“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் அப்பட்டமான சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் பேச்சு இப்போது செயல் வடிவம் பெற்று வருகிறது. வன்னிய சாதிவெறியின் கோரத் தாண்டவத்துக்கு தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாய் பகுதியை அடுத்த நத்தம் காலனி, கொண்டாம்பட்டி மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த சுமார் 300 ஆதிதிராவிடர் வீடுகள் பற்றியெறிந்து சாம்பலாகியுள்ளது.

நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திவ்யாவுக்கும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. நாகராஜன் வன்னிய சாதியைச் சேர்ந்தவர். இளங்கோ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். நாய்க்கன் கொட்டாய் பகுதியே வன்னிய சாதியினர் பெரும்பான்மையாக உள்ள பகுதி என்பதாலும் அதிலும் சமீப ஆண்டுகளாய் இவர்களிடையே சாதிவெறி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும் தாங்கள் பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ முடியாது என்று திவ்யாவும் இளவரசனும் அஞ்சினார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணம் நடந்த உடனேயே வன்னியர்கள் தரப்பிலிருந்து மிரட்டல்களைச் சந்திக்கத் துவங்கிய புதுமணத் தம்பதிகள், தங்கள் பாதுகாப்புக்கு காவல் துறையை நாடினார்கள்.

தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு சேலம் சரக டி.ஐ.ஜி சஞ்சய் குமாரையும் தர்மபுரி எஸ்.பி அஸ்ரா கர்க்கையும் சந்தித்து முறையிடுகிறார்கள்.

இதற்கிடையே திவ்யாவைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரி வன்னியர்கள் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக நத்தம் காலனி மக்களுக்கும் இளவரசனின் உறவினர்களுக்கும் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நவம்பர் 5ம் தேதி திவ்யாவின் பெற்றோர் தங்கள் சாதியைச் சேர்ந்த சுமார் 500 பேர்களுடன் நத்தம் காலனிக்கு வெளியே திரண்டு பஞ்சாயத்து பேச வருமாறு இளங்கோவின் உறவினர்களை அழைத்துள்ளனர். இந்த கூட்டத்திற்கு நத்தம் காலனியில் இருந்து சுமார் பத்து பேர் சென்றுள்ளனர்.

வன்னியர்கள் தரப்பிலிருந்து வந்திருந்த 500 பேர்களுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியப் பொருளாளர் மதியழகன் தலைமை தாங்கி வந்துள்ளார். நத்தம் காலனியில் இருந்து வந்தவர்களை நேரடியாக மிரட்டும் மதியழகன், “நாம பார்த்து வைப்பது தான் சட்டம். மரியாதையாக பெண்ணை ஒப்படைத்து விடுங்கள்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். பெண்ணை ஒப்படைப்பதற்கு நவம்பர் 7ம் தேதி வரை கெடு விதிக்கிறார். உரிய கெடுவுக்குள் பெண்ணை ஒப்படைக்காவிட்டால் என்னவேண்டுமானாலும் நடக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.

சாதிவெறி தலைக்கேறிய நிலையில் மிக அதிகளவில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அஞ்சிய நத்தம் காலனியைச் சேர்ந்தவர்கள், அந்த நேரத்தில் உடனடியாக தப்பிக்க எண்ணி அதற்கு ஒப்புக் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பான கட்டைப் பஞ்சாயத்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திலும் நடந்துள்ளது. அங்கே தொடர்ந்து சென்று வந்த திவ்யாவின் தந்தை நாகராஜனை அங்கேயிருந்த வன்னிய சாதியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர், “பெண்ணை கீழ்சாதிக்காரனோடு அனுப்பி வைத்த பொட்டைப் பயல்” என்பது போல கேலி பேசி வெறியேற்றியிருக்கிறார்.

நவம்பர் 5ம் தேதி பா.ம.க மதியழகன் முன்னிலையில் நடந்த கட்டைப்பஞ்சாயத்தில் பெண்ணை ஒப்புவிப்பதாக நத்தம் காலனியைச் சேர்ந்த ஒருசாரார் ஏற்றுக் கொண்டு வந்திருந்தாலும், ஊருக்குத் திரும்பியதும் மற்றவர்கள் வேறு விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். திருமணம் முடிந்து சுமார் 20 நாட்களுக்கும் மேலாக திவ்யா இளவரசனுடன் வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் வலுக்கட்டாயமாக பெண்ணைத் திருப்பி அனுப்பினால், அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அஞ்சிய இளவரசனின் உறவினர்கள், நவம்பர் 7ம் தேதியன்று அவரை ஒப்படைக்க மறுத்துள்ளனர்.

