Wednesday, August 4, 2021
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் 'தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்!' - ராமதாஸ் !

‘தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்!’ – ராமதாஸ் !

-

ரு பிரச்சினையில் பாதிப்படைந்தவர் போராடுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் பாதிப்பை உண்டாக்கியவர்கள் எங்காவது ‘நீதி’ கேட்டு போராடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தருமபுரி நாயக்கன் கொட்டாய் வட்டாரத்தில் தலித் மக்களின் வீடுகளை அழித்து சூறையாடிய வழக்கு நினைவிருக்கலாம். இதில் குற்றவாளிகளான வன்னிய சாதிவெறியர்கள் அனைவரும் தண்டிக்கப்படாத நிலையில் ஒரு சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பலர் பிணையில் வெளிவந்து விட்டார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வன்னிய சாதிவெறியர்களின் குடும்பத்தினரை குறிப்பாக பெண்களை அணிதிரட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார் பாமக ராமதாஸ். தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைத் தாக்கிய வன்னிய சாதிவெறியர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதோடு அவர்கள் அப்பாவிகள் என்பது ராமதாஸின் கண்டுபிடிப்பு. சரி, இவர்கள் அப்பாவிகள் என்றால் உண்மையான குற்றவாளிகளை ராமதாஸே பிடித்துக் கொடுத்து விடலாமே? இல்லை அவர்களை தூண்டிவிட்டது நானும், காடுவெட்டி குருவும்தான் என்று உண்மையை ஒத்துக் கொண்டாவது தானாக கைதாக முன்வரலாமே?

ஊர் ஊராக ஆதிக்க சாதிவெறியர்களை அணிதிரட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சமூகத் தீண்டாமையை அமல்படுத்த உரிமை வேண்டும் என்று பச்சையாக நஞ்சைக் கக்கும் இந்த பச்சோந்தியை தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடவிட்டதே பெரும் அபாயம். தைலாபுரத்தை விட்டு அவர் எங்கும் வெளியே போகக்கூடாது என்று உத்தரவு போடுவதை விடுத்து, சாதிவெறியை வெளிப்படையாக கக்கும் அவரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்வதை விடுத்து, அவர் நடத்தும் இந்த சாதிவெறிக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது தமிழக போலீசு.

ஜெயலலிதா அரசு இப்படி இரட்டை வேடம் போட்டு சாதிவெறிக்கு துணை போனாலும் நாம் தொடர்ந்து ராமதாசையும் வன்னிய சாதிவெறிக் கட்சியான பாமகவையும் தனிமைப்படுத்தும் வண்ணம் போராட வேண்டும். இங்கே தஞ்சையில் நடந்த போராட்டத்தினை பதிவு செய்கிறோம்.

தஞ்சை மாவட்ட நிர்வாகமே! தலித் மக்களுக்கு எதிரான பா.ம.க. ராமதாஸ் தலைமையிலான ஜாதிவெறிக் கும்பலை தஞ்சை மாவட்டத்தினுள் அனுமதிக்காதே!

என்ற முழக்கத்தை முன் வைத்து பிப்ரவரி 22, 2013 வெள்ளிக் கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு ரயிலடியில் மறியல் நடைபெற்றது.

அனைத்து சமுதாய பேரியக்க ஆலோசனைக் கூட்டத்திற்காக தஞ்சை வந்த பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு எதிராக ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். இதனை திரளான மக்கள் ஆர்வத்துடன் நின்று பார்த்தனர்.

 

 1. ராமதாசின் ஆட்கள் செய்த்த்து கண்டனதுக்கு உரியதுதான்.. தலிதுகளை ஆதரிப்பது கடமைதான் … அதே சமயம் வன்னியர்களும் பின் தங்கியுள்ளார்கள் (ராமதாஸ் தவிர்த்து) வன்னியர்களை எதிர்பது தொழிளார் விரோதம் என்பதை தெரிவிதுக்கொள்கிறேன்

 2. மருத்துவர் ஐயா சொல்வதில் என்ன தப்பு

  தாழ்த்தப்பட்டோர் தங்களுக்குள்ளேயே பேதம் பார்க்கும் பொழுது வன்னிய வெறி தவறில்லை

  எந்த ஊரிலாவது அருந்ததியினரை தேவேந்திரகுல வெள்ளாளர்கள் ஒப்புக்கொண்டார்களா அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்கின்றனர்

