Friday, December 3, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க "மாணவர்களுக்கு அரசியல் கூடாது" - தினமணியின் நரிக் கவலை!

“மாணவர்களுக்கு அரசியல் கூடாது” – தினமணியின் நரிக் கவலை!

-

ழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு மக்களிடம் எழுந்த எதிர்ப்பு அனுதாப அலையாக இருந்த வரை அதில் “காகிதக் கப்பல்’ விட்டு தானும் காலம் தள்ளிய தினமணி மாணவர்களிடம் போராட்ட அலையாகப் புறப்பட்டு இருக்கும் தருணத்தில் வழக்கம் போல தர்ப்பையைக் கொண்டு வந்து குறுக்கே விடுகிறது. ஜெயலலிதாவின் சீலைப்பேனாகி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கருணாநிதியைப் பழிதீர்க்க பழ.நெடுமாறனை களமாடவிடும் தினமணி, இந்த முறை இரா.சோமசுந்தரம் மூலமாக (திங்கள் கிழமை, 18-3-2013) “நிமிர்ந்த நன்னடையோடு தனது வெறிகொண்ட பார்வையை” நடுப்பக்கத்தில் பற்றவைத்திருக்கிறது. தன்னெழுச்சியான மாணவர்கள் போராட்டத்தை தி.மு.கவும், நல்லகண்ணு போன்றோரும் அரசியல் லாபத்திற்க்காக பயன்படுத்துவதை கண்டிப்பது போல ஆரம்பிக்கும் கட்டுரை கடைசியில் போராட்டத்தின் தீவிரத்தால் கல்லூரி மூடல் – தேர்வு பாதிப்பு – பெற்றோர்கள் மனது என்ன நிலையில் இருக்கும் – ஈழப்போராட்டத்திற்கே எதிராகப் போகும் என்று எங்கப்பன் ஜெயலலிதா வீட்ல இல்ல என தன் அரசியல் பிழைப்புவாதத்தால் தானும் அம்பலப்பட்டிருக்கிறது  சோமா அண்ட் தினமணி கம்பெனி.

dinamaniதான்தான் சோத்துக்கு தெண்டமாய், பூமிக்கு பாரமாய் தினமணி நடுப்பக்கத்தில் வைத்தி மாமாவோடு வரவு செலவு பண்ணுமளவுக்கு படித்துபாழாய் போய்விட்டோமே என்பதை உணர வேண்டிய வயதில், தன்னலம் மறுத்து சமூக உணர்வோடு போராடும் மாணவர்களைப் பார்த்து போராட்ட உணர்வுக்கு லீவு விட்டுவிட்டு இவரைப் போல தன் வயிற்றை மட்டும் பார்த்துக் கொண்டு “உணர்வு பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும்” மாணவர்கள் போராட வேண்டுமாம்! அநீதிகளுக்கெதிராக தமக்குத் தெரிந்தவரை முன்னின்று போராடும் மாணவர்களை ஒடுக்கி போராட்ட அரங்கை விட்டே வெளியேற்ற கல்லூரியை இழுத்து மூடும் ஜெயா அரசின் அரசியல் எந்த இடத்திலும் சோமாவுக்கு இடறவில்லை. இதில் ஆச்சரியமும் இல்லை. அன்றைய இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்ற அர்ச்சனை அவாளிடமிருந்தும் ஆளும் வர்க்கத்திடமிருந்தும் பின் தொடர்ந்து வருவது திட்டமிட்ட நோக்கில் தான். பிழைப்புவாத அரசியலுக்கு மாணவர்கள் பலியாகிவிடக்கூடாது என்பது போல தோற்றமளித்து கருத்து சொல்லும் இவர்களின் உள்நோக்கமே மாணவர்களுக்கு உண்மையிலேயே அரசியல் அறிவு வந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை தான்.

