Friday, December 2, 2022
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஎன்ன கொடுமை சார் இது?

என்ன கொடுமை சார் இது?

-

மதுரையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வெளியிட்டிருக்கும் துண்டுப் பிரசுரம்:

_________________________________________________________________________

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் நீதித்துறையா?
என்ன கொடுமை சார் இது?

நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் சிறப்பாக சேவை

செய்த, செய்துகொண்டிருக்கிற தியாகிகள்  பி.ஆர்.பி-துரை தயாநிதி வகையறா-தொகையறாவுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது!தியாகிகள் தங்கள் கொள்ளையை வழக்கம் போல் தொடரலாம்!
கூடுதலாக ஜனவரி 21 வரை இருக்கும் வழக்கு-இல்லாத வழக்கு-வந்த வழக்கு-வராத வழக்கு-வரப்போகும் வழக்கு-வரவே வராத வழக்கு எதிலும் தியாகி பி.ஆர்.பழனிச்சாமியை கைது செய்யக் கூடாது!—மதுரை உயர்நிதி(!)மன்றம் உத்தரவு!உத்தரவு!உத்தரவு!

இவ்வுத்தரவின் மூலம் சகலமானோருக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால்!

 • 5 பவுன் செயினை அறுத்தவன்!
 • 5 மூட்டை ரேசன் அரிசி கடத்தியவன்!
 • 5 யூனிட் மணல் கடத்தியவன்!

ஆகிய கடும் குற்றங்களில் ஈடுபட்ட நபர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இனி ஜாமீன்     வழங்கப்படமாட்டாது—வழங்க நேரமும் இல்லை!
அதே சமயம்

 • 1000 குடும்பத்தின் தாலி அறுத்தவன்!
 • 1000 விவசாயிகளின் கழுத்தை அறுத்தவன்!
 • 1000 கோடி வரி ஏய்ப்பு செய்தவன்!
 • 10,000 ஏக்கர் நிலத்தை வளைத்தவன்!
 • 1,00,000 கோடி கொள்ளையடித்தவன்!

குறிப்பாக கடை ஏழு வள்ளல்கள் ஆரி,ஓரி,காரி,அதியமானுக்குப்…… பின்பு வந்த அவர்கள் வரிசையில் சேரக்கூடிய —அரசியல்வாதிகள்-அதிகாரிகள்—ஏன் நம்ம நி(!)தித்துறைக்கும் –எலும்புத்துண்டுகளை

எண்ணாமல் அள்ளி வீசக்கூடிய —தியாகி பி.ஆர்.பி. போன்ற வள்ளல் பெருந்தகைகளுக்கு

 மட்டுமே இனி உயர்….நிதி….மன்றத்தில்……ஜாமீன் வழங்கப்படும்!

பி.ஆர்.பி போன்ற சிறப்புத்தகுதி வாய்ந்த நபர்கள் வேறு யாரேனும் இருந்தால்……குறிப்பாக உயர்நிதித்துறையை அணுகும் முறை தெரியாமல்…..ஒரு சில வழக்குகளுக்காக நீண்ட           நாட்களாக சிறையில் வாடும்………சுரங்க மாபியா கர்நாடக ரெட்டி சகோதரர்கள்…….ஆந்திர ஜெகமோகன் ரெட்டி……..உள்ளிட்ட பி.ஆர்.பி.யின் சகலைகள் உடனே உச்சநிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து பிணை மனுக்களை மதுரை உயர்நிதிமன்றத்திற்க்கு மாற்றி வந்தால்…..வந்தவுடன் முதல்போனியாக உங்களுக்கு நீதி வழங்கப்படும்-எங்களுக்கு வேரெங்கும் கிளைகள் கிடையாது-சென்னை பாரிமுனை-மதுரை உலகனேரியில்-மட்டுமே உண்டு! இடைத் தரகர்களை நம்ப வேண்டாம்!