பெண் திரும்பி வராத நிலையில் நாகராஜனின் உறவினர்களும் அவரைக் கேலி பேசி வெறுப்பேற்றிய நிலையில்  அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதிலும் அவர் விஷம் அருந்தினார் என்றும் அவரது நெருங்கிய உறவினர்களே அவருக்கு விஷத்தைப் புகட்டினர் என்றும் இருவேறு விதமாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஊரைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்.

நாகராஜன் இறந்து போன நிலையில், அக்கம் பக்கம் ஊர்களைச் சேர்ந்த வன்னிய சாதியினர் சுமார் 2000 பேர் திரட்டப்படுகிறார்கள். நாகராஜனின் சடலைத்தை எடுத்துக் கொண்டு செல்லங்கொட்டாயிலிருந்து நத்தம் காலனி வழியே தருமபுரி – திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்கு ஊர்வலமாய்க் கிளம்புகிறார்கள். வரும் வழியிலேயே மூன்று குழுக்களாய் பிரிந்து கொள்ளும் இந்த கும்பல், நத்தம் காலனி, அண்ணா நகர் மற்றும் கொண்டம்பட்டி கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறார்கள். இம்மூன்று பகுதிகளும் ஆதிதிராவிடர்கள் அடர்த்தியாய் வாழும் பகுதிகள்.

கையில் கிடைத்த கடப்பாரை, கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டைகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளுடன் கிளம்பிய இந்த கும்பல், கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கிறது. அந்த சமயத்தில் நத்தம் காலனியைச் சேர்ந்த ஆண்கள் கூலி வேலைகளுக்காக வெளியூர் சென்றிருந்தனர். சுமார் 40 பெண்களும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுமே காலனியில் இருந்துள்ளனர்.

கொலைவெறியில் உள்ளே நுழையும் கும்பலைக் கண்டதும் சிதறி ஓடும் பெண்கள் ஊருக்கு வெளியேயும் வயல்களுக்குள்ளும் புகுந்து மறைந்து கொள்கிறார்கள். பெயின்ட் அடிக்கப் பயன்படும் கருவியில் (Painting Gun) பெட்ரோலை  நிரப்பி எடுத்து வந்த கும்பல் அதை குடிசைகளின் மேலும் வீடுகளின் மேலும் பீய்ச்சி அடித்தும் பெட்ரோல் குண்டுகளை எரிந்தும் வீடுகளைக் கொளுத்தியிருக்கிறார்கள்.

நத்தம் காலனியில் மட்டும் சுமார் 150 வீடுகள் எரிந்து சாம்பலாகியிருக்கிறது. சுமார் 60 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்த டாடா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சுமார் 50 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. இங்கே சுமார் 48 கேஸ் சிலிண்டர்களைத் திருடிச் சென்றுள்ளனர். கொண்டாம்பட்டியில் 90 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.

வன்னிய சாதிவெறி தலைக்கேறிய கலவரக்காரர்களால் விளைவிக்கப்பட்ட பொருளாதார சேதத்தின் மதிப்பு மட்டும் சுமார் 6 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் மக்கள். இதில் கோயில் நகைகள் மட்டும் சுமார் 3.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். தாக்குதல் நடத்திய கும்பலை பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மதியழகன், சிவா, பச்சியப்பன், மகாலிங்கம், லலிதா மாது, ராஜேந்திரன் மற்றும் P.K சின்னச்சாமி ஆகியோர் திட்டமிட்டு வழிநடத்தியிருக்கிறார்கள். ஒரு படையெடுப்பைப் போல் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பங்கேற்ற வன்முறைக் கும்பலில் பெரும்பாலும் வெளியூர்களைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.

நத்தம் காலனியிலும் கொட்டாம் பட்டியிலும் மாலை நான்கு மணிக்குத் துவங்கி இரவு ஒன்பது மணி வரை வெறியாட்டம் போட்டிருக்கிறார்கள். அண்ணா நகரில் இரவு 11 மணி வரை தொடர்ந்து வீடுகளை எரிப்பதும், பொருட்களைக் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடந்துள்ளது.

ஒரு பக்கம் மூன்று குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் போதே, இன்னொரு குழு ரம்பத்தால் மரங்களை அறுத்து தருமபுரி திருப்பத்தூர் சாலையில் தடுப்பரண்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். காவல் துறையும் தீயணைப்புத் துறையும் நெருங்க விடாமல் செய்ததுடன் உள்ளே நுழைய முயன்ற காவல்துறை வாகனங்களை கற்களை எறிந்து தாக்கியிருக்கிறார்கள்.

சென்றாண்டு பரமக்குடியில் தலித்துகளிடம் துப்பாக்கியால் பேசி வீரம் காட்டிய போலீசு,  இங்கு வன்னிய ஆதிக்க சாதியினரின் முன் பணிந்து போயிருக்கிறார்கள். இத்தனைக்கும் சம்பவம் நடக்கும் பகுதியிலிருந்து கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் அமைந்துள்ளது.