  யோவ் இவ்வளவு வாய் கிழிகிறதே உனக்கு உன்னால் இரட்டை குவளை முறையை நிறுத்த முடியுமா இல்லை போராட்டம் தான் அறிவிக்க முடியுமா

  ஜெயா சொன்னது போல் தகரம் கண்டுபிடிப்பதற்க்கு முன்பே உண்டியல் செய்து வசூலித்தவர்கள் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்டுகள் தான்

  ஏன் ஐதராபாத் குண்டுவெடிப்பை ஆதரித்து ஒரு கட்டுரையையும் காணோம். நானும் நீ ஏதாவது லூசுத்தனமாக _______ கொடுப்பாய் பார்த்து ரசிக்கலாம் என விருந்தேன்

  • //தாழ்த்தப்பட்டோர் தங்களுக்குள்ளேயே பேதம் பார்க்கும் பொழுது வன்னிய வெறி தவறில்லை

   எந்த ஊரிலாவது அருந்ததியினரை தேவேந்திரகுல வெள்ளாளர்கள் ஒப்புக்கொண்டார்களா அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்கின்றனர்//

   இதையேன் தான் நாங்களும் சொல்கிறோம். தமிழர்கள் அவர்களுக்குள் அடித்துக்கொண்டால் தப்பில்லையாம். நாங்க கொன்னா மட்டும் ஐ நா போவாங்களாம் , இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பார்களாம். என்ன அநியாயம் இது?

   வாழ்க சாதி ! ஓங்குக சிங்கள ஏகாதிபத்தியம் !!

   சிங்களன்

 3. இங்கே யாரும் வன்னியர்கள் அனைவரையும் எதிர்க்கவில்லை. வன்னிய சாதி வெறியர்களைத்தான் எதிர்க்கிறார்கள். அதே நேரத்தில் வன்னிய மக்கள் அனைவரின் பிரதிநிதியாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் ராமதாசு, காடுவெட்டி குரு போன்ற சாதிவெறி பிடித்த காட்டுமிராண்டிகளை ஆதரிக்காத வன்னிய உழைக்கும் மக்கள், அவர்களை எதிர்த்து அம்பலப்படுத்த வேண்டும். இதைத்தான் புரட்சிகர அமைப்புகள் கோருகின்றனர்.

  • //ராமதாசு, காடுவெட்டி குரு போன்ற சாதிவெறி பிடித்த காட்டுமிராண்டிகளை// உங்கள் சாதி வெறி புரிந்துகொள்ள முடிகிறது. வேறு யார் நல்லவர், நடுநிலையானவர் என்று சொல்லுங்கள் தெரிந்து கொள்வோம்.

    • மற்றவன் எல்லாம் மொள்ளமாரி!! எங்கள் தலைவர் முடிச்சவுக்கி!!! என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறீர்களா மிஸ்டர். உன்மை!!!!

  • //வன்னிய சாதி வெறியர்களைத்தான் எதிர்க்கிறார்கள்// வன்னிய மக்கள் கட்டை பஞ்சாயத்து கும்பலைத்தான் எதிர்கிறார்கள்.

 4. மருத்துவம் படித்த அய்யாவிடமே அதுவும் இத்தனை வருட பொது வாழ்க்கைக்கு பிறகும் இவ்வளவு சாதி வெறி இருக்கும் போது, கிராமத்தில் இருக்கும் படிக்காத வன்னியன்,தான் செய்வதை ஐயாவே சப்போர்ட் பண்றாருன்னு இன்னும் நாலு வீட்டை சேர்த்துதானே கொளுத்துவான்.அவனை நேரிடையாக சென்று நீ செய்வது தவறென்று சொல்வது தான் ஒரு தலைவனின் கடமை.வடதமிழகத்தில் நாயுடு முதலியார் மற்றும் பார்ப்பன சமூகத்து பெண்கள் பெருமளவில் தலித்களை திருமணம் செய்து கொண்டு வாழ்வதை பதிவு திருமண புள்ளி விவரங்கள் மூலம் அரசு விழிப்புணர்வு பரப்புரை செய்ய வேண்டும்.

  • பிரச்சனை எப்படி ஏற்பட்டது என தெரிந்து கொள்ளாமல் ஏதாவது கதையில் அள்ளி விடாதீர்கள்.

