Friday, August 19, 2022
முகப்பு உலகம் ஈழம் பாலச்சந்திரன் படுகொலை: இந்தியாவிற்கு பங்கில்லையா?

பாலச்சந்திரன் படுகொலை: இந்தியாவிற்கு பங்கில்லையா?

-

ந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலை பற்றிய ஆதாரங்கள் புதிது புதிதாக வெளியாகின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல்4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்திருக்கும் ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஈவு இரக்கமின்றி படு கொலை செய்யப்பட்டதைப் பற்றிய ஆதாரங்கள் வெளியாகியிருக்கின்றன.

சென்ற ஆண்டு வெளியான சேனல்4 ஆவணப்படத்தில் பாலச்சந்திரன் மிக நெருக்கமான தூரத்தில் சுடப்பட்டதற்கான ஆதாரங்களை தடயவியல் நிபுணர் டெரிக் பவுண்டர் விளக்கியிருந்தார்.

“அவன் மீது 5 துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருக்கின்றன, இங்கே, இங்கே, இங்கே, மற்றும் இந்த இடத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு காயங்கள். இதுதான் முதலில் சுடப்பட்ட காயமாக இருக்க வேண்டும். அதைச் சுற்றி வெடிமருந்து புகையும் துகள்களும் படிந்திருப்பதால் அது அழுக்காக தெரிகிறது. இதனால் சுடப்பட்ட ஆயுதத்துக்கும் பையனின் உடம்புக்கும் தூரம் 2 அல்லது 3 அடிக்குள்தான் இருந்திருக்கும் என்று தெரிகிறது. அவன் கையை நீட்டி தன்னை கொன்ற துப்பாக்கியை தொட்டிருக்க முடியும். இந்த காயம் பெற்றவுடன் அவன் பின் நோக்கி விழுந்திருக்கிறான். அதன் பிறகு இந்த இரண்டு காயங்களையும் பெற்றிருக்கலாம். அவை கீழ் பகுதியில் மழுங்கலாக இருப்பது, குண்டுகள் உடம்பில் மேல் நோக்கி சென்றன என்று காட்டுகின்றது. அவனது இடது தோளின் மேல் பகுதியில் சந்தேகத்துக்கிடமில்லாத ஒரு வெளியேறும் காயம் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே சுடுபவர் அவன் தரையில் விழுந்து கிடக்கும் போது அவன் காலுக்கு அருகில் நின்று கொண்டு மேல் நோக்கி சுட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது ஒரு கொலை, சந்தேகமில்லாத படுகொலை”.

“உடல் ரீதியான சித்தரவதைக்கான அறிகுறிகள் எதுவும் உடலில் தென்படவில்லை. ஆனால் அவன் இருந்த நிலைமையை நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. அவனுக்கு அருகில் 5 உயிரிழந்த ஆண்களை பார்க்கிறோம். அவர்கள் இவனுக்கு முன்னதாக கொல்லப்பட்டிருக்கலாம். அவன் கண்கள் கட்டப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை என்பதும் அவன் காலருகில் நின்று கொண்டிருக்கும் ஒருவனால் சுடப்பட்டிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது. எனவே, இதுவே ஒரு வகையான உளவியல் சித்திரவதைதான்.”பாலச்சந்திரன்

நேற்று வெளியான புகைப்படங்கள் இதை உறுதி செய்கின்றன. 12 வயது சிறுவன் பாலச்சந்திரன் அரைக்கால் சட்டை அணிந்து மேல் சட்டை அணியாமல் ஒரு லுங்கியை போர்த்திக் கொண்டு மணல் மூட்டைகளுக்கு மத்தியில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறான். கையில் ஒரு பிஸ்கட் பொதியை பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.

அடுத்த புகைப்படம் தேடுதல் நிறைந்த, குழப்பமான பார்வையுடன் யாராவது வருகிறார்களா என்று திரும்பிப் பார்க்கும் போது எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த புகைப்படத்தில் 5 குண்டுகள் பாய்ந்த உயிரற்ற உடல், அதே கால்சட்டை உடுத்த உடல்.

‘இந்த புகைப்படங்கள் ஒரே காமராவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றும் ‘சுமார் சில மணி நேரங்களுக்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றும் தடயவியல் நிபுணர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.

