Friday, September 20, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!

ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!

-

நேர்காணலின் ஆடியோ கோப்பை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

 

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு ‘எதிராக’ அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர்.

தோழர் மருதையன்இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே ஆடியோவாக வெளியிடுகின்றோம். இது யூ டியூபில் பொருத்தமான படங்களுடன் வீடியோ ஃபைலாக உங்கள் பார்வைக்கு வருகின்றது.

ஒரு மணி நேரம் – இருபத்தி மூன்று நிமிடம் ஓடக்கூடிய இந்த நேர்காணலில் அமெரிக்காவின் நோக்கம், மனித உரிமையை ஆயுதமாக பயன்படுத்தும் ஏகாதிபத்தியங்கள், ஈழத்தை அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும் இந்தியா நண்பனா இல்லை எதிரியா, ஈழ விடுதலை குறித்த காரியவாதப் பார்வை, புலிகளின் அரசியல் தவறுகள், இது தொடர்பான முப்பதாண்டு வரலாறு, திமுக, அதிமுகவின் சவடால் அரசியல், தற்போது போராடும் தமிழக மாணவர்கள் என்று ஈழம் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் தோழர் மருதையன் விளக்குகிறார்.

ஈழம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் சரி, தவறு குறித்த வெளிப்படையான கருத்துக்கள், நடைமுறையில் செய்ய வேண்டியவை, புரிந்து கொள்ள வேண்டியவை என்று ம.க.இ.க.வின் அணுகுமுறை மற்றும் நடைமுறை, செல்ல வேண்டிய இலக்கை துல்லியமாக காட்டுகின்றதா என்பதை வாசகர்கள் முடிவு செய்யலாம்.

தற்போதைய சூழலின் அவசரமான, பரபரப்பான தருணத்தில் சவடால்கள், வீராவேசமான முழக்கங்கள், இரத்த உறவு சென்டிமெண்டுகள் இன்னபிற ஜோடனைகள் ஏதுமின்றி வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

இந்த நேர்காணலை உங்கள் நட்பு வட்டாரத்தில் விரிந்த அளவில் கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி

நேர்காணலின் ஆடியோ கோப்பை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

வினவு

  1. இதைப் போன்றதொரு தொகுப்பினைத்தான் தேடினேன். நண்பர்கள் சில புத்தகங்களை பரிந்துரைத்தார்கள். இந்த வீடியோ எத்தகைய பார்வையை அளிக்கிறது எனப் பார்க்க வேண்டும். தரவிறக்கம் செய்துவிட்டேன். இனிதான் பார்க்க வேண்டும்.

  2. பல விஷயங்களை புரிய வைத்திருக்கிறார் நேர்காணலில் பதிலளித்த மருதையன் அவர்கள். அவர்களுக்கு எனது நன்றிகள் பல.

  3. சாதாரண தமிழக மக்கள் மிகப்பலருக்கு ராஜபக்ச யார் என்று கூட தெரியாது. தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. இப்போது போராட்டத்தில் குதித்திருக்கும் கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். (ஏதோ ஆர்வக்கோளாறில் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள்) இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்கி பிரச்சாரம் செய்யவேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மற்ற மாணவர்களுக்கும் தெரியப்படுத்தலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடும் மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. சட்டக்கல்லூரி மாணவர்களை பற்றி பொது மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. எப்போதும் கல்லூரிக்குள் ரகளை செய்பவர்கள், சாதி மோதலில் ஈடுபடுபவர்கள் என்னும் எண்ணம் உள்ளது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது. இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. ஆனால் அது இறையாண்மை கொண்ட தனி நாடு. அதனால் தான் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டை உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே உலகம் கவனிக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனிப்பார்களா என தெரியவில்லை.

  4. இலங்கை விவகாரத்தினையொட்டி அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் மீது கியூபா, வெனிசூலா ஆகிய நாடுகள் எடுக்கும் நிலைப்பாட்டின் நியாயம் புரிந்துகொள்ளமுடிகிறது. சரி, ஏன் கியூபாவும், வெனிசுலாவுமே ஒரு சரியான, நியாயமான தீர்மானத்தை கொண்டுவரக்கூடாதா?

  5. நேற்றுக்கூட புதிய தலைமுறை நிகழ்ச்சியில் இந்தியாவும் இனப்படுகொலையின் இரத்தம் படிந்த கைகள் உடையது தான் என பேசிய சிலரும் இறுதியில் இந்தியாவே ஒரு சரியான தீர்மானத்தை கொண்டு வந்து ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என பேசினர். இவர்கள் பேச்சை கேட்ட பின்னரும் கூட மற்ற சிலர் ஏன் இந்தியா தலையிட மாட்டேன் என்கிறது மொன்னையாக ஆதங்கப்பட்டனர். (இந்தியா தலையிட்டதன் விளைவு தானடா இந்த அக்கப்போரே.) ஒருவர் மட்டும் இங்குள்ள ரிலையன்ஸ் கம்பெனிக்கு இலங்கையில் பெரிய சிமெண்ட் கம்பெனி இருக்கு.. அதுபோல டாடா போன்ற முதலாளிகளின் நலனுக்காக மட்டும் தான் இந்தியா செயல்படும் என்றார்.

    ராஜபக்சேவுக்கு பின்னால் நின்று போரை நட்த்திய முக்கிய குற்றவாளியான இந்திய அரசு மூலமே நியாயம் கேட்க சொல்வது எப்படி சரியாகும் என மருதையன் தோழர் கூறிய எளிய உண்மையினை கேள்வியினை புதிய தலைமுறை மட்டுமல்ல வெளி அரங்கிலும் சொல்வார் அதிகம் இல்லாத்து தான் ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்து உள்ள மிகப்பெரிய அபாயம் என நினைக்கிறேன்.

    புதிய தலைமுறை முதலாளிக்கு கூட இலங்கையில் வேறு பெயரில் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கபட்டு உள்ளதை கூட ஏதோ ஒரு நிறுவனம் என அதே நிகழ்ச்சியில் ஒருவர் கூறிவிட்டு இந்தியாவே நியாயம் கேட்க வேண்டும் என கோருவது என்ன கேலிக்கூத்து.

    இந்தியா கெட்ட அரசு தான் ஆனால அதை விட்டால் வேறு ஆள் இல்லை என திருமாவிலிருந்து அனைத்து பிழைப்புவாதிகளும் பேசுவதை இந்த தக்க நேரத்தில் அம்பலப்படுத்தி தோழர் மருதையன் பேசியதில் கேட்கும் நேர்மையானவர்காளிடம் நிச்சியம் சீமான், திருமா, கலைஞர், ஜெயா போன்றவர்கள் ஏன் இன்னும் பாராளுமன்ற பன்றி தொழுவத்திலேயே குதிரை ஓட்டுக்கின்றனர் என்பதை நிச்சியம் உணர்வார்கள்.

    மேலும் இந்த உரையாடலை எளிமையாக காட்சி விளக்க படங்களாக மக்கள் கூடும் இடங்களில் எடுத்து சென்றால் மட்டுமே சரியான அரசியலை இன்று போராடும் மாணவர்களுக்கு கூட உணர்த்த முடியும். அப்படி உணரும் போது போராடுபவர்களின் எண்ணிக்கை குறையலாம். ஆனால் எண்ணிக்கை அல்ல விடுதலை தீர்மானப்பது. சரியான அரசியல் மட்டும் தான் என மருதையன் தோழர் கூறுவது போல நிச்சியம் ஒரு நாள் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

  6. மருதையனின் பேட்டி பல்வேறு உண்மைகளை இப்போதுள்ள தலைமுறைக்கு உணர்த்தியுள்ளது .ஆனால் இதையெல்லாம் பரிசீலிக்கும் மனநிலையில் தமிழர்கள் இன்றும் இல்லை அன்றும் இல்லை . ஆனால் அவர் முன் வைக்கும் சிங்கள தமிழ் உழைக்கும் மக்கள் ஒன்றிணைவு என்பது யதார்த்தத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ளது .அவர் மிகவும் சரியாக பேசுகிறார் என்பதை ஒப்புக் கொண்டாலும் கூட சாத்தியத்திலிருந்து விலகி இருக்கிறார் என்றே என் மனம் ஏற்க மறுக்கிறது ..இதையெல்லாம் விட ஒரு முக்கியமாக ஒரு விஷயம் என்னவெனில் வைகோ போன்ற போலி களின் பார்வையிலேயே தமிழகம் மற்றும் மாணவர்கள் புலிகளின் தலைமையை தெய்வம் போல நம்புகின்ற போக்கு.கலைஞர் அங்கே பெரும் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது அதை மூடி மறைத்தார் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றெல்லாம் சொன்னது பெரும் துரோகம். அவரை இந்தளவு நாம் வெறுப்பதன் காரணம் அந்தளவுக்கு அவர் ஏதாவது செய்வார் என்றே அனைவரும் நம்பினோம் . குறைந்த பட்சம் தான் சொல்வதை மத்திய அரசு கேட்கவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கலாம் மத்திய ஆட்சியிலிருந்து வெளியேறியிருக்கலாம் .போகட்டும் அவர் சாயம் வெளுத்தது .ஆனால் வைகோ .சீமான் ,நெடுமாறன் போன்ற பிழப்பு வாதிகள் எப்படி இன்னும் தோலுரிக்கப்படாமல் வலம் வருகின்றனர் ? இவர்களின் எழுச்சி அந்த இறுதிகட்ட போரின் பொது எப்படி இருந்தது ? ஈழ பிரச்சினையை மூலதனமாக வைத்து கர்ம சிரத்தையாக ஓட்டுப் பொறுக்கினார்கள் . ஜெயலலிதாவை வெற்றி பெறவைத்து அவர் ஏதோ பெரியமனது வைத்து வாங்கி தருவதாக சொன்ன தமிழீழத்தை வாங்கி அப்படியே பிரபாகரனுக்கு பார்சல் செய்துவிடுவோம் என்று தாம் ஒட்டுப் பொறுக்கும் செயலை நியாயப்படித்தினார்கள். இதையே புலிகளுக்கும் கொஞ்சம் பொறுங்கள் நாங்கள் இந்த ஆட்டத்தை முடித்து விட்டு வந்து பிஜேபி ஆட்சி வந்துவிடும் பிறகு உங்களையெல்லாம் காப்போம் என போலியான வாக்குறுதி கொடுத்தார்கள் .இங்கே அரசியல் ஆட்டத்தை முடித்த களைப்பில் இவர்களெல்லாம் இளைப்பாறினார்கள் . அங்கே அனைத்தும் முடிந்தது..இப்போது மாட்டிய துரோகி கருணாநிதியை மனசாட்சியே இல்லாமல் மாட்டாத அனைத்து துரோகிகளும் தர்ம அடி போடுகிறார்கள் .ஏன் போர் உட்சத்தை எட்டியதும் ,அவர்கள் ஒன்றிரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பில் மடக்கப்பட்டு கிடப்பதும் புலிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த வைகோ நெடுமாறனுக்கு கூட தெரியாதா? தெரியும் என்பதே உண்மை .கருணாநிதி துரோகி என்பது அனைவருக்கும் தெரியும் .இவர்களெல்லாம் யார் என்பதை நடேசனும் பிரபாகரனும் மற்ற தலைவர்களும் ஆவியாக வரும் சாத்தியம் இருந்தால் நன்றாக புரியும் . அவர்கள் ஆன்மா என ஒன்று நிலவினால் அது அவர்களை மன்னிக்காது ஏனென்றால் பிரபாகரன் நம்பியது கருணாநிதியை அல்ல இவர்களைத் தான் .இன்றைக்கு இந்த வைகோ உத்தமன் வேடம்போடுவதை சகிக்க முடியவில்லை .இங்கே குறைந்தபட்சம் வைகோ சரியான முறையில் அம்பலப்படுத்தப் பட வேண்டும் .வினவு இதனை செய்ய வேண்டும்

    • //ஆனால் அவர் முன் வைக்கும் சிங்கள தமிழ் உழைக்கும் மக்கள் ஒன்றிணைவு என்பது யதார்த்தத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ளது.//

      ம.க.இ.க வழக்கம் போல் எல்லா இடத்திலும் சொல்லுவது போல் இலங்கையிலும் ‘உழைக்கும்’ மக்கள் ஒன்றிணைய வேண்டும்னு சொல்றாங்க. மருதையன் அவர்கள் சொல்வது போல் அங்குள்ள சிங்கள உழைக்கும் மக்களுக்கும் இனவெறியன் ராஜபக்சேவுக்கும் இடையே தொழில் சங்கம் என்ற முறையில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அதுவே சிங்கள இனமா தமிழினமா என்று வரும் போது நிச்சயமாக அவர்களுக்குள் வேறுபாடு இருக்காது என்று தான் தோன்றுகிறது. எப்படி இங்குள்ள உழைக்கும் மக்கள் முல்லை பெரியாறு பிரச்சனையில் ஒன்று சேர்ந்தாலும் அவர்களுக்குள் சாதி என்று வரும் போது வேறுபடுகிறார்களோ அது போல தான்.