 5. ஊர் ஊராக ஆதிக்க சாதிவெறியர்களை அணிதிரட்டி சமூகத் தீண்டாமையை அமல்படுத்த உரிமை வேண்டும் என்று பச்சையாக நஞ்சைக் கக்கும் இந்த பச்சோந்தியை தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடவிட்டதே பெரும் அபாயம். இந்த அபாயத்தை ஊர்ஊராக விரட்டும்போதுதான் சாதி வெறியும் ஓடி ஒளியும்.

 6. As some people including “vinavu” talks much against Dr.Ramadass makes him more popular in politics and huge support gathering to Dr.Ramdoss now from his own community compare to earlier and also from other communities. As PMK was really losing ground slowly for some time among his own community made him now indisputable leader in his community and also from other communities. Dr.Ramadass should really thank you and his other opponents.

 7. மருத்துவர் ஐயா பொது மேடையிலேயே வன்னிய குழந்தைகளை சாதிகள் பற்றி சொல்லி வளர்க்க வேண்டும் என்கிறார்.வன்னியர்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.காடு வெட்டி குரு வன்னிய பெண்களை காதலித்தால் வெட்டுங்கடா என்கிறார்.சின்ன அய்யா பள்ளிக்குழந்தைகளிடம் காதலிக்காதே என்று வகுப்பு எடுக்கிறார். சட்டப்படி இவை சரியானதா இல்லையா என்று படித்தவர் எல்லோருக்கும் தெரியும்,ஆனால் வெளிப்படையாக பத்திரிக்கைகளோ, தொலைகாட்சிகளோ, அரசியல் தலைவர்களோ,இணைய பதிவர்களோ எழுத்தாளர்களோ கண்டனமோ எதிர்ப்போ தெரிவிக்காததால் இதை பற்றி கிசுகிசுக்க கூட அஞ்சுகிறார்கள்.

 8. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான இந்தச் சட்டத்தை எதிர்த்து சாதி வெறியரான ராமதாசு போராட்ட நடத்துகிறார்.
  ஈழத்தில் இனவாத அரசுகள் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டி வாக்குப் பொறுக்குவது போன்று ராமதாஸ் போன்றவர்களின் கட்சிகள் ஆதிக்க சாதி வெறியைக் கட்டவிழ்த்து அழிவுகளை ஏற்படுத்துகின்றன.
  தாழ்த்தப்பட்ட சாதியினரில் யாரும் ஆதிக்க சாதியினரைத் திருமணம் செய்தால் கொலை, சூறையாடல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோம் எனக் கூறும் ராமதாஸ் குழு இந்திய மக்களின் அவமானச் சின்னம்.

 9. தாழ்த்தப்பட்டோர், இக்கூட்டமைப்பின் கண்ணோட்டத்தில் கீழ்சாதி. அதே நேரத்தில் இந்தக் கூட்டமைப்பில் உள்ள சாதிகளில் கண்ணோட்டத்தில் பார்த்தால் வன்னிய சாதி கீழ்சாதி!

  தன்னைவிட ஒரு கீழ்சாதி நாட்டை ஆள பிற சாதிகள் ஒப்புக்கொண்டுவிட்டதாக ராமதாசும் – பாமக –வும் கருதுவார்களேயானால் அவர்களுக்கு நாம் இப்போதே நமது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வோம்.

 10. ***மருத்துவர் ஐயா பொது மேடையிலேயே வன்னிய குழந்தைகளை சாதிகள் பற்றி சொல்லி வளர்க்க வேண்டும் என்கிறார்***

  தோழர்கள் கவனிக்க…

  ஒரு தலித் குழந்தை பள்ளியில் சேர்கிறது என வைத்துக்கொள்வோம்..முதலில் என்ன கேட்பார்கள் “உன் சாதி என்ன?” அந்த தலித் குழந்தை அதன் சாதி தெரியவரும்.

  “உதவி தொகை” என அந்த குழந்தையை அழைத்து சிறப்பு செய்வான்..அந்த குழந்தையும் பணத்தை வாங்கிகொண்டு தனது சாதிய வரலாறை தெரிந்துக்கொள்ளும்.

  அதன் பின் சாதியின் பெயரால் “வேலை வாய்ப்பு”

  அதன் பின் சாதியின் பெயரால் “பதவி உயர்வு”

  அதன் பின் சாதியின் பெயரால் சட்டவிரோதமாய் நடந்தாலும் தனது தலித் கட்சிகள் பின்னாலிருந்து காப்பாற்றும்.

