Sunday, April 18, 2021
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை!

வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை!

-

வன்னி-அரசு
வன்னி-அரசு

வ 7- நாய்க்கன் கொட்டாய் சாதிவெறித் தாக்குதல் பற்றி அறிந்தவுடனேயே மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் அங்கு சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.. நாய்க்கன்கொட்டாய் பகுதியில் விவிமு இல்லையென்பதால், பென்னாகரம் பகுதி விவிமு தோழர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான நிவாரண உதவிகளையும் செய்திருக்கின்றனர். அவர்கள் திரட்டி அனுப்பி வைத்த செய்தி மற்றும் புகைப்படங்களை நவம்பர் 10 அன்று வினவு தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

தற்போது நவம்பர் 16 ஆம் தேதியன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர், வன்னி அரசு. “பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்பு வாதமும்” என்ற தலைப்பில் கீற்று தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்,

“பா.ம.க. வன்னியர்கள் மட்டுமல்லாமல், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மகஇக என கட்சி பேதம் இல்லாமல் ஒட்டுமொத்த வன்னியர்களும் இத்தாக்குதலில் கலந்துகொண்டு முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளனர்” என்று இந்த சாதிவெறித் தாக்குதலில் மகஇக வையும் வேண்டுமென்றே சேர்த்து அவதூறு செய்திருக்கிறார் வன்னி அரசு.

அறிவு நாணயம் என்ற சொல்லை அவர் குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பாரேயானால், தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டும் மகஇக காரர்கள் யார் என்பதை சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையை பெருமகிழ்ச்சியோடு பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால் வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும்.

“நக்சல்பாரிகளுக்குப் பயந்து எங்ககிட்ட எந்த வம்புதும்பும் இல்லாம இருந்தாங்க. அந்தக்கட்சி காலப்போக்கில இல்லாமல் போனதும், இளவரசன் கல்யாணத்தை சாக்கா வெச்சு இப்படிப் பண்ணிட்டாங்க” – இது தருமபுரி தாக்குதல் பற்றி ஆனந்த விகடன் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் தாக்குதலுக்கு ஆளான அண்ணாநகரைச் சேர்ந்த வசந்தா என்ற பெண் கூறியிருக்கும் உண்மை. “நக்சல்பாரி இயக்கம் ஒடுக்கப்பட்டதனால்தான் சாதிய அமைப்புகள் தலையெடுத்திருக்கின்றன” என்று இச்சம்பவத்தை ஒட்டி பல பத்திரிகைகளும் எழுதியிருக்கின்றன.  இந்த உண்மைதான் வன்னி அரசுவை சுடுகிறது. அதனால்தான் அவர் பொய்களையும் அவதூறுகளையும் கடை விரிக்கிறார்..

இது தாழ்த்தப்பட்ட மக்கள் வாழப்பொறுக்காத காரணத்தால் வன்னிய சாதிவெறியர்கள் நடத்திய தாக்குதல் என்று வினவு கட்டுரையில் எழுதியிருந்தோம். வன்னி அரசு இந்த தாக்குதலுக்கு முற்றிலும் வேறு காரணத்தை கண்டுபிடித்திருக்கிறார். சேரிமக்கள் புரட்சிகரக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகத்தான் இந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார்களாம்.

நத்தம் காலனி மக்களுடன் நக்சல்பாரி இயக்க தோழர்கள் ஐக்கியப்பட்டிருந்ததும் அவர்கள் ஆதரவைப் பெற்றிருந்ததும் உண்மைதான். அண்ணா நகர் வசந்தாவின் கூற்றுப்படி பார்த்தால், “அதற்கு இதுதான் தண்டனை” என்ற வசனம் அன்றைக்கு தாக்குதல் நடத்திய வன்னிய சாதிவெறியர்கள் பேசவேண்டியது. அதே வசனத்தை வன்னி அரசு ஏன் பேசவேண்டும்?

ஏனென்றால், “நக்சல்பாரி கட்சியில் சேராதீர்கள்” என்று வன்னி அரசுகள் தொடர்ந்து கதறினாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதை காதில் வாங்குவதில்லை. நக்சல்பாரிகள்தான் உழைக்கும் மக்களின் நண்பர்கள், உண்மையான சாதி எதிர்ப்பாளர்கள் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் அவர்கள் புரட்சியாளர்களை நம்புகிறார்கள். நக்சல்பாரி இயக்கத்தில் திரள்கிறார்கள். பிறப்பால் தலித்தாகவே இருந்தாலும், பிழைப்புவாதிகளை நிராகரிக்கிறார்கள். இந்த வயிற்றெரிச்சலும், கம்யூனிச எதிர்ப்பு வெறியும்தான் வன்னி அரசுவை இப்படிப் பேசவைக்கிறது. மகஇக வுக்கு எதிராகப் புளுக வைக்கிறது.

