Sunday, May 4, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்10 நிறுவனங்கள் - ஒரு இலட்சம் பேர் வேலை நீக்கம்!

10 நிறுவனங்கள் – ஒரு இலட்சம் பேர் வேலை நீக்கம்!

-

2012ம் ஆண்டு 10 பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் உலக அளவில் 1 லட்சம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்திருக்கின்றன. பொருளாதார நெருக்கடியின் காரணமாக தமது செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவை அறிவித்துள்ளன. இந்த நிறுவனங்களின் பட்டியல் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது.

நிறுவனம்

துறை

   வேலை இழப்பு

குறிப்பு

எச்பி கணினி,
கணினி சேவை

27,000

$3.50பில்லியன் சேமிப்பு

கூகுள் இணையம், ஐடி

4,000

மோட்டரோலா பிரிவு

சிட்டிகுரூப் வங்கி, முதலீடு

11,000

$1.0 பில்லியன் சேமிப்பு

ஏஎம்ஆர் விமானப்
போக்குவரத்து

14,000

அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

பெப்சி உற்சாக பானம்

8,700

2014ல் $1.50 பில்லியன் சேமிப்பு

மெட்லைப் நிதி, காப்பீடு

4,300

வீட்டுக் கடன் பிரிவு

ஹோஸ்டஸ் பிராண்ட்ஸ் பேக்கரி
உணவுகள்

18,500

திவால்

ஜேசி பென்னி ஆடை விற்பனை

4,700

மறு சீரமைப்பு

பிராக்டர் & கேம்பிள் நுகர்வுப்
பொருட்கள்

4,100

4 ஆண்டுகளில் $10 பில்லியன் சேமிப்பு

மார்கன் ஸ்டேன்லி பங்கு வர்த்தகம், முதலீடு

3,200

99,500

ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி நிறுவனங்கள் தமது லாப வேட்டை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதுதான் முதலாளித்துவ தனியுடமையின் கோர முகம். சந்தை வாங்கல்/விற்றல் அடிப்படையில் முதலாளிகளை சுதந்திரமாக இயங்க விட வேண்டும் என்ற தனியார்மய, தாராள மய, உலகமய கோட்பாட்டுகளுக்கான விலையாக சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஊழியர்கள்தான் தம் வாழ்வாதாரங்களை பலி கொடுக்கிறார்கள்.

10 நிறுவனங்கள் மட்டும் ஒரு இலட்சம் பேரை வேலை நீக்கம் செய்திருக்கின்றன என்றால் உலக அளவில் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் நீக்கியிருக்கும் ஊழியர்கள் கோடிகளில் இருப்பது உறுதி.

நீலச் சட்டை, வெள்ளைச் சட்டை, காக்கிச் சட்டை என்று எந்த வகை ஊழியர்களாக இருந்தாலும் ஒன்று சேர்ந்து தமது உரிமைகளுக்காகவும் நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் போராடுவதுதான் ஒரே தீர்வு.

படிக்க