  என தன் வாழ்நாள் முழுவதும் சாதி சாதி சாதி என தலித் வாழ்கிறான்…

  தோழர்களே..நான் கேட்கிறேன்..

  நீங்க பூசுனா சந்தானம் நாங்க பூசுனா கழிவா..?

  இந்த நாடு ரொம்ப மோசம்டா கொடுக்காபள்ளி….ஒன்னும் சரில்லடாங்குறேன்..

  • தியாகு சார் எங்கள் நாட்டில் தலித்களுக்கு 18 விழுக்காடு மட்டும் தான் இட ஒதுக்கீடு உள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட(வன்னியர், தேவர் மற்றும் கவுண்டர்)வர்களுக்கு 51 விழுக்காடு இடஒதுக்கீடும் உதவிதொகையும் தருகிறார்கள்.மேலும் அது சலுகையோ பிச்சையோ அல்ல அவர்தம் மக்கள் தொகைக்கேற்ற உரிமை.

 11. அம்மணமாக வாழ்வது இழிவு அம்மணத்தோடு வாழ்வதை விட கோமணத்தோடு வாழ்வது உயர்வு…
  அந்த கோமணத்தை உடுத்துவதற்கு சில நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களால் வழங்க பட்ட சலுகைகளை கொச்சை படுத்த வேண்டாம்., ஈன பிறவி, அடிமை, இன்னும் பல இழி சொற்களால் கூப்பிட (அ) வதைத்த எங்களை மனிதர்களாக மதிக்க உதவும் (இன்னும் முடியல) சலுகைகளை இப்படி ஓரு ஆதிக்க திமிருடன் எதிர்க்கும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன். இதை எனது மறுமொழியாக பார்க்க வேண்டாம் உங்களது கருத்துக்கு எனது எதிர்ப்பாக பதிவு செய்ய விரும்பிகிறேன். எங்களுக்கு கிடைத்திருக்கும் சலுகை எங்களை இந்த சமூகத்தில் மனிதனாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே இருக்கின்றன. நீங்கள் மேலும் கேட்கலாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு உங்களுக்கு சலுகை வேண்டும் என்று!! நியாமான கேள்வி தான்., ஆனால் எப்போது எங்களை மனிதனாக பார்கின்றேர்களோ அது வரைக்கும் (என்ன இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் இது தொடர்ந்து கொண்டே போகும்). மேலும் உங்களை போன்றவர்கள் எடுத்து வைக்கும் குற்றச்சாட்டு அது தான் நீங்கள் எல்லோரும் நன்றாய் இருக்கிறேர்கள் இன்னும் எதற்கு உங்களுக்கு சலுகை இட ஒதுக்கீடு., இந்த இட ஒதுக்கீடு தலித் இற்கு மட்டும் இல்லை, பார்பனுக்கு கீழே வரும் (நீங்கள் எங்களை பார்க்கும் / நடத்தும் விதம்) உங்களை போன்ற வர்களும், உங்களுக்கு மேலே உள்ள சாதி ஹிந்து க்களும் (தற்பொழுது 51 சங்ககளை கூட்டி பேரவை நடத்தும் சங்ககளுக்கு உள்ளே உள்ள ஏற்ற தாழ்வுகளும் சேர்த்து தான். சின்ன விதண்ட வாதம் : நீங்களும் (அதாவது மருத்துவர் ஐயா, அவரது மகன் சின்ன மருத்துவர், உங்களது தலைவர்களும்) நன்றாக இருக்கிறார்களே பின்னர் எதற்கு உங்கள்ளுகும் இட ஒதுக்கீடு (இதை போல தான் நீங்களும் சில முன்னேறிய தலித்துகளை மற்றும் பல பின்தங்கி உள்ள தலித்துகளையும் செய்யும் ஓப்பீடு) .
  தயவு செய்து இதை எதிர்ப்பாக பார்க்க வேண்டாம்., உங்களின் கருத்துக்கான எனது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கருதுங்கள். (நீ யார் என்று கேட்க வேண்டாம்., நானும் உங்களை போன்ற ஓரு மனிதன் தான்., இதை மட்டும் தங்களது மனதிற்குள் வைத்து கொள்ளுங்கள் Please…)
  குறைந்த பட்சம் குழந்தைகளிடம் சாதி என்னும் நஞ்சை விதைக்காமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். நீங்கள் சாதி என்னும் நஞ்சை விதைத்தாலும் தயவு செய்து மனுதர்மத்தை மட்டும் போதிக்காமல் இருந்தால் நல்லது. மனிதனை மனிதனாக பார்க்க கற்று கொடுங்கள். “மானிடா இந்த பூமியில் கீழோர் மேலோர் இல்லை” என்பதை உணர்த்துங்கள் இல்லை உணருங்கள்.

