் மத்தியிலேயே கருங்காலிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. மற்றொரு புறம் தொழிலாளிகளும் அரசியல் புரிதலோடு ஒரே சங்கத்தின் கீழ் இணையாமல் பாட்டாளி வர்க்க கண்ணோட்டமின்றி பல்வேறு துரோகச் சங்கங்களில் பிளவுபட்டுள்ளனர். ஆலையிலுள்ள சங்கங்களில் நிர்வாகத்தின் சங்கமும் ஒன்று. மேலும் அது மட்டும் தான் அங்கீகரிக்கப்பட்ட சங்கமும் ஆகும்.  அந்த கைக்கூலி சங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் அடிமை மனோபாவத்தோடு இணைந்திருக்கிறார்கள்.

பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்யும் இவ்வாலையில் தொழிலாளர்கள் சம்பந்தமாக நிர்வாகம் என்ன பேசுவதாக இருந்தாலும் சில நூறு பேரை கொண்ட தனது அடிவருடி சங்கத்தோடு தான் பேசும். தற்போது நிரந்தரத் தொழிலாளர்கள் போராடுவதற்கு காரணம் என்னவென்றால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் அமைப்பாக திரண்டிருக்கும் பிற சங்கங்களிடம் கலந்தாலோசிக்காமல், நிர்வாகத்திடம் சோரம் போன கருங்காலிகளை உறுப்பினர்களாக கொண்ட சங்கத்தோடு மட்டும் நிர்வாகம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டிருக்கிறது. இதை கண்டித்தும், இதற்கு முன்பு வேலை நீக்கம் செய்யப்பட்ட இருபத்தி ஏழு நிரந்தரத்தொழிலாளிகளை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தியும், தமது சங்கத்தை அங்கீகரிக்க வலியுறுத்தியும் தான் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்த வேலை நிறுத்தம் எப்படி நடக்கிறது ?  தொழிலாளிகள் ஆலைக்கு உள்ளேயும் இல்லை,  ஆலைக்கு வெளியேயும் இல்லை ! இதற்கு முன்பாவது ஆலையின் வாயிலில் பந்தல் போட்டு அமர்ந்திருப்பார்கள். தற்போது அதற்கும் அனுமதி இல்லை. திருப்பெதும்புதூர், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளில் இது போன்ற போராட்டங்களை நடத்த புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளது !

இந்த போராட்டத்திற்கு முன்பு இதே ஆலையைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளிகள் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு போராட்டத்தை நடத்தினர். அவர்கள் அனைவரும் டி.வி.எஸ் லாஜிஸ்டிக்கால் ஹுண்டாய்க்கு சப்ளை செய்யப்படுகின்ற ஒப்பந்தத் தொழிலாளிகள். அவர்கள் போராடிய போது  தற்போது போராடுகின்ற நிரத்தரத் தொழிலாளர்கள் அவர்களுக்கு பெயரளவில் ஆதரவு தெரிவித்துவிட்டு உள்ளே சென்று உற்பத்தியை தொடர்ந்தார்கள். இப்போது நிரந்தரத் தொழிலாளிகள் போராடுகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளிகளோ உள்ளே இருக்கிறார்கள். அவர்களுடைய செயல் சரியானது அல்ல என்பது ஒரு புறம் இருக்கட்டும். அன்று ஒப்பந்தத் தொழிலாளிகள் போராடிக் கொண்டிருந்த போது நிரந்தரத் தொழிலாளிகளும் ஆலைக்குள் செல்லாமல் உற்பத்தியை நிறுத்திவிட்டு அவர்களுடைய போராட்டப் பந்தலில் அமர்ந்திருந்தால் இன்று ஒப்பந்தத் தொழிலாளிகள் உள்ளே இருந்திருக்க மாட்டார்கள்.

