Sunday, September 15, 2024
முகப்புஉலகம்ஈழம்பார்ப்பதற்கு இன்னுமொரு பிணம்...!

பார்ப்பதற்கு இன்னுமொரு பிணம்…!

-

பிணத்தைப் பார்த்து தான்
உணர்ச்சிவரும் — எனும் நிலைக்கு
மரத்துப் போனவர்களே பாருங்கள்!

நீங்கள் பார்ப்பதற்கு
இன்னுமொரு பிணம்…

புத்தக மூட்டைகளுக்கிடையே
தன் பிள்ளைமுகம்
சற்று காணத் தாமதித்தாலும்
பதறும் தாயுள்ளங்களே
பாருங்கள்…

பாலச்சந்திரன் - 2மணல் மூட்டைக் குழியில்
தான் கொலை செய்யப்படுவோம்
என்பது கூட தெரியாமல்…
சாவின் தீனியை
வாயில் வைத்தபடி
தவித்திருக்கும் பாலகனை!

என்ன நடக்கப் போகிறது
என அறியாத தனிமை…
எதையோ எதிர்நோக்கி
பீதியில் பார்வை…
கடைசிவரை நம்பியிருந்து
கைவிடப்பட்ட ஈழத்தின் சோகம்
அவன் கண்களில் தெரிகிறதா?

அதண்டு பேசினாலே
துவண்டுபோகும் வயதுடைய பிள்ளையை
ஒவ்வொரு இடமாய் நிதானமாக
வெற்றுடம்பில்
ஓட்டையிட்டிருக்கும்
துப்பாக்கி மிருகங்கள்.

அடையாளம் காணமுடியாத படி
உடல் சிதறிய
ஓராயிரம் ஈழப்பிள்ளைகளின்
படுகொலைத் தடயத்தை
பாருங்கள் பாலச்சந்திரன் உடலில்…

சத்தமே இல்லாமல்
பெண்களை வல்லுறவில் சிதைக்கவும்,
ரத்தமே இல்லாமல்
பிணங்களைத் துடைக்கவும்,
இந்திய இராணுவப் பயிற்சியின் தீவிரம்
சிங்கள இனவெறிச் செய்கையில் மொத்தமாய் தெரியுது.

கண்டிக்கத்தக்க இந்த அநீதிக்கு
காவல் இருக்குது இந்திய அரசு.
காரியவாத மவுனம் உடைத்து
தமிழகமே!
ஈழக்குரலை வெடித்துப் பேசு!

– துரை.சண்முகம்

  1. //பிணத்தைப் பார்த்து தான்
    உணர்ச்சிவரும் //

    இந்தக் கவிதையும் கூட

  2. தமிழ் பேசுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இலங்கையில் உள்ள தமிழற்களுக்கு வக்காலத்து வாங்குவது தவறு என்பது என் கருத்து. அமெரிக்காவில் உள்ள ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலேயர்கள் வக்காலத்து வாங்கினால் எப்படி தவரோ அதே மாதிரி தான் இதுவும். மற்ற
    நாட்டு விஷயங்களில் தலையிடுவது குழப்பத்தையே உண்டாக்கும்.

    • இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஈழத்தமிழர்களுக்காக உலகத் தமிழர்களும், அமெரிக்க ஆங்கிலேயர்களுக்காக இங்கிலாந்து ஆங்கிலேயர்களும் வக்காலத்து வாங்குவதில் என்ன தவறு..? இவர்களுக்காக செவ்வாய் கிரக மனிதர்கள் கூட வக்காலத்து வாங்குவார்கள், மனசாட்சி என்ற ஒன்று இருந்தால்..

      காலனி ஆதிக்கத்திற்கு முன், சிங்கள இனம் என்று ஒன்று உருவாவதற்கு முன்பிருந்தே, இலங்கையின் வடக்கு-கிழக்கு பிரதேசங்கள் தமிழர்களின் பாரம்பரிய சுதந்திரப் பிரதேசங்கள்.. இவற்றை தென்னிலங்கையின் சிங்களப் பெரும்பான்மை அரசுடன் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இணைத்துவிட்டுப் போனதே அநீதி.. சம உரிமை கேட்டு ஒரு போதும் கிடைக்காது என்பதாலதான் போராடி மீண்டும் சுதந்திர (உலகால் அங்கீகரிக்கப்படாத) தமிழீழ அரசை புலிகள் மீட்டார்கள்.. இந்த தமிழீழத்துக்குள் புகுந்துதான் சிங்கள அரசு அட்டூழியம் செய்திருக்கிறது.. இது வெறும் ‘தீவிரவாதத்துக்கு’ எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையல்ல.. தமிழீழத்தின் மீது சிங்கள அரசால் தொடுக்கப்பட்ட இனவெறிப் போர்..

      எந்த நாட்டைச் சேர்ந்த போர்க்குற்றவாளிகளும் உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறி ஒளிந்து தப்பமுடியாது..

  3. அய்யா ஸ்ரீதர் அய்யா என்னாயா இப்படி சொல்லிடிங்க. இப்ப நம்ம பக்கத்து வீட்ல ஒரு வெறி பிடிச்ச நாயு ஒரு 8 வயசு சிறுமிய யாருக்கும் தெரியாம கிழிச்சு எரியுறான். நமக்கு அந்த சத்தத்தத கேக்கவோ அல்லது அந்த கொடுரத்த பாக்கவோ வாய்ப்பு கிடைக்குது. அட அது பக்கத்து வீட்டுல நடக்குறது அதுல தளகிட்டா அது தப்பா போய்டும்னு விற்றலாமா.. அப்படி விட்டா நாம மனிசங்கதான.. சொலுங்க அய்யா சொல்லுங்க…

    • All ok,but if that guy also comes into my lawn and does a shoot out with his enemy in my garden,bullets whizz past my windows and my goats and cattle get scared and start running,then i ll be so scared that even if some noise comes from the next house,i ll run and close my doors so that bullets dont fly past my windows again.

    • பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகள்,நம் நாட்டு விஷயத்தில் தலையிடுவர் – உதாரணம்: காஷ்மீர், கோத்ரா எரிப்பு மற்றும் ஐதராபாத் வெடிகுண்டு…எதில் தலையிடலாம், எதில் கூடாது என்று ஒரு வரைமுரை உள்ளது. மீறினால்,நம் நாட்டிலும் குழப்பம் தான் நேரிடும். பக்கத்து வீட்டு வெறி பிடிச்ச நாய் கிட்டே போனால், உங்களுக்கும் யேதாவது நேரிடும் என்றால், பக்கத்தில் செல்வீர்களா? சும்மா இருந்த நாய் மீது, பக்கத்து வீட்டுகாரர், வெடியை கொளுத்தி போட்டு உசுப்பேத்தி விட்டார் என்று தெரிந்தும் நீங்கள் அவரை காப்பாற்ற சென்றால்,நீங்களும் கடி படுவீர்.

      • // பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகள்,நம் நாட்டு விஷயத்தில் தலையிடுவர் – உதாரணம்: காஷ்மீர், கோத்ரா எரிப்பு மற்றும் ஐதராபாத் வெடிகுண்டு…எதில் தலையிடலாம், எதில் கூடாது என்று ஒரு வரைமுரை உள்ளது. மீறினால்,நம் நாட்டிலும் குழப்பம் தான் நேரிடும். //

        இப்போது மட்டும் தலையிடாமலா இருக்கிறார்கள்..?! அமெரிக்கா போல வல்லரசாகப் போகிறோம் என்று சவடால் அடித்து விட்டு இப்படி பம்மினால் எப்படி..?!