கட்சிகளற்ற காரியவாத அரசியலுக்கு மாணவர்களை மடைமாற்றவும், ஆளும் வர்க்க அரசியலுக்கு எதிராக குவியும் மாணவர்களின் கோபத்தை குறிமாற்றவும் “தம்பி நமக்கு அரசியல் வேண்டாம்: ஆனா புத்திசாலித்தனமா போராடுங்க” என்று நைச்சியங்கள் மாணவர்களை சுற்றி வளைப்பது புதிதல்ல. போராட்டமே வேண்டாம் என்றால் இன்றைய இளைஞர்கள் சோமசுந்தரத்தின் முகத்தில் காறி துப்பி விடுவார்கள். அதனால் தான் தினமணியும் சோமசுந்தரங்களும் அரசியல் தான் போராட்டத்தை தீர்மானிக்கிறது என்ற விவரம் தெரிந்திருந்தும் மாணவர்களிடம் போய் அரசியல் வேறு போராட்டம் வேறு என்பது போல புத்திசொல்லி மயங்க வைக்கப் பார்க்கிறார்கள். போராட்டம் சமூகத்தை மட்டும் அல்ல மாணவர்களையும் அரசியல் மறுவார்ப்பு செய்யும் தேவைக்கு உட்படுத்தும் என்பது தெரிந்ததனால் பதறிப்போகும் இந்த ஆளும் வர்க்க அடிப்பொடிகள் கேவலத்தின் சுவை குன்றாமல் போராடாத மாணவப் பிரிவுகளை உச்சி மோர்ந்து உதாரணம் காட்டுகிறார்கள். “ஏன்? பொறியியல் கல்லூரி – மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தன்னிச்சையாக போராடவில்லை?” என்று போராடுபவர்களிடம் வந்து, போராடாதவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை புத்திசாலி போல கேட்டு அசத்துகிறார். சுருங்கச் சொன்னால் சமூக நலனின் பேருணர்ச்சியை சுயநலத்தின் சவக்கலையில் சரிக்கப் பார்க்கிறார்கள். எதார்த்தத்திலோ, தினமணி சோமசுந்தரங்களின் ஞானசூன்யங்கள் உடைபட, பாளையங்கோட்டை தொடங்கி சித்த மருத்துவ மாணவர்களும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்களத்தில் முழங்குகிறார்கள்.

உளுத்துப் போன ஓட்டுக்கட்சிகளின் பிழைப்புவாதத்தை அடையாளம் காட்டி, போகிற போக்கில் எந்த அரசியலுமே வேண்டாம் என்று மாணவர்களை சமூக நீக்கம் செய்யவிரும்பும் ஆளும் வர்க்க அறிவு பிழைப்புவாதிகள் தான் மிகவும் அபாயகரமானவர்கள் என்பதற்கு தினமணி சோமசுந்தரம் இலக்கண சுத்தமாக இருக்கிறார். அமைப்புகள், கட்சிகளிடமிருந்து மாணவர்கள் விலகி இருக்க வேண்டும் என்று புத்தி சொல்வது போல புறப்படும் இந்தக் கயவரின் கடைசிப் புகலிடம் பொய்யின் அரசியல் என்பதை புலப்படுத்துவதாக உள்ளது அவரது கண்டுபிடிப்பு, அதாவது “இலங்கை இராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்கிய சம்பவங்களே இல்லை” எனும் அளவுக்கு துணிந்து எழுதி இராஜபக்சேவையே “நடுங்க” வைத்துவிட்டார் சோமசுந்தரம்! சில தமிழின அமைப்புகள் சிங்களப் பயணிகளைத் தாக்குவதையும், ஓட்டுக்கட்சி அரசியல் பிழைப்புவாதிகளிடம் மாணவர்கள் சிக்குவதையும் திருத்தி ஏதோ போராட்டத்திற்கு நல்வழி காட்ட வந்ததாய் எழுதிச் செல்லும் இந்தப் பிழைப்புவாதியின் யோக்கியதை மாணவர்கள் அரசியல் தலைமை ஏற்க வந்தவுடனேயே போராடுபவர்களை போராட்டக் குற்றவாளி எனப் பிரகடனப்படுத்தவும் துணிந்துவிட்டது. ஈழப்பிரச்சினையில் மாணவர் – இளைஞர்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும் என்பது போராட்டக்களத்திலேயே அவர்களோடு இணைந்திருக்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்ச்சியான விவாதப் பொருளாகும். ஆனால் அதை தினமணியும் சோமசுந்தரங்ளும் சொல்வதற்கு அருகதையும், அறிவும் கிடையாது என்பதற்கு அவர்களுடைய நயவஞ்சகக் கட்டுரையேச் சான்று! சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவும் இல்லை என்று ஒரு சந்தர்ப்பத்தில் காரல் மார்க்ஸ் கூறியிருந்தார். தினமணி சோமசுந்தரத்தின் தர்க்கத்தைப் பார்க்கையில் அது இன்னும் பயங்கரமாக இருக்கிறது.

– துரை.சண்முகம்

 1. அ.தி.மு.க வின் மாணவர் அமைப்பை கலைத்துவிட ஜெயாவுக்கு வைத்திமாமா ஆலொசனை தருவாரா?