பாலச்சந்திரன் கொல்லப்பட்டது குண்டு வீச்சினாலோ, சண்டையின் போதோ, குறுக்கு துப்பாக்கிச் சூட்டினாலோ அல்ல. பிடித்து வைத்து, சாப்பிட பிஸ்கட்டும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து உட்கார வைத்து, பிறகு ஈவு இரக்கமின்றி பச்சைப் படுகொலையை நடத்தியிருக்கின்றனர் சிங்கள இராணுவ வீரர்கள். அதற்கான உத்தரவை மேலிருந்து பிறப்பித்திருக்கின்றனர் நாட்டை ஆளும் ராஜபக்சே கும்பல்.

ஈழப் போர் உச்சகட்டத்தில் இருக்கும் போது அமைதி ஏற்படுத்துவதற்காக கொழும்புக்கு அனுப்பப்பட்ட இந்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக போன அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் “போப் கூட ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டும் என்று கூறியிருப்பதாகவும் எப்படியாவது போரை நிறுத்தி விடும்படியும் தான் கேட்டதாகவும், அதற்கு ‘நான் ஒன்றும் போப் இல்லை, நட்பு நாடான இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது’ என்று தாதா பிரணாப் பதிலளித்ததாகவும்” போலி கம்யூனிஸ்ட் தா பாண்டியன் கூறியிருக்கிறார்.

ஈழத்தில் நடத்தப்பட்ட இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்கு போப் ஆக இருக்க வேண்டியதில்லை, சாதாரண மனிதனாக இருந்திருந்தால் போதும். ஆனால் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு, இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி பயிற்சி வழங்கி இன அழிப்புக்குத் துணை போன இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு மனித உணர்வுகள் இல்லை என்பதுதான் நிதர்சனம். இலங்கை அரசுடன் நட்புறவு பேண வேண்டும் என்ற கணக்குக்கு முன்பு பல ஆயிரம் ஈழத் தமிழர்களின் உயிர்கள் அவர்களுக்கு பொருட்டாக தோன்றியிருக்கவில்லை.

இலங்கையுடன் கூட்டாகச் சேர்ந்த போர் நடத்திய இந்தியாவின் இப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் இப்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் நம்பகமானவை என்று நிரூபிக்கப்படவில்லை என்றும் இலங்கை இந்தியாவின் முக்கியமான அண்டை நாடு என்றும் அந்நாட்டுடனான நட்பை மேம்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இலங்கை சந்தை இந்திய தரகு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எந்த தீங்கும் வந்து விடாது.

ஆம், இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டால், அந்த நெருக்கடியில் அவர்கள் அவர்களது கிரிமினல் குற்றங்களுக்கு இந்திய ஆளும் கும்பல் உடந்தையாக இருந்ததை யாரும் மறைக்க முடியாது. அதனால் இலங்கையை இந்தியா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

‘ஈழப்போரின் இறுதிக் கட்டங்களில் நடந்த போர்க்குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் அவை தொடர்பான ஆதாரங்களையும் முன் வைத்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கையை கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்று அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர் தமிழ் தேசிய அமைப்புகள். அப்படி ஒரு தீர்மானத்தால் ஏதாவது ஒரு பலன் இருக்க வேண்டுமானால், அந்த கண்டனத்தில் இந்திய அரசும் சேர்க்கப்பட வேண்டும். கொலைக் குற்றவாளியை கண்டனம் செய்யும் தீர்மானத்தை கொலைக்குத் திட்டம் போட்டுக் கொடுத்த சதிகாரன் ஆதரிப்பது எந்த விதத்திலும் நியாயத்தை நிலை நாட்டாது!

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து தனி ஈழம் அமைப்பதை இந்தியாவின் விரிவாக்க அரசியல் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது தெரிந்தும் இந்திய அரசுக்கு மனு கொடுத்து, மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுத்து, காங்கிரசு ஆட்சியை மாற்றி பாஜக ஆட்சியை கொண்டு வந்து ஈழத்தில் நியாயத்தை நிலை நாட்டலாம் என்று பேசுவது இந்தியாவின் குற்றத்தை மறைப்பதாகும்.

