Friday, December 2, 2022
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தருமபுரி தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!

தருமபுரி தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!

-

தரும்புரி-ஆர்பாட்டம்

தமிழக அரசே !

*நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டியில் மக்களின் அழிக்கப்பட்ட வாழ்க்கையை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடு !

*ஆதிக்க சாதிவெறியர்களால் நடத்தப்பட்ட உடைமைகள் அழிப்பு, பணம், நகை கொள்ளை மற்றும் காவல்துறையின் கையாலாகாத்தனத்தையும் விசாரிக்க சி.பி.ஐ க்கு உத்தரவிடு!

*சாதி வெறியை தூண்டும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சாதி சங்கங்களையும் தடை செய் !

*தலித்துகள் மீதான தருமபுரி கலவரத்திற்கு அடிப்படை, நோக்கம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு ஆவன செய் !

தமிழக மக்களே !

*சாதி இந்துக்களின் மவுனமே தலித்துகள் மீதான சாதிவெறித் தாக்குதலுக்கு அடிப்படை !

*பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக போராடுவோம் !

கண்டன ஆர்ப்பாட்டம்

தலைமை:

திரு.சு.மில்டன்,
வழக்குரைஞர், செயலாளர்,  மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.

கண்டன உரை:

திரு.என்.ஜி.ஆர். பிரசாத், மூத்த வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

திரு.இரா.சங்கரசுப்பு, மூத்த வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

பேராசிரியர். திரு.அ.கருணானந்தம், வரலாற்றுதுறை முன்னாள் தலைவர், விவேகானந்தர் கல்லூரி, சென்னை.

திரு.அரங்க சம்பத்குமார், வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

திருமதி.அ.அருள்மொழி, வழக்குரைஞர்,  சென்னை உயர்நீதி மன்றம்.

திரு.வே.மதிமாறன், எழுத்தாளர்.

திரு.ஜானகிராமன், வழக்குரைஞர், செயலாளர், ம.உ.பா.மையம், தருமபுரி.

திரு கிருஷ்ணக்குமார், வழக்குரைஞர், செயற்குழு உறுப்பினர், சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கம்.

தோழர்.பா.விஜயக்குமார், பொருளாளர்,   புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

திரு.சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

பாதிக்கப்பட்ட மக்களின் நேருரை.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடுதல்.

நாள் : 29.112012, வியாழன், மாலை 4 மணி.

இடம் : மெமோரியல் ஹால், சென்னை.  (அரசு பொது மருத்துவமனை எதிரில்)

அனைவரும் வருக!

___________________________________________________

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – சென்னை கிளை.

தொடர்புக்கு : 98428 12062.

____________________________________________________

 1. தோழருக்கு,வன்னிய சாதி வெறியர்களை குறிப்பிட்டுச் சொல்லாதது ஏன், இந்த சம்பவத்தில் வேறு ஆதிக்க சாதிகளும் இருக்கிறதா?

 2. போராடும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள், போராட்டம் வெற்றியடையட்டும்…

 3. //*சாதி வெறியை தூண்டும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட
  அனைத்து சாதி சங்கங்களையும் தடை செய் ! //

  இதை அனைத்து தமிழக மக்களின் கோரிக்கையாக்க அணிதிரள்வேம் !

 4. என்ன நீதி கிடைக்கும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?
  எதுவும் கிடைக்கப்போவதில்லை.

  • மனித உரிமை பாதுகாப்பு மையம் என்ற பெயரை கேட்டாலே எதிரிகலுக்கு பயம் வரும் உடன் ஜுரம் வரும், வரலாரை திருப்பி பாருங்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் தமிழ் வழிபாடு வெற்றி, நல்லகாமன் வழக்கு வெற்றி!!! வெற்றி மேல் வெற்றி தொடரும்….

 5. பெருவாரியான அரசியல் பிருமுகர்கள் தர்மபுரி வந்தவண்னம் உள்ளார்கள் ஆனால் ராமதாஸ் எங்கே ?

  வந்தால் ?????????????????????????????????????????????

 6. முதல்ல அவனவன் ஜாதியில கல்யாணம் பண்ணச் சொல்லுங்க… அப்புறம் அவனுங்க உரிமைக்காக போராடுங்க… சும்மா சட்டி, பானை உடச்சதுக்கு எல்லாம் போராடக்கூடாது…..

  • இன்று அப்பகுதி மக்கள் சுமார் 2000 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.சும்மா சட்டி, பானை உடச்சதுக்காகவா?.

  • யோ, நீர் எல்லாம் சோத்ததான் திண்கிறீரா? இல்லை வேறு எதையாவது ……..?

   கொஞ்சமாவது அறிவிருக்கா? கம்ப்யூட்டர், கீ போர்டு இருந்தா, கண்டதையும் கழிஞ்சுகிட்டே இருப்பீரோ?

   முதலில் தர்மபுரியில் என்ன நடந்தது என்பது முழுமையாகத் தெரியுமா? எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியுமா? ஏன் இந்தத் தாக்குதல் என்று தெரியுமா?

   இதையெல்லாம் தெரிந்து கொண்டு பின்னூட்டமிடவும். மூளையை ( இருந்தால்? ) கொஞ்சமாவது பயன்படுத்தவும்.

 7. 1) self defence is fundamental right:; why 3 whole villages couldnt put up resistance?
  2)strength respects strength; can any body, going on their knees and beg for social peace?
  3) Is it not better to resist than receiving all the vengence of caste hindu mob ?
  4) Pallars houses are ransacked in kodiyan kulam;but by the police(no body can resist even if it is injustice).Is there any caste hindu mob violence on pallars/burning houses of pallars after 1957?. if so it went with out resistance?.
  5) PEACE WILL PREVAIL ONLY AMONG EQUALLY EMPOWERED.

 8. இந்தியன்,
  இது போன்ற வரிகளை எழுதும் முன்பாக ஒரு முறை தருமபுரி வந்துநேரில் பார்த்து செல்லவும்.அங்கு உடைக்கப்பட்டதும்,எரிக்கப்பட்டதும் வெரும் சட்டி,பானை மட்டும் தானா? இல்லை மனித குலத்தின் மாண்பும், மரபுமா?
  பிறகு கேளுங்கள் உங்கள் மூளையை? அது பதில் சொல்லும் நீங்கள் யாரென்று.மக்களில் ஒருவனா? இல்லை மாக்களில் ஒருவனா? என்று.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க