தற்போது கலவர பூமியாக காட்சியளிக்கும் செல்லங்கொட்டாய் நத்தம் காலனி பகுதியில் சாதி ரீதியிலான வேறுபாடுகள் இருந்தாலும் இப்போது நடந்துள்ளதைப் போன்ற வெறித்தனமான தாக்குதல்கள் இதற்கு முன்பு நடந்ததில்லை. தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாங்கள் அங்கே சென்றிருந்த போது நத்தம் காலனியைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணி, “ நக்சலைட்டு கட்சி வலுவிழந்து போனது தான் எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது” என்று கண்ணீரோடு தெரிவிக்கிறார்.

எண்பதுகளில் வன்னிய சாதி அடையாளத்தோடு துவங்கப்பட்ட ராமதாஸின் பா.ம.க, தொண்ணூறுகளிலிருந்தே ‘பாட்டாளி’ முகமூடியோடு  பச்சோந்தித்தனமாக பல்வேறு தேர்தல் கூட்டணிகளின் மூலம் பதவி சுகத்தை அனுபவிக்கிறது. ராமதாஸின் பிழைப்ப்புவாதமும் சந்தர்பவாதமும் சாதாரண மக்களின் முன் போதிய அளவுக்கு அம்பலமான நிலையில் இரண்டாயிரங்களின் மத்தியிலிருந்து மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து அரசியல் அரங்கில் தனிமைப்படுகிறார்.

வேல் முருகன் போன்ற அவரது முன்னாள் கூட்டாளிகளே தனி கடை போட்டு பிழைப்புக்குப் போட்டியாக உருவெடுக்கிறார்கள். கரைந்து கொண்டிருக்கும் தனது அரசியல் செல்வாக்கை மீண்டும் மீட்டெடுப்பதற்காக தற்போது மீண்டும் வன்னிய சாதிவெறியை  கையிலெடுத்திருக்கும் ராமதாஸ், தற்போது வன்னியர்களிடையே சாதிவெறியைத் தூண்டி விட்டு மக்களிடையே பிளவுண்டாக்கி ரத்தம் குடிக்கும் வெறியோடு வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் சாதிப் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி வந்திருந்த ராமதாஸ், இந்த வகையில் தனது கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து கட்சி அமைப்பை வலுப்படுத்த திட்டமிட்டுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் குருவின் சாதிவெறிப் பேச்சு மகாபலிபுரத்தில் அரங்கேறுகிறது. சாதிக்காக என்ன செய்தாலும் தங்களைக் காப்பாற்ற ஒரு அமைப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கையை சாதிவெறியேறிய லும்பன் கூட்டத்துக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தான் இந்தக் கலவரம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தருமபுரிக் கலவரத்தைத் தொடர்ந்து 96 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்டு செய்யக் கூடாது என்பதற்காக எஸ்.பி அஸ்ரா கர்க் மற்றும் தலைமை மேஜிஸ்டிரேட் வரை சென்று வாதாடியுள்ளனர்.

அரசியல் அரங்கில் சாதிவெறி மீண்டும் அரங்கேறி உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு துடிக்கிறது. நவீன தொழில் நுட்ப புரட்சியின் காலம் என போற்றப்படும் இந்நிகழ்காலத்தில்தான் சாதிவெறியும் முடிந்த மட்டும் ஒருங்கிணைத்துக் கொண்டு வன்முறையில் குதிக்கிறது. இதை இணையம் தொட்டு நாய்க்கன் கொட்டாய் வரை காணலாம். இதனால் தலித் மக்களின் வாழ்வுரிமை பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகிறது. பல வருடங்கள் உழைத்து சேர்த்த வீடும், பொருட்களும் நாயக்கன்கொட்டாய் மற்றும் ஏனைய பகுதிகளில் சூறையாடப்பட்டன. இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியில் வளர்வதும் வன்னிய சாதிவெறியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த ஆபத்திலிருந்து தலித் மக்களைக் காப்பாற்றுவதாய் கூறிக் கொள்ளும் தலித் கட்சிகளும் இப்போது ஆகச் சீரழிவான நிலைக்கு இறங்கிச் சென்ற பின், அந்த மக்கள் இன்று பாதுகாப்பற்று தனித்து விடப்பட்டுள்ளனர். ஆதிக்க சாதிவெறி என்பது அந்த சாதியில் இருக்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கே  எதிரானது என்பதை அவர்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து கொள்வதோடு தம்மைப் போன்றே இழப்பதற்கு ஏதுமற்ற உழைக்கும் மக்களான தலித்துகளோடு கரம் கோர்ப்பதன் மூலம் தான் ராமதாஸ் தலைமைதாங்கும் வன்னிய சாதிவெறியை அகற்ற முடியும். இவ்வாறு வர்க்கமாக அணிதிரள்வதன் மூலம் தான் பொருளாதார விடுதலையை மட்டுமல்ல, சாதி ஒழிப்பையும் சாத்தியமாக்க முடியும்.