      அது மட்டுமின்றி அங்குள்ள தமிழ் உழைக்கும் மக்கள் இன வெறியர்களை எதிர்த்து போராடுவார்களா என்றால் அது கேள்விக்குறி தான். சிங்கள குடியேற்றங்கள் இன்னும் அங்க நடந்துகிட்டு தான இருக்கு.

      ஆனால் இங்குள்ள விமர்சகர்கள் இந்தியாவும் அமெரிக்காவும் கொலையாளிகள் தான், ஆனால் அவங்கதான் இனப்படுகொலை செஞ்சவங்கள தண்டிக்க முடியும் சொல்றது பெரிய துரோகம்.

      • /எப்படி இங்குள்ள உழைக்கும் மக்கள் முல்லை பெரியாறு பிரச்சனையில் ஒன்று சேர்ந்தாலும் அவர்களுக்குள் சாதி என்று வரும் போது வேறுபடுகிறார்களோ/

        நீங்க அப்படியே தலைகீழாக மாற்றி பேசுரீங்க…

        சாதிரீதியாக பிரிந்து கிடக்கும் மக்கள் தான் முல்லைபெரியாறு அணை (கூடங்குளம்) பிரச்சனையில் சாதியை விட்டு விட்டு வர்க்கமாக திரண்டு போராடினார்கள்.

        ஏனென்றால் மக்கள் வர்க்க ரீதியாக பிரிந்து இருப்பது தான் உண்மை அதை மறைக்கத்தான இனம், மொழி, சாதி, மதம் போன்றவற்றை திட்டமிட்டே இந்த அதிகார வர்க்கம் பயன்படுத்துகிறது.

  7. உண்மை உண்மை உண்மை !!!

    இப்போது மாட்டிய துரோகி கருணாநிதியை மனசாட்சியே இல்லாமல் மாட்டாத அனைத்து துரோகிகளும் தர்ம அடி போடுகிறார்கள் .ஏன் போர் உட்சத்தை எட்டியதும் ,அவர்கள் ஒன்றிரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பில் மடக்கப்பட்டு கிடப்பதும் புலிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த வைகோ நெடுமாறனுக்கு கூட தெரியாதா? தெரியும் என்பதே உண்மை.

    கருணாநிதி துரோகி என்பது அனைவருக்கும் தெரியும் .இவர்களெல்லாம் யார் என்பதை நடேசனும் பிரபாகரனும் மற்ற தலைவர்களும் ஆவியாக வரும் சாத்தியம் இருந்தால் நன்றாக புரியும் . அவர்கள் ஆன்மா என ஒன்று நிலவினால் அது அவர்களை மன்னிக்காது ஏனென்றால் பிரபாகரன் நம்பியது கருணாநிதியை அல்ல இவர்களைத் தான்.

    இன்றைக்கு இந்த வைகோ உத்தமன் வேடம்போடுவதை சகிக்க முடியவில்லை .இங்கே குறைந்தபட்சம் வைகோ சரியான முறையில் அம்பலப்படுத்தப் பட வேண்டும்.

  8. தொய்வில்லாத,முரண்பாடுகளற்ற,தெளிந்த கருத்துக்கள்.அமெரிக்க,இந்திய,ஐ. நா. தீர்மானங்களைப் பற்றிப் பேசும் அனைத்துத் “ தலைவர்களும்” ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.இந்திய அரசிடம் அவர்கள் வைக்கின்ற கோரிக்கையைப் போன்றதல்ல இது. நீங்கள் ஈழ துரோகிகள் அல்ல என்பதை இப்போதாவது நீருபியுங்கள்.தமிழினப் படுகொலையாளன் ராஜபட்சே,கூட்டாளிகள் இந்தியாவுக்கு அழைக்க்கப்படுவதும்,இன்றுவரை தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதும் அதை அயோக்கிய இந்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதும் யதார்த்தமாக நடப்பது அல்ல.திட்டமிட்டு நடத்தப்படுவதாகும்.தோழர்.மருதையனின் இந்த நேர்காணலை உடனடியாக ஒலிக்குறுந்தகடாக வெளியிடவேண்டும்.அவசர அவசியமானது.இந்த நேர்காணலே காலதாமதமானது தான்.

  9. நேற்று முளைத்த காளான்களான மே-17, நாம் தமிழர் சீமான், சேவ் தமிழ்ஸ் மற்றும் பாரம்பரியமாய் ஈழத்தை வைத்தி பிழைப்பு நடத்தி பொறுக்கித் தின்று கொழுத்துத் திரியும் பழ.நெடு, வை.கோ உள்ளிட்டவர்கள் தான் பிரபாகரனுக்குத் தவறான வழிகாட்டுதல்களை வழங்கி நந்திக் கடலோரம் தள்ளிச் சென்றவர்கள்.

    புலிகளுக்கும் அவ்வாறான நம்பிக்கை இருந்ததென்றாலும், இவர்களே அத்தனை ஆயிரம் மக்கள் ஒரே நாளில் சிங்கள ராணுவத்தின் கொலைக்கரங்களில் வீழ்ந்து போக நேரடிக் காரணம். அமெரிக்க கப்பற் படையின் பசிபிக் பிரிவு கப்பம் அனுப்பும், பி.ஜே.பி வென்றால் சிங்களர்களை கட்டுப்படுத்துவார்கள், இலை மலரும் ஈழம் மலரும் என்றெல்லம் தவறான தகவல்களை அளித்து புலிகளையும் மக்களையும் கொலைக்களத்துக்கு தள்ளிச் சென்றவர்கள்.

    கருணாநிதியையாவது ஒரு கணக்கில் வைக்கலாம். அவரை புலிகளும் ஆரம்பத்திலிருந்தே நம்பவில்லை, இவரும் புலிகளின் மேல் அபிமானம் கொண்டவர் இல்லை. ஆனால், புலிகள் யாரை நம்பினார்களோ அவர்களே கழுத்தறுத்தார்கள். வீழ்ந்த ஒவ்வொரு பிணமும் இவர்களைத் துரத்தித் துரத்திக் நியாயம் கேட்பதற்கு முகம் கொடுக்க பயந்து தான் தேவைக்கும் அதிகமாக கருணாநிதியை திட்டித் தீர்க்கிறார்கள். இது, “அதோ திருடன், இதோ திருடன்” உத்தி. நீங்க தாண்டா திருட்டுப் பயல்கள். நீங்க தாண்டா கொலைபாதகர்கள். பதில் சொல்லுங்கள்.

    புலிகள் அழித்தொழிக்கப்பட காரண கர்த்தாக்களான நீங்கள் இப்போது மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். செத்துப் போன ஒவ்வொரு ஈழ உயிருக்கும் பதில் சொல்ல வேண்டும்.

    இதே கிளிநொச்சி வீழ்ந்த போது மேடை போட்டு “கிளிநொச்சியையா பிடிப்பீர்கள் ஒரு கிளிக்குஞ்சைக் கூட பிடிக்க முடியாது உங்களால்” என்று சவடால் பேசிய சீமானின் வாய் எங்கே?

    இந்த அயோக்கியர்களை தமிழர்கள் மறக்கக் கூடாது. இவர்களின் துரோகத்தனங்களை மன்னிக்கக் கூடாது. இவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

    இன்றைக்கும் இவர்களை நம்பி இவர்கள் பின்னால் ஓடும் அப்பாவி தமிழ் இளைஞர்களே, உங்களையும் அறியாமலோ அறிந்தோ நீங்களும் ஒரு வரலாற்று துரோகத்தனத்துக்கு துணை போகிறீர்கள் என்பதை உணருங்கள். இன்று மாணவர்கள் தன்னெழுச்சியாய்ப் போராடும் போது வாய் மூடி மௌனிகளாய் நிற்கும் உங்கள் தலைமையைக் கேள்வி கேளுங்கள். அன்றைக்குச் சொன்னதெல்லாம் என்னவாயிற்று என்று கேளுங்கள். ஏன் புலிகளை நம்பவைத்துக் கழுத்தறுத்தீர்கள் என்று கேளுங்கள். பிரபாகரன் மீண்டும் வருவார் என்று எவன் சொன்னாலும் சொன்ன இடத்திலேயே சொக்காயைப் பிடித்து உலுக்குங்கள்.

    ஈழத் தமிழர்களுக்கு விடுதலை முதலில் தமிழ்நாட்டு இனவாத முட்டாள்களிடம் இருந்து கிடைக்கட்டும்.

    • tholar vanakkam ma.ka.e.ka kadandha mullivakal padukolaikku munpu LTT amappai atharikka villai melum avarkal yarudanum sernthum poradavellai thavarai sutti kadaum illai ipadi irukka LTT Azhiukku piraku oppari vaipathil nayam illaiu

      • எதற்காக புலிகளை ஆதரிக்க வேண்டும் ? தமிழ்தேசிய கோமாளிகளைப் போல ம.க.இ.க வும் எதற்காக புலிவேசம் கட்டிக்கொண்டு ஆட வேண்டும் ?

        ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களுக்கும் புலிகள் தான் அத்தாரிட்டியா ? மே 17, 18 ம் நாட்களில் முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது ? வீரச்சாவா, சரணடைவா ?

        கடைசிவரை இந்தியாவையும் அமெரிக்காவையும் அண்டி நின்றவர்களை எதற்காக ஆதரிக்க வேண்டும், ஈழத்தமிழருக்கு எதிரான தற்கொலைப்பாதையை ஈழத்தமிழர் மீதே திணித்தவர்களை ஏன் ஆதரிக்க வேண்டும், கம்யூனிஸ்டுகளை கொத்து கொத்தாக கொன்று போட்ட பாசிஸ்டுகளை ஏன் ஆதரிக்க வேண்டும், கடைசியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் முடித்துவைத்தவர்களை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

        புலிகளின் தற்கொலைப் பாதையை ம.க.இ.க இன்று 2013ல் ஒன்றும் முதல் முறையாக சுட்டிக்காட்டவில்லை என்பதுகளில் இருந்தே புலிகளை அரசியல் ரீதியில் விமர்சித்து வருவது ம.க.இ.க மட்டும் தான். மாறாக அவர்களை இங்கிருக்கிற தமிழ்தேசிய கைப்புள்ளைகள் இதோ ஈழம் அதோ ஈழம் என்று உசுப்பேத்திவிட்டார்கள். இப்போதும் இதோ வருகிறார் பிரபாகரன் அதோ வருகிறார் பிரபாகரன் என்று ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு உண்மையில் ஈழத்தமிழரின் நலனில் அக்கறை இருக்கிறது என்றால் முதலில் இந்த தமிழ் தேசிய மூடர்களை கூட்டி மூலையில் தள்ளுங்கள்.

