privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வன்னி அரசு: பொய் மேல் பொய்!

வன்னி அரசு: பொய் மேல் பொய்!

-

வம்பர் 7 நாயக்கன் கொட்டாய் சாதிவெறித் தாக்குதல் குறித்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, கீற்று தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், தலித்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ம.க.இ.கவைச் சேர்ந்த வன்னியர்களும் உண்டு என்றொரு அவதூறை எழுதியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாக “வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை “ என்றொரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதில் ” அறிவு நாணயம் என்ற சொல்லை அவர் குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பாரேயானால், தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டும் மகஇக காரர்கள் யார் என்பதை சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையை பெருமகிழ்ச்சியோடு பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால் வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும். ” என்று குறிப்பிட்டிருந்தோம். நிறைய வாசகர்களும் கீற்று தளத்தில் இதையே கோரியிருந்தனர்.

தனது பொய் குறித்து பதிலளிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை உருவான காரணத்தினால், மீண்டும் கீற்று தளத்தில் முழுப்பிதற்றலாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  அக்கட்டுரையில் “இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சார்ந்த வன்னியர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வன்னி அரசு குறிப்பிட்டிருக்கும் அண்ணாநகர் என்பது முழுக்க முழுக்க தலித்துக்கள் மட்டும் வாழும் கிராமம். அந்த ஊரில் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்களே கிடையாது. மேலும் அக்கிராமத்தில் ம.க.இ.கவோ அதன் தோழமை அமைப்புகளோ கிடையாது. எமது முந்தைய கட்டுரையிலேயே நாயக்கன் கொட்டாய் வட்டாரத்தில் எமக்கு அமைப்பு கிளைகள் இல்லை என்பதால் பென்னாகரம் பகுதி தோழர்கள் சென்று உதவியிருக்கின்றனர் என்று தெளிவாகவே குறிப்பிட்டிருந்தோம்.

இருப்பினும் தான் சொன்ன அபாண்டமான அவதூறை நியாயப்படுத்துவதற்காக இன்னொரு பச்சைப்பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் வன்னி அரசு. அரசியல் ரீதியான விமரிசனங்களை விடுத்து பொய்களையும், அவதூறுகளையும் வெளியிடுவதில் கீற்று தளத்திற்கு என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை.

வன்னி அரசுவின் இந்தக் கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் ‘ஆதாரத்தின்’ யோக்கியதையை மட்டுமே இங்கே அம்பலப்படுத்தியிருக்கிறோம். ம.க.இ.க குறித்து அவருடைய கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் மற்ற உளறல்கள் பதிலளிக்கத்தக்கவை அல்ல. கட்டப்பஞ்சாயத்தில் வயிறு வளர்த்து, ஓரிரு நாற்காலிகளுக்காக தலித் மக்களின் வாக்குகளை ஆண்டைக் கட்சிகளிடம் விலை பேசும் தரகர்கள், புரட்சி எப்படி செய்வது என்று விளக்குகிறார்களாம்.

வன்னி அரசுவின் கட்டுரைகளை கீற்று தளம் தொடர்ந்து வெளியிடுவதில் நமக்கு ஆட்சேபமில்லை. அவற்றை சிரிப்பூ என்ற தலைப்பின் கீழ் வெளியிடுவது பொருத்தமாக இருக்குமென்பது எம் பரிந்துரை.

  1. வன்னி அரசுவின் கட்டுரை சிரிப்பூ தான். ஏதேதோ பேசிவிட்டு முக்கிய விஷயத்திற்கு கட்டுரையின் கடைசி பகுதியில் வருகிறார்! வன்முறையில் ம க இ க வின் பங்களிப்பு பற்றி ஒற்றை வரி!

    அது சரி. பிழைப்புக்காக இவர்கள் சந்தர்ப்பவாதம் செய்வதாக கூறுகிறீர்கள். இது பார்ப்பனீயம் ஆகாதா? உங்கள் கட்டுரையில் இந்த வார்த்தை பயன் படுத்தப்படவில்லை. வன்னி அரசுவை பார்ப்பனர் எனலாமா? அல்லது அந்த வார்த்தை பார்ப்பனனாக பிறந்து பார்ப்பனீயம் செய்யும் (சோ, சு சுவாமி போன்ற) ஆட்களுக்கு மட்டுமே reserve செய்யப்பட்டுள்ளதா?