        // பக்கத்து வீட்டு வெறி பிடிச்ச நாய் கிட்டே போனால், உங்களுக்கும் யேதாவது நேரிடும் என்றால், பக்கத்தில் செல்வீர்களா? சும்மா இருந்த நாய் மீது, பக்கத்து வீட்டுகாரர், வெடியை கொளுத்தி போட்டு உசுப்பேத்தி விட்டார் என்று தெரிந்தும் நீங்கள் அவரை காப்பாற்ற சென்றால்,நீங்களும் கடி படுவீர். //

        பிறாண்டிக் கொண்டிருந்த நாயை கடிக்கச் சொன்னதே நீங்கள்தான் என்று அந்த வெறிநாய் சொல்லுகிறதே..?!

      • சிங்களம் என்றைக்குமே சும்மா இருந்த நாயுமல்ல, அதனை யாரும் வெடியை கொளுத்திப் போட்டு உசுப்பேத்தி விடவுமில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் அந்த இனத்தின் தோற்றமே தப்பான வழியில் வந்தது என்பதுதான். ஒரு காட்டுச்சிங்கம் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதன் மூலம் பிறந்த சகோதரனும் சகோதரியும் மணந்துகொண்டு பிள்ளைகள் பெற்றதால் வந்த பரம்பரையே சிங்களவர். இப்படி வேறுயாரும் கூறவில்லை, அவர்களாகவே பெருமையாகக்(??) கூறிக்கொள்கிறார்கள்.

  4. The biggest political mistake LTTE did was to trust DK/DMK and usual Dravida Pulis(Pu$$ies?) and end up paying for it bigtime,they had no right to come and try to corner Tamizhnadu.

    They ended up paying for it.

    • Those women, children, elders

      who were systematically killed with mortar & tank shells, internationally banned cluster bombs & chemical bombs in thousands

      and

      who were murdered cold bloodedly in thousands (even after LTTE silenced their guns) were all LTTE..?

      There was a genocide, please try to understand this..

      • Women, children and elders were executed by LTTE also. Is that acceptable அம்பி? Yes, Srilankans are not able to trust anyone post Prabhakaran killing also. Their killing is also not acceptable. But think what you would do, if your son or daughter was killed by LTTE bombing…Will you not feel like giving back? LTTE made the foolish mistake by resorting to violence, thinking Tamil politicians will influence India and save them. They comfortably forgot that it would be treated as an internal issue of Srilanka.

        • // Women, children and elders were executed by LTTE also. Is that acceptable அம்பி? Yes, Srilankans are not able to trust anyone post Prabhakaran killing also. //

          Women, children and elders were executed by LTTE also ? This is debatable..

          By saying that the Srilankans were not able to trust anyone so they raped and killed tamils post prabhakaran, you are justifying srilankans’ attrocities and genocides of Tamils, in effect..

          This ‘magnanimity’ you show towards Srilankans, is absent while talking about LTTE who too lost the trust in oppressive Srilankan Govt(s) and attacked the srilankan forces & military targets mostly but never indulged in such attrocities or genocides of srilankans..

          • அம்பி: Just like i did not support LTTE’s killing of women, children, elders and elected representatives of Lanka and India, i do not support rapes and killing of Tamils by Lankan army. Pls read my comment properly. And, you talked about lack of ‘magnanimity’ towards LTTE. Being an Indian citizen, i see LTTE as terrorists only. They killed our PM. Why should i be generous to them? Also, you are talking about “LTTE losing trust in oppressive Srilankan Govts”. Issues between Majority and Minority community is very common across the world. The minorities have always been forced to struggle to get their rights. This doesnt mean, the minority community will take up arms and get involved in terrorist activities.

            • //They killed our PM. // Hundreds of times tiruchi velusamy have accused subramaniam samy involving rajiv murder. samy never reacted. He should have file a case against tiruchi velusamy right? why he dint do?

              “OUR PM” has no moral rights to rape and kill thousands of Tamils.

            • // Just like i did not support LTTE’s killing of women, children, elders and elected representatives of Lanka and India, i do not support rapes and killing of Tamils by Lankan army. //

              Is it so..? What does this mean : “Yes, Srilankans are not able to trust anyone post Prabhakaran killing also.”

              What you really mean is “since LTTE did such & such things, it is understandable that Srilankan forces too would do this to Tamils.. no big issue”. Why your hatred towards LTTE is absent in case of Srilankans..?

              The issue now is not what LTTE did (which is debatable) but the systematic genocide of Tamils that was enacted with perversion and cruelity by the Srilankan govt under the context of srilanka’s version of ‘war on terror’..

              // And, you talked about lack of ‘magnanimity’ towards LTTE. Being an Indian citizen, i see LTTE as terrorists only. //

              I pointed out your ‘magnanimity’ towards the srilankan rapist murderers, not expected you to show that towards LTTE..

              // Issues between Majority and Minority community is very common across the world. The minorities have always been forced to struggle to get their rights. This doesnt mean, the minority community will take up arms and get involved in terrorist activities. //

              Tamils are minority because they were made to be ruled, as second class citizens, by majority Sinhalese Govt when the Bristish quit, as said in my first comment above.. When they wanted equal rights the Chauvnistic majority govt unleashed opperession on them.. Taking up of arms was not the first choice of Tamils..

              IPKF was warned to get out of Srilanka by Premadasa.. Even now, where no LTTE is there, Raja pakse refuses to give the so called equality to Tamils.. Sinhalese colonisation is going on in full swing in Tamil lands.. For you, it was their internal matter.. What else the Tamils are supposed to do..? Submit to their fate..?

        • ஈழத்தின் வரலாறு தெரியாவிட்டால் அறிந்த பின் கருத்துத் தெரிவிப்பது நன்று.

          ஈழத்தில் வன்முறையை தொடக்கி வைத்தது புலிகள் அல்ல, சிங்களம். 1958, 1977 ஆம் ஆண்டுகளின் இனப்படுகொலைகள், தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள், யாழ் நூலக எரிப்பு, என்று எத்தனையோ நடந்த பின்பே தமிழ்த் தரப்பும் வன்முறையைக் கைக்கொள்ள தலைப்பட்டது.

          • வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது…அதுவும் பலம் பொருந்திய நபருடன் மோதும் போது, மிகவும் யோசித்து செயல்பட வேண்டும்….மாவோயிஸ்டுகள், இந்திய அரசுடன் ஆயுத போராட்டம் நடத்த முனைந்தால் என்ன நடக்கும்??? இப்படி தான் அழிந்து போவார்கள்…!!

            • அப்போ, ஈழத் தமிழர்கள் என்னதான் செய்திருக்க வேண்டுமென்று சொல்கிறீர்கள்?
              எத்தனை கொடுமைகள்/படுகொலைகள் நடந்தாலும் பலியாடுகள் போல் பொறுத்துக் கொண்டிருந்திருக்க வேண்டுமா? அல்லது ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்திருக்க வேண்டுமா?

  5. கண்டிக்கத்தக்க இந்த அநீதிக்கு
    காவல் இருக்குது இந்திய அரசு.
    காரியவாத மவுனம் உடைத்து
    தமிழகமே!
    ஈழக்குரலை வெடித்துப் பேசு!, இந்த போர் என்பது இந்திய முதலாளிகளின் லாபத்திற்கானது என்பதை ஏன் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்

  6. இப்பாலகனின் மூன்று புகைப்படங்களையும் முதன் முதலில் இந்து நாளேட்டில் பார்த்த நாளிலிருந்து அதன் பிறகு வலைப்பூக்களிலும் முகநூலிலும் பார்க்க நேர்ந்த போதெல்லாம் என்னுள் எழும் சோகத்தையும் கண்களில் முட்டும் கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. முடிந்தவரை பார்ப்பதை தவிர்க்கவே செய்கிறேன். கவிதை நெஞ்சைப் பிழிகிறது. கல் நெஞ்சைக்கூட உரைய வைக்கும் இக்கொடிய செயலுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி எழும் போது கையறு நிலைதான் விஞ்சி நிற்பதாய் உணர்கிறேன். “தமிழகமே!ஈழக்குரலை வெடித்துப் பேசு!,” என்கிற வரிகள் சற்றே தெம்பைத் தருகிறது.