இருவரையும் சுரண்டுவது ஒரே முதலாளி, இரு பிரிவு தொழிலாளிகள் எதிர்த்து போராடுவதும் ஒரே முதலாளியை தான் என்கிற போது இருவருடைய போராட்டத்தையும் தனித்தனியே நடத்துமாறு சொல்லிக்கொடுப்பது யார் ?  அது யார் என்பதையும், அது சரியா என்பதையும் இரு பிரிவு தொழிலாளர்களும் தான் யோசிக்க வேண்டும். அவ்வாறு பரிசீலித்து தமக்குள் ஒரே வர்க்கமாக இணையும் போது தொழிலாளி வர்க்கத்தால் ஹுண்டாயை மண்டியிட வைக்க முடியும். மாறாக தனித்தனியே பிரிந்து கிடக்கும் வரை கூடுதலான ஒடுக்குமுறையும்,சுரண்டலும், கருகாலி சங்கங்களும் தான் வளரும். ஆனால் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கத்தை பிரித்து வைத்திருக்கும் நிர்வாகத்தையும் துரோக சங்கங்களின் தலைமையையும் தகர்த்தெரிந்துவிட்டு தொழிலாளி வர்க்கம் ஒன்று சேர்ந்தே தீரும்.

  1. ஆகா… அச்சரா…. அடுத்து இங்கத்தான் போராட்டமா… பாவம் பு.ஜ.க பசங்க உண்ட கட்டி வாங்க ரெடியாகவேண்டியது தான்… சூப்பரு…

    • ஏம்பா இந்தியா நீ எங்க வேலை பார்க்குர, அல்லது நீ முதலாளியா? உழைப்பு சுரண்டல்னா என்னன்னே தெரியாதா உமக்கு

    • தொழிலாளி என்றால்
      வேறு யாரோ போல் நினைக்கிறாய்!

      நடை, உடை, பாவனை
      நவீன முகப்பூச்சு,
      பன்னாட்டு குளிர்பானம் உதட்டில்
      பாதிகிழிந்து தொங்கும் ஆங்கிலம் நாக்கில்.

      ஒப்பனைகள் எதுவாயினும்
      உன் வர்க்கம் பார்த்து
      தொழிலாளர் விடுதலை பற்றி
      ஒரு துண்டறிக்கை தரவந்தால்,

      வெட்டிப்பேசி, விலகி நடந்து
      ஏதோ ஒரு முதலாளி போல்
      நீ என்னமாய் நடிக்கிறாய்?

      கையில் கணிணி
      கனமான சம்பளம்
      வார இறுதியில் கும்மாளம்
      வசதியான சொகுசு கார்…
      அதனால், அதனால் நீ என்ன
      அம்பானி வகையறாவா?

      அடுத்த வேலை என்னாகுமோ?
      கிடைத்த வேலை நிரந்தரமோ?
      என எப்போதும் பயத்தில்
      ஏ.சி. அறையில் கூலியுழைப்பால்
      ஜில்லிட்டுக் கிடக்கும் உன் இதயத்தைக் கேள்!
      சொல்லும்… நீயும் ஒரு தொழிலாளிதான்!

      காதலுணர்வை
      வெளிப்படுத்துவதை விட மேலானது
      வர்க்க உணர்வை வெளிப்படுத்துவது!
      அதை வெளிப்படுத்தி
      வீதியில் போராடும் தொழிலாளரை
      வேறு யாரோ போலவும்,
      நீ வேறு வர்க்கம் போலவும்
      செங்கொடி பார்த்து முகம் சுழிக்கும்
      உன் செய்கையில் ஏதும் பொருளுள்ளதா?

      எந்த விலையுயர்ந்த சென்ட் அடித்தாலும்…
      எத்தனை உடைகள் மாற்றினாலும்…
      எவ்வளவு கசந்தாலும்… இதுதான் உண்மை.

      கூலிக்கு உழைப்பை விற்று
      காலத்தை நகர்த்தும் கண்மணியே…
      நிச்சயம் நீயும் ஒரு தொழிலாளிதான்!