  2. பாவம், போகட்டும் விட்டு விடுங்கள்.
    //சேரி மக்களின் விடுதலைக்கு ஆயுதம்தாங்கிய புரட்சிதான் ஒரே வழி என்று முழக்கமிட்ட புரட்சிகரக் குழுக்களுக்குப் பதுங்குமிடமே சேரிகள்தான். இன்றைக்கு ‘புரட்சி’ செய்யப் புறப்பட்ட அந்த நக்சல்பாரிகள், அப்பாதையிலிருந்து விலகி தாங்கள் சார்ந்த சாதி அரசியல் கட்சிகளிலும், கட்டப்பஞ்சாயத்துகளுக்காக தனியே இயக்கங்களும் நடத்தி பிழைக்கப் போய்விட்டார்கள். பாவம் சேரிமக்கள். புரட்சிகரக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இந்தத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். ‘புரட்சிக்காரர்களோ’ பாதுகாப்பாகவும் வசதியாகவும் சாதி அரசியலில் வலம் வருகின்றனர். அரச பயங்கரவாதத்தை ஒழிக்க வந்தவர்கள் சாதி பயங்கரவாதிகளாக இன்று மாறிப்போனார்கள்.
    //சிறுத்தைகள் பற்றி சொல்ல வருகிறார் போல…

  3. கீற்றை குறை கூறுவது தவ்று என்று நினைக்கிறேன்..அதில் அனைவரின் கருத்துக்கும் வாய்ப்பு அளிக்கபடுகிறது.அந்த அடிப்படையில் வன்னிஅரசின் குற்றசாட்டும் இடம்பெறுகிறது….

    • //அதில் அனைவரின் கருத்துக்கும் வாய்ப்பு அளிக்கபடுகிறது// கருத்துக்கா இல்லை அவதூறுக்கா? வன்னி அரசு பொய்யில் இருப்பது கருத்தா இல்லை அவதூறா?

    • Friend Che,
      நான் ஒரு ஆபாசமான கதை ஒன்றை எழுதி கீற்றுக்கு அனுப்பினால் அதை பதிவிடுவார்களா?

      ஒருவேளை பதிவிட்டால் ஒன்றுமில்லை, ‘தவறான கருத்துக்கள்’ என்று நிராகரித்துவிட்டால் அவர்களின் கொள்கைக்கு விரோதமாககிவிடும்.

      ஏன் நிராகரித்துவிட்டார்கள் என்றால் தவறான கருத்துக்கள் என்று பரிசிலித்துதானே?

      அப்படியென்றால் இதைபோன்ற கோமாளிதனமான பதிவுகளை மட்டும் அனுமதிக்க காரணம் என்ன?
      இன்னும் நீங்கள் பழைய அவதூறு பதிவுகளையெல்லாம் போய்பாருங்கள்.

      கீற்றுக்கு தொண்டையில் சிக்கிய மீன்முள் போல் ஏதோ ஒரு வெளிகாட்ட முடியாத காழ்ப்புணர்ச்சி இருப்பதால், இதுப்போன்ற அவதூறு பதிவுகளை அகமகிழ்ந்து அனுமதிக்கிறார்கள்.

      • நான் ஒரு ஆபாசமான கதை ஒன்றை எழுதி கீற்றுக்கு அனுப்பினால் அதை பதிவிடுவார்களா?//

        மிகச் சரியான கேள்வி. கீற்றுக்கு முட்டுக் கொடுப்பவர்கள் யாராவது பதில் சொல்லுங்களேம்பா….நண்பர் சே அவர்களுக்கு இது புரிய வேண்டும். அவ்வளவுதான்.

