Saturday, August 20, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க பேரம் படிந்தது - நாடகம் முடிந்தது!

பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது!

-


பேரம் படிந்ததுநாடகம் முடிந்தது!

______________________________________________

ஊழல்   ராணியும்     – மலை  முழுங்கி   மகாதேவனும்

-மெகாசீரியல்

_________________________________________________________________

டந்த  7 மாதங்களாக கிரானைட் மாபியா பி.ஆர்.பி – துரைதயாநிதி கும்பலுக்கு எதிராக ஊழல் ராணி ஜெயா நடத்தி வந்த மெகா சீரியலின் இறுதிக்காட்சி தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஜெயா – சசி கும்பல் – பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் மாபியாக்கள் – அரசு அதிகாரிகள் – அரசு வழக்கறிஞர்கள் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் – காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் இணைந்து ஊழல் எதிர்ப்பு மெகா சீரியலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

ஒலிம்பஸ்,மதுரா.சிந்து கிரானைட் முதலாளிகள் துரைதயாநிதி-செல்வராஜ்-ரபீக் ஆகியோருக்கு முதற்கட்டமாக பிணை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழகமக்கள் அனைவரும் கோமாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் மாபியாக்களை தண்டிக்கும் நோக்கத்துடன் ஜெ அரசு – மதுரை மாவட்ட நிர்வாகம் செயல்படவில்லை – சில பேரங்களை முன்வைத்துத்தான் இக்கண்துடைப்பு நடவடிக்கை என்பது தற்போது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா ஊழலுக்கு எதிராக உண்மையிலேயே சாட்டையைச் சுழற்றுகிறார், உச்ச,உயர்நீதிமன்றங்கள் தற்போது ஊழல் வழக்குகளில் கடுமையாக உள்ளன என்று கருதிவந்த பலருக்கும் சமீபத்தில் வந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சர்மாவின் தீர்ப்பு பலவற்றைத் தெளிவுபடுத்தியுள்ளது  என்பதுடன்  தமிழக அரசும்-நீதித்துறையும் பதிலளிக்க வேண்டிய சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

 • பி.ஆர்.பி  குவாரி  நடத்துவதை  ரத்து  செய்ய  இன்றுவரை  தமிழகஅரசு  நடவடிக்கை  எடுக்காதது   ஏன்? 
 • சட்டவிரோத குவாரி லீஸ்களை ரத்து செய்ய  உரிய நடவடிக்கை இல்லாதது ஏன்? 
 • பி.ஆர்.பியின் தெற்குத்தெரு தொழிற்சாலையை முடக்க நடவடிக்கை எடுக்காமல் நிர்வாக அலுவலகத்தை மட்டும் சீல் வைத்தது கூட சட்டவிரோதம் என தமிழக அரசே உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன? தவறை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? 
 • பி.ஆர்.பி நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகள்  இன்றுவரை  அகற்றப்படாதது  ஏன்? 
 • பி.ஆர்.பி  ஊழலுக்கு  துணை  போன அரசு அதிகாரிகள் மீது தொடர்நடவடிக்கை இல்லாதது ஏன்? 
 • போராடும் ஏழை மக்களிடம் வீரம் காட்டும் ஜெ யின் போலீசு பி.ஆர்.பி. மகன் சுரேஷ்குமார்அழகிரிமகன் துரைதயாநிதியை  கைது செய்யாமல்  விரல்  சூப்பிக் கொண்டிருப்பதேன்? 
 • சோ, தினமலரால் வியந்தோதப்படும் நிர்வாகத்திறமைமிக்க ஜெயா ஆட்சியின் மெத்தப்படித்த அதிகாரிகள்- அரசு வழக்கறிஞர்களுக்குஎந்த நடவடிக்கைக்கும் முன்பாக ஒரு நோட்டீஸ் தரவேண்டும் என்று தெரியாமல் போன மர்மம் என்ன? 
 • பி.ஆர்.பியின் வழக்கறிஞர்பி.ஆர்.பி செய்த குற்றம் என்ன? ஊழல் தொகை எவ்வளவு என்பதையாவது தமிழக அரசால் சொல்ல முடியுமா? ஏழு மாதங்களாக அரசாங்கம் என்ன கிழித்துக்கொண்டிருக்கிறது? என்ற கேட்டதற்கு பதில்சொல்லத் திராணியில்லாமல் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் திணறியது ஏன்? 
 • அப்பாவி கூடங்குளம் மக்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும் ஜெயா அரசு 54 கிரிமினல் வழக்குகள் உள்ள பி.ஆர்.பி யை குண்டர் சட்டத்தில் அடைக்காதது ஏன்? 
 • கடந்த 7 மாதங்களாக பதியப்பட்ட கிரிமினல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? 
 • தற்போது கிரானைட் மாபியாக்கள் எளிதில் ஜாமீனில் வெளிவர அரசே அனுமதிப்பது ஏன்? 
 • நூற்றுக்கணக்கான பென்சன் வழக்குகளை நிலுவையில் வைத்திருக்கும் உயர்நீதிமன்றம் கிரானைட் கிரிமினல்களுக்கு  விரைந்து  நீதி  வழங்கிய மர்மம் என்ன?  கைமாறிய தொகை எவ்வளவு? 
 • கடந்த 7 மாதங்களாக கிரானைட் ஊழலுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாகக்காட்டி வந்த தமிழக அரசு சட்டப்படி ஒரு நடவடிக்கை கூட எடுக்காமல் பி.ஆர்.பி யை மீண்டும் கொள்ளையடிக்க அனுமதித்திருப்பதின் பின்னணி பேரங்கள் என்ன? ஜெயாவின் அடுத்த பாராளுமன்ற தேர்தல் செலவு முழுவதும் லஞ்சமாக பெறப்பட்டது என்கிறார்களே உண்மையா? 
 • தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய கிரானைட் ஊழலில் இதுவரை மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் வாய் மூடி மவுனமாயிருப்பதேன்? காங்கிரஸ் கைமேல் பெற்ற பலன் என்ன? 
 • காங்கிரஸ். தி.மு.க. ம.தி.மு.க. பா.ம.க. வி.சி. தா.பாண்டியன், நெடுமாறன், சீமான்……..உள்ளிட்டோர் கிரானைட் ஊழலில் மவுனிப்பதன் மர்மம் — செஞ்சோற்றுக் கடனா? 