வாய்க்கு வந்தபடி பேசுவதற்கும், “என்னயத் தடுக்காதீங்க” என்று சவுண்டு விடுவதற்கும், “உஸ்” என்று அடக்கினால் மறுகணமே மான வெக்கம் பாக்காமல் காலில் விழுவதற்கும் தயாராக இருக்கும் நபர்கள்தானே ஓட்டுக் கட்சிகளில் கைத்தடிகளாக வளர முடியும்?

“சாதிவெறியோடு தமது சமுதாயத்தைத் திருடர்களாக, கொள்ளையர்களாக மாற்றிய மகத்தான சாதனையைச் செய்துவரும் மருத்துவர் ராமதாஸ் இனிமேல் தமிழ்ச் சமூகம் என்றோ தமிழ்த் தேசியம் என்றோ பேச அருகதை உண்டா?” என்று அந்தக் கட்டுரையில் பயங்கரமாக சவுண்டு விடுகிறார், வன்னி அரசு. இது நவம்பர் 16 ஆம் தேதி.

அடுத்து வெளிவருகிறது தலைவர் திருமாவின் அறிக்கை.

“தருமபுரி அருகே நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கு பா.ம.க-வும் வன்னியர் சங்கமும் காரணம் இல்லை என்று பா.ம.க நிறுவனர் இராமாதாசு அவர்கள் வெளிப்படையாக அறவித்துள்ளதை நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் சமூக பொறுப்புணர்வோடு வரவேற்க கடமைப்பட்டிருக்கிறது”. ..

“மறுபடியும் மறுபடியும் குற்றம் சாட்டுவது விடுதலைச் சிறுத்தைகளின் நோக்கமல்ல. ஒருதாய்; மக்கள் மாநாடுகள், சமூக நல்லிணக்க மாநாடுகள,; புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் ;திறப்பு, மற்றும் பா.ம.க-வில் தலித்துகளுக்கு அதிகாரம் வாய்ந்த கட்சி பொறுப்புகள் அளித்தல் போன்ற பாராட்டுதலுக்குரிய பல்வேறு களப்பணிகளை நடைமுறையில் செய்துகாட்டியிருக்கிற பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தான் இதனை விடுதலைச் சிறுத்தைகள் உரிமையோடு சுட்டிக்காட்டுகிறது”.

“கடந்த 16.11.2012 அன்று செய்தியாளர்களை சந்தித்தபோது விடுதலைச் சிறுத்தைகள் பா.ம.க நிறுவனருக்கு வெளிப்படையான வேண்டுகோள் விடுத்தது. அதாவது மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக, தமிழக மாநில உரிமைகளுக்காக, கடந்த காலங்களில் பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தொலைநோக்குப் பார்வையோடு கைகோர்த்து களமாடியதைபோல, தற்போதைய நெருக்கடியான இச்சூழலில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மீண்டும் பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் கைகோர்ப்போம் வாருங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுத்துள்ளது.”… (நவ, 18, பெரியார்தளம்)

இவையெல்லாம் அந்த அறிக்கையில் காணப்படும் வாசகங்களில் சில.

வன்னி அரசுவால் வசை பாடப்படும் மகஇக, மருத்துவர் ராமதாசுக்கு குடிதாங்கி, இடிதாங்கி போன்ற பட்டங்களை வழங்கவில்லை. மாறாக, அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படங்களைப் போட்டு அவர் கம்பெனியை தொடங்கிய நாள் முதலாகவே அம்பலப்படுத்தி வருகிறது.

ஆனால், இன்று நத்தம் காலனியை எரித்து சாம்பலாக்கிய பிறகும், தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதி பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கைவிடுவதாக குற்றம் சாட்டி, எல்லா சாதிவெறியர்களுக்கும் ராமதாசு கொம்புசீவி விட்ட பின்னரும், “பாட்டாளி மக்கள் கட்சி என்பது அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் கொள்கைகளை உள்வாங்கி செயல்படும் இயக்கம் என்று நம்புவதாக” அந்த அறிக்கையில் தோழமையோடு திருமா கூறியிருக்கிறார்.

“இன்னுமாடா ஊர்ல நம்மள நம்புறாய்ங்க?” ன்னு பெரியய்யா காடுவெட்டியிடம் கேட்டிருப்பாரோ?