    • ஊரான்: பிரபாகரன் கொன்றுக் குவித்த இலங்கை மக்களின் குழ்ந்தைகளின் புகைப்படங்களைப் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் முட்டவில்லையா??? வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது…இப்பொழுது அழுது என்ன பலன்?

      • // பிரபாகரன் கொன்றுக் குவித்த இலங்கை மக்களின் குழ்ந்தைகளின் புகைப்படங்களைப் பார்க்கும் //

        அப்படி எங்காவது செய்தி படிதிருக்கிறீர்களா அல்லது ஏதாவது புகைப்படம் பார்த்திருக்கிறீர்களா? சரணடைந்த சிங்களர்களையே புலிகள் கண்ணியமாகவே நடத்தியுள்ளனர். குழந்தைகளை கொல்வது என்பது சிங்களர்களும் அவர்களுக்கு துணை போகும் கூலி படையினரும் செய்வது.

        • //குழந்தைகளை கொல்வது என்பது சிங்களர்களும் அவர்களுக்கு துணை போகும் கூலி படையினரும் செய்வது.//

          புலிகள் குழந்தைகளையே கேடயமாகப் பயன்படுத்தியவர்கள் என்பதை மறவாதீர்…!!

          http://www.mtholyoke.edu/~dezyl22a/classweb/srilankaandterrorism/page9.html

          //அப்படி எங்காவது செய்தி படிதிருக்கிறீர்களா அல்லது ஏதாவது புகைப்படம் பார்த்திருக்கிறீர்களா?//

          http://www.slnewsonline.net/LTTE_Atrocities_Photos.htm

          • // புலிகள் குழந்தைகளையே கேடயமாகப் பயன்படுத்தியவர்கள் என்பதை மறவாதீர்…!! //

            கொத்து குண்டுகளால் சாவாதா, போராடிச் சாவதா என்ற கேள்வி மட்டுமே நிலவும் சூழ்நிலையில், பிறக்கும் குழந்தையும் எங்கே துப்பாக்கி என்று கேட்கும்.. உலகம் முழுவதும் விடுதலை இயக்கங்களில் மட்டுமல்ல, இஸ்ரேலிலும், பாலஸ்தீனிலும், லெபனானிலும் குழந்தைகளுக்கு ராணுவ பயிற்சியளிப்பது நடக்கிறது.. அவர்கள் நிலை அப்படி..
            துப்பாக்கியோடு செத்த குழந்தைகளையா ஈழத்தில் காண்கிறீர்கள்..?!

            உங்களுடைய 2-வது சுட்டி :

            – டோலர் பார்ம் என்னும் பண்ணையில் தமிழர்களை விரட்டிவிட்டு ராணுவத்தால் குடியேற்றப்பட்ட சிங்களக் கைதிகள்(முன்னாள்)..

            – அரந்தலவாவில் புத்த பிக்குகள்..

            மேற்கூறிய இரண்டும் 80-களில் நடந்தவை.. இந்தியாவில் அப்போது இவை LTTE-ன் பதில் தாக்குதல்களாகத்தான் அதிகாரப்பூர்வமாகவே கருதப்பட்டன.. அப்போதெல்லாம் அவர்கள் ‘தீவிரவாதிகளாக’ இங்கே கருதப்படவில்லை..

            – கெபித்திகொல்லெவாவில் கண்ணிவெடியால் சிவிலியன்கள்..
            2006-ல் நடந்த இந்தத் தாக்குதலை LTTE தாங்கள் நடத்தவில்லை என்று மறுத்திருக்கிறார்கள்..

            – காத்தான்குடி பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டில் முஸ்லீம்கள்..

            ”குஜராத்தை விட பாதுகாப்பான மாநிலம், இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் வேறு மாநிலம் இல்லை…” என்று கூறுபவர்கள் இதற்கு முதலைக் கண்ணீர் விடக் கூடாது.. இது LTTE-முஸ்லீம்கள் பிரச்சினை.. இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் உண்டு..

            இறுதியாக, LTTE-ன் தவறுகளுக்காக ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளை காணாமல் ஒதுக்க வேண்டும் என்ற மனப்போக்கு மனிநேயமற்றது..

      • // பிரபாகரன் கொன்றுக் குவித்த இலங்கை மக்களின் குழ்ந்தைகளின் புகைப்படங்களைப் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் முட்டவில்லையா??? //

        நீங்கள் கூறும் புகைப்படங்கள் குஜராத்தில் எடுக்கப்பட்டதா.. இலங்கையில் எடுக்கப்பட்டதா..?

      • பாலச்சந்திரனின் படுகொலை நியாயம் என்கிறீர்கள்! அதுதானே நீங்கள் சொல்ல வருவது?

        குரூர மனக்கோக்கு உள்ளவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? பாசிஸ்டுகள் ஆட்சியாளர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சிறீதரைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதே சமூகத்தின் அவலம்.

        • Boss,politics cant work on emotional basis.

          At best what we can do is send a hit team on Rajapakshe and kill him in a plot,just to satisfy the revenge.

          But politically making it a war between sinhalas and tamils is just crazy.

  7. அம்பி:

    எதற்கு குஜராத் பற்றி பேசுகிறீர்கள் என்று விளங்கவில்லை…!! உங்கள் கேள்விக்குப் பதில், இல்லை..

    நீங்கள் இஸ்லாமியர், அம்பி என்ற புனைப்பெயரில் எழுதுகிறீர்களென்று நினைக்கிறேன்…நினைவில் கொள்ளுங்கள்…குஜராத்தை விட பாதுகாப்பான மாநிலம், இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் வேறு மாநிலம் இல்லை…

    • சிரிதர் அம்பி, திரு. அம்பியின் பின்னூட்டங்களை எல்லாம் நீங்கள் படித்ததில்லையா? குஜராத் என்றவுடன் அம்பி என்ற புனைப்பெயரில் எழுதும் இஸ்லாமியர் என்று சொல்லிவிட்டீர்களே!!

      • //திரு. அம்பியின் பின்னூட்டங்களை எல்லாம் நீங்கள் படித்ததில்லையா? //

        படித்தது இல்லை..!! என் சந்தேகத்திற்குக் காரணம்: சம்பந்தமே இல்லாமல், குஜராத் பற்றி பேசியது தான்…!! இஸ்லாமியர் தாம் இவ்வாறு செய்வர்..!!நான் நினைத்தது தவறு..

        • // சம்பந்தமே இல்லாமல், குஜராத் பற்றி பேசியது தான்…!! இஸ்லாமியர் தாம் இவ்வாறு செய்வர்..!! //

          பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் ஈழத்தமிழர்களை திட்டமிட்டு, ஆயிரக் கணக்கில் படுகொலை செய்து, வன்மத்துடன் இனஒழிப்பு திட்டத்தை செயல் படுத்திய ராஜபக்சே கும்பலை கண்டிக்கும் போதெல்லாம், புலிகளைக் காட்டி கூப்பாடு போடுவதில் இந்தியாவில் முன்னணியில் இருப்பது காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இவர்களின் ஆதரவாளர்கள்தான்.. இவர்கள், புலிகளை பயங்கரவாதிகள் என்றும், ஈழத்தமிழர்கள் எல்லோரும் புலிகள் என்றும் கூறி காந்தி, ஏசு, புத்தருடன் போட்டிபோடுவதால், டெல்லியில் சீக்கியர்கள் மீதும், குஜராத்தில் முஸ்லீம்கள் மீதும் இவர்கள் நடத்திய ‘சத்தியாகிரக’ போராட்டங்களை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது..

          • 9.3.1 -ஐ பார்க்கவும்.