    • // பி.ஜே.பி வென்றால் சிங்களர்களை கட்டுப்படுத்துவார்கள், இலை மலரும் ஈழம் மலரும் என்றெல்லம் தவறான தகவல்களை அளித்து புலிகளையும் மக்களையும் கொலைக்களத்துக்கு தள்ளிச் சென்றவர்கள். //

      நண்பர் மன்னாரு,

      உங்கள் கோபம் புரிகிறது.. புலிகளை ஒழிக்க எத்தனை காவு விழுந்தாலும் சரி என்று சிங்கள இனவெறி அரசுக்கு பின் நின்ற காங்கிரசு 2009 தேர்தலில் தோற்றிருந்தால் இத்தனை பெரிய சோகம் நிகழ்ந்திருக்காது.. மாறாக, காங்கிரசு மீண்டும் வரும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்திருந்தாலும் கூட நடக்கவிருக்கும் பேரவலத்தை அவலத்தை தடுக்க இயலாத கையறு நிலை தமிழுணர்வாளர்களுக்கு.. இன அழிப்பை திட்டமிட்டு நடத்தியவர்களையும், குற்றுயிராய் கிடப்பவனுக்கு உயிரைப் பிடித்துக் கொள் என்று நம்பிக்கை ஊட்டியவர்களையும் ஒரே வகையாகப் பார்த்தால் குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள்..

      • சரியாக சொன்னிர்கல்
        அம்பி, இப்பொது நாம் ஒருவர் மிது ஒருவர் பழி பொட்டு கொன்டும் சன்டை இட்டு கொன்னடும் இருந்தல் அது மெலும் எதிரிகாலுகு இல்ல்கரமாக அமைஉம் மெலும் அவர்கல் தபிபதுகு வழி வகுகும்

      • \\ காங்கிரசு 2009 தேர்தலில் தோற்றிருந்தால் இத்தனை பெரிய சோகம் நிகழ்ந்திருக்காது//

        இதன் பொருள் பா.ச.க.வென்றிருந்தால் போர் நிறுத்தம் வந்திருக்கும் என்பதுதானே. அப்படியானால் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என செயலலிதாவுக்கு பல்லக்கு தூக்கிய தமிழ் தேசிய கோமாளிகளுக்கும் உங்களுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை.மூன்றாம் அணி ஆட்சிக்கு வந்திருந்தால் என்று பொருள் சொன்னாலும் அதே நிலைதான்.காங்கிரசு, பா.ச.க.ஆதரவின்றி மூன்றாம் அணி ஒன்று ஆட்சியில் அமர்ந்ததில்லை.இந்த இரண்டு கயவாளி கும்பலை மீறி ஈழத் தமிழருக்கு ஆதரவாக அந்த அரசு செயல்பட்டிருக்க முடியாது. மேலும் எந்த அரசாக இருந்தாலும் ஆளும் வர்க்கங்களின் நலனுக்காகவே ஈழப் பிரச்னையை கையாண்டு வந்துள்ளன.அந்த வகையில் ஈழத்தில் இந்தியாவின் தலையீடு எந்த மாறுதலுமற்ற தொடர்ச்சியானது.சில தனிநபர்களும் கட்சிகளின் தலைவர்களுடைய விருப்பு வெறுப்புகளும் வெளியுறவு கொள்கையை தீர்மானித்து விட முடியும் என நம்புவது பேதமை.

        \\ காங்கிரசு மீண்டும் வரும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்திருந்தாலும் கூட நடக்கவிருக்கும் பேரவலத்தை அவலத்தை தடுக்க இயலாத கையறு நிலை தமிழுணர்வாளர்களுக்கு..//

        என்ன அம்பி,திடீரென தமிழுணர்வாளர்கள மீது இவ்வளவு பாசம்.சரி இருக்கட்டும்.மேடை போட்டு வெட்டி வீராப்பு பேசியது தவிர இந்த தமிழ் தேசிய கோமாளிகள் என்ன போராட்டம் நடத்தி விட்டார்கள்.நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுத்து பணிய வைக்கும் போராட்டம் எதையுமே முன்னெடுக்காமல் ”கையறு நிலை”யை விரும்பி ஏற்றுக் கொண்டவர்களதானே இவர்கள்.

        \\குற்றுயிராய் கிடப்பவனுக்கு உயிரைப் பிடித்து கொள் என்று நம்பிக்கை ஊட்டியவர்களையும்//

        வாயாலேயே வடை சுட்டு போர் நிறுத்தத்தை கொண்டு வந்து விடுவோம் என்ற மூட நம்பிக்கையை அல்லவா ஊட்டினார்கள்.

        • // சில தனிநபர்களும் கட்சிகளின் தலைவர்களுடைய விருப்பு வெறுப்புகளும் வெளியுறவு கொள்கையை தீர்மானித்து விட முடியும் என நம்புவது பேதமை. //

          இப்படிக் கூறுவது அதைவிட பேதமை..

          மேலும், அதிகாரப்பூர்வமான வெளியுறவுக் கொள்கைக்கும், நடைமுறைக்கும் உள்ள முரண்பாட்டை உங்கள் வார்த்தைகளாலேயே கூறவேண்டுமென்றால் :

          https://www.vinavu.com/2013/02/26/balachandran-murder-ds-kavithai/ பதிவில் உங்கள் பின்னூட்டத்தின் ஒரு பகுதி :

          ” ஈழத்தில் மட்டுமல்ல,ஆப்கானிலும் பாக்-லும் இந்தியாவின் தலையீடுகளுக்கு ஆதாரங்கள் ஊடக வெளியெங்கும் கொட்டிக் கிடக்கின்றன.ஆனாலும் இந்தியா தலையிடாதது போல் பேசும் உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம்யா.உங்களை போன்றோரின் இந்த மாதிரியான உளறல்களுக்கு மொத்தமாக ஒரு ஆப்பு வைத்தானே கோத்தபய்யே ராசபக்சே இப்படி ”இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்”.இதற்கு என்ன சொல்கிறீர்கள்.”

          அதிகாரப்பூர்வமான வெளியுறவுக் கொள்கை ஒருபுறமிருக்க, நடைமுறைகளைத் தீர்மானிப்பது யார்..?! – நடைமுறையில் இந்த ரகசியத் தலையீடுகளின் தீவிரம், வீச்சு, இலக்குகள் அப்போது ஆட்சியிலிருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் (அவற்றின் தலைமைகள், சகாக்களின் தீர்மானங்களுக்கு ஏற்ப ) வேறுபடும் என்பதை மறுக்கிறீர்களா..?!

          // நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுத்து பணிய வைக்கும் போராட்டம் எதையுமே முன்னெடுக்காமல் ”கையறு நிலை”யை விரும்பி ஏற்றுக் கொண்டவர்களதானே இவர்கள். //

          பணிய வைக்க முடியாததால் ஏற்படும் நிலைதான் கையறு நிலை.. எப்படி பணிய வைத்திருக்கமுடியும் என்று நீங்கள் கூறுங்கள்..

          • ஈழத்தில் இந்தியாவின் தலையீடு எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கடுகளவும் மாறியதில்லை.

            1997-ல் ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தபோதுதான் இலங்கையுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டது.இந்திய பெரு முதலாளிகளின் கொள்ளைக்கு இலங்கையின் கதவுகள் மேலும் அகல திறந்து விடப்பட்டன.

            2000-ல் விடுதலை புலிகளின் ஓயாத அலைகள் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமாகி கிடந்த சிங்கள இராணுவத்தை மீண்டும் போர் நிலைக்கு கொண்டுவர 450 கோடி ரூபாய் உதவி அளித்தது அப்போதைய பா.ச.க.அரசு. முந்தய,பிந்தைய அரசுகள் போல் அல்லாமல் இந்த உதவியை கமுக்கமாக செய்யாமல் வெளிப்படையாகவே அறிவித்து செய்தது பா.ச.க.அரசு.

            இவை எல்லாம் பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பது போலத்தான்.

            பிறகு வந்த காங்கிரசு யோக்கியர்களின் கதையை விவரிக்கவும் வேண்டுமா.

            மற்றபடி அதிகாரபூர்வ வெளியுறவு கொள்கைக்கும் நடைமுறைக்கும் வேறுபாடு உள்ளதாக நான் எழுதி இருப்பதாக நீங்கள் அருஞ்சொற்பொருள் கூறுவது கற்பனையானது.வெளிநாடுகளின் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதே இல்லை என்று உளறுபவர்களுக்கு அளித்த விடைதான் அது.

            வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளலாம். அதிகாரபூர்வ வெளியுறவு கொள்கை, கமுக்கமான வெளியுறவு கொள்கை

            • இந்த மேற்படி கமுக்கமான வெளியுறவுக் கொள்கையும் எல்லா ஆளும் கட்சிகளுக்கும் ஒரே விதமாக இருக்குமா.. வேறுபடுமா.. இதுதான் கேள்வி..

              • அம்பி,

                இந்த விடயத்தில் கட்சி வேறுபாடெல்லாம் கிடையாது. இந்தப் படுகொலைகள் நடந்த காலம் மிக முக்கியமானது. உலகமயமாக்கத்தில் இந்தியா இணந்து கொண்ட பிறகு இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது வள்ளல்களீன் உள்ளங்களில் கருணைகள் (பணம்) நிரம்பி வழிகின்றன. இதனால் அவர்களின் கருணைப் பார்வை பட்ட இடம் இலங்கை. கருணையினால் மக்களை திக்குமுக்காட வைத்துவிட்டனர்.

              • அதில் என்ன ஐயம் உங்களுக்கு.ஏதேனும் வேறுபாடு உங்களுக்கு தென்பட்டால் சொல்லுங்கள்.

    • //அமெரிக்க கப்பற் படையின் பசிபிக் பிரிவு கப்பம் அனுப்பும், பி.ஜே.பி வென்றால் சிங்களர்களை கட்டுப்படுத்துவார்கள், இலை மலரும் ஈழம் மலரும் என்றெல்லம் தவறான தகவல்களை அளித்து புலிகளையும் மக்களையும் கொலைக்களத்துக்கு தள்ளிச் சென்றவர்கள்.///

      ஆம். ஆனால் இதை புலிகள் நம்பியது அவர்களின் விவேகமின்மையையே காட்டுகிறது. மேலும் மக்களை போர் களத்தில் இருந்து தப்பிக்க அவர்கள் அனுமதிதிருக்க வேண்டும். அதை செய்ய மறுத்தால் தான் பெரும் எண்ணிக்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

      • அதியமான்,

        போன வருடமும் இதைத்தான் விவாதித்தோம்..

        போர்க்களத்தில் இல்லாத மக்களும் இலங்கை அரசால் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதைத்தான் No Fire Zone – The Killing Fields of Srilanka ஆவணப் படம் நிறுவுகிறது.. திட்டமிட்ட இன அழிப்பை தவிர்க்க முடியாத போர் அழிவாக இலங்கை அரசு சித்தரித்துக் கொண்டிருந்தது அம்பலமாகி வருவதை உணர மறுக்கிறீர்களே..