இப்படியாக, வன்னி அரசுவின் 16 ஆம் தேதி கட்டுரைத் தலைப்பில் குற்றவாளிகளாக காட்டப்பட்டிருந்த பாமக சாதிவெறியர்கள், 18 ஆம் தேதி நிரபராதிகள் என்று  விடுவிக்கப்பட்டு விட்டார்கள். இனி வன்னி அரசுவின் கட்டுரையில் மிச்சமிருக்கும் குற்றவாளிகள் நக்சல்பாரி புரட்சியாளர்கள்தான். “வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் பாட்டாளி சொந்தங்களை விடுதலை செய்! நக்சல்பாரி புரட்சியாளர்களை கைது செய்!” என்று வன்னி அரசு சவுண்டு விட்டால், நல்லெண்ணத்துடன் கை கோர்ப்பதற்கு மருத்துவர் ஐயா உடனே முன்வந்து விடுவார்.

இதையே கொஞ்சம் ஜாடையாக சொல்லியிருக்கிறார் வன்னி அரசு. “இன்று நாயக்கன்கொட்டாய் முகப்பில் தோழர்கள் அப்புவும் பாலனும் மட்டுமே உடைபடாமல் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குச் சிலை வைத்த மக்களோ வீடின்றி வாசலின்றித் தவிக்கின்றனர்”  என்று தனது கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருவேளை வால்டர் தேவாரம் இதைப் படிக்க நேர்ந்தால், புல்லரித்திருப்பார். “இப்படி ஒரு கைத்தடி 80 களில் நமக்கு வாய்க்கவில்லையே” என்று வருந்தி, இடிப்பதற்கு 2 கடப்பாரைகளையும் பாதுகாப்புக்கு பத்து போலீசாரையும் அனுப்பி வைத்திருப்பார்.

 1. ஒன்று புரிகிறது… சாதி வெறியர்கள் (சாதிகளைக் கடந்து) ஒற்றுமையாக இருக்கிறார்கள். சாதி மறுப்பாளர்களால்தான் தம் இயக்கங்களைக் கடந்து ஏனோ ஒன்றுபட முடியவில்லை. தமக்குள் இவர்கள் நீயா நானா நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் சாதி வெறியர்கள் அமைதியாக, கருமமே கண்ணாக செயல்பட்டுவருகிறார்கள்.

  • சிறிய விளக்கம் சரவணன் …

   இங்கு சாதி வெறியர்கள் என்று எந்த சாதிச் சங்கத் தலைவனும் இல்லை. சாதிய பிழைப்புவாதிகள் தான் இருக்கிறார்கள். மக்களிடையே சதி வெறியைத் தூண்டி தமது உண்டியலை நிரப்புகிறார்கள் ..

   இத்தகைய பிழைப்பு வாதிகளில் ஒருவர் தான் தெருமாவொளவன் . அவர் சாதி மறுப்பாளர் அல்ல ..

 2. expected this article

  “பாட்டாளி மக்கள் கட்சி என்பது அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் கொள்கைகளை உள்வாங்கி செயல்படும் இயக்கம் என்று நம்புவதாக” அந்த அறிக்கையில் தோழமையோடு திருமா கூறியிருக்கிறார்.

  இன்று பல இடங்களில் திருமா போஸ்டர்–ஒரு இடங்களில் கூட பா ம க & வன்னிய போன்ற வார்த்தைகளை காணோம் —

  எல்லாம் சரி

  துப்பாக்கி படத்தின் பின்னூட்ட பெட்டியை மூடி வைத்து உள்ளீர்கள் அப்ப நமக்கும் ஜெயமோகனுக்கும் யென்ன வித்தியாசம்

  • நாகராஜ்,
   தகவலுக்கு நன்றி,
   நீங்கள் சொன்னபின்னர்தான் அது மூடியிருப்பதே கவனத்திற்கு வந்தது
   தற்போது பின்னூட்டப்பெட்டி திறக்கப்பட்டுவிட்டது

   தோழமையுடன்
   வினவு

 3. ஆனாலும் வன்னி அரசு சொல்வதில் உண்மை இருக்கிறது நக்சல் புரட்சியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தலித்களுக்கு அவர்கள் ஆயுதங்கள் கொடுக்கவில்லை அவர்களை பேரணிகளில் அணிவகுக்க மட்டுமேபயன்படுத்தி கொண்டார்கள்.