  • //ஈன பிறவி, அடிமை, இன்னும் பல இழி சொற்களால் கூப்பிட (அ) வதைத்த எங்களை//

   வல்லவமாறன்: நிஜமாகவே அறிய விரும்புகிறேன்…நீங்கள் எத்தனை தடவை ஆதிக்க ஜாதியினரால், அவமானப் படுத்தப் பட்டிருக்கிறீர்கள்? எத்தனை ப்ராமனர்கள் உங்களைக் கூனிக் குறுக வைத்தார்கள்?

   மொத்தமே 3% இருக்கும், ஆயுதங்களை ஏந்தாத, வன்முறையில் அரவே செல்லாத, ப்ராமனர்களை (எந்த ஒரு படத்திலும், அசிங்கப்படுத்தப்படுபவர்களை, ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டுப் படித்தும் அதிக மதிப்பெண்கள் பெற்றும், “இட ஒதுக்கீடு” காரணமாக, நல்ல கல்லூரி செல்ல இயலாதவர்களை) திரும்பத் திரும்ப குறை கூறுவது எளிது…

   • பள்ளியில் “scholarship” பெறும்போது சில உயர் ஜாதி ஹிந்துக்கள் மற்றும் பிராமண சக வகுப்பு மாணவர்களின் கேலி “உனக்கு உனது தந்தை சிறப்பான பட்டம் வங்கி கொடுத்திருக்கிறார், உனது தந்தை உனக்கு MBBS படிக்க வைக்க முடியாவிட்டாலும் உனது ஜாதியால் Most Backward & far Most Backward Schedule caste” நீ MBBS ஆகிவிட்டாய் (இடம்: தி.நகர்), ச்சொலர்ஷிப் வாங்கும் பொழுது செய்கிற ஏளனம் இருக்கே அது சொல்லி புரிய வைக்க வேண்டிய விஷயம் இல்லை, அந்த ஏளன சொற்கள் தாக்கும் பொழுது புரியும்.
    பறையன் என்ற ஓரு தகுதியால் வேளையில் ஒதுக்க பட்ட & தனிமை படுத்த பட்ட நான் (சவுதி அரேபியாவில் ),
    சென்னையில் பிறர் சொல்லும் ஏளன சொற்களால் இடம் பெயர்ந்து ஜாதிய அடையாளங்களை மறைத்து வாழ வேண்டிய நிலையில் இருக்கும் குடும்பம்.,
    வேலை செயும் இடத்தில சக பொறியாளர்களால் மற்றும் சக ஊழியர்களால் சிறிது ஓதுக்க படாமல் இருக்க ஜாதிய அடைளங்களை மறைத்து இருக்கும் சூழ்நிலை இந்த தலித் தமிழனுக்கு மட்டும் தான் வரும் //பி.கு. என்ன தான் பெரிய position இல் இருந்தாலும்// . (அரபு தேசத்தில்)
    இருக்கும் வாடகை வீட்டில் (உள் வாடகை – சிங்கை யில் இது மிகவும் பிரபலம்) ஓரு ஜாதி ஹிந்து என்னிடம் கூறினான் – அவனது வீட்டில் ஓரு பறையன் இருந்தனம் அவனை அவனும் அவனது நண்பரும் சேர்ந்து அடித்து வேலை வாங்கு வானாம் எதற்கு என்று கேட்டால் கேவலம் ஓரு பறையன் எனது வீட்டில் அடிமை வேலை செய்து கொண்டிருந்தவன் இப்போது பத்து விட்டால் அவனை நான் வேலை வாங்க கூடாதா, ஈன பிறவி எனக்கு எப்பவும் அடிமை வேலை செய்ய வேண்டும் அதற்காக தான் அவனை தனது வீட்டில் உள் வாடகை அமர்த்தி