            டெல்லியில் சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதல் – காங்கிரஸார் செய்தது…
            குஜராத்தில் முஸ்லீம்கள் மீது நடந்த தாக்குதல் – இஸ்லாமிய விஷமிகளால் (சிலர் மட்டுமே) செய்யப்பட்ட கொடூரமான கொலையால் நேர்ந்த கலவரம்…அது திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் அல்ல என்று எல்லா தீர்ப்பாயங்கலும் சொல்லிவிட்டன…

            It will be considered a libel in western countries, if you accuse someone of doing something deliberately, without any proof, when he or she did not really do it. I see, most of the commentators in vinavu can be sued for the kind of accusations they make.

            • // 9.3.1 -ஐ பார்க்கவும். //

              ஆமா..ஆமா.. மோடி தவறே செய்யாத நல்லவரு.. அவரு ஒரு வல்லவரு..

              // குஜராத்தில் முஸ்லீம்கள் மீது நடந்த தாக்குதல் – இஸ்லாமிய விஷமிகளால் (சிலர் மட்டுமே) செய்யப்பட்ட கொடூரமான கொலையால் நேர்ந்த கலவரம்…அது திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் அல்ல என்று எல்லா தீர்ப்பாயங்கலும் சொல்லிவிட்டன… //

              உண்மை.. உண்மை.. குஜராத் போலீஸ் மட்டும் சரியான நேரத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் குஜராத்தில் ஒரு முஸ்லீமாவது உயிரோட இருந்திருக்க முடியுமா..? மோடி ரொம்ப நல்லவரு.. அவர் ஒரு வல்லவரு.. அதனால குஜராத்தில் முஸ்லீம்கள் இன்னும் உயிரோடு இருக்கமுடியுது..

              // It will be considered a libel in western countries, if you accuse someone of doing something deliberately, without any proof, when he or she did not really do it. //

              You are absolutely right..
              Let us sue US Govt for banning our beloved Modi to enter bloody US of America..

              // I see, most of the commentators in vinavu can be sued for the kind of accusations they make. //

              Yes.. yes.. all of them should be sued..

              VINAVU, you better be ready with your team of advocates..

              Other commentators, ரிப்பீட்டு.. மோடி நல்லவரு.. அவரு ஒரு வல்லவரு.. சொல்லலேண்ணா சூவிருவோம்..

              • //ஆமா..ஆமா.. மோடி தவறே செய்யாத நல்லவரு.. அவரு ஒரு வல்லவரு.. //

                உங்களுக்கு,இந்திய நாட்டின் நீதித்துறை மீது அதீத நம்பிக்கை உள்ளது என்று நினைக்கிறேன்..

                //உண்மை.. உண்மை.. குஜராத் போலீஸ் மட்டும் சரியான நேரத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் குஜராத்தில் ஒரு முஸ்லீமாவது உயிரோட இருந்திருக்க முடியுமா..? //
                கலவரத்தின் போது, காங்கிரஸ் ஆண்ட பக்கத்து மாநிலங்கள் உதவி மறுத்தது உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு ஆண்டும் கலவரம் நடக்கும் இடமான குஜராத்தில், கடந்த 10 ஆண்டுகளாக, மோதியின் தலைமையில், எந்த கலவரமும் நடக்கவிலை என்பது உங்களுக்குத் தெரியுமா?

                And, FYI, Modi did not apply for any visa. And, they are the same people who gave visa for Dictators like Musharraf, Gaddafi..And, they support Israel’s in middle east against Muslims. Are you fine with that? If you think US is NOT right everytime in what it is doing then you should not worry too much about denying visa for Modi.

                • ///காங்கிரஸ் ஆண்ட பக்கத்து மாநிலங்கள் உதவி மறுத்தது உங்களுக்குத் தெரியுமா?///
                  குஜராத்தில் இருந்தே உதவி வரலையாம்

                  • //குஜராத்தில் இருந்தே உதவி வரலையாம்//

                    கேட்ட கேள்விக்கு பதில் இல்லை..ஏதோ கிறுக்குவதை விட சிறந்தது, வாயை மூடிக்கொண்டு இருப்பது…!!

                    மோடி, திக்விஜய் சிங்கைப் பார்த்து கேட்ட கேள்வி இது..!!குறை கூறுவது எளிது…அதை விட எளிது, ஆதாரமே இல்லாமல் குறை கூறுவது..

                    Grow up kid..!!

                    • // கேட்ட கேள்விக்கு பதில் இல்லை..ஏதோ கிறுக்குவதை விட சிறந்தது, வாயை மூடிக்கொண்டு இருப்பது…!! //

                      கேள்வியே கேட்கக்கூடாது என்றுதான் வாயை மூடிக் கொண்டிருந்தேன்.. ஆனா முடியல.. அதனால கடைசியா ஒரே ஒரு கேள்வி பாஸ், பிளீஸ்..பிளீஸ்..

                      // கலவரத்தின் போது, காங்கிரஸ் ஆண்ட பக்கத்து மாநிலங்கள் உதவி மறுத்தது உங்களுக்குத் தெரியுமா? //

                      குஜராத் போலீசுதான் நம்ம நல்லவருக்கு பற்றாக்குறையா..?! காங்கிரசுகாரன்கிட்ட போய் கேட்டா குடுப்பானா..? வாஜ்பாயிகிட்ட சொல்லியிருந்தா ராணுவத்தை அனுப்பியிருக்க மாட்டாரா..?!

                    • //குஜராத் போலீசுதான் நம்ம நல்லவருக்கு பற்றாக்குறையா..?! காங்கிரசுகாரன்கிட்ட போய் கேட்டா குடுப்பானா..? வாஜ்பாயிகிட்ட சொல்லியிருந்தா ராணுவத்தை அனுப்பியிருக்க மாட்டாரா..?!//

                      For a faster response, let me write in English. Please go through the SIT report where all your questions have detailed answers. What you have asked about shortage is a very natural question that crops up in everyone’s mind. Modi has explained why he needed additional police force. I can give the reason. But i want you to read it so many other questions about the “Nallavar” is answered and you really believe in what you just said about Modi. And for your question on deployment of Army, please note that there is a SOP (standard OPerating Procedure) for deploying ARMY for internal purposes like riots. Any state government has to exhaust “ALL” options mentioned in SOP before reaching out to Army whose main job is to protect the country from other countries/terrorists.(which we have many in the name of islamic failed states like Pak, bangladesh and Afghanistan). One of the SOP procedure is to take help from neighbouring states – Maharashtra and MP. Digvijay Singh and (i think ) vilasrao deshmukh refused help so they can blame BJP later. Just for your information, even after executing all the SOPs, it takes more than 3 days to deploy army before which the riots were controlled. During recent Assam Riots (Kokhrajhar), it took 5 days to deploy army from the time request was made. And it took more than a month to bring things under control here. Had it not been for Modi, your comment in jest that “all muslims in gujarat would have been eliminated” would have been the reality. Modi’s administration is very effective that they arrested close to 28000 Hindus and 7000 Muslims. Riot is an unfortunate thing – wherever it happens. One need to be careful while talking about it. One cannot make careless statements. Why no one is talking about what triggered the riot? Why no one is talking about Digvijay Singh’s actions at the time of need? Muslims should think. FYI: Please talk to vijayakanth (on a lighter note) to get the statistics on the police force per state and how and where they are deployed. FYI: When Maharasthtra Police arrested the Muslim girl for her comments on Bal Thackeray and later released, the girl and the family moved to Gujarat saying that is the safest place for Muslims in India. Please dont get carried away by the “paid news” of Anti-BJP force.

    • குஜராத்தில் நரேந்திர மோடி செய்ததன் விரிவாக்கமே, ஈழப்படுகொலைகள். மோடிக்கும் ராஜபக்சே க்கும் என்ன வேறுபாடு? இருவருமே கொலைகார பாசிஸ்ட்கள். சுஷ்மா சிவராஜ் மற்றும் ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவ்கான் ஆகியோர் ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது நினைவில்லையா? தமிழகத்தின் அவலமே, ராஜபக்சேவுக்கு எதிராக சண்டமாருதம் புரியும் ஈழ ஆதரவாளர்கள், இங்கே குஜராத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளுக்கு மவுன சாட்சியாக இருப்பதே.

      ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு ம.பி சென்ற வைகோவால், ஏன், தருமபுரி செல்ல இயலவில்லை?

      பாலசந்திரன் பிணமாக கிடக்கும் படத்தில் ஒருமுறை, நம் வீட்டு குழந்தையின் முகத்தை வைத்துப் பார்ப்போம். அப்போதும் இரங்காத மனசாட்சியிடம் பேசி பயனில்லை.

      • //குஜராத்தில் நரேந்திர மோடி செய்ததன் விரிவாக்கமே, ஈழப்படுகொலைகள். மோடிக்கும் ராஜபக்சே க்கும் என்ன வேறுபாடு? இருவருமே கொலைகார பாசிஸ்ட்கள்.//

        நரேந்திர மோடி மீதான எந்த ஒரு குற்றச்சாட்டும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை…!! மாறாக, அவர் தவறே செய்யவில்லை என்று தான் தீர்ப்பு வந்துள்ளது…!!

        //சுஷ்மா சிவராஜ் மற்றும் ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவ்கான் ஆகியோர் ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது நினைவில்லையா?//

        உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, சுஷ்மா சிவராஜ் மற்றும் ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவ்கான் ஆகியோர் ராஜபக்சேவுக்கு வரவேற்பு கொடுப்பது தவறாகி விடுமா?

        • ///இருவரையும் தூக்கிலிடு..!! இதைத் தான் நானும் சொல்கிறேன்………………/
          இது ராஜபக்ஷெவின் போர் குற்றம் பற்றி தாங்கள் தெரிவித்த கருத்து

          ஆனால் தாங்கள் சார்ந்த கட்சியின் முக்கிய தலைவர் அவனுக்கு சிவப்பு கம்பளி வரவேற்ப்பு

          இதற்கு ஒரு சப்ப கட்டு வேறு
          ///உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, சுஷ்மா சிவராஜ் மற்றும் ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவ்கான் ஆகியோர் ராஜபக்சேவுக்கு வரவேற்பு கொடுப்பது தவறாகி விடுமா?///

          • //ஆனால் தாங்கள் சார்ந்த கட்சியின் முக்கிய தலைவர் அவனுக்கு சிவப்பு கம்பளி வரவேற்ப்பு
            இதற்கு ஒரு சப்ப கட்டு வேறு//

            How do you know which party i am supporting? Why do you assume? Am i supposed to oppose Modi just because you and the Muslims oppose him? Should i oppose him inspite of the fact that NONE of the courts and investigation teams have found him guilty? Remember..diplomacy doesnt work the way Prabhakaran executed…Even if he is your enemy, you have to engage him on the table. Thats why we invited Musharaf for talks even though we know he was the man behind Kargil war.

            எழுதுவதற்கு முன் சிறிதே சிந்தியுங்கள்..!!

  8. //நீங்கள் இஸ்லாமியர், அம்பி என்ற புனைப்பெயரில் எழுதுகிறீர்களென்று நினைக்கிறேன்//குஜராத்தை விட பாதுகாப்பான மாநிலம், இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் வேறு மாநிலம் இல்லை…//

    ஐயகோ! அம்பிக்குமா சோதனை! அம்பி ஒருவேளை இது ஏழுமலையானின் திருவிளையாடலோ? இப்படி அடிச்சு விடுறாரே இந்த சிறிதர்.

    • // அம்பி ஒருவேளை இது ஏழுமலையானின் திருவிளையாடலோ? //

      ஏழுமலையான் கண்களை மூடிக் கொண்டு இருப்பதால்தான் ராஜபக்சே துணிச்சலாக அவ்வப்போது திருப்பதிக்கே வந்து ஏழுமலையானுக்கு பழிப்பு காட்டிவிட்டு போக முடிகிறது..நம்பெருமான் என்றைக்கு காலைத் தூக்கி ராஜபக்சே வகையறாக்களின் தலையில் வைத்து அழுத்தப் போகிறானோ தெரியவில்லை..

  9. சிறிதர்,

    அவைகள் புலிகளால் கொல்லப்பட்டவர்களின் படங்கள் என்பதற்கு என்ன ஆதாரங்கள்? சரி புலிகள் கொன்றார்கள் என்றே வைத்துக்கொள்வோம், இதிலிருந்து என்ன சொல்ல வருகிறீர்கள்? இருதரப்பாரும் கொன்றவர்களின் படங்களில் எது அதிகம் கண்ணீரை முட்ட வைக்கிறது என போட்டியா நடக்கிறது இங்கு? பிரபாகரன் சர்வாதிகாரி என்றால் ராஜபக்சே மட்டும் அமைதிப் புறாவா? ஈழ மக்களுக்காக உமது கண்ணில் நீர் கசிகிறது என்றால் நியாயத்தை பேசு. வேண்டுமானால் இருவரையும் தூக்கிலிடு என்று பேசு.

    • //இருதரப்பாரும் கொன்றவர்களின் படங்களில் எது அதிகம் கண்ணீரை முட்ட வைக்கிறது என போட்டியா நடக்கிறது இங்கு? //

      போட்டி இல்லை.நமக்கு வேண்டியவர்களின் படங்களைப் பார்க்கும் போது கண்ணீர் வருகிற மாதிரி, எந்த குழந்தையின் முகத்தைப் பார்த்தாலும் கண்ணீர் வரவே செய்யும்..வர வேண்டும்…!!

      //ஈழ மக்களுக்காக உமது கண்ணில் நீர் கசிகிறது என்றால் நியாயத்தை பேசு. வேண்டுமானால் இருவரையும் தூக்கிலிடு என்று பேசு.//

      இருவரையும் தூக்கிலிடு..!! இதைத் தான் நானும் சொல்கிறேன். ஒருவரை மட்டும் நியாயப் படுத்தாதீர்கள்…!!

      • இருவரையும் தூக்கிலிடுவது இருக்கட்டும் 30 வருட அகிம்சைவழி போராட்டத்திலும் சரி,அது பலனலிக்காததால் தொடர்ந்து வந்த ஆயுதப்போராட்டத்திலும் சரி சிங்களக்காடையர்களால் துப்பாக்கியாலும்,கொத்துக்குண்டுகளாலும்,பாஸ்பரஸ் குண்டுகளாலும் படுகொலை செய்யப்பட்டும் மிகக்கொடூரமான பாலியல்வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட/நடைப்பிணமாக வாழும் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகளுக்கான நீதி என்ன? தீர்வு என்ன?

        இதை பேசுவதற்கு உங்கள் நாக்கு மறுப்பதேன்?

        • என் நாடு என்னை தன்மானத்தோடு வாழ விடவில்லை என்றால்,நான் போராடிப் பார்ப்பேன் – ஆயுதம் எடுக்காமல். அது பலன் அளிக்கவில்லை எனின், வேறு நாட்டுக்குக் குடி பெயர்ந்து செல்வேன். இது தான் நடைமுறை உண்மை. இதைக் கூறும் போது, மனம் வருந்துவது உண்மை.

          ஆயுதம் எடுத்தால், அதுவும் பெரும்பான்மையர்களுக்கு எதிராக,நீங்கள் நினைப்பது நடவாது…

          இந்தியாவுடன் சண்டை, தங்கி இருக்கும் தாய்நாட்டுடன் சண்டை, கூடவே வாழும் மற்ற தமிழருடன் சண்டை…பேச்சு வார்த்தையின் போது மற்றவர்களின் கருத்தை முற்றிலும் நிராகரிப்பது…இப்படி செய்தால் அமைதி எப்படி வரும்? என்ன தலைமையோ புளிகளுக்கு..?