  • நக்சல் புரட்சியாளருடைய நோக்கம் மக்களுக்கு ஆயுதம் கொடுப்பது அல்ல, மக்களை ஆயுதம் ஏந்த வைப்பது

 4. வினவு,
  தமிழகத்தில் இருந்து ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் சிறந்த சமுதாய போராளிகள்.உங்கள் தளத்திற்கு தினமும் வருகிறார்கள்.குடும்ப சூழல் மற்றும் பணி தடை தான் அவர்களை கட்டி வைத்து உள்ளது. அராசங்க சுரண்டல்கள் , போலி ஜனநாயகம், வெத்து வேட்டு அரசியல்,ஜாதி,கம்யூனிஸ்ட் சித்தாந்தம்,தனி மனித உரிமை அத்து மீறல்கள்- இவற்றை கண்டு மனம் நொந்து தான் படையில் இணைந்து உள்ளனர்.சரியான நேரத்தில் சமுதாயத்திலும் போராட்டங்களை முன்னெடுத்து செல்வர்கள்.அராசங்க கூலிப்படை,கொழுத்த பன்றிகள் என்ற அடை மொழிகள் தேவையா? துப்பாக்கி சினிமாவிற்கு பின்னூட்டம்

 5. பாட்டாளி மக்கள் கட்சியை தமிழ் நாட்டில் வேரோடும், வேரடி மண்ணொடும் பிடுங்கி தூக்கி எறிய வேண்டும். டாக்டர் ராமதாஸுக்கு பல்லக்கு தூக்கும் தலித் தலைவர்கள் அரசியலில் அநாதைகளாக ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை. தமிழர்கள் ஒன்றுபட மார்க்சியமும், பெரியாரியமும் வழிகாட்டும்.

  • பெரியார் +மார்க்ஸ் ஒன்று சேரவே முடியாது .ரெண்டும் எதிர் துருவங்கள் !

  • It is very sad to note both the communities are Tamils in which majorities of them are in utter poverty and uneducated.Nobody in Tamilnadu to guide them and God alone can save them.

 6. வன்னிஅரசு வின் கருத்துகள் ஊறிப்போன ஒரு அரசியல் வாதியின் உளறலே! ஏனென்றால் கட்டப் பஞ்சாயத்து செய்து, பெற்றுக் கொடுக்கும் தொகையில் குறிப்பிட்ட விழுக்காட்டை கேட்டு வாங்கும் இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள், பேசுவார்கள்! ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளிடம் சாதிமறுப்போ அல்லது பகுத்தறிவோ ஏன் மனிதத் தன்மைகூட மிக அரிதானதுதானே! இவர்கள் போகும் வழியே இவர்களை இப்படி கீழே தள்ளுகிறது. ம க இ க வை ஊழல்வாத ஓட்டுக்கட்சிகளின் வரிசையில் சேர்த்துப் பேசுகிறார் என்றால் இவருக்கு முற்போக்கு, பொதுவுடமை, பெரியாரியம் ஏன் அம்பேத்கரியத்தைக் கூட நாம் இனி இவரிடம் எதிர் பார்க்கக் கூடாது.
  நண்பர் சேரன் அவர்களே… ஏன் பெரியாரியமும் மார்க்சியமும் ஒன்றிணைந்து செயல்பட முடியாது? தந்தை பெரியார் சோவியத் இரஷ்யாவுக்கு போய் வந்த பிறகு தன்னை எல்லோரும் தோழர் என்றே அழைக்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொன்னதன் காரணம் என்ன? பொதுவுடமை கொள்கைகள் மேலிருந்த ஈர்ப்புதானே! தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட பழைய பொதுவுடமையாளர்கள் பலருக்கு மறைமுக உதவி செய்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களைப் பாதுகாத்தது பெரியார் இயக்கத்தவர் தானே? பொதுவுடமையே தந்தை பெரியாரின் இறுதி எல்லையாக இருந்தது என்பதை அவரைப் படித்தவர்கள், அவரை உணர்ந்தவர்கள் உணர்வார்கள்! ம க இ க தோழர்களும் உணர்ந்தே உள்ளனர். ஏன் நமது ம க இ க தோழர்கள் கூட சிறீரெங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களையும்தானே உயர்த்திப் பிடித்தார்கள் கருவறைக்குள்ளே..? அதை சற்று எண்ணிப்பாருங்கள் பெரியார் தொண்டர்களை விலக்க மனம் ஒப்பாது! பெரியார் தொண்டர்கள் எப்போதுமே மார்க்சியத்துக்கு உடன்பட்டவர்களே! பெரியாரியத்தின் அடுத்த நிலையே பொதுவுடமைதான் உண்மையான பெரியார் தொண்டர்களுக்கு!