உள்ளனாம் (சிங்கப்பூரில் உள் வாடகையும் மிகவும் அதிகம்)., என்னிடம் அவன் உள்ளே அனுமதித்ததற்கு முன்பு என்னிடம் கேட்ட கேள்வி “நீ என்ன ஜாதி” முன்னர் இருந்த எனது கசப்பான அனுபவம் & இருந்த பொருளாதார சூழ்நிலையில் மறைக்க பட வேண்டிய கட்டாயம் என்னக்கு ஏற்பட்டது, இதில் நான் நேரடியாக இழிவு படுத்த படவில்லை என்றாலும் மறைமுகமாக நோகடிக்க பட்டுள்ளேன் (பறையனாக பிறந்தது தமிழ் நாட்டில் ஓரு பாவமா).
    மேலே குறிபிட்டுள்ள (a molecular example of caste discrimination., you can find more and more in each and every part of tamilnadu) அத்தனையும் யாரால் வந்தது என்று யோசித்தால் புரியும். மனுதர்மம் என்னும் நஞ்சை விளைவித்து அதில் வெற்றியும் அடைந்து, அதை வளர்க பிற சாதி ஹிதுக்களை பயன்படுத்திய 3% _______.
    பொதுவாக GDP அல்லது வறுமை கோடு நிர்ணயிப்பு எல்லாம் விகிதசாரம் (Average) அடிப்படியில் பண்ணுவது., 2000 ஆண்டுகளுக்கு முன்பும் சரி இப்பொழுதும் சரி விகிதசாரம் (Average) அடிப்படியில் பார்த்தால் யார் மிகவும் பின்தங்கி உள்ளார்கள் என்று புரியும்.
    நான் மீண்டும் கேட்கிறேன் – மிருகங்களை விட மிகவும் கீழ் தரமாக நடத்த படும் எங்களை கொஞ்சம் முன்னேற விடாமல் தடுப்பது அல்லது அதற்கு எதிராய் Facebook போன்ற சமூக தளங்களில் ஒதுக்கீடிற்கு எதிராய் கேலி சித்திரம் கார்டூன் போடுவது, அதற்கு உங்களை போன்றவர்கள் மற்றும் சாதி ஹிந்துக்கள் comment போடுவது, அதை like செய்வது எப்பொழுது விடுவீர்கள். நாங்களும் மனுஷங்க தான் என்று நினைக்க மட்ட்டேன்க்றேங்கள ஏன்.,
    சமிபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் ஓரு விவாதம் நடை பெற்று கொண்டிருந்த பொழுது ஓரு மாணவன் (கடலூரில் இருந்து வந்தவர்) நீங்க முன்னாடி வாங்க அதுக்காக எங்களை ஏன் அமுக்கிட்டு முன்னாடி வர்றேங்க – இத்தனை நாளா எங்களை அம்முகி வைக்கும் பொழுது எவ்வளவு வலி இருந்திருக்கும் என்று நீங்களும் யோசிச்சு பார்க்கணும்., அதை விட கொடுரம் SC/ST just pass ஆனா போதும் சொன்ன மாணவர் 55 மார்க் எடுத்த போதும் வித்யாசம் 20 மார்க். இது வெறும் “qualification” மட்டும் தான், அதற்கு மேலாக “Reservation” அனைவருக்கும் உண்டு (Except FC).
    Please don’t discriminate us., we are also humans., the discrimination examples you can see in VINAVU website comments section..

