Saturday, April 17, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா பாலஸ்தீனில் தொடரும் இஸ்ரேலிய பயங்கரவாதம்!

பாலஸ்தீனில் தொடரும் இஸ்ரேலிய பயங்கரவாதம்!

-

காசா

பயங்கரவாத நாடான இஸ்ரேல், பாலஸ்தீனியர்களின் சுயாட்சி பகுதியான காஸாவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஹமாஸ் இராணுவத் தலைவரான அகமத் அல் ஜபாரியை கொலை செய்திருக்கிறது.

‘அடுத்தக் கட்ட தாக்குதல்களுக்காக தரைப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் ஏவுகணை தாக்குதல் விரிவான தாக்குதல்களுக்கான முன் தயாரிப்புதான்’ என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய கடற்படையின் போர்க்கப்பல்கள் காஸா பகுதி மீது குண்டு வீச்சு நடத்தியிருக்கின்றன.

இந்தத் தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக இந்தத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக இஸ்ரேலின் முன்னணி நாளிதழ் ஹாரெட்ஸ் கூறுகிறது. ‘தேர்தலுக்கு முன்பு தன்னை உறுதியானவராகக் காட்டிக் கொள்ள நெதன்யாகு தாக்குதல்களுக்கு உத்தரவிடுவார்’ என்று அந்த நாளிதழ் திங்கள் கிழமை கணித்திருந்தது.

அமைதி பேச்சு வார்த்தைகளை வேண்டுமென்றே இழுத்தடிக்கும் இஸ்ரேலின் போக்கினால் வெறுப்படைந்த பாலஸ்தீனிய ஆணையம், நவம்பர் 29-ம் தேதி ஐநாவில் பார்வையாளர் அந்தஸ்துக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருக்கிறது. 1967 போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்குக்கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதற்கான முதல் நடவடிக்கையாக அது இருக்கும். அதைத் தடுப்பதற்காக இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

‘அமைதி’க்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். பிரதமர் நெதன்யாகுவிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி ‘இஸ்ரேலிய அரசின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்’ என்று உறுதியளித்திருக்கிறார்.

இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து எகிப்து இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்ப அழைத்திருக்கிறது. ‘இந்த பயங்கரவாத தாக்குதலை ஐநா சபையில் விவாதிக்க வேண்டும்’ என்று கோரியிருக்கிறது. எகிப்து நாட்டில் இஸ்ரேலுடன் நட்பாக இருந்த அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் ஹோஸ்னி முபாரக் அரசு சென்ற ஆண்டு பிப்ரவரியில் வீழ்த்தப்பட்டது. இப்போது ஹமாஸ் அமைப்புடன் நெருக்கம் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சியில் உள்ளன.

ஈரானிய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் இந்த தாக்குதல்களை கண்டித்திருக்கிறார்.

பாலஸ்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமித்து தனது நாட்டை உருவாக்கிக் கொண்ட இஸ்ரேல், மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீனியர்களின் உரிமைகளை மறுப்பதோடு, அவர்களின் போராட்டங்களை கொடூரமாக ஒடுக்கி வருகிறது. லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களை சொந்த நாட்டிலேயே கைதிகளாக சிறை வைத்து பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் கொடுமைப் படுத்தி வருகிறது.

பேச்சு வார்த்தை மூலம் சமாதானத்துக்கு முயற்சித்தவர்களையும் இசுரேலின் பயங்கரவாதத்திற்கு எதிர்வினையாக தோன்றிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களையும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்களையும் கொலை செய்து வருகிறது இஸ்ரேல். 2008-ம் ஆண்டு இறுதியில் பாலஸ்தீன பகுதிகள் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் மூலம் 1,400 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்தது.பயங்கரவாத நாடான இஸ்ரேல், உலக தாதாவான அமெரிக்காவின் நிழலில் நின்று கொண்டு இப்போது இன்னும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

படிக்க:

 1. “பாலஸ்தீனில் தொடரும் இஸ்ரேலிய பயங்கரவாதம்!” – வினவு

  http://www.kodangi.com/2012/11/israel-hammers-gaza-with-airstrikes-warns-of-ground-operation.html

  “காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது ஏன் : கொல்லப்பட்டார் முக்கியத் தீவிரவாதி”

  😀

  • “காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது ஏன் : கொல்லப்பட்டார் முக்கியத் தீவிரவாதி”

   1947க்கு முன் நேதாஜி ஒரு “முக்கியத் தீவிரவாதி.”

   1947க்கு பின் நேதாஜி ஒரு ” தேசிய தலைவர்.”

   :-))

