Saturday, October 23, 2021
முகப்பு உலகம் ஈழம் இனப்படுகொலைக்கு துணை போன இந்தியா - புதுச்சேரி புஜதொமு!

இனப்படுகொலைக்கு துணை போன இந்தியா – புதுச்சேரி புஜதொமு!

-

புதுச்சேரியில் பு.ஜ.தொ.மு சார்பாக ”ஈழ மக்களின் படுகொலைக்கு துணைபோன இந்திய அரசைக் கண்டித்து” தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் மற்றும் இருசக்கர வாகன பிரச்சாரம்.

ஈழ மக்களை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த சிங்கள அரசையும், அதற்கு துணைபோன இந்திய அரசையும் கண்டித்து நடைபெறும் எழுச்சி தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மாணவர்களை கிளர்ந்தெழ செய்துள்ளது. மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து பு.ஜ.தொ.மு நடத்திய மன்மோகன்சிங், சோனியாகாந்தி இருவரின் உருவபொம்மை எரிப்பு, சட்டசபை முற்றுகை என உருவெடுத்த இப்போராட்டம், மூன்று புதிய நிலைமைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது.

ஒன்று: உண்ணாநிலை வடிவத்திலிருந்த மாணவர்களின் போராட்டத்தை உருவ பொம்மை எரிப்பு, முற்றுகை என்ற வடிவத்துக்கு மாற்றியுள்ளது.

இரண்டு: மாணவர்கள் மட்டுமே போராட்டக் களத்தில் இருந்ததை மாற்றி தொழிலாளர்களையும் போராட்டத்தில் இணைத்துள்ளது. பு.ஜ.தொ.மு அல்லாத தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

மூன்று: ‘அமெரிக்கத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும், அல்லது தனி ஈழத்துக்கு ஆதரவாக இந்திய அரசு தனி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும், அல்லது தனி ஈழம் அமைவதற்கு இந்திய அரசு தலையிட வேண்டும், இல்லையேல் எங்கள் போராட்டம் தீவிரமாகும்’ என்ற கோணத்தில் போராடிய மாணவர்களின் போராட்டத்தை, ஈழ மக்களின் இன அழிப்புப்போரை முன்னின்று நடத்திய பாசிஸ்ட் இந்திய அரசை கண்டிக்கின்றோம்! இந்திய ஆளும் வர்க்க நலனுக்காக ஒரு இனத்தையே அழித்த இந்திய அரசின் உதவியோடு அதே இனத்துக்கு விடுதலை பெற்றுவிடலாம் என்று நினைப்பதும் அல்லது கோரிக்கை வைப்பதும், மனித குலத்துக்கே ஆபத்தான அமெரிக்க அரசின் தீர்மானம் ஈழ மக்களின் துயரத்தை துடைத்துவிடும் என்று நம்புவதும் முட்டாள்தனமானதும் ஈழ விடுதலைக்கு துரோகமிழைப்பதுமே ஆகும். எனவே இந்திய பிராந்திய மேலாதிக்க அரசை எதிர்க்காமல், ஏகாதிபத்தியத்தின் சதிகளை முறியடிக்காமல் மீண்டும் இவர்களை நம்பியே ஈழ விடுதலையை சாதித்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுப்போமானால் இன அழிப்பு குற்றவாளி ராஜபக்சே, மன்மோகன்சிங், சோனியா மட்டும்மல்ல ஈழ மக்களுக்காக போராடுகிற நாமும்தான் என்கிற அனுபவத்தை 30 ஆண்டுகால ஈழ விடுதலைப்போராட்டம் படிப்பினையை கற்றுத் தந்துள்ளது.

இதன் அடிப்படையில் பு.ஜ.தொ.மு மற்றும் இணைப்பு சங்கங்களின் மூலம் போராட்டம் தொடர்கிறது.