    • கீற்று தளத்திற்கு எந்த அரசியல் நிலைப்பாடும் கிடையாது. பொதுவாக பார்த்தால் முற்போக்கு கட்டுரைகள் பல இருப்பதை போல இருக்கும் ஆனால் அதில் பாதிக்கு பாதி ‘முற்போக்கு’ அக்கப்போர்களும், கிசுக்கிசுக்களும், கோஷ்டி சண்டைகளுமாக தான் இருக்கும். மொத்தத்தில் அது ஒரு குப்பை மேடு.

      • கீற்றில் ஒரு அமைப்பு மட்டுமில்லாமல் அனைவருக்குமான பிளாட்பார்ம் இருப்பதால் சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும்.பல்வேறு அரசியல் கருத்துக்கள விவாதிக்கபடுவது ஆரோக்கியமான விசயம் தானே…. குப்பை போன்ற சொற்களை விடுத்து நட்பு முரண்பாடாக அனுகலாமே

        • எது நண்பா அரசியல் கருத்து?
          ஒரு அமைப்பின் முடிவுகள் அல்லது செயல்பாடுகள் பற்றிய தவறை சுட்டிக்காண்பித்தால் அது சரிதான். விவாதிக்க வேண்டியதுதான். சொல்லாத ஒன்றையும் செய்யாத ஒன்றையும் இட்டுக்கட்டி எழுதினால் அது அரசியல் கருத்தா? அவதூறா? அதெல்லாம் எங்களுக்குத்தெரியாது கெடச்சதெல்லாம் கொட்டலாம்னா அதற்கு குப்பைமேடுன்னுதானே பேரு.

      • //மொத்தத்தில் அது ஒரு குப்பை மேடு.//

        கொஞ்சம் பார்த்து விவாதத்தை முடிங்க…இல்லைனா குப்பைமேட்டில்தான் இயற்கை உரமிருக்கிறது என நம்மாழ்வாரை அழைத்து வந்து கமெண்ட் போட சொல்லுவாங்க…

        //பொதுவாக பார்த்தால் முற்போக்கு கட்டுரைகள் பல இருப்பதை போல இருக்கும் ஆனால் அதில் பாதிக்கு பாதி ‘முற்போக்கு’ அக்கப்போர்களும், கிசுக்கிசுக்களும், கோஷ்டி சண்டைகளுமாக தான் இருக்கும்//

        இருக்கு ஆனா இல்ல..

  4. எனக்கு ‘அந்த கீற்று’ கட்டுரையை படிக்கும்போது திமிரு என்ற படத்தில் உள்ள வடிவேல் காமெடிதான் நினைவிற்கு வருகிறது.

    அதில் வடிவேல் இப்படி கூறுவார்
    ”இதுக்கெதுக்டா வெள்ளையும் சொள்ளையுமா அலையனும்,…………….”

  5. ம க இ க வின் செயல்படுகல் பற்றி அவர் வைக்கும் விமர்சனகளுக்கு பதில் என்ன??

    • பதில் கட்டுரையிலேயே இருக்கிறது, // வன்னி அரசுவின் இந்தக் கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் ‘ஆதாரத்தின்’ யோக்கியதையை மட்டுமே இங்கே அம்பலப்படுத்தியிருக்கிறோம். ம.க.இ.க குறித்து அவருடைய கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் மற்ற உளறல்கள் பதிலளிக்கத்தக்கவை அல்ல. கட்டப்பஞ்சாயத்தில் வயிறு வளர்த்து, ஓரிரு நாற்காலிகளுக்காக தலித் மக்களின் வாக்குகளை ஆண்டைக் கட்சிகளிடம் விலை பேசும் தரகர்கள், புரட்சி எப்படி செய்வது என்று விளக்குகிறார்களாம்.//

    • அவர் கேள்விக்கு பதிலளிப்பது இருக்கட்டும் முதலில் அவர் கேட்கும் கேள்விகளுக்கான நோக்கம் என்ன என்று சிந்தித்துபாருங்கள்? அவரின் அற்பத்தனம் புரியும்!

      அவரைப் பற்றி தெரிந்துக்கொள்ள ‘அந்த’ பதிவு ஒரு ஆதாரம். /“பா.ம.க. வன்னியர்கள் மட்டுமல்லாமல், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மகஇக என கட்சி பேதம்/ என்று, அன்று கூறினார் அதை விட்டுவிடுவோம்.