  • பெரியார் ஏகாதிபதியவாதி ,பெரியாரின் பரிணாம வளர்சிதான் இன்றைய திராவிட இயங்கங்கள் எனவே பெரியார் தத்துவம் என்றும் கம்யூனிஸ்ட் களுக்கு எதிர் நிலைதான் !

 7. தலித் மக்களின் விடுத்லைக்காக உண்மையாகவே போராடும் ம.க.இ.க வை இது போன்று ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுடன் இணைத்துப் பேசுவது என்பது நாகரீகமற்ற, மிகவும் கீழ்த்தரமான செயல். தலித் மக்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணித்து புரட்சிகர அமைப்புகளை நோக்கி வந்து கொண்டிருப்பதுதான் இவர்களின் வயிற்றெரிச்சலுக்குக் காரணம்.

 8. தோழர் பாலன் எங்கு இரட்டை தம்ளர் முறை ,கந்து வட்டி,சாதிய கொடுமைகளை எதிர்த்து சமர் புரிந்தாரோ அங்கு மீண்டும் சாதி வெறி தலைதுக்கி உள்ளது .அதை நாம் அனுமதிக்க போகிறோமோ ?அல்லது வெட்டி விழ்த்த போகிறோமோ ?என்பததுதான் உழைக்கும் மக்கள் முன் உள்ள கேள்வி ? நக்சல்பாரி பாரம்பரியத்தில் வந்த புரட்சிகர இயக்கங்கள் பின்னால் உழைக்கும் மக்கள் அணி திரள வேண்டும் .களைப்புவாத ,பிழைப்புவாத ,சந்தர்ப்பவாத சத்திகளை இனம் கண்டு மக்கள் முறியடிக்க வேண்டும் .அப்பொழுதுதான் சாதியற்ற ,வர்க்கம் அற்ற ஒரு சமத்துவ சமுதாயம் படைக்க முடியும் .

 9. Eve teasing and sexual harassment of school going girls by dalit boys is a major social problem in rural Tamilnadu.

  Vinavu, please travel in one of the rural buses during evening hours and you will know the truth. Many many rural girls have stopped schooling because of these harassment.

 10. நக்சல்பாரிகளை பிழைப்புவாதிகள் என்று குற்றம் சாடிய உண்மையான பிழைப்புவாதிகளை அம்பலபடுத்திய வினவுக்கு நன்றி ,

 11. திமிரி எழச் சொன்ன திருட்டுப் பூனை என்கே? அடங மருக்கச் சொன்ன புரச்சியாலன் எஙே? சிருத்தைகல் எலிகலாகப் போன கதையை வன்னியரசு கலிப்பரையில் அமர்ந்தேனும் சிந்திக்கட்டும். கேவலம்! சிருத்தைகல் தர்ப்போது கலைஙர் வேட்டிக்குல், ராமதாசுக்குச் செருப்பாய். நாக்கூசாத நாய் வேடம். தேர்தல் எலும்புக்காக. ஒரு ஆதாரத்தையாவுது காட்டட்டும் சிருத்தைகல்.

 12. ம.க.இ.க. நக்சல்பாரி அமைப்புகள் சமரசம் இல்லாமல் மக்களுக்காகப் போராடும்போது எதிர்த்து நிற்க முடியாத போலீசு தக்க தருணம் பார்த்து முன்னணித் தோழர்களை பொய் கேசுகளில் மட்டிவிடும்.இதே வேலையைத்தான் வன்னி அரசு இப்போது செய்திருக்கிறார்.இந்த விசயத்தில் பா ம கவும் வி சி கவும் ஒன்றே ஒன்றுதான்.ராமதாசு ஐயா எப்படி பிழைப்பு நடத்துகிறாரோ அதே மாதிரிதான் திருமா அன் கோவும் பிழைப்பு ஓட்டுகிறார்கள்.எனவேதான் இவர்களது கயவாளித்தனத்தை அம்பலப்படுத்தும் போது கோவம் கொள்கிறார்கள்.ம க இ க தோழமை அமைப்புகளைச் சேர்ந்த எவரேனும் ஒருவரை வன்னிஅரசு இனம் கட்ட வேண்டும்.இல்லாவிட்டால் அவர் மக்களால் காறி உமிழப்படுவார்.

 13. வன்னியரசுவோட கட்டுரை அரைவேக்காட்டு தனமாக உள்ளது. அதற்குநியயம் சொல்லி இன்னுமொரு கட்டுரை வேற கீற்றுல போட்டிருக்கு. அது அதை விட கொடுமையான மொக்கைய இருக்கு !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க