Thursday, April 15, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் வன்னிய சாதிவெறியைக் கண்டித்து தரும்புரியில் ஆர்ப்பாட்டம்!

வன்னிய சாதிவெறியைக் கண்டித்து தரும்புரியில் ஆர்ப்பாட்டம்!

-

நேற்று மாலை தருமபுரியில் பா.ம.க பொதுக்கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் சாதிவெறியர்கள் ராமதாஸ், காடுவெட்டி குரு, ஜீ.கே.மணி, அன்பு மணி போன்றோர் பேசியிருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களை சூறையாடி அவர்களின் பொருளாதாரத்தை கொள்ளையடித்த வன்னிய சாதிவெறி கும்பல் அந்த மக்களின் ஓலம் அடங்குவதற்குள்ளாக மீண்டும் சாதிவெறியை தூண்டிவிட கிளம்பியிருக்கிறது.

சாதிவெறி கும்பலிடமிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாக்க துப்பற்ற, வக்கற்ற அரசு சில பத்து நாட்களுக்குள்ளாகவே சாதிவெறியர்களின் பிரச்சாரத்திற்கு அனுமதியளித்திருக்கிறது. ஆனால் இந்த தாக்குதலை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய பெண்ணாகரம் பகுதி தோழர் நாகராஜை கைது செய்து சேலம் மத்திய சிறையில் தள்ளியிருக்கிறது. தமிழகம் முழுவதும் சாதி வெறியர்கள் வெளிப்படையாக கூட்டம் போட்டு கூச்சலிடுகிறார்கள், வன்முறையை தூண்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதை கண்டிப்பவர்களை சிறைகளில் தள்ளுகிறது.

28.11.12 புதன்கிழமை காலை தருமபுரியில் ’விவசாயிகள் விடுதலை முன்னணி’ தோழர்கள் பா.ம.க வின் சாதி வெறியாட்டத்தை கண்டித்து ராஜகோபால் பூங்கா அருகே பிரம்மாண்டமான பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்ட நாளன்று தருமபுரி நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்ட இடத்தில் சிறிது சிறிதாக சுமார் ஐநூறுக்கும் அதிகமானவர்கள் வந்து குவிந்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசு கும்பல் அதிர்ச்சியடைந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆர்ப்பாட்டத்தை நடத்தக்கூடாது என்றனர்.

சாதிவெறியை கண்டிக்கும் முழக்க அட்டைகள், பதாகைகள், செங்கொடிகள், செஞ்சட்டை அணிந்த தோழர்கள், குழந்தைகள், நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டி கிராம மக்களும் இன்ன பிற கிராம மக்களும் அணி திரண்டு சாதிவெறியர்களை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர்.

தொடர் முழக்கத்தை அடுத்து வி.வி.மு வட்டாரச் செயலாளர் கோபிநாத் கண்டன உரையாற்றினார். எங்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்ற காவல்துறை கடந்த ஏழாம் தேதி ஐந்து மணி நேரமாக தாக்குதல் நடந்த போது எங்கே போனது என்று கேட்டார்.

அடுத்து பேசிய ம.உ.பா.மை தருமபுரி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஜானகிராமன் பேசும் போது தாசில்தார் ஆபீசில் போய் நாங்கள் எல்லாம் வன்னியர்கள் என்றால் லஞ்சம் வாங்காமல் சான்றிதழ் கொடுத்துவிடுவாரா, அதே போல உங்கள் சாதியை சேர்ந்த வன்னிய கந்துவட்டிக்காரனிடமே போய் மீட்டர் வட்டியை குறைக்கச்சொன்னால் குறைப்பானா ? இது போல பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டி உழைக்கும் மக்கள் உழைக்கும் மக்கள் தான் அவர்கள் ஒன்றுமில்லாத ஓட்டாண்டிகள் தான். அவர்களுக்கு எதற்கு சாதி என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்த தாக்குதல் தடுத்து நிறுத்தப்படாத்தற்கு காரணம் போலீசு, நீதி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் என்று மொத்த அரசுமே தனி ஒரு அதிகார வர்க்க சாதியாக இருக்கிறது என்றார்.