      அதற்குப்பின் வினவில் அவரது அவதூருக்கும் ‘கீற்றில்’ நிறைய நண்பர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக திரும்ப ஒரு அவதூறு பதிவைப் போட்டுள்ளார்.

      கொஞ்சம் பாருங்கள் அங்கு ஒரு ஊரே அழிக்கப்பட்டுள்ளது, இதை கேட்கும்போதே நெஞ்சுப் பதறுகிறது, ஆனால் அந்த மக்களுக்கு ஆதரவாக இல்லாமல், புரட்சிகர சக்திகள் மீது அவதூறு செய்துகொண்டிருக்காரர் என்றால்,
      எவ்வளவு அற்பத்தனம்???
      எவ்வளவு பிழைப்புவாதம்???

    • இவர்களின் செயல்பாடுகளைப் பற்றி காவல் துறையிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சொல்வார்கள்.
      பேருந்து கட்டண உயர்வு சமயத்தில் நடந்த போராட்டத்தில் போலீசு பு.மா.இ.மு தோழரிடம் கூறியது

      ’’உங்க அமைப்புகிட்டயே இதுதாங்க பிரச்சனை. பதில் பேச முடியாதபடி மடக்கிடறீங்க…’’.

      போலீசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் சமரசமற்றுப் போராடுகிறார்கள் அமைப்புத் தோழர்கள். இந்த மானங்கெட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் போல் தேர்தல், ஜனநாயகம் என்று கூறி மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்களா? இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து உண்மையான மக்கள் ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடுகிறார்கள்.

      தில்லைப் போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் காவியச்செல்வனும் கலந்து கொண்டாரே, அவருக்குத் தெரியாதா ம.க.இ.க வின் சமரசமற்ற போராட்டத்தைப் பற்றி? எல்லாம் இவர்களுக்கு நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது. நன்றாகத் தெரிந்ததனால்தான் இந்த அவதூறு.

      நாம் செய்ய வேண்டிய வேலையை ( சாதி ஒழிப்பு ) இவர்கள் செய்கிறார்களே, நம்மையும், நாம் கொண்டிருப்பதாகச் சொல்லும் தத்துவத்தையும் ( அம்பேத்காரியம்), இவ்வளவு சரியாக விமர்சிக்கிறார்களே, இவர்கள் இப்படிச் செய்தால் நம் எதிர்காலத்தில் எப்படிப் பொறுக்கித் திண்பது? என்ற அச்சம்தான் இந்த அவதூறுக்குக் காரணம். விமர்சனத்தை , விமர்சனத்தால் எதிர் கொள்ளத் தெரியாத கோழைகள், அவதூறு பரப்புகிறார்கள்.

  6. அந்த ராமதாஸ் பற்றி இன்னும் காட்டமாக ஒரு வார்த்தை குட பேசாமல் அவருக்கு அளிக்கப்பட்ட பல்வேரு விருதுகள் பட்டங்கள் பற்றி கேத்கப்படும் வினாக்களுக்கு தெளிவான பதிலை கூறாமல் ராமதாஸ்நல்லவர் தமிழ் உணர்வு கொண்டவர் என்றும் அவருடன் இருப்பவர்கள் பற்றி மட்டுமே தான் கவலை கொள்வதாயும் உளறி வரும் தொல்.திருமா பற்றி விமர்சனம் செய்ய வேண்டி உள்ளது.
    சுத்தமாக மண்டையில் ஒண்ணும் இல்லாமல் உளரும் வன்னியரசுவை விட திருமாவளவன் அவர்களின் சந்தர்ப்பவாதத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். அம்பலப்படுத்த வேண்டும்.

    • ஆம், திருமாவளவன் தான் வன்னியரசை விட ஆபத்தான நபர். காலம் காலமாக ஆதிக்க வெறியர்கள் சவாரி செய்த தலித் மக்களின் தோள்களில் இப்போது இந்த பிழைப்புவாதிகள் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை கீழே இறக்க வேண்டும்.