    • I am sorry for people behaving like that with you.

     People generally get these feelings in 12th Std or counseling and even before that topic of Quota dominates discussions and feelings,but IMO if the student is poor or comes from a struggling lower middle class or rural society,nobody talks like this about the person.

     But if the same person is upper middle class,kid of educated people working in white collar jobs,these talks do occur but never in front of the person.

     That Singapore person seems to be a big idiot,asking people caste openly and talking like that.

     I studied in a Central Government college and nobody spoke about the SC/STs there in anyway,the joke was usually upon children of businessmen taking scholarship based on economic reasons which often was bogus and fraud.

     But if you are upper middle class and still getting reservation,you dont have a case.

    • // மனுதர்மம் என்னும் நஞ்சை விளைவித்து அதில் வெற்றியும் அடைந்து, அதை வளர்க பிற சாதி ஹிதுக்களை பயன்படுத்திய 3% _______. //

     Vallavamaran,

     மனு சாத்திரம் என்ற ஒன்று திடீரென மனுவால் உருவாக்கப்பட்டதல்ல.. அன்றைய வட இந்திய நடைமுறைகளை வைத்து தொகுக்கப்பட்டது.. சட்டவடிவாக தொகுக்க வேண்டிய அவசியமென்ன.. :
     ”பிற சாதி இந்துக்களை பயன்படுத்திய 3% ________ ” என்பதைவிட படிநிலை ஒடுக்குமுறைக்கு சமூக, மதரீதியான ‘அந்தஸ்து’ பெற ஆகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர்களை உயர்நிலையில் வைத்து அவர்களை விலைக்கு வாங்கிய ஆதிக்க, அதிகார வர்க்கங்களால் வெற்றிகரமான சட்டவடிவாக பேணப்பட்டது என்பதை ஆழ்ந்து யோசித்தால் புரியும்.. பார்ப்பனர்கள் மட்டுமே தங்களை உயர்த்தும் மனு சாத்திரத்தை பேணி, செயல்படுத்தினர் என்பது – நடைமுறை சாத்தியமற்ற கருதுகோள் – முக்கியமாக பின்புலத்தில் உள்ள ஆதிக்க, அதிகார வர்க்க நலனை காண மறுப்பதாகும்..

     மனு சாத்திரம் கூட ஆதிக்க நலன் சார்ந்து, சாதகமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டும், பாதகமாக இருக்கும் வேளைகளில் மீறப்பட்டும் இருக்கிறது.. மனு சாத்திரத்தின் படி,

     ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது என்பதைவிட, அங்கீகாரம் மறுக்கப்பட்டது என்பதை வள்ளுவரும், பறையர்களும் கல்வி கற்க முடிந்ததையும்;
     பூசை/கல்வி/வேள்விகளில் ஈடுபடவேண்டிய பார்ப்பனர்களும், மனு சாத்திரத்தை மீறி, சத்ரியர்களின் ஆதரவோடு, சத்ரியர்களுக்கு மட்டுமான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததற்கான ஆதாரங்களையும் நோக்கும் போது, மனு சாத்திரம் வலிமை உள்ளவர்களுக்கு வளைந்து கொடுத்திருப்பதையே காட்டுகிறது..

     எந்த இனக்குழு வலிமை பெறுகிறதோ மனுசாத்திரம் அவர்களுக்கு கருவியாகியிருக்கிறது.. எந்த இனக்குழு வலிமை இழந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறதோ, அவர்களுக்கெதிராக மனுசாத்திரம் பயன்படுத்தப்பட்டு, அச்சமுதாயம் மேலும் ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கிறது.. வரலாற்றில், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதே உண்மை..

     • வரலாற்றில், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதே உண்மை..
      Well Said….Ambi

  • தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும். இல்லைஎன்றால் பொருளாதார ரீதியாக முன்னேறிய தலித் மக்களே அனைத்தையும் அனுபவித்து வருகிறார்கள். தலித் மக்களுக்கு அனைவருக்கும் கிடைக்க பொருளாதார ரீதியாக உள் இடஒதுக்கீடு வேண்டும்.