          • // ஆயுதம் எடுத்தால், அதுவும் பெரும்பான்மையர்களுக்கு எதிராக,நீங்கள் நினைப்பது நடவாது… //

            உண்மை.. உண்மை.. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.. நேற்று முன் தினம் மாநிலங்களவையில் வெங்கய்ய நாயுடுவே, இறுதி கட்ட போரில் இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்தது குற்றம் என்று சொல்லுமளவுக்கு மேற்படி நாடுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு பெரும்பான்மையர்களுக்கு உதவியிருக்கின்றன..

            // தங்கி இருக்கும் தாய்நாட்டுடன் சண்டை //

            இந்தியாவில் நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் குற்றச்சாட்டுகளை ஈழத்துக்கும் ஏற்றுமதி செய்யமுடியாது.. ஈழத் தமிழர்களின் தாயகம் தமிழீழம்தான்.. 2.1-ஐ பார்க்கவும்..

            // என்ன தலைமையோ புளிகளுக்கு..? //

            அதானே.. தலைன்னா அது இந்தியாவில மோடி, இலங்கையில ராஜபக்சே..

          • ambi
            sridhar’S idealogy
            கண்ணிர் விட்டு அழுது பார்ப்போம் பாஸ்
            அதுக்கு மசியலைன்னா?
            கால்ல விழுந்து கதரிபார்ப்போம் பாஸ்
            அதுக்கும் பொடா கொய்யாலேன்னா?
            எதாவது நாட்டுக்குக் குடி பெயர்ந்து செல்வோம் பாஸ்
            அங்கையும் உங்கள ஒடுக்கினா
            கண்ணிர் விட்டு அழுது பார்ப்போம்
            ……………………….
            ……………………

            • Nagaraj:

              There is a saying: “Never argue with a fool. He will drag you down to his level and defeat you with experience”.

              //கண்ணிர் விட்டு அழுது பார்ப்போம் பாஸ் அதுக்கு மசியலைன்னா? கால்ல விழுந்து கதரிபார்ப்போம் பாஸ் அதுக்கும் பொடா கொய்யாலேன்னா?//

              Did i ever say that you need to BEG and CRY? Is Arvind Kejriwal BEGGING and CRYING? You have to work within the system. Why do you exaggerate my comment to suit you..?

              This is what i said:

              //என் நாடு என்னை தன்மானத்தோடு வாழ விடவில்லை என்றால்,நான் போராடிப் பார்ப்பேன் – ஆயுதம் எடுக்காமல். //

              Where ever you go, you need to have friends…You need to be flexible, give and take favours and most importantly you need to stop acting as a rebel.

              • ok tell me what will be your steps (how will you protest)

                if somebody hate you because of your colour

                if somebody will not give you house because of your caste/religion

                if you face the same problem even in other countries(like jews in many countries in last centuary)

          • //என் நாடு என்னை தன்மானத்தோடு வாழ விடவில்லை என்றால்,நான் போராடிப் பார்ப்பேன் – ஆயுதம் எடுக்காமல். அது பலன் அளிக்கவில்லை எனின், வேறு நாட்டுக்குக் குடி பெயர்ந்து செல்வேன்.//

            வேறுநாட்டுக்கு போவிங்க சரி..! உங்களைப்போலவே எல்லாரும் போக ஆரம்பிச்சா
            தட்டிக்கேட்க ஆளில்லாமல் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி உலகமே ராஜபட்சேக்களால் நிரம்பி வழியுமே அப்ப வேற கிரகத்துக்கு போணுமா..?அங்கும் பிரச்சனைனா நிம்மதில்லாமல் தலைமுறை தலைமுறையாக நாடோடியாக ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்..! இதுக்கு.. வரும் தலைமுறையாவது நல்லா இருக்கட்டும்னு தாய்நாட்டிலேயே போராடிச் சாவது மேல்..!!

            //இது தான் நடைமுறை உண்மை. இதைக் கூறும் போது, மனம் வருந்துவது உண்மை.

            ஆயுதம் எடுத்தால், அதுவும் பெரும்பான்மையர்களுக்கு எதிராக,நீங்கள் நினைப்பது நடவாது…//

            இது பம்மாத்து.. இது உண்மையென்ரால் உலக வரலாற்றில் பலநாடுகளும், தற்போது கொசாவா,தெற்கு சூடான்,கிழக்குதைமூர் வரை உருவாகி இருக்காதே..!

            //இந்தியாவுடன் சண்டை, தங்கி இருக்கும் தாய்நாட்டுடன் சண்டை, கூடவே வாழும் மற்ற தமிழருடன் சண்டை…பேச்சு வார்த்தையின் போது மற்றவர்களின் கருத்தை முற்றிலும் நிராகரிப்பது…இப்படி செய்தால் அமைதி எப்படி வரும்?//

            வரலாற்றை முழுதா படித்துவிட்டு பேசுவது நல்லது.. இது நீங்கள் தற்காப்புக்காக போராடுகிறவர்களது தவறுகளை( விவாதத்திற்குரியது) சிங்கள பேரினவாதத்தின் கொடூரங்களோடு ஒப்பிட்டு ஒரே தராசில் வைத்து பார்ப்பதிலேயே தெரிகிறது..!

            //என்ன தலைமையோ புளிகளுக்கு..?//

            கொண்ட கொள்கையில் நேர்மையாகவும்,உறுதியாகவும் இருந்த வகையில் “அவர்களது தாய்நாடான ஈழத்துக்கு” நல்ல தலைமைதான்…

      • //போட்டி இல்லை.நமக்கு வேண்டியவர்களின் படங்களைப் பார்க்கும் போது கண்ணீர் வருகிற மாதிரி, எந்த குழந்தையின் முகத்தைப் பார்த்தாலும் கண்ணீர் வரவே செய்யும்..வர வேண்டும்…!!//

        காஷ்மீரிலும், குஜராத்திலும், ஈராக்கிலும், பாலஸ்தீனத்திலும், ஈழத்திலும் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள், மக்களில் குழந்தைகள், பருவ வயதினர், முதியவர்கள் என அனைவருக்குமாகத்தான் நாங்கள் கண்னீர் விடுகிறோம். உங்களுக்குத்தான் செலக்டீவாக வருகிறது

        • //உங்களுக்குத்தான் செலக்டீவாக வருகிறது//

          தவறு. எனக்கும் வருத்தம் தான். இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை கண்டு, கண்ணீர் கண்டிப்பாக வருகிறது…(ஆனால், புலி இல்லாத தமிழர்களுக்காக)

          நீங்களும் தெளிவுப்படுத்துங்கள்…காஷ்மீரிலும், குஜராத்திலும் இறக்கும் இந்துக்களுக்காகவும் கண்ணீர் வருகிறதா? இஸ்ரேலில் இஸ்லாமியர்களால், அநியாயமாகக் கொல்லப்படும் யூதர்களுக்காகவும் கண்ணீர் வருகிறதா?