____________________________________________

– வினவு செய்தியாளர்கள்
_________________________________________

200 மறுமொழிகள்

 1. இந்தக்கலவரம் பற்றி “மனித உரிமை ஆர்வலர்” ப்பையா என்ன சொல்வார்னு சொல்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்……

 2. அதான் உதைப்பானுங்கனு தெரியுதுல்ல… அப்புறம் என்னத்துக்கு அவன் வீட்டு பொண்ணு பிக் அப் பண்ணனும்.. இப்படி மிதிபடனும்??? சோத்துக்கு வழி இல்லாதவனுக்கு என்ன எழவுக்கு லவ்வு, கல்யானம் எல்லாம்…..

  • பேருக்கு ஏற்றார் போல் சரியாக பேசுகிறார் இந்தியன். இந்திய தேசியம் பேசும் அனைத்து அரசியல்வாதிகளும், இன்ன பிற அறிவாளிகளும்(?) தாயைக் கூட்டிக் கொடுப்பதற்கு நிகரான செயலான, இந்நாட்டு வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் செயலைச் செய்கிறார்கள்.

   • நொந்தியன் பெயரில் எழுதும் சூராதிசூரர் சூத்தக்கத்தரி பேரர் பொதுவில் இதேபோல் பேச தயாரா….

    • காதலை கரெக்ட் செய்வது என்று ஆபாசமாக பேசும் இந்தியனை நான் பொறுக்கி என்று சொன்னால் வினவு மறுக்குமா? எனது கமெண்டை தூக்கிவிடுமா?

  • பொது அறிவிப்பு:
   இந்தியன் என்ற பெயரைக் கொண்ட மேற்கண்ட சாதி வெறியனை தோழர்கள், சாதி வெறியை எதிப்பவர்கள் யார் எங்கு கண்டாலும் அடித்துத் துவைத்து விட்டு
   ” அதான் இப்படி பேசினா அடிப்பாங்கனு தெரியுதில்ல, அப்பறம் ஏன் இப்படி என்று கூறி விடலாம் பேசுற? கூட்டிக் கொடுக்கும் இந்திய தேசியத்தை ஆதரிக்கும் வெகட்கங்கெட்ட உனக்கு இந்த சாதித் திமிருக்கு மட்டும் கொறைச்சல் இல்லை ”
   என்று கூறிவிடலாம்.

  • இந்தியன் எப்போதும் வினவிலேயே குடியிருக்காரே! மொதல், ரெண்டாவது பின்னூட்டமாவே பல பதிவுகள்ல போட்டுடறாரு. புடிக்காத இடத்துல உட்கார்ந்துக்கிட்டு இப்படி கழிஞ்சு வச்சிக்கிட்டே இருக்கலாமா? டிசென்ரிக்கு நல்ல்ல மாத்திரையா வாங்கிப் போடறது…?

  • anbulla nanba indiannu peru vechurukeenga .annaa unga comment muzhuvathum pirivinai than theriyuthu. oru pennum oru aanum manam ottrumai pettru kaathalikiraargal. idhu thavaralla anaal idhai saathi endra peyaril ethirthaal adhu thaan thavaru.

  • முத்துராமலிங்கம் காலத்துல மாதிரியே திமிறோடு பேசும் நொந்தியனே…ஆதிக்கசாதிவெறியர்களின் அக்கிரமங்களை அம்பலப்படுத்த மட்டுமே இப்பதிவு… எல்லா நேரமும் உங்களுக்கு மட்டும் அருவா வெட்டாது…. சமீபத்தில் மதுரைப்பக்கம் போய்ப்பார்… நீங்கள் கொடுத்ததற்கெல்லாம் திருப்பி வாங்க வேண்டிய நாள் தொலைவில் இல்லை.

   • ஹாஹாஹா…மதுரைல நடந்தது ஆயுதம் இல்லாத அப்பாவிகள் மீது நடந்த அப்பட்டமான அரசியல் தாக்குதல்…இதுல பெருமை வேறயா?அந்த ஒரு சம்பவத்துக்கு பிறகு மதுரை,ராமநாதபுரத்தில் என்ன எதிர்விளைவுன்னு கொஞ்சம் விசாரிச்சு பாரு…

    • நீங்கள் இதுவரை நடத்திய சாதிவெறிபிடித்த தாக்குதல்களும், படுகொலைகளும் சமமாக ஆயுதபாணியாக்கப்பட்ட மக்களோடுதானா……மேலவளவிலும், இன்னபிற இடங்களிலும் இதுதான் நடந்ததா…? நீங்கள் சொல்லும் எதிர்விளைவும் எந்த முரையில் நடத்தினீர்கள்…வீரனாயிருந்தால் வேனிலிருந்து ஓடாமலிருக்கவேண்டியதுதானா…பத்திரிக்கையாளர்களிடம் நீலிக்கண்ணீர் வடித்தது ஏன்… போய் நரைக்கிணறு பகுதியில் உங்கள் சாதியினரிடமே இப்படி பேசினால் அடிப்பார்கள்…..