ஒட்டுமொத்தத்தில் தமிழக அரசு பி.ஆர்.பி க்கு எதிராக ஒன்றும் புடுங்கவில்லை என்பதுடன் பி.ஆர்.பி கொள்ளையடித்த மக்கள் பணத்தில் ஒரு பகுதியை ஜெயா – சசி கும்பல்- அனைத்து ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் -அரசு அதிகாரிகள் – அரசு வழக்கறிஞர்கள்-உயர்நீதிமன்ற நீதிபதிகள் -காவல்துறை அதிகாரிகள் – பொதுப்பணித்துறை- கனிமவளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

கடந்த இருபது ஆண்டுகளாக இந்த ஊழலுக்குத் துணை நின்ற இதே அதிகாரவர்க்கம் பி.ஆர்.பி போன்ற மக்கள் சொத்தை சூறையாடும் முதலாளிகள் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என்பதுடன் எடுப்பதாகப் பம்மாத்து காட்டுவது கூடுதல் எலும்புத்துண்டுகளை கவ்வுவதற்கே என்பதும் உள்ளங்ககை நெல்லிக்கனி.

பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் முதலைகளோ –- அம்பானி,டாடா உள்ளிட்ட தரகு முதலாளிகளோ– இன்னும் இந்நாட்டின் கனிமவளங்களையெல்லாம் மூர்க்கத்தோடு சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களோ—அடித்த, அடித்துவரும், அடிக்கஇருக்கும் அனைத்துக் கொள்ளைக்குமான அடிப்படை இந்திய அரசு பின்பற்றிவரும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கைதான்.இது சட்டப்படிதான் அரங்கேறுகிறது என்பது மிகவும் முக்கியமானது.அதில் ஏற்படும் சில பணப்பகிர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கே வழக்கு,வாய்தா. பி.ஆர்.பி. பிரச்சனையும் அவ்வாறே.

மேலும் இன்று  சட்டமே ஒரு சார்பாக மிக விரைந்து மாற்றப்பட்டு வரும் நிலையில் பாராளுமன்றம்-நீதிமன்றம்-நிர்வாக அலகுகள் அதற்க்குத் துணைநிற்பது தவிர்க்கைஇயலாதது. இதை கிரானைட் ஊழலில் மட்டுமல்ல, ஸ்பெக்ட்ரம்-இஸ்ரோ-நிலக்கரி-சில்லறை வணிகத்தில் வால்மார்ட் உள்ளிட்ட சமீபத்திய ஊழல்களில் அரசும்-உச்சநீதிமன்றமும் எடுக்கும் நிலைப்பாடுகளில் இருந்து தெளிவாக உணர முடியும்.

ஆக இன்றைய ஒருசார்பு சட்டப்படி பி.ஆர்.பி போன்ற ஊழல் பெருச்சாளிகளையும் -துணைநிற்கும் – அதிகாரவர்க்கத்தையும் தண்டிக்கவே முடியாது என்பதே நிதர்சன உண்மை. ஆக இனி வெறுமனே சட்டத்தையும்,கோர்ட்டையும் நம்பிக்கொண்டிராமல் பி.ஆர்.பி. போன்ற கிரிமினல் முதலாளிகளை முச்சந்தியில்    நிறுத்தி  செருப்பால் அடித்துத் தண்டிக்க என்று மக்கள் தயாராகிறார்களோ அன்றே  ஊழல் ஒழியும்.

_____________________________________

 மனித உரிமைப்பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டம். 9443471003.9865348163
______________________________________

 1. வரும் 15 ஆம்தேதி சனிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரிவீதியிலுள்ள ஓட்டல் பியர்ல்ஸ்-ல் விவசாயிகள் விடுதலை முன்னணி – மக்கள் கலை இலக்கியக் கழகம் – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- மதுரை மாவட்டம் வழங்கும் “கிரானைட்: மெகா கூட்டணி!, மகா கொள்ளை!” – எனும் ஆவணப்படம் (டி.வி.டி) வெளியீட்டு விழாவும், கருத்தரங்கமும் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!

  • மிக நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.

   வரும் 17 ஆம் தேதி திங்கட் கிழமை மாலை 4 மணிக்கு காவிரி நீர் உரிமையில் அனைத்து ஓட்டுச் சீட்டுக் கட்சிகளின் துரோகத்தினை அம்பலபடுத்தும் விதமாக தஞ்சையில் வி.வி.மு மற்றும் தோழமை அமைப்புகளின் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிகிறேன்.அனைவரும் வருக!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க