        • இல்லை அம்பி. இன அழிப்பு வேறு. போர் குற்றங்கள் வேறு. போர் முடிந்த பின், தோற்றவர்களை திட்டமிட்டு, நிதானமாக முற்றாக கொன்றழிப்பது தான் இனப்படுகொலை. போர் முடிந்த பின், நிராதவரான் சுமார் 1,50,000 அப்பாவி தமிழர்கள் முள்வேலி முகாம்களின் சிறை வைக்க்பட்டனர். இன அழிப்பு என்றால் பிறகு அவர்கள் அனைவரையும் முற்றாக கொன்றழிப்பது. மேலும் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ : யாழ் குடா, கொலும்பு, கிழக்கு பகுதிகள் போன்ற பகுதிகளில் systematic and mass murder of unarmed civlians until every one them is killed. போஸ்னியாவில் மற்றும் ருவாண்டாவில் இது தான் நடந்தது. அதை தான் இனப்படுகொலை என்பார்கள்.

          அந்த ஆவணப்படம் கொடூரமான நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது. ஆனால் அதற்க்கு இணையாக புலிகள் மற்றும் இதர இயக்கங்கள் கடந்த 30 ஆண்டுகளாக நிகழ்த்திய படுகொலைகள், அப்பாவிகள் மீது தாக்குதல்கள், முஸ்லிமகளை கொன்று விரட்டியது, சிறார்களை இழுத்து சென்றது, மக்களை மனித கேடையமாக கடைசி வரை பயன்படுத்தியது : இவை பற்றியும் ஒரு ஆவண படம் தேவை. எல்லா நிகழ்வுகளையும் எதிர்கால சந்ததியினர் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். முழு உண்மைகளும் வெளி வர வேண்டும்.

          • இன அழிப்புக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம் விசித்திரமாக இருக்கிறது..!
            குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள்-முகாம்கள், பள்ளிகள், No Fire Zone போன்றவற்றில் சிங்கள மக்களும் கணிசமாக இருந்திருந்தால் மார்ட்டர், கொத்து குண்டுகள் வீசப்பட்டிருக்குமா..? காணாமல் போன தமிழர்களின் எண்ணிக்கையே சுமார் 1 லட்சம்.. இவற்றையெல்லாம் வெறும் போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் இல்லை என்று கூறமுடியுமா..?!

            புலிகள் செய்த கொடுமைகள் பற்றிய ஆவணப்படம் இல்லையே என்று வருந்த வேண்டாம்.. இலங்கை அரசு அதையெல்லாம் தனித்தனியே ‘தயார்’ செய்துதான்,

            முதலீடுகளுக்குக் காத்திருக்கும் ‘ஜனநாயக’ மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்லாமிய, ’கம்யூனிச’ நாடுகள் என்று வகைப்படுத்தி அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு ஏற்ற வகையிலான ‘சிறப்பு’ ஆவணப்படங்களை அந்தந்த நாடுகளின் அரசுகளுக்குக் காட்டி,

            புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில், இறுதிப் போர் இனப்படுகொலைகளை நடத்த, ராணுவ உதவிகளையும், ‘தார்மீக’ ஆதரவையும் திரட்டி வந்திருக்கிறது..

    • “ஈழத் தமிழர்களுக்கு விடுதலை முதலில் தமிழ்நாட்டு இனவாத முட்டாள்களிடம் இருந்து கிடைக்கட்டும்”.முழுக்க சரியானது.இதைத் தான் நான் முந்தைய மறுமொழியில் சொன்னேன். தமிழகத்தின் இளைஞர்கள் இப்படியான இனவாத முட்டள்கள் அல்ல, ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து மீட்கப்பட வேண்டும்.வை.கோ இதில் முதன்மையான ஆள்.இன்று கூட அவர் விட்ட பெரிய்ய அறிக்கைப் போரில் மற்றவர்கள் போராடுகின்ற அனைத்தையும் தேதி வாரியாக பட்டியல் போடுகிறார், ஆனால் இவர் எந்த போராட்ட அறிவிப்பும் விடவில்லை அந்தளவிற்கு அடையாளமாக அம்மா மனம் கோணாமல் தொகுதி பேரத்திற்கு தயார்படுத்திக் கொள்கிறார்.ஏதோ இருப்பதற்கு அம்மா மனம் நோகாமல் மதுஅரக்கனை எதிர்த்து நன்னெறி பிரச்சாரம்,விவசாயிகளுடன் ஒருநாள் உண்ணாவிரதம்,இடையிடையே கூடங்குளம் ஒரு பார்வை (அங்கும் போய் ‘மக்களின் பயத்தை’ போக்க வேண்டும் என வேண்டுகோள்)எங்கெங்கு போராட்டம் நடந்தாலும் அங்கெல்லாம் போய் ஒரு போட்டோ. தாங்கலடா சாமி.உலகமகா நடிகன்.

  10. ராஜபக்‌ஷே மற்றும் அவரது சகாக்களை மட்டும் போர் குற்றங்களுக்காக தண்டித்தால் போதுமா ? (அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை) ; புலிகள் செய்த போர் குற்றங்கள் (மனித கேடையமாக அப்பாவிகளை பயன்படுத்தியது, சிறார்களை கட்டாயமாக இழுத்துச் சென்று போர் முனைக்கு அனுப்பியது, தப்ப முயன்ற மக்களை சுட்டு தடுத்தது ; தவிர 30 ஆண்டுகளாக பல சிவிலியன்களை, சிறுவர்களை கொன்றது, இஸ்லாமியர்களை கொன்றது, அழித்தொழிப்புகள் : இக்குற்றங்களுக்கு யாரை இனி தண்டிப்பது ? யார் இதற்க்கு இனி பொறுப்பேற்பது ?

    • நூரெம்பர்க் போர் குற்ற விசாரணையின் போது ஹிட்லர் இறந்து விட அவரின் மேல் பழிபோட்டு தப்ப நினைத்த அவரது சகாக்களும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதுபோல வி.புலிகளும் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு நிலைமை வேறு புலிகளின் முன்னனியாளர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். எஞ்சியிருப்பவர்கள் இருவர். ஒருவர் கருணா மற்றொருவர் கே.பி., வேண்டுமானால் இருவரையும் தூக்கிலிடலாம். ஏற்றுக்கொள்ளுமா இலங்கையும், இந்தியாவும்!

    • சிங்கள பாசிச அரசையும், இனப்படுகொலையின் கூட்டாளி இந்திய அரசையும் பேசாமல் புலிகளை மட்டும் வெறியோடு பாய்ந்து பிராண்டுவது ஏன் அதியமான் ?

      • ஏனா அதியமான் தான் ஜனநாயகவாதியாயிற்றே(அவரே சொல்லிகொள்வார்)

      • இதை வேறு யாரும் பேச மாட்டீங்கறீங்க. எனவே நான் பேசுகிறேன் ? ஏன் கூடாதா ? மேலும் எனது பின்னூட்டத்தின் முதல் வரியிலேயே ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை என்றும் தெளிவாக சொல்லியும் இப்படி பேசினால் எப்படி ? இதை பற்றி முகப்புத்தகத்தில் எழுதியவை :

        புலிகள் மாபெரும் குற்றங்களையும், அழித்தொழிப்புகளையும் செய்துவிட்டனர். ஆனால் அது தவறான பாதை என்பதை உணர்கிறோம் என்று பகிரங்கமாக அறிவித்து, அதே நேரத்தில் ராஜபக்சேவை போர் குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என்று கோருவதே சரியான நிலைபாடு. அதை விட்டுவிட்டு, ஒரு சைடை மட்டும் பேசிவதால் தான் உலக அரங்கில் இது பெரிசா எடுபட வில்லை. இன்னும் ஒரு மாதத்தில் எல்லாம் அடங்கி பழைய படி எல்லோரும் சொந்த வேலைய பார்ப்பாங்க…

        //ராஜபக்சேவ கண்முடித்தனமாக ஆதரிக்கும் இந்து ராம நீங்க எப்படி பார்க்கிறீரகளோ, அதே போல் தான் உங்களை போன்ற உணர்சி போராளிகளை நான் பாக்கிறேன்.

        புலிகளை இன்றும் ஆதரிப்பவர்கள் தான் இதற்க்கு பொறுப்பேற்க்க வேண்டும்.

        வைகோ, நெடுமாறன், சீமான் போன்றவர்களும் இன்னும் கண்மூடித்தனமாக பேசுவர்களும் தான். இவர்கள் அனைவருக்கும் புலிகள் அழிந்தது தான் பிரச்சனை. போர் குற்றங்கள் அல்ல. 40000 பேர்கள் கொல்லப்பட்டும் இன்னும் புலிகள் இருந்து, அய்ந்தாவது ஈழப்போர் தொடர்ந்தால், இன்று இப்படி பேச மாட்டார்கள்…

        உலகில் பெரும் பான்மையான நாடுகள் விடுதலை புலிகளை பயங்கரவாதிகள் என்றே கருதி தடை செய்துள்ளனர். (இது ஆரம்ப வருடங்களில் இல்லை. கடைசி சில ஆண்டுகளில் தான் ; காரணம் அவர்களின் தொடர் அழித்தொழிப்புகள்). புலிகள் முற்றாக அழிந்தால் தான் இனி இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பும் என்ற முடிவுக்கு இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் வந்த பல பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் தான் புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் பல உதவிகளை பல நாடுகள் செய்தன. இந்தியாவும் தான். ஆனால் பொதுமக்களை மனித கேடையங்களாக புலிகள் தொடர்ந்து பயன்படுத்தியன் விளைவு 40,000 அப்பாவிகள் கடைசி கட்ட போரில் கொல்லப்பட்டனர். 40,000 மக்களை கொன்றாலும் சரி, புலி தலைமையை முற்றாக அழித்தே தீர்வது என்ற கொலைவெறி ராஜபக்சே அரசுக்கு. 40,000 மக்களை பலி கொடுத்தாலும் சரி, தம்மை காப்பற்றி கொள்வது தான் போராட்டத்தை தொடர்வதற்க்கான ஒரே வழி என்ற நிலைபாடு புலித்தலைமைக்கும். இரு தரப்பும் மக்களை பற்றி கவலை படவே இல்லை. இலக்கு ஒன்று தான் வெறி..

        முல்லைதீவு பகுதியில் போரின் கடைசி சில நாட்களில், ஒரு படகில் தன் பசங்களுடன் தப்ப முயன்ற ஒரு தாயை துப்பாக்கி முனையில் தடுத்த புலி ஒருவரை பார்த்து அத்தாய் மிகுந்த சீற்றத்துடன் சொன்ன வார்த்தைகள் :”நாசமா போயிடுவீங்கடா நீங்க” இது இன்னும் என மனத்திறையில் பதிந்து கிடக்கிறது..

        ஆனாலும் இன்னும் உலகில் பல பாகங்களில், முக்கியமாக தமிழகத்தில் உள்ள புலி ஆதாரவளர்கள் இதை எல்லாம் ஏற்க மறுத்து, ராஜபக்சேவை மட்டும் தண்டித்தால் போதும் என்றே பேசுகின்றனர். சரி, இதை விட இன்னும் ஒரு முக்கிய விசியம் : இன்று அய்.நாவில் கண்டன தீர்மானம் கொண்டு வரும், ஆதரிக்கும், எதிர்க்கும் நாடுகள் அனைத்த்தும் பல நேரங்களில் போர் குற்றங்கள், அழித்தொழிப்புகள் செய்தவை / செய்கின்றவை தான். முக்கியமாக ஈராக், ஆஃப்கனில் அமெரிக்காவும், செச்சென்யாவில் ரஸ்ஸியாவும், திபெத்தில் சீனாவும், கஸ்மீரில் இந்தியாவும், இன்னும் சொல்லலாம்.. எல்லோருகுக்கும் மடியில கனம். எனவே அய்.நா தீர்மானங்களால் ஒன்னும் பெரிய விளைவு இருக்காது. கூபாவும், வெனிசுலாவும் கூட சீன. ரஸ்ஸிய ஆதரவு என்ற நிலைபாட்டினால், அவர்களின் ‘ஏகாதிபத்தியத்திற்க்கு’ துணை போகும் அவல நிலை.