 3. சிறீரங்கத்தில் ‘பிராமனர்’ என்று ஓட்டல் பெயர் இருந்த்ததால் சீறி எழுந்த ‘திராவிட’ சிங்கங்கள் எங்கப்பா தர்மபுரியில் காணோம்??

  எப்போ தலித்களுக்கு விடிவுகாலம் வருமோ…..
  தலித் சகோதரர்களே – விழியுங்கள்…நீங்கள் எண்ணிக்கையில் மிகுதி…யோசித்தி வாக்களியுங்கள்…உங்கள் பலத்தைப்புரிந்து கொள்ளுங்கள்…

  • திராவிடர் கழக சிங்கங்கள் , அன்று ஜெயாவின் பங்களாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று கருணா வின் பங்களாவில் அதே வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

   தலித் மக்கள் இன்னும் ஓட்டுப் போட வேண்டுமா ?.. தலித்களின் காவலன் திருமாவுக்கு போட்ட ஓட்டுக்கள் எல்லாம் எங்கே புடுங்கிக் கொண்டிருக்கின்றன?.. தைலாபுரத்திலா ? கிருஸ்ணசாமிக்கு போட்ட ஓட்டுக்கள் எல்லாம் எங்கே கழட்டிக் கொண்டிருக்கின்றன ? போயஸ் தோட்டத்திலா ?.. வலது இடது கம்யூனிஸ்ட்டுகளுக்கு போட்ட ஓட்டுக்கள் போய்ஸ் தோட்டத்து கக்கூசில் கரசேவை செய்து கொண்டிருகின்றன.

   இன்னும் இந்த ஓட்டுப் பொறுக்கிகளை நம்ப வேண்டுமா ?.. ஒடுக்கப் பட்டோரின் விடுதலை என்பது வர்க்கமாக ஒன்றினஒயும் போது தான். அது மக்கள் அதிகாரம் ஆட்சிக்கு வரும் நாளில் தான் சாத்தியம்.

   • அரும்பு ! அனாதையா இப்படி புழம்பி புழம்பியே திரியும்படி ஆகும்…திருமா பேச்சியை கேட்டுத்தானே உள்ளுர்க்காரனை வம்புக்கு இழுத்த இப்போ எங்க அரசியல் வாதிகள் எல்லாம்..ஊரு பிரிஞ்சா அட்கு இரண்டு அரசியல்வாட்கிக்கு கொண்டாட்டம்!!! இப்ப வன்னியர் பொன்னுமேல அன்பு செலுத்துவதற்கு பதிலாக..வன்னியர் இருக்கும் ஊர்மேல அன்பு செலுத்து..

    • பொறுக்கித்தனமான சாதிவெறிபிடித்த பதில்….யாரும் திருமா சொல்லி காதலிக்கவில்லை.. அதுசரி வன்னியர் ஊர்மேல அன்பு செலுத்துவதென்றால் நீங்கள் கூறியபடி அடிமை வேலை செய்ய வேன்டும்…த்தூ வெதமில்லாமல் படித்துவிட்டார்கள்,,…

     • கருப்பன் அவர்களே….
      நீங்கள் தியாகுவின் பதிலில் சாதி வன்மம் இருபது தெரிந்தும் அமைதியாய் இருப்பது ஏனோ? தியாகு அவர்கள் விப்ரோவில் பணி புரிகிராராம்…இத்தகைய ஒருவர் எப்படி ஒரு சக பணியாளரிடம் சாதியற்ற வழியில் பணி புரிவார் என்று கேள்வி எழுப்பி,விரிவாக விளக்கி, அதில் இவர் இதுவரை பொது தளங்களிலும், முக நூலிலும் எழுதிய பதிவுகளை இணைத்து அந்த கம்பெனியின் ஹெச் ஆருக்கு ஒரு மெயில் அனுப்புங்களேன்….!!! தியாகு தான் ஆண்ட பரம்பரையாச்சே….. மீண்டும் மன்னர் பணி செய்யட்டும்….விப்ரோவில் வேலை எதுக்கு….?