 12. ஒரு குழந்தை பள்ளிக்கூடத்தில் நுழையும் போது என்ன சாதி என்று கேட்பது.., நீ யார்…? அடிப்பவனா & அல்லது அடி வாங்குபவனா? உரிமை மறுக்கப்பட்டவனா & அல்லது நசுக்குபவனா? ஏற்றத்தாழ்வில் மேலிருப்பவனா & அல்லது அடிமட்டத்தில் விழுந்து கிடப்பவனா? இந்த விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவே சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள் பள்ளிகளில்! நசுக்குபவனான, மேல் சாதி என்று அப்பாவியாய் நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு ஒரு அளவு கோலும், நான் தாழ்ந்தவன், கீழ்சாதி என்று தப்பாக அறியாமையில் எண்ணும், அந்த உழைத்து உண்ணும் வகுப்பைச் சார்ந்த குழந்தைக்கு ஒரு அளவு கோலும் வைத்து அவன் கல்விக்கு உதவுவதற்காகவே வகுப்புச் சான்றிதழ் கேட்கிறார்கள் ஆரம்பக் கல்வி நிலையங்களில்! ஏனென்றால் சாதியைப் பார்த்துதான் தமிழனுக்கு கல்வியே கொடுக்கக் கூடாது, அவனைப் பார்த்தாலே தீட்டு, எதிரே வந்துவிட்டால் தீட்டு, நாய்கூட தாராளமாக மேயும் தெருவில் தாழ்ந்த வகுப்பு என்று கருதும் தமிழன் வந்துவிட்டால் தீட்டு பட்டுவிடும் என்று சொறிபிடித்த மிருகமாய் மேல்சாதிக்காரன் வாழ்வதாலேயே!
  என்னைக் கேட்டால்… இந்து மதம் தமிழ்நாட்டில், இந்தியாவில் இருக்கும் வரை தாழ்த்தப்பட்டோருக்கு இந்த சலுகைகள் கண்டிப்பாக வழங்கியே ஆக வேண்டும்! இந்து மதம் இருக்கும் வரை சாதி வெறியும் அவர்களின் அடக்கு முறையும் ஒவ்வொரு ஆதிக்கச் சாதிக்காரர்களிடமும் இருந்து கொண்டே இருக்கும்! சாதி அமைப்பு ஒன்றே இந்து மதத்தின் அடித்தளம்! அந்த சாதி அடித்தளத்தை இந்து மதம் எப்போதுமே இழக்க விரும்பாது! சாதி அமைப்பை அது இழக்கும் பட்சத்தில் இந்து மதமே காணாமல் போய்விடும். இதனால் இந்து மதம் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்களின் இரத்தை ஊற்றி சாதியை தக்க வைத்துக் கொள்ளும்!
  தாழ்த்தப்பட்டவர் அமைப்பு கட்டுவது, இயக்கம் வைப்பதில் ஒரு அறம் உண்டு! தன்னை அடிப்பவனிடமிருந்து, தன்னை ஏறி மிதிப்பவனிடமிருந்து தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அமைப்பு கட்டுகிறார்கள்! ஆனால், அடிமைப் படுத்துபவனும், காலின் கீழ் போட்டு நசுக்குபவனும் ஏன் அமைப்பாகிறார்கள்? இவர்கள் அமைப்பு கட்டுவதில் அறம் எதும் உண்டா? இவர்கள் அமைப்பு ஏற்படுத்துவது, வினவு தோழர்களின் தலைப்பைப் போன்று அடிக்க உரிமை கோரும் அக்கிரமமல்லவா? காட்டுமிராண்டித்தனம் அல்லவா? இவர்களிடம் இன்னமும் மனித மாண்பு இருக்கும் என்று நம்ப முடியுமா? இவர்கள் வாழுமிடம் மக்களின் நடுவிலா? அல்லது அடர்ந்த காடுகளிலா? காட்டில் விலங்குகளுக்கு நடுவில்தான் வாழுகிறார்களா இராமதாசு போன்றவர்கள்?
  மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்ற ஒரு சிறிய எண்ணம் கூட இந்த பிறவிகளுக்கு எழாமல் போனதன் காரணம் என்ன? இவர்களின் செயல் நம் தமிழனை வளர்த்தும் செயலா? அல்லது தமிழனின் ஒற்றுமையை குழி தோண்டிப் புதைக்கும் செயலா? இவர்களின் பொது மேடைகளை ஓட்டுக்கட்சி அரசு அனுமதிப்பதில் ஆச்சரியம் இல்லை! ஆனால் இணையத்தைப் பயன்படுத்தும் மேற்கண்ட நண்பர்களும் இதற்கு முட்டு கொடுப்பதை எந்த பட்டியலில் சேர்ப்பது? நம் மக்களை நினைத்தால் அவமானமாகவே உள்ளது! காசிமேடுமன்னாரு.

  • வகுப்பில் அனைவர் முன்னாடியும் ஜாதி பெயரை பயன் படுத்தி அழைக்கும் (கேலி செய்யும்) சக மாணவர்கள்… இதை விட கொடுமை எந்த மனித பிறவிக்கும் (அதுவும் பள்ளியில்) வேண்டாம்

 13. சாதி ஓஇழிய பாடு பட்ட ஈ.வெ.ரா பிரந்த மன்னில்; சாதீ விதைக்கும் உங்கல் கூட்டத்துக்கு முடிவு நெருங்கி விட்டது { உன்மையான கதலால்}

 14. குறவர் இனத்தில் அவர்கள் இனத்துக்குல்லவே தான் திருமணம் செய்வாங்களாம் என்ன ஒரு ஜாதி வெறி அவங்களுக்கு ம்ம்ம்ம்ம்ம் …
  எங்கப்பா அந்த ஜாதி ஒழிப்பு போராளிகள் ,கலப்பு திருமணம் செய்து வைக்கும் கோஸ்ட்டிகள் அவங்க இனத்து பொண்ணுங்கள தூக்கிட்டு போய் உங்க இனத்து பசங்கள காதலிச்சு திருமணம் செய்ய சொல்லுங்க…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க