        • இப்போது புலிகளே இல்லை, எனவே இல்லாதவர்களைப் பற்றி எதற்கு பேசுகிறீர்கள் ? இந்திய அரசைப் பற்றி பேசுங்கள்.

    • அய்யா அதியமான் அவர்களே …ஏதோ இலங்கையில் முஸ்லிம்கள் ஒன்றுமே செய்யவில்லை போல உறை எழுதுவதன் நோக்கம் என்னவோ??? பழைய குற்றங்கள் சரி …தற்போது நடந்த திட்டமிட்ட படுகொலைகளுக்கு எப்படி தண்டிப்பது …அதை சொல்லுங்கள்

      • \\ஏதோ இலங்கையில் முஸ்லிம்கள் ஒன்றுமே செய்யவில்லை போல உறை எழுதுவதன் நோக்கம் என்னவோ??? பழைய குற்றங்கள் சரி//

        இலங்கையில் முசுலிம்கள் ”என்ன” செய்தார்கள் என்பதை பதிவு செய்யலாமே. முசுலிம்களுக்கு புலிகள் என்ன செய்தார்கள் என்பதையும் மனசாட்சி இருந்தால் பதிவு செய்யலாம்.

        பழைய குற்றங்கள் சரி என்று தீர்ப்பளிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

  11. வழமை போல தமிழ்தேசிய வாதிகளை கடித்து குதரியாச்சு , அதைப்பற்றி கவலை இல்லை . ஈழத்தமிழர்களின் எதிர்கால வாழ்வு குறித்துதான் எமது கவலை . மாணவர் கோரிக்கைகளை குறை சொல்லும் அவசியம் புரியவில்லை … இந்தியாவை தீர்மானம் கொண்டு வர சொல்வதன் நோக்கம் குற்றவாளியை தப்பிக்க செய்வதல்ல குற்றவாளியை குற்றத்தை ஒப்புக் கொள்ள நிர்பந்திப்பது , அடுத்து சர்வதேச நீதி விசாரணை பற்றி தோழர் ஒன்றும் குறிப்பிடவில்லை … இந்தியாதான் போரை நடத்தியது என தமிழன் ஒவ்வொருவருக்கும் தெரியும் …

    தோழர் சொல்லும் தீர்வானது சாத்தியமே இல்லை …. தமிழகத்தில் உள்ள சாதி மோதல்களை பெரும்பாலான மக்கள் ஆதரிப்பதில்லை மேலும் அவர்கள் தமிழர் என்ற அடையாளத்துடன் ஒன்றிணைய சாத்தியம் அதிகம் … முள்ளிவாய்க்கால் போரின் போது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத சிங்கள பெரும்பான்மையினர் , வெற்றிக் களிப்பில் இருக்கும் போது தமிழர் பற்றி சிந்திப்பார்களா ? கம்மியுனிச நாடுகள் பற்றிய தோழரின் விமர்சனத்தில் நேர்மையில்லை …அமேரிக்கா கொண்டு வருவதால் தீர்மானத்தை எதிர்க்கும் சிவப்பு நாடுகள் தாங்களே முன் வந்து ஈழத்தில் வந்து நிலையை அறிந்து தீர்மானம் கொண்டு வரலாமே ? மாறாக சிகப்பு நாடுகள் சிங்களனை ஆதரிக்க அல்லவா செய்கிறது ?

  12. ////வழமை போல தமிழ்தேசிய வாதிகளை கடித்து குதரியாச்சு, அதைப்பற்றி கவலை இல்லை.////

    தமிழகத்தையோ, தமிழ் மக்களையோ பற்றி எந்த கவலையும் படாமல் ஜாலியாக தமிழ்தேசிய கனவில் மூழ்கித்திளைத்திருக்கும் தமிழ்தேசிய கோமான்களின் கனவை கலைக்கும் சிறு முயற்சியாக இந்த நேர்காணலில் தோழர் சில மென்மையான விமர்சனங்களை வைத்திருக்கிறார், இதற்கே இப்படி என்றால் இன்னும் கடுமையான விமர்சனங்களை வைத்தால் எப்படி எதிர்கொள்வீர்கள்.

    ////ஈழத்தமிழர்களின் எதிர்கால வாழ்வு குறித்துதான் எமது கவலை. மாணவர் கோரிக்கைகளை குறை சொல்லும் அவசியம் புரியவில்லை…////

    எதிர்காலத்தைப் பற்றிய கவலைப்படுவதற்கு முன்னால் கடந்தகாலத்தைப் பற்றிப் பேசுங்கள். ஈழத்தமிழரின் இந்த நிலைக்கு யார் காரணம் ? ஈழத்தமிழரின் வாழ்க்கை இப்படி சின்னாபின்னமாக்கப்பட்டதற்கும், லட்சக்கணக்கானவர்கள் கொன்றொழிக்கப்பட்டதற்கும் எந்த அரசியல் காரணம், அகதிகளாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும், முடமானவர்களாகவும், அநாதைகளாகவும் இறுதியில் லட்சக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்படவும் எந்த அரசியல் காரணமாக இருந்தது ? ம.க.இ.க வின் அரசியலா தமிழ்தேசிய முட்டாள்களின் வெற்றுச் சவடால் உணர்ச்சியூட்டும் அரசியலா ? ஒரு பெரும்பகுதி மக்களின் கடந்த காலத்தை அழித்துவிட்டு மிச்சமிருப்பவர்களின் எதிர்காலத்தைப் பற்றி பேச உங்களுக்கெல்லாம் குற்றவுணர்வாக இல்லையா ?

    மாணவர்களின் போராட்டத்தை பற்றி குறை கூறியுள்ளார் என்று பொதுவாக பேசாமல் என்ன குறை கூறியுள்ளார் என்று ஒவ்வொரு பாய்ண்டாக எடுத்து வைத்து பேசுங்கள்.

    ///இந்தியாவை தீர்மானம் கொண்டு வர சொல்வதன் நோக்கம் குற்றவாளியை தப்பிக்க செய்வதல்ல குற்றவாளியை குற்றத்தை ஒப்புக் கொள்ள நிர்பந்திப்பது///

    மறுபடியுமா, திருந்துவதாகவே இல்லையா ? காளை மாடு பால் கறக்காதுன்னு சொல்லியிருக்காரே புரியலையா ? அந்த காளை மாடு இந்தியா தான்.

    ////அடுத்து சர்வதேச நீதி விசாரணை பற்றி தோழர் ஒன்றும் குறிப்பிடவில்லை…////

    சர்வதேச நீதி விசாரணை பற்றி குறிப்பிட்டுள்ளார் மீண்டும் ஒரு முறை கேட்கவும், ஆனால் அதுவும் கூட ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடு இல்லாமல் நடக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    ////இந்தியாதான் போரை நடத்தியது என தமிழன் ஒவ்வொருவருக்கும் தெரியும்…////

    தமிழனுக்கு தெரியிறது இருக்கட்டும் முதலில் தமிழ்தேசியவாதிகளுக்குத் தெரியுமா என்று சொல்லுங்கள் ? தெரியும் என்றால் தெரிந்தும் ஏன் இந்தியாவிடம் போய் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு பதில் சொல்லுங்கள் ?

    நீங்களே மேலே என்ன சொல்லியிருக்கிறீர்கள், /இந்தியாவை தீர்மானம் கொண்டு வர சொல்வதன் நோக்கம் குற்றவாளியை தப்பிக்க செய்வதல்ல குற்றவாளியை குற்றத்தை ஒப்புக் கொள்ள நிர்பந்திப்பது தான்/ என்று கூறியுள்ளீர்கள். இந்தியா தான் போரை நடத்தியது என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் பிறகு அந்த குற்றவாளியிடமே தீர்மானம் கொண்டு வரச் சொல்கிறீர்கள். இதை என்னவென்று சொல்வது மணி ?

    ///தோழர் சொல்லும் தீர்வானது சாத்தியமே இல்லை….///

    தோழர் சொல்லும் தீர்வு சாத்தியம் இல்லை என்று சொல்வதற்கு முன்னால் தமிழினவாதிகள் சொன்ன தீர்வுகள், முன் வைத்த வழிமுறைகள் எல்லாம் இதுவரை என்னென்ன இலக்குகளை சாதித்திருக்கிறது என்பதையும், முள்ளிவாய்க்கால் வரை கடந்த முப்பது ஆண்டுகளுகளில் கொல்லப்பட்ட லட்சக்கணக்காண ஈழத்தமிழர்களின் அழிவுக்கு தோழர் மருதையன் கூறும் சாத்தியமற்ற கொள்கை காரணமா தமிழினவாதிகளின் சாத்தியமான கொள்கை காரணமா என்பதைச் சொல்லுங்கள்.

    /////தமிழகத்தில் உள்ள சாதி மோதல்களை பெரும்பாலான மக்கள் ஆதரிப்பதில்லை மேலும் அவர்கள் தமிழர் என்ற அடையாளத்துடன் ஒன்றிணைய சாத்தியம் அதிகம்…////

    உண்மை தான் பெரும்பாண்மையான ‘உழைக்கும் மக்கள்’ சாதிவெறியர்களை ஆதரிப்பதில்லை தான். ஆனால் அதற்கு காரணம் நாம் எல்லோரும் தமிழர்கள் என்கிற இன உணர்வு அல்ல மாறாக அந்த பெரும்பாண்மை உழைக்கும் மக்களின் வாழ்நிலையிலிருந்து இயல்பாக எழும் வர்க்க உணர்வு தான் காரணம்.

    ///முள்ளிவாய்க்கால் போரின் போது எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத சிங்கள பெரும்பான்மையினர், வெற்றிக் களிப்பில் இருக்கும் போது தமிழர் பற்றி சிந்திப்பார்களா ?///

    அதற்காக அவர்களை விமர்சிப்பதும் அந்த பக்கம் இருக்கக்கூடிய ஜனநாயக சக்திகளை சிங்கள இனவெறி பாசிசத்துக்கு எதிராக வென்றெடுப்பதும் தான் இதற்கு தீர்வாக இருக்க முடியும். அவ்வாறு வென்றெடுக்கவும் முடியும், ஏனெனில் சிங்களவர்கள் அனைவரும் தமிழினவாதிகள் சித்தரிப்பதைப் போல ராஜபக்சேக்கள் அல்ல.

    குஜராத்தில் முசுலீம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் இந்துப் பெரும்பாண்மை இவ்வாறு தான் அமைதி காத்தது. குஜராத்தில் என்ன செய்வது ? இசுலாமிய தீவிரவாதத்தை ஆதரிப்பதா அல்லது பெரும்பாண்மை இந்துக்களின் மவுனத்தை உடைத்து இந்து பாசிசத்துக்கு எதிராக பெரும்பாண்மை இந்துக்களை நிறுத்துவதா, எது சரி ?

    இது மதவெறிக்கு மட்டுமல்ல ஆதிக்க சாதிவெறிக்கும் பொருந்தும். சாதிவெறியர்களை தலித் மக்கள் மட்டும் தனியாக நின்று எதிர்த்து வீழ்த்திவிட முடியாது.