 2. பசங்களுக்கு வேலை கிடையாது…வினவு மாதிரி ஆளுக்கு இவனுங்க இது மாதிரி ஏதாவது செய்தாத் தான் பொழப்பு…. காலேஜ் படிக்கும் போது பீச்சி கொண்டு அடிக்கும் இனப்பாசம்… ஒரு கம்பேனியில சேந்த பின்னாடி ஏன் வர மாட்டேங்குது???? ஏன்னா இப்ப இவனுங்களால அவன் குடும்பத்துக்கோ, அவன் கல்லூரிக்கோ, ஏன் அவனுக்கே கூட, தம்பிடிக்கு பிரையோசனம் கிடையாது. பிரைவேட் கம்பேனியில வேலை செய்ர ஒரு பயலையாவது போராட சொல்லு? ஒரு லட்சம் குடுத்தாக்கூட போராட மாட்டான், ஏன்னா அப்ப அவனுக்கு ஒரு பொறுப்பும் இருக்கும், அறிவும் இருக்கும்……//

 3. இன்றைய ஜனநாயக நெருக்கடிக்கு காரணம் மாணவர்களுக்கு அரசியல் அறிவு இல்லாமையே !

  அவர்களின் மூளைகள் “உங்களில் யார் பிரபு தேவா ” , “விஜய் Vs தலை ” போன்ற காரியங்களுக்கு மட்டுமே உபயோக பட்டு வந்துள்ளன. இளைய தலைமுறை மாறி , சொம்பு தூகுபவர்களுக்கு வாக்கு அளிக்காமல் , சமூக சிந்தனை உள்ளவர்களுக்கு வாக்கு அளித்தாலே ஜனநாயகத்தில் நிறைய சாதிக்கலாம் .

  இலங்கை தமிழர் பிரச்சினை என்று இன்றைக்கு போராடுபவர்கள் , நாளை மது கொடுமை , விவசாயிகள் தற்கொலை , ஊழல் போன்றவைகளின் மீதும் தங்கள் பார்வையை செலுத்துவார்கள் . அவர்கள் சமூக பார்வை மாறும்.

  இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்

 4. தினமணியில் வந்த கட்டுரை மிகவும் அருமை! மாணவர்கள் என்றால் படிக்க பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் என்று பொருள்! தீவிரவாதியாக கல்லுரி செல்லவில்லை! படிப்பில்தான் கவனம் செலுத்தவேண்டும். படிப்பெல்லாம் நல்லபடியாக முடிந்ததும் “லட்டர் பேடு” கட்சி ஏதேனும் ஆரம்பித்து வினவு போல் புரட்சி செய்யலாம்!! உங்களை கல்லூரிக்கு அனுப்பிய பெற்றோர்களை நினைத்துப்பாருங்கள். உங்களின் அறியாமையை வினவு போன்ற சில அமைப்புக்கள் தவறாக பயன்படுத்திக்கொள்கின்றன. இதனை உதாசினப்படுத்தி, படியுங்கள்! அரசியல்வாதிகளை நம்பி ஏமாறாதீர்கள்! உங்களை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்!! நாட்டை கொள்ளையடிக்கிரார்கள்! நீங்கள் மற்றும் உங்கள் குடும்பங்களையும் சேர்த்துத்தான்!!!

  • உலகெங்கும் மாணவர்கள் தான் நாட்டின் ஆட்சிமாற்றத்தை நிர்ணயம் செய்கிறார்கள்..இங்கு தர்பைகளே நிர்ணயம் செய்கிறார்கள்… நம்ம வைத்திமாமா போன்றவர்கள்.. தூ..வெட்கம் கெட்டவர்கள்..

  • nanga summa than irunthom? college pona piraku than therinchathu,, tamizh na enna?, TAMIZH mozhi na enna? tamizh unarvuna ennanu…….? ungala mathiri suyanala pokku konda `tamizhan` na yaru….nu?

    • நீங்க போயி உருப்படியா தமிழ எழுத படிக்க கத்துகிட்டு வாங்க அப்புறம் இங்கன பேசலாம்

     • இந்த அறிகுமாரை முன்பு ஒருத்தர் தமிழ்ல எழுத சொல்லி link எல்லாம் குடுத்தார். ஒரு எழவும் புரியல போலருக்கு .ஒன்னியும் பிரயோஜனமில்லை.தப்பு தப்பா டைப் அடிச்சு அப்புறம் அவுங்களே நீ எங்கிலிசுலயெ எழுதுப்பான்னு சொல்லிட்டாங்க.இதுல பெரிய பத்து கொறடு மாதரி கருத்து சொல்ல வந்துடுது.