மேலும் படிக்க
Can not vouch for authenticity of pictures – says Kurshid
The killing of a young boy

 1. // இலங்கையுடன் கூட்டாகச் சேர்ந்த போர் நடத்திய இந்தியாவின் இப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் இப்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் நம்பகமானவை என்று நிரூபிக்கப்படவில்லை என்றும் இலங்கை இந்தியாவின் முக்கியமான அண்டை நாடு என்றும் அந்நாட்டுடனான நட்பை மேம்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இலங்கை சந்தை இந்திய தரகு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எந்த தீங்கும் வந்து விடாது.//

  பாலகன் பாலசந்திரனின் படுகொலையைக் கூட மறைக்க முயலும் இந்திய வெளியுறவு அமைச்சரின் உளறல், சீனாவுடன் போட்டியிட வேண்டிய இலங்கை சந்தையையும் தாண்டிய, ஆளும் கட்சியின் பதற்றத்தை காட்டுகிறது.. ராஜபக்சே கும்பலுடன் இந்திய குற்றவாளிகளும் கூண்டில் ஏறுவது என்றாவது ஒரு நாள் நிச்சயம் நடக்கும்..

 2. அந்தப் பாலகனின் புகைப்படங்கள் மீண்டும்மீண்டும் மனதை ரணமாக்குகின்றன. எத்துனை குழந்தைகள், எத்துனை இளைஞர்கள், இளைஞிகள், எத்துனை முதியவர்கள் எப்படியெல்லாம் வதைபட்டு எப்படியெல்லாம் வதைக்கப்பட்டு இறந்தார்களோ, கொல்லப்பட்டார்களோ. கைசேதமாக இருக்கிறது. என்னடா வாழ்க்கை வாழ்கிறோம் என ஓவென கதறலாம் போலிருக்கிறது. அந்த ஈழமக்கள் அனுபவித்த கொடுமைகளுக்கும், அனுபவிக்கும் துயரங்களுக்கும் இந்தியாவை கண்டிப்பாக தண்டித்தே தீரவேண்டும்.

 3. பெருமைபடுகிறேன், இந்த மாவீரன் என் இனமடா , மீண்டும் வா, எம் இனத்தை மீட்டு எடுக்க வா

 4. பிரணாப், சல்மான் குர்ஷீத் நீங்கள் எல்லாம் மனிதர்களா, இந்த பதவிக்காக இதைவிட கேவலமாக என்ன செய்து விட முடியும். நீங்கள் எல்லாம் எங்களை ஆள்பவர்கள் என்று நினைக்கவே பதறுகிறது மனம். ஒருகொலையை கொலை என்று சொல்ல உங்கள் நா வரவில்லை என்றால் நீ எல்லாம் தின்பது உணவா அல்லது மலமா?

 5. பாலகன் பாலசந்திரனின் படுகொலையைக் கூட மறைக்க முயலும் இந்திய வெளியுறவு அமைச்சரின் உளறல், சீனாவுடன் போட்டியிட வேண்டிய இலங்கை சந்தையையும் தாண்டிய, ஆளும் கட்சியின் பதற்றத்தை காட்டுகிறது,பச்சரத்தம் குடிக்கும் ஆலும் கும்பலை வேட்டையாடாமல் இனி உழைக்கும் மக்கலுக்கு ஓயிவு இல்லை என்பதை புரிந்து கொல்லுங்கல்.

 6. mr vinavu ,a mere critising everyone alone could not solve this issue. why dont you put forth a solution.you people always critisising everyone in this world.you should try to find some good in people. always finding fault with everyone will make the life miserable.

 7. நேற்று தமிழ் செய்தி தொலைகாட்சிகள் சிறுவன் பாலசந்திரனுக்காக பாசங்கு செய்த அதே நேரம், என் டிடிவி, சி என் என் ஐபிஎன், டைம்ஸ் நவ் போன்றவை சிங்கள அரசின் பிரதிநிதியை பேட்டி போட்டு, இவை எல்லாம் விடுதலை புலிகள் பொய் பிரச்சாரம், ஸ்ரீலங்கா அரசு புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்தது, இந்தியாவின் நட்பு நாடு என ஸ்ரீலங்காவின் பிரச்சாரத்தை சிறப்பாக செய்தது.