      • ஆண்ட பர்ர்ர்ம்ரை எப்டி விப்ரோல டூட்டி பாக்குது…..வேணாம் விப்ரொவும் தேவர்தான் ராஜராஜனின் 47வது பொண்டாட்டியோட மச்சானின் மகள் வயிதது வாரிசும்பார்…எனக்கேன் வம்பு…..எல்லாம் முத்துராமலிங்கத்துக்கே வெளிச்சம்….முருகா…

 4. தற்குறிகளே, கிணற்றுத் தவளைகளே. காதல் திருமணம் என்பது யார் சொல்லியும் வருவதில்லை. அது சமூக வளர்ச்சியின் விதி. எல்லா நாட்டிலும் எல்லா பழைய சமூகத்திலும் பெண்ணை பெற்றோர்கள் பார்த்துத்தான் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால் அந்த சமூக வளர்ந்த போது அங்கு தேர்ந்தெடுக்கும் ஜனநாயகமும் வளர்ந்தது. அது சமூகத்தின் வளர்ச்சியோடு ஏற்படுகின்ற கலாச்சார மாற்றம். இங்கு இந்தியாவில் சமூகம் வளரவில்லை அதனால் இது வளரவிலை. அதே போல் சுயலாபத்திற்காக வளர்க்கவும் விடவில்லை. இங்கு சில பேர் சொல்வது போல் அனைத்து மக்களையும் சொல்லவில்லை. ஆனால் அங்குள்ள சில ஆளும் வர்க்கங்கள் தன் நலனிற்காக அதே சாதியினை சார்ந்த மக்களை தங்களுக்கு இரையாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து உழைக்கும் மக்களுக்கும் சாதியினை ஒழிப்பதுதான் எதிர்கால வாழ்க்கைக்கு தேவை என்பதை புரியவைக்க வேண்டும். இங்கு பலப்பேர் சொல்வது போல் ஏன் கட்சியை கோர்த்துவிடுகிறீர்கள் என்று ஆதங்கப்படுகிறார்கள். இந்தக் கட்சிகள் தானே மாநாடு போட்டு கலப்புத் திருமணம் செய்தால் கலவர பூமியாக்குவேன் என்று தீர்மானம் போட்டவர்கள். உண்மையில் அப்படி இல்லை என்றால் கலப்புத் திருமணம் என்பது சரியானது, ஜனநாயகப் பூர்வமானது என்று அறிக்கை விடச் சொல்லுங்கள். இந்த சம்பவத்தை கண்டிக்கச் சொல்லுங்கள். இது கட்சியின் வேலை இல்லை அந்த பகுதியில் இருக்கும் ஒரு கும்பலின் சதிக்கு அதே சாதியினை சார்ந்த மக்களை பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கலாம். இல்லையென்றால் அது கட்சியின் திட்டமாகவே செயல்படுத்துவதாகவே நினைக்க முடியும். அப்படிப்பட்ட கட்சிகளை தடை செய்ய கோருவதுதான் இன்றைய ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் செய்யவேண்டியது. இதில் ஓட்டுக்காக மற்ற சாதிக்கட்சியும் இந்த சாதி ஒழிப்பினை தடுத்தி நிறுத்திவிட்டார்கள். அவர்களும் நீங்கெளெல்லாம் குறிப்பிடும் அதை விட கீழான மக்களை திருமணம் செய்யும் போது அவர்களை அடக்கினார்கள் என்பது நன்கு தெரியும். அதனால்தான் சாதி அமைப்புகளை கட்டிக்காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிற அனைத்து சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும். அதை உடனடியாக கலைக்கக் கோரவேண்டும். இவர்கள் எல்லாம் அவர்களின் ஓட்டு வங்கி அதன் மூலமாக கோடிகோடியாக பணம் சம்பாதிக்க அதே சாதி மக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதை தடுத்து உழைக்கும் மக்களை அனைவரும் ஒன்று திரளவேண்டும். இந்த சமூகத்தின் சனியனான சாதியினை அகற்ற ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள வேண்டும். ஆனால் கலப்புத் திருமணங்களை தூண்டுவது அந்தக் கட்சிகள் அல்ல. இந்த சமூகத்தின் இயல்பான வளர்ச்சி. மிகச் சரியான ஜனநாயகப் பாதை, இதை ஏற்கவேண்டும். அதை விடுத்து தடுத்தால் நமக்குள் ஒருத்தரை ஒருத்தர் அழித்துக்கொண்டு இந்த சமூகத்தினையே சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று பொருள். அதை தான் இன்று நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள் காட்டுகிறது.-

  • vinoth does an upper caste girl have anything special apart from a dalit girl?.if you you prove such a thing even scientists and thinkers all over the world will be backing you.definitely your educational qualification wont be over 10th std.and if it is it should be a world wonder(may be wrong if you have copied or chased your paper for marks).this is not the right place for people like you.