      உணர்ச்சியற்ற தோல்
      தொழுநோயின் அறிகுறி..
      உணர்ச்சியுடன் போராடுதலே
      தொழிலாளி வர்க்கத்தின் அறிகுறி.
      இதில் எது நீ அறிவாயா?

      உனக்கொன்று தெரியுமா!
      உலகியலின் உயர்ந்த அறிவு
      பாட்டாளி வர்க்க அறிவு,
      மனித குலத்தின் உயரிய உணர்ச்சி
      பாட்டாளி வர்க்க உணர்ச்சி.

      இளைஞனே.. உணர்ந்திடு!
      தருணத்தை இப்போது தவறவிடில்
      வேறெப்போது பெறுவாய் வர்க்க உணர்வு.

      • துரை. சண்முகம்

  2. சி பி எம் சஙகம் இருக்கும் வரை மூதலாலிகளூக்கு பயமில்லை.வாழ்க சி ஐ டி யு .வளர்க துரொகம் !

  3. ஹுண்டாய் கார்பரேட் கம்பெனி இன் சுருண்டளுக்கு எதுராக போராடும் தொழிலாளர்கள் ஹுண்டாய் முதலாளியை மண்டியிடவைக்க கூறியிருக்கும் ஆலோசனை நல்லது ….துரோக தொழில்சங்கத்தை தூக்கியெறிந்து ஒரேவர்க்கமாக அணிதிரளவேண்டும் அப்போதுதான் வெற்றிநிசியம்.

  4. தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வெல்லட்டும் ..
    தனிமனித லாப வெறிக்கு எந்த தொழிலாளியும் அடிமையாககூடது .நிரந்தர வேலை நிறுத்த போராட்டதுக்குகாக கழகம் செய்யும் தோழர்களுக்கு உறுதுணையாக இருப்போம் …

  5. இன்று பிள்வு பட்டு இருப்பது உண்மைதான். சரியன வழிகட்டுதலும் தலைமையும் அனுபவமும் அவர்களை ஒன்று சேர்க்கும். காலம் எக்காலும் தொழிலாளார் பக்கம்தான். வெற்றி அவர்களுக்குத்தான்.

  6. ஊப்புக்கல்லை வைரம் என்று சொன்னால்- அதை
    ஒப்புகொள்ளும் மூடருக்கு முன்னால் -நாம்
    ஒளறி என்ன கதறி என்ன
    ஒன்னும்மே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா……..

  7. இத்தொழிலாளர்கள் வேலையை விட்டு விட்டு தமது திறமைக்குத் தகுந்த மதிப்பளிக்கும் வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும். அல்லது தம் வீட்டிலிருந்தே கைத்தொழிலாக கார் தயாரித்து ஹுண்டாய் கம்பனியுடன் போட்டியிட வேண்டும். அப்போது தான் இந்த முதலாளிகளுக்கு புத்தி வரும்.

      • சுனாமிலேர்ந்து சுண்டைக்காய் பஞ்சம் வரை அனைத்து பிரச்சனைக்கும் பாப்பானையே திட்டிட்டு இருந்தா இப்படித்தான் வக்கிரமா கருத்து சொல்ல தோணும். அது சரி. கிண்டலை விட்டு விட்டு ஒரு சீரியசான கேள்வி. ஹுண்டாய் கம்பனி மட்டும் தொழிலாளர்களை சார்ந்திருப்பது போல் எழுதினால் எப்படி. தொழிலாளர்களும் கம்பனியை சார்ந்திருக்கவில்லையா?

  8. இடத்தை கொடுத்தா மடத்தை புடிப்பீங்க போல ?
    அவனவன் என்ன இந்தியா வளரணும் , சென்னைல உள்ளவனுக்கு வேலை கொடுக்கவா இங்கவந்து கார் கடை வெச்சான் , உட்டா ஹயுண்டாய் கோவணத்தையே உருவீட்டி உட்டுருவீங்க போல இருக்கே .

Leave a Reply to venkatesan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க