    ///கம்மியுனிச நாடுகள் பற்றிய தோழரின் விமர்சனத்தில் நேர்மையில்லை… அமேரிக்கா கொண்டு வருவதால் தீர்மானத்தை எதிர்க்கும் சிவப்பு நாடுகள் தாங்களே முன் வந்து ஈழத்தில் வந்து நிலையை அறிந்து தீர்மானம் கொண்டு வரலாமே ? மாறாக சிகப்பு நாடுகள் சிங்களனை ஆதரிக்க அல்லவா செய்கிறது ?///

    இன்று உலகில் எங்குமே கம்யூனிச நாடு இல்லை. தோழர் இதை தனது உரையிலும் தெளிவாக கூறியுள்ளார். இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமல்லாமல் வேறு பல காரணங்களுக்காகவும் இந்த உரையை நீங்கள் மீண்டும் ஒருமுறை கேட்பது நல்லது.

    • முதலில் நன்றி .

      // ஈழத்தமிழரின் வாழ்க்கை இப்படி சின்னாபின்னமாக்கப்பட்டதற்கும், லட்சக்கணக்கானவர்கள் கொன்றொழிக்கப்பட்டதற்கும் எந்த அரசியல் காரணம், //

      மனசாட்சி படி சொல்லுங்கள் , புலிகளை சிங்களன் தனியாக போரில் வென்றானா ? புலிகளை தமிழகத்தில் இருந்து வழி நடத்தியது யார் தமிழ் தேசியர்களா ? எந்த அரசியல் செய்தாலும் மிருக பலம் கொண்டு உலகமே திரண்டு வரும் போது என்ன செய்ய முடியும் ?

      //தமிழகத்தையோ, தமிழ் மக்களையோ பற்றி எந்த கவலையும் படாமல் //

      இப்படி எல்லாம் நீங்களே முடிவு செய்து கொள்வீர்களா ? எந்த கவலையும் படாதவர்கள் எந்த தேசியம் பற்றியும் கண்டுகொள்ள மாட்டார்கள் … தமிழர் நலனில் அக்கறை கொண்டுதான் தமிழ்த்தேசிய கருத்தியல் பரப்ப படுகிறது …

      //இந்தியா தான் போரை நடத்தியது என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் பிறகு அந்த குற்றவாளியிடமே தீர்மானம் கொண்டு வரச் சொல்கிறீர்கள். //

      இந்தியா மட்டுமல்ல உலகின் வல்லாதிக்க நாடுகள் அனைத்துமே புலிகளுக்கு எதிராக போர் செய்தன , ஐநா அவை திட்டமிட்டு இலங்கையில் இருந்து பின் வாங்கி அமைதி காத்தது …ஈழப்போரில் உலகமே குற்றவாளிதான் … இந்தியாவின் அங்கமாக இருக்கும் நாம் இந்திய அரசிடம்தானே கோரிக்கை வைக்க முடியும் … வேறென்ன தீர்வு ?

      குஜராத் முள்ளிவாய்க்கால் ஒப்பீடு சரியா தோழரே ? ஈழப்போர் திடீரென நடந்த கலவரமா ? அறுபது ஆண்டு கால போராட்டத்தில் பாதி பாதி ஆண்டுகள் அஹிம்சா வழியிலும் ஆயுத வழியிலும் போராடி மீண்டும் சுழியத்தில் வந்து நிற்கிறோம் …. இன்னமும் சிங்கள மனசாட்சி எழும்ப மறுக்கிறதே ? இப்போ வெற்றிக் களிப்பில் இருக்கிறான் சிங்களன் என்ற உண்மையை உணர மறுக்கிறீர்களா தோழர் ?

      சீனா கம்யுனிச நாடு அல்ல என்றார் , வெனிசுலா கூபா பற்றி குறிப்பிடும் போது அமெரிக்க மனித உரிமை என்ற துருப்பு சீட்டின் மூலமாக மற்ற நாட்டிற்குள் செல்லுவதால் அவை எதிர்ப்பதாக குறிப்பிட்டார் … நீங்களும் கேட்டு பாருங்கள் …

      • ////மனசாட்சி படி சொல்லுங்கள், புலிகளை சிங்களன் தனியாக போரில் வென்றானா ? புலிகளை தமிழகத்தில் இருந்து வழி நடத்தியது யார் தமிழ் தேசியர்களா ? எந்த அரசியல் செய்தாலும் மிருக பலம் கொண்டு உலகமே திரண்டு வரும் போது என்ன செய்ய முடியும் ?////

        நீங்கள் மனசாட்சிப்படி பேசுங்கள் மணி, கடைசி கட்டப் போரில் மே 17, 18 ம் தேதிகளில் தமிழகத்தில் புலிகளோடு தொடர்பிலிருந்தவர்கள் யார் ? வைகோ, பழ.நெடுமாறன், சீமான் போன்றோர் தானே இவர்கள் எல்லாம் தமிழ்தேசியவாதிகள் இல்லையா ? இவர்கள் மட்டுமின்றி பலரும் கடைசி வரை புலிகளோடு தொடர்பில் இருந்துள்ளனர் அவர்களில் யாரும் கம்யூனிஸ்டுகள் இல்லை குறிப்பாக ம.க.இ.க வினர் இல்லை ! கடைசி வரை இந்தியா வரும் அமெரிக்கா வரும் என்று அவர்களை தமிழ்தேசியவாதிகள் தான் நம்பவைத்தனர், புலிகளும் இந்த முட்டாள்களின் வாக்குறுதிகளை எல்லாம் நம்பினர்.

        2009 ல் இதெல்லாம் நடந்ததா இல்லையா ? இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசினார்களா இல்லையா ? தமிழகத்தில் ஜெயலலிதாவும் மத்தியில் பா.ஜ.க வும் ஆட்சியை பிடித்தால் போர் நிறுத்தப்படும் என்று பிரச்சாரம் செய்தார்களா இல்லையா ? அதையே புலிகளிடம் கூறி நம்ப வைத்தார்களா இல்லையா ?

        புலிகளை சிங்களன் தனியாக வென்றானா என்று கேட்கிறீர்கள், இல்லை இந்தியா அமெரிக்கா மற்றும் பல்வேறு சர்வதேச நாடுகளோடு தமிழகத்திலுள்ள தமிழ்தேசியவாதிகளும் சேர்ந்து கொண்டு தான் புலிகளை வீழ்த்தினார்கள், போரில் சிங்களவனுக்கு துணை நின்றவர்களை எல்லாம் தமிழனுக்கு உதவி செய்ய வருவார்கள் என்று புலிகளை நம்ப வைத்ததன் மூலம் முள்ளிவாய்க்கால் துரோகத்தில் தமிழினவாதிகளுக்கும் மறுக்கமுடியாதபடி பங்கு இருக்கிறது. இவ்வாறு புலிகளை தமிழகத்தில் இருந்து வழி நடத்தியது தமிழ் தேசியவாதிகள் தான்.

        துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்.

        http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6691:2010-01-21-21-59-08&catid=325:2010

        https://www.vinavu.com/2010/01/07/mulli-vaikal/

      • ////இப்படி எல்லாம் நீங்களே முடிவு செய்து கொள்வீர்களா ? எந்த கவலையும் படாதவர்கள் எந்த தேசியம் பற்றியும் கண்டுகொள்ள மாட்டார்கள்… தமிழர் நலனில் அக்கறை கொண்டுதான் தமிழ்த்தேசிய கருத்தியல் பரப்பப்படுகிறது…////

        சரி தமிழகத்தில் வாழும் தமிழ்தேசியவாதிகள் தமிழ் மக்களின் எந்தெந்த பிரச்சினைகளில் எல்லாம் தலையிட்டு போராட்டங்களை நடத்தியுள்ளனர் என்று வரிசையாக ஒரு பத்து போராட்டங்களை மட்டும் சொல்லுங்களேன் பார்ப்போம்.

        ////இந்தியா மட்டுமல்ல உலகின் வல்லாதிக்க நாடுகள் அனைத்துமே புலிகளுக்கு எதிராக போர் செய்தன , ஐநா அவை திட்டமிட்டு இலங்கையில் இருந்து பின் வாங்கி அமைதி காத்தது …ஈழப்போரில் உலகமே குற்றவாளிதான் … இந்தியாவின் அங்கமாக இருக்கும் நாம் இந்திய அரசிடம்தானே கோரிக்கை வைக்க முடியும் … வேறென்ன தீர்வு ?////

        எப்படி கொலைகாரனே கொலை விசாரணை நடத்த முடியும் என்று கூறுங்கள், அது சரியாக இருக்குமா என்பதையும் கூறுங்கள். வேறு என்ன வழி என்பது உரையில் உள்ளது.

      • ////குஜராத் முள்ளிவாய்க்கால் ஒப்பீடு சரியா தோழரே ? ஈழப்போர் திடீரென நடந்த கலவரமா ? அறுபது ஆண்டு கால போராட்டத்தில் பாதி பாதி ஆண்டுகள் அஹிம்சா வழியிலும் ஆயுத வழியிலும் போராடி மீண்டும் சுழியத்தில் வந்து நிற்கிறோம்…. இன்னமும் சிங்கள மனசாட்சி எழும்ப மறுக்கிறதே ? இப்போ வெற்றிக் களிப்பில் இருக்கிறான் சிங்களன் என்ற உண்மையை உணர மறுக்கிறீர்களா தோழர் ?////

        ஏன் சரி இல்லை ? ஈழப்பிரச்சினை அறுபது ஆண்டுகள் சாதிப் பிரச்சினையோ மூவாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது அதற்கு என்ன செய்வது ?

        உண்மையில் பிரச்சினையை தீர்க்க விரும்புபவர்கள், ஈழத்தமிழருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும் ? எது சரியானது, எது சாத்தியமானது என்று தான் யோசிக்க வேண்டுமே ஒழிய எது சுலபமானது, எது குறுக்கு வழி என்று தமது மன விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படக் கூடாது, எதார்த்தத்திலிருந்து விலகி நிற்கும் தமிழினவாதிகளோ ஈழம் என்கிற ஒன்றை தாம் விரும்புவதால் தமது விருப்பங்களுக்காக எதார்த்ததில் நிலவக்கூடிய ஒரு சமூக அமைப்பை அப்படியே தூக்கி ஓரமா வைத்துவிட்டு தமது மனதுக்கு இசைவான ஒரு சமூக அமைப்பை உருவாக்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

        இது அறிவியல்பூர்வமற்ற வழிமுறை, இந்த தவறான வழிமுறையிலிருந்து தான் சத்தியமானதை கடினமானது என்று ஒதுக்கித்தள்ளிவிட்டு சுலபமானது என்று தாம் கருதுகின்ற சந்தர்ப்பவாதத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள், அதிலிருந்து தான் இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் லாபியிங் வேலை செய்து ஈழம் பெற்றுவிடலாம் என்கிற முயற்சிகள் நடந்தன, அதிலிருந்து தான் இந்தியாவையும் அமெரிக்காவையும் நம்பினார்கள் நம்புகிறார்கள், அதிலிருந்து தான் செத்த பாம்பான கருணாநிதியை திரும்ப திரும்ப திட்டுகிறார்கள், ஜெயலலிதாவிடம் அ.தி.மு.க அடிமைகளைவிடக் கேவலமாக நடந்துகொள்கிறார்கள். தமிழினவாதிகள் தமது லட்சியத்தை குறுக்கு வழிகளில் அடைந்துவிட முயற்சிக்கிறார்கள், அந்த முயற்சியில் அவர்கள் எத்தனை ஆண்டுகளானாலும் வெற்றி பெற முடியாது.

      • ////சீனா கம்யுனிச நாடு அல்ல என்றார், வெனிசுலா கூபா பற்றி குறிப்பிடும் போது அமெரிக்க மனித உரிமை என்ற துருப்பு சீட்டின் மூலமாக மற்ற நாட்டிற்குள் செல்லுவதால் அவை எதிர்ப்பதாக குறிப்பிட்டார் … நீங்களும் கேட்டு பாருங்கள்…////

        இல்லை அவர் சீனாவை மட்டும் சொல்லவில்லை வெனிசுவேலா, கியூபாவையும் சேர்த்து தான் சொல்கிறார். ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்தும் மனித உரிமை என்கிற துருப்புச்சீட்டு என்பது அதில் ஒரு அம்சம் தான், வேறு பலவும் கூறியுள்ளார். அவர்களுடைய இனவெறி ஆதரவு நவடிக்கைகளை கண்டித்து விமர்சித்திருக்கிறோம் என்று தெளிவாக கூறுகிறார், மீண்டும் ஒரு முறை கேளுங்கள்.