   • அதாவது அறிவுடைநம்பி அவர்களே, அவர்கள் குழந்தையை உருவாக்குவதும் வாய் வழியாகத் தான், குழந்தையைப் பெறுவதும் வாய்வழியாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

     • சாதிவெறியர்கள் தங்கள் சாதி பெண்களிடம் இல்லாத எதை தேடி தாழ்த்தப்பட்ட சாதி பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கும்போது கண்டார்கள்…..போன்ற ஆட்களை செருப்பால் அடிக்க வேண்டும்.

   • திரு.அறிவுடைநம்பி,
    வினோத் மெத்தப் படித்தவராக இருப்பினும் நான் வியப்படைய மாட்டேன். ஜாதி வெறி படிப்பறிவில்லாதவர்களிடம் மட்டுமே உள்ளது என்ற நிலை ஒரு கனவு அல்லது ஆசையே அன்றி உண்மை நிலை இல்லை. நாடு கடந்து, உயர்ந்த கல்வி கற்று, நல்ல பதவியிலிருக்கும் இந்தியர்களிடமும் இந்த ஜாதி துவேஷத்தைக் காணமுடியும். என்னைப் பொறுத்தவரை பிராமணர்களை விட மற்ற ஆதிக்க ஜாதிகளிடமே இந்த வெறி அதிகமாக உள்ளது. ஆனால் இந்த ஜாதியில் உள்ள படித்தவர்களும், நமது பகுத்தறிவுவாதிகளும் ஏதோ இந்த வெறி பிராமணர்களிடம் மட்டுமே இருப்பது போன்ற ஒரு மாயையை பரப்பி பாதுகாத்து வருகின்றனர். பிராமணாள் கபே, ஸ்ப்ளெண்டர் ஐயர் போன்ற உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு ஆவேசத்துடன் போராடும் பெரியார் வாரிசுகள் மேற்கூறப்பட்ட அட்டூழியத்திற்கோ, பரமக்குடியில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் தலித்துகளுக்கு எதிரான கொலைவெறி தாக்குதல்களுக்கோ ஒரு துரும்பைக்கூட அசைக்கக் காணோம். கீழ் வெண்மணி படுகொலை, உத்தபுரம் சுவர், கீரிப்பட்டி பஞ்சாயத்து எல்லாம் ஜாதி இந்துக்களின் கேவலமான ஜாதி உணர்வுகளின் வெளிப்பாடுகள் (பெரியாரும் கீழ் வெண்மணி படுகொலையை கண்டுகொள்ளவில்லை. தலைவர் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழி). பிராமணர்கள் இத்தகைய வன்முறைகளில் ஈடுபட்டதாக எனக்கு நினைவில்லை. ஜாதி இந்துக்களே, பெரியார் தாசர்களே உங்களுக்கு நினைவிருந்தால் சொல்லுஙளேன்!!

    சுரேஷ்

    • பெரியாரை குறை சொல்வதால் இந்தப்பிரச்சினை முடிந்துவிடாது. கீழவெண்மனி தி. கவின் கையில் இருந்த சாதீயப் போராட்டம் கம்.யூக்களால் அன்றய அடாவடி அரசியலுக்குப் பயன்படுத்தப் பட்டது. ஆனால் அன்று ஏற்பட்ட தி.மு.க.ஆட்சிமாற்றத்தை ஏற்க முடியாத சிலர் பிரச்சையை பெரிதாக்கியுள்ளார்கல். உழைக்கும் மக்களுக்கு என்றும் பெரியார் தொண்டர்கள் ஆதரவாகத்தான் உள்ளனர். சாதி வெறி தலைக்கேரியுள்ள இந்தச்சூழலுக்கு மாற்று பெரியார் பிரச்சாரம் தேவை என்பதை மற்ந்து வாதாடுவது தவறு. பார்ப்பனர் அராசகம் செய்யவில்லை என்பது தவறு.அவர்களுக்காக கோயில் நிலங்களை அனுபவிக்கும் பிற்பட்டோர் இதனை செய்ய பயன்படுத்தப்படும் நிலைதான் இது. அரசாங்கத்தை நெருக்க தலித் அமைப்புகள் என்ன செய்கிறன என்பதுபற்றிச் சிந்தியுங்கள்.பெரியார் தோழர்கல் தொடர்ந்து செய்வார்கல். அதில் பிராமணாள் பெயர் அழிப்பும் இதனை முன்வைத்துத்தான் என உணரவெண்டும். இப்போது பார்ப்பனர்களும் வீருகொள்கிறார்கள். மற்ற சாதி வெரியர்களும் கிளம்புகிறார்கள்.இப்போது ஓட்டுப் பொருக்கும் காரியத்திற்கு சாதி வேகமாகப் பய்ன்படுகிறது.

