காதலும் உழைப்பும்தான் மனித குலத்தின் ஆதாரவேர்கள்…
ஆம் தோழர்களே காதல்தான் இந்த உலகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது…
நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி தவிக்கும் காதலை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது.
எது காதல் ஆண் பெண் மீதும் பெண் ஆண் மீதும் கொள்வது மட்டுமா காதல்..
விதவிதமான ஆடைகளையும் நகைகளையும் வாங்கி கொடுப்பது காதலா,
அது இல்லை தோழர்களே,
அடுத்த மனிதனின் நலனுக்காக உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு மனிதனின் கோபமும் போராட்டமும் காதல்தான்…
காதலர் தினத்தன்று பூங்கொத்து கொடுப்பது இருக்கட்டும்,
காதலர் தினத்தன்று காதல் கடிதங்கள் எழுவது இருக்கட்டும்,
இந்த காதலர் தினத்தை வேறு விதமாக கொண்டாடுங்கள்.
கோரிக்கை மனுக்களை காதலியுடன் காதலுடன் அமர்ந்து எழுத கற்றுக் கொள்ளுங்கள்,
சமூகத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் உங்களுடைய பங்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்!
வினையாற்றுங்கள்! தோழர்களே
வினையாற்றுங்கள்!
உலகையே புரட்டிப் போட்ட மூலதனம் என்ற நூலுக்கு ஜென்னி போட்ட ரொட்டிதான் மூலதனம் அல்லவா,
ஆகவே தோழர்களே காதலியுங்கள்!
உங்கள் காதல் சமத்துவத்தை உண்டாக்கட்டும்...
உங்கள் காதல் சமூக மாற்றத்தை உண்டாக்கட்டும்…
உங்கள் காதல் சமூகத்தை முன்நகர்த்தி செல்லட்டும்…
காதலியுங்கள் தோழர்களே!
காதலியுங்கள் மார்க்ஸ் ஜென்னி போல்…
தினேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
ஒரு மனிதனை இப்படி ஒருவர் காதலிக்க முடியுமா என்று தெரியவில்லை, வறுமையின் காரணமாக தங்கள் குழந்தைகள் இறக்கும்போது கூட, மார்க்ஸ் மீது எந்த கோபமும் இல்லாமல் நீங்கள் நினைப்பதையே செய்யுங்கள் அதற்கு நான் பக்க பலமாக இருக்கிறேன் என்றவர்தான் ஜெனி. இது ஆணாதிக்கத்தால் நடந்ததில்லை, மார்க்ஸ் ஜெனி மீதும், ஜெனி மார்க்ஸ் மீதும் வைத்திருந்த புரிதலினால் அமைந்தது.