Sunday, April 18, 2021
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் வன்னி அரசுவின் பித்தலாட்டத்தை தோலுரிக்கும் தோழர் ஆம்பள்ளி.முனிராஜ்!

வன்னி அரசுவின் பித்தலாட்டத்தை தோலுரிக்கும் தோழர் ஆம்பள்ளி.முனிராஜ்!

-

வன்னி அரசுவின் (விடுதலை சிறுத்தைகள்) பித்தலாட்டங்களை தோலுரிக்கும்
விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் ஆம்பள்ளி. மு
னிராஜ்.

அன்பிற்குரியவர்களே,

வம்பர் 7-ம் தேதி மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகிலுள்ள நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டியிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் மீது பா.ம.க. சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஊடகங்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் பிரச்சாரத்தின் மூலம் நாடே இதை அறிந்தது.

பா.ம.க தான் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது. இதை மக்கள் மத்தியிலிருந்து ஆய்வு செய்து, அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் வெளிக்கொண்டு வந்துள்ளோம். நான் இந்த பகுதியில் தங்கி நீண்டகாலமாக செயல்பட்டவன் என்கிற முறையில் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னிய மக்களை பற்றியும் இன்னபிற சாதியினர் பற்றியும் நன்றாக அறிவேன்.

1980-ல் தோழர் பாலன் இங்கு அரசியல் வேலை செய்துகொண்டிருந்த போதும், பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டு தியாகியாகி அவருக்கும் தோழர் அப்புவுக்கும் நாயக்கன்கொட்டாயில் சிலை வைத்த போதும், அதன்பிறகு 1989 வரை அப்பகுதியில் தங்கி அரசியல் வேலைகளை செய்திருக்கிறேன். தோழர்கள் அப்பு, பாலன் சிலை நிறுவும் கமிட்டிக்கு தலைமை பொறுப்பேற்றுள்ளேன். அங்கிருந்த முன்னணி புரட்சியாளர்கள் மற்றும் அனைத்து சாதி உழைக்கும் மக்களுடனும் ஐக்கியப்பட்டு இணைந்து தான் அந்த சிலைகள் நிறுவப்பட்டன. நக்சல்பாரி வரலாறு இம்மாவட்டத்தில் நீண்ட நெடிய துயரம் நிறைந்த பயணம் கொண்டது. இதனை சாதிக் கண்கொண்டு பார்க்கும் வன்னியரசு போன்ற பிழைப்புவாதிகள் தெரிந்திருக்க நியாயமில்லை.

அங்கு சிலைகள் நிறுவப்பட்டதானாலும், இரட்டை குவளை முறையை எதிர்த்த போராட்டமானாலும், கந்துவட்டி கொடுமைகளை எதிர்த்த போராட்டமானாலும் இது போன்ற பல நூறு பிரச்சினைகள் புரட்சிகர அமைப்புகளின் முன்னிலையில் தீர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அதை எப்போதும் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னியர்கள், இன்னபிற சாதி உழைக்கும் மக்கள் என அனைவரும் சேர்ந்தே செய்துள்ளனர். சிலை அமைப்பதில் உழைப்பு, உணவு, தண்ணீர்,பொருளாதாரம் அனைத்தும் அனைத்து சாதி மக்களின் உணர்வும், உழைப்பும் தான். அனைத்து சாதி மக்களும் ’தோழர்’  ’தோழர்’  என்கிற ஒரே உணர்வில் தான் செயல்பட்டு வந்தனர்.

உதாரணத்திற்கு, மாரவாடி என்கிற ஊரில் ஒரு தாழ்த்தப்பட்ட உழைப்பாளரின் மனைவியை கந்துவட்டிக்காரன் அடித்து உதைத்த போது அந்த பெண்ணுக்கு கருவே கலைந்து போனது. இந்த கந்துவட்டி கொடுமைக்காரன் தருமபுரியிலுள்ள ரவுடி ரங்கன் என்பவனின் தந்தை. கந்துவட்டிக்காரனின் சைக்கிளை பிடுங்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நட்ட ஈடு கொடுத்துவிட்டு சைக்கிளை வாங்கிக்கொள் என்று தோழர் பாலன் தலைமையில் முடிவு செய்து அறிவித்த போது, அதை ஏற்று அவனை மீட்டுக்கொண்டு போனவர் தான் இன்ஸ்பெக்டர் சிவகுரு. இந்த சம்பவத்தில் வன்னியரான அந்த கந்துவட்டிக்காரனை அடித்ததில் முன்னணியில் நின்றவர்கள் வன்னிய மக்கள் தான்.