நிகழ்ச்சி நிரல்:

தேதி நேரம் இடம், வடிவம் சங்கம் தலைமை
20.03.2013 8am to 6pm சுதேசிமில் எதிரில், தர்ணா பு.ஜ.தொ.மு. தோழர் பழனிச்சாமி, தலைவர்.
21.03.2013 8am to 6pm வடமங்கலம்- தர்ணா ஹிந்துஸ்தான் யூனி லீவர் தோழர். எழில், செயலாளர்
21.03.2013 8am to 6pm திருபுவனை- தர்ணா மதர் பிலாஸ்டிக் மற்றும் ரானே ப்ரேக்ஸ் தோழர். வினாயக முருகன், செயலாளர்.
21.03.2013 8am to 6pm கிராமப் புறங்களில் – இரு சக்கர வாகன ஊர்வலம் பு.ஜ.தொ.மு தோழர். லோகனாதன், அலுவலக செயலாளர்.
22.03.2013 8am to 6pm கன்னிக்கோயில் தர்ணா கோத்ரேஜ் சாராலீ தோழர். கல்யாணகுமார், தலைவர்

இவண்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- புதுச்சேரி.
தொடர்புக்கு:
தோழர். கலை, பொதுச்செயலாளர், 9488778940

  1. தோழர் கலையின் அழைப்பை ஏற்று தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றிருந்தேன் ஒரு பார்வையாளனாக. புஜதொமுவினர் மிகவும் போர்க்குணத்துடன் செயல்பட்டனர். திடீரென்று ஆட்டோவில் இருந்து இறங்கி கொடும்பாவியை இழுத்துபோட்டு எரித்தனர் ஆக்ரோசமான முழக்கங்களுடன். இதனை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் ஓடிவந்து அணைக்க முற்பட்ட பொழுது அவர்களை நெட்டித் தள்ளினார்கள் தோழர்கள். தன்னையும் நெருப்பு சுடும் என்பதனைக் கூட சட்டை செய்யாது எரிந்து கொண்டிருந்த கொடும்பாவியை சோனியா முகம் தெரியும்படி தூக்கி காட்டினார் ஒரு தோழர். உருவபொம்மையை தோழர்களைக் காட்டிலும் காவல்துறையினர்தான் அதிகம் அடித்தனர், உதைத்தனர்(அணைக்க). அருகிலிருந்த தடுப்புகளை அலட்சியமாக நெட்டித் தள்ளிக்கொண்டு சட்டசபையை முற்றுகையிட சென்றதில் ஒரு ஆவேசம் இருந்தது. மொத்தத்தில் 40 நபர்களுக்குள்ளாகவே இருந்த போதிலும் அன்றைய போராட்டம் கடும் ஆவாசமாகவும் போர்க்குணத்துடனும் இருந்தது. பிசகில்லாமல் கச்சிதமாக செயல்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு முன் புதுவையில் நடந்த மே1 முற்றுகைக்குப் பிறகு நடைபெர்ற மிகச் சிறந்த போராட்டம் இது. எனது அருகில் இருந்த நாம் தமிழர் நண்பர் ஒருவர் நோட்டீஸ் ஒன்றை வாங்கிக் கொண்டு தோழர்களைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டு ஏக்கத்துடன் பாராட்டிச் சென்றார். புரட்சியில் தொழிலாளர்கள் முன்னனிப் படை என்ற லெனினின் கூற்று பொய்யல்ல என்பது எவ்வளவு உண்மை என்பதை புரியவைக்கும் போராட்டம் அது.

  2. சோனியா, மன்மோகன் கொடும்பாவியை எரிப்பதால் என்ன லாபம்?. கடைசிக்கட்ட சண்டைக்கு திட்டம் போட்ட பிரனாப் முக்கர்ஜியின் கொடும்பாவியை அல்லவா எரிக்க வேண்டும்!. அந்த ஆள் இப்போது ஜனாதிபதி பதவியில் உள்ளதால் யாரும் கண்டுகொள்ளவில்லை போலும்.மன்மோகன் வெறும் டம்மி பீஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். பாவம். சோனியா காந்திக்கும் அவர் மகனுக்கும் கடைசிக்கட்ட சண்டையில் பெரும் பங்கு இருப்பதாக தோன்றவில்லை. இந்தியாவின் சார்பில் திட்டமிட்டு இந்த கடைசிக்கட்ட சண்டையை வழிநடத்தியது பிரணாப் முக்கர்ஜி தான். அந்த ஆளின் கொடும்பாவியை தான் கொளுத்த வேண்டும்!

    • அம்பானி, டாடாக்களுக்காகத்தான் இந்தப் போரே நடந்தது. வேண்டுமானால் அம்பானி டாடாக்களை கொளுத்தலாமே!

Leave a Reply to sivakumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க