  7. விழுப்புரம் முருகேசன் கொலையில் அண்ணன் திருமா கண்டிப்புடன்நடந்திருந்தால் இப்படி பட்ட எண்ணம் ஆதிக்க சாதிகளுக்கு வருமா?
    வன்னிய எழை எளிய மக்களை வன்னியர் சங்கம் மூலம் கட்டப் பஞ்சாயத்துநடத்தி கொள்ளையடிக்கும் ஆதிக்க சாதிகளுக்கும்
    அதே கட்டப் பஞ்சாயத்து மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை கொள்ளையடிக்கும் வி.சி க்களுக்கும் சற்றும் வேறு பாடு இல்லை.
    டி.பி.ஐ யில் இருந்த போதான உணரவு மங்கி விட்டட்கு அவர்களுக்கு.

        • நீங்கள் கொடுத்த கட்டுரை, கலவரத்தின் உண்மைநிலையைக் கண்டறிய மீளாய்வு வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது. மக்கள் சாதி வாரியாகப் பிரிந்து கிடப்பதால் ஒவ்வொரு பிரச்சனையிலும் முடிந்தவரை பொறுக்கித்திங்க ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி ஆனந்த்.

        • உண்மை என்ன என்பதை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உண்மை அறியும் குழு அறிக்கையாக வெளியிட்டுள்ளனர், நூல் கீழைக்காற்று வெளியீட்டகத்தில் கிடைக்கும்.

          • நான் கொடுத்த லிங்க், அந்த கட்டுரையை படித்தீர்களா, உங்கள் கருத்து என்ன அம்பேத் சித்தார்த்?

          • அடங்கப்பா…ம.க.இ.க கலவரத்துல பங்கு எடுத்ததா இல்லையா? என்பதை அறிய இதுக்கு தனி புத்தகமா வெளியீடுவாங்க…???

            அடங்கொப்புறானே..>!!!!IRCTC முதர்கொண்டு பேப்பர் சேமிப்பை தொடங்கிவிட்டது..ஒரு நாளைக்கு A4 சைல 4 லட்சம் பேப்பர் மிச்சம் பண்ணுதாம்…பேப்பர்யில்லாம இனி லப்டாப் மொபைல் போன்ல Train டிக்கெட்டை காட்டி பயண செய்யலாமுனு சொல்லுது…நீங்க என்னானா அரசாங்க பணத்தை எதிர்ப்பாத்து தன் குடிசையை தானே கொழுகுத்தியவர்களுக்காக..புத்தகம் எழுதி பேப்பர் வேஸ்ட் பண்றிங்க..???? புதிய சனநாயகம் படைத்து நாட்டை கை மாற்றி கையெழுத்துப்போடும் போது பேப்பர் இல்லாம போக போவுது.

  8. அரசியல் ஆதாயத்திற்காகவும்,ஓட்டு பொறுக்கவும் மக்களின் இந்த துயரத்தை பயன் படுத்த துடித்து கொண்டு இருக்கும் வன்னி அரசு முதலியோரின் முகத்திரையை கிழித்த ம.க.இ.க வின் மீதான காழ்ப்புண்ர்வு தான் கீற்று தளத்தில் அவரை பொய்மேல் பொய் சொல்லவைத்துள்ளது.

    • 16,நவம்பர் அன்று எழுதப்பட்ட வன்னி அரசுவின் ” பா.ம.க வும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும் ” என்ற கட்டுரைக்கு தோழர்.அம்பேத் சித்தார்த் எழுதிய ” புரட்சிகர அமைப்புகளை அவதூறு செய்யும் தலித்தியப் பிழைப்புவாதிகள் ” ( 20,நவம்பர் )என்ற கட்டுரை கீற்று இணைய தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

      இது கீற்று மீதான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. ம.க.இ,க வின் மீதான காழ்ப்புணர்ச்சிதான் இச்செயலுக்குக் காரணமோ என்று கீற்று மீது ஐயம் கொள்ளத் தோணுகிறது.

  9. எதற்காக புதிய தமிழகம் கட்சி பற்றிய விமர்சனம் வி.சி அளவிற்கு வினவில் இல்லை?

    • அப்படினா புதிய தமிழகம் ஒரு கட்சியாக கருதவோ..விமர்சனம் செய்யவோ தகுதி அற்றது எனப் பொருள்.