குறிப்பு:

 1. இங்கு எந்த சூழலிலும் நீதி வழுவாது சரத்து 14-இன் படி சமத்துவம் பேணப்படும்.செஞ்சோற்றுக்கடனுக்காக தி.மு.க வின்  துரை தயாநிதிக்கு பிணை வழங்கினாலும்-அ.தி.மு.க வின் ஓ.பி.எஸ் தம்பிக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
 2. பி.ஆர்.பி-அழகிரி குடும்பத்தினர் அடிக்கடி எங்கள் கிளையில் நீதி பெற வருவதால் 2012-ன் சிறந்த வாடிக்கையாளர் விருது இவர்களுக்கு வழங்கப்படுகிறது.
 3. கிறிஸ்துமஸ்,புத்தாண்டு,பொங்கலை ஒட்டி கிரானைட் போன்ற பெரிய வழக்குகள் தாக்கல் செய்வோருக்கு மற்றொரு வழக்கில் இலவசமாக நீதி வழங்கப்படும்.கண்டிசனும் கிடையாது.இச்சலுகை ஜனவரி 30 வரை மட்டுமே!
 4. தியாகி  பி.ஆர்.பி நமது உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலருக்கு நெருக்கமானவர் என்பதாலும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை  பி.ஆர்.பி-இன் காரில்தான் அழைத்து வந்தோம் என்பதாலும்  பி.ஆர்.பி-க்கு நீதித்துறை நன்றிக்கடன்பட்டுள்ளது என்பது நினைவு கூரத்தக்கது.

__________________________________________________________________________

என்ன கொடுமை சார் இது?

அட,இன்னுமா நீதித்துறையை இந்த ஊர் உலகம் நம்புது?

__________________________________________________________________________

இவ்வாறாக சமத்துவப்பாதையில் பயணிக்கும் உயர்நிதிமன்றத்தைப் பாராட்டி 2012-ல் விடை பெறுவது

மனித உரிமைப்பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு.

மதுரை மாவட்டம்.        9865348163.

________________________________________________________________________

 1. ஏன் வினவு சிம்ப்பிளா அயோக்கியர்களின்னு முடிச்சிட்டிங்க!

  திருடன் குடிகாரன் சூதாடி பிக்பாக்கெட் மொள்ளமாரி முடிச்சவிக்கி பொம்பல பொறிக்கி கஞ்சாவித்தவன் சரக்குஒட்டினவன் ஆடு,கோழி திருடன் இன்னும் எக்ஸ்ஸட்ரா எக்ஸ்ஸட்ரா இது போன்றவர்களின் மொத்த கூடாரமும் காவல்துறையும் நீதிமன்றங்களும் தானே!!
  இல்லன்னா அப்துல்கலாமுக்கு அரஸ்ட் வாரண்ட்டு அனுப்ப முடியுமா?
  பீச்ல சுத்தின லவ்வர்ஸ்கிட்ட நகைய ஆட்டைய போட முடியுமா?
  எப்படியோ அருமையான போஸ்ட்
  நன்றி.

 2. நீதித்துறை நன்றாக தான் உள்ளது. ஆனால் அத்துறைகளில் இருக்கும் நீதிபதிகள் தான், பணத்திற்கோ, மதத்திற்கோ அடிமையாகி விடுகிறார்கள். இது போன்ற ஏதேனும் வெறி கொண்டவர்கள் இருக்கும் வரை , நம் நாட்டு மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 3. 40 சத வீத நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று யாரோ சொன்னாங்களே! அது இதுவா இருக்குமோ?

 4. /// அட,இன்னுமா நீதித்துறையை இந்த ஊர் உலகம் நம்புது? ////

  அது அவங்க தலவிதி. ( விதியை மாற்றும் வித்தை தெரிந்தவர்களை சந்திக்காதவரை )

 5. சாமனியர்களுக்கு மட்டும்தான் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது நல்லாவே புரிஞ்சு போச்சு !

 6. I know a judge who always gets money for his judgement. He uses the cash money for alcohol. He has no inhibitions and thinks it is the right thing. I think of the people who think that justice is in the court system. Humbug !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க