அத்தகையவர்கள் இன்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை தாக்குகிறார்கள் என்றால் இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பா.ம.க சாதிவெறியர்களால் தூண்டப்பட்டு வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதே முதன்மையான காரணம். அதே போல தாழ்த்தப்பட்ட மக்களை வி.சி அமைப்பும் தவறாக வழிகாட்டி இழுத்துச்செல்ல முயற்சிக்கிறது. இப்படி தவறாக வழிகாட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு வன்னியரசின்  இந்த  பித்தலாட்டங்களே போதுமானது.

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய்க்கு அருகிலுள்ள அண்ணா நகரில் வன்னியர்கள் இருப்பதாகவும், அதில் கிருஷ்ணன் என்கிற வன்னியர் இருப்பதாகவும், அவர் தான் இந்த சாதிவெறி தாக்குதலை பின் நின்று நடத்தியதாகவும் அவர் ம.க.இ.க வைச் சேர்ந்தவர் என்றும் வன்னியரசு கூறியுள்ளார்.

அண்ணா நகரில் வன்னியர்கள் இருப்பதாக கூறுவது முதல் பொய். அங்கு தாழ்த்தப்பட்ட மக்களை தவிர வேறு எந்த சாதியினரும் இல்லை. இரண்டாவதாக தருமபுரி மாவட்டத்தில் ம.க.இ.க அமைப்பே இல்லை. வி.வி.மு என்கிற அதன் தோழமை அமைப்புதான் செயல்படுகிறது.

அண்னா நகரில் வி.வி.மு உறுப்பினரோ, ஆதரவாளரோ கூட இல்லை. எனவே இல்லாத ஒரு நபரை இருப்பதாகவும், இல்லாத ஒரு சாதியை இருப்பதாகவும், இல்லாத ஒரு அமைப்பை இருப்பதாகவும் பச்சை பொய்யை கூறுகின்றார் வன்னியரசு. இப்படி அந்த பகுதி பற்றி தெரியாத, நேரடி பரிச்சயம் இல்லாத, மாநிலத்தின் பிற மாவட்ட மக்களுக்கு தவறான தகவலை கொடுத்து பொய் பிரச்சாரம் செய்கிறார்.

இந்த அமைப்பின் தலைமை பொறுப்பில் இத்தகையவர்களும் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. உண்மையில் வன்னியரசுக்கு கொஞ்சமாவது நேர்மை, நாணயம் இருக்கிறது என்றால் இதே அண்ணா நகருக்கு வந்து அவர் கூறும் ம.க.இ.க கிருஷ்ணனை காட்டட்டும் பார்க்கலாம். எப்போது வருகிறார் என்று தகவல் கூறினால் நானும் வருகிறேன். சவாலை ஏற்கத் தயாரா ?

இப்படிக்கு

ஆம்பள்ளி.முனிராஜ்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
கிருஷ்ணகிரி மாவட்டம்.

 1. தொழில் நுட்ப பிரச்சினை காரணமாக பின்னூட்ட பெட்டி இதுவரை மூடியிருந்தது தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. வாசகர்கள் பின்னூட்டமிடலாம். நன்றி

 2. பிழைப்புவாதிகள் என்றைக்குமே சவால்களை ஏற்கமாட்டார்கள். சவடாலும் கோழைத்தனமும் பிழைப்புவாதிகளின் இருவேறு முகங்கள். தலித் பிழைப்புவாதம் நடத்தும் வன்னியரசு மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

  சவால் விடுத்துள்ள தோழர் முனிராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்!