  10. கீற்றில் ஒரு அமைப்பு மட்டுமில்லாமல் அனைவருக்குமான பிளாட்பார்ம் இருப்பதால் சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும்.பல்வேறு அரசியல் கருத்துக்கள விவாதிக்கபடுவது ஆரோக்கியமான விசயம் தானே….//

    கீற்று இணைய தளம் நடத்துபவர் கொள்கையும் கோட்பாடும் அற்ற‌வர்.பொதுவான முற்போக்கு முகமூடியை அணிந்து கொண்டு யார் கட்டுரை அனுப்பினாலும் அதனை பிரசுரித்து தனது வலைப்பக்கத்தின் வாசகர்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் செயல்படுபவர்.பப்ளிக்குட்டி தான் அவரிடம் இருக்கிறது.மற்ற‌படி அனைவருக்கும் பிளாட்பார்ம் அளிக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் அபத்தமும் அரைவேக்காட்டுத்தனமும் தான்.எச்சரிக்கையுடன் அணுகுவோம்.

    • நண்பர் கரிகாலன் சொல்வது சரி,

      ‘கீற்று இணையத்தளம் பிரபல்யம் அடைய வேண்டும், எல்லாத்தரப்பிலிருந்தும் அவர்களுக்கு கட்டுரைகள் அனுப்பவேண்டும், இல்லையேல் அவர்கள் மீது அவதூறு பரப்பப்படும்’ அவ்வளவுதான் அவர்கள் நிலைமை.

      இதை அவர்கள் வாயிலிருந்தே சொல்வதை இந்த இணைப்பில் பார்க்கலாம்… http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=157&Itemid=139

      இதில் ஏகலைவன் என்பவர் கீற்றிடம்,

      //”……….தமது தளத்தில் ஒரு கட்டுரையாளர் பதிந்துள்ள கட்டுரைக்கு எதிர்வினைகள் வரும்போது நேர்மையாக அவற்றுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவராக அக்கட்டுரையாளர் இல்லாமல், ஏதோ அனாமதேயங்களைப் போல ஒதுங்கியிருப்பதற்கு கீற்று எப்படி வழியமைத்துக் கொடுக்கிறது? மாறாக கட்டுரையாளர் பதிலளிக்காமல் தவிர்க்கிறார் என்றால் கீற்று முன்வந்து அவருக்காக வாதாடலாமல்லவா?…..”//

      பொறுப்போடு பதியுங்கள் என்பதற்கு,

      //”……..தங்களது தரப்பிலிருந்து யாரும் கட்டுரைகளை அனுப்புவதில்லையாததால் ம.க.இ.க. தரப்புகட்டுரைகள் கீற்றில் அதிகமாக வெளிவருவதில்லை….”//

      கீற்று இப்படி அயோக்கியதனமாக பதிலளிக்கிறது.

      இதன் அர்த்தம் என்ன?

      எல்லாத்தரப்பு முற்போக்குகாரர்களும்
      இல்லை முற்போக்குபோன்று மக்களிடம் அறியப்படுபவர்கள் எல்லாரும் இவர்கள் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்ற அற்பத்தனமான ஆசைதான்.

      இதில் கீற்றுக்கு என்ன லாபம் என்று நினைக்கலாம்….

      அதாவது பேஸ்புக்கில் சில பெண்கள் தமது புகைப்படத்தை போட்டு அதற்கு நிறையபேர் ‘லைக்’ செய்ய வேண்டும், ‘கமென்ட்’ போட வேண்டும் என்று நினைக்கிறார்கள் அல்லவா அதுப்போலத்தான்,
      அந்த பெண்ணின் இந்த செயல் அற்பத்தனமாக இருந்தாலும் ‘சில நல்ல கருத்துக்கள்’ அப்பெண்ணிடம் இருக்கலாம் தானே?

      அதுபோலத்தான் கீற்று!