  13. மிகவும் சிக்கலான விடயமாக இருக்கிறது. சிங்கள அரசையே போர் குற்ற விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கச் சொல்வது என்பது எந்தளவிற்கு கேலிக்கூத்தான ஒன்றோ அதுபோன்ற ஒன்றுதான் போரை வழிநடத்திய இந்தியாவையே தீர்மானம் கொண்டுவரச் சொல்வதும். போர்குற்றத்திற்காக இலங்கையை தண்டிக்கவேண்டும் என்று கூறிக்கொண்டே இலங்கையினூடான வர்த்தகத்தை ஐரோப்பிய நாடுகள் அதிகப்படுத்தியிருக்கின்றன. அமெ,சீனா,ரஷ்யா,பாக்,ஜெர்,பிரா.,சவூ, போன்ற எந்த நாடுகளுக்கும் அந்த அருகதையும் இல்லை, அவை நியாயமான விசாரணையை செய்யவும் மாட்டா, என்பது சதாம் மீதான விசாரணையின் போதே வெட்ட வெளிச்சம். தீர்மானத்தை வெனிசுலா, கியூபா போன்ற நாடுகள் கொண்டு வரவேண்டும் அல்லது ஈழத்தமிழர்களே ஒரு தீர்மானம் கொண்டு வர வழி செய்யவேண்டும் அல்லது ஏழுமலையானாவது தண்டிக்கவேண்டும். பலவாறாக யோசித்தும் எதுவும் தற்போதைக்கு எதுவும் நடைபெறும் என்று தோன்றவில்லை. இறுதியில் மருதையன் முடிவும் சரியானதாகத் தோன்றுகிறது. ஆனால் அது காலம் பிடிக்கும் செயல். இருந்தாலும் நிரந்தரத் தீர்வை அளிப்பது. தற்போதைக்கு என்ன செய்யலாம் என்றால் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது அது தற்கொலைத் தாக்குதல்.

    • // தற்போதைக்கு என்ன செய்யலாம் என்றால் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது அது தற்கொலைத் தாக்குதல். //

      அதையே சாக்காக வைத்துக் கொண்டு மிச்சமிருக்கும் ஆதரவற்ற தமிழர்களையும் கேள்வி கேட்பாரின்றி அழித்துவிடுவார்கள் சிங்கள பேரினவாதிகள்..

      கனடா, ஜெர்மனி, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்க நாடுகள் ஒன்றுபட்டு சர்வதேச விசாரணை வேண்டி முயன்றால் ஏதேனும் பயன் கிட்டும்.. ஒன்றும் நடக்கவில்லை என்றால் அடுத்த தலைமுறை மீண்டும் ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை துவக்குவதை தவிர்க்கமுடியாது..

    • தற்கொலைத் தாக்குதல்கள் உடனடித்தீர்வளிக்குமா ? அதை புலிகளும் செய்தார்களே.

  14. //மாணவர் கோரிக்கைகளை குறை சொல்லும் அவசியம் புரியவில்லை…//

    தமிழ் ஈழத்துக்காக ஏதாவது போராட்டம் நடந்தால் அதை விவாதிப்பவர்கள் முதலில் புலிகளையும் தமிழ் தேசியவாதிகளையும் திட்டுவது என்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    அது மட்டுமின்றி அதை ஒரு இயக்கம் நடத்தினால் மற்ற இயக்கங்களுக்கு அப்போராட்டம் நம் தலைமையின் கீழ் நடைபெறவில்லையே என்ற பொறாமை வந்து விடுகிறது. அதனாலேயே அவர்களும் பதிலுக்கு வேறு கோரிக்கைகளை வைத்து போராட்டம் தொடங்கி எதிர் இயக்கங்களின் கோரிக்கைளை குறை சொல்வதும், பழைய வரலாற்று தவறுகளை கண்டுபிடிப்பதும், அந்த தவறுகளை நாங்கள் தான் கண்டுபிடித்து மக்களுக்கு சொன்னோம் என்று சொல்லிகொள்வதும், எங்கள் இயக்கம் மட்டும் தான் நேரான தொலைநோக்கு பார்வையில் போராடுகிறது என்று பீற்றிக் கொள்வதிலும் தான் முனைப்போடு செயல்படுகிறதே தவிர போராடுகிற மற்ற இயக்கங்களுடன் ஒன்று பட்டு கலந்து பேசி ஒருமித்த தெளிவான கோரிக்கையை வைத்து போராட்டத்தை முன்னெடுத்து செல்லாததே எந்த ஒரு அரசியல் பிரச்சனை தீராததற்கு முக்கிய காரணம்.

    தமிழ் ஈழ ஆயுத போராட்டத்திலும் இதே நிலைமை தான் ஏற்பட்டது. ஆனால் அதிலிருந்து பாடம் கற்காமல் மீண்டும் மீண்டும் தமிழகத்திலுள்ள இயக்கங்களிடையே முரண்பாடுகளும் பகைமையும் தான் நிலவுகிறது.இதனாலேயே டில்லி பயல்கள் தமிழகத்தில் ஏதாவது போராட்டம் நடந்தால் அதை ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாக பாக்குறாங்க. அது மட்டும் இன்றி இன அழிப்பு குற்றவாளிகளும் எளிதில் தப்பி விடுகின்றனர்

    இதே தவறை இந்த மாணவர்கள் போராட்டத்திலும் நிகழ்த்தி விடக்கூடாது.

    • இன்று தமிழகத்தில் நடைபெறுகின்ற பெரும்பான்மையான மாணவர் போராட்டங்களில் ( பு.மா.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தவிர ) முதல் கோரிக்கை ” ராஜபக்சேவிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் ” என்பதுதான். அனைத்து செய்தித்தாள்களிலும் இதுதான் வெளியாகியிருக்கிறது. இது ஈழத்தமிழ் மக்களின் போராட்ங்களுக்கு எந்த வகையில் வலு சேர்க்கும்? முதலில் இது சரியான கோரிக்கையா? என்பதைப் பற்றி மாணவர்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏனென்றால் இந்த மாணவர் போராட்டங்கள் எல்லாம் சரியான அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்படும் போராட்டங்கள் இல்லை. வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு ஏற்கனவே முப்பது ஆண்டுகளாக தமிழகத்தில் தமிழினவாதிகள் ஈழத்தைப்பற்றி என்னென்ன பேசி வந்துள்ளார்களோ, அதை வைத்து நடத்தப்படும் போராட்டங்கள்தான். விதிவிலக்காக சென்னையில் சில கல்லூரிகளில் மாணவர்கள் நேற்று அமெரிக்காவின் அறிக்கையை எரித்துள்ளனர்.

      தமிழகத்தில் மாணவர் போராட்டங்களையும், அதன் கோரிக்கைகளையும் கண்ட புலம் பெயர்ந்த, பிரானஸில் வசித்து வரும் ஈழத்தமிழரான ( இயக்கத்தில் பணியாற்றியவர் ) பி.ரயாகரன் தனது இணையதளத்தில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்?

      ஐ.நா தீர்மானமும், தமிழக மாணவ போராட்டமும், மக்களின் கழுத்தை அறுக்கக் கோருகின்றது!
      http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8870:2013-03-16-093427&catid=368:2013

      மாணவர் போராட்டங்கள் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறுபவர்கள். இதைப் படித்துவிட்டு, கருத்து கூறவும்.

  15. ////தமிழ் ஈழத்துக்காக ஏதாவது போராட்டம் நடந்தால் அதை விவாதிப்பவர்கள் முதலில் புலிகளையும் தமிழ் தேசியவாதிகளையும் திட்டுவது என்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்////

    புலிகளை திட்டுகிறார்களா விமர்சிக்கிறார்களா ? திட்டுகிறார்கள் என்றால் எப்படித்திட்டுகின்றனர் என்று கூறுங்கள்.

    /////ஒரு இயக்கம் நடத்தினால் மற்ற இயக்கங்களுக்கு அப்போராட்டம் நம் தலைமையின் கீழ் நடைபெறவில்லையே என்ற பொறாமை வந்து விடுகிறது.////

    எந்த அரசியல் அறிவும் இல்லாமல், எந்த அமைப்பு பலமும் இல்லாமல் வதவதவென்று டஜன் கணக்கில் உலாவும் பெயர்ப்பலகை அமைப்புகளும் நோகாமல் நொங்கு திண்க நினைக்கும் தமிழ்தேசியவாதிகளும் அப்படித்தான் நினைக்கிறார்கள். அதை அவர்கள் புலிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கக்கூடும். ஏனெனில் புலிகளும் அவ்வாறு தானே செயல்பட்டனர், தம்மைத்தவிர வேறு யாரும் ஈழம் என்று பேசக்கூடாது என்று சர்வாதிகாரமாகத் தானே நடந்து கொண்டனர். மே நாளைக்கூட நாங்கள் தான் நடத்துவோம் என்று கம்யூனிஸ்டு இயக்கங்களையே தாக்கிய அவர்களைப் போலவே தான் இவர்களும் இருக்கின்றனர்.

    ////தெளிவான கோரிக்கையை வைத்து போராட்டத்தை முன்னெடுத்து செல்லாததே எந்த ஒரு அரசியல் பிரச்சனை தீராததற்கு முக்கிய காரணம்.////

    தெளிவான பாதைக்கு நாமும் போகக்கூடாது ஈழத்தமிழர்களையும் போகவிடக்கூடாது என்பதில் தமிழகத்திலுள்ள தமிழினிவாதிகள் தெளிவாக இருக்கிறார்கள். அப்படி இருப்பது தவறு என்று கூறினால் ம.க.இ.க வை துரோகிகள் என்றார்கள்.

    ////தமிழ் ஈழ ஆயுத போராட்டத்திலும் இதே நிலைமை தான் ஏற்பட்டது. ஆனால் அதிலிருந்து பாடம் கற்காமல் மீண்டும் மீண்டும் தமிழகத்திலுள்ள இயக்கங்களிடையே முரண்பாடுகளும் பகைமையும் தான் நிலவுகிறது.///

    இது சரியானது இதை ஏற்கிறேன். ஆனால் தமிழ்தேசியவாதிகள் எவ்வளவு சூடுபட்டாலும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை.

    • அறுபது ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று இருக்கிறது, போராட்டம் ஆரம்பமான அன்றும் சரி தற்காலிமாக முடிவுக்கு வந்துள்ள இன்றும் சரி தமிழ்த் தேசியவாதிகள் தற்சமயம் இதுதான் வழி தற்சமயம் இதுதான் வழி என குறுக்குசால்தான் ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். அறுபது ஆண்டுகள் என்று கால அளவை எண்ணிப்பார்க்கையில் இத்துனை ஆண்டுகளை வீணடித்துவிட்டார்களே என வருத்தமாக இருக்கிறது. அறுபது ஆண்டுகளில் மருதையனின் வழிமுறையை பின்பற்றியிருந்தால் இந்நேரம் தனி ஈழமோ அல்லது மக்களின் விடுதலையோ சாத்தியப்பட்டிருக்கும்

  16. இந்த உரையாடல் மாணவர்களின் போராட்டத்தை சரியான திசையில் வழிநடத்த சரியான சாத்தியமான முறையை கொடுத்துள்ளது.நன்றி தோழர் மருதையன்.