          • ///இஸ்ரேலில் இஸ்லாமியர்களால், அநியாயமாகக் கொல்லப்படும் யூதர்களுக்காகவும் கண்ணீர் வருகிறதா?///

            இஸ்ரேலை சுற்றி முஸ்லிம் நாடுகளெ உள்ளன

            அப்படி பார்த்தால் தங்களின் கொள்கை படி

            அவர்கள் /// நான் போராடிப் பார்ப்பேன் – ஆயுதம் எடுக்காமல். அது பலன் அளிக்கவில்லை எனின், வேறு நாட்டுக்குக் குடி பெயர்ந்து செல்வேன். ///

            ஆயுதம் எடுத்தால், அதுவும் பெரும்பான்மையர்களுக்கு எதிராக,நீங்கள் நினைப்பது நடவாது…

            //இந்தியாவுடன் சண்டை, தங்கி இருக்கும் தாய்நாட்டுடன் சண்டை, கூடவே வாழும் மற்ற தமிழருடன் சண்டை…பேச்சு வார்த்தையின் போது மற்றவர்களின் கருத்தை முற்றிலும் நிராகரிப்பது…இப்படி செய்தால் அமைதி எப்படி வரும்? என்ன தலைமையோ புளிகளுக்கு..?/
            இது இஸ்ரேலுக்கும் பொருந்தும்

            • இது இஸ்ரேலுக்குப் பொருந்தாது. ஏனெனில், அது யூதர்களுடைய நாடு. அவர்கள் போராடுவது இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக…

              //நான் போராடிப் பார்ப்பேன் – ஆயுதம் எடுக்காமல். அது பலன் அளிக்கவில்லை எனின், வேறு நாட்டுக்குக் குடி பெயர்ந்து செல்வேன்.//

              இது – “என் நாடு என்னை தன்மானத்தோடு வாழ விடவில்லை என்றால்” மட்டுமே. பக்கத்து நாட்டுக்காரன் என்னை படுத்தினால்,நான் மட்டும் அல்ல, நாடே திருப்பி அடிக்கும். அதுவும் கூட, பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால்…அதற்குப் பிறகும், பக்கத்து நாடு அமெரிக்கா மாதிரி, பலம் வாய்ந்த நாடாக இருந்தால், ஆயுதம் எடுப்பதற்கு முன்பு, யோசிக்கவே வேண்டும்.

  10. sridhar…
    சிறீலங்காவின் அரசியலைப்பற்றி சற்றுப்பாருங்கள்….
    பண்டாரநாயகா, விஜய குமாரதுங்க என்று சிங்கள அரசியல்வாதிகளே கொல்லப்பட்டார்கள்…

    ஆரம்பத்தில் அகிம்சா வழியில் போராடினர் தமிழர் என்பதும், அப்படி போராடியதிற்குக்கிடைத்தப்பரிசு என்ன என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

    முதலில் அதைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்…
    வேறு வழியே விட்டு வைக்கவில்லை…யாரும் நிம்மதியாக வாழ்வதை விட்டு துப்பாக்கி தூக்க ஆசைப்படவில்லை…

    அண்ணன் மீது பல அவதூறுகள், குடும்பத்தை ஐரோப்பாவிற்கு அனுப்பி விட்டார், மற்றவரைப்போரிட வைத்து தன் குழந்தைகளை வெளிநாட்டில் தங்க வைத்தார் என்பது போன்று…ஆனால் நடந்தது என்ன?
    எவனோ பத்திரிகையில் எழுதினால் அது உண்மையாகிவிடுமா?

    பங்களாதேசத்தில் பிரசினை என்று 1971-ல் உதவினோம்… அப்போ யாழ்பானத்தில் என்றால் உதவமுடியாதா? பங்களாதேசம் வெளிநாடில்லயா? …

    சிறீலங்காவின் அரசியலைப்பற்றி சற்றுப்பாருங்கள்….
    பண்டாரநாயகா, விஜய குமாரதுங்க என்று சிங்கள அரசியல்வாதிகளே கொல்லப்பட்டார்கள்…

    ஆரம்பத்தில் அகிம்சா வழியில் போராடினர் தமிழர் என்பதும், அப்படி போராடியதிற்குக்கிடைத்தப்பரிசு என்ன என்பதும் உங்களுக்குத்தெரியுமா?

    முதலில் அதைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்…
    வேறு வழியே விட்டு வைக்கவில்லை…யாரும் நிம்மதியாக வாழ்வதை விட்டு துப்பாக்கி தூக்க ஆசைப்படவில்லை…

    அண்ணன் மீது பல அவதூறுகள், குடும்பத்தை ஐரோப்பாவிற்கு அனுப்பி விட்டார், மற்றவரைப்போரிட வைத்து தன் குழந்தைகளை வெளிநாட்டில் தங்க வைத்தார் என்பது போன்று…ஆனால் நடந்தது என்ன?
    எவனோ பத்திரிகையில் எழுதினால் அது உண்மையாகிவிடுமா?

    பங்களாதேசத்தில் பிரசினை என்று 1971-ல் உதவினோம்… அப்போ யாழ்பானத்தில் என்றால் உதவமுடியாதா? பங்களாதேசம் வெளிநாடில்லயா?

  11. நாம் தமிழர் என்று ஒருவராகவா இருக்கின்றோம்? இல்லை.பல சாதிக்குழுக்களாக,அதனை மெய்ப்பிக்க தனித்தனி நடைமுறைகள்,அதனில் எந்த மாற்றமோ அல்லது அழிவோ ஏற்படாவண்ணம் கட்டிக்காக்கின்றோம்.அதனால் பின்னர் நாளடைவில் மதமும் பலவானது.இருப்பினும் ஈழ மக்கள் காரியத்தில் 2009 படுகொலைக்குப்பின் சோனியாவின் காங்கிரசு,பிஜெபி சூசம்மாசுவராச் போன்றோர் நிலக்கொள்கையில் இந்தியா இனி யாருக்கும் புதிய இடங்களை உருவாக்காதெனவும்.இலங்கையும் அறிவிக்கப்படாத கடைசி மாநிலமாக கருவருக்கப்படும் என அறிவிப்பு இல்லாமல் செயலில் காட்டி வருகின்றார்.பர்ராக் ஒபாமாவும் இந்தியா பெரிய நிலப்பரப்பு என நான் ஏற்றுக்கொள்கின்றேன்.அதனால் நாங்கள் இராக்,ஆப்கன்,பாலத்தீன்,ஈரான் காரியங்களில் எப்படி நடவெடிக்கை எடுத்தோமோ அதனைப்போன்று இந்தியாவும் நன்றாகக் கொள்ளவும் என லியாண்டர் பெனட்டா இந்திய ரா அதிகாரிகளை உடனுக்குடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.காரியம் எப்படியோ ஏதோ இன்று அரபு நாடுகளைப்போன்ற நிலை இந்தியாவுக்கு வராமலா போகும்? பார்ப்போம்.வாழ்க நம் தாய்திரு நாடு.

  12. புலிகள் செய்தவையெல்லாம் சரியென்று கூறமுடியாது. அதற்காக பல்வேறு நாடுகளில் அவர்கள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளார்கள், தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
    ஆனால், எல்லாவற்றுக்கும் மூலகாரணமான, புலிகளைவிட மிகமிக மோசமான செயல்களை, இனப்படுகொலையை செய்த, செய்துவருகின்ற சிறீ லங்கா (இலங்கை) அரசு எந்தவித தண்டனைகளுக்கும் உட்படவில்லை. அதற்கு இந்தியா போன்ற நாடுகளும் உடந்தையாக இருப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
    இருதரப்பும் செய்த குற்றங்கள் நடுநிலையாளர்களால் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். அரசு என்ற ஒரே காரணத்திற்காக சிறீ லங்கா (இலங்கை) அரசு செய்கின்ற அட்டூழியங்கள் கேட்பாரற்று தொடர்வது நிறுத்தப்பட வேண்டும்.

  13. sridhar’s arguments are similar to gandhi’s words on japanese invasion of china

    ///What about China, you will ask. The Chinese have no designs upon other people. They have no desire for territory. True, perhaps, China is not ready for such aggression; perhaps, what looks like her pacifism is only indolence. In any case, China’s is not active non-violence. Her putting up a valiant defence against Japan is proof enough that China was never intentionally non-violent. That she is on the defensive is no answer in terms of non-violence. Therefore, when the time for testing her active non-violence came, she failed in the test. This is no criticism of China. I wish the Chinese success. According to the accepted standards, her behavior is strictly correct. But when the position is examined in terms of non-violence, I must say it is unbecoming for a nation of 400 millions, a nation as cultured as China, to repel Japanese aggression by resorting to Japan’s own methods. If the Chinese had non-violence of my conception, there would be no use left for the latest machinery for destruction which Japan possesses. The Chinese would say to Japan; “Bring all your machinery, we present half of our population to you. But the remaining two hundred millions won’t bend their knee to you.” If the Chinese did that, Japan would become China’s slave……///

    http://www.mkgandhi.org/articles/nonvio_wrd.htm

  14. சிறிதர் அவர்களே, RSS இயக்க கள்ளப்பரப்புரையின் புதிய பீரங்கியாக வினவு தளத்தில் வந்து இறங்கியிருக்கும் உங்கள் வரவு நல்வரவு ஆகுக;

    என்னை எப்படி BJP ஆதரவாளன் என்று கருதிக் கொண்டீர்கள் என ஒரு பின்னூட்டத்தில் கோபப்பட்டிருந்தீர்கள்.யானையை யானை என்று சொல்வதற்கு பெரிய புத்திசாலித்தனம் ஏதும் தேவையில்லை.