அடுத்ததாக பேசிய தோழர் ஆம்பள்ளி.முனிராஜ் ராமதாஸ் வன்னிய மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையாவது நிறைவேற்றியுள்ளாரா, இல்லை. சாதிவெறியை தூண்டி மக்களை பிளவுபடுத்தி வைத்து அதில் ஆதாயம் காண்பது தான் இவர்களின் நோக்கம். இத்தகைய சாதிவெறி கட்சிகளோடு திருமாவளவன் கூட்டனி வைத்துக்கொண்டு அதை நியாயப்படுத்துவதையும் கண்டித்தார். தலித் மக்களின் விடுதலை தலித் அமைப்புகளில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

கண்டன உரைகளுக்கு பின்னர் மீண்டும் ஆர்ப்பாட்டம் துவங்கியது. விண்ணதிரும் முழக்கங்களுடன் போலீசு எச்சரித்ததையும் மீறி இரண்டு மணி நேரமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுற்றி நின்று நூற்றுக்கணக்கான மக்கள் கவனித்தனர்.

இந்த சாதிவெறி தாக்குதலை கண்டித்து சி.பி.ஐ, சி.பி.எம் இருவரும் பேருக்கு ஒரு பேரணி ஆர்ப்பாட்டம், விசி. ஆர்ப்பாட்டம், சில மா.லெ அமைப்புகள் தவிர வேறு எந்த ஓட்டுக்கட்சிகளும், தமிழ்தேசிய அமைப்புகளும் ஒரு சுவரொட்டியை கூட ஒட்டவில்லை. இவ்வளவு பிரச்சினைக்கிடையிலும் நாம் தமிழர் கட்சி 27-ம் தேதி தருமபுரி நகரில் மாவீரர் தின அரங்க கூட்டத்தை நடத்தியுள்ளது.

மேற்கண்ட அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் எல்லாம் பொதுவாக தாக்குதல், சாதிவெறி என்று தான் சுவரொட்டிகளிலும், பிரசுரத்திலும், முழக்கத்திலும் குறிப்பிட்டுள்ளனர். இது அவர்களுடைய அணிகள் மத்தியிலும், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பிறகு சிலர் மாற்றிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் வி.வி.மு மிகச்சரியாக வன்னிய சாதிவெறி என்று சாடியது. இதை நத்தம், அண்ணா நகர் பகுதி மக்களே நீங்கள் தான் சரியாக சொல்கிறீர்கள் என்று கூறினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாவட்ட எஸ்.பி. இனிமேல் யாரும் சாதி கட்சி பெயரை குறிப்பிட்டு பேசவோ, பிரசுரம் கொடுக்கவோ, போஸ்டர் ஒட்டவோ கூடாது என்று ஒரு உத்தரவிட்டிருக்கிறார். தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குள்ளேயே சாதிவெறியர்கள் மீண்டும் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதியளிக்கும் அரசு அந்த சாதிவெறியை எதிர்ப்பதற்கு அனுமதி மறுக்கிறது.

இந்த அரசு எந்திரத்திற்குள் தான் தேர்தல் பாதையில் சென்று ஓட்டுப்பொறுக்கி அதிகாரத்தை கைப்பற்றிவிடலாம் என்று சிலர் தலித் மக்களை நம்பச் சொல்கிறார்கள். உழைக்கும் மக்களின் பாதை நக்சல்பாரி புரட்சி பாதையா அல்லது திருடர்கள், பிழைப்புவாதிகளின் தேர்தல் பாதையா என்பதை உழைக்கும் மக்கள் விரைவில் உணர்த்துவார்கள்

 1. தொடர்ச்சியண போரட்டம் நடத்தி வன்ணிய சாதிவெறியை முறியடிப்போம்.

 2. ஆதிக்க சாதிவெறியை எதிர்த்து போராட்டம் நடத்தும் தோழர்களுக்கு , போராட்டம் தீவிரமடைய வாழ்த்துக்கள்…

  • Can you explain what is that they wrote that is one sided?, I read this whole story, and also read several other stories, I do not find anything biased or one sided. Am I missing something, can you be kind enough to highlight what you exactly see that I or others do not see?.