  ராஜபக்சே போர் குற்றவாளி என சொல்பவர்கள் யாருமே ராஜபக்சேவின் பங்காளிகள் மன்மோகன், ராகுல், பிரனாப், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அத்வானி, மோடி, பிரகாஷ் காரத், நிதிஷ் குமார் போன்றவர்களை போர் குற்றவாளிகள் என தூக்கிலிட கேட்க மாட்டார்கள்…

 8. இது அநீதம். சந்தேகமே இல்லை.. அப்பாவி அதுவும் பாலகனை கொலை செய்வது என்பது போர் குற்றமே… ஒரு புகைப்படத்தை பார்த்து அதற்க்காக கண்ணீர்விடும் இச்சமூகம் இந்தியாவில் நடத்தப்பட்ட படுகொலைகளை மறைத்து அதை நியாயப்படுத்துவதையும் சகிக்க முடியவில்லை. குஜராத்திலே பல்லாயிறக்கணக்கான முஸ்லீம் சமூக மக்கள் அரசால் கொல்லப்பட்டபோது இதே கவலையும் வேதனையும் யாரிடத்திலும் இல்லையே. நீதிதுறையின் மீது நம்பிக்கை இழந்த முஸ்லிம்கள் இறைவனின் பாதுகாப்பிற்க்கும் அவன் நீதிக்கும் மட்டுமே காத்திருக்கின்றார்கள். “மக்களின் கூட்டு மனசாட்சி” என்று கூறி பெறும்பான்மை மக்களின் ஓட்டு வங்கிக்காக அவர்களை திருப்த்திபடுத்தும் நோக்கில் தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்களை எவ்வாறு நம்புவது?

  • எப்பொது நாங்கள் ஆதரித்தோம்?…..இதெ மன பதட்ரத்துடன் எதிர்தோம்…..

  • மதத்தின்பெயரால், இனத்தின் பெயரால் நடைபெறும் இந்தப்பச்சைப்படுகொலைகளை நாம் எப்படி எதிர்க்கிறோம், அதுபோலவே, மறுகாலனியாக்கக் கொள்கையால் அன்றாடம் பல்வேறு காரணங்களினால் கொல்லப்பட்டும், தற்கொலை செய்துகொள்ளும் ஏழை மக்களையும் எண்ணுங்கள். வடமாநிலங்களில் சாப்பிட முடியாத மக்களே பெரும்பான்மையாம்.இனி அவர்கள் கதி தற்கொலைதான்.என்று இதை முடிவிற்குக் கொண்டு வருவது?

 9. கொடூரன் ராஜபக்சேவுக்கு துணைபோகும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்கள் அனைவரும் பதிலடி கொடுக்க வேண்டும் . ராஜீவ்காந்தி என்ற ஒரே ஒருவரை கொன்ன்றதர்க்கு பளிதீர்ப்பதர்க்கு லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கொன்று குவிக்கும் பொழுது வாயை மூடிக்கொண்டு இருந்த காங்கரஸ் கட்சி தலைவர்கள் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளின் காரணமாகவே இவ்வாறு ஈவு இறக்கம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று அப்பட்டமாக தெரிகிறது . கண்டிப்பாக இவர்கள் பதிசொல்லியே ஆகா வேண்டும் . அவர்கள் பதில் சொல்லாவிட்டாலும் தமிழர்கள் அனைவரும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் . அரசியல் தலைவர்கள் என்பவர்கள் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு அற்றவர்களாக இருக்க வேண்டும் . ஆனால் இவர்கள் மக்களுக்காக அல்லாமல் தங்களுக்காகவே அரசியலை நடத்தி ஆதாயத்தை தேடிகொல்கின்றனர் . இப்பேற்பட்ட எந்த அரசியல்வாதியும் அரசியல் நடத்துவதற்கு தகுதி அற்றவர்கள் இவர்கள் அரசியலில் இருபதற்கு நாம் ஒருபோது துணை நிற்க்க கூடாது.நேருக்கு நேராக நெஞ்சில் குத்துபவனை கூட எதிர்த்து நிற்கலாம் ஆனால் வஞ்சம் வைத்து முதுகில் குத்து காங்கிரஸ் தலைவர்களை ஒருபோது மன்னிக்ககூடாது .