    • அவர்தான் தெளிவா சொல்றாரே…
     சூப்ரமனியன் சாமி,ஈந்து ராம், தினமலம், தினமனி வைத்தி..(இந்த ஆள பாத்துதான் வைத்தினு “தில்லானா மோகனாம்பாள்” நாகேசுக்கு பேர் வச்சிருப்பாங்களோ) கூட சேர்ந்த ஆள்தான் இந்த கரிகுமார்னு…

  • mr natrayan, we dont need your advice, what is the the use of solving the problems in the subjects we study, without knowing whats happening in and around us in the society.. you people can be of that type but we like to change …. you please sell you items somewhere…

 5. இந்தியன் அவர்களே உங்களுக்காக, பொட்டித் தட்டுபவர்களும் இன்று (கணினி வல்லுனர்கள் கூட்டமைப்பு) இன்று போராடி இருக்கின்றனர். ஆகவே குடுமியை இறுக்கி கட்டுக் கொண்டு அடங்குகள் !!

 6. Vivavu is Pro-DMK. Jaya gave leave for colleges. If students are boycotting and protesting than whats the need of college to be open?. So Jaya is the only one allowed students to protest in full swing. She has given full democratic freedom to students to protest. Not like DMK. When DMK was in regime 2009, MK issued statement through state Home secratery, not to protest. DMK did violence against TV Channels like Makkal Tv, Jaya TV not to telecast the SL war videos.Vinavu, pls be careful. We are not in 1800. We are in 2013.

  • Siva, the point is there is no difference between jaya and karunanithi in sabotaging students’ protests. What Karunanithi did during his time has been adopted by Jaya now. But mindless people who found fault with Karunanithi’s action earlier are praising Jaya. This is ridiculous. So your questions should be directed towards those senseless people who are praising Jaya for no reason.

 7. சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களையும் போராட்டத்தில் சேர அழைப்பு விடுக்கலாமே! யாரேனும் வந்து போராட்டத்தை இவர்களுக்கு விளக்கினால் நிச்சயம் போராட்டத்தில் சேர்வார்கள்.

 8. விளாயாடுற வயசுல
  எதுக்குப்பா உங்களுக்கெல்லாம் அரசியல்
  பள்ளிக்கு போனமா படிச்சமான்னு இருக்கனும்
  எதுக்குப்பா உங்களுக்கெல்லாம் அரசியல்
  வேலைக்கு போனமா பொண்டாட்டி புள்ளைய காப்பாத்தனமான்னு இருக்கனும்
  எதுக்குப்பா உங்களுக்கெல்லாம் அரசியல்
  சாவுற வயசாச்சுல்ல
  மூலையில உக்காந்து பகவான தியானிச்சுட்டு இருக்காம
  எதுக்குப்பா உங்களுக்கெல்லாம் அரசியல்
  அப்ப எப்பத்தாங்கடா அரசியலுக்கு வர்றது.
  அப்புறம் ஏண்டா
  படிச்சவன் அரசியலுக்கு வந்தாத்தான் ஆட்சி உருப்படும்னு சொல்றீங்க.

 9. ஆத்துக்குள்ளேயே இருங்கோ, நமக்கெதுக்கு வம்பு?, நீ ரோட்ல இறங்கரதுனால அவா என்ன திருந்தவா போறா? இப்படி தான் நாங்க வளர்ந்தோம் அதனால் தான் வைத்தி இப்படி எழுதறார். நீ சிறிலங்காவை சப்போர்ட் செய்கிறாயா இல்லையா என்றால் ஒரு கருத்து ஒழுங்கா வராது, எந்த பொது பிரச்னைக்கும் ஒரு கருதும் கிடையாது! சின்மயிக்கு சப்போர்ட் செய்ய ஓடி வருவோம்! கலைஞரை பற்றி பேசி நேரத்தை பொழுது போக்குவது! எந்த விஷயத்திலும் வீட்டுக்குளேயே உட்கார்ந்துகொண்டும் உழைப்பும் இல்லாமலும் அமெரிக்கா என்று பிழைப்பை பற்றி சிந்திக்கத்தான் எங்களுக்கு தெரியும்.

 10. //Jaya gave leave for colleges. …// This is MGR formulae! They don’t care to address or face Students! All they could do is to turn this movement against Karunanithi! Students Beware!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க