 3. வன்னி அரசு போன்ற பிழைப்புவாதிகளுக்கு குலைக்கவும் அதிகாரவர்க்கத்திடம் வால் குலையவும் தான் தெரியும் . வன்னி அரசு மட்டுமல்ல, வி.சி.க வின் தலை முதல் வால் வரை எந்த அடிபொடிக்கும் சவாலை ஏற்கும் தைரியமும் நேர்மையும் என்றும் இருந்ததில்லை. இவர்களின் தலைவர் தெருமாவொளவன் தன்னை நாயினும் கீழாய் அசிங்கமாக கேள்வி கேட்ட இராஜபக்சேவிடம் பல்லிளித்து பசப்பியபடி பே3ச்சுவார்த்தை முடித்து வெளியே வந்ததே இவர்கள் கட்சியின் சுயமரியாதைக்கு ஒரு எடுத்துக் காட்டு.

  “ தலித் இளைஞர்கள் காதலிப்பதை கைவிட வேண்டும். அவர்கள் பொருளாதார ரீதியிலும் கல்வியிலும் முன்னேற வேண்டும்” என்று ஆதிக்க சாதித் திமிரில் பேசிய இராமதாசை நினைக்கும் போது நமக்கு கடுங்கோபமும் அறுத்தெறிந்து விட வேண்டாமா என்ற ஆத்திரமும் வருகிறது. இந்தப் பிழைப்பு வாத வி.சி.க.__________ கூட்டமோ, இராமதாசின் அறிக்கையை சமூக நல்லெண்ணத்துடன் வரவேற்கிறதாம்.

  இவனுங்க தான் தலித் மக்களுக்கு பாதுகாப்பாம்.. அதை எல்லாரும் நம்பனுமாம் ..

  வி.சி.க அசிங்கங்களே … உங்கள் “அடங்க மறு, அத்து மீறு, திரும்பி அடி” போன்ற முழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கேற்ற வசனங்கள் இதோ கீழே ..

  “(திராவிட காங்கிரஸ் கட்சிகளிடம்) நக்கிப் பிழை ,(ஆதிக்க சாதிகளிடம்) அமுக்கி வாசி , (தலித் மக்களை) நம்ப வைத்துக் கழுத்தறு.

  • அருமை “(திராவிட காங்கிரஸ் கட்சிகளிடம்) நக்கிப் பிழை ,(ஆதிக்க சாதிகளிடம்) அமுக்கி வாசி , (தலித் மக்களை) நம்ப வைத்துக் கழுத்தறு.

   • கொஞ்சம் கூட imagination இல்லை இந்த பதிலில். தரங்கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

 4. ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தால் இந்த இயக்கத்தின் செயல்பாட்டை ஒடுக்கப்படுகின்ற சமுதாயத்தில் அதன் தேவையை மறுக்கமுடியாது. மற்ற பிழைப்பு வாத கட்சிகளுக்கும், விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் மறுபுறம் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஒடுக்கும் முறையை எதிர்த்து போராடும் வலிமையை அளிக்கிறது. இந்திய அரசியல் சட்டம் வழங்காத பாதுகாப்பை, இந்திய நீதிமன்றம், காவல் துறை வழங்காத பாதுகாப்பை, எந்த புரட்சிகர இயக்கமும் வழங்காத பாதுகாப்பை, விடுதலை சிறுத்தைகள்தான் தலித் மக்களுக்கு பெற்று கொடுத்து கொண்டு இருக்கிறது. இதை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற்ற தலித் கிராமங்களில் ஆய்வு நடத்தினால் உண்மை புரியும். விடுதலை சிறுத்தைகளையும், திருமாவளவனையும் முன் நிறுத்திய பின்புதான் சாதிய உடலியல் ஒடுக்கு முறையிலிருந்து அந்த மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ள முடிந்தது. இந்த உண்மையை யாரால் மறுக்க முடியும்? நக்ஸலைட்டுகளின் கோட்டை என சொல்லப்பட்ட தருமபுரியில் சாதிய ஓட்டைகள் எப்படி விழுந்தன?தலித் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட எவனும் தன்னை பாதுகாத்துக் கொள்ள விடுதலை சிறுத்தைகளைதான் தேடுகிறான். ம.க.இ.க., ம,ஜ.இ.க. உட்பட எந்த புரட்சிகர இயக்கத்தின் பின்னால் தலித் மக்கள் இல்லை. சாதி ஒடுக்குமுறை தடுப்பதில் ம.க.இ.க. சாதித்ததை விட, விடுதலை சிறுத்தைகள் ஆயிரம் மடங்கு சாதித்துள்ளது. இதை சேலம், நாமக்கல், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. ஒருபுறம் அறுவறுக்கத்தக்க பிழைப்பு அரசியல் இருந்தாலும், மறுபுறம் ஒரு சமூக மாற்றத்தை விடுதலை சிறுத்தைகள் செய்துள்ளது. வெறும் பொருளியல் அடிப்படையிலான இந்திய சமுதாயத்திற்கு பொருந்தாத, மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதால் ஏற்படும் நடுநிலை பிழைகள் நீங்கள் காண்பது.