    \\தமிழ் பேசுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இலங்கையில் உள்ள தமிழற்களுக்கு வக்காலத்து வாங்குவது தவறு என்பது என் கருத்து// என்று தமிழின வெறுப்பை கக்குவதும்

    \\என் சந்தேகத்திற்குக் காரணம்: சம்பந்தமே இல்லாமல், குஜராத் பற்றி பேசியது தான்…!! இஸ்லாமியர் தாம் இவ்வாறு செய்வர்// என இசுலாமிய வெறுப்பை கக்குவதும்

    கொலைகாரன் மோடிக்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவதும் உங்கள் பார்ப்பனிய இந்து மத வெறியை வெளிச்சம் போட்டு காட்டும்போது உங்களை யாருடன் சேர்த்து அடையாளம் காண்பது எனபது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்ல.

    அமெரிக்காவில் உள்ள ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலேயர்கள் வக்காலத்து வாங்குவதும்,தமிழின உணர்வாளர்கள் ஈழத்தமிழர்களை ஆதரிப்பதும் அவர்களுக்காக போராடுவதும் ஒன்றா.அமெரிக்க ஆங்கிலேயர்களும் இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலேயர்களும் கூட்டுக்களவாணிகள். உலகெங்கும் ஆக்கிரமிப்பு போர்கள்,ஆயுத விற்பனை,ஆயுதம் விற்பதற்காக உள்நாட்டு யுத்தங்களை தூண்டி விடுவது,மூன்றாம் உலக நாடுகள மீதான பொருளியல் சுரண்டல்,கொள்ளை என கொட்டமடிக்கும் அவர்களும் அடக்குமுறையாலும் இனப்படுகொலையாலும் அல்லல்படும் தமிழர்களும் ஒன்றா.

    \\பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகள்,நம் நாட்டு விஷயத்தில் தலையிடுவர் – உதாரணம்: காஷ்மீர், கோத்ரா எரிப்பு மற்றும் ஐதராபாத் வெடிகுண்டு…எதில் தலையிடலாம், எதில் கூடாது என்று ஒரு வரைமுரை உள்ளது.//

    தெற்காசிய பகுதியின் பேட்டை போக்கிலியான இந்தியாவின் அயோக்கியத்தனங்களை மூடி மறைத்து அதற்கு நல்லவன் வேடம் போட்டுவிடும் ஒப்பனை கலையெல்லாம் எடுபடாது.1962 சீன போருக்குப்பின் வந்த ”தேசபக்த” திரைப்படங்களை பார்த்தும் 1965-பாகிசுதானுக்கு எதிரான போரில் குண்டு வீச்சில் படுகாயமுற்ற நிலையிலும் அப்துல் அமீது என்ற இந்திய ராணுவ வீரர் ஒற்றை ஆளாக வானூர்தி எதிர்ப்பு பீரங்கியை இயக்கி எதிரி நாட்டு வானூர்தியை வீழ்த்தியதையெல்லாம் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தமிழ்ப் பாடத்திலும் இந்தியா அமைதியை விரும்பும் நாடு என புவியியலிலும் படித்து,கேட்டு மயங்கிப் போயிருந்தவர்கள் இப்போது தெளிவடைந்து விட்ட காலம் இது.

    ஈழத்தில் மட்டுமல்ல,ஆப்கானிலும் பாக்-லும் இந்தியாவின் தலையீடுகளுக்கு ஆதாரங்கள் ஊடக வெளியெங்கும் கொட்டிக் கிடக்கின்றன.ஆனாலும் இந்தியா தலையிடாதது போல் பேசும் உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம்யா.உங்களை போன்றோரின் இந்த மாதிரியான உளறல்களுக்கு மொத்தமாக ஒரு ஆப்பு வைத்தானே கோத்தபய்யே ராசபக்சே இப்படி ”இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்”.இதற்கு என்ன சொல்கிறீர்கள்.

    \\என் நாடு என்னை தன்மானத்தோடு வாழ விடவில்லை என்றால்,நான் போராடிப் பார்ப்பேன் – ஆயுதம் எடுக்காமல். அது பலன் அளிக்கவில்லை எனின், வேறு நாட்டுக்குக் குடி பெயர்ந்து செல்வேன்.//

    அறிவை அடகு வைத்துவிட்டு வந்து இப்படியெல்லாம் உளற முடிகிறது உங்களால். ஈழத்தமிழர்கள் 35 இலட்சம் பேரும் புலம் பெயர்ந்து செல்ல முடியுமா.என்ன ஒரு கிறுக்குத்தனம்.அப்புறம் உங்களை போன்றவர்களுக்கு வேண்டுமானால் சோறு கண்ட இடம்
    சொர்க்கமாக இருக்கலாம்.பிறந்த மண்ணையும் அம்மண்ணின் மக்களையும் நேசிப்பவர்களால் அப்படியெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

    அடுத்து கொலைகாரன் மோடிக்கு உங்களுடைய வக்காலத்து

    நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது,மோடி நல்லவர்,வல்லவர் என்ற ஈர வெங்காயமெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். குசராத் கலவரம் நடந்தது என்பதும் அதில் மூவாயிரம் முசுலிம் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மைகள்.

    ஆகவே கண் முன்னால் மூன்று நாட்கள் மதவெறி மிருகங்கள் அப்பாவி பொது மக்களை வேட்டையாடி இருக்கின்றன.அதனை தடுக்க வக்கற்ற ஒரு முதல்வர் திறமையான ஆட்சியாளர் என சொல்வதற்கு உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா,

    நீங்கள் ஏற்றிப் போற்றும் இந்திய நீதித்துறையாலேயே மோடியின் அமைச்சர் ஒருவர் குசராத் இனப்படுகொலை வழக்கொன்றில் தண்டிக்கப் பட்டுள்ளார்.ஆக ஒரு கொலைக் குற்றவாளியை தனது அமைச்சரவையில் வைத்திருந்த மோடி உங்களுக்கு நல்லவர்,வல்லவர். இப்படியெல்லாம் மனசாட்சி உள்ள ஒரு மனிதன் பேச முடியுமா.

    மோடியின் யோக்கியதைக்கு ஒரு சான்று.
    http://ibnlive.in.com/news/full-text-amicus-curiaes-report-on-gujarat-riots/255578-53.html

    அடுத்து கோத்ரா.இவையெல்லாம் ஏற்கனவே இங்கு விவாதிக்கப்பட்டுள்ளன.மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது.சுட்டி தருகிறேன்.படித்து விட்டு வாருங்கள் மேற்கொண்டு பேசலாம்.

    https://www.vinavu.com/2011/01/19/pa-raghavan-kizhakku-rss/#comment-36019

    • வேணுமின்னா இப்படி சொல்லலாம் எல்லா இந்துக்களும் அரைக்கால் டவுசர் தீவிரவாதிகளல்ல. முஸ்லீம் பெயரால் குண்டு வைக்கும் எல்லா இந்துக்களும் அரைக்கால் டவுசர் தீவிரவாதிகள்தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க