     • //அதில் பிராமணாள் பெயர் அழிப்பும் இதனை முன்வைத்துத்தான் என உணரவெண்டும்//
      அப்போ நாயுடு,நாடார், கவுண்டர், செட்டி என்று பெயரிடப்பட்டிருக்கும்நிறுவனங்களில் ஏன் ‘திராவிடர்’ கை வைப்பதில்லை?
      ஒ..உங்கள் உறவினரா??
      இந்த டகால்டி வேலை எல்லாம் இங்க காட்டாதீங்க சாமி….
      அதை எல்லாம் விடுங்கள்…தருமபுரி / தென் தமிழகம் – அங்கெல்லாம் தலித்கள் ஒடுக்கப்படும் போது ‘திராவிடர்’ கை என்ன செய்கிறது??

     • //// கீழவெண்மனி தி. கவின் கையில் இருந்த சாதீயப் போராட்டம் கம்.யூக்களால் அன்றய அடாவடி அரசியலுக்குப் பயன்படுத்தப் பட்டது. /////

      இதை அந்தப் பகுதி மக்கள் யாருக்கு இன்றும் மரியாதை தருகிறார்கள் என்பதை வைத்து முடிவு செய்யலாம் .. உழைக்கும் வர்க்கத்தின் நியாயமான போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் கேவலமான பழக்கத்தை போயஸ் தோட்டத்து முன்னாள் காவல் வீரமணியிடம் இருந்து கற்றுக் கொண்டீரோ ?..

   • according your commend, with our commend
    we should paste our degree certificates and mark list and its geniuses certificate given by the state board and the university ……then only you believe our degree …am i right Mr. Graduate (state first)

 5. ‎”வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…” – பதினெட்டு ‘பொட்டி’ ராசா, காடு வெட்டி குரு.

  அப்போ, வன்னிய இன ஆண்கள் கலப்புத் திருமணம் செய்துக்கிட்டா, ‘நறுக்கிடலாமா…?’

 6. தன் சாதிக்கு இவ்வளவு வோட்டு உள்ளதென்று பேரம் பேசி சீட்டு கேட்கும் ஒரு சாதி கட்சி தலைவன் தன் சாதியினரிடையே தன்னுடைய தலைமையை தக்க வைக்க அப்பப்போ இப்படி கலவரங்களை தூண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.அவனுடைய சொல்லை கேட்டு அடிதடி வெட்டுகுத்து என்று இறங்க ஆள் இல்லை என்றால் அவன் ஆட்டம் க்ளோஸ்.சாதி பார்க்காமல் எல்லோரும் காதலித்தால் அப்புறம் சாதியில்லாமல் போன பின் அவன் எப்படி அரசியல் நடத்துவான்.அதனால் தான் எல்லா ஊரிலும் ஆதிக்க சாதியினர் சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராய் இப்போது அளவுக்கு அதிகமாய் பொங்குகிறார்கள். ஒவ்வொரு தலைவனையும் அவனவன் அறிவையும் திறமையையும் கொள்கையையும் பார்த்துதான் ஆட்கள் சேர வேண்டும் சாதியை வைத்து கூட்டம் சேர்க்கும் பொறுக்கிகளை களை எடுக்க வேண்டும் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அவனுடைய அல்லக்கைகளே இது போன்ற கலவரங்களுக்கு பின்னே இருக்கிறார்கள்.

 7. தமிழகத்தைச்சேர்ந்த போலி சமத்துவவாதிகளின் சாயம் இப்பின்னூட்டங்களில் வெளுக்கிறது…
  இதே ‘பார்ப்பனம்’ என்று தலைப்பிருந்தால் போதும் எல்லா தமிழக போலி சமத்துவவாதிகளும் கிளம்பிடுவானுங்க…

  டேய் சமத்துவ வாதிகளா…தருமபுரி அப்பாவிகளை காப்பாற்ற பயமா?

  • //டேய் சமத்துவ வாதிகளா…தருமபுரி அப்பாவிகளை காப்பாற்ற பயமா?//

   மதுரையில் மறந்திருந்து பெட்ரோல் குண்டு வீசி அப்பவிகளை காயமாகினார்களே அதுபேர் என்ன..?
   நீ பாதிக்கப்பட்டா அப்பாவியா??? உனக்கு மட்டும் உயிரு மத்தவனுக்கு மயிரா..?

 8. love makes life beautiful…! but how its happen , wat does the police do’s…….. poor police…. its all because of politics….!

   • திருமா எங்கே போயிருக்கார் ?..

    திருமா: இன்னுமாடா ஜனங்க நம்ம நம்புது…
    வி.சி: அதவிடுங்க பாஸ் அது அவுங்க தல எழுத்து..

  • LOVE MAKES LIFE BEAUTIFUL.. I ACCEPT WHAT U SAY..BUT WHICH LOVE MAKES BEAUTIFUL ?
   HUSBAND AND WIFE LOVE…? MOTHER AND SON …? OR MY HOUSE BOY AND YOUR HOUSE GIRL OF 16 YEARS…? CAN YOU ACCEPT IT..?