Wednesday, December 11, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி துவக்கம் !

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி துவக்கம் !

-

 ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி, தமிழ்நாடு.

கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில்  இலங்கையின்  சிங்கள இனவெறி  இராணுவம் நடத்திய ஈழத் தமிழின அழிப்புப் படுகொலைகள் மிகக்கொடூரமாகவும் வக்கிரமாகவும், மனித் தன்மைகள் சிறிதுமற்றதாகவும் நடத்தப்பட்டது. இவை  போர்க்குற்றங்கள்தான் என்பதை நிரூபிக்கும் விதமாக ஏராளமான ஆவணங்கள் வெளிவந்து கொண்டே உள்ளன.  இத்தகைய  இனப்படுகொலையை நடத்திய  இராஜபக்சே கும்பலை நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வேண்டும்  என   தமிழகமெங்கும்  மாணவர்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றோம்.
தொடரும் மாணவர்களின் போராட்டத்தை முடக்கும் விதமாக தமிழகம் முழுவதுமுள்ள கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்திருக்கிறது, தமிழக அரசு. மாணவர்களின் போராட்டத்தை முடக்க நினைக்கும் இந்த சதியை முறியடித்து, ஈழத்தமிழின மக்களுக்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டத்தை தொடருவோம். தமிழகத்தில் மாணவர்கள் எழுச்சியை வீதிகள் தோறும் தோற்றுவிப்போம்.

கணேசன்
ஈழத்தமிரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன்

ஈழத் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு
ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும்,
பங்காளி ஐ.நா.வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்குக்
குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!

ஈழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக
பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்!
தமிழகத்தின் வீதிகளில் 80களின்
மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்வோம்!

என்ற பொதுக்கோரிக்கையினை முன்வைத்து தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரி  மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டங்களை தொடருவதற்கேற்ற வகையில், ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கி இருக்கிறோம்.

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளராக கணேசன் என்பவர் செயல்படுவார் என்பதையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
                                                                                          
இவண்

கணேசன்,ஒருங்கிணைப்பாளர் – 9566149374.

 ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி, தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க