Wednesday, December 11, 2024
முகப்புசெய்திபுதிய ஜனநாயகம் – நவம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய-ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

1. கொத்தடிமைக் கூடாரம்!
சிதார் குழுமம் தொழிலாளிகளின் மீது ஏவிவிட்டு வரும் சட்டவிரோத அடக்குமுறைகளை ஜான்சன் டேவிட்டின் தற்கொலை அம்பலப்படுத்தி விட்டது.

2.ஊழல் எதிர்ப்பு: மேதாவிகளின் நிழல் யுத்தம்!

3. என்ன செய்கின்றன போலீசும் உளவுத்துறையும்?
அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் மக்கள் மீது பாயும் போலீசு மக்கள் விரோதிகளோடு கூடிக்குலாவி வருகிறது.

4. மக்களின் சேமிப்புக்கு வந்தது ஆபத்து!
காப்பீடு-ஓய்வூதியத் துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதிப்பது முதலுக்கே மோசம் விளைவிக்கக் கூடியதாகும்.

5. தனியார்மய-தாராளமய எதிர்ப்பு: தீர்வுக்கான திசை எது?
தனியார்மய-தாராளமயத்துக்கு ஏற்ப கட்டியமைக்கப்பட்டுள்ள இன்றைய அரசியலமைப்பு மூலம் இக்கொள்கைகளை மாற்றியமைக்க முடியாது.

6. விஞ்சி நிற்கும் அடிமை தா.பா.வா? ஓ.ப.வா?
வார்த்தைகளால் அம்மாவுக்கு சலாம் போடும் வித்தையில் தா.பா.வை ஓ.ப.வால் வெல்ல முடியாது.

7. இடம்பெயரும் தொழிலாளர்கள்: இனவெறியர்களின் பீதியூட்டலும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியமும்!
உள்ளூர் மக்களுக்கும்- தொழிலாளர்களுக்கும் இடம்பெயரும் தொழிலாளர்கள் எதிரி அல்ல; ஏகாதிபத்திய உலகமயமாக்கமே முதன்மை எதிரி.

8. உச்சநீதிமன்றம்: கார்ப்பரேட் கொள்ளையர்களின் காவல்காரன்!
உச்சநீதிமன்றம் ஊழல் விவகாரங்களில் உள்நோக்கத்தோடும் ஒருதலைப்பட்சமாகவும் நடந்து வருகிறது.

9. தனியார்மயத்துக்கு ஜே! உடன்பிறந்த ஊழலுக்கு ஜே! ஜே!

10. பிணந்தின்னிகள்!
விவசாயிகள் தற்கொலைச் சாவுகள் நடந்துவரும் மகாராஷ்டிராவில் அம்பலமாகியுள்ள நீர்ப்பாசன ஊழல், ஓட்டுக்கட்சிகள் கீழ்த்தரமான வக்கிரபுத்திக்கு எடுத்துக்காட்டு.

11. சட்டிஸ்கர்-பழங்குடியினர் படுகொலை: உண்மைக்குக் குழிவெட்டும் அரசு!

12. “ஆதிக்க சாதிவெறியர்களைக் கைது செய்!” – மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம்!

13. அரியானா: நாட்டின் அவமானச் சின்னம்!
அரியானாவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது ஆதிக்க சாதிவெறிக் கும்பல் ஏவிவிடும் பாலியல் வல்லுறவுத் தாக்குதல்களைப் பத்தோடு பதினொன்றாக நீர்த்துப் போகச் செய்ய காங். அரசு முயல்கிறது.

14. “வளர்ச்சி”யின் வன்முறை!
சென்னை நகரின் அடிக்கட்டுமான வளர்ச்சிக்காக, குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நகருக்கு வெளியே வீசியெறியப்படுகிறார்கள்.

15. மாதம் பதினைந்து ரூபாய்தான் சம்பளம்! கர்நாடகா மாநில அரசின் அடாவடி-அற்பத்தனம்!!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க