 10. அக்குழந்தையின் முகத்தைப்பார்த்தால் எப்படிக்கொல்ல மனம் வந்ததோ….பாலச்சந்திரன்னின் முகத்தில்நான் கண்ட ப்யம்….வாழ்க்கையில் எந்தக் குழந்தையும் அனுபவிக்கக்கூடாதது…

 11. ஒரு போராளியின்

  மகனின் மரணத்தை

  மற்றொரு பதிப்பாக

  கண்ட கோலம் …

  நெஞ்சுக்குள்

  எரிமலையை வெடிக்கச் செய்தது.

  மனிதநேயம் செத்தவர்கள்

  செய்கின்ற படுகொலைகளில்

  இதுதாம் உச்சகட்டம்.

  போகட்டும்.

  அணையப் போகும் விளக்கு

  பிரகாசமாகத்தானே எரியும்?

  தமிழ்க்குடிகளுக்கு நேர்ந்த

  கொடுமைகளுக்கெல்லாம்

  நிச்சயம் பதிலடி உண்டு.

  ஒரு பாலகனை அழைத்து

  வைத்துக்கொண்டு

  உணவுகொடுத்து

  நெஞ்சில் சுட்டுக் கொல்வதற்கு

  எப்படி மனம் வந்தது?

  மிருகம் கூட

  அப்படி எண்ணாதே?

  சிறிது நேரத்தில்

  தாம் கொல்லப்படுவோம் என

  அறியாது

  பசியாறிக்கொண்டிருக்கும்

  அந்தப் பிஞ்சைக் கொல்ல

  எப்படி ஐயா துணிச்சல் பிறந்தது?

  மனிதனுக்குப் பிறந்தவர்

  செய்கிற காரியமா இது?

  இந்திய தூக்குத் தண்டனைக்

  குற்றவாளிகளுக்குக் கூட

  கடைசி நிமிடம்

  ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்

  அதிர்ஷ்டம் கிட்டுமே?

  அச்சிறுவன் என்ன

  குற்றம் செய்தான்?

  ஒரு போராளிக்கு மகனாய்ப்

  பிறந்தது குற்றமா?

  கொத்துக் கொத்தாய்

  கொல்லப்பட்ட இனப் படுகொலைகளுக்கு

  எதிர்ப்பு தெரிவித்து

  பாதுகாத்து வந்தது

  ஒரு போராளியின் குற்றமா?

  குடும்பத்தில் ஒன்றுவிடாமல்

  அழிப்பதுதாம் வீரமா

  கோழைகளே…

  தமிழன் மீது

  வெளிநாட்டான் கொண்டிருக்கும்

  பற்றில் கால்வாசி கூட

  இந்தியா வைக்கவில்லையா?

  அந்தக் கொலையாளிகள்

  நாட்டுக்குள் பதவியோடு

  வருவார்கள்

  இவர்கள் மாலை மரியாதை செய்து

  உணவுபோட்டு அனுப்புவார்கள்.

  இது எத்தனை நாட்களுக்கு?

  பூனையும் ஒருநாள்

  புலியாக மாறும் என்பது

  தெரியாதா?

 12. நாஜிக்கள் யூதர்களை இன அழிப்பு செய்ததை கூட அப்போது உலக நாடுகள் கண்டு கொண்டதில்லை…இரண்டாம் உலக போரின் பொது ஜெர்மனி தங்கள் நாட்டை தாக்கிய பின்பே பிரிட்டன் அமேரிக்கா சோவியத் போன்ற நாடுகள் ஜெர்மனியை தாக்கின..இரண்டாம் உலக போர் என்று ஒன்று இலலவிடில் ஹிட்லரும் ராஜபக்சே மாதிரி சிரித்து கொண்டு உலாத்தி கொண்டிருப்பான்

 13. வாராவாரம் மு.க.அழகிரியின் அண்ட்ராயரய்
  துவய்த்து அட்டைபடமாய் கொண்டுவரும் துக்ளக் இந்த படுகொலை பட்றி எழுதுமா?

 14. To be honest,

  When LTTE did Suicide Bombings,it would have killed many kids also,when they involved children in the front line of war again kids would have died,when they involved themselves in narcotics trade,again many kids sho consume it would have died.

  No defence for killing the kid balachandran but the tharaasu is very twisted.