  • திருமா பிழைப்புவாதி தான் ஆனால் அவர் தான் தலித் மக்களுக்கு பாதுகாப்பளிக்கிறார் என்கிறீர்கள் இல்லையா ? பிழைப்புவாதியாக இருக்கக்கூடிய ஒருவர் எப்படி மக்களுக்கு நேர்மையாளராக நடந்துகொள்ள முடியும் ? இருக்க முடியாது என்பதற்கு உதாரணம் தான் கண்ணகி முருகேசன் கொலையில் வி.சி செய்த கட்டைப்பஞ்சாயத்து.

   இவர்கள் பிழைப்புவாதிகள் தான் ஆனால் இவர்களை விட்டால் வேறு நாதியில்லை என்றெல்லாம் பேசுவது அயோக்கியத்தனமானது, தலித் மக்களை ஏமாற்றுவதாகும், தலித் மக்களின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் இது போன்ற ஓட்டுப்பொறுக்கிகள் மீது நம்பிக்கை வைக்கச் சொல்வதாகும்.

 5. பார்பன கூலி, வர்ணாசிரம காவலர் என்பதாலேயே காந்தியின் சுதந்திர போரட்ட பங்களிப்பு அதன் தேவையும் , ஏற்படுத்திய மாற்றமும் கேவலமாகிவிடுமா?
  ஏகாதிபத்திய வாதிகளின் கைகூலி என விமர்சிக்கப்பட்ட அம்பேத்காரின் ஒடுக்குமுறைக்கெதிரான குரல் தேவையற்றதா?
  இந்திய சாதிய கட்டமைப்பையும், சாதிய கட்டமையில் சாத்தியமான மாற்றங்கள் குறித்தும் ஆழமான அறிவு இல்லாமல் வெரும் வரட்டு சித்தாந்ததையும் , நடைமுறைக்கும் தத்துவத்திற்கும் இடையே உள்ள பொருந்தாமை பற்றிய தெளிவின்மையால் வரும் பிரச்சனை இது.

  • என்ன இது வறட்டுத்தனமாக இருக்கிறது ? காந்தியை சுதந்திரப்போராட்ட தியாகி என்றும், அம்பேத்கரை ஏகாதிபத்திய கைக்கூலி என்றும் கூறுகிறீர்கள். என்ன ஆதாரம்.

 6. Vinavu, please read the article (which analyzed the root cause of this issue)in Naveena netrikan dated 07. dec. 2012 and give your views.

  I would like to know if all of your associations (Ma.Ka.E.Ka, Vi.Vi.Mu.Ka, Pu.Ja.Tho.Mu and etc) supports the people who suppress the EDUCATION OF GIRL CHILDREN in the name of eradication of caste?

 7. அம்பேத்கரையும் காந்தியையும் அப்படி விமர்சனம் செய்ததே புரட்சிகர அமைப்புகள் தானே?
  (வர்ணாசிரம காவலர், ஏகதிபத்திய கூலி)
  அவர்களின் சமூக பங்களிப்பு தேவையற்றதா, மாற்றம் எதுவும் இல்லையா அவர்களால்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க