   Thanks,Saint

 3. //தாசில்தார் ஆபீசில் போய் நாங்கள் எல்லாம் வன்னியர்கள் என்றால் லஞ்சம் வாங்காமல் சான்றிதழ் கொடுத்துவிடுவாரா, அதே போல உங்கள் சாதியை சேர்ந்த வன்னிய கந்துவட்டிக்காரனிடமே போய் மீட்டர் வட்டியை குறைக்கச்சொன்னால் குறைப்பானா ?\\

  இந்த உண்மையை தான் திரும்ப, திரும்ப உரைக்க, உறைக்க வைக்க வேண்டியிருக்கிறது.

 4. மற்ற அமைப்புகளெல்லாம் பொத்தாம் பொதுவாக சாதி வெறியைக் கண்டித்து, ஆதிக்க சாதியைக் கண்டித்து என்றுதான் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் ம.க.இ.க தோழைமை அமைப்புகள் மட்டும் தான் சரியாக வன்னிய சாதி வெறியைக் கண்டித்து என்று சரியாக, தைரியமாகக் கூறுகிறார்கள்.

  தோழர்களின் சமரசமற்ற போராட்டம் தொடர வாழ்த்துகள்!

 5. Saturday, December 01, 2012
  Nazi Circles of Tamil Nadu Administration and the Casteist CM.
  In what is described as a War Like Disaster perpetrated by caste vanniyars in Dharmapuri, neither the Tamil Nadu Chief Minister, nor Prime Minister of India made any condemnation or called upon the victims to provide moral support. This inhuman behaviors of both Jayalalitha and Manmohan singh must be condemned by all the Dalit groups, we must declare that Jayalalitha’s govt is a Anti dalit and a Casteist ruling, and the current Tamil Nadu police a Casteist police system. Unless and until the Tamil Nadu chief minister publicly regret, make condemnation statements and visit the rampage site, the dalits must regard this administration a Nazi one.
  Why is this silence of the TN Govt and Central Manmohan Singhs govt?, why:
  Looking at the devastating level of caste abuse, atrocity and violence in Tamil Nadu, whether Paramakudi Police attack on Pallars during Sept 2011 where 7 dalits been killed by the state police or the recent vanniyar rampage in Dharmapuri district where more than 500 homes been burned down by caste virulent vanniyars, the silence of Jayalalitha (supposed to be the Chief Minister of Tamil Nadu) reveals that she has no clue as to what is going on in various parts of Tamil Nadu. Furthermore, in this seemingly unending caste war against Dalits, it looks like Jayalalitha is not only dump or silent, but she is also clueless. Therefore, the real question is who is running the Tamil Nadu administration and who is exactly calling the shots on the deadly TN Police, the answer lies in two caste groups that is encroached Jaya for decades thevars and vanniyars.
  http://upliftthem.blogspot.com/2012/12/nazi-circles-of-tamil-nadu.html

 6. It is so pathetic to see Tamilians divided by caste. Unless there is equality in human beings how can we declare India is an independent nation? Before the so called independence from the British all the people in India were slaves. Now in the name of caste local higher castes are keeping the so called lower castes slaves. So there is no real independence in this country.

 7. நாயக்கன்கொட்டாயில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று (03.12.2012) சென்னையில் வி.சி.க-CPI-CPM சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவனோ-நல்லக்கண்ணுவோ-ராமகிருஷ்ணனோ, சாதிகலவரத்தில் ஈடுபட்டவர்கள் வன்னியர்கள்தான் என்று சொல்லக்கூட திராணி இன்றி வன்முறையாளர்கள் என பொத்தாம் பொதுவாக பேசி உள்ளனர். இவர்களின் பிழைப்புவாதத்தையும் சநதர்ப்பவாதத்தையும் தோலுரிப்பதற்கு இது ஒன்று போதுமே.

 8. பாபர் மசூதி இடிப்புக் கலவரத்தின் போது கடவுளின் பெயரால் கலவரம் எதற்கு? என்று கூறிய புரட்சியாளர்கள் தானே சி.பி.ஐ, சி.பி.எம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க