   • See the difference

    1947க்கு முன் நேதாஜி ஒரு “முக்கியத் தீவிரவாதி.” For England

    1947க்கு பின் நேதாஜி ஒரு ” தேசிய தலைவர்.” For England

    • See the difference

     1947க்கு முன் நேதாஜி ஒரு “முக்கியத் தீவிரவாதி.” For England

     1947க்கு பின் நேதாஜி ஒரு ” தேசிய தலைவர்.” For India

 2. இந்த கொடுமைகளை எதிர்த்து அந்த மக்கள் போராடினால் அவர்களுக்கு மேற்குலக, யூத, ஆரிய மீடியாக்கள் வைத்திருக்கும் பெயர் இஸ்லாமிய பயங்கரவாதிகள். அவர்களின் நியாயமான போராட்டத்தில் கொல்லப்படும் எதிரிகளின் ஒற்றை இலக்க உயிர்கள் மதிப்பில்லாதவை. அமேரிக்கா மற்றும் உலகமே அதை கடுமையாக கண்டிக்கும். கொந்தளிக்கும். இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒன்றுப்பட்டு அளிப்போம் என்றுகொக்கரிக்கும்.இதையே அமேரிக்கா இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் தன உரிமைகளுக்காக போராடிய இஸ்லாமிய மக்களை லட்சக்கனக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொன்று குவித்தால் அவர்களின் உயிர் மிக மிக மலிவானவை. அதற்காக ஒருவரும் கவலை படுவது கிடையாது. இது தான் ஆப்கனில் நடக்கிறது. இதுதான் இராக்கில் நடக்கிறது. இதுதான் காஷ்மீரில் நடக்கிறது. இவர்களின் பெயர் இஸ்லாமிய பயங்கரவாதிகள். உலக மீடியாக்களின் இந்த ஒரு வார்த்தை பிரசாரத்தினால் அவர்களின் போராட்ட நியாயங்கள் மறைக்கப்படுகின்றன. மழுங்கடிக்கபடுகின்றன. இதுதான் உண்மை.

 3. இப்படி அநியாயமாக மக்களை கொலை செய்யும் இஸ்ரேலை எதிர்த்து அகம்படிய தேவர், ராஜராஜ தேவர், ஆர்.தியாகு போன்ற தேவர் சாதி வீரர்கள்(?!;,.) கள்ளர், மறவர், சேர்வை-அகம்படியர் படை கொண்டு ஒரு போரை நடத்தி இல்லாத தேவர் வீரத்தை காண்பிப்பார்களா? இவர்களது வீரம் எல்லாம் ஒடுக்கபட்ட மக்களில் மீது மட்டும்தானே? மற்றபடி தேவர்கள் எல்லாம் காங்கிரசு, பார்ப்பன பாஜக, ஜெ கட்சிகளின் அடிமைகள்தான்… இந்த கட்சி எல்லாம் அமெரிக்க அடிமைகள்… இப்படிபட்ட அடிமை கூட்டம், இங்கெல்லாம் வந்த பேச துப்பில்லாமல், சாதி வெறி சைகோதனத்தோடு திரிகிறது.

 4. இசுரேல் தன்நாடு வாங்க எவ்வளவு அடிவாங்கியது என்ரு இந்த உலகத்துக்கே தெரியும். அவ்வளவு கொடுமையை சந்தித்த ஒரு இனம் இன்று அடுத்த மக்களை கொல்வது, மிகவும் வேதனைக்குறியது.

 5. முசல்மான் சகோதரர்களுக்கு

  ஒரு படம் எடுத்ததுக்கு அமெரிக்க தூதரகத்தை முற்றுக்கை இட்டீர்களெ இன்று போய் இச்ரேல் தூதரகத்தை முற்றுக்கை இடலாமே

 6. //‘அமைதி’க்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். பிரதமர் நெதன்யாகுவிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி ‘இஸ்ரேலிய அரசின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்’ என்று உறுதியளித்திருக்கிறார்.
  //
  அயோகியனுக்கான நோபல் பரிசுதான் தரவேண்டும்.

 7. உங்களின் இஸ்லாமிய ஆதரவை மீண்டும் மீண்டும் நிறுபித்து வருகிறீர்கள். இஸ்ரேல் மீது ஹமாஸ் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு கடும் தாக்குதல் நடத்தி பல இஸ்ரேலியர்களை கொன்றது. அதற்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்லாமிய பயங்கரவாத கும்பலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்களைப் போன்றோர்கலால்தான் இது போன்ற சண்டைகள் நடக்கின்றன. பத்திரிகையில் வெளியான இந்த செய்திகளை அனைவரும் படித்திருப்பார்கள். ஆனால் நீங்கள் மட்டும் தவறான செய்திகளை கொடுப்பதுடன் இஸ்லாமிய வெறியர்களுக்கு ஆதரவு தருகிறீர்கள். இந்த கொடுமையை நாங்களும் படிக்க வேண்டி இருக்கிறது. ஈரானிலும் இராக்கிலும் இருப்பது இஸ்லாமிய பயங்கரவாத கூட்டம். ஹமாஸ் என்ற பயங்கரவாத கூட்டத்தை பாலஸ்தீனம் ஆதரிப்பது ஏன்? இந்த பயங்கரவாத இஸ்லாமிய கூட்டத்தை தடை செய்யலாமே!

  • They are fighting for their own country. If your country occupied by any country, you also fight
   against them or escape from the country. If you fight, you must also be called as “terrorist” by the occupied country or by the media. From your view, Netaji also a terrorist before Independence.

 8. “Hamas” is a terrorists group which supports Muslim terrorists in Kashmir and in India known to Indians.Israel is not a weak country like India and this group should be eliminated completely for world peace and Israel will achieve it and what world expect it.

 9. இங்கு இஸ்ரேலுக்கு ஆதரவாய் பேசும் மக்களிடம் இசுலாமிய விரோதப்போக்கு எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரிகிறது. பாலஸ்தீன் & இஸ்ரேல் வரலாறு தெரியாமலேயே கருத்து சொல்கிறாற்கள். என்னுடைய வீட்டிற்கு வந்தவன் என்னை வெளியேற்றிவிட்டு அவன் எடுத்துக்கொண்டான். பின் எனக்கு வேண்டும் என்று நான் கேட்டால் என்னை அடித்து துரத்துகிறான், தீவிரவாதி எஙிறான் …. அவன் எனக்கு இழைத்த அனீதியை இங்கு ஆதரிக்க மக்கள் இருக்கிறார்கள் …. இவர்கள் தான் நியாயம் பேசுபவர்கள்……கொடுமை….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க