  17. அருமை.சரியான தருணத்தில் தெளிவான பார்வையோடு இந்த நேர்காணல் வந்திருக்கிறது.நன்றியும் வாழ்த்துக்களும்.

  18. வார்க போராட்டத்தை இன, மோழி போராட்டத்துக்கள் உண்டாக்கும் பகைமைகளை குறைக்கும் வழியில் கொண்டு போகணுமா? அல்லது, எப்படி வேணா CPMமாதிரி கொண்டு போலாமா?
    முதல் நிலையாக இலங்கையில் ஒரு தனி தமிழ் மாநிலம், தெலுங்காணாபோல் கேக்லாமா? தருவார்களா? இந்தியா இலங்கையிடம் மும்மொழி கொள்கையை கேட்டுள்ளது …

  19. தோழர் மருதையன் அவர்களின் இந்த நேர்காணல் அவசியம் அனைவரும் கேட்கவேண்டிய ஒன்று. அருமை!

    ஈழத்திற்கு சுயநிர்ணய உரிமை / விடுதலை பற்றி எல்லாம் பேசும் நாம் தமிழகத்திற்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை போற்றும் வகையில், இனி தோழர் மருதையன் அவர்களை தமிழ் மாநில செயலாளர் என்று அழைக்காமல், தமிழ்நாடு செயலாளர் என்றோ தமிழக செயலாளர் என்றோ தமிழ் தேசிய செயலாளர் என்றோ குறிப்பிடலாமே.

    மூப்பனார்கள் வேண்டுமானால் தமிழ் “மாநில” செயலாளர்களாய் இருக்கட்டும்.

    • ஏற்கெனவே தமிழ்நாடு என்று தானே அழைக்கப்படுகிறது ?

      • @அம்பேத் சித்தார்த் “ஏற்கெனவே தமிழ்நாடு என்று தானே அழைக்கப்படுகிறது?”

        இதை படியுங்கள். தோழர் மருதையனை “மாநில பொதுச்செயலாளர்” என்று குறிப்பிடுவதை சுட்டிக்காட்டினேன். தேசிய இன விடுதலை குறித்து பேசுபவர்கள், தமிழகத்தை மாநிலமாக கொச்சைப்படுத்துவது ஏன்?

        [[[இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே ஆடியோவாக வெளியிடுகின்றோம்.]]]

        • தமிழ் மக்கள் தனி தேசமாக பிரிந்து செல்வதற்கான சுய நிர்ணய உரிமை தமிழ் தேசிய இனத்திற்கு இருக்குமாயின் நாம் தனியாக பிரிந்து போகலாம், ஆனால் எதார்த்ததில் நாம் இப்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒரு மாநிலமாக தான் இருக்கிறோம். இந்திய தேசியம் பல்வேறு தேசிய இனங்களையும் ஒடுக்கி இந்தியா என்கிற கட்டமைவிற்குள் கட்டாயமாக இருத்தி வைத்திருக்கிறது, இந்த சிறைக்கூடத்தை தகர்த்தெறியாமல் ஒரு தேசிய இனம் தனியாக பிரிந்து செல்ல முடியாது தேசிய இனங்கலின் சுய நிர்ணய உரிமையை ஒரு புரட்சியின் மூலம் தான் சாதிக்க முடியும் தமிழரசன்.

  20. இலஙகைத்தமிழர்கள் மட்டுமல்ல், இந்திய தமிழர்களின் நிலையும், பார்ப்பன வஞசக அரசியலில் மாட்டிக்கொண்டு அழிகின்ற்னர்! பிரபாகரன் இறுதியில் பல்லாயிரம் அப்பாவித்தமிழருடன் அழிந்ததுக்கு காரணம் தமிழ்னாட்டு பார்ப்பன சக்திகள் தான்! கருணானிதியிடமிருந்து பிரித்து, வள்ர்த்து பிறகு அழித்தார்கள்! ராஜிவ் படுகொலையினால் பலனடைந்தது ஈழமோ, கருணானிதியோ அல்லவே ! மாறாக பழி அல்லவா சுமந்தார்கள்! பார்ப்பனர்களின் இந்திய ஏகாதிபத்திய அரசியல் புரிந்தவர்கள் தமிழின துரொகிகளை அடயாளம் கண்டு கொள்வர்! கருணானிதியை உயரத்தில் தூக்கிபிடித்த இந்து ராம்கள், சன் டி வி , சமயம் பார்த்து , தஙகள் முகத்திரையை அகற்றிகொண்டனர்!நல்ல்நாடகம் அரஙகேறியுள்ளது!

  21. இலங்கை விவகாரம் குறித்து இத்தனைத் தெளிவாக இவ்வளவு எளிமையாக இவ்வளவு ஆழமான ஒரு விளக்கத்தை இதுவரைப் படித்ததுமில்லை.கேட்டதுமில்லை. தோழர் மருதையன் அவர்கள் மிக அருமையானதொரு படப்பிடிப்பைத் தந்திருக்கிறார். இலங்கைப் பிரச்சினையின் ஆரம்பத்திலிருந்து ஜெனிவா வாக்கெடுப்புவரை அவர் தந்த லைவ் ரிலே கச்சிதம். அருமை. ஆனால் தீர்வுதான் கொக்கு தலையில் வெண்ணெய் சமாச்சாரமாய் இருக்கிறது.

    சரியான தீர்வுக்கு நாமெல்லாரும் மறுபடியும் உட்கார்ந்து யோசிக்கணும் போல.

    தோழர் மருதையன் “போர்க்குற்றவாளியே இந்தியாதான். அவர்களிடமே தீர்வைக் கேட்பதா?” என்ற கேள்வியை மறுபடி மறுபடி எழுப்புகிறார். ‘லாஜிக்கலாக’ சரியான கேள்வியாக இருக்கலாம். நான் இதனை எப்படி எளிமையாகப் புரிந்துகொள்கிறேன் என்றால் பணிபுரியும் தொழிற்சாலையில் பணியாளருக்கு எதிரான சில முடிவுகள் எடுக்கப்படும்பொழுது அந்தத் தொழிற்சாலைக்குள்ளேயே இருந்துகொண்டு நீதி கேட்டு தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக போராடுவதில்லையா? அப்படித்தானே போராடியாக வேண்டியிருக்கிறது என்பாதகத்தான் புரிந்துகொள்கிறேன்.

    • இங்கு தொழிற்சாலை என்பது இலங்கை முதலாளி என்பவன் ராஜபக்சே தொழிலாளர்கள் என்பது சிங்கள மற்றும் தமிழ் மக்கள் என்றால் ஒரு தொழிற்சாலையில் பாதிக்கப்படும் ஒப்பந்தத் தொழிலாளிகள் நிரந்தரத் தொழிலளிகளின் உதவியை நாடுவதில்லையா அதுபோன்றுதான் சிங்களா, தமிழ் மக்களின் ஒற்றுமை மூலம்தான் இனவெறியன் பக்சேவை வீழ்த்தமுடியும். தீர்வை பற்றி நான் இப்படித்தான் புரிந்துகொண்டேன்

  22. // நான் இதனை எப்படி எளிமையாகப் புரிந்துகொள்கிறேன் என்றால் பணிபுரியும் தொழிற்சாலையில் பணியாளருக்கு எதிரான சில முடிவுகள் எடுக்கப்படும்பொழுது அந்தத் தொழிற்சாலைக்குள்ளேயே இருந்துகொண்டு நீதி கேட்டு தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக போராடுவதில்லையா? அப்படித்தானே போராடியாக வேண்டியிருக்கிறது என்பாதகத்தான் புரிந்துகொள்கிறேன்.//

    நீங்கள், ஈழத்திற்கான தீர்வு இந்தியாவின் கையில் இருப்பதாக நினைத்துக் கொள்வதால் வரும் தவறான கருத்து இது. ஈழத்திற்கான தீர்வு ஈழத்திலேயே தான் உள்ளது. அங்குள்ள பல்வேறு வேறுபட்ட மக்களை சிங்களப் பேரினவாத, பாசிச அரசுக்கு எதிராக அணி திரட்டி போராடுவதன் மூலம் தான் ஈழத்தமிழ் மக்கள் மட்டுமல்ல, அங்குள்ள பல்வேறுபட்ட மக்களும் நிம்மதியாக வாழமுடியும்.

    இந்தியாவின் ஆளும் வர்க்கம் தனி ஈழத்தை என்றுமே விரும்பாது. அதுமட்டுமல்ல, இந்தியா தனி ஈழத்தை ஆதரித்தால் காஷ்மீர், வட கிழக்கு மாநில மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தையும் ஆதரிக்க வேண்டும். ஆகவே, இந்தியா ஈழ மக்களுக்கு ஆதரவாக, இலங்கை அரசுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டைக் கண்டிப்பாக எடுக்காது என்பதுதான் யதார்த்தம்.

    ஈழப்போரைப் பொறுத்தவரை, நாம் அங்கு இந்தியாவின் தலையீடு இருக்கக் கூடாது. இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்பதை வேண்டுமானால் இந்தியாவிடம் வலியுறுத்தலாம். ஆனால் இலங்கை இனப்படுகொலைக்கு நீதி கேட்டோ, ராஜபக்சேவைத் தண்டிக்கவோ இந்தியாவை வலியுறுத்துவது கேலிக் கூத்து. ராஜபக்சே பலமுறை வெளிப்படையாகக் கூறியிருக்கிறான். ” இந்தியாவின் போரை நான் நடத்துகிறேன் ” என்று. அப்படியிருக்கும் போது இந்தியா ராஜபக்சேவை மிரட்டினால் ராஜபக்சே இந்தியாதான் எங்களுக்கு எல்லா உதவியும் அளித்து போரை வழிநடத்திச் சென்றது என்ற உண்மையக் கூறிவிடுவான் என்பது இந்தியாவிற்கு மிக நன்றாகவே தெரியும். ஆகவே தான் மருதையன் தெளிவாக இந்தியாவிடம் கேட்பது கோமாளித்தனம் என்று கூறுகிறார்.

  23. // அப்படியிருக்கும் போது இந்தியா ராஜபக்சேவை மிரட்டினால் ராஜபக்சே இந்தியாதான் எங்களுக்கு எல்லா உதவியும் அளித்து போரை வழிநடத்திச் சென்றது என்ற உண்மையக் கூறிவிடுவான் என்பது இந்தியாவிற்கு மிக நன்றாகவே தெரியும். //

    அப்படியிருக்கும் போது இந்தியா ராஜபக்சேவை மிரட்டினால் ராஜபக்சே இந்தியாதான் எங்களுக்கு எல்லா உதவியும் அளித்து போரை வழிநடத்திச் சென்றது என்ற உண்மையை ஆதாரங்களோடு வெளியிட்டு இந்தியாவிற்கெதிராகத் திரும்பி விடுவான். இதனால் பாதிக்கப்படுவது இந்தியத் தரகு முதலாளிகளின் நலன்கள் தான். அப்படி இந்தியத் தரகு முதலாளிகளின் நலன்கள் பாதிப்பதை இந்தியா ஒரு போதும் விரும்பாது.

  24. முட்டாள் தமிழனுக்கு ஏற்ற தலைவர்கள் தாம் நமக்கு கிடைத்தார்கள்! ஆடுகள் கசாப்பு கடைக்காரனை நம்பித்தான் சென்றன! இந்திய ஏகாதிபத்தியம் நமது உணர்வுகளை பயன்படுத்தி கொண்டது போலவே, புலிகளையும் பயன்படுத்திக்கொண்டது! இன்னமும் மக்கள் ஏகாதிபத்தியஙகளின் சூழ்ச்சிகளை உணராததுதான் வேதனை!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க