 15. lankan government had lost best opportunity to show the world that it did not harm kids. when it can give protection or karuna & KP (for political reasons & money), it could have spared surrendered families.

 16. Indian Government and the business that feed the Indian politicians have a lot of money invested in SriLanka like Ashok Leyland, Indian Oil Corporation etc. They want to make sure their investments are safe. So the Indian Government will never condemn or do anything to Srilankan Government even if they do an even more serious crime for that matter any crime. Srilankan Government has a lot of leverage against Indian Government. Tamil people should become economically powerful and only that way Tamils can have a leverage against SriLanka until then Tamils cannot do anything

 17. பல்லாயிரக்கனக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது வாயை மூடிக்கொண்டு இருந்தவர்களும், நீதிக்காக போராடியவர்கள்மீது கொலைவெறி தாக்குதல்நடத்தியவர்களும், எதோ இப்பபோதுதான் தமிழர்கள்மீது தாக்குதல் நடைபெறுவது போல கண்டிப்பது அயோக்கியத்தன்மனது. இந்திய அரசியல்வதிகள், பத்திரிகைகள் யோக்கியதயை ராஜபக்சேவிடம் கேட்டால் தெரிந்துவிடும். சிபிஎம் கண்டிப்பது அவமானகரமானது. இவர்களுக்கு எதிராக உலகநாடுகள் முழுவதும் பிரச்சாரம் செய்து முகத்திரை கிழிக்கப்படவேண்டும். தமிழீழ ஆதரவு சக்திகள் ஒன்றுதிரட்டப்படவேண்டும்.

 18. ஈழ மக்களின் நலன் விரும்பிகளுக்கு ஒரு வேண்டுகோள் : இனி அவர்களுக்கு தேவை வாழ்வாதாரங்கள், வேலைவாய்ப்புகள் தான். பிழைப்புக்காக விபச்சாரம் செய்யும் நிலைக்கு பல பெண்களும், முன்னாள் பெண் போராளிகளும் தள்ளப்பட்டிருகும் கொடுமையான நிலை இன்று. நாடு கடந்த தழிழ் ஈழத் தலைமை அய்ரோப்பாவில் பல ஆயிரம் கோடி ருபாய் பணத்தை வைத்து கொண்டு சுகமாக வாழ்கிறது. போர் நடந்த வரை தினமும் பல லச்சம் செலவாகியிருக்கும். ஆனாலும் குறைந்தது 5000 கோடி ரூபாய் அளவு இன்னும் பல நிலைகளில், பினாமி கணக்குகளில், பினாமி நிறுவனங்களில் உலகெங்கிலும் அந்த தலைமை வைத்திருக்கிறது என்பதை அறிய பெரிய துப்பறிவு எதுவும் தேவையில்லை. குமரன் பத்மனாபன் அந்த Treasurersகளில் ஒருவர் தான், இன்னும் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் நாடு கடந்த தமீழிழ தலைமையின் கட்டுபாட்டில் தான் இருப்பார்கள். இனி அய்ந்தாவது ஈழப்போர் சாத்தியமே இல்லை. வேண்டவும் வேண்டாம். இந்த ரகசிய நிதிகளை ஈழ மக்கள் நலனுக்காக செஞ்சிலுவை சங்கம் அல்லது அய்.நா மூலம் வன்னி மக்களிடம் அளிக்க முயலாமல் சும்மா வெட்டி வீராப்பு பேசுவது பயனே இல்லை. நாடு கடந்த ஈழ்தலைமையிடம் இதை பற்றி அக்கரையுள்ளவர்கள் பேசுவது, நெருக்கம் அளிப்பது தான் உருப்படியான செயல்.,.

 19. ஒரு பார்பனருடைய விஷமப் பேச்சு…இந்த நா… என்ன செய்வது??

  //கேப்டன் பிரபாகரன் ஒரு தீவிரவாதி, பிரபாகரன் மகனும் தீவிரவாதிதான் – சுப்ரமணிய சுவாமி.
  //

 20. இலஙகையை தட்டிக் கேட்க இந்தியாவிர்கோ அல்லது இந்திய அரசியல்வாதிகெளக்கோ உரிமை கிடையாது காரனம் அஙுகு தமிழன் இஙுகு முச்லிம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க