Friday, May 2, 2025
முகப்புசெய்திரோகிணி : ஒரு கனவு கருகிய கதை !

ரோகிணி : ஒரு கனவு கருகிய கதை !

-

ரோகிணிதான் படிக்கும் தனியார் பள்ளி தாளாளர் தனது நட்பை கொச்சைப்படுத்தி பலர் முன்னிலையில் பொது இடத்தில் திட்டியதால், அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்திருக்கிறாள் 11ம் வகுப்பு மாணவி ரோகிணி.

இன்றைய அரசு கொள்கைகள் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கின்றன. சாதாரண உழைக்கும் மக்கள் கூட வட்டிக்கு கடன் வாங்கியாவது வீடு, நிலத்தை விற்றாவது தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண பலம், ஆள் பலம், அரசியல் பலம் இவற்றைக் கொண்டு தனியார் பள்ளிகளை நடத்தும் கல்வித் தந்தைகள் அவர்கள் மனம் போன போக்கில் ஆயிரக்கணக்கான சட்டதிட்டங்களை வைத்துக்கொண்டு, மாணவர்களையும் பெற்றோரையும் ஆட்டிப் படைக்கின்றனர்.

ரோகிணி படித்த தனியார் பள்ளியின் தாளாளர், திருமணமான இரண்டு குழந்தைகளின் தந்தையான ‘கௌரவமான’ மனிதன். ஒரு மாணவனும் மாணவியும் பேசினாலே அவர்களை “காதலர்கள்” என்று வசை பாடி மாணவர்களை ஒடுக்கும் அவன் ஈரினச் சேர்க்கையில் நாட்டம் உள்ள ஆண்களைத் தேடி இணையத்தில் அலைபவனாக இருந்திருக்கிறான்.

காவல் துறையும் நீதித் துறையும் தனது கேவலமான நடத்தையால் ரோகிணியை தற்கொலைக்குத் தூண்டிய பள்ளியின் தாளாளரிடம் கூலி வாங்கிக் கொண்டு அவன் மீதான வழக்கை இழுத்தடித்து ஒரு ஆண்டுக்குப் பிறகும் அவனை சுதந்திரமாக நடமாட விட்டிருக்கின்றன.

கும்பகோணத்தில் 94 குழந்தைகளை தீக்கு இரையாக்கிய தனியார் பள்ளி உரிமையாளர்களை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் தண்டிக்காமல் இருக்கும் சட்டமா ஒரு மாணவியின் தற்கொலைக்கு நியாயம் வழங்கப் போகிறது?

மேல் விபரங்களுக்கு நடந்ததை விரிவாக பதிவாக்கியுள்ள சவுக்கு தளத்திற்கு சென்று படிக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க