  11. கீற்று அடிப்படையில் ஒரு குடை அமைப்பு. பல வண்ண அரசியல் அமைப்புகளின் கட்டுரைகள் ஒரே இடத்தில் படிக்க கிடைப்பது அதன் சிறப்பு. இப்படி ஒரு பல்பொருள் அங்காடி போல் கீற்றுவை நடத்தும் அதன் உரிமையாளர் நிச்சயம் பெரிய அரசியல் நிலைப்பாடு எதனையும் எடுக்க முடியாது. எனவே கீற்று நந்தனுக்கு அரசியல் எதிரிகள் என்று எவரும் இருக்க முடியாது. தனிப்பட்ட எதிரிகள் மட்டுமே இருப்பர்; தொழில் போட்டியாளர்கள் கூட இருக்கலாம்.

    ம.க.இ.க வை விமர்சிக்க இடம் அளிப்பதன் மூலம் தனக்கு நடுநிலையாளர் இமேஜ் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும் என்று கருதியிருக்கலாம். அல்லது வினவை உரசி பார்ப்பதன் மூலம் சூழல் கொஞ்சம் பரபரப்பாகும்; அதில் குளிர் காய்வதை இதமாக நினைக்கலாம். அல்லது தன்னை சிறுத்தைகளுக்கு ஆதரவாக காட்டிக் கொள்வதன் மூலம் , இதனை, தம்மால் இயன்ற தலித் சேவையாக நினைக்கலாம். பல போலி முற்போக்குவாதிகள் செய்யும் தவறு, இது தான். அதாவது, தலித் இயக்கங்கள் செய்யும் அரசியல் தவறுக்கு முட்டுக் கொடுப்பதன் மூலம் தமது செயலின்மை தோற்றுவிக்கும் குற்றவுணர்ச்சிக்கு வடிகால் தேடுகிறார்கள்.

    ‘கீற்றுவும்’, ‘புதிய தலைமுறையும்’ உள்ளடக்கத்தில் ஓன்று தான். மொக்கை ஓட்டெடுப்பை தினமும் நடத்துகிறார்கள். வினவு தோழர் யாரேனும் இந்த ரீதியில் சிற்றாய்வு ஒன்றை செய்து வெளியிட்டால் கொஞ்சம் உதவியாக இருக்கும்.

    • கீற்று அடிப்படையில் ஒரு குடை அமைப்பு என்பதைவிட நல்ல சடை அமைப்புனு சொல்லுங்க எல்லா அரசியல் அமைப்புகளின் கட்டுரைகள் பிண்ணி பினைந்து கிடப்பது அங்குதான்…

      (கீற்றுக்கு)//நடுநிலையாளர் இமேஜ் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும் என்று கருதியிருக்கலாம்.//

      நடுங்கியநிலையாளர் இமேஜ் கொஞ்சம் கூடுதலாக இருப்பதால்தான் சொந்த ஜாதியை விடாமல் தனது தலித் ஆதரவு மற்றும் இந்து மத எதிர்ப்பு கட்டுரையை தவிர…வேற பொருள் இல்ல

  12. கீற்றில் ஒரு அமைப்பு மட்டுமில்லாமல் அனைவருக்குமான பிளாட்பார்ம் இருப்பதால் சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும்.பல்வேறு அரசியல் கருத்துக்கள விவாதிக்கபடுவது ஆரோக்கியமான விசயம் தானே../சே
    அரசியல் கருத்துக்கள் விவாதிக்கபப்டுவது ஆரோக்கியமான விஷயம் தான்.ஆனால் அவதூறுகள் அரசியல் கருத்துக்கள் என்னும் பதாகையின் கீழ் ஒரு போதும்வராது.

    தர்மபுரி தாக்குதலுக்கு பின்னணியில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்தது ம.க.இ.க.வைச் சேர்ந்தவர் என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றும் வன்னி அரசுவின் கட்டுரை அவதூறுகளின் ஒட்டுமொத்த தொகுப்பு.மக்களுக்காய் தொடர்ச்சியாய் களத்தில் இருந்து போராடும் ஒரு அமைப்பு குறித்து இப்படித்தான் யார் எதை எழுதி அனுப்பினாலும் அதை எந்தக் கேள்வியையும் எழுப்பாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் அப்படியே பிரசுரித்து விடுமா கீற்று? பரபரப்புக்காயும் பிழைப்புக்காயும் புலனாய்வு பத்திரிகை என்ற பெயரில் கழிசடையாய் இதழ் நடத்துபவர்கள் கூட இப்படி தான்தோன்றித்தனமாய் யார் என்ன சொன்னாலும் அதனை வெளியிடுவது இல்லையே..?
    அப்புறம் என்ன நேர்மை,அறம் கீற்றுக்கு இருக்கிறது.?
    இதனை வெறும் தலித்திய ஆதரவு என்ற கோணத்தில் மட்டும் பார்க்க முடியாது.
    ஒரு வாதத்துக்காய் கேட்கிறேன்.
    கோவில்பட்டி அருகே உள்ள‌ குறிஞ்சாக்குளத்தில் தலித்துகள் 4 பேர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் கீற்று உரிமையாளர் நந்தனின் உற‌வினர்கள் இருக்கிறார்கள் என்றும் அதன் சூத்திரதாரி நந்தனின் தந்தையார் தான் என்றும் ஒரு ‘கட்டுரையை’ போகிற போக்கில் எழுதி அனுப்பினால் அதை அப்படியே எந்தக் கேள்வியும் எழுப்பாமல்,உண்மையை ஆராயாமல் அப்படியே கீற்று இணையத்தில் பிரசுரித்து விடுவாரா கீற்றுவின் நிரந்தர உரிமையாளர்..?

    என்ன பொழப்புடா இது..?இவர்களுக்கு நாலாந்தர பத்திரிகைகளே பரவாயில்லை.

  13. வன்னியரசுவுக்கு இணையாக இபிரச்சினையில் தவறான மனிதர் கீற்று உரிமையாளர் தான். இப்பிரச்சினையில் ம.க.இ.க பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்காக மட்டும சொல்லவில்லை; இது ஒரு ஊடக அறம் சார்ந்த பிரச்சினையாக உள்ளது. ஜீ டி.வி எடிட்டர்களுக்கும், கீற்று நந்தனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தருமபுரி நிலவரம் பற்றி நன்கு அறிந்த தோழர் ஒருவர் கீற்றில் ஒரு கட்டுரை பதிய வைப்பது அவசியம். எனக்கு தருமபுரியின் நக்சல்பாரி பாரம்பரியம் பற்றி அவ்வளவாக தெரியாது. இல்லையெனில் நானே தகுந்த பதிலடி கொடுப்பேன்.

  14. //வன்னி அரசு குறிப்பிட்டிருக்கும் அண்ணாநகர் என்பது முழுக்க முழுக்க தலித்துக்கள் மட்டும் வாழும் கிராமம். அந்த ஊரில் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்களே கிடையாது//

    அரசாங்கம் இந்தா அந்தா என்று இழுக்கும் ஜாதிவாரி கணகெடுப்பை வினவு மிக எளிதா முடித்துவிட்டது…

    வினவு…என் ஊர் பேராவூரணியில் மொத்த ஜாதிவாரிய கணக்கை சொன்னா.. கொஞ்சம் நல்லா இருக்கும்…

    தமிழகத்துக்கு மட்டும் சொல்லிபுடாதீக…அழைச்சி கேட்டாலும் சொல்லாதீக…அடிச்சி கேட்டாலும் சொல்லாதீக…

  15. வன்னி அரசு ! பேசாமலிருங்க

    கடைசி ஈழப்போரின் போது இவர் இலங்கை போனதாகவும் சண்டைக்கிடையில் விடுதலைப்புலிகள் இவரிடம் மிகுந்த கஷ்ட்டப்பட்டு ஒரு சி.டி கொடுத்ததாகவும் அதை இவர் நக்கீரன் பத்திரிக்கையிடம் சேர்த்ததாகவும்..அதை போலி பாதரி ஜெகத்காஸ்பர் பார்த்ததாகவும்..நக்கீரனில் கட்டுரை எழுதிய தண்ணி அரசுவை பற்றி தனிக்கட்டுரை வேண்டுமா..???

    இவர் பொய் மேல பொய் சொல்வதே பை மேல பை கிடைப்பதால் தான்

Leave a Reply to ஆர்.தியாகு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க