Sunday, April 18, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் 10 நிறுவனங்கள் - ஒரு இலட்சம் பேர் வேலை நீக்கம்!

10 நிறுவனங்கள் – ஒரு இலட்சம் பேர் வேலை நீக்கம்!

-

2012ம் ஆண்டு 10 பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் உலக அளவில் 1 லட்சம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்திருக்கின்றன. பொருளாதார நெருக்கடியின் காரணமாக தமது செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவை அறிவித்துள்ளன. இந்த நிறுவனங்களின் பட்டியல் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது.

நிறுவனம்

துறை

   வேலை இழப்பு

குறிப்பு

எச்பி கணினி,
கணினி சேவை

27,000

$3.50பில்லியன் சேமிப்பு

கூகுள் இணையம், ஐடி

4,000

மோட்டரோலா பிரிவு

சிட்டிகுரூப் வங்கி, முதலீடு

11,000

$1.0 பில்லியன் சேமிப்பு

ஏஎம்ஆர் விமானப்
போக்குவரத்து

14,000

அமெரிக்கன் ஏர்லைன்ஸ்

பெப்சி உற்சாக பானம்

8,700

2014ல் $1.50 பில்லியன் சேமிப்பு

மெட்லைப் நிதி, காப்பீடு

4,300

வீட்டுக் கடன் பிரிவு

ஹோஸ்டஸ் பிராண்ட்ஸ் பேக்கரி
உணவுகள்

18,500

திவால்

ஜேசி பென்னி ஆடை விற்பனை

4,700

மறு சீரமைப்பு

பிராக்டர் & கேம்பிள் நுகர்வுப்
பொருட்கள்

4,100

4 ஆண்டுகளில் $10 பில்லியன் சேமிப்பு

மார்கன் ஸ்டேன்லி பங்கு வர்த்தகம், முதலீடு

3,200

99,500

ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி நிறுவனங்கள் தமது லாப வேட்டை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதுதான் முதலாளித்துவ தனியுடமையின் கோர முகம். சந்தை வாங்கல்/விற்றல் அடிப்படையில் முதலாளிகளை சுதந்திரமாக இயங்க விட வேண்டும் என்ற தனியார்மய, தாராள மய, உலகமய கோட்பாட்டுகளுக்கான விலையாக சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஊழியர்கள்தான் தம் வாழ்வாதாரங்களை பலி கொடுக்கிறார்கள்.

10 நிறுவனங்கள் மட்டும் ஒரு இலட்சம் பேரை வேலை நீக்கம் செய்திருக்கின்றன என்றால் உலக அளவில் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் நீக்கியிருக்கும் ஊழியர்கள் கோடிகளில் இருப்பது உறுதி.

நீலச் சட்டை, வெள்ளைச் சட்டை, காக்கிச் சட்டை என்று எந்த வகை ஊழியர்களாக இருந்தாலும் ஒன்று சேர்ந்து தமது உரிமைகளுக்காகவும் நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் போராடுவதுதான் ஒரே தீர்வு.

படிக்க

 1. நீலச் சட்டை, வெள்ளைச் சட்டை, காக்கிச் சட்டை என்று எந்த வகை ஊழியர்களாக இருந்தாலும் ஒன்று சேர்ந்து தமது உரிமைகளுக்காகவும் நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் போராடுவதுதான் ஒரே தீர்வு.))))))))))))

  ஒழுங்கா வேலை பார்க்கிறவனையும் தூண்டி விட்டு, அவனையும் நடுத்தெருவில் நிறுத்துவது தானே கம்மினிஸ்ட்களின் வேலை.

  • நீலச் சட்டை, வெள்ளைச் சட்டை, காக்கிச் சட்டை என்று எந்த வகை ஊழியர்களாக இருந்தாலும் ஒன்று சேர்ந்து தமது உரிமைகளுக்காகவும் நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் போராடுவதுதான் ஒரே தீர்வு.////

   ப்ரண்ட்ஸ்!!!

   சரியான திர்வு இதுவாகத்தான் இருக்க முடியும். ஒன்றுசேர் புரட்சி செய்.

  • 10 பேரு டீம்ல, ஆறு பேர வீட்டுக்கு அனுப்பிட்டு 4 பேரு வேலை பாக்கணும்னு நிலைமையில, அந்த நாலு பேரு லிஸ்டுல இடம் பிடிச்சுடணும்னு துடிப்பதுதான் “ஒழுங்கா வேலை பார்ப்பது”, சரியா ப்ரண்ட்ஸ்?

  • என்ன நடந்தாலும் அடிமையை இருபது தான் கம்யூனிஸ்ட் எதிர்பாலர்களின் கொள்கை.

 2. கோடிக்கணக்கானவர்களை இப்போது தெருவில் நிற்க வைத்திருப்பது யார் நண்பா ?

 3. //ஒழுங்கா வேலை பார்க்கிறவனையும் தூண்டி விட்டு, அவனையும் நடுத்தெருவில் நிறுத்துவது தானே கம்மினிஸ்ட்களின் வேலை//

  எனக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை இவர்கள் ஏன் ஜ.டி கம்பெனிகளில் இன்னும் சங்கம் யூனியன் என எதும் ஆரம்பிவிக்கவில்லை..

  சங்கம் இல்லாமலேயே எல்லோரையும்.. வீடுக்கு அனுப்பி நடுத்தெருவில் நிறுத்திவிடுகிறார்கள் என்பதலா..???

 4. வினவு டாட் காமில் வேலை போட்டுத்தர வேண்டியதுதானே…இது என்ன கவர்மென்ட்டு வேலையா…நிரந்தரம் என்று தெரிந்ததும் வேலையே செய்யாம யூனியனை காட்டி ஏச்சுப் பிழைக்கிறதுக்கு…தனியாரில் வேலை பார்த்தவனால் வேற எந்த வேலையையும் தேடிக்கொள்ள முடியும் சுய தொழிலும் செய்ய முடியும். கவர்மென்ட் ஆளுன்னா டேபிளுக்கு அடில கையை விட்டு காசு கேக்கத்தான் லாயக்கு.வேலை நிரந்தரம்னா எப்படி வேலை செய்வானுங்க…முன்னே வருவாய் இருக்கப்போய்த்தானே ஆள் வேலைக்கு எடுத்தாங்க…இப்ப குறையும்போது விலக்கமும் சகஜம்தான்….

  • munney varuvayil palakodi sethana intha pavi, antha palakodiya pankittu koduppana, anal evarakal(ulaipalikal) illiyna avanukethu kodi, pala gudumpa pillikal ulaykkamal oruthen(muthalali) kuduppam mattum officela ulacha(kutthavacha)avanukkethu kodi, sothu.

  • யூனியனில் இருப்பவன் எல்லாம் வேலை செய்ய மாட்டான் என்றால், தமிழனோட கடவுள் வந்த ஜீ பூம்பா செய்து உற்பத்தி செய்து விட்டாரா. முதலாளி லாபம் பார்த்து விட்டார். அதை தொழிலாளி பறித்து கொண்டான். அப்படியா?

 5. you have to take it in a different way,like those companies to retain other employees and provide jobs lay offs are important otherwise if all those companies are shut down for food only shit do u want that to happen,i think the author in this